7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 (7th Standard Social Science Tamil Medium Important questions All Chapter 2020 )
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.
வேளாண்வகை
சாலபோகம்
பிரம்மதேயம்
தேவதானம்
2.
________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
சோழர்
பாண்டியர்
ராஜபுத்திரர்
விஜயநகர அரசர்கள்
3.
‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?
கல்ஹணர்
விசாகதத்தர்
ராஜசேகர்
சந்த் பார்தை
4.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
சிலை வழிபாட்டை ஒழிப்பது
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
5.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
மண்டலம்
நாடு
கூற்றம்
ஊர்
6.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
சோழமண்டலம்
பாண்டிய நாடு
கொங்குப்பகுதி
மலைநாடு
7.
நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு _________ விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது.
மலை
சமவெளிகள்
தட்டுகள்
பீடபூமிகள்
8.
_________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் வளை யம்
மத் திய அட்லாண்டிக்
மத்திய-கண்டம்
அண்டார்ட்டிக்
9.
_______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
முகமதுகோரி
ஜலாலுதீன்
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
10.
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
ரஸ்ஸியா
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
பால்பன்
11.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________ ஆகும்.
சர்க்
அரெட்டுகள்
மொரைன்
டார்ன் ஏரி
12.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________
கடல் ஓங்கல்கள்
கடல் வளைவுகள்
கடல் தூண்கள்
கடற்கரை
13.
பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
வேளாண்வகை
பிரம்ம தேயம்
சாலபோகம்
தேவதானம்
14.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
நீதி நிர்வாகம்
நிதி நிர்வாகம்
கிராம நிர்வாகம்
இராணுவ நிர்வாகம்
15.
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்
சோழர்கள்
முகலாயர்கள்
விஜயநகரப் பேரரசர்கள்
டெல்லி சுல்தான்கள்
16.
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
ஹரிச்சந்திரா
வத்சராஜா
நாகபட்டர்
தேவ பாலர்
17.
கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
ஜெயச்சந்திரா
ஜெய பாலர்
ராஜ்ய பாலர்
ஜெய சுந்தர்
18.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
பால்பன்
இல்டுமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன் ஐபக்
19.
பாண்டியர்களின் தலைநகர்
உறையூர்
மதுரை
கொற்கை
தஞ்சாவூர்
20.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
மார்க்கோபோலோ
மெகஸ்தனிஸ்
அல்பரூனி
யுவான் சுவாங்
21.
மார்க்கோபோலோ _________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
சீனா
வெனிஸ்
கிரீஸ்
போர்ச்சுக்கல்
22.
மாம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்
எஜமான்
அடிமை
சக்தி
வெற்றி
23.
இபன் பதூதா _________ நாட்டுப் பயணி
சீனா
கிரீஸ்
மொராக்கோ
போர்ச்சுக்கல்
24.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1398
1368
1389
1498
25.
புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.
1%
84%
51%
ஒன்றுமில்லை
26.
வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.
சிலிக்கா
மக்னீசியம்
இரும்பு
நிக்கல்
27.
கொலம்பியா பீடபூமி _________ ல் உள்ளது.
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
கனடா
28.
டார்ன் ஏரி என்பது _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
ஆறு
பனியாறு
கடல்
காற்று
29.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________
குற்றாலம்
வேம்பநாடு
கார்ரி
மியாமி
30.
வட சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________
கோபி
கலஹாரி
தார்
சஹாரா
31.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
32.
வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
33.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.
34.
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
35.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக
36.
’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
37.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
38.
சியால் என்றால் என்ன ?
39.
புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?
40.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
41.
அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
42.
வீழ்ச்சி குளம் என்றால் என்ன?
43.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
44.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
45.
சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).
46.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
47.
புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்
48.
நில நடுக்கம் வரையறு.
49.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
50.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள் பற்றி ஒரு விளக்கம் தருக.
51.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
52.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
53.
'கண்டத்தட்டு நகர்வுகள்' குறித்து எழுதுக.
54.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
1.
(d)
தேவதானம்
2.
(a)
சோழர்
3.
(d)
சந்த் பார்தை
4.
(b)
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
5.
(d)
ஊர்
6.
(b)
பாண்டிய நாடு
7.
(c)
தட்டுகள்
8.
(a)
பசிபிக் வளை யம்
9.
(c)
குத்புதீன் ஐபக்
10.
(c)
இல்துமிஷ்
11.
(c)
மொரைன்
12.
(d)
கடற்கரை
13.
(a)
வேளாண்வகை
14.
(c)
கிராம நிர்வாகம்
15.
(d)
டெல்லி சுல்தான்கள்
16.
(a)
ஹரிச்சந்திரா
17.
(b)
ஜெய பாலர்
18.
(d)
குத்புதீன் ஐபக்
19.
(b)
மதுரை
20.
(a)
மார்க்கோபோலோ
21.
(b)
வெனிஸ்
22.
(b)
அடிமை
23.
(c)
மொராக்கோ
24.
(a)
1398
25.
(b)
84%
26.
(c)
இரும்பு
27.
(a)
வட அமெரிக்கா
28.
(b)
பனியாறு
29.
(b)
வேம்பநாடு
30.
(a)
கோபி
31.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
32.
(i) முதல் நிலை சான்றுகள்
(ii) இரண்டாம் நிலை சான்றுகள்
33.
மசூதிகள்:
1. குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி
2. மோத் - கி - மசூதி
3. ஜமா மசூதி
4. பதேப்பூர் சிக்ரி தர்கா
5. சார்மினார்
கோட்டைகள்:
1. ஆக்ரா கோட்டை
2. சித்தூர் கோட்டை
3. குவாலியர் கோட்டை
4. டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்).
34.
கோபாலர் பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் ஆவார்.
35.
"உமையத்துக்களும்” “அப்பாசித்துகளும்" தொடக்கக்கால கலீஃபாத்துகளாகும்.
36.
அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம் எனும் பிராமணர் குடியிருப்புகளை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கினர்.
37.
அ) சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
ஆ) நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
இ) மகசூலில் மூன்றில் ஒரு பகுதி நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
ஈ) இவற்றில் பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
38.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
39.
நிலத் தட்டுகளின் நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.
40.
சிக்கந்தர் லோடி ஆக்ரா நகரை நிர்மாணித்தார்.
41.
1. அலாவுதீன் கில்ஜி டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார்.
2. பஞ்சாபில் மங்கோலியருக்கு எதிராக ராஜஸ்தானுக்கும் குஜராத்திற்கும் எதிராக அவருடைய படையெடுப்புகள் பாராட்டுக்குரியனவாகும்.
3. தனது வட இந்திய பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின்னர் தனது தலைமை தளபதி மாலிக்கபூரை 1310 இல் தென்புலத்தின் வெகு தொலைவிலுள்ள மதுரை வரை படையெடுக்கப் பணித்தார்.
4. தக்காண அரசுகளான தேவகிரி யாதவர்கள் துவாரசமுத்திரத்தின் ஹொய்சாலர்கள், வாராங்கல் காகதியர்கள், மதுரைப் பாண்டியர்கள் ஆகிய அனைவரையும் அலாவுதீன் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
42.
வீழ்ச்சி குளம் (அல்லது) வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் வீழ்ச்சி உட்பாயத்தேக்கம் (அல்லது) வீழ்ச்சிக் குளம் எனப்படும்.
43.
1. கடற்கரையிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.
2. எ.கா: ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி.
44.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
45.
1. அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
2. வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாக சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
3. 0 முதல் 9 வரைரிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அது வரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
4. ஐரோப்பியர்கள். கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்.
5. பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
46.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
47.
அ) புவியின் மையப்பகுதியை புவிக்கருவம் என குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ) வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
இ) புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை திரவ நிலையில், இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
ஈ) திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆன நைஃப் (Nife) என்ற உட்புற புவிக்கரு 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13.0 கிராம்/ செ.மீ ஆகும்
48.
புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது. நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் என்கிறோம்.
49.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
50.
1. மதுரா விஜயம், அமுக்த மால்யதா ஆகியவை சமய சார்பற்ற இலக்கியங்கள் ஆகும். இவை விஜய நகரப் பேரரசைப் பற்றி அறிய உதவுகின்றன.
2. மதுரா விஜயம் கங்காதேவியாலும், அமுக்த மால்யதா என்ற நூல் கிருஷ்ண தேவராயராலும் எழுதப்பட்டன.
3. இராஜபுத்திர அரசர்களைப் பற்றிய பிருத்வி ராஜ ராசோ என்ற நூலை சந்த் பார்தை என்பவர் எழுதினார்.
4. கல்ஹணரின் ராஜதரங்கிணி இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து தெரிவிக்கிறது.
51.
1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்
2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.
52.
1. உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
2. விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
3. பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
4. வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
5. கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
6. ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
53.
கண்டத்தட்டு நகர்வுகள்
1. கற்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகளை கற்கோள தட்டுகள் என்கிறோம்.
2. கற்கோள தட்டுகளின் (கண்டத்தட்டுகள் அல்லது கடற் தட்டுகள்) நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.
3. புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது இத்தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுகிறது. இத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன.
4. சிற்சில பகுதிகளில் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்கின்றன. சிற்சில பகுதிகளில் ஒன்று மற்றொன்றின் அருகாமையில் நெருங்கிவரும்போது மோதிக் கொள்கின்றன.
5. ஒரு கடற்தட்டு கண்டத்தட்டின் மீது மோதும் போது கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகளாக உருவெடுக்கின்றது. சமயங்களில் தட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன. இமய மலைச் சிகரங்கள் உருவானது இவ்வகையில்தான்.
6. புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்.
7. புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள் என புவியின் நகர்வுகளை ஆக்க சக்தியின் அடிப்படையில் பிரிக்கலாம்.
54.
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
நீர்: 'V' வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு வரி.
காற்று: காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்.
பனி: பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரெட்டுகள்) 'U' வடிவ பள்ளத்தாக்கு.
கடல் அலை: கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards