12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
உற்பத்தி கட்டுப்பாட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
2.
பாசியின் விலை குறியீட்டு எண்ணை விளக்கவும்.
3.
ஒருமுனை சோதனை என்றால் என்ன?.
4.
மறுக்கும் அளவு - வரையறு.
5.
வடமேற்கு மூலை முறையை பயன்படுத்தி பின்வரும் போக்குவரத்து கணக்கின் ஆரம்ப அடிப்படை சாத்தியமானத் தீர்வை காண்க.
6.
சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?
7.
ஒருவர், ஒரு முதலீட்டில் ரூ. 5,000 இலாபம் ஈட்டுவதற்கான நிகழ்தகவு 0.62 அல்லது ரூ.8,000 இழப்பு வருவதற்கான நிகழ்தகவு 0.38 எனில், இதில் எதிர்பார்க்கப்பட்ட ஆதாயத்தைக் கண்டறியவும்.
8.
ஈருறுப்பு பரவலின் சராசரி 5 மற்றும் திட்டவிலக்கமானது 2 எனில், பரவலை தீர்மானிக்கவும்.
9.
சமவாய்ப்பு மாறியின் வகைகள் யாவை ? அவற்றை விளக்கவும்
10.
பின்வரும் அணிகளின் தரம் காண்க.
\(\left( \begin{matrix} 1 & 4 \\ 2 & 8 \end{matrix} \right) \)
11.
பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் வரிசை மற்றும் படி காண்க.
\(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +y+\left( \frac { dy }{ dx } -\frac { { d }^{ 3 }y }{ dx^{ 3 } } \right) ^{ 3/2 }\)
12.
இலக்ராஞ்சியின் இடைமதிப்புத்தேற்றத்தைப் பயன்படுத்தி (0, –12), (1, 0), (3, 6) மற்றும் (4,12) என்ற புள்ளிகள் வழிச்செல்லும் பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
13.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 43 மற்றும் x = 84 எனும் புள்ளிகளில் y-ன் மதிப்பு காண்க.
| x | 40 | 50 | 60 | 70 | 80 | 90 |
| y | 184 | 204 | 226 | 250 | 276 | 304 |
14.
கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)+16y=0
15.
அளிப்புச் சார்பு p =7+x, x =5 எனும்போது உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
16.
உற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\(\frac { 14000 }{ \sqrt { 7x+4 } } \) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவைக் காண்க
17.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\sqrt { { x }^{ 2 }-2 } \)
18.
மதிப்பிடுக: \(\int { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } }\)dx
19.
\(\left( \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right) \) என்ற அணியின் தரத்தினைக் காண்க.
20.
ஒரு வானொலி குழலின் (Valve) வாழ்நாள் (மணி நேரங்களில்) பின்வரும் நிகழ்தகவு அடர்த்திச் சார்பைக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்

வானொலி குழலின் வாழ்நாளின் சராசரியை கண்டுபிடிக்கவும்.
21.
ஒரு தேர்வில் மதிப்பெண் பெறுதல் என்பதனை இயல்நிலை பரவல் கொண்டு பார்க்கப்படுமானால் அதன் சராசரி 45 மற்றும் திட்டவிலக்கம் 10 ஆகும். 1300 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் எனில், எத்தனை மாணவர்கள்
(i) 35 மதிப்பெண்ணிற்கும் குறைவாக
(ii) 65 மதிப்பெண்ணிற்கும் அதிகமாக, தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதனைக் கணக்கிடுக.
22.
மின்விளக்குகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 169 விளக்குகள் கொண்ட கூறின் சராசரி ஆயுட்காலம் 1350 மணி நேரம், அதன் திட்ட விலக்கம் 100 மணி நேரம் எனில், மின் விளக்குகளின் சராசரி ஆயுட்கால இடைவெளிகளை 90% நம்பிக்கை இடைவெளியில் காண்க.
23.
பருவகால மாறுபாட்டின் மீது ஒரு சுருக்கமான குறிப்பு எழுதுக.
24.
ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ஒவ்வொரு சேருமிடத்திற்கும் எவ்வளவு அலகு பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்பதை மீச்சிறு செலவு முறையில் காண்க.
ஓர் அலகு, பொருளைக் கொண்டு செல்ல ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது.
25.
h = 1 எனில், Δ2\(\left( \frac { 1 }{ x } \right) \) -ஐ மதிப்பிடுக.
26.
y=ae4x+be-x என்ற வளைவரைக்கு தொடர்புடைய வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க. இங்கு a மற்றும் b என்பன மாறத்தக்க மாறிலிகள்.
27.
காலணிகளின் உற்பத்தியின் எண்ணிக்கை x-ஐ பொறுத்த இறுதிநிலை செலவு 6+10x-6x2 என்க. ஒரு ஜோடி காலணிகள் உற்பத்திக்கான செலவு ரூ.12 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க.
28.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { { x }^{ 3 }+3x^{ 2 }-7x+11 }{ x+5 } \)
29.
x − 4y + 7z = 14, 3x + 8y − 2z = 13, 7x − 8y + 26z = 5 என்ற சமன்பாடுகள் ஒருங்கமைவு அற்றவை எனக் காட்டுக.
30.
ஒரு தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் , ஓர் உருளைக் கிழங்கு சில்லுகள் (chips) தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து நான்கு அளவுகொண்ட பத்து மாதிரிப் பாக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
மாதிரி உள்ளடக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி மற்றும் வீச்சு கட்டுப்பாடு வரம்புகளைக் கண்டுபிடிக்கவும்
| மாதிரி எண் | கூறுகள் | |||
| 1 | 2 | 3 | 4 | |
| 1 | 12.5 | 12.3 | 12.6 | 12.7 |
| 2 | 12.8 | 12.4 | 12.4 | 12.8 |
| 3 | 12.1 | 12.6 | 12.5 | 12.4 |
| 4 | 12.2 | 12.6 | 12.5 | 12.3 |
| 5 | 12.4 | 12.5 | 12.5 | 12.5 |
| 6 | 12.3 | 12.4 | 12.6 | 12.6 |
| 7 | 12.6 | 12.7 | 12.5 | 12.8 |
| 8 | 12.4 | 12.3 | 12.6 | 12.5 |
| 9 | 12.6 | 12.5 | 12.3 | 12.6 |
| 10 | 12.1 | 12.7 | 12.5 | 12.8 |
(கொடுக்கப்பட்ட தகவல் n=5, A2=0.58, D3=0 மற்றும் D4=2.115)
31.
ஒரு கணினி மையத்தில் மூன்று திட்டமிடும் நிபுணர்கள் உள்ளனர். அந்த மையத்தில் மூன்று பயன்பாட்டு திட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மையத்தின் தலைவர் திட்டங்களை கவனமாக பரிசீலித்து, மூன்று திட்டமிடல் நிபுணர்கள் எடுத்துக் கொள்ளும் கணினி நேரத்தை மதிப்பீடு செய்கிறார்.
மொத்த கணினி நேரத்தை குறைக்குமாறு திட்டங்களுக்கான திட்ட நிபுணர்களை ஒதுக்கீடு செய்க
32.
33.
ஈருறுப்புப் பரவலின் சராசரி மற்றும் மாறுபாட்டளவையின் கூட்டுத் தொகை மற்றும் பெருக்குத் தொகையின் மதிப்பு முறையே 24,128 எனில் பரவலைக் காண்க.
34.
ஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவுச் சார்பைப் பெற்றுள்ளது எனில்
| X=x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| P(x) | 0 | k | 2k | 2k | 3k | k2 | 2k2 | 7k2+k |
(i) k ன் மதிப்பைக் காண்க .
(ii) p( x < 6), p(x ≥ 6) மற்றும் p(0 < x < 5) ஐக் காண்க .
(iii) P(X≤ x) > \(\frac { 1 }{ 2 } \)க்கான x இன் குறைந்தபட்ச மதிப்பைக் கண்டுபிடிக்கவும்.
35.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்தி 60க்கும் 70க்கும் இடைப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
| நிறை (lbs) | 0-40 | 40-60 | 60-80 | 80-100 | 100-120 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 250 | 120 | 100 | 70 | 50 |
36.
தீர்க்க: cos2x\(\frac { dy }{ dx } \)+y=tanx
37.
சரியான போட்டியின் கீழ் ஒரு பொருளின் தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே pd =1600-x2 மற்றும் ps =2x2+400 எனில், உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.
38.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { x }{ 2x^{ 4 }-3x^{ 2 }-2 } \)
39.
ஒரு சந்தை ஆய்விற்காக A,B மற்றும் C ஆகிய பொருட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறியீட்டு எண்ணை காண்பதற்காக ஒவ்வொரு பொருளும் மூன்று வித தரங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கு நிலையான எடைகள் ஒதுக்கப்படுகிறது. மூன்று பொருள்களின் நுகர்வு பற்றிய தகவல்கள் மற்றும் பொருள்களின் மொத்த எடைகள் ஆகியவை கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
| பொருள்கள் | தரங்களின் நுகர்வுகள் | மொத்த எடைகள் | ||
| I | II | III | ||
| A | 1 | 2 | 3 | 11 |
| B | 2 | 4 | 5 | 21 |
| C | 3 | 5 | 6 | 27 |
40.
லாஸ்பியர் குறியீட்டு எண் = 110, பாசி குறியீட்டு எண் =108 எனில், ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் = _____.
110
108
100
109
41.
குறுகிய கால, ஏற்ற இறக்கத்துடன் அமையக்கூடிய ஒரு காலம்சார் தொடரின் கூறுகள்_____.
நீள் காலப்போக்கு
பருவகால மாறுபாடு
சுழற்சி மாறுபாடு
சீரற்ற மாறுபாடு
42.
z ஒரு திட்ட இயல்நிலைமாறி என்க. z-க்கு வலப்புறம் உள்ள பரப்பு 0.8413 எனில், z-ன் மதிப்பானது _____.
1.00
-1.00
0.00
-0.41
43.
Z என்பது திட்ட இயல்நிலை மாறி எனில் Z = -0.5 லிருந்து Z = -3.0 வரை அமையும் உருப்படிகளின் விகிதமானது_____.
0.4987
0.1915
0.3072
0.3098
44.
ஒதுக்கீடு கணக்கில் ஒப்புக்கான நிரை அல்லது ஒப்புக்கான நிரல் உருவாக்குவதற்கான நோக்கம் _____ ஆகும்.
தீர்வை சீர்குலைப்பதிலிருந்து தடுக்கிறது
மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த
ஒப்புக்கான பிரச்சினையை பிரதிநிதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை வழங்குகிறது
மேலே கூறிய அனைத்தும்
45.
ஒதுக்கீடு கணக்கில் வழங்கல் மற்றும் சேருமிடம் சமமாக இல்லாவிட்டால் அவை ______.
சமமானது
சமச்சீரற்றது
சமச்சீரானது
சமநிலையற்றது
46.
வடமேற்கு மூலை என்பதனைக் குறிப்பது _______.
மேல் இடது மூலை
மேல் வலது மூலை
கீழ் வலது மூலை
கீழ் இடது மூலை
47.
முழுமைத் தொகுதி பண்பளவை கொடுக்கப்பட்ட இரு எண்களுக்கிடையே அமைந்துள்ளது என எதிர்பார்க்கப்படும் இடைவெளி பண்பளவையின் _______ இடைவெளியாகும்.
புள்ளி மதிப்பீடு
இடைவெளி மதிப்பீடு
திட்டப்பிழை
நம்பிக்கை
48.
N அளவுள்ள ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து சமவாய்ப்பு கூறெடுப்பு முறையில் முதன் முறை ஒரு உறுப்பு தேர்வு செய்யும்போது அதன் நிகழ்தகவு______.
\(\frac {n}{N}\)
\(\frac {1}{N}\)
\(\frac {N}{n}\)
1
49.
கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் _________ எனப்படும்.
தொகுதிப் பண்பளவை
கூறு பண்பளவை
முடிவுள்ள அளவை
எண்ணத்தக்கதற்ற அளவை
50.
எந்த ஒன்று சமவாய்ப்பு சோதனைக்கான உதாரணம் அல்ல?
ஒரு நாணயம் சுண்டப்பட்டது மற்றும் வெளிப்பாடு ஒரு தலை அல்லது ஒரு பூ ஆகும்.
ஆறு பக்கமுள்ள பகடை உருட்டப்பட்டது.
ஒரு மருத்துவமனையின் அவசர அறையில் அனுமதிக்கப்பட்ட சில நபர்களின் எண்ணிக்கை
குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு நிறுவனத்தால் பெறப்பட்ட அனைத்து மருத்துவ காப்பீட்டு உரிமைக் கோரிக்கைகள்
51.
52.
நிகழ்வின் நிகழ்தகவு கொண்ட சமவாய்ப்பு மாறியின் சாத்தியமுள்ள மதிப்புகளைப் பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட எந்த மதிப்பு எடையிட்ட சராசரிக்கு சமம் என அழைக்கப்படுகிறது.
தனித்த மதிப்பு
எடையிட்ட மதிப்பு
எதிர்பார்த்தல் மதிப்பு
திரள் மதிப்பு
53.
‘n’ மிகை முழு எண் எனில், Δn[Δ-nf(x)]____.
f(2x)
f(x+h)
f(x)
Δf(x)
54.
h=1 எனில், Δ(x2)= _____.
2x
2x-1
2x+1
1
55.
(3D2+D-14)y=13e2x-ன் சிறப்புத் தொகை ____.
\(\frac { x }{ 2 } \)e2x
xe2x
\(\frac { { x }^{ 2 } }{ 2 } \)e2x
13xe2x
56.
y=mx+c -இன் வகைக்கெழுச் சமன்பாடு (m மற்றும் c என்பன மாறத்தக்க மாறிலிகள்) _____.
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=0
y=x\(\frac { dy }{ dx } \)+c
xdy+ydx=0
ydx-xdy=0
57.
y=cx+c− c3 எனில் அதன் வகைக்கெழுச் சமன்பாடு ____.
\(y=x\frac { dy }{ dx } +\frac { dy }{ dx } -\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }\)
\(y+\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }=x\frac { dy }{ dx } -\frac { dy }{ dx } \)
\(\frac { dy }{ dx } +y=\left( \frac { dy }{ dx } \right) ^{ 3 }-x\frac { dy }{ dx } \)
\(\frac { d^{ 3 }y }{ dx^{ 3 } } \)=0
58.
y=ex எனும் வளைவரை 0 யிலிருந்து 1 எனும் எல்லைகளுக்குள் x -அச்சுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பு _____.
(e-1) ச.அலகுகள்
(e+1) ச.அலகுகள்
\(\left( 1-\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்
\(\left( 1+\frac { 1 }{ e } \right) \) ச.அலகுகள்
59.
60.
\(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 4 }(1-x)^{ 2 } } }\)dx -ன் மதிப்பு ______.
\(\frac { 1 }{ 12 } \)
\(\frac { -7 }{ 12 } \)
\(\frac { 7 }{ 12 } \)
\(\frac { -1 }{ 12 } \)
61.
\(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx\) ன் மதிப்பு _____.
1
2
3
4
62.
\(\int { \frac { { 2x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } } \)dx-ன் மதிப்புச் சார்பு ____.
log|4+x4|+c
\(\frac { 1 }{ 2 } \log \left| 4+{ x }^{ 4 } \right| +c\)
\(\frac { 1 }{ 4 } \log \left| 4+{ x }^{ 4 } \right| +c\)
\(\left| \frac { 2{ x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } \right| +c\)
63.
என்பது மாறுதல் நிகழ்வு அணி எனில் x-ன் மதிப்பு______.
0.2
0.3
0.4
0.7
64.
\(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)என்ற அணியின் தரம் _____.
0
1
2
3
1.
உற்பத்தி கட்டுப்பாடு என்பது ஆய்வு திட்டங்களின் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் தரத்தை கூறெடுத்தல் முறையில் சோதனை செய்வதாகும். உற்பத்தி கட்டுப்பாட்டின் நோக்கம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தர அளவை உத்தரவாதத்துடன் கொடுப்பதாகும். விற்கப்பட்ட பொருள்களில், குறைபாடுள்ள பொருள்கள் மிகுதியாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.
2.
பாசியின் விலை குறியீட்டு எண்
\(P_{01}^P=\frac{\sum p_1 q_1}{\sum p_0 q_1} \times 100\)
இங்கு,
p1 - நடப்பு ஆண்டின் விலை
p0 - அடிப்படை ஆண்டின் விலை
q1 - நடப்பு ஆண்டின் அளவு
q0 - அடிப்படை ஆண்டின் அளவு
பாசியின் விலை குறியீட்டு எண்ணில், நடப்பு ஆண்டின் அளவைகள், நிறையாக பயன்படுத்தப்படுகிறது.
3.
கூறு அளவையின் சராசரி மதிப்பானது மாதிரி பரவலின் வலது அல்லது இடது தீர்வு கட்ட பகுதியில் அமைவதால் முழுமைத் தொகுதியின் பண்பளவை பற்றிய கருதுகோள் நிராகரிக்கப்படும் நிகழ்வே ஒருமுனை சோதனை என்கிறோம்.
4.
கூறுபண்பளவை சோதனை அளவையில் எந்த மதிப்பானது ஏற்கப்படும் மற்றும் மறுக்கப்படுவதற்கான பகுதியினைப் பிரிக்கிறதோ அம்மதிப்பே தீர்மான மதிப்பு அல்லது தீர்மானிக்கும் எல்லை மதிப்பு என அழைக்கப்படுகிறது.
5.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
மொத்த தேவைகள் = மொத்த இருப்புகள் = 21
எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
முதல் ஒதுக்கீடு :
இரண்டாம் ஒதுக்கீடு :
மூன்றாம் ஒதுக்கீடு:
நான்காம் ஒதுக்கீடு:
ஐந்தாம் ஒதுக்கீடு :
இறுதி ஒதுக்கீடு :
போக்குவரத்து விவரம்
P → A, P → Q,Q → B, Q → C, Q → D, R → D, R → E
மொத்த போக்குவரத்து செலவு
\( =(3 \times 2)+(1 \times 11)+(2 \times 4)+(4 \times 7)+ (2 \times 2)+(3 \times 8)+(6 \times 12) \)
= 6 + 11 + 8 + 28 + 4 + 24 + 72 = ரூ. 153
6.
மொத்த அளிப்புகள் = மொத்த தேவைகள் கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
7.
சமவாய்ப்பு மாறி X - என்பது தொகை என்க.
\(\begin{array}{|c|c|c|}
\hline \boldsymbol{x} & 5000 & -8000 \\
\hline \mathbf{P}(\boldsymbol{x}) & 0.62 & 0.38 \\
\hline
\end{array}
\)
\(\mathrm{E}(\mathrm{X}) =\sum_x x P_x(x) \)
=5000(0.62)-8000(0.38)
=3100-3040=60
எதிர்பார்க்கும் இலாபம் = ரூ.60
8.
சராசரி = np = 5
திட்டவிலக்கம்
\(=\sqrt{n p q}=2 \)
\(n p q =4 \)
\(5 q =4 \Rightarrow q=\frac{4}{5} \)
\(p =1-q=1-\frac{4}{5}=\frac{1}{5} \)
\(n p=5 \Rightarrow n\left(\frac{1}{5}\right) =5 \Rightarrow \mathrm{n}=25\)
ஈருறுப்புப் பரவல்
\(\mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}=25 C_x\left(\frac{1}{5}\right)^x\left(\frac{4}{5}\right)^{25-x}\)
9.
சமவாய்ப்பு மாறி தனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. இவை கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் நடைமுறைப் பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
தனித்த சமவாய்ப்பு மாறி:
சாத்தியமான மதிப்புகளால் வரையறுக்கப்பட்ட எண்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு மாறி, அல்லது ஒரு எண்ணத்தக்க மெய்யெண்களின் முடிவிலாத் தொடரானது தனித்த சமவாய்ப்பு மாறி என வரையறுக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டுகள்:
1. ஒரு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்
2. ஒரு ஜாடியில் உள்ள சிவப்பு பளிங்குகளின் எண்ணிக்கை
தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி:
ஓர் இடைவெளியில் உள்ள அனைத்து மெய் மதிப்புகளையும் (முழுக்களாகவோ, பின்னங்களாகவோ) ஏற்கும் ஒரு சமவாய்ப்பு மாறி X ஆனது தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்:
1. ஒரு மகிழுந்தின் வேகம்
2. மின் நுகர்வு கிலோவாட் மணி நேரத்தில்
10.
A =\(\left( \begin{matrix} 1 & 4 \\ 2 & 8 \end{matrix} \right) \)
A -ன் வரிசை 2 x 2, எனவே ρ(A) \(\le \) 2
\(\sim \) \(\left( \begin{matrix} 1 & 4 \\ 0 & 0 \end{matrix} \right) \) R2 → R2 -2R1
அணியின் தரம் ρ(A)=1
11.
\(\frac{d^2 y}{d x^2}+y+\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}=0\)
\(\frac{d^2 y}{d x^2}+y=-\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^{3 / 2}\)
இருபறமும் வர்க்கப்படுத்த
\(\left(\frac{d^2 y}{d x^2}+y\right)^2 =\left(\frac{d y}{d x}-\frac{d^3 y}{d x^3}\right)^3 \)
வரிசை =3 ; படி =3
12.
\( x_0=0, x_1=1, x_2=3, x_3=4 .\)
\( y_0=-12, y_1=0, y_2=6, y_3=12 \text {. } \)
\( \mathrm{y}=\frac{\left(x-x_1\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_0-x_1\right)\left(x_0-x_2\right)\left(x_0-x_3\right)} y_0 +\frac{\left(x-x_0\right)\left(x-x_2\right)\left(x-x_3\right)}{\left(x_1-x_0\right)\left(x_1-x_2\right)\left(x_1-x_3\right)} y_1 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_3\right)}{\left(x_2-x_0\right)\left(x_2-x_1\right)\left(x_2-x_3\right)} y_2 +\frac{\left(x-x_0\right)\left(x-x_1\right)\left(x-x_2\right)}{\left(x_3-x_0\right)\left(x_3-x_1\right)\left(x_3-x_2\right)} y_3 \)
\( =\frac{(x-1)(x-3)(x-4)}{(-1)(-3)(-4)}(-12) +\frac{(x-0)(x-3)(x-4)}{(1)(-2)(-3)}(0) +\frac{(x-0)(x-1)(x-4)}{(3)(2)(-1)}(6) +\frac{(x-0)(x-1)(x-3)}{(4)(3)(1)}(12) \)
\( y=(x-1)\left(x^2-7 x+12\right)-(x)\left(x^2-5 x+4\right)+x(x^2 -4 x+3) \)
\(=x^3-7 x^2+12 x-x^2+7 x-12-x^3+5 x^2-4 x +x^3-4 x^2+3 x \)
\( =x^3-7 x^2+18 x-12 \)
13.
\(\begin{array}{|c|c|c|c|c|} \hline x & y & \Delta y & \Delta^2 y & \Delta^3 y \\ \hline 240 & 484 & & & \\ \hline & & 20 & & \\ \hline 50 & 204 & & 2 & \\ \hline & & 22 & & 0 \\ \hline 60 & 226 & & 2 & \\ \hline & & 24 & & 0 \\ \hline 70 & 250 & & 2 & \\ \hline & & 26 & & 0 \\ \hline 80 & 276 & & 2 & \\ \hline & & 28 & & \\ \hline 90 & 304 & & & \\ \hline \end{array}\)
\(x_0 =40, \mathrm{~h}=10, x_0+\mathrm{nh}=43 \)
\(10 \mathrm{n} =3 \Rightarrow \mathrm{n}=0.3 \)
\(\mathrm{y} =y_0+\frac{n}{1 !} \Delta y_0+\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_0 \)
\( =184+0.3(20)+\frac{(0.3)(-0.7)}{2}(2) \)
\( =184+6-0.21=189.79 \)
\(x_{\mathrm{n}} =90, \mathrm{~h}=10, x_{\mathrm{n}}+\mathrm{nh}=84 \)
\(10 \mathrm{n} =-6 \Rightarrow \mathrm{n}=-0.6 \)
\(\mathrm{y} =y_n +\frac{n}{1 !} \Delta y_n +\frac{n(\mathrm{n}-1)}{2 !} \Delta^2 y_n + ....\)
\( =304+\frac{(-0.6)}{1 !}(28)+\frac{(-0.6)(+0.4)}{2 !}(2) \)
\(=304-16.8-0.24=286.96 \)
14.
\(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)+16y=0
துணைச் சமன்பாடு
m² + 16=0
\(\mathrm{m}^2 =-16 \Rightarrow \mathrm{m}= \pm 4 i \)
\(\alpha =0, \beta=4\)
நிரப்புச் சார்பு : \(e^{\alpha x} \cdot(A \cos \beta x+B \sin \beta x)\)
தீர்வு : y=Acos 4x+Bsin 4x
15.
\( \mathrm{p}=7+x, x=5 \)
\( \mathrm{p}=7+5=12\)
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) \mathrm{d} x \)
\(=60-\int_0^5(7+x) \mathrm{d} x \)
\(=60-\left[7 x+\frac{x^2}{2}\right]_0^5=60-\left(35+\frac{25}{2}\right) \)
\(=25-\frac{25}{2}=\frac{25}{2} \)
P.S=\(\frac{25}{2}\) அலகுகள்
16.
இறுதிநிலைச் செலவு சார்பு
\(\mathrm{MC} =\frac{14000}{\sqrt{7 x+4}} \)
\(\frac{d C}{d x} =\frac{14000}{\sqrt{7 x+4}} \)
\(\int d C =14000 \int(7 x+4)^{-1 / 2} d x \)
\(C =14000\left[\frac{(7 x+4)^{1 / 2}}{7(1 / 2)}\right]+k\)
செலவுச் சார்பு:\(\mathrm{C}=4000(7 x+4)^{1 / 2}+\mathrm{k}\)
x=0 மற்றும் C=18,000 எனில்,k =10000
செலவுச் சார்பு : C =\(4000\sqrt { 7x+4 } +10000\)
சராசரி செலவு: AC =\(\frac { 4000 }{ x } \sqrt { 7x+4 } +\frac { 10000 }{ x } \)
17.
\(\int { \sqrt { { x }^{ 2 }-2 } } dx\)
\(=\int { \sqrt { { x }^{ 2 }-{ \left( \sqrt { 2 } \right) }^{ 2 } } } dx\)
\(=\frac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 }-2 } -\frac { 2 }{ 2 } \log { \left| x+\sqrt { { x }^{ 2 }-2 } \right| } +c\)
\(\left[ \because \int { \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } } dx=\frac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 }-{ a }^{ 2 } } -\frac { { a }^{ 2 } }{ 2 } \log { \left| x+\sqrt { { { x }^{ 2 }-{ a }^{ 2 } } } \right| +c } \right] \)
\(=\frac { x }{ 2 } \sqrt { { x }^{ 2 }-{ 2 } } -\log { \left| x+\sqrt { { x }^{ 2 }-{ 2 } } \right| } +c\)
18.
\(\int { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } } dx=\int { \frac { 1 }{ 2 } \left\{ { \left( 2x+3 \right) }^{ \frac { 1 }{ 2 } }+{ \left( 2x+3 \right) }^{ -\frac { 1 }{ 2 } } \right\} }\)dx
\(=\frac { 1 }{ 2 } \left\{ \frac { { \left( 2x+3 \right) }^{ \frac { 3 }{ 2 } } }{ 3 } +{ \left( 2x+3 \right) }^{ -\frac { 1 }{ 2 } } \right\}\)+c
எளியச் சார்புகளாக பிரித்தெழுத
\( { \frac { x+2 }{ \sqrt { 2x+3 } } }= \left\{ \frac {\frac { 1 }{ 2 } (2x+4) }{ (2x+3)^{ \frac { 1 }{ 2 } } } \right\} \)
\(=\frac { 1 }{ 2 } \left\{ \frac { (2x+3)+1 }{ (2x+3)^{ \frac { 1 }{ 2 } } } \right\} \)
\(\frac { 1 }{ 2 } \left\{ (2x+3)^{ \frac { 1 }{ 2 } }+(2x+3)^{ -\frac { 1 }{ 2 } } \right\} \)
19.
A=\(\left( \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right) \)என்க
A-ன் வரிசை 2 x 2 ∴ ρ(A) ≤2
இரண்டாம் வரிசை சிற்றணிக்கோவையை கருத, நாம் பெறுவது
\(\left| \begin{matrix} 1 & 5 \\ 3 & 9 \end{matrix} \right| \)=-6≠0 ஆகும்.
⇒ பூச்சியமற்ற சிற்றணிக்கோவையின் வரிசை 2 ஆகும். ∴ ρ(A) ≤2
20.
சமவாய்ப்பு மாறியின் எதிர்பார்த்தல்.
\(E\left( X \right) =\int _{ -\infty }^{ \infty }{ xf(x)dx } \)
= \(\int _{ 100 }^{ \infty }{ { xe }^{ \frac { x }{ 100 } }dx } \)
= \(\left\{ \left[ \left( \frac { { e }^{ \frac { x }{ 100 } } }{ -\frac { 1 }{ 100 } } \right) \right] _{ 100 }^{ \infty }-\int _{ 100 }^{ \infty }{ \left( \frac { { e }^{ \frac { x }{ 100 } } }{ -\frac { 1 }{ 100 } } \right) } dx \right\} \left( \therefore \int { udv=uv-\int { vdu } } \right) \)
= \(\left[ \left( 1000 \right) \left( { e }^{ -1 } \right) +\left( 1000 \right) \left( { e }^{ -1 } \right) \right] \)
= \(\left[ \left( 1000 \right) \left( 0.3679 \right) +\left( 1000 \right) \left( 0.3679 \right) \right] \)
= 7358 மணிகள்
எனவே, வானொலி குழலின் சராசரி வாழ்நாள் 7,358 மணிகள் ஆகும்.
21.
X - என்ற இயல்நிலைமாறி மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 45 மற்றும் திட்டவிலக்கம் 10 என காட்டுகிறது என்க.
(i) 35 மதிப்பெண்களுக்கும் குறைவாக
X = 35 எனும் போது
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 35-45 }{ 10 } \)=-1
P(X < 35) = P(Z < - 1)
P(Z > 1) = 0.5 – P(0 < Z < 1)
= 0.5 - 0.3413
= 0.1587
35 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெறும் மாணவர்களின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை
0.1587 × 1300 = 206.31
= 206 மாணவர்கள் (தோராயமாக)
(ii) 65 மதிப்பெண்களுக்கு மேலாக
X = 65 எனும் போது
Z =\(\frac { X-\mu }{ \sigma } =\frac { 65-45 }{ 10 } \)=20
P(X > 65) = P(Z > 2.0)
0.5 – P(0 < Z < 2.0)
0.5 – 0.4772
= 0.0228
65 மதிப்பெண்களுக்கு மேலாக பெறும் மாணவர்களின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை 0.0228 x 1300 = 30
= 30 மாணவர்கள் (தோராயமாக).
22.
கணக்கின்படி: n =169, \(\bar { x } \)=1350 மணி, σ= 100 மணி மிகைக்காண் (100-90)% =10% ஆகும். ∝ is 0.1, 10% இல் மிகைக்காண் \({ Z }_{ \frac { \alpha }{ 2 } }\)=1.645
\(S.E.=\frac { \sigma }{ \sqrt { n } } =\frac { 100 }{ \sqrt { 169 } } =7.69\)
முழுமைத்தொகுதியின் சராசரியின் 90% நம்பிக்கை எல்லைகள்
\(\bar { x } -{ Z }_{ \frac { \sigma }{ 2 } }<\mu <\bar { x } +{ Z }_{ \frac { \sigma }{ 2 } }SE\)
\(1350-(1.645\times 7.69)\le \mu < 1350 + (1.645 × 7.69)\)
\(1337.35\le \mu \le 1362.65\)
மின் விளக்கு சராசரி ஆயுட்காலமானது 90% நம்பிக்கை இடைவெளியில் அமைகிறது. (1337.35, 1362.65) என்று அமைகிறது.
23.
பருவகால வேறுபாடு என்பது ஒவ்வொரு பருவத்திலும் குறிப்பிட்ட கால முறையில் மீண்டும் மீண்டும் உருவாகிறது. இந்த வேறுபாடுகள் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. இது குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிடப்படுகிறது. பருவ கால வேறுபாடுகள் இயற்கை சக்திகள், சமூகப் பழக்கங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த மாறுபாடுகள் அதன் காரணிகளின் முடிவுகளாகும். இது சீராக மற்றும் வழக்கமாக அதிகரித்தும், வீழ்ச்சியுற்றும் காணப்படும். எடுத்துக்காட்டாக, மழைக் காலங்களில் குடைகள் மற்றும் மழைக்குப் பயன்படுத்தப்படும் உடைகள் (Raincoat) விற்பனை, கோடைப் பருவத்தில் குளிர்பானங்களின் விற்பனை, தீபாவளிப் பண்டிகை நாள்களில் பட்டாசு விற்பனை, பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குதல், பொங்கல் திருநாள்களில் கரும்பு விற்பனை.
24.
அதாவது, மொத்த இருப்புகள் = மொத்த தேவைகள். எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமநிலை போக்குவரத்து கணக்காகும்.
கொடுக்கப்பட்ட போக்குவரத்து அட்டவணை
முதல் ஒதுக்கீடு:
இரண்டாவது ஒதுக்கீடு:
மூன்றாவது ஒதுக்கீடு:
நான்காவது ஒதுக்கீடு:
ஐந்தாவது ஒதுக்கீடு:
இறுதி ஒதுக்கீடு:
போக்குவரத்து விவரம்
T ⟶ H, T⟶ P, B⟶ C, B⟶ H, M⟶ H, M⟶ K
மொத்த போக்குவரத்து செலவு = ( 5×8) + (25×5)+ (35×5) + (5×11)+ (18×9) + (32×7)
= 40+125+175+55+162+224
= ரூ. 781
25.
\(\triangle ^{ 2 }\left( \frac { 1 }{ x } \right) =\triangle \left( \triangle \left( \frac { 1 }{ x } \right) \right) \)
இங்கு
\(\triangle \left[ \frac { 1 }{ x } \right] =\frac { 1 }{ x+1 } -\frac { 1 }{ x } \)
\(∴ \triangle ^{ 2 }\left( \frac { 1 }{ x } \right) =\triangle \left( \frac { 1 }{ x+1 } -\frac { 1 }{ x } \right) \)
=\(\triangle \left( \frac { 1 }{ x+1 } \right) -\triangle \left( \frac { 1 }{ x } \right) \)
\(\Rightarrow \triangle ^{ 2 }\left( \frac { 1 }{ x } \right) =\frac { 2 }{ x(x+1)(x+2) } \)
26.
y=ae4x+be-x .....(1)
\(\frac { dy }{ dx } \)=4ae4x-be-x ....(2)
மற்றும் \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=16ae4x+be-x ....(3)
(1)+(2) ⇒ y+\(\frac { dy }{ dx } \)=5ae4x
(2)+(3) ⇒ \(\frac { dy }{ dx } +\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)=20ae4x
=4(5ae4x)
=\(4\left( y+\frac { dy }{ dx } \right) \)
\(\frac { dy }{ dx } +\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } =4y+4\frac { dy }{ dx } \)
⇒ \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } -3\frac { dy }{ dx } -4y\)=0 என்பது தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
27.
கொடுக்கப்பட்ட இறுதிநிலை செலவு சார்பு: MC =6+10x-6x2
C=\(\int { MC } dx+k\)
=\(\int { (6+10x-6x^{ 2 }) } dx+k\)
=6x+5x2-2x3+k .....(1)
x=2 எனும் போது C=12
∴ 12=12+20-16+k
k=-4
C=6x+5x2-2x3-4
சராசரி செலவு: \(\frac { C }{ x } =\frac { 6x+5x^{ 2 }-2x^{ 3 }-4 }{ x } \)
=6+5x-2x2-\(\frac { 4 }{ x } \).
28.
\(\int { \frac { { x }^{ 3 }+3x^{ 2 }-7x+11 }{ x+5 } } dx\)
\(x^{3}+3 x^{2}-7 x+11=(x+5)\left(x^{2}-2 x+3\right)-4 \)
\(\int \frac{x^{5}+3 x^{2}-7 x+11}{x+5} d x \)
\(=\int\left(x^{2}-2 x+3\right) d x-4 \int \frac{d x}{x+5} \)
\(=\frac{x^{3}}{3}-\frac{2 x^{2}}{2}+3 x-4 \log |x+5|+c\)
\(=\frac{x^{3}}{3}-x^{2}+3 x-4 \log |x+5|+c \)
29.
அணி சமன்பாடு
\(\left( \begin{matrix} 1 & -4 & 7 \\ 3 & 8 & -2 \\ 7 & -8 & 26 \end{matrix} \right) \left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) =\left( \begin{matrix} 14 \\ 13 \\ 5 \end{matrix} \right) \)
A X = B
| விரிவுபடுத்தப்பட்ட அணி [A,B] | அடிப்படை உருமாற்றங்கள் |
| \(\left( \begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} -4 \\ 8 \\ -8 \end{matrix}\begin{matrix} 7 \\ -2 \\ 26 \end{matrix}\begin{matrix} 14 \\ 13 \\ 5 \end{matrix} \right) \) | |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -4 \\ 20 \\ 20 \end{matrix}\begin{matrix} 7 \\ -23 \\ -23 \end{matrix}\begin{matrix} 14 \\ -29 \\ -93 \end{matrix} \right) \) | R2 ⟶ R2 - 3R1 R3 ⟶ R3 - 7R1 |
| ~\(\left( \begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} -4 \\ 20 \\ 0 \end{matrix}\begin{matrix} 7 \\ -23 \\ 0 \end{matrix}\begin{matrix} 14 \\ -29 \\ 64 \end{matrix} \right) \) | R3 ⟶ R3 - 2R2 |
| ρ(A)=3, ρ([A,B])=3 |
கடைசி சமானமான அணி ஏறுபடி வடிவில் உள்ளது. இதில் மூன்று பூச்சியமற்ற நிரைகள் உள்ளன.
∴ ρ([A,B])=3, ρ(A)=2
ρ(A) ≠ ρ([A,B])
எனவே, சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவு அற்றது மற்றும் தீர்வு ஏதுமில்லை.
30.
| மாதிரி எண் | மொத்தம் | சராசரி\(\bar X \) | வீச்சு\(\bar R \) |
| 1 | 50.1 | 12.525 | 0.4 |
| 2 | 50.4 | 12.6 | 0.4 |
| 3 | 49.6 | 12.4 | 0.5 |
| 4 | 49.6 | 12.4 | 0.4 |
| 5 | 49.9 | 12.475 | 0.1 |
| 6 | 49.9 | 12.475 | 0.3 |
| 7 | 50.6 | 12.65 | 0.3 |
| 8 | 49.8 | 12.45 | 0.3 |
| 9 | 50 | 12.5 | 0.3 |
| 10 | 50.1 | 12.525 | 0.7 |
| மொத்தம் | 125 | 3.7 |
\( \bar{X}=\frac{\Sigma \bar{X}}{n}=\frac{125}{10}=12.5 \)
\(\bar{R}=\frac{\Sigma R}{n}=\frac{3.7}{10}=0.37\)
\(\bar{X}\) வரைபடத்தின் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\text { UCL } =\bar{X}+A_2 \bar{R} \)
\( =12.5+(0.58)(0.37) \)
\(=12.5+0.2146=12.71 \)
\(\text { LCL } =\bar{X}-A_2 \bar{R} \)
\( =12.5-0.2146=12.28 \)
\(\text { CL } =12.5\)
(R) வீச்சு வரைபடக் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\mathrm{UCL} =D_4 \bar{R} =2.115(0.37)=0.78 \)
\(\mathrm{CL} =0.37 \)
\(\mathrm{LCL} =D_0 \bar{R}=0\)
31.
இங்கு நிரல்களின் எண்ணிக்கையும், நிரைகளின் எண்ணிக்கையும் சமமாக உள்ளன. எனவே கொடுக்கப்பட்ட கணக்கானது சமச்சீரான ஒதுக்கீடு கணக்காகும். தற்போது அதன் தீர்வைக் காணலாம்.
படி 1:
ஒவ்வொரு நிரையில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரையில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
படி 2: ஒவ்வொரு நிரலில் உள்ள மீச்சிறு மதிப்பை அந்த நிரலில் உள்ள அனைத்து மதிப்புகளிலிருந்தும் கழிக்க வேண்டும்.
அனைத்து ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உகந்த ஒதுக்கீடு மற்றும் மொத்த நேரம்
32.
33.
ஈருறுப்புப் பரவலின் சராசரி np மற்றும் மாறுபாடு npq ஆகும்.
np + npq = 24; np(1 + q) = 24 ... (1)
np × npq = 128; n2p2q = 128 ... (2)
(1) லிருந்து np = 24/(1+q) ⇒ n2p2 = (24/(1+q))2
(2) ல் பிரதியிட
\(\left( \frac { 24 }{ 1+q } \right) ^{ 2 }\)q=128 ⇒ 9q = 2(1+2q+q2)
(2q – 1)(q – 2) = 0
இங்கு q=\(\frac { 1 }{ 2 } \) மற்றும் p=\(\frac { 1 }{ 2 } \)
(1) ல் பிரதியிட, நாம் பெறுவது n = 32
ஈருறுப்பு பரவல் 32Cx\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ x }\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 32-x }\).
34.
இது நிகழ்தகவு நிறை சார்பு என்பதால்
\(\sum_{i=1}^{\infty} p\left(x_i\right) =1 \)
\(\sum_{i=0}^{7} p\left(x_i\right) =1 \)
⇒ 0+k+2k+2k+3k+k2+2k2+7k2+k = 1
⇒ 10k2+9k = 1
⇒10k2+9k-1 = 0
(k+1)(10k-1) = 0 ⇒k = -1
⇒ k = \(\frac{1}{10}\)
\([\because p(x_i) \ge 0 ]\)
ii) \(P(X<6) =1-P(X \geq 6) \)
\( =1-[P(X=6)+P(X=7)] \)
\( =1-\left(2 k^2+7 k^2+k\right) \)
\( =1-\left(9 k^2+k\right) \)
\( =1-\left(\frac{9}{100}+\frac{1}{10}\right)=1-\frac{9}{100}-\frac{1}{10} \)
\( =\frac{100-9-10}{100}=\frac{81}{100} \)
\(P(X \geq 6)=P(X=6)+P(X=7) \)
\( =2 k^2+7 k^2+k=9 k^2+k \)
\( =\frac{9}{100}+\frac{1}{10}=\frac{9+10}{100}=\frac{19}{100} \)
P(0X<5) = P(X = 1)+P(X = 2)+P(X = 3)+P(X = 4)
= k+2k+2k+3k
\(8k=\left( \frac { 8 }{ 10 } \right) =\frac { 4 }{ 5 } \)
iii) சோதனை மற்றும் பிழை முறைப்படி x இன் குறைந்தபட்ச மதிப்பு
\( P(X \leq 0)=0<\frac{1}{2} ; P(X \leq 1)=\frac{1}{10}<\frac{1}{2} \)
\(P(X \leq 2)=\frac{3}{10}<\frac{1}{2} ; P(X \leq 3)=\frac{5}{10}=\frac{1}{2} \)
\(P(X\le 4 ) =\frac { 8 }{ 10 } =\frac { 4 }{ 5 } >\frac { 1 }{ 2 } \)
\(\therefore P(X\le x )\frac { 1 }{ 2 } \) - க்கான x இன் குறைந்தபட்ச மதிப்பு 4 ஆகும்
35.
நிறை = x என்க. மாணவர்களின் எண்ணிக்கை = y என்க. கூட்டு நிகழ்வெண் பரவலில் மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் வேறுபாட்டு அட்டவணை.
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 40-க்குக் குறைவான | 250 | ||||
| 120 | |||||
| 60 | 370 | -20 | |||
| 100 | -10 | ||||
| 80 | 470 | -30 | 20 | ||
| 70 | 10 | ||||
| 100 | 540 | -20 | |||
| 50 | |||||
| 120 | 590 |
70 க்கு கீழ் நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை காண நாம் முன்நோக்கு இடைவெளி சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
y(x=x0+nh)=\({ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x= 70 இடத்து y-ஐ காண வேண்டும்
∴ x0+nh=70, x0=40, h=20
40+N(20)=70 ⇒ N=1.5
∴ Y(x=70)=250+1.5(120)+\(\frac { (1.5)(0.5) }{ 2! } (-20)+\frac { (1.5)(0.5)(-0.5) }{ 3! } (-10)+\frac { (1.5)(0.5)(-0.5)(-1.5) }{ 4! } (20)\)
=250+180-7.5-0.625+0.46875
=423.59
=424
60-க்கும் 70-க்கும் இடைப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை
=y(70)-y(60)=424-370=54
36.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { 1 }{ cos^{ 2 }x } y=\frac { tanx }{ cos^{ 2 }x } \) என எழுதலாம்.
அதாவது, \(\frac { dy }{ dx } \)+y sec2x=tanxsec2x
இது \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு P=sec2x, Q=tanxsec2x
\(\int { P } dx=\int { sec^{ 2 }x } dx=tanx\)
I.F=\(e^{ \int { p.dx } }=e^{ tanx }\)
தேவையான தீர்வு: y(I.F)=\(\int { Q(I.F)dx } +c\)
yetanx=\(\int { \tan x \sec^{ 2 } } xe^{ \tan x }dx+c\)
tanx-=t என்க.
sec2xdx=dt
∴ yetanx=\(\int { te^{ t } } dt+c\)
=\(\\ \int { td } (e^{ t })+c\)
=tet-et+c
=tanxetanx-etanx+c
yetanx=etanx(tanx-1)+c
37.
சமநிலையில், தேவைச் சார்பு = அளிப்புச் சார்பு
\(p_d =p_s \)
\(1600-x^2 =2 x^2+400 \)
\(1600-400 =3 x^2 \)
\(1200 =3 x^2 \)
\(x^2 =400 \Rightarrow x=20 \)
\(p =1600-400=1200
\)
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) d x \)
\(=24000-\int_0^{20}\left(2 x^2+400\right) \mathrm{d} x \)
\(=24,000-\left[\frac{2 x^3}{3}+400 x\right]_0^{20} \)
\(=24,000-\left[\frac{16000}{3}+8000\right] \)
\( =16,000-\frac{16,000}{3}
\)
\(=\frac { 32000 }{ 3 } \) அலகுகள்
38.
\(\begin{equation} \int\left(\frac{x}{2 x^{4}-3 x^{2}-2}\right) d x \end{equation}\)
2x4-3x2-2=2x4-4x2+x2-2
=2x4- (x2-2) + 1(x2-2)
= (2x2 + 1)(x2 - 2)
\(\int \frac{x d x}{(2 x^{2}+1)( x^{2}-2} )= \frac {1}{2}\frac {dt}{(2t + 1)(t -2)}\)
\(\frac {1}{(2t + 1)(t -2)} = \frac{A}{2t + 1}+ \frac{B }{t -2}\)
| t = x2 dt=2xdx \(\frac{dt}{2}=xdx\) |
1 = A (t - 2) + B (2t + 1) ... (1)
t = 2 எனில்
1 = B ( 5) ⇒ B = \(\frac{1}{5}\)
(1) - ல், 't' - ன் கெழுக்களைக் சமப்படுத்த
0 = A + 2B
\(A =-\frac {2}{5}\)
\(\frac{1}{(2 t+1)(t-2)} =-\frac{2}{5(2 t+1)}+\frac{1}{5(t-2)} \)
\( \int \frac{d t}{(2 t+1)(t-2)} =-\frac{2}{5} \int \frac{d t}{2 t+1}+\frac{1}{5} \int \frac{d t}{t-2}\)
\(=-\frac{1}{5} \int \frac{2 d t}{2 t+1}+\frac{1}{5} \log |t-2|+c \\ \)
\(=-\frac{1}{5} \log |2 t+1|+\frac{1}{5} \log |t-2|+c \\ \)
\(=\frac{1}{5} \log \left|\frac{t-2}{2 t+1}\right|+c \\ \)
\(\int \frac{x d x}{2 x^{4}-3 x^{2}-2} =\frac{1}{2}\left[\frac{1}{5} \log \left|\left(\frac{t-2}{2 t+1}\right)\right|\right]+c \)
\(=\frac{1}{10} \log \left|\frac{x^{2}-2}{2 x^{2}+1}\right|+c\)
39.
x ,y ,z என்பன முறையே வகை I ,II மற்றும் III ஆகியவற்றின் எடைகள் என்க.
எனவே , சமன்பாடுகள்
x + 2y + 3z = 11
2x + 4y + 5z = 21
3x + 5y + 6z = 27
\(\Delta =\begin{vmatrix} 1 & 2 & 3 \\ 2 & 4 & 5 \\ 3 & 5 & 6 \end{vmatrix}\)
= 1(24-25)-2(12-15)+3(10-12)
= -1+6-6
=-1\(\neq \)0
\(\therefore \) கிரேமரின் விதியை பயன்படுத்தலாம் .
\(\Delta _{ x }=\begin{vmatrix} 11 & 2 & 3 \\ 21 & 4 & 5 \\ 27 & 5 & 6 \end{vmatrix}\)
= 11(24-25)-2(126-135) + 3(105-108)
= -11+18-9 = -2
\(\Delta _{ y }=\begin{vmatrix} 1 & 11 & 3 \\ 2 & 21 & 5 \\ 3 & 27 & 6 \end{vmatrix}\)
= 1(126 -135)-11(12-15)+3(54-63)
= -9+33-27 =-3
\(\Delta _{ z }=\begin{vmatrix} 1 & 2 & 11 \\ 2 & 4 & 21 \\ 3 & 5 & 27 \end{vmatrix}\)
= 1(108 -105)-2(54-63)+11(10-12)
= 3+18-22 =-1
\(x=\cfrac { { \Delta }_{ x } }{ \Delta } =\cfrac { -2 }{ -1 } =2\)
\(y=\cfrac { { \Delta }_{ y } }{ \Delta } =\cfrac { -3 }{ -1 } =3\)
\(z=\cfrac { { \Delta }_{ z } }{ \Delta } =\cfrac { -1 }{ -1 } =1\)
தரங்கள் I,II,மற்றும் III ஆகியவற்றின் எடைகள் முறையே 2,3 மற்றும் 1.
40.
ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் =\(\sqrt{110 \times 108} = \sqrt{11880} = 108.99 - 109\)
41.
(d)
சீரற்ற மாறுபாடு
42.
\(P(Z>z) =0.8413 \)
0.5+P(-z<Z<0) =0.8413
P(-z<Z<0) =0.3413
z =-1
43.
\(\mathrm{P}(-3 <\mathrm{Z}<-0.5) \)
\(= \mathrm{P}(0<\mathrm{Z}<3)-\mathrm{P}(0<\mathrm{Z}<0.5)\)
=0.4987-0.1915=0.3072
44.
(b)
மொத்த செயல்கள் மற்றும் மொத்த வளங்களை சமப்படுத்த
45.
(d)
சமநிலையற்றது
46.
(a)
மேல் இடது மூலை
47.
(b)
இடைவெளி மதிப்பீடு
48.
(b)
\(\frac {1}{N}\)
49.
(b)
கூறு பண்பளவை
50.
(d)
குறிப்பிட்ட வருடத்திற்கு ஒரு நிறுவனத்தால் பெறப்பட்ட அனைத்து மருத்துவ காப்பீட்டு உரிமைக் கோரிக்கைகள்
51.
(b)
52.
(c)
எதிர்பார்த்தல் மதிப்பு
53.
(c)
f(x)
54.
\(\Delta \mathrm{f}(x) =\mathrm{f}(x+\mathrm{h})-\mathrm{f}(x) \)
\(\Delta\left(x^2\right) =(x+\mathrm{h})^2-x^2 {\left[\because \mathrm{f}(x)=x^2\right]} \)
\(=(x+1)^2-x^2=2 x+1 {[\because \mathrm{h}=1]}
\)
55.
சிறப்புத் தொகை \(\text { P.I } =\frac{1}{3 D^2+D-14}\left(13 \mathrm{e}^{2 x}\right) \)
D=2 எனில், \(3 \mathrm{D}^2+\mathrm{D}-14=0\)
\( =x\left(\frac{1}{6 D+1}\right) 13 e^{2 x} \)
\( =\frac{13 x e^{2 x}}{13}=x \mathrm{e}^{2 x}\)
56.
y = mx + c
\(\frac{d y}{d x}=\mathrm{m} \) மற்றும் \(\frac{d^2 y}{d x^2}=0\)
57.
\(\mathrm{y} =\mathrm{c} x+\mathrm{c}-\mathrm{c}^3 \Rightarrow \frac{d y}{d x}=\mathrm{c} \)
\(\therefore \mathrm{y} =x \frac{d y}{d x}+\frac{d y}{d x}-\left(\frac{d y}{d x}\right)^3 \)
58.
பரப்பு \(=\int_0^1 e^x d x=\left[e^x\right]_0^1=e^1-e^0=\mathrm{c}-1\)
59.
(a)
60.
\(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 4 }(1-x)^{ 2 } } }\)dx = \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 2 }(1-x)^{ 2 } } }\)
\(=\int _{ 0 }^{ 1 }{ \sqrt { { x }^{ 2 }-x^{ 3 } } }dx = \left[\frac{x^{3}}{3} \frac{x^4}{4}\right]^1_0\)
\(= \frac{1}{3} - \frac{1}{4} = \frac{4-3}{12} = \frac{1}{12}\)
61.
\(\int _{ 0 }^{ 1 }{ (2x+1) } dx ={ { \left[ \frac { { 2x }^{ 2 } }{2 }+ x \right] }^{ 1 }_{ 0 } }\)
=1+1=2
62.
t = 4 + x4 என்க.⇒ dt = x4 dx
\(\int { \frac { { 2x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } } \)dx \(= \int \frac {1}{2}{ \frac { { 4x }^{ 3 } }{ 4+{ x }^{ 4 } } } dx = \frac {1}{2} \int \frac {dt }{t }\)
\(=\frac { 1 }{ 2 } \log \left| t \right| +c\)
\(=\frac { 1 }{ 2 } \log \left| 4+{ x }^{ 4 } \right| +c\)
63.
0.6 + x = 1 ⇒ x = 1 - 0.6 = 0.4
64.
A = \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 2 & 3 \\ 1 & 4 & 9 \end{matrix} \right) \)
~ \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 3 & 8 \end{matrix} \right)R_2 \rightarrow R_2 - R_1\\ \quad \quad \quad \quad \quad R_3\rightarrow R_3 -R_1 \)
~ \(\left( \begin{matrix} 1 & 1 & 1 \\ 0 & 1 & 2 \\ 0 & 0 & 2 \end{matrix} \right)R_3 \rightarrow R_3 - 3R_2\)
ρ(A)= 3
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards