8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/09/2026
8ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
வீடுகளெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____.
வீடு + எல்லாம்
வீடுகள் + ளெல்லாம்
வீடுகள் + எல்லாம்
வீடு + களெல்லாம்
2.
நாட்டின் பஞ்சங்களை அக்காலப் புலவர்கள் ______ பாடல்களாகப் பாடினர்.
கும்மிப்
தெம்மாங்கு
தொழிற்
விளையாட்டுப்
3.
______ ஊரில் தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
கொடுத்தல்
வாங்கல்
தெத்துக்காடு
காளப்பநாயக்கன்பட்டி
4.
இப்பாடலில் இடம் பெறம் தெய்வம் _______.
சிவன்
முருகன்
திருமால்
விநாயகர்
5.
சித்தர்கள் _______ மலைகளில் வாழ்ந்தனர்.
பரங்கி
கொல்லி
பொதிகை
சென்னி
6.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல் _______.
பருத்திஎல்லாம்
பருத்தியெல்லாம்
பருத்தெல்லாம்
பருத்திதெல்லாம்
7.
'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
செ + திறந்த
செத்து + திறந்த
செ + இறந்த
செத்து + இறந்த
8.
'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
விழுந்த + அங்கே
விழுந்த + ஆங்கே
விழுந்தது + அங்கே
விழுந்தது + ஆங்கே
9.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____ யும் ஓட்டிவிடும்.
பாலனை
காலனை
ஆற்றலை
நலத்தை
10.
வானில் கரு _______ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
முகில்
துகில்
வெயில்
கயல்
11.
புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்த பகுதிகள் யாவை?
12.
தெத்துக்காடு, காளப்ப நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட அழிவு யாது?
13.
வாங்கல் ஊரில் புயல்காற்றின் விளைவு யாது?
14.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
15.
புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
16.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
17.
கோணக்காத்துப் பாடலில் வெங்கம்பூர் சாமிநாதன் கூறிய கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.
18.
கோணக்காத்துப் பாடலில் வார்ப் பகுதிகளில் புயலால் உண்டான அழிவுகள் யாவை?
19.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
20.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துக்கள் யாவை?
21.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
22.
புயல் பாதித்த பகுதிகளின் புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
23.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
24.
வாகு
25.
வின்னமாச்சுதே
26.
சேகரம்
27.
சம்பிரமுடன்
28.
குமரன்
29.
சனங்கள்
30.
மார்க்கம்
31.
காலன்
32.
கெடிகலங்கி
33.
மெத்தைவீடு
34.
சிங்காரம்
35.
மெத்த
36.
முகில்
37.
நாடெல்லாம்
38.
விக்கினமெல்லாம்
39.
செந்திறந்த
40.
சனங்களெல்லாம்
41.
கப்பல்களெல்லாம்
42.
வளர்ந்தோங்கும்
43.
விழுந்ததங்கே
44.
சுவரெல்லாம்
45.
கூரைத்தட்டு
46.
சரிந்ததெங்கே
47.
வீடுகளெல்லாம்
48.
நாடு
49.
வேகமாக
50.
மேடு
51.
மங்கிய
52.
ஒடிந்து, தீர்த்து, பிழைத்து
53.
அலரி அலரி; மயங்கி மயங்கி
54.
வைத்த மரங்கள்
55.
உளன்று உளன்று
1.
(c)
வீடுகள் + எல்லாம்
2.
(a)
கும்மிப்
3.
(b)
வாங்கல்
4.
(b)
முருகன்
5.
(b)
கொல்லி
6.
(b)
பருத்தியெல்லாம்
7.
(d)
செத்து + இறந்த
8.
(c)
விழுந்தது + அங்கே
9.
(b)
காலனை
10.
(a)
முகில்
11.
ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.
12.
புயலால் தெத்துக்காடு, காளப்ப நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன.
13.
வாங்கல் ஊரில் புயல்காற்றினால் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் சரிந்து போயின.
14.
சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது என்று பாடல் கூறுகிறது.
15.
புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் ஒடிந்து விழுந்தன.
16.
எமனைப் போல் வந்த பெருமழையினாலும், சுழல் காற்றினாலும் கப்பல் கவிழ்ந்ததன் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுகிறது.
17.
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்றால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் ஊரில் தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. காங்கேய நாட்டில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. அதனால் ஆடவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக உள்ள மரங்கள் சின்னா பின்னமாக ஒடிந்து விழுந்தன. கடலில் வந்தக் கப்பல் பெரு மழையினாலும், சுழல்காற்றினாலும் கவிழ்ந்தது.
ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்காடு, காளப்ப நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் புயல் அடித்தது.
முருகப்பெருமானே! இத்தகைய அழிவுகளிலிருந்து எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக என்று வெங்கம்பூர் சாமிநாதன் பாடுகிறார்.
18.
1. புயல் காற்றால் வாங்கல் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
2. காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருக்கும் பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
3. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
4. ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலையில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.
5. தெத்துக்காடு, காளப்ப நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன.
6. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.
19.
1. கோணக்காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாக பிரிந்து சரிந்தன.
2. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. அதனால் ஆடவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் அலறியபடி ஓடினர்.
20.
i. வாங்கல் என்னும் ஊரில் புயல் காற்றினால் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
ii. காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
iii. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன என்று கோணக்காத்துப் பாட்டு கூறுகிறது.
21.
i. மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சாரக்கம்பி அருகில் செல்லக் கூடாது.
ii. இடிமின்னல் ஏற்படும் போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
iii. புயல் மூலம் பேரிடர் வருவதை முன்கூட்டியே அறிந்து பொதுமக்களுக்கு தகவல்கள் வழங்கும் பொருட்டு முன்னெச்சரிக்கைக் கருவி (EWS) அல்லது பேரிடர் குறித்த அறிவிப்பு கருவி (DWAS) பொருத்த வேண்டும்.
iv. புயல் ஏற்படும் பகுதிகளில் பூமிக்கு மேலுள்ள மின் இணைப்புகளை பூமிக்கு கீழ் மின் இணைப்புகளாக மாற்ற வேண்டும்.
v. பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் பற்றிய விழிப்புணர்வு, நீச்சல், முதலுதவி, ஒத்திகைப் பயிற்சி, வீதி நாடகங்கள், பாதுகாப்பு மைய மேலாண்மை போன்ற பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
22.
23.
| இயற்கைச் சீற்றம் | பாதிப்புகள் |
| 1. கனமழை | i. அளவுக்கு மீறிய மழையால் ஊருக்குள் வெள்ளம் வரும். ii. மரங்கள் வேரோடு சாய்ந்து அழிகின்றன. iii. கூரைவீடுகள் இடிந்து விழுகின்றன. iv. ஆடு மாடுகள், சிலசமயங்களில் மனிதர்கள் மழையில் அடித்துச் செல்லப்படுகின்றனர். |
| 2. புயல் | i. புயலினால் மரங்கள் வேரோடு சாய்ந்து அழிகின்றன. ii. புயலினால் அதிக மழை பெய்து அதனாலும் சேதங்கள் ஏற்படுகின்றது. iii. கூரைவீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. iv. ஆடு மாடுகள் மரங்கள் சாய்வதால் அழிகின்றன. |
| 3. வெள்ளம் | i. வெள்ளத்தினால் மரங்கள் வேரோடு சாய்ந்து அழிகின்றன. ii. ஆடு மாடுகள், சிலசமயங்களில் மனிதர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றனர். |
| 4. நிலநடுக்கம் | i. பெரிய கட்டிடங்கள், வீடுகள் புதையுண்டு அழிகின்றன. ii. மனிதர்களும் விலங்குகளும் இடிபாடுகளில் சிக்கி இறக்கின்றனர். |
| 5. எரிமலை வெடிப்பு | i. எரிமலையால் அப்பகுதியிலுள்ள வீடுகள், மனிதர்கள் அழிகின்றனர். ii. சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. |
24.
சரியாக
25.
சேதம் ஆச்சுதே
26.
கூட்டம்
27.
முறையாக
28.
முருகன்
29.
மக்கள்
30.
வழி
31.
எமன்
32.
மிகவருந்தி
33.
மாடிவீடு
34.
அழகுடன்
35.
மிகவும்
36.
மேகம்
37.
நாடு + எல்லாம்
38.
விக்கினம் + எல்லாம்
39.
செத்து + இறந்த
40.
சனங்கள் + எல்லாம்
41.
கப்பல்கள் + எல்லாம்
42.
வளர்ந்து + ஓங்கும்
43.
விழுந்தது + அங்கே
44.
சுவர் + எல்லாம்
45.
கூரை + தட்டு
46.
சரிந்தது + எங்கே
47.
வீடுகள் + எல்லாம்
48.
காடு
49.
மெதுவாக
50.
பள்ளம்
51.
மங்காத
52.
வினையெச்சங்கள்
53.
அடுக்குத்தொடர்கள்
54.
பெயரெச்சம்
55.
அடுக்குத்தொடர்
8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards