12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
OSI மாதிரியை அதன் அடுக்குகளோடு விவாதிக்கவும்.
2.
இணையம், அக இணையம் மற்றும் புற இணையம் விரிவாக விளக்குக?
3.
DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குக.
4.
பெயர் சேவையகத்தை அதன் வகைகளுடன் விளக்குக
5.
ஈத்தர்நெட் வடமிடலில் (Cabling) பயன்படுத்தப்படும் கூறுகளை விளக்குக.
6.
பதிவு செய்யப்பட்ட ஜாக் (RJ) என்றால் என்ன? ஜாக் வகைகளை சுருக்கமாக விளக்குக.
7.
சுட்டெண் கொண்ட அணி மற்றும் தொடர்புருத்த அணி பற்றி விரிவாக விளக்குக
8.
பயனர் வரையறுக்கும் செயற்கூறை எடுத்துக்காட்டுடன் விவரி.
9.
PHP இல் உள்ள செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10.
11.
கேபிள் டிவியில் எந்த வடம் பயன்படுத்தப்படுகிறது?
UTP வடம்
ஒளியிழை வடம்
இணையச்சு வடம்
USB வடம்
12.
மூல பெயர்ச் சேவையகம் எந்த அமைப்பினால் பராமரிக்கப்படுகிறது?
IANA
ICANN
WHO
DNS
13.
14.
PHP இல் ஒரு செயற்கூறை அழைப்பதற்கான சரியான கூற்று எது?
functionName();
call functionName;
execute functionName;
run functionName();
15.
முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் ________ எனவும் அழைக்கப்படுகின்றன.
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
தற்சுழற்சி செயற்கூறுகள்
உள்ளிணைந்த செயற்கூறுகள்
லாம்டா செயற்கூறுகள்
16.
____ செயற்குறி இரண்டு மதிப்புகளை ஒப்பிடுகிறது.
கணக்கீட்டு
ஒப்பீட்டு
மிகுப்பு
தருக்க
17.
PHP இல் மாறியின் பெயர் _________ குறியீட்டில் தொடங்க வேண்டும்.
#
//
$
<
18.
PHP கோப்பின் நீட்டிப்பு என்ன?
.html
.xml
.php
.ph
19.
கம்பியில்லா ஊடகங்களுக்கு உதாரணங்கள் எவை?
அகச்சிவப்பு கதிர்கள்
பிளூடூத்
வைஃபை
இவை அனைத்தும்
20.
எது மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது?
DNS
TCP
FTP
SMTP
21.
RFID-ன் விரிவாக்கம் _______.
Radio Free identification
real Frequency identity
Radio Frequency indicators
Radio Frequency Identification
22.
_______எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு பிற கணினிகளை கண்டறிகிறது.
DNS
TCP
FTP
SMTP
23.
களப்பெயரில், சிட்டைகளைப் பிரிப்பது.
அரைப்புள்ளி (;)
புள்ளி (.)
முக்காற்புள்ளி (:)
Null
24.
IPv4 முகவரிகளை குறிக்க பின்வரும் எந்த குறிமுறை பயன்படுத்தப்படுகிறது?
இரும
புள்ளி-தசம
பதினாறும
அ மற்றும் ஆ
25.
26.
கிரிம்ப்பிங் கருவியின் பயன் யாது?
27.
PHP -இல் அணி என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
28.
PHP இல் உள்ள செயற்கூறுகளின் வகைகள் யாவை?
29.
'Echo' கூற்றின் பயன் என்ன? எடுத்துக்காட்டு தருக.
30.
மாறும் வலைப்பக்கம் என்றால் என்ன?
31.
WiFi-ன் நன்மைகள் யாவை?
32.
ஒரு மண்டலம் என்ன?
33.
உங்களுக்குத் தெரிந்த நான்கு URL களை பட்டியலிடு.
34.
USB வடங்களின் பயன்கள் என்ன?
35.
ஈத்தர்நெட் வடமிடலில் (Cabling) தொடர்புடைய கூறுகள் யாவை?
36.
பூஜ்ய மோடம் கேபிள் என்றால் என்ன? எடுத்துக்காட்டாக தருக.
37.
PHP இல் செயற்கூறுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
38.
PHP இன் கட்டளை அமைப்பைப் பற்றி எழுதுக.
39.
PHP இல் உள்ள அம்சங்கள் யாவை?
40.
41.
HTTP, HTTPS, FTP – சிறுகுறிப்பு வரைக.
42.
களப்பெயர்ப் பற்றி குறிப்பு வரைக.
43.
முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
1.
OSI மாதிரி:
(i) Open System Interconnection (OSI) 1934 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
(ii) இது மென்பொருளுடன் வலையமைப்பு நெறிமுறைகளை இயக்கும் பொதுவான கட்டமைப்பு ஆகும்.
(iii) மேலும் அமைப்பு பொதுவான வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. கணினி தொடர்பிற்கான தரநிலைகளை விவரிக்கிறது.
OSI அடுக்குகள்:
(i) பருநிலை அடுக்கு (Physical Layer): இது முதலாம் அடுக்கு ஆகும். இது சாதனங்களுக்கு மின் மற்றும் பருநிலை குறிப்புகளை வரையறுக்கிறது.
(ii) தரவு இணைப்பு அடுக்கு (Datalink Layer): இது இரண்டாம் அடுக்கு ஆகும். இது பரிமாற்றப்படும் தரவுகள் பிழைகள் இல்லாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது ஈதர் நெட்டுக்கு 802.3 மற்றும் Wi-Fiக்கு 802.11 போன்ற எளிய நெறிமுறைகளைக் கொண்ட அடுக்காகும்.
(iii) வலையமைப்பு அடுக்கு (Network Layer): இது மூன்றாம் அடுக்கு ஆகும். இது தரவு பொட்டலங்களின் பாதையைத் தீர்மானிக்கிறது. இந்த அடுக்கில் IP முகவரியைப் பயன்படுத்தி தரவுப் பொட்டலங்களின் பாதை கண்டுபிடிக்கப்படுகிறது.
(iv) இடமாற்ற அடுக்கு (Transport Layer): இது நான்காம் அடுக்காகும். இது தரவு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இது பிழை சோதனை செயல்பாட்டை கொண்டுள்ளது.
(v) தொடர் அடுக்கு (Session Layer): இது ஐந்தாம் அடுக்காகும். இது பல்வேறு வலையமைப்பு நிறுவனங்களுக்கிடையே நிறுவப்பட்ட அமைப்பு தொடரை கண்டறிகிறது. இது கணினிகளிடையே உரையாடல்களை கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, தொலைவில் உள்ள ஒரு கணினியை அணுகும் போது உங்கள் கணினிக்கும் தொலைவில் உள்ள கணினிக்கு இடையே தொடர் உருவாக்கப்படுகிறது.
(vi) விளக்கக்காட்சி அடுக்கு (Presentation Layer): இது ஆறாவது அடுக்கு ஆகும். இது அடுத்த (பயன்பாட்டு அடுக்கிற்கு தரவை மொழி பெயர்த்து தருகிறது. குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்க நெறிமுறைகள் இந்த அடுக்கில் ஏற்படுகின்றன. இது பாதுகாப்பு துளை அடுக்கை (Secure Socket Layer SSL) ஐ ஒத்ததாகும்
(vii) பயன்பாட்டு அடுக்கு (Application Layer): இது ஏழாவது அடுக்காகும். இது கணினியில் உள்ள மென்பொருளை உள்ளடக்கிய பயனர் இடைமுக மேடையாக செயல்படுகிறது.
2.
இணையம் :
(i) இணையத்தில் வலை (Net) என்பது கணினி வலைத் தொகுதியின் உலகளாவிய அமைப்பாகும்.
(ii) வலையமைப்பில் ஒரு கணினிப் பயனர், அனுமதி பெற்றிருந்தால் மற்ற பிற கணினியிலிருந்து தகவலைப் பெறலாம். இணையம் என்பது உலகளாவிய இணைப்பின் வலையமைப்பாகும்.
(iii) இது தனிப்பட்ட, பொது, வணிகம், கல்வி மற்றும் அரசு வலையமைப்புகளை உள்ளடக்கியது.
(iv) இது கம்பியில்லா மற்றும் ஃபைபர் ஆப்டிக் (Fiber Optic) தொழில் இணைக்கப்பட்டுள்ளது. நுட்பத்தால்
(v) இது 1969 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் ARPA (Advanced Research Projects Agency) உணரப்பட்டு ARPANET என்று அங்கீகரிக்கப்பட்டது.
(vi) இணையம் மற்றும் உலகளாவிய வலையமைப்பு ஆகியவை ஒன்றுக்கு ஒன்று மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் அவைகள் துல்லியமாக ஒன்றல்ல.
(vii) இணையம் என்பது, வன்பொருள் மற்றும் உள்கட்டமைப்பை பொருத்த உலகளாவிய தொடர்பாகும். ஆனால், வலை என்பது இணையத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள சேவைகளில் ஒன்றாகும்.
அக இணையம் :
(i) இது தனிப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ள பணியாளர்களின் தரவுகளையும் வளங்களையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
(ii) இது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல குறும்பரப்பு (LAN) வலையமைப்புகளை கொண்டது.
(iii) இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேட்வே (Gateway) கணினிகள் மற்றும் இணையத்திற்கு வெளியே உள்ள கணினிகள் ஆகியவற்றின் மூலம் இணைப்புகளை உள்ளடக்கியது.
(iv) இரண்டு வலையமைப்புகளை வெவ்வேறு நெறிமுறைகளை பயன்படுத்தி ஒன்றாக இணைப்பதே நெறிமுறை மாற்றி எனப்படும்.
புற இணையம் :
இது ஒரு தனிப்பட்ட வலையமைப்பு ஆகும். இது இணைய தொழில்நுட்பம் மற்றும் பொது தொலைத்தொடர்பு ஆகியவற்றின் மூலம் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியவர்களுடன் வணிகத் தகவல்களைப் பாதுகாப்பாக பகிர்ந்தளிக்கிறது.
3.
களப்பெயர் முறைமை வேலை செய்யும் விதம்:
(i) பயனர் உலாவியில் URLஐ தட்டச்சு செய்யும் பொழுது, கணினியானது முதலில் தொடர்புடைய IP முகவரியை அக்கணிப்பொறியின் DNS இடைத்தேக்கத்தில் (Cache) தேடுகிறது.
(ii) இடைத்தேக்கத்தில் IP முகவரி கண்டுபிடிக்கப்பட்டால், அதைப் பற்றிய தகவல் அங்கிருந்து மீட்கப்படும். இல்லையெனில், கணினி தீர்வியிடம் DNS வினவலை (DNS query) தொடங்க வேண்டும்.
(iii) இந்த தீர்வி (Resolver) இணைய வழங்குநரின் (ISP) சேவையகத்தில் இடம் பெற்றிருக்கும்.
(iv) ஒவ்வொரு தீர்வியும் தனக்கென்று இடைத் தேக்கத்தை (cache) பெற்றிருக்கிறது.
(v) அதில் ஐபி முகவரி போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டால் அந்த தகவல்கள் மீட்டெடுக்கப்படும். இல்லையெனில் வினவல் அடுத்த பெயர்ச்சேவையகத்திற்கு (Domain NameServer) அதாவது, TLD (உயர்நிலைகளம்) க்கு அனுப்பப்படுகிறது. TLD அந்த வினவலை மதிப்பாய்வு செய்து குறிப்பிட்ட களத்துடன் தொடர்புடைய பெயர் சேவையகங்களுக்கு வினவலை அனுப்புகிறது.
(vi) IP முகவரி கிடைக்கும்வரை அடுத்தடுத்த பெயர் சேவையகங்களுக்கு வினவல் அனுப்பப்படுகிறது.
(vii) இறுதியில் IP முகவரி கண்டறியப்பட்டு அதற்கான பதிவுகள் தீர்விக்கு (Resolver) அனுப்பப்படுகிறது.
(viii) பின்னர் தீர்வி இந்த பதிவுகளை கணினி உலாவிக்கு (Browser) வழங்குகிறது.
(ix) இப்பொழுது, கண்டறியப்பட்ட IP முகவரிக்கான வலைப்பக்கங்களை பயனரால் பார்க்க முடியும்.
4.
பெயர் சேவையகம்:
(i) பெயர் சேவையகம் என்பது களப்பெயர் வெளியின் மிக முக்கிய அங்கமாகும்.
(ii) இது களப்பெயரை ஐபி முகவரியாக மாற்றுகிறது.
(iii) உலகளாவிய பயன்பாட்டிற்காக அதிக எண்ணிக்கையிலான களப்பெயர்களை தேக்கி வைக்க வேண்டிய தேவை இருப்பதால் பல சேவையகங்கள் படிநிலை முறையில் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.
பெயர் சேவையகங்களின் வகைகள்:
முழு களப்பெயர் முறைமையையும் கட்டுப்படுத்துவதற்கு மூன்று வகையான பெயர் சேவையகங்கள் உள்ளன.
(i) மூலப் பெயர் சேவையகம் (Root Nameserver) - இது முழு DNS மர அமைப்பை கொண்டிருக்கும் (Top level server) ஆகும். இது ICANN என்ற அமைப்பின் மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 13 சேவையகங்கள் உள்ளன.
(ii) முதன்மை பெயர் சேவையகம் (Primary/ Nameserver) - இது மண்டல வளப் பதிவுகளைக் (Zone resource records) . இந்த பதிவுகள் களப்பெயர் உரிமையாளர்களால் புதுப்பிக்கப்படுகிறது.
(iii) இரண்டாம்நிலை பெயர் சேவையகம் (Secondary Nameserver) - இந்த சேவையகம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆனால் முதன்மை சேவையக கோப்புகளை நகலெடுக்கிறது. இது வினவல்களைப் பகிர்வதன் மூலம் முதன்மைச் சேவையகத்தின் பணிச்சுமையை குறைக்கிறது.
5.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன.
(1) இணைப்பு வடம் (Patch Cable)
(2) RJ45 (RJ45 Connector)
(3) ஈத்தர்நெட் தொடர்பி (Ethernet Port)
(4) கிரிம்பிங் கருவி (Crimping Tool)
1. இணைப்பு வடம் (முறுக்கப்பட்ட இணை கம்பிகள்):
(i) இந்த வடங்கள் பொதுவாக எட்டு வெவ்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
(ii) அவைகளில் நான்கு திட (Solid) நிறங்கள். மற்றவை கோடிடப்பட்டவை (Striped).
(iii) ஈத்தர்நெட் வடங்கள் பொதுவாக பல்வேறு தொழில்துறை தரங்களில் உற்பத்திசெய்யப்படுகின்றன. அவை CAT 3, CAT 5, CAT 6, CAT 62, CAT 7. இதில் CAT என்பது Category என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது.
2. RJ45 (RJ45 Connector):
(i) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது.
(ii) ஆனால் இது அளவில் சற்று பெரியது.
(iii) RJ45 இல் "RJ” என்பது Registered Jack மற்றும் "45" என்பது வடத்தின் இடைமுகத் தரத்தை குறிக்கிறது.
(iv) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும்.
3. ஈத்தர்நெட் தொடர்பி:
(i) ஈத்தர்நெட் தொடர்பி என்பது ஈதர்நெட் அட்டையின் ஒரு திறவுப் (Opening) பகுதியாகும். இது ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்கிறது.
(ii) தனியாள் கணினிகள், மடிக்கணினிகள், திசைவிகள், சுவிட்சுகள், மையங்கள் (hub) மற்றும் மோடம்கள் போன்றவற்றில் இது காணப்படுகிறது.
4. கிரிம்பிங் கருவி (Crimping Tool):
(i) Crimping என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பிகள் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ளும் வகையில் இணைக்கும் செயலாகும்.
(ii) ஈத்தர்நெட் வடமிடலின் முக்கிய செயல் 45 இணைப்பியை முறுக்கு இணைக்கம்பியின் இருபுறமும் இணைப்பதாகும்.
(iii) crimping கருவி என்பது வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும்.
6.
பதிவு செய்யப்பட்ட ஜாக்குகள்:
(i) பொதுவாக RJ என்று அழைக்கப்படும் Registered Jack என்பது வலையமைப்பு வடமிடல், வயரிங் மற்றும் ஜாக் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் வலையமைப்பு இடைமுகமாகும்
Registered Jack என்பது இணைப்பி (male connector / Plug), தொடர்பி (female connector / Jack) மற்றும் அதன் வயரிங் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் குறிக்கிறது.
பதிவுசெய்யப்பட்ட ஜாக் வகைகள்:
1. RJ - 11:
(i) இது பதிவுசெய்யப்பட்ட ஜாக்கின் மிகவும் பிரபலமான வடிவமாகும்.
(ii) இது வீடு மற்றும் அலுவலங்களில் தொலைபேசி இணைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
(iii) RJ-11 இல் ஆறு ஊசிகள் (6 PINS) உள்ளன.
(iv) அவற்றில் 2 ஊசிகள் தகவலை அனுப்புவதற்கும் 2 ஊசிகள் தகவலைப் பெறுவதற்கும் மீதம் 2 ஊசிகள் பயன்படுத்தபடாமலும் விடப்பட்டிருக்கும்.
2. RJ - 14 மற்றும் RJ - 61:
(i) RJ-14 என்பது RJ-11 போன்று தொலைபேசி இணைப்பில் பயன்படுத்தப்படுகிறது.
(ii) இதிலும் 6 ஊசிகளே பயன்படுத்தப்படுகின்றன.
(iii) ஆனால் RJ-61 எட்டு ஊசிகளை கொண்டிருக்கும்.
(iv) இந்த RJ -61 வலையமைப்பு கருவிகளை இணைப்பதற்கு, முறுக்கு இணை கம்பிகளை பயன்படுத்துகிறது.
3. RJ - 21:
(i) இந்த இணைப்பான் ஒரு முனையில் 25 ஊசிகளும் அடுத்த முனையில் 25 ஊசிகளுமாக மொத்தம் 50 ஊசிகளைக் கொண்டுள்ளது.
(ii) இது சாம்ப் (Champ) இணைப்பி அல்லது ஆம்பனோல் (Amphenol) இணைப்பி எனவும் அழைக்கப்படுகிறது.
(iii) Amphenol என்பது இணைப்பியை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
(iv) RJ- 21 இடைமுகமானது தரவுத் தொடர்பைப் பிரித்தனுப்பும் பயன்பாடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
7.
சுட்டெண் கொண்ட அணி:
சுட்டெண் கொண்ட அணி என்பது அணியின் உறுப்புகளை அணுக எண் வகை சுட்டெண்ணைப் பயன்படுத்துகிறது. அணியின் சுட்டெண் மதிப்பானது 0 (zero) வில் தொடங்கும்.
PHP இல் சுட்டெண் கொண்ட அணியை உருவாக்க,
(i) காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மதிப்புகளை சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்க வேண்டும். (அல்லது)
(ii) array() செயற்கூறைப் பயன்படுத்த வேண்டும்.
கட்டளை அமைப்பு
$arrayVariable = [ element1, element2, element3, elementN];
(or)
$arrayVariable = array( element1, element2, element3,... elementN);
எடுத்துக்காட்டுகள்
(a) $fruits = ['apple, 'banana, 'orange'];
(b) $fruits = array('apple, 'banana, 'orange');
மேற்கண்ட எடுத்துக்காட்டில் உள்ள அணியின் உறுப்புகள் "apple", "banana", மற்றும் "orange" ஆகும். முதல் உறுப்பின் சுட்டெண் 0 (zero), இரண்டாவது உறுப்பின் சுட்டெண் 1. மூன்றாவது உறுப்பின் சுட்டெண் 2 ஆகும்.
(c) $numbers = array(1, 2, 3, 4, 5);
(d) $colours = array("red", "green", "blue");
(e) $num = array(10, 10.5, 20, 20.5);
தொடர்புருத்த அணி (Associative array):
தொடர்புருத்த அணி என்பது திறவுகோலும், மதிப்பும் இணைந்த ஒரு தரவு கட்டமைப்பாகும். திறவுகோல்கள் என்பது மதிப்புகளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது. மதிப்புகளானது எந்தவொரு தரவினமாகவும் இருக்கலாம். தொடர்புருத்த அணியில் உள்ள திறவுகோல்கள், "லேபிள்கள்" என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை தொடர்புடைய மதிப்புகளை லேபிளிடுகின்றன. அல்லது அடையாளப்படுத்துகின்றன.
PHP இல் தொடர்புருத்த அணியை உருவாக்க,
(i) காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட திறவுகோலும் மதிப்பும் இணைந்த உறுப்புகளை சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படவேண்டும். (அல்லது)
(ii) array() செயற்கூறைப் பயன்படுத்த வேண்டும்.
கட்டளை அமைப்பு

எடுத்துக்காட்டு :
$student = [ "Name" => "Ram", "Age" => 25, "Place" => "Trichy"];
(OR)
$student = array( "Name" => "Ram", "Age" => 25, "Place" => "Trichy" };
8.
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள் (User- defined Functions):
பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளானது 'function' என்னும் சிறப்புச் சொல்லுடன் தொடங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து செயற்கூறின் பெயர் மற்றும் பிறை அடைப்புக் குறிகள் (Parentheses) இடம் பெற வேண்டும்.
செயற்கூறு அறிவிப்பு : கட்டளை அமைப்பு
function functionName([parameter list])
{
// code to be executed
}
(i) இதில் "function" என்னும் சிறப்புச் சொல் செயற்கூறு வரையறையைக் குறிக்கிறது.
(ii) functionName என்பது செயற்கூறின் பெயர். இது PHP இல் உள்ள எந்தவொரு குறிப்பெயராகவும் இருக்கலாம். ஆனால் சிறப்புச் சொல்லாக இருக்கக் கூடாது.
(iii) parameter list என்பது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட மாறிகளின் பெயரைக் கொண்டிருக்கும். இது ஒரு விருப்பத் தேர்வாகும். இதில் நமக்குத் தேவையான அளபுருக்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தலாம்.
(iv) நெளிவு அடைப்புக் குறிகளுக்குள் செயற்கூறு செயல்படுத்த வேண்டிய குறிமுறைத் தொகுதியைக் கொடுக்க வேண்டும். இவற்றில் PHP கூற்றுகள், மடக்குகள், நிபந்தனைகள் மற்றும் பல இடம் பெறலாம்.
9.
செயற்குறி என்பது ஒரு மதிப்பு அல்லது பல மதிப்புகள் மீது, கொடுக்கப்பட்ட செயலை செய்யும் ஒரு குறியீடு ஆகும்.
PHP-இல் உள்ள செயற்குறிகளின் வகைகள்:
(i) கணக்கீட்டு செயற்குறிகள்
(ii) மதிப்பிருந்து செயற்குறிகள்
(iii) ஒப்பீட்டு செயற்குறிகள்
(iv) தருக்க செயற்குறிகள்
(v) மிகுப்பு / குறைப்பு செயற்குறிகள்
(vi) சர செயற்குறிகள்
(i) கணக்கீட்டு செயற்குறிகள் (Arithmetic Operators):
கணக்கீட்டு செயற்குறிகள் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற கணித செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுகின்றன.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| + | கூட்டல் | 5+2 | 7 |
| - | கழித்தல் | 5-2 | 3 |
| * | பெருக்கல் | 5*2 | 10 |
| / | வகுத்தல் | 5/2 | 2.5 |
| % | வகுமீதி | 5%2 | 1 |
(ii) மதிப்பிருத்து செயற்குறிகள் (Assignment Operators):
ஒரு மாறிக்கு மதிப்பிருத்த செயற்குறிகள் (=) பயன்படுகிறது. மதிப்பிருத்து செயற்குறிக்கு வலது பக்கத்தில் உள்ள மதிப்பானது, இடது பக்கம் உள்ள மாறியில் இருத்தப்படுகிறது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| = | மதிப்பிருத்து செயற்குறி | $a = 5; | 5 |
(iii) ஒப்பீட்டு செயற்குறிகள் (Comparison Operators):
ஒப்பீட்டு செயற்குறிகள் இரண்டு மதிப்புகளை ஒப்பிட்டு, True அல்லது False என்ற விடையைக் கொடுக்கிறது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு | |
| > | விடப்பெரியது | 5>2 | True | |
| < | விடச்சிறியது | 5<2 | False | |
| >= | விடப்பெரியது அல்லது சமமானது | 5>=2 | True | |
| <= | விடச்சிறியது அல்லது சமமானது | 5<=2 | False | |
| == | சமமானது | 5==5 | True | |
| === | ஒத்தது | 5===5 | 5===5.0 | True |
| != | சமமில்லை | 5! = 5 | False | |
| 5!=6 | True | |||
| !== | ஒத்தது இல்லை | 5!==5 | False | |
|
5!==5.0 |
True | |||
(iv) தருக்க செயற்குறிகள் :
தருக்க செயற்குறிகள் மாறிகள் மற்றும் மதிப்புகளில் தருக்க செயல்பாடுகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| && | Legal AND | (5>3) && (5>7) | False |
| || | Legal OR | (5>3) || (5>7) | True |
| xor | XOR | (5>3) xor (5>7) | True |
| ! | Logical NOT | ! (5>3) | False |
(v) மிகுப்பு / குறைப்பு செயற்குறிகள்:
PHPஇல் ஒரு மாறியின் மதிப்பை ஒன்று மிகுப்பதற்கு, மிகுப்பு செயற்குறி (++) பயன்படுகிறது. ஒரு மாறியின் மதிப்பை ஒன்று குறைப்பதற்கு, குறைப்பு செயற்குறி (--) பயன்படுகிறது. மிகுப்பு மற்றும் குறைப்பு செயற்குறிகளை முன்னொட்டு மற்றும் பின்னொட்டாகப் பயன்படுத்தலாம்.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு |
| ++ | ++ $a (முன் - மிகுப்பு) | $x = ++$a |
| $a ++ (பின் -மிகுப்பு) | $x = $a++ | |
| -- | --$a (முன் - குறைப்பு) | $x=--$a |
| $a--(பின்னொட்டு - குறைப்பு) | $x=$a-- |
(vi) சர செயற்குறிகள் :
சர செயற்குறிகளானது இணைப்பு செயற்குறி ( . ) மற்றும் மதிப்பிருத்து இணைப்பு செயற்குறி (.=) என இரண்டு செயற்குறிகளைப் பெற்றுள்ளது.
| குறியீடு | செயற்குறி பெயர் | எடுத்துக்காட்டு | வெளியீடு |
| .(Dot) | இணைப்பு செயற்குறி | $a = 'Hello'; $b='World'; $c = $a. $b; |
HelloWorld |
| .(Dot equal to) | மதிப்பிருந்து இணைப்பு செயற்குறி | $a = 'Hello'; $b='World'; $a. = $a; |
HelloWorld |
10.
11.
(c)
இணையச்சு வடம்
12.
(b)
ICANN
13.
(b)
14.
(a)
functionName();
15.
(c)
உள்ளிணைந்த செயற்கூறுகள்
16.
(b)
ஒப்பீட்டு
17.
(c)
$
18.
(c)
.php
19.
(d)
இவை அனைத்தும்
20.
(d)
SMTP
21.
(d)
Radio Frequency Identification
22.
(a)
DNS
23.
(b)
புள்ளி (.)
24.
(d)
அ மற்றும் ஆ
25.
(a)
26.
(i) Crimping கருவி என்பது வடத்துடன் ஈத்தர்நெட் இணைப்பியை இணைக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும்.
(ii) Crimping கருவி இரண்டு ஈத்தர்நெட் தொடர்பியின் அச்சுடன் கூடிய கைப்பிடி கொண்ட ஒரு சிறிய வெட்டும் கருவியை போன்றது.
27.
அணி என்பது ஒரு தரவினம் ஆகும். இது ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒற்றை மாறியில் தேக்கி வைக்கப் பயன்படுகிறது. இது வேறுபட்ட தரவினங்களைத் தேக்கி வைக்கப் பயன்படுகிறது.
PHP இல் மூன்று வகையான அணிகள் உள்ளன. அவை,
1. சுட்டெண் கொண்ட அணி (Indexed array)
2. தொடர்புருத்த அணி (Associative array)
3. பல பரிமாண அணி (Multi-dimensional array)
28.
(i) உள்ளிணைந்த செயற்கூறுகள்
(ii) பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்
29.
PHP இல் சரம் அல்லது மற்ற தரவுகளை திரையில் காட்ட echo கூற்று பயன்படுத்தப்படுகிறது. இது பயனருக்குத் தகவலைக் காண்பிப்பதற்கான எளிய வழியாகும் /
(i) ஒற்றை சரத்தை வெளியிட (சர மதிப்புகள் ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள் குறிகளுக்கிடையே கொடுக்கப்பட வேண்டும்.)
எடுத்துக்காட்டு : echo 'Hello, world!';
(ii) பல சரங்களை வெளியிட, காற்புள்ளியால் பிரிக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டு : echo "Hello, world!";
30.
மாறும் வலைப்பக்கம் என்பது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதன் உள்ளடக்கம் மாறிக்கொண்டே இருக்கும். இது இயங்கும் வலைதளங்களை உருவாக்குவதற்கும், தரவுத்தளங்களை கையாளுவதற்கும் பயன்படுகிறது.
31.
(i) இது இணையத்திற்கு இயக்கத்தை வழங்குகிறது.
(ii) இது இணையத்துடன் இணைப்பை வழங்குகிறது.
(iii) LAN ன் எளிமை.
(iv) இணைப்பை உறுதிப்படுத்துகிறது.
(v) தொலைதூர இணைப்புகளை இணைக்க அனுமதிக்கிறது.
(vi) குறைந்த செலவு மற்றும் அதிக நன்மைகள்.
32.
(i) மண்டலம் என்பது தொடர்ச்சியான களங்கள் மற்றும் துணைக்களங்களால் ஆனது.
(ii) ஒரு மண்டலத்தில் ஒரே ஒரு களம் மட்டும் இடம்பெற்றிருந்தால் அங்கு களமும் மண்டலமும் ஒன்றேயே குறிக்கும்.
33.
(i). https.//www.google.com/
(ii) http://www.yahoo.com/
(iii) http://www.rediff.com/
(iv) http://www.facebook.com/
34.
USB (Universal Serial Bus) வடம் விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது
35.
ஈத்தர்நெட் வடமிடலில் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன.
(i) இணைப்பு வடம் (Patch Cable)
(ii) RJ - 45 இணைப்பி (RJ45 Connector)
(iii) ஈத்தர் நெட் தொடர்பி (Ethernet Port)
(iv) கிரிம்பிங் கருவி (Crimping Tool)
36.
(i) RS-232 என்பது ஒரு வகை தொடர் வடம் (Serial Cable) ஆகும்.
(ii) ஈதர்நெட் கிராஸ்ஓவர் வடங்கள் போலவே, RS-232 வடமும் மோடமின்றி இரண்டு கணினிகளை இணைக்கப் பயன்படுகிறது.
(iii) எனவே இது ஒரு பூஜ்ய மோடம் வடம் ஆகும்.
(iv) ஒரு வடம் இரண்டு சாதனங்களை ஒன்றோடொன்று நேரடியாக இணைத்தால் அது பூஜ்ய மோடம் எனப்படுகிறது.
37.
PHP இல் செயற்கூறுகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் :
(i) குறிமுறை மறுபயனாக்கம் : செயற்கூறானது குறிமுறை மறுபயனாக்கத்திற்கு உதவுகிறது. இது குறிமுறை எழுதும் நேரத்தையும், பராமரிக்கும் நேரத்தையும் குறைக்கிறது.
(ii) சோதித்தல் மற்றும் பிழை திருத்துதல்: ஸ்கிரிப்டில் உள்ள ஒவ்வொரு செயற்கூறையும் தனித்தனியாக சோதிக்க முடிவதால், முழு குறிமுறையையும் எளிதாக சோதிக்கவும், பிழைதிருத்தவும் முடிகிறது.
(iii) தொகுதிகளாகப் பிரித்தல்: குறிமுறைகள் சிறிய தொகுதிகளாகப் பிரிக்கப்படுவதால் அவற்றைப் பராமரிப்பதும், மாற்றியமைப்பதும் எளிமையாக இருக்கிறது.
38.
PHP இன் இந்த இரண்டு அடிப்படை விதிகளை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
(i) PHP குறிமுறையானது என்ற ஒட்டுகளுக்கிடையே கொடுக்கப்பட வேண்டும்.
?> என்பது PHP இன் முடிவு ஒட்டாகும்.
எடுத்துக்காட்டு:
// PHP code
?>
(ii) ஒவ்வொரு PHP கூற்றும் காற்புள்ளியில் (;) முடிய வேண்டும்.
எடுத்துக்காட்டு :
echo "Hello, World!"; // This is a valid PHP statement
?>
39.
PHP ஆனது இணைய மேம்பாட்டிற்கான பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில:
(i) சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி:
PHP என்பது சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியாகும். அதாவது PHP ஸ்கிரிப்ட் ஆனது சேவையகத்தில் இயக்கப்பட்டு, வெளியீடு கிளையன்டுக்கு (வலை உலவிக்கு) அனுப்பப்படுகிறது. தரவுத்தளங்களுடன் தொடர்பு கொள்ளும் மாறும் வலைப்பக்கங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
(ii) திறந்த மூல மென்பொருள்:
PHP என்பது ஒரு திறந்த மூல மென்பொருளாகும். இதன் மூலக் குறிமுறையை யார் வேண்டுமானாலும் பார்க்கவும். மாற்றியமைக்கவும் முடியும்.
(iii) இயக்க அமைப்பு சாராதது:
விண்டோஸ், லினக்ஸ் மற்றும் macOS போன்ற பல்வேறு இயக்க அமைப்புகளில் இது செயல்படுகிறது.
(iv) தரவுத்தளத்துடன் இணைந்து செயல்படுதல்:
இது தரவுத்தளத்தால் இயக்கப்படும் வலைத்தளங்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது.
40.
41.
1. HTTP -இது வலை பயனருக்கும் வலை சேவையகத்திற்கும் இடையே பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பற்ற தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.
2. HTTPS- இது வலைப்பயனருக்கும் வலை சேவையகத்திற்கும் இடையே பயன்படுத்தப்படுகிது. இது பாதுகாப்பான தரவு பரிமாற்றத்தை உறுதிசெய்கிறது.
3. FTP - இது கணினிகளுக்கிடையே கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயன்படுகிறது.
42.
1. களப்பெயர் என்பது சிட்டைகளின் வரிசையாகும்.
2. களப்பெயரில் சிட்டைகள் புள்ளி (.) மூலம் பிரிக்கப்படுகிறது.
3. களப்பெயர் எப்போதுமே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை படிக்கப்படுகிறது.
4. வேர்முனை எப்போதும் வெற்று சரத்தை குறிப்பதால் எல்லா பெயர்களும் புள்ளியில் முடிவடைகின்றன.
43.
| முழுமையான URL | சார்பு URL | |
| 1 | இது இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி. | இது இணையத்தில் உள்ள கோப்பின் முழுமையற்ற முகவரி. |
| 2 | இது இணையத்தில் கோப்பினைத் தேடித் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. | இது கோப்புப் பெயர் அல்லது கோப்புறையுடன் கூடிய கோப்புப் பெயரைக் கொண்டது. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards