8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
பின்வருவனவற்றுள் பஞ்சகாவ்யாவில் இல்லாதது எது?
பசுவின் சாணம்
பசுவின் சிறுநீர்
தயிர்
சர்க்கரை
2.
திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு எதில் பயன்படுவது இல்லை?
விதை நேர்த்தி செய்தல்
இலைத் தெளிப்பு
மண் நேர்த்தி செய்தல்
உயிரி-கொன்றுண்ணிகள்
3.
பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்
உயிரி-பூச்சிக் கொல்லிகள்
உயிரி உரங்கள்
மண்புழுக்கள்
வேம்பு இலைகள்
4.
மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை______
நீர் பாசனம்
பரப்பு நீர் பாசனம்
தெளிப்பு நீர் பாசனம்
சொட்டு நீர் பாசனம்
5.
மண்ணில் விதைகளை இடும் செயல்முறையின் பெயர் ________ .
உழுதல்
விதைத்தல்
பயிர்பெருக்கம்
பயிர்ச்சுழற்சி
6.
அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் __________ ஆல் உருவாக்கப்பட்டுள்ளன.
7.
__________ மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இறுதி இணைப்பாகச் செயல்படுகின்றன.
8.
_______ விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித்தோன்றலுக்கு மாற்றுகிறது.
9.
களைகளை கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பயன்படும் வேதிப்பொருளின் பெயர் __________ .
10.
விரும்பாத இடத்தில் வளரும் தாவரத்தின் பெயர் __________ .
11.
ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களைப் பிடுங்கி வேறொரு வளரிடத்தில் நடவு செய்யும் முறை ________ ஆகும்.
12.
உயிரி-பூச்சி விரட்டிகள்
13.
உயிரி-சுட்டிக்காட்டிகள்
14.
உயிரி-உரங்கள்
15.
உயிரி-கொன்றுண்ணிகள்
16.
உயிரி-பூச்சிக்கொல்லிகள்
17.
பசுந்தழை உரம் என்றால் என்ன?
18.
களையெடுத்தல் என்பதன் பொருள் என்ன?
19.
உயிரி-சுட்டிக்காட்டிகள் என்றால் என்ன? மனிதருக்கு இவை எவ்வாறு உதவுகின்றன?
20.
கிரிஷ் விஞ்ஞான் கேந்திரா பற்றி ஒரு சிறுகுறிப்பு தருக.
21.
இலைப்பரப்பில் தெளித்தல் என்றால் என்ன?
22.
விதைத்தலின் வகைகளைப் பட்டியலிடுக.
23.
உழுதல் - வரையறு.
24.
களை என்றால் என்ன? களைக் கட்டுப்பாட்டின் பல்வேறு முறைகளை விளக்குக.
25.
நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விளக்குக.
26.
வேளாண் செயல்முறைகளை விவரி?
1.
(d)
சர்க்கரை
2.
(c)
மண் நேர்த்தி செய்தல்
3.
(a)
உயிரி-பூச்சிக் கொல்லிகள்
4.
(b)
பரப்பு நீர் பாசனம்
5.
(b)
விதைத்தல்
6.
( )
ICAR
7.
( )
கிரிஷ் விஞ்ஞான் கேந்திரா
8.
( )
பாரம்பரிய
9.
( )
களைக் கொல்லிகள்
10.
( )
களை
11.
( )
நாற்று நடுதல்
12.
வேப்பிலைகள்
13.
சூழ்நிலையின் தரம்
14.
மண் வளத்தை மேம்படுத்தல்
15.
வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துகிறது
16.
பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
17.
பசுந்தழை உரம் என்பது பசுமையான தாவரங்களை வெட்டி எடுத்து, வளரும் தாவரங்களின் வேர்ப்பகுதியில் பள்ளம் போட்டு வெட்டிய தாவரங்களை, பள்ளத்தினுள் போட்டு மண்ணைப் போட்டு மூடி அதன்மேல் நீர் பாய்ச்சுதலாகும்.
18.
விவசாய நிலத்தில் முக்கிய பயிர் வகைகளுடன் பல விரும்பத்தகாத தாவரங்கள் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும். இந்தக் களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும்.
19.
சுற்றுச்சூழலின் தரம் சார்ந்த நிலைகளை வெளிப்படுத்தக்கூடிய ஓர் உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படும். புவியில் ஏற்படும் மாற்றங்களை, குறிப்பாக பெருகி வரும் மக்கள் தொக செயல்பாடுகளால் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களை புரிந்து கொள்ளவும் பட்டியலிடவும் உயிரி - சுட்டிகள் பயன்படுகிறது. மண்வளம் பற்றிய உயிரி சுட்டிக்காட்டிகள் மண் அமைப்பு, மேம்பாடு, ஊட்டப்பொருள் சேமிப்பு மற்றும் உயிரினங்களில் செயல்பாடுகளை பற்றிய தகவல்களை அளிக்கிறது.
20.
கிரிஷி விஞ்ஞான கேந்த்ரா ஒரு வேளாண் அறிவியல் கழகம் (ICAR) மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான இறுதியான இணைப்பாக செயல்படுகிறது. உள்ளூரில் வேளாண்மை ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பயன்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
21.
திரவநிலை உரங்களை இலைகளில் நேரடியாக செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் நுட்பம் ஆகும். இது இலைப்பரப்பில் தெளித்தல் ஆகும்.
22.
அ) கைகளால் விதைத்தல்
ஆ) உழுசால் விதைத்தல்
இ) ஊன்றுதல்
23.
விவசாயப் பயிர்களின் வேர்ப்பகுதிகளில் ஊட்டப் பொருட்கள் கிடைப்பதற்கு மண்ணை மேல்கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.
24.
விவசாய நிலத்தில் முக்கிய பயிர் வகைகளுடன் பல விரும்பாத தாவரங்கள் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும். களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும். களை நீக்கம் மிகமுக்கியமான ஒரு செயலாகும். ஏனெனில் களைத் தாவரங்கள் பயிர்த் தாவரங்களுடன் ஊட்டப் பொருள்கள், சூரியஒளி, நீர், வளரிடம் மற்றும் பிற ஆதாரங்களுக்காக போட்டியிடுகிறது. இதனால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைந்து விடுகிறது. அதனால் விளைச்சலும் குறைகிறது. எதிர்பார்த்த விளைச்சலை அடைவதற்கு நிலத்திலிருந்து களை நீக்கப்படுதல் கட்டாயம் ஆகும். விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு களைகளை நீக்கி அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறார்கள். அவைகளில் சில கீழே விளக்கப்பட்டுள்ளது.
இயந்திர முறைகள்:
இயந்திர முறை களைகள் நீக்கப் பயன்படும் ஒரு பொதுவான முறையாகும். களை கொத்தி உதவியுடன் கையினால் நீக்குதல் அல்லது களையெடுத்தல் ஒரு பழமையான முறையாகும் மற்றும் களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு திறன்மிக்க முறையாகும்.
உழுதல் முறைகள்:
அனைத்து வகை களைகளையும் அழிப்பதற்கான ஒரு வகை செயல்முறையாகும். ஆழமாக உழுவதால் களைகள் மண்ணில் புதைக்கப்படுகிறது அல்லது சூரிய வெப்பத்தில் இடப்படுகிறது.
பயிர்ச் சுழற்சிமுறை:
இந்த முறையில் சம்மந்தப்பட்ட பயிர்கள் மற்றும் ஒட்டுண்ணி களைகளை கட்டுப்படுத்த முறையான பயிர்ச் சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது.
கோடை உழவு:
குளிர் பருவ அறுவடைக்குப் பிறகு நடக்கும் ஆழமான உழுதல் மற்றும் கோடை காலங்களில் களைகளின் தரைகீழ்ப் பகுதிகளை தீவிர சூரிய ஒளிக்கு உட்படுத்துதல் ஓராண்டு மற்றும் பல்லாண்டு களைகளை அழிப்பற்கு பயனுள்ளதாக உள்ளது.
உயிரியல் முறைகளைக் கட்டுப்பாடு:
இந்த முறையில் பூச்சிகள் மற்றும் நோயூக்கிகள் போன்ற உயிர் காரணிகள் களை களின் கட்டுப்பாட்டிற்கு பயன்படுகிறது. களைகளை அழித்தல் உயிரியல் கட்டுப்பாட்டின் நோக்கம் இல்லை. ஆனால் களைத் தாவரங்களை முறைப்படுத்துதல் மற்றும் குறைத்தல் ஆகும்.
வேதியியல் முறைகள்:
வேதியியல் முறை சிலவகை களை கட்டுப்பாட்டில் மிகவும் திறன் மிக்கதாக உள்ளது. மற்றும் களைக் கட்டுப்பாட்டில் அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. களைகளை கொல்வதற்கு அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுப்பதற்கு பயன்படும் வேதிப் பொருட்கள் களைக் கொல்லிகள் எனப்படும். இவ்வேதிப்பொருட்கள் நீருடன் கலந்து பயிர்களின் மீது தெளிக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த களை மேலாண்மை:
இது பலவகை உழவியல் செயல்பாடுகளைக் கொண்டது. மற்றும் ஏதேனும் ஒரு களை கட்டுப்பாட்டு நுட்பம் குறைக்கப்படும் அளவிற்கு களை மேலாண்மையில் களைக் கொல்லி பயன்படுகிறது. ஆகையால் பொருந்தமான ஒருங்கிணைந்த பலவகை களை கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். இது பல்வேறு பயிர்களில் களைகளினால் ஏற்படும் இழப்பினை குறைக்கிறது. மேலும் சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது இயந்திர, உயிரியல், பண்பாட்டு மற்றும் வேதியியல் முறைகள் விவசாய ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் உள்ளடங்கியுள்ளது.
25.
நீர் பாய்ச்சுதல் தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியமானதாகும். தாவரங்கள் அதனை சூழ்ந்துள்ள மண்ணிலிருந்து வேர்த் தொகுப்பின் உதவியால் நீரை உறிஞ்சுகிறது. முறையான சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும். நீர்பாய்ச்சுதல் கால அளவும், எண்ணிக்கையும் பயிருக்குப் பயிர், மண்ணிற்கு மண் மற்றும் பருவநிலைக்கு பருவநிலை வேறுபடுகிறது. கிணறு, குழாய்கிணறு, குளம், ஏரி, ஆறு, அணை, கால்வாய் போன்றவை பல்வகையான நீர்பாசன ஆதார வளங்களாகும். குறைவான செலவில், சரியான நேரத்தில் போதுமான அளவில் பயிர்களுக்கு கட்டுப்பாடான சீராக நீரளித்தல் மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் எனப்படும்.
அ) பாரம்பரிய முறைகள்
ஆ) நவீன முறைகள்.
அ) பாரம்பரிய முறைகள்:
இங்கு ஒரு விவசாயி கிணற்றிலிருந்து அல்லது நீர் கால்வாயிலிருந்து தானாகவோ அல்லது எருதுகளின் உதவியுடனோ நீரை இழுத்து விவசாய நிலத்தில் பாய்ச்சுகிறார். பலவகை நீர் ஆதாரங்களில் இருந்து நீரை மேலே கொண்டுவர விசையியக்க கருவி பொதுவாக பயன்படுகிறது. டீசல், உயிர்வாயு, மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் இந்த விசையியக்க கருவிகளை இயக்க தேவையான சில முக்கிய ஆற்றல் ஆதாரங்களாகும். நீர் இறைத்தல் முறைகள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இம்முறை மிக மலிவானது என்பது இம்முறையின் முக்கியமான நிறையாகும். சமமற்ற பரவலினால் இதனுடைய பயன் மிகக் குறைவானது. மேலும் அதிகமான நீரிழப்பிற்கு காரணமாகிறது.
ஆ) நவீன முறைகள்:
பாரம்பரிய முறையில் இருக்கிற பிரச்சனைகளுக்கு தீர்வாக நவீன நீர்பாசன முறைகள் உதவுகிறது. நிலத்தில் ஒரே விதமான ஈரப்பதம் பரவுதலை எளிதாக்குகிறது.
நவீன முறைகள் இரண்டு அமைப்புகளை கொண்டது.
(i) தெளிப்பு நீர் பாசன அமைப்பு
(ii) சொட்டு நீர் பாசன அமைப்பு
தெளிப்பு நீர் பாசன அமைப்பு:
தெளிப்பு நீர்பாசனம் அதன் பெயர் சுட்டுவதைப் போல் பயிரின் மேல் தெளிக்கிறது மற்றும் சரியான பரவலுக்கு உதவுகிறது. நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க தக்க முறையாகும். உந்துவிசையியக்க கருவி நீர் குழாய்களோடு இணைக்கப்படுகிறது. இது அழுத்தத்தை உருவாக்குகிறது. அதனால் குழாயின் நுண் துளைகளின் வழியாக நீரானது தெளிக்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்:
நீர் குழாயினை பயன்படுத்தி சரியாக வேர் பகுதியில் நீரானது சொட்டு சொட்டாக விடப்படுகிறது.
26.
மண்ணைத் தயார் செய்தல் பயிர் உற்பத்தியின் முதல்படியாகும். வேளாண் செயல் முறைகளில் மிக முக்கியமான பகுதி மண்ணின் மேல் அடுக்கினை தளர்வடையச் செய்தலாகும். தளர்வான மண், மண்புழு மற்றும் மண் நுண்ணுயிரிகள் வளர உதவுகிறது இவ்வுயிரினங்கள் அங்கக மக்குகளை மண்ணிற்கு சேர்க்கிறது. பின்வரும் முறைகளில் மண் தயார் செய்யப்படுகிறது.
அ. உழுதல்
ஆ. சமப்படுத்துதல்
இ. அடிஉரமிடுதல்
அ. உழுதல்
விவசாயப் பயிர்களின் வேர்ப் பகுதிகளில் ஊட்டப் பொருட்கள் கிடைப்பதற்கு மண்ணை மேல்கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும். மண்ணை உழவு செய்வதற்கு ஏர் முக்கியமாக பயன்படுகிறது. பயிர்களுக்கு உரமிடுதல் களைகளை நீக்குதல் மற்றும் நிலத்திலிருந்து இதர கழிவுப் பொருட்களை நீக்குதல் மற்றும் மண்ணை மேலே கீழே கொண்டுவருதல் உழவுக்கு முக்கியமானதாகும்.
ஆ. சமப்படுத்துதல்
உழுத பின்னர் மண்ணைச் சமப்படுத்தக்கூடிய கருவியினைக் கொண்டு மண் சமப்படுத்தப்படுகிறது. இது கனமான மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்டிருக்கும்.
இ. அடி உரமிடுதல்
மண்ணிற்கு உரம் சேர்த்தல் உரமிடுதல் எனப்படும். உரமானது பயிர்த் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டப்பொருள்களைக் கொண்டுள்ளது.
விதை விதைத்தல்:
இது பயிர் உற்பத்தியில் இரண்டாவது நிலையாகும். மண் சரிசெய்யப்பட்டவுடன் விதை விதைத்தல் செய்யப்படுகிறது. மண்ணில் விதையிடுதல் செயல்முறை விதைத்தல் எனப்படும். விதைக்கப்படும் விதைகள் அதிக தரம் கொண்டிருப்பதற்கு மிக்கவனவாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
அ) கைகளால் விதைத்தல்:
கைகளால் விதை விதைத்தல் விதைத்தலின் எளிமையான மற்றும் சிக்கனமான முறையாகும்.
ஆ) உழுசால் விதைத்தல்:
விதை விதைத்தலின் நவீன முறையாகும். கையினால் விதைத்தல் முறையினை விட இந்த முறை மிகச்சிறப்பான மற்றும் நேர்த்தியான முறையாகும். இரும்பு கலப்பை பொருத்திய ட்ராக்டரினால் உழவு செய்யப்படுகிறது. சம இடைவெளிகளில் விதைகள் இடப்படுவதை விதைக்கும் இயந்திரம் உறுதி செய்கிறது.
இ) ஊன்றுதல்:
நீண்ட வரிப்பள்ளத்தில், குழியில் அல்லது ஒரு துளையில் துளையிடு கருவியினால் பொதுவாக தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் கையினால் விதையிடுதல் ஊன்றுதலாகும் ஈரப்பசையுள்ள மண்ணுடன் தொடர்பு கொள்ளும் வகையில் விதையிட்ட துளையைச் சுற்றியுள்ள மண்ணை கைகளினால் அல்லது அழுத்தப்படுகிறது. விதை விதைத்தல் பயிர் உற்பத்தியில் மிக முக்கியமானதாகும்.
குப்பையிடுதல் மற்றும் உரமிடுதல்:
தாவரங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு மண்ணில் சேர்க்கப்படும் ஊட்டப் பொருட்கள் உரங்கள் எனப்படும். மண்ணின் வளமை என்ற சொல் பயிர்த் தாவரங்களுக்கு போதுமான அளவு ஊட்டப் பொருள்களை மற்றும் உகந்த விகிதத்தில் அளிக்கவல்ல மண்ணிற்கே உரிய திறனைக் குறிக்கிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு இந்த ஊட்டப் பொருட்கள் அவசியமாக உள்ளது.
தாவர மற்றும் விலங்கு கழிவுகள்:
மட்குவதனால் கிடைக்கும் கரிமப் பொருள்கள் அங்கக மட்கு எனப்படும். விவசாயிகள் தாவர மற்றும் விலங்கு கழிவுகளை திறந்த வெளிப்பகுதியில் குவித்து மட்கச் செய்கிறார்கள். மட்கிய பொருட்கள் கரிம உரமாக பயன்படுகிறது. முறையான கரிம உரங்களின் சேர்ப்பதனால் மண்வளத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் காற்று மற்றும் நீர் அரிப்பிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வழிந்தோடுதல் ஊடுறுவலினால் ஏற்படும் ஊட்டப்பொருள் இழப்பை தடைசெய்கிறது. இது மேலும் நீர் கொள்திறன், மண்குவிதல், மண் காற்றோட்டம் மற்றும் ஊடுருவும் திறனைஅதிகரிக்கிறது. தாவரங்களின் வளர்ச்சி மற்றும் அதிக மகசூலுக்கு மண்ணில் சேர்க்கப்படும் பொருளே உரமாகும். உரம் யூரியா, அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் NPK (நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்) ஆகியவற்றாலானது. அவைகளின் நீண்ட காலப்பயன்பாடு சுற்றுச்சுழல் ஆர்வலர்களின் விவாதத்தில் இருந்த போதிலும் செயற்கை உரங்கள் உணவின் அளவையும், தரத்தையும் குறிப்பிடும் அளவில் மேம்படுத்துப்படியாக இன்றும் உள்ளது.
நீர் பாசனம்:
நீர் பாய்ச்சுதல் தாவரங்களின் முறையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியமானதாகும். தாவரங்கள் அதனை சூழ்ந்துள்ள மண்ணிலிருந்து வேர்த்தொகுப்பின் உதவியால் நீரை உறிஞ்சுகிறது. முறையான சீரான இடைவெளியில் பயிர்களுக்கு நீர் அளித்தல் நீர்ப்பாசனம் எனப்படும். நீர்பாய்ச்சுதல் காலஅளவும், எண்ணிக்கையும் பயிருக்குப் பயிர், மண்ணிற்கு மண் மற்றும் பருவநிலைக்கு பருவநிலை வேறுபடுகிறது. கிணறு, குழாய் கிணறு, குளம், ஏரி, ஆறு, அணை, கால்வாய் போன்றவை பல்வகையான நீர் பாசன ஆதார வளங்களாகும். குறைவான செலவில், சரியான நேரத்தில் போதுமான அளவில் பயிர்களுக்கு கட்டுப்பாடான சீராக நீரளித்தல் மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் எனப்படும்.
களை நீக்கம்:
விவசாய நிலத்தில் முக்கிய பயிர் வகைகளுடன் பல விரும்பாத தாவரங்கள் வளரலாம். இந்த விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும். களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும். களை நீக்கம் மிக முக்கியமான ஒரு செயலாகும். ஏனெனில் களைத் தாவரங்கள் பயிர்த் தாவரங்களுடன் ஊட்டப் பொருள்கள், சூரியஒளி, நீர், வளரிடம் மற்றும் பிற ஆதாரங்களுக்காக போட்டியிடுகிறது. இதனால் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைந்துவிடுகிறது. அதனால் விளைச்சலும் குறைகிறது. எதிர்பார்த்த விளைச்சலை அடைவதற்கு நிலத்திலிருந்து களை நீக்கப்படுதல் கட்டாயம் ஆகும். விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு களைகளை நீக்கி அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.
பயிர் அறுவடை செய்தல்:
பயிர் அறுவடை செய்தல் மிக முக்கியமான ஒரு செயலாகும். விளைந்த பயிர்களை வெட்டி சேகரிக்கும் செயல் அறுவடை எனப்படும்.
சேமிப்பு:
சேமிப்பு அறுவடைக்கு பிந்திய செயல் நுட்பத்தின் முக்கிய அம்சம் ஆகும். ஏனெனில் பயிர்கள் பருவகாலம் சார்ந்து உருவாகிறது. ஆனால் வருடம் முழுவதும் நுகரப்படுகிறது. ஆகையால் முறையான சேமிப்பினால் உற்பத்தி உணவுப் பொருள் வழங்களை நிர்வகித்தல் வேண்டும். சேமிப்பதற்கு முன்னர், அறுவடை செய்த தானியங்களில் ஈரப்பதம் இல்லாது இருக்க வேண்டும். சேமித்துள்ள விதைகளில் உள்ள ஈரப்பதம் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, சேமிப்பதற்கு முன்னர் வெயிலில் விதைகளை நன்கு உலர்ந்த வேண்டும்.
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards