9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/08/2026
9ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
2.
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் எழுதுக. - இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.
3.
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். - இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.
4.
நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
5.
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள்விளக்குக.
6.
ஏறு தழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
7.
நீங்கள் வாழும் பகுதியில் ஏறு தழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
8.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே — குறிப்புத் தருக.
9.
நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
10.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
11.
உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
12.
'கூவல்" என்று அழைக்கப்படுவது எது?
13.
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
14.
புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய் உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.
15.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
16.
உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
17.
ஏறு தழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
18.
நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
19.
சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
20.
அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
21.
தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
22.
காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
23.
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
24.
திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்கு தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
25.
26.
1.
செயல்வேறு, சொல்வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
2.
மோனை நயம்: அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயமாகும். இக்குறட்பாவில் ஒற்றொற்றித் - ஒற்றினால் என முதல் எழுத்து ஒன்றி வந்துள்ளது.
எதுகை நயம்: பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயமாகும். இக்குறட்பாவில் ஒற்றொற்றி - ஒற்றினால் என இரண்டாம் எழுத்து ஒன்றி வந்துள்ளது.
3.
தீயவை தீயவற்றையே தருதலால் தீயை விடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்ச வேண்டும்.
4.
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரிடம் பொறுமை காக்க வேண்டும்.
5.
இடம் : மணிமேகலை விழாவறை காதையில் முரசறைவோன் கூற்றாக இத்தொடர் வருகிறது.
பொருள் : தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்.
6.
1. காளைகளின் பாய்ச்சல் எனக் கலித்தொகை கூறுகிறது.
2. சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் என்று ஏறு தழுவுதல் வழங்கப்படுகிறது.
3. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.
7.
1. எருது கட்டி
2. மாடு பிடித்தல்
3. காளை விரட்டு
4. .மாடு அணைதல்
5. ஏறு விடுதல்
6. மாடு விடுதல்
7. சலிக்கட்டு
8. மஞ்சு விரட்டு
9. வேலி மஞ்சு விரட்டு
என ஏறு தழுவுதல் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
8.
1. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது. உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
2. இப்பாடல் அடிகள் குடபுலவியனார் எழுதிய புறநானூற்றுப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
9.
நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாய்கின்ற காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்று வான்மிசை வானலை போலுால்
10.
நீலமணி போன்ற தெளிந்த நீரினை உடைய அகழிகள் நீண்ட பரந்த மண்ணாலான நிலப்பகுதி. பாதுகாப்புத் தருகின்ற உயர்ந்தோங்கிய மலைகள். அழகிய நிழலால் செறிந்து காணப்படுகின்ற காடுகள் இவை நான்கும் குறள் கூறும் நாட்டின் அரண்கள் ஆகும்.
11.
1. குளம்
2. ஏரி
3. கால்வாய்
4. கிணறு, ஊருணி, கண்மாய்
12.
'கூவல்' என்று அழைக்கப்படுவது உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை என்பதாகும்.
13.
1. எதுகை, மோனை, ஓசை நயத்துடன் இசைப்பாடல் வடிவில் இரண்டிரண்டு அடிகளால் பாடப்படுவது கண்ணியாகும்.
2. இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.
14.
1. விரலை மடக்கிக் கொண்டு வீணையில் இசை வரவில்லை என்று சொல்வது போல் பிறரைக் குறை சொல்வதை விட்டுவிட்டுப் புது வடிவெடுத்து அனைவரும் தமிழை வளர்ப்போம்.
2. இயல்தமிழாய், இசைத்தமிழாய், நாடகத்தமிழாய் இருந்த முத்தமிழ் இன்று அறிவியல் தமிழாய், கணினித்தமிழாய், இணையத்தமிழாய் புதுக்கோலம் கொண்டு வளர்ந்து வருகிறது.
3. மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை ஆகிய துறைகளில் புதிய புதிய சொற்றொடர்களை நாம் உருவாக்கி தமிழை வளர்த்து வருகிறோம்.
15.
1. தென் திராவிடம் என்ற இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
2. தென் திராவிடம் சார்ந்த தமிழ்மொழியை நாம் பேசுகிறோம்.
3. தொன்மையும் இலக்கிய, இலக்கண வளமும் உடைய மொழி தமிழ்.
4. சில திராவிட மொழிகளின் தாய்மொழியாகக் தமிழ் கருதப்படுகிறது.
16.
தோரணங்கள்
1. தெருக்களில் தோரணம் கட்டி அழகுபடுத்துவது குலைமுற்றிய பாக்கு மரங்கள், வாழை மரங்கள் பூங்கொடிகள் போன்றவற்றை நம் ஊர் விழாக்களிலும் ஏற்படுத்துவர்.
2. வீடுகளின் முன் தெருத் திண்ணைகளில் வரிசை வரிசையாக மாலைகளைத் தொங்கவிட்டு அலங்காரம் செய்வார்கள்.
விழா நிறைந்த ஊர்
தெருக்களிலும் மன்றங்களிலும் புதிய மணலைப் பரப்புவார்கள். கொடிகளால் அழகுபடுத்துவர். கம்புகளில் கொடிகளைக் கட்டுவர்.
17.
1. ஏறு தழுவுதல் மருதத்திணையோடு பின்னிப் பிணைந்த பண்பாடு மிக்கது.
2. உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப்பொங்கல்.
3. அவ்விழாவன்று மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, பூமாலை அணிவித்துத் தளிகைப் பொங்கலை ஊட்டி விடுவர்.
4. வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.
18.
1. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
2. நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர், இவ்வுலகில் உடலையும், உயிரையும் படைத்தவர் ஆவர்.
3. அதனால் ஏரி. குளம் மற்றும் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும். இவ்வாறு நிலத்துடன் நீரைப் பெருக்கி வளப்படுத்துபவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.
19.
1. தூம்பு என்பது தண்ணீர் போகும் வழி அடைப்பாகும்.
2.. மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள். சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.
3. அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும். இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.
20.
1. நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
2. குளம், ஏரி, கால்வாய். கிணறு போன்ற நீர்நிலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.
3. தண்ணீர்ச் சிக்கனமே நீர்ப் பாதுகாப்பின் முதல் படி.
4. ஒழுகும் குழாய்களை மூடுவதையும், நிலத்தடி நீரை அளவோடு செலவழிப்பதையும் கடமையாகக் கொள்ள வேண்டும்.
5. நெகிழிக் குப்பைகளை அனைத்து இடங்களிலும் போடுவது. நீர் நிலத்தினுள் புகா வண்ணம் அடைப்பை ஏற்படுத்தும். எனவே இதனைத் தவிர்க்கவேண்டும்.
6. மழை நீரை நிலத்தடியிலும், நீர்நிலைகளிலும் சேமித்து வைக்கவேண்டும்.
21.
"குறைகள் சொல்வதை விட்டு விட்டுப் புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்".
குறைகளைப் பேசுவது மனிதனின் செயல்பாடுகளுள் ஒன்று. ஆனால் நிறைகளைக் காணாமல் குறைகளைப் பேசுவது மனித மனங்களைக் காயப்படுத்தும். அதனால் நிறைகளைப் பேசி புதுக்கோலம் புனைந்து வாழ்வோம்.
22.
1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு
2. தனிதன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்தல் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ் மொழி விளங்கு வருகிறது.
23.
திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.
மூன்று - தமிழ்
மூணு - மலையாளம்
மூஜி - துளு
மூடு - தெலுங்கு
மூரு - கன்னடம்
24.
திராவிட மொழிகள்:
திராவிட மொழிக்குடும்பம். நில அடிப்படையில் மூன்று வகைப்படும்.
1. தென் திராவிட மொழிகள்
2. நடுத்திராவிட மொழிகள்
3. வடதிராவிட மொழிகள்
இவற்றுள் எனக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், மலையாளம் ஆகும். அவற்றின் சிற ப்பியல்புகளைக் காண்போம்.
தமிழ்மொழி:
1. பல உலக நாடுகளில் பேசப்படும் மொழியாகவும் சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் திகழ்கிறது.
2. திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழ்.
மலையாளம்:
1. இனிமையும், இலக்கண வளமும் நிறைந்தது மலையாளம்.
2. அற இலக்கியங்களால் வளமிக்க மொழியாக. மெல்லினச் சொற்கள் பேச்சு வழக்கில் மிகுந்து காணப்படும் மொழி மலையாளம்.
25.
26.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards