7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 04/02/2020
7ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் (7th Standard Social Science Important Questions with Answerkey)
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
நிறைய பணம் ஈட்ட
நிறுவனத்தை ஊக்கப்படுத்த
நடுநிலையான தகவலை தருவதற்கு
இவற்றில் எதுவுமில்லை
2.
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்
தட்டச்சு
தொலைக்காட்சி
தொலைப்பேசி
இவற்றில் எதுவும் இல்லை
3.
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
ஆளுநர்
தேர்தல் ஆணையர்
4.
மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
ஆளுநர்
முதலமைச்சர்
5.
மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
6.
பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?
குஜராத்திலுள்ள நல்சரோவர்
தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்
இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்
மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
7.
எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?
இராஜஸ்தான்
மேற்கு வங்காளம்
அசாம்
குஜராத்
8.
_________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களும் ஓன்று
சுண்ணாம்புக்கல்
மைக்கா
மாங்கனீசு
வெள்ளி
9.
மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஓன்று _______
இரும்பு
தாமிரம்
தங்கம்
வெள்ளி
10.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______
தங்கம்
இரும்பு
பெட்ரோல்
சூரிய ஆற்றல்
11.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
12.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது
பீரங்கிப்படை
குதிரைப்படை
காலட்படை
யானைப்படை
13.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
பீர்பால்
ராஜா பகவன்தாஸ்
இராஜ தோடர்மால்
இராஜா மான்சிங்
14.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
பாபர்
ஹிமாயூன்
இப்ராஹிம் லோடி
ஆலம்கான்
15.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஹூமாயூன்
பாபர்
ஜஹாங்கீர்
அக்பர்
16.
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
அலாவுதீன் ஹசன்விரா
முகம்மது – I
சுல்தான் பெரோஸ்
முஜாஹித்
17.
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
யானை
குதிரை
பசு
மான்
18.
சமுதாய மாற்றம் காணும் முகவர்
தொழில் முனைவோர்
உற்பத்தியாளர்
நுகர்வோர்
19.
_________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.
மூலதனம்
நிலம்
உழைப்பு
20.
விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _________ பயன்பாடு ஆகும்.
காலப்
இடப்
வடிவப்
21.
எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
முதலமைச்சர்
கேபினட் அமைச்சர்
பிரதமர்
துணை அமைச்சர்
22.
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________.
தொழிலாளர் கட்சி
காங்கிரஸ் கட்சி
பழமை வாதக் கட்சி
ஜனநாயகக் கட்சி
23.
இந்தியா _________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
1947
1949
1950
1952
24.
_________ பாகுபாட்டை தடை செய்கிறது.
சட்டப்பிரிவு 14
சட்டப்பிரிவு 15
சட்டப்பிரிவு 16
சட்டப்பிரிவு 17
25.
இந்தியாவில் _________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
18
21
25
30
26.
_________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
வாக்குரிமை
பொது அலுவலில் பங்கேற்பு
சுயமரியாதை
அரசை விமர்சனம் செய்தல்
27.
தமிழ்நாட்டில் _________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
12
14
16
18
28.
இந்திய அரசால் _________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
18
20
22
24
29.
_________ ஒரு நாடோடிகள் மதம்.
இந்து மதம்
ஷாமானிஸம்
இஸ்லாம்
ஷிண்டோயிசம்
30.
வட சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________
கோபி
கலஹாரி
தார்
சஹாரா
31.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________
குற்றாலம்
வேம்பநாடு
கார்ரி
மியாமி
32.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _________
ஆற்று வளைவு
காயல்
கழிமுகம்
முகத்துவாரம்
33.
உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை _________.
மவுனாலோ
செயின்ட் ஹெலன்
ஸ்டாராம்போலி
பினாடுபோ
34.
பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
1997
2007
2017
1987
35.
புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.
1%
84%
51%
ஒன்றுமில்லை
36.
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1556
1526
1625
1562
37.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
ஆலம்ஷா
முகமது ஷா
முபாரக் ஷா
கிசிர்கான்
38.
இபன் பதூதா _________ நாட்டுப் பயணி
சீனா
கிரீஸ்
மொராக்கோ
போர்ச்சுக்கல்
39.
மார்க்கோபோலோ _________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
சீனா
வெனிஸ்
கிரீஸ்
போர்ச்சுக்கல்
40.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
புத்த சமயம்
சமணமதம்
சைவ சமயம்
வைஷ்ணவம்
41.
திருஞான சம்பந்தரால் சமணமத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.
அரிகேசரி
முதலாம் பராந்தகர்
விஜயாலயர்
இரண்டாம் ராஜசிம்மர்
42.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
பால்பன்
இல்டுமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன் ஐபக்
43.
கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
ஜெயச்சந்திரா
ஜெய பாலர்
ராஜ்ய பாலர்
ஜெய சுந்தர்
44.
தேவபாலர் ஆதரித்த மதம்
சீக்கிய மதம்
இந்து மதம்
பௌத்த மதம்
சமண மதம்
45.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
மார்க்கோபோலோ
அல் பரூனி
இபன் பதூதா
நிகோலா கோண்டி
46.
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்
சேரர்கள் காலம்
சோழர்கள் காலம்
பாண்டியர் காலம்
பல்லவர்கள் காலம்
47.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
நீதி நிர்வாகம்
நிதி நிர்வாகம்
கிராம நிர்வாகம்
இராணுவ நிர்வாகம்
48.
தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
பரிமாற்றம் செய்பவர்
முகவர்
அமைப்பாளர்
தொடர்பாளர்
49.
உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்
இரண்டாம் நிலை உற்பத்தி
முதன்மை உற்பத்தி
மூன்றாம் நிலை உற்பத்தி
பணித்துறை உற்பத்தி
50.
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
தேர்தல் ஆணையம்
குடியரசுத் தலைவர்
உச்ச நீதிமன்றம்
ஒரு குழு
51.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
ஒரு கட்சி முறை
இரு கட்சி முறை
பல கட்சி முறை
இவற்றுள் எதுவுமில்லை
52.
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________
21
18
25
31
53.
கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது
இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
54.
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்
4, 1, 3, 2
1, 3, 4, 2
2, 1, 3, 4
3, 1, 2, 4
55.
இந்தியாவின் ஆட்சி மொழி ______________ ஆகும்.
மராத்தி
தமிழ்
ஆங்கிலம்
இந்தி
56.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அமெரிக்கா
இந்தியா
சீனா
பிரேசில்
57.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________ ஆகும்.
சர்க்
அரெட்டுகள்
மொரைன்
டார்ன் ஏரி
58.
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
ரஸ்ஸியா
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
பால்பன்
59.
குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
லாகூர்
புனே
தொலைதாபாத்
ஆக்ரா
60.
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழை க்கப்படுகிறது.
எரிமலைத்துளை
எரிமலைப் பள்ளம்
நிலநடுக்க மையம்
எரிமலை வாய்
61.
நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
சிலிக்கா மற்றும் அலுமினியம்
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
இரும்பு மற்றும் மெக்னீசியம்
62.
சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
கண்ணாயிரம்
உறையூர்
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
63.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
வீர ராஜேந்திரன்
ராஜாதிராஜா
அதி ராஜேந்திரன்
இரண்டாம் ராஜாதிராஜா
64.
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
மங்கோலியா
துருக்கி
பாரசீகம்
ஆப்கானிஸ்தான்
65.
பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?
முதலாம் போஜா
முதலாம் நாகபட்டர்
ஜெயபாலர்
சந்திரதேவர்
66.
அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.
மார்க்கோபோலோ
அல் -பரூனி
டோமிங்கோ பயஸ்
இபன் பதூதா
67.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.
அயினி அக்பரி
தாஜ் - உல் – மா -அசிர்
தசுக்-இ-ஜாஹாங்கீரி
தாரிக் – இ - பெரிஷ்டா
68.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
69.
ஊடகம் என்றால் என்ன?
70.
சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?
71.
லோக் அதாலத் பற்றி எழுதுக.
72.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
73.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
74.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
75.
தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.
76.
மூலதனத்தின் வடிவங்கள் யாவை?
77.
உழைப்பு வரையறு
78.
உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
79.
பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
80.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
81.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?
82.
குடிமை சமத்துவம் என்றால் என்ன?
83.
சிறப்புப் பொருளாதார நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக
84.
இனங்களின் வகைகள் யாவை?
85.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
86.
வீழ்ச்சி குளம் என்றால் என்ன?
87.
பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
88.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
89.
புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?
90.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக
91.
’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
92.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
93.
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
94.
கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக
95.
வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
96.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
97.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
98.
ஊடகம் அவசியமா? ஏன்?
99.
இயற்கைக் காட்சிகளைப் பார்வையிடுவதை நாம் ஏன் விரும்புகிறோம்?
100.
இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக.
101.
கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
102.
வளங்கள் - வரையறு
103.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
104.
உழைப்பின் சிறப்பியல்புகள் யாவை?
105.
சமத்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவாய்?
106.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
107.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
108.
புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்
109.
மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன?
110.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
111.
சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).
112.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
113.
ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?
114.
சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்?
115.
ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?
116.
புதுப்பிக்க இயலா வளங்கள் - குறித்து விரிவாக எழுதுக.
117.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
118.
கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.
119.
'ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு' குறித்து விளக்குக.
120.
விளக்குக:
அ. மனித மாண்பு
ஆ. வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்
121.
'இந்திய மொழிகள்' குறித்து எழுதுக.
122.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
123.
மத்திய தரைக்கடல் - இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.
124.
முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.
125.
முதல் மற்றும் இரண்டாம் தரெய்ன் போர்களை விவரிக்க.
126.
இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.
127.
மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
128.
மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக
1.
(c)
நடுநிலையான தகவலை தருவதற்கு
2.
(b)
தொலைக்காட்சி
3.
(c)
ஆளுநர்
4.
(c)
ஆளுநர்
5.
(c)
25 வயது
6.
(d)
மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா
7.
(c)
அசாம்
8.
(b)
மைக்கா
9.
(b)
தாமிரம்
10.
(d)
சூரிய ஆற்றல்
11.
(b)
பாஜிராவ்
12.
(c)
காலட்படை
13.
(c)
இராஜ தோடர்மால்
14.
(b)
ஹிமாயூன்
15.
(b)
பாபர்
16.
(c)
சுல்தான் பெரோஸ்
17.
(b)
குதிரை
18.
(a)
தொழில் முனைவோர்
19.
(a)
மூலதனம்
20.
(c)
வடிவப்
21.
(b)
கேபினட் அமைச்சர்
22.
(d)
ஜனநாயகக் கட்சி
23.
(c)
1950
24.
(b)
சட்டப்பிரிவு 15
25.
(c)
25
26.
(c)
சுயமரியாதை
27.
(a)
12
28.
(c)
22
29.
(b)
ஷாமானிஸம்
30.
(a)
கோபி
31.
(b)
வேம்பநாடு
32.
(d)
முகத்துவாரம்
33.
(a)
மவுனாலோ
34.
(c)
2017
35.
(b)
84%
36.
(b)
1526
37.
(d)
கிசிர்கான்
38.
(c)
மொராக்கோ
39.
(b)
வெனிஸ்
40.
(c)
சைவ சமயம்
41.
(a)
அரிகேசரி
42.
(d)
குத்புதீன் ஐபக்
43.
(b)
ஜெய பாலர்
44.
(c)
பௌத்த மதம்
45.
(c)
இபன் பதூதா
46.
(b)
சோழர்கள் காலம்
47.
(c)
கிராம நிர்வாகம்
48.
(c)
அமைப்பாளர்
49.
(b)
முதன்மை உற்பத்தி
50.
(a)
தேர்தல் ஆணையம்
51.
(c)
பல கட்சி முறை
52.
(b)
18
53.
(a)
அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது
54.
(b)
1, 3, 4, 2
55.
(d)
இந்தி
56.
(c)
சீனா
57.
(c)
மொரைன்
58.
(c)
இல்துமிஷ்
59.
(a)
லாகூர்
60.
(a)
எரிமலைத்துளை
61.
(a)
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
62.
(d)
தஞ்சாவூர்
63.
(c)
அதி ராஜேந்திரன்
64.
(d)
ஆப்கானிஸ்தான்
65.
(b)
முதலாம் நாகபட்டர்
66.
(d)
இபன் பதூதா
67.
(b)
தாஜ் - உல் – மா -அசிர்
68.
1. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்கிறது.
2. இதன் மூலம் சட்டமன்ற செயல்பாடுகளையும் அரசின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்ளுகிறார்கள்.
69.
ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாகும்.
70.
1. தேர்தலுக்காக நாடு மக்கள் தொகை அடிப்படையில் பல தொகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.
2. மாநில அளவில் மக்கள் தங்கள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிக்கான தொகுதி சட்டமன்ற தொகுதி எனப்படும்.
71.
திருமணம் அல்லது குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் 'லோக் அதாலத்' என அழைக்கப்படுகின்றன.
72.
1. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 இல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில் முடிந்தது.
2. 1761 இல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போரைப் பீரங்கி படைகள் தீர்மானித்தன.
3. தப்பிப் பிழைத்த மராத்திய வீரர்கள் பானிப்பட்டிலிருந்து மகாராஷ்டிரா திரும்பி நடந்ததைக் கூற ஆறுமாத காலமானது.
73.
1. மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
2. மேலும், மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
74.
1. மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார்.
2. இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன.
75.
1. விஜய நகருக்கு எதிராகப் போர் புரிவதற்காகத் தக்காண சுல்தான்கள் ஓர் அணியில் திரண்டனர்.
2. எதிரிகளின் கூட்டுப் படைகள் 1565இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன.
3. ராக்சச தங்கடி என்றறியப்பட்ட இப்போரில் விஜய நகரம் தோற்கடிக்கப்பட்டது.
76.
அ) பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம் (எ.கா) இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் போன்றவை.
ஆ) பணமூலதனம் அல்லது பணவியல் வளங்கள் (எ.கா) வங்கி வைப்புகள், பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவை.
இ) மனித மூலதனம் அல்லது மனிதத் திறன் வளங்கள் (எ.கா) கல்வி, பயிற்சி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்.
77.
உற்பத்திப் பாதையில் உழைப்பு என்பது மனித இடுபொருள் ஆகும். "ஒரு பணியை ஒருவர் செய்வதால் அவருக்கு கிடைக்கும் மனநிறை மட்டுமின்றி அதனை செய்வதற்காக கைமாறு எதிர்பார்த்து மனிதன் தன் உடல் அல்லது அறிவை முழுமையாகவோ, பகுதியாகவோ பயன்படுத்தி மேற்கொள்ளும் கடும் முயற்சியே உழைப்பு ஆகும் என ஆல்பிரட் மார்ஷல் உழைப்பை வரையறுத்துள்ளார்.
78.
79.
பயன்பாட்டை அதன் இயல்பைப் பொருத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம்.
80.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள்:
(i) பிரிட்டன்
(ii) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
81.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள்:
(i) தலைவர்
(ii) செயல் உறுப்பினர்கள்
(iii) தொண்டர்கள்
82.
1. அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும்.
2. குடிமக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரர், சாதி மற்றும் சமயக்கொள்கை ஆகியவை காரணமாக பாகுபாடு இருத்தல் கூடாது.
3. சமத்துவ உரிமைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு எந்த உரிமையும் எவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது.
83.
சிறப்புப் பொருளாதார நகரம்
(i) நகர்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே சிறப்பு பொருளாதார நகரமாகும்.
(ii) தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
84.
பெருமளவில் பரந்து காணப்படும் மனித இனத்தின் வகைகளை தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம்.
85.
1. பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை காற்று வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் மற்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
2. இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன. இதை பாலை வனப்பகுதியில் நம்மால் காண முடியும்.
86.
வீழ்ச்சி குளம் (அல்லது) வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் வீழ்ச்சி உட்பாயத்தேக்கம் (அல்லது) வீழ்ச்சிக் குளம் எனப்படும்.
87.
அ). விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தும் பல நீர்ப்பாசன கால்வாய்களை வெட்டியும் வேளாண்மையை மேம்படுத்தினார்.
ஆ). பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்புர் ஆகிய புதிய நகரங்களை அவர் நிர்மாணித்தார்.
இ). ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவினார். கல்லூரிகள்,மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை கட்டினார்.
ஈ). மனிதாபமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார். இஸ்லாமிய சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.
88.
சிக்கந்தர் லோடி ஆக்ரா நகரை நிர்மாணித்தார்.
89.
நிலத் தட்டுகளின் நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.
90.
அ) புவியின் வெளிப்புற அடுக்கு புவி மேலோடு ஆகும்.
ஆ) புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதியை சியால் என்றும் கடல் தரைக்களை சிமா என்றும் அழைக்கின்றோம்.
91.
அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம் எனும் பிராமணர் குடியிருப்புகளை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கினர்.
92.
சந்தனம், கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபர்ணக் கற்கள், மிளகு, நெல், தானியங்கள், உப்பு.
93.
கோபாலர் பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் ஆவார்.
94.
மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.
95.
(i) முதல் நிலை சான்றுகள்
(ii) இரண்டாம் நிலை சான்றுகள்
96.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் “தசுக் - இ ஜஹாங்கீர்".
97.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
98.
1. ஊடகம் மிகவும் அவசியம், ஏனெனில் இவ்வுலகில் ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு ஆகும்.
2. இது நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழுகிறது.
3. இதனை மக்கள் பல்வேறு தேவைகளுக்காக சார்ந்து இருக்கின்றனர். குறிப்பாக தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக சார்ந்துள்ளனர்.
99.
1. இயற்கை எழில்மிகு இடங்களைக் கண்டுகளிப்பது ஒரு மிகச் சிறந்த இனிய அனுபவமாகும்.
2. மேலும் அறிவு வளர்ச்சிக்கு உதவுவதோடு சுற்றுலாக்களின் மீது பெரும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன.
100.
கொடைக்கானல் - தமிழ்நாடு
டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்
நைனிடால் - உத்திர காண்ட்
ஷில்லாங் - மேகாலயா
சிம்லா - இமாச்சலப் பிரதேசம்
காங்டாக் - சிக்கிம்
101.
கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம் .
1.ஆந்திரசைட் ( Anthracite )
2.பிட்டுமினஸ் (Bituminous )
3.லிக்னைட் (Lignite )
4.பீட் (Peat )
102.
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
103.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1. 1565 -ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு முழு காரணமாகும்.
2. தக்காண சுல்தான்களின் கூட்டுப்படை விஜயநகரப் படைகளைத் தோற்கடித்தன.
3. விஜய நகரம் கொள்ளையிடப்பட்டு அனைத்து கட்டடங்கள். அரண்மனைகள், கோவில்கள், சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மேலும் பயங்கரமான மனிதப் படுகொலைகளும் நடந்தன.
4. இறுதியாக விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.
பாமினி சுல்தான்களின் பங்களிப்பு:
1. கட்டடக் கலைக்கு பாமினி சுல்தான்களின் பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
2. குல்பர்கா, பீடார், தௌலதாபாத் மற்றும் காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவி கல்வி கற்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தினர்.
104.
1. உழைப்பு என்பது செயற்படு காரணியாகும்.
2. ஒரே சீரானதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும்.
3. உழைப்பை உழைப்பவரிடமிருந்து பிரிக்க இயலாது.
4. உழைப்பு இடம் பெயரக் கூடியது.
5. தனியாக உழைப்பவரிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. சங்கம் மூலம் பேரம் பேசும் ஆற்றல் அதிகம்.
105.
நாம் சமத்துவத்தை பின்வருமாறு மேம்படுத்தலாம்:
1. அனைவரையும் நியாயமாக நடத்துதல்
2. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்
3. வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்
4. முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்
5. கல்வி.
106.
1. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
2. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2 சதவீதம் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
107.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
108.
அ) புவியின் மையப்பகுதியை புவிக்கருவம் என குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ) வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
இ) புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை திரவ நிலையில், இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
ஈ) திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆன நைஃப் (Nife) என்ற உட்புற புவிக்கரு 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13.0 கிராம்/ செ.மீ ஆகும்
109.
அ) புவி மேலோட்டின் கீழ் அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது.
ஆ) கவசமானது கமார் 2900 கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
இ) கவசத்தை இரண்டாக பிரிக்கலாம்
i) மேல் கவசம்
ii) கீழ்க்கவசம்.
110.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
111.
1. அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
2. வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாக சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
3. 0 முதல் 9 வரைரிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அது வரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
4. ஐரோப்பியர்கள். கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்.
5. பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
112.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
113.
ஜனநாயகத்தில் ஊடகத்தில் பங்கு:
1. ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
2. நமது ஜனநாயக சமுதாயத்தில் ஊடகம் பொதுமக்களின் கருத்துக்களைச் செயல்படுத்தும் உந்து சக்தியாகும்.
3. இது ஜனநாயகத்தின் மதிப்புகளை பலப்படுத்துகிறது.
4. இது மக்களுக்கு அறிவையும் வலிமையையும் அளிக்கிறது.
5. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மேலும் அரசின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்பினையும் உறுதிசெய்கிறது.
6. அரசின் ஒவ்வொரு செயலையும் மக்களிடம் எடுத்துச்செல்கிறது.
7. இதன் மூலம் குடிமக்கள் அரசின் செயல்பாடுகளையும், அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளுகிறார்கள்.
8. மேலும் ஊடகம் அரசாங்கத்தை கண்காணிக்கும் பணியையும் செய்கிறது.
9. ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.
114.
1. சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிறோம்.
2. அவர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
3. அவர்கள், பொதுத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
4. அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் வேட்பாளரே வெற்றி பெறுகிறார்.
5. அவ்வாறு வெற்றி பெற்றவரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறோம்.
115.
1. மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார்.
2. இவர், மாநில நிருவாகத் துறையின் தலைவராகவும் மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார்.
3. மாநில அரசாங்கத்தின் அனைத்து நிருவாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.
4. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் அவர் இருக்கிறார்.
5. மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்துச் சட்டமுன் வரைவுகளும் அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன.
6. மாநிலத் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்.
116.
அலோக வளங்கள்:
உலோகத்தினைக் கொண்டிராத வளங்கள் அலோக வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
மைக்கா:
1. மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
2. மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.
3. மின் தொழில்களில் காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மசகு எண்ணெய் மற்றும் அலங்காரச் சுவரொட்டிகள் தயாரிப்பில் பொடி வடிவில் சேர்க்கப்படுகிறது.
4. சீனா தான் மைக்கா உற்பத்தி செய்வதில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
கண்ணாம்புக்கல்:
அதிகப்படியாக நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக்கற்கள் கட்டுமானப் பணிக்கெனப் பயன்படுத்தப்படுகிறது.
முகப்புக்கல் தரையில் பதிக்கப்படும் கற்கள், சாளரங்கள். அடிமணை,படிக்கட்டுகள் போன்றவை அமைக்கப்படுவதில் சுண்ணாம்புக்கல் பயன்படுகின்றன.
117.
சிவாஜியின் வருவாய் நிர்வாக முறை:
1. சிவாஜி, கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார்.
2. அதற்காக அம்மக்கள் சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு பாதுகாப்புக் கட்டணமாக, சர்தேஷ்முகி - பத்தில் ஒரு பங்கு அரசருக்கு கட்டணமாக வரிகளைச் செலுத்த வேண்டும்.
3. மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
4. முகலாயரின் நிர்வாக முறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது.
5. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு, ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டு ஐந்தில் இரண்டு பங்கு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பேஷ்வாக்களின் வருவாய் நிர்வாக முறை:
1. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொரு முறை ஏலம் விடப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பேஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஏலம் நடத்தப்பட்டது.
2. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும் நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.
3. எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதி வரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்குக் கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.
4. செய்திப் பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.
118.
கிருஷ்ணதேவராயர்:
1. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர். இவர் இருபது ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
2. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரின் முதற்கட்ட தலையாயப் பணியாக இருந்தது.
3. இம்முயற்சியில் வெற்றிபெற்ற பின்னர் குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது.
4. இச்சமயத்தில் பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
5. மேலும், போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ண தேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
சிறந்த கட்டட வல்லுநர்:
1. கிருஷ்ண தேவராயர் மழைநீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசன குளங்களையும், நீர்த் தேக்கங்களையும் உருவாக்கினார்.
2. இவர் தமது தலைநகரான ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில், ஹசாரா கோவில், விட்டலாசுவாமி கோவில் போன்ற புகழ்பெற்ற கோவில்களை கட்டினார்.
3. கிருஷ்ண தேவராயர் கலை, இலக்கியத்தை ஆதரித்தார்.
4. அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர்.
119.
1. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.
2. மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
3. அது அரசாங்கத்தின் கொள்கைகள், அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.
4. எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும்.
5. எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
120.
அ. மனித மாண்பு:
1. மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன.
2. மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மதிப்பு மிக்க ஓர் உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.
ஆ. வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்:
1. அனைத்து தனிமனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும்.
2. சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.
121.
1. இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
2. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 97% மக்களால் இந்த அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் பேசப்படுகின்றன.
3. தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.
122.
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
நீர்: 'V' வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு வரி.
காற்று: காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்.
பனி: பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரெட்டுகள்) 'U' வடிவ பள்ளத்தாக்கு.
கடல் அலை: கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.
123.
மத்திய தரைக்கடல் - இமயமலை நிலநடுக்கம் பகுதி
1. உலகின் 31% நிலநடுக்கங்கள் ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளிலும் வடமேற்கு சீனாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையிலும் ஏற்படுகின்றன.
2. இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள் நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
3. அதிக எண்ணிக்கையிலுள்ள நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. மோசமான மற்றும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டதாக உணரப்பட்டுள்ளது.
அ) உத்திரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1991)
ஆ) சாமோலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1999)
4. நிலநடுக்கப் பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியிலேயே இரண்டு மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அ) கெய்னாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1967)
ஆ) லாத்தூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1993)
124.
முதலாம் ராஜராஜன்
1. சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற அரசர் முதலாம் ராஜராஜன் ஆவார்.
2. இவர் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றார்.
3. இலங்கை வரை சோழர்களின் ஆட்சியை விரிவடையச் செய்தார்.
4. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.
முதலாம் ராஜேந்திரன்
1. முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது.
2. இவர் கங்கைப் பகுதியை வென்றார். இதனால் கங்கை கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
3. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டினார்.
4. ஸ்ரீ விஜயப் பேரரசைக் கைப்பற்றினார்.
5. இவரது காலத்தில் கடல்கடந்த வணிகம் சிறப்பாக நடைபெற்றது.
125.
முதல் தரெய்ன் போர்:
1. முகமது கோரி முல்தான் மற்றும் பஞ்சாப்பைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றினார்.
2. இந்த ஆபத்தான சூழலில் பிருதிவிராஜ் சௌகானின் தலைமையில் வட இந்திய இந்து அரசர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.
3. 1191ல் தரெய்ன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் பிருதிவிராஜ் சௌகான் முகமது கோரியைத் தோற்கடித்தார். இது முதல் தரெய்ன் போர் எனப்படுகிறது.
இரண்டாம் தரெய்ன் போர்:
1. இத்தோல்விக்குப் பழிவாங்கும் பொருட்டு முகமது கோரி ஒரு பெரும் படையைத் திரட்டி பிருதிவிராஜுக்கு எதிராக புறப்பட்டார்.
2. பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும் பிருதிவிராஜுக்கு ஆதரவு அளித்தனர்.
3. ஆயினும் 1192ல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் முகமது கோரியால் தோற்கடிக்கப்பட்டார். பிருதிவிராஜ் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
4. இப்போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது.
126.
1. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தார். அவர் காயல் துறைமுகம் பற்றியும் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
2. கற்றறிந்த அறிஞரான அல்பரூனி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைப் பற்றி அறிய முயன்றார். இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார். இந்தியத் தத்துவங்களைக் கற்றார். அவர் எழுதிய தாகுயூக் - இ - ஹிந்த் என்ற நூலில் இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும் மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
3. மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல் ரிக்ளா பயணங்கள் என்பதாகும். அவர் இந்தியாவின் சமூக நிலை, சாதி, சதி என்ற உடன் கட்டை ஏறும் பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்திய வணிக நடவடிக்கைகள் பற்றியும் இவரது நூல் தெரிவிக்கிறது.
4. இவர்கள் தவிர நிகோலா கோண்டி, அப்துர் ரஸாக், டோமிங்கோ பயஸ் ஆகிய அந்நியப் பயணிகளும் இந்தியாவுக்கு வந்தனர். இவர்கள் விஜயநகரப் பேரரசின் சிறப்பு பற்றி தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
127.
மூலதனத்தின் சிறப்பியல்புகள்:
1. மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
2. மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.
3. இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும்.
4. மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.
5. இதன் அளிப்பு நெகிழும் தன்மையுடையது.
6. மூலத்தனம் ஆக்கமுடையது.
7. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
8. மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும்.
128.

7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards