8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW8th Standard
Tamilnadu 8th Standard கணிதம் எண்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science பொருளியல் - பொது மற்றும் தனியார் துறைகள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - நீதித்துறை Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science குடிமையியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Important Questions And Answers Study Material - QB365

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளைவில் முந்துவது
அனுமதிக்கப்படுகிறது
அனுமதியில்லை
கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
நமது விருப்பம்
2.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
இவற்றுள் எதுவுமில்லை
3.
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
2014
2015
2016
2017
4.
போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை
கட்டாய குறியீடுகள்
எச்சரிக்கை குறியீடுகள்
தகவல் குறியீடுகள்
இவற்றில் எதுவுமில்லை
5.
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அதிவேகம்
குடிபோதையில் ஓட்டுதல்
ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
இவை அனைத்தும்
6.
அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
108
100
106
101
7.
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
டிசம்பர்
ஜனவரி
மார்ச்
மே
8.
பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்
எங்குவேண்டுமானாலும்
சமிக்ஞைகளுக்கு அருகில்
வரிகோட்டு பாதையில்
இவற்றில் எதுவுமில்லை
9.
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்
நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
செல்லிடப்பேசியில் உரையாடலாம்
10.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக?
11.
சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
12.
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பைப் பற்றிக் குறிப்பு எழுதுக.
13.
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சில வழிகளைப் பட்டியலிடுக.
14.
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?
15.
சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
16.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
17.
சாலை விபத்துகளுக்கான காரணங்களை விவரி.
1.
(c)
கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
2.
(c)
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
3.
(c)
2016
4.
(a)
கட்டாய குறியீடுகள்
5.
(d)
இவை அனைத்தும்
6.
(a)
108
7.
(b)
ஜனவரி
8.
(c)
வரிகோட்டு பாதையில்
9.
(b)
நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
10.
இந்தியாவில் சாலை விதிகள் :
1. ஒரு வழிச்சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச்செல்ல அனுமதிக்க வேண்டும் எதிர்புறமாக வாகனங்களை ஒரு போதும் நிறுத்தக் கூடாது.
2. இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
3. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
4. தடைசெய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
11.
1. சாலை பாதுகாப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும்.
2. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் துவங்கப்பட்டதாகும்.
12.
சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனம்:
1. இது ஐ.நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும். சாலை பாதுகாப்பினை மிக முக்கியமானதாக கருதி இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டது.
2. இதன் மூலம் இதில் பங்குபெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கான வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளன.
13.
1. இசையினைக் கேட்கலாம்.
2. ஆரோக்கியமான உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. தேநீர் குடிக்கலாம்.
4. மது அருந்துவதை தவிர்க்கலாம்.
5. தொடர்ந்து வாகனத்தை ஓட்டுவது நல்லதன்று.
6. சரியான நேரத்தில் தூங்கிவிட்டு பின்னர் வாகனத்தை ஓட்டுவது நல்லது.
14.
1. இருசக்கர வாகனத்தின் விளக்குகளை மேம்படுத்தவும்.
2. சாலையில் உள்ள மற்றவர்களுக்கு உங்கள் தெரிவு நிலையை காண்பிக்கவும்.
3. உங்கள் பார்வை தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. மற்ற வாகனங்களின் விளக்குகளை சமமாகப் பயன்படுத்துங்கள்.
5. மெதுவாக செல்லுங்கள்.
6. உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
7. போதுமான ஓய்வு எடுக்கவும்.
15.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கீழ்க்கண்ட சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.
1. ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக வாகனங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
2. இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
3. அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.
4. தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது.
5. மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள், இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.
6. உயர் கற்றை ஒளியினை தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். எதிரே வாகனங்கள் வரும் போதும், அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
7. ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.
8. ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும் பொழுது பின்வரும் வாகனங்களுக்கு தெரியும் பொருட்டு தனது கையினை செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும்.
9. ஓட்டுநர் வாகனத்தினை வலப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது வலக்கையினை கிடைமட்டமாக முன்னால் உள்ளங்கை தெரிவது போல் நீட்ட வேண்டும்.
10. ஓட்டுநர் வாகனத்தினை இடப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது கையினை இடஞ்சுழியாக (anti-clockwise) சுழற்ற வேண்டும்.
11. அவசர காலத்தில் அபாய குறிக்காட்டிகளை பயன்படுத்த வேண்டும். அது இரண்டு குறிக்காட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒளிரச்செய்யும்.
12. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.
13. ஒலிப்பான்களை கிரீச் என்ற சத்தத்துடனோ, எரிச்சலடையும் வகையிலோ ஒலிக்க விடக்கூடாது. மின்னனு ஒலிப்பான் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை ஆகும்.
16.
சாலை விபத்துக்களையும், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அவையாவன:
1. ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்: ஆங்கில எழுத்து நான்கு E - பொறியியல் (Engineering) செயலாக்கம் (Enforcement) கல்வி (Education) அவசரம் (Emergency) ஆகியவற்றின் அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பன்முக யுக்தியாகும்.
2. ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொது மக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.
3. வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது: சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும் (Anti-locking Brake System) இருசக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக் கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளர்விப்பான் (Automatic Head Light on) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5. தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது.
6. வேகக்கட்டுப்பாட்டு கருவிகள்: இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்க்கருவிகள் உள்ளன. இவ்வுணர்வுக் கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும்போது வாகனத்தின் (engine) உந்துபொறிக்கு செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினை கட்டுப்படுத்துகிறது.
7. பல்வேறு செய்திக்குறியீடுகள்: இவை பயணிகளுக்கு முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் ஆகும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பொழுது இப்பலகைகள் பயன்படுகின்றன.
17.
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள்:
1. அதிக வேகம்: அதிக வேகம் அதிக ஆபத்து பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால் தான் ஏற்படுகின்றது. ஒரு வாகனத்தின் பின்னால் மிக நெருக்கமாக பின் தொடர்தல் என்பது சட்ட விரோதம் மற்றும் ஆபத்தான பழக்கமும் ஆகும்.
2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்: மது அருந்துவது கவனத்தை குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
3. வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல்: கவனச்சிதறல் என்பது வாகனத்தின் வெளியிலிருந்தோ உள்ளிருந்தோ ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும் போது செல்லிடப்பேசியில் பேசுவது பெரிய கவனச்சிதறலாக இந்நாட்களில் உள்ளது. வாகனம் ஓட்டும் போது கண்ணாடியை சரி செய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் நடமாடும் விலங்குகள், பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் ஆகியவை கவனச் சிதறலுக்கான வேறு சில காரணங்கள் ஆகும்.
4. சிவப்பு விளக்கில் நில்லாமை: சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே ஆகும். போக்குவரத்து சமிக்ஞைகளை (சைகை) முறையாக கடைபிடிக்கும் போது நேரம் சேமிக்கப்படுவதாகவும் பயணிகள் தாங்கள் சேரவேண்டிய இடத்தை பாதுகாப்புடனும் உரிய நேரத்தில் சென்றடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல்: நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat belt) அணிவதும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் (helmets) அணிவதும் சட்டமாக்கப்பட்டுள்ளது.
8th Standard Syllabus & Materials
8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - புவிப்படங்களைக் கற்றறிதல் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science புவியியல் - தொழிலகங்கள் Important Questions And Answers Study Material - QB365
NEW8th Standard
Tamilnadu 8th Standard Social Science வரலாறு - காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலை Important Questions And Answers Study Material - QB365
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards