8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மஞ்சள் தூள் நிறங்கட்டியானது கார கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து _____ நிறமாக மாறுகிறது.
நீலம்
பச்சை
மஞ்சள்
சிவப்பு
2.
நாம் பல் துலக்குவதற்கு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது _____ தன்மை கொண்டது.
காரம்
அமிலம்
காரம் மற்றும் அமிலம்
ஏதுமில்லை
3.
அமிலமும் காரமும் சேர்ந்து ______ உருவாகிறது.
உப்பு மற்றும் நீர்
உப்பு
நீர்
இவற்றில் ஏதும் இல்லை
4.
மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு _____ ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.
அமிலத்தன்மை
தலைவலி
பற்சிதைவு
இவற்றில் ஏதும் இல்லை
5.
சிவப்பு எறும்பின் கொடுக்கில் _____ அமிலம் உள்ளது.
அசிட்டிக் அமிலம்
சல்பியூரிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
ஃபார்மிக் அமிலம்
6.
சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு ____ ஆகும்.
அமிலம்
காரம்
ஆக்ஸைடு
உப்பு
7.
காரத்தை நீரில் கரைக்கும் போது அது _______ அயனிகளைத் தருகிறது.
OH-
H+
OH
H
8.
நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலலில் ______ நிறமாக மாறுகிறது.
நீல
பச்சை
சிவப்பு
வெள்ளை
9.
கீழ்க்கண்டவற்றில் நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது _______ .
அமிலம்
காரம்
அமிலம் மற்றும் காரம்
இவற்றில் ஏதுமில்லை
10.
அமிலங்கள்______ சுவையை உடையவை.
புளிப்பு
இனிப்பு
கசப்பு
உப்பு
11.
செம்பருத்திப்பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் ____ நிறத்தைத் தருகிறது.
12.
உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது _______ ஆக பயன்படுகிறது.
13.
குளவியின் கொடுக்கில் ______ அமிலம் உள்ளது.
14.
கால்சியம் ஆக்ஸைட்டின் வேதிவாய்ப்பாடு ______ .
15.
காரங்கள்_____ சுவையைக் கொண்டவை.
16.
'புளிப்புச் சுவை' என்பது இலத்தின் மொழியில் ________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
17.
பென்சாயிக் அமிலம்_______ ஆக பயன்படுகிறது
18.
. செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.
19.
அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும்.
20.
. அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் கொண்டவை.
21.
உலர்ந்த நிலையில் உள்ள காரங்களைத் தொடும் போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்.
22.
அமிலங்கள் கசப்புச் சுவை உடையவை
23.
பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைவதில்லை.
24.
காரங்களின் ஏதேனும் நான்கு வேதிப்பண்புகளை எழுதுக.
25.
நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன?
26.
நிறங்காட்டி என்றால் என்ன?
27.
அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேற்றுமைகள் யாவை?
28.
அமிலங்கள் மற்றும் கரங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் யாவை?
29.
அமிலங்களின் ஏதேனும் நான்கு இயற்பியல் பண்புகளை எழுதுக.
30.
அமிலம் - வரையறு.
31.
மஞ்சள் தூளிலிருந்து எவ்வாறு இயற்கை நிறங்காட்டியைத் தயாரிப்பாய்?
32.
நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நடுநிலையாக்கல் வினைகளை விளக்குக.
33.
காரங்களின் பயன்கள் யாவை?
34.
அமிலங்களின் பயன்கள் யாவை?
35.
ஹேஸ்னாவும், கீர்த்தியும் நண்பர்கள். கீர்த்தியின் பற்களில் பற்சிதைவு இல்லை. ஆனால் ஹேஸ்னாவின் பற்களில் பற்சிதைவு உள்ளது. ஏன்? எதனால் பற்சிதைவு ஏற்படுகிறது?
36.
விணுபாலன் மற்றும் ப்ரியன் பள்ளியில் மதிய உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். விணுபாலன் எலுமிச்சை சாதமும், ப்ரியன் தயிர் சாதமும் சாப்பிடுகிறார்கள். எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் இரண்டும் என்ன தன்மை உடையது? இரண்டு சாதமும் என்ன சுவை உடையது? அந்த சுவைக்கு காரணம் என்ன?
1.
(d)
சிவப்பு
2.
(a)
காரம்
3.
(a)
உப்பு மற்றும் நீர்
4.
(a)
அமிலத்தன்மை
5.
(d)
ஃபார்மிக் அமிலம்
6.
(b)
காரம்
7.
(a)
OH-
8.
(c)
சிவப்பு
9.
(c)
அமிலம் மற்றும் காரம்
10.
(a)
புளிப்பு
11.
( )
இளஞ்சிவப்பு
12.
( )
நிறங்காட்டி
13.
( )
அல்கலி (அசிட்டிக் கோலைன்)
14.
( )
CaO
15.
( )
கசப்பு
16.
( )
அசிடஸ்
17.
( )
உணவு பதப்படுத்தி
18.
சரி.
19.
தவறு: அனைத்து காரங்களும் அல்கலிகள் அல்ல.
20.
சரி.
21.
தவறு: திரவ நிலையில் காரங்களை தொடும்போது வழவழப்புத் தன்மையுடன் காணப்படும்
22.
தவறு: அமிலங்கள் புளிப்புச் சுவை உடையவை.
23.
தவறு: பெரும்பாலான அமிலங்கள் நீரில் நன்கு கரைகின்றன.
24.
(i) காரங்கள் உலோகங்களுடன் வினை புரிவதில்லை.
(ii) அனைத்துக் காரங்களும் அலோக ஆக்சைடுகளுடன் வினை புரிந்து உப்பு மற்றும் நீரைத் தருகின்றன.
(iii) காரங்கள் அம்மோனிய உப்புகளுடன் வினைபுரிந்து உலோக உப்புகள், அம்மோனியா வாயு மற்றும் நீரைத் தருகின்றன.
(iv) காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருகின்றன.
25.
வேறுபட்ட வேதிப் பண்புகளை கொண்டுள்ள இரண்டு வேதிப் பொருள்களுக்கிடையே நடைபெறும் நடுநிலை வினையே நடுநிலையாக்கல் வினையாகும். அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்கும் வினை நடுநிலையாக்கல் வினை ஆகும்.
அமிலம் + காரம் → உப்பு + நீர்.
26.
நிறங்காட்டி அல்லது அமில-கார நிறங்காட்டி என்பது ஒரு வேதிப் பொருளாகும். இது ஒரு வேதிப்பொருள் அமிலத் தன்மை கொண்டதா அல்லது காரத் தன்மை கொண்டதா என்பதை பொருத்தமான நிற மாற்றத்தின் அடிப்படையில் அறியச் செய்கிறது. இது இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம்.
27.
| அமிலங்கள் | காரங்கள் | |
| i) | இவை நீரில் H+ அயனிகளைத் தருகின்றன. | இவை நீரில் OH- அயனிகளைத் தருகின்றன. |
| ii) | இவை புளிப்புச் சுவை உடையவை. | இவை கசப்புச் சுவை உடையவை. |
| iii) | சில அமிலங்கள் திட நிலையில் காணப்படுகின்றன. | பெரும்பாலான காரங்கள் திடநிலையில் காணப்படுகின்றன. |
| iv) | அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகின்றன. | காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றுகின்றன. |
28.
(i) இவை இயற்கையில் அரிக்கும் தன்மை கொண்டவை.
(ii) இவை நீர்க் கரைசலில் அயனியாக்கத்திற்கு உட்படுகின்றன.
(iii) இவை நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துகின்றன.
(iv) இவை நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுகின்றன.
29.
(i) அமிலங்கள் புளிப்புச் சுவை கொண்டவை.
(ii) அமிலங்கள் அரிக்கும் தன்மை கொண்டவை. மேலும், வலிமையான அமிலங்கள் மனிதத் தோல்களை மிகவும் பாதிக்கிறது.
(iii) பொதுவாக அமிலங்கள் திரவ நிலையில் காணப்படும். ஒரு சில அமிலங்கள் திண்ம நிலையிலும் உள்ளன. எ.கா. பென்சாயிக் அமிலம்.
(iv) அமிலங்கள் நிறமற்றவை.
(v) அமிலங்கள், நிறங்காட்டிகளின் நிறத்தை மாற்றுகின்றன. நீல லிட்மஸ் தாளை சிவப்பாகவும், மெத்தில் ஆரஞ்சு கரைசலை சிவப்பாகவும் மாற்றுகின்றன.
(vi) அமிலங்கள் நீரில் நன்கு கரைகின்றன. அமிலங்களின் நீர்க் கரைசல் மின்சாரத்தைக் கடத்துகிறது.
30.
புளிப்புச் சுவை கொண்ட வேதிச் சேர்மங்கள் பொதுவாக அமிலங்கள் எனப்படுகின்றன. அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களைப் பெற்றுள்ளன. மேலும், அவற்றை நீரில் கரைக்கும் பொழுது ஹைட்ரஜன் (H+) அயனிகளை வெளியிடுகின்றன.
31.
(i) மஞ்சள் தூளில் சிறிதளவு நீரை சேர்த்து மஞ்சள்தூள் பசை தயாரிக்கப்படுகிறது.
(ii) இதனை மை உறிஞ்சும் தாள் அல்லது வடிதாளின் மீது பூசி உலர்த்தப்பட்டு பின்பு நிறங்காட்டி தயாரிக்கப்படுகிறது.
(iii) கரைசலின் அமில, காரத் தன்மையைக் கண்டறிய மஞ்சள்தூள் நிறங்காட்டி பயன்படுகிறது.
(iv) அமிலக் கரைசலில் மஞ்சள் நிறங்காட்டி எந்த குறிப்பிடத்தக்க நிறமாற்றத்தையும் தராது.
(v) ஆனால் காரக் கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது.
32.
அமிலங்களையும், காரங்களையும் சமநிலையில் வைத்திருப்பது நமது ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் முக்கியமானதாகும்.
i) தேனீ கொட்டுதல்:
தேனீக்கள் கொட்டும்பொழுது ஃபார்மிக் அமிலமானது தோலினுள் உட்செலுத்தப்படுகிறது. கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற காரத்தை தேய்த்து ஃபார்மிக் அமிலத்தை நடுநிலையாக்கலாம்.
ii) குளவி கொட்டுதல்:
குளவி கொட்டும்போது அல்கலி என்ற காரப் பொருள் உட்செலுத்தப்படுகிறது. காரத் தன்மையை நடுநிலையாக்க நாம் அமிலத்தன்மை கொண்ட வினிகரைப் பயன்படுத்தலாம்.
iii) பற்சிதைவு:
நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களில் உள்ள உணவுத் துகள்களை சிதைத்து அமிலத்தை உருவாக்குகிறது. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. வலிமை குறைந்த காரங்களைக் கொண்ட பல்பொடி (அ) பற்பசைகளை கொண்டு துலக்கும்போது அமிலமானது நடுநிலையாக்கப்படுகிறது.
iv) அமிலத்தன்மை:
நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகப்படியாகச் சுரக்கும்போது உணவுக்குழாய் மற்றும் மார்புப் பகுதிகளில் எரிச்சல் உணர்வினை ஏற்படுத்துகிறது. இதனை நடுநிலையாக்க வலிமை குறைந்த காரமான மெக்னீசியம் ஹைட்ராக்சைடு அமில நீக்கியாக பயன்படுகிறது.
v) வேளாண்மை:
அதிக அமிலத்தன்மை உள்ள மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. எனவே இதனை சரிசெய்வதற்கு விவசாயிகள் சுண்ணாம்பு, சுண்ணாம்பு கற்கள் கலந்த உரங்களை மண்ணில் சேர்க்கின்றனர். இது மண்ணை நடுநிலையாக்குகிறது.
vi) தொழில்துறை:
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளில் சல்பியூரிக் அமிலம் உள்ளது. ஆறுகள் மற்றும் நீரோடைகளின் வழியாக கழிவுகள் வெளியேறுவதற்கு முன் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு நடுநிலையாக்கப்படுகிறது.
33.
(i) குளியல் சோப்புகள் தயாரிக்க பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
(ii) சலவை சோப்புகள் தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
(iii) காகிதத் தொழிற்சாலைகள், ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மருந்துகள் பொருட்கள் தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
(iv) வெள்ளை அடிக்க கால்சியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது.
(v) வயிற்றில் உருவாகும் அமிலத் தன்மையை நடுநிலையாக்க அலுமினியம் ஹைட்ராக்சைடு மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்கள் பயன்படுகிறது.
(vi) உரங்கள், நைலான்கள், நெகிழிகள் மற்றும் இரப்பர்கள் தயாரிக்க அம்மோனியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படுகிறது.
34.
(i) நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இது உணவுப் பொருள்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
(ii) உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வினிகர் பயன்படுத்தப்படுகிறது.
(iii) ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
(iv) குளியல் சோப்புகள், சலவை சோப்புகள் தயாரிக்க உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள் (அ) பொட்டாசியம் உப்புகள் பயன்படுகின்றன.
(v) சல்பியூரிக் அமிலம் வேதிப் பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. .இது மிகச் சிறந்த நீர் நீக்கியாக செயல்படுகிறது. இது பல்வேறு வகையான சலவை சோப்புகள், வண்ணப் பூச்சுகள், உரங்கள் மற்றும் பல வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
(vi) ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலங்கள் முக்கியமான ஆய்வகக் காரணிகளாக செயல்படுகிறது.
(vii) உயிரினங்களுக்கு நியூக்ளிக் அமிலம் மிகவும் 'அடிப்படையானது.
35.
(i) நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களுக்கு இடைவெளியில் சிக்கியுள்ள உணவுத் துகள்களைச் சிதைத்து அதன்மூலம் அமிலத்தை உருவாக்குகிறது. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது.
(ii) வலிமை குறைந்த காரங்களைக் கொண்ட பற்பசை அல்லது பல்பொடியைக் கொண்டு துலக்கும் போது அமிலமானது நடுநிலையாக்கப்பட்டு பற்சிதைவு தடுக்கப்படுகிறது.
(iii) ஹேஸ்னா முறையாக பற்பசை கொண்டு பல்துலக்காததால் அவருக்கு பற்சிதைவு உள்ளது.
36.
(i) எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் அமிலத் தன்மை உடையது.
(ii) இரண்டு சாதத்தின் சுவையும் புளிப்பு ஆகும்.
(iii) எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமும், தயிரில் உள்ள லாக்டிக் அமிலமும் புளிப்புச் சுவைக்குக் காரணமாக அமைகின்றன.
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards