7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 7th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions 2020
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மிசிசிபி என்பது ஒரு _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
மலை
நீர்வீழ்ச்சி
ஆறு
கடற்கரை
2.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________
குற்றாலம்
வேம்பநாடு
கார்ரி
மியாமி
3.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _________
ஆற்று வளைவு
காயல்
கழிமுகம்
முகத்துவாரம்
4.
பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
1997
2007
2017
1987
5.
கொலம்பியா பீடபூமி _________ ல் உள்ளது.
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
கனடா
6.
புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.
1%
84%
51%
ஒன்றுமில்லை
7.
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1556
1526
1625
1562
8.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
ஆலம்ஷா
முகமது ஷா
முபாரக் ஷா
கிசிர்கான்
9.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1398
1368
1389
1498
10.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
மார்க்கோபோலோ
மெகஸ்தனிஸ்
அல்பரூனி
யுவான் சுவாங்
11.
பாண்டியர்களின் தலைநகர்
உறையூர்
மதுரை
கொற்கை
தஞ்சாவூர்
12.
திருஞான சம்பந்தரால் சமணமத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.
அரிகேசரி
முதலாம் பராந்தகர்
விஜயாலயர்
இரண்டாம் ராஜசிம்மர்
13.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
பால்பன்
இல்டுமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன் ஐபக்
14.
கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
ஜெயச்சந்திரா
ஜெய பாலர்
ராஜ்ய பாலர்
ஜெய சுந்தர்
15.
தேவபாலர் ஆதரித்த மதம்
சீக்கிய மதம்
இந்து மதம்
பௌத்த மதம்
சமண மதம்
16.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
மார்க்கோபோலோ
அல் பரூனி
இபன் பதூதா
நிகோலா கோண்டி
17.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
நீதி நிர்வாகம்
நிதி நிர்வாகம்
கிராம நிர்வாகம்
இராணுவ நிர்வாகம்
18.
பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
வேளாண்வகை
பிரம்ம தேயம்
சாலபோகம்
தேவதானம்
19.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது
காவேரி
பெண்ணாறு
சிற்றாறு
வைகை
20.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.
உட்பாயத் தேக்கம்
வண்டல் விசிறி
வெள்ளச் சமவெளி
டெல்டா
21.
குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
லாகூர்
புனே
தொலைதாபாத்
ஆக்ரா
22.
_______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
முகமதுகோரி
ஜலாலுதீன்
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
23.
_________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் வளை யம்
மத் திய அட்லாண்டிக்
மத்திய-கண்டம்
அண்டார்ட்டிக்
24.
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழை க்கப்படுகிறது.
எரிமலைத்துளை
எரிமலைப் பள்ளம்
நிலநடுக்க மையம்
எரிமலை வாய்
25.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
சோழமண்டலம்
பாண்டிய நாடு
கொங்குப்பகுதி
மலைநாடு
26.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
மண்டலம்
நாடு
கூற்றம்
ஊர்
27.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
சிலை வழிபாட்டை ஒழிப்பது
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
28.
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
மங்கோலியா
துருக்கி
பாரசீகம்
ஆப்கானிஸ்தான்
29.
________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
சோழர்
பாண்டியர்
ராஜபுத்திரர்
விஜயநகர அரசர்கள்
30.
__________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
பயணக்குறிப்புகள்
நாணயங்கள்
பொறிப்புகள்
31.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
32.
வீழ்ச்சி குளம் என்றால் என்ன?
33.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
34.
கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
35.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் கொடு.
36.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக
37.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
38.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
39.
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
40.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக
41.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
42.
வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
43.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
44.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
45.
நில நடுக்கம் வரையறு.
46.
புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்
47.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
48.
சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).
49.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
50.
கடற்குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
51.
எரிமலை வெடிப்பின் விளைவுகள் யாவை?
52.
பாண்டியர்கள் கோவில் கட்டடக் கலைக்கு ஆற்றிய பணிகள் யாவை?
53.
கலை மற்றும் கட்டடக் கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பினை விவாதி.
54.
இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.
1.
(c)
ஆறு
2.
(b)
வேம்பநாடு
3.
(d)
முகத்துவாரம்
4.
(c)
2017
5.
(a)
வட அமெரிக்கா
6.
(b)
84%
7.
(b)
1526
8.
(d)
கிசிர்கான்
9.
(a)
1398
10.
(a)
மார்க்கோபோலோ
11.
(b)
மதுரை
12.
(a)
அரிகேசரி
13.
(d)
குத்புதீன் ஐபக்
14.
(b)
ஜெய பாலர்
15.
(c)
பௌத்த மதம்
16.
(c)
இபன் பதூதா
17.
(c)
கிராம நிர்வாகம்
18.
(a)
வேளாண்வகை
19.
(c)
சிற்றாறு
20.
(b)
வண்டல் விசிறி
21.
(a)
லாகூர்
22.
(c)
குத்புதீன் ஐபக்
23.
(a)
பசிபிக் வளை யம்
24.
(a)
எரிமலைத்துளை
25.
(b)
பாண்டிய நாடு
26.
(d)
ஊர்
27.
(b)
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
28.
(d)
ஆப்கானிஸ்தான்
29.
(a)
சோழர்
30.
(d)
பொறிப்புகள்
31.
1. பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை காற்று வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
2. இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன. இதை பாலை வனப்பகுதியில் நம்மால் காண முடியும்.
32.
வீழ்ச்சி குளம் (அல்லது) வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் வீழ்ச்சி உட்பாயத்தேக்கம் (அல்லது) வீழ்ச்சிக் குளம் எனப்படும்.
33.
1. இல்துமிஷ் ஆட்சி காலத்தில் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்.
2. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை மறுத்தது மூலம் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
3. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள துருக்கிய பிரபுக்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அதுவே சகல்கானி அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
34.
கி.பி (பொ.ஆ) 12 ம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை முகம்மது கோரி நிறுவினார்.
35.
மியான்மரின் போப்பா, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா செயலிழந்த எரிமலைகள் உதராணங்களாகும்.
36.
அ) புவியின் வெளிப்புற அடுக்கு புவி மேலோடு ஆகும்.
ஆ) புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதியை சியால் என்றும் கடல் தரைக்களை சிமா என்றும் அழைக்கின்றோம்.
37.
அ) சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
ஆ) நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
இ) மகசூலில் மூன்றில் ஒரு பகுதி நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
ஈ) இவற்றில் பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
38.
சந்தனம், கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபர்ணக் கற்கள், மிளகு, நெல், தானியங்கள், உப்பு.
39.
கோபாலர் பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் ஆவார்.
40.
1. பிரதிகாரர்கள்
2. சௌகான்கள்
3. சாளுக்கியர்கள்
4. பரமாரர்கள்
41.
(i) மார்கோபோலோ
(ii) அல் -வரூனி
(iii) இபன் பதூதா
(iv) நிகோலோ கோண்டி
(v) அப்துல் ரஸாக்
(vi) டோமிங்கோ பயஸ்
42.
(i) முதல் நிலை சான்றுகள்
(ii) இரண்டாம் நிலை சான்றுகள்
43.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
44.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
45.
புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது. நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் என்கிறோம்.
46.
அ) புவியின் மையப்பகுதியை புவிக்கருவம் என குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ) வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
இ) புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை திரவ நிலையில், இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
ஈ) திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆன நைஃப் (Nife) என்ற உட்புற புவிக்கரு 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13.0 கிராம்/ செ.மீ ஆகும்
47.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
48.
1. அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
2. வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாக சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
3. 0 முதல் 9 வரைரிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அது வரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
4. ஐரோப்பியர்கள். கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்.
5. பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
49.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
50.
கடற்குகைகள்:
1. கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புகள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும்பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.
2. கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Cave) எனப்படுகின்றன.
51.
எரிமலை வெடிப்பின் விளைவுகள்
1. புவியின் உள் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது 35 மீட்டருக்கு 10 செ.மீ. ஆக உயர்ந்து கொண்டே வருகிறது.
2.வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர சென்டி மீட்டருக்கு 5 டன்கள் என்ற அளவில் உயர்கின்றது.
3. இத்தகைய நிலையில் புவியின் உள்ளே பாறைக் குழம்பு மிதமான இளகிய நிலையில் உள்ளது. இதுவே மாக்மா ஆகும். மிகுதியான அழுத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.
4. இத்திறன் காரணமாகவே ஆற்றலற்ற புவிப்பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது.
52.
1. இடைக்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் ஒன்றையும் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர்.
2. புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர்.
3. பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக் கல்தூண்களைக் கட்டினர்.
4. சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.
5. பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பேராதரவு நல்கினர்.
6. புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டி இக்கோவிலைத் தொடர்ந்து விசாலப்படுத்தினர்.
53.
கலை:
1. ராஜபுத்திரர்களின் காலத்தில் இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளும் கவின் கலைகளும் செழிப்புற்றன.
2. ராஜஸ்தானி என்றழைக்கப்பட்ட ஓவியக்கலை தோன்றியது.
கட்டடக் கலை:
1. ராஜபுத்திரர்கள் சித்தோர்கார், ரான்தம்புர், கும்பல்கார், மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினர்.
2. குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவை இவர்கள் காலத்தவையாகும்.
3. கஜுராகோ எனும் இடத்தில கட்டப்பட்டுள்ள கோவில், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது அமைந்துள்ள தில்வாரா கோயில், காந்தர்யா கோவில் ஆகியவை ராஜபுத்திரரின் கோவில் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும்.
54.
1. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தார். அவர் காயல் துறைமுகம் பற்றியும் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
2. கற்றறிந்த அறிஞரான அல்பரூனி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைப் பற்றி அறிய முயன்றார். இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார். இந்தியத் தத்துவங்களைக் கற்றார். அவர் எழுதிய தாகுயூக் - இ - ஹிந்த் என்ற நூலில் இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும் மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
3. மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல் ரிக்ளா பயணங்கள் என்பதாகும். அவர் இந்தியாவின் சமூக நிலை, சாதி, சதி என்ற உடன் கட்டை ஏறும் பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்திய வணிக நடவடிக்கைகள் பற்றியும் இவரது நூல் தெரிவிக்கிறது.
4. இவர்கள் தவிர நிகோலா கோண்டி, அப்துர் ரஸாக், டோமிங்கோ பயஸ் ஆகிய அந்நியப் பயணிகளும் இந்தியாவுக்கு வந்தனர். இவர்கள் விஜயநகரப் பேரரசின் சிறப்பு பற்றி தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards