12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.
2.
பொது அயனி விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
3.
DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதுக.
4.
ஒடுக்கும் மற்றும் ஒடுக்கா சர்க்கரைகள் என்பவை யாவை ?
5.
பிரக்டோசின் அமைப்பைத் தருவி.
6.
ஹென்டர்சன் -ஹேசல்பாக் சமன்பாடு - தருவி.
7.
அமில தாங்கல் வினைகள் மற்றும் கார தாங்கல் வினைகள் நிகழும் விதத்தினை விவரி.
8.
ஒரு வலிமை குறை காரத்தின் ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியை விவரி.
9.
0.04 M HNO3 கரைசலின் pH மதிப்பை கண்டுபிடி
10.
11.
நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.
12.
பின்வரும் குறைபாட்டு நோய்களை உருவாக்கும் வைட்டமின்களின் பெயர்களை எழுதுக.
i) ரிக்கட்ஸ்
ii) ஸ்கர்வி
13.
ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின்களுக்கிடையே உள்ள இரண்டு வேறுபாடுகளை தருக.
14.
நொதிகள் வரையறு
15.
அரீனியஸ் அமில கார கொள்கையை எழுதுக. எடுத்துக்காட்டு தருக?
16.
சுவிட்டர் அயனி என்றால் என்ன?
17.
ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.
18.
புரதங்களின் இயல்பிழத்தல் பற்றி குறிப்பு வரைக.
19.
20.
10-7 M HCl ன் pH மதிப்பை கணக்கிடுக.
21.
இணை அமிலகார இரட்டை என்றால் என்ன ? உதாரணம் தருக.
22.
புரதங்களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
23.
கார்போஹைட்ரேட்டுகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
24.
1) எபிமர்கள் 2) எபிமராக்கல் என்றால் என்ன? விவரி?
1.
அமிலம் என்பது மற்றொரு பொருளுக்கு ஒரு புரோட்டானை வழங்கக்கூடிய ஒரு பொருளாகும். காரம் என்பது மற்றொரு பொருளிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்கக்கூடிய ஒரு பொருளாகும். அதாவது, அமிலம் என்பது ஒரு புரோட்டான் வழங்கி மற்றும் காரம் என்பது ஒரு புரோட்டான் ஏற்பி.
ஹைட்ரஜன் குளோரைடை நீரில் கரைக்கும்போது, அது, நீர் மூலக்கூறுக்கு ஒருபுரோட்டானை வழங்குகிறது. அதாவது, HCl ஒரு அமிலமாகவும், H2O ஒரு காரமாகவும் நடந்துகொள்கின்றன. அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டான் மாற்றப்படும் நிகழ்வை பின்வருமாறு குறிப்பிடலாம்.
HCl + H2O \(⇌\) H3O+ +Cl-
அம்மோனியாவை நீரில் கரைக்கும்போது, அது நீரிலிருந்து ஒரு புரோட்டானை ஏற்றுக்கொள்கிறது. இந்த நேர்வில், அம்மோனியா (NH3) மூலக்கூறு ஒரு காரமாகவும், H2O மூலக்கூறு அமிலமாகவும் செயல்படுகின்றன. வினையானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
H2O + NH3 \(⇌\) NH4+ + OH-
இதன் மறுதலை வினையை பின்வரும் சமநிலையில் கருதுவோம்.

H3O+ஆனது CI - க்கு ஒரு புரோட்டானை வழங்கி HClஐ உருவாக்குகிறது.
அதாவது, விளைபொருட்களும் அமிலம் மற்றும் காரங்களாக செயல்படுகின்றன. பொதுவாக,லௌரி - ப்ரான்ஸ்டட் (அமிலம் - கார) வினையை பின்வருமாறு எழுதப்படுகிறது.
அமிலம்1 + காரம்2 \(⇌\) அமிலம்2 + காரம்1
ஒரு புரோட்டானை வழங்கிய பிறகு எஞ்சியுள்ள பகுதி ஒரு காரமாகும் (காரம்1). மேலும் இது ப்ரான்ஸ்டட் அமிலத்தின் (அமிலம்1) இணைகாரம் என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு புரோட்டானால் மட்டும் வேறுபடும் வேதிக்கூறுகள் இணை அமில - கார இரட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

HCI மற்றும் Cl -,H2O மற்றும் H3O+ஆகியன இரண்டும், வெவ்வேறு இணைஅமில - கார இரட்டைகளாகும். அதாவது, Cl - என்பது HCL அமிலத்தின் இணைகாரம் (அல்லது) HCI என்பது Cl - அயனியின் இணை அமிலம் ஆகும். இதேபோல H3O+ என்பது H2Oவின் இணை அமிலமாகும்.
லௌரி ப்ரான்ஸ்டட் கொள்கையின் வரம்புகள்:
BF3, AlCl3 போன்ற புரோட்டான்களை வழங்க இயலாத சேர்மங்களும் அமிலங்கள் போல செயல்படுவதை இக்கொள்கை விளக்கவில்லை.
2.
(i ) வலிமை குறைந்த மின்பகுளியுடன், ஒரு பொது அயனியை கொண்டுள்ள உப்பை (CH3COONa) சேர்க்கும்போது அந்த வலிமை குறைந்த மின்பகுளியின் (CH3COOH) பிரிகையடைதல் குறைகிறது. இது பொது அயனி விளைவு என்றழைக்கப்படுகிறது.
விளக்கம்:
ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் உப்பை, அதே அமிலத்துடன் சேர்க்கும்போது, அந்த அமிலத்தின் பிரிகைவீதம் மேலும் குறைகிறது. எடுத்துக்காட்டாக, அசிட்டிக் அமில கரைசலுடன் சோடியம் அசிட்டேட்டை சேர்க்கும்போது, ஏற்கனவே குறைந்தளவு பிரிகையடைந்துள்ள அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதமானது மேலும் குறைக்கப்படுகிறது. இந்நேர்வில், CH3COOH மற்றும் CH3COONa ஆகிய இரண்டும் CH3COO - எனும் பொது அயனியை பெற்றுள்ளன.
காரணம்: அசிட்டிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலமாகும். இது நீர்க்கரைசலில் முழுமையாக பிரிகையடைவதில்லை. எனவே, பின்வரும் சமநிலை உருவாகிறது.
\(\mathrm{CH}_3 \mathrm{COOH}(\mathrm{aq}) \rightleftharpoons \mathrm{H}^{+}(\mathrm{aq}) \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}(\mathrm{aq})\)
எனினும், சேர்க்கப்பட்ட சோடியம் அசிட்டேட் உப்பானது முழுமையாக பிரிகையடைந்து Na+ மற்றும் CH3COO - அயனிகளை உருவாக்குகின்றன.
\(\mathrm{CH}_3 \mathrm{COONa}(\mathrm{aq}) \rightarrow \mathrm{Na}^{+}(\mathrm{aq})+\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}(\mathrm{aq})\)
எனவே, ஒட்டுமொத்த CH3COO- அயனிச் செறிவு அதிகரிக்கிறது,மேலும்,அமில பிரிகையடைதல் சமநிலை பாதிக்கப்படுகிறது. லீ-சாட்லியர் கொள்கைப்படி, சமநிலையில் உள்ள ஒரு அமைப்பின்மீது ஏதேனும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும்போது, அந்த சமநிலை அமைப்பானது தன்னைத்தானே சரிசெய்து கொண்டு பாதிப்பின் விளைவை பூஜ்ஜியமாக்கிக் கொள்ளும் என்பது நாமறிந்ததே. எனவே, சமநிலையை பராமரிக்கும் பொருட்டு, அதிகப்படியாக உள்ள CH3COO - அயனிகள் H+ அயனிகளுடன் இணைந்து அதிக அயனியுறா தன்மைகொண்ட CH3COOH ஆக மாறுகிறது. சமநிலையானது இடதுபுறமாக நகருகிறது. CH3COOH அமிலத்தின் பிரிகையாதல் குறைக்கப்படுகிறது.
3.
| DNA | RNA | |
| 1 | இது முக்கியமான உட்கரு மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுக்கணிக்கங்களில் காணப்படுகின்றன . | இது முக்கியமான சைட்டோபிளாசம் உட்கருத்திரள் மற்றும் ரிபோசோம்களில் காணப்படுகிறது . |
| 2 | இது டிஆக்ஸிரிபோஸ் சர்க்கரையை கொண்டுள்ளது. | இது ரிபோஸ் சர்க்கரையை கொண்டுள்ளது . |
| 3 | கார இணைகள் A = T மற்றும் G = C | கார இணைகள் A = Uமற்றும் C = G |
| 4 | இவை இரட்டை இழை மூலக்கூறுகள் | இவை ஒற்றை இழை மூலக்கூறுகள் |
| 5 | இதன் வாழ்காலம் அதிகம் | இதன் வாழ்காலம் குறைவு . |
| 6 | இது நிலைப்புத்தன்மை கொண்டது. காரங்களால் எளிதில் நீராற்பகுப்படைவதில்லை. | இது நிலைப்புத்தன்மை அற்றது காரங்களால் எளிதில் நீராற்பகுப்படைகின்றன |
| 7 | இதுதானாகவே இரடிப்படைதல் நிகழ்த்தும். | இது தானாகவே இரடிப்படைய முடியாது. இது DNA மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டது. |
4.
| வ.எண் | ஒடுக்கும் சர்க்கரைகள் | ஒடுக்கா சர்க்கரைகள் |
| 1 | டாலன்ஸ் காரணி அல்லது பெலிங்க்ஸ் கரைசல் அல்லது பெனடிக்ட் கரைசல் ஆகியவற்றை ஒடுக்கும் சர்க்கரைகள், ஒடுக்கும் சர்க்கரைகள் எனப்படுகின்றன. | டாலன்ஸ் காரணி அல்லது பெலிங்க்ஸ் கரைசல் அல்லது பெனடிக்ட் கரைசல் ஆகியவற்றை ஒடுக்காத சர்க்கரைகள், ஒடுக்கா சர்க்கரைகள் எனப்படும். |
| 2 | α -ஹைட்ராக்ஸைல் கீட்டோன் அல்லது உருளை வடிவ ஹெமி அசிட்டால் அல்லது ஹெமி கீட்டால் அல்லது தனித்த CHO அல்லது C=O தொகுதியுடனான திறந்த சங்கிலி அமைப்புடன் சமநிலையில் உள்ள அமைப்புகளை பெற்றிருக்கும். | தனித்த கார்பனைல் தொகுதியாக பிரிக்க முடியாத நிலையான அசிட்டால் அல்லது கீட்டால் அமைப்புகளை பெற்றிருக்கும். |
| 3 | அ) D - குளுக்கோஸ், D - ஃப்ரக்டோஸ் (ஆல்டோஸ்கள் மற்றும் கீட்டோஸ்கள்) போன்ற அனைத்து மோனோ சாக்கரைடுகள் ஆ) லாக்டோஸ் மற்றும் மால்டோஸ் போன்ற சுக்ரோஸை தவிர்த்து மற்ற சர்க்கரைகள். | எ.கா: சுக்ரோஸ், ஸ்டார்ச், செல்லுலோஸ், கிளைக்கோஜன், டெக்ஸ்ட்ரின் etc. |
5.
பிரக்டோசின் வடிவமைப்பு :
அனைத்து வகை சர்க்கரைகளை ஒப்பிடும்போது பிரக்டோஸ் அதிக இனிப்பு சுவையடையதாகும். இது நீரில் நன்கு கரையக்கூடியது.புதிதாக தயாரிக்கப்பட்ட பிரக்டோஸ் கரைசலில் நியம சுழற்சி மதிப்பு -133o .இந்த மதிப்பானது சமநிலையில் மியூட்டா சுழற்சியின் காரணமாக-92oஆக மாறுகிறது.குளுக்கோஸ் போன்ற பிரக்டோசின் அமைப்பும் பின்வரும் உண்மைகள் அடிப்படையாக கொண்டு வருவிக்கப்படுகிறது.
1.தனிம பகுப்பாய்வு மற்றும் மூலக்கூறு நிறையறிதல் சோதனை ஆகியன பிரக்டோசின் மூலக்கூறு வாய்ப்பாடு என C6H12O6 காட்டுகிறது.
2.அடர் HI மற்றும் சிவப்பு பாஸ்பரஸ் கொண்டு ஒடுக்கும்போது பிரக்டோசின் ஆனது N ஹெக்சேன் மற்றும் 2 அயோடோ ஹெக்சேன் கலந்த கலவையை உருவாக்குகிறது. இது பிரக்டோசின் ஆறு கார்பன் அணுக்களும் ஒரே நேர்கோட்டு பிணைக்கப்பட்டுள்ளன என்பதனை காட்டுகிறது.
3. பிரக்டோஸின் NH2OH மற்றும் HCN உடன் வினைபுரிகிறது. பிரக்டோஸின் மூலக்கூறில் கார்பனைல் தொகுதி இருப்பதை இவ்வினைகள் காட்டுகின்றன .
4. பிரக்டோசின் ஆனது பிரிடின் முன்னிலையில் அசிட்டிக் அமில நீரிழலியுடன் வினைபட்டு பெண்டா அசிட்டேட்டை உருவாக்குகிறது பிரக்டோஸ் மூலக்கூறில் ஐந்து ஆல்கஹால் தொகுதிகள் இருப்பதை இவ்வினை காட்டுகிறது .
5. பிரக்டோஸ் மூலக்கூறு ப்ரோமின் நீரால் ஆக்ஸிஜனேற்றமடைவதில்லை .இதிலிருந்து பிரக்டோஸ் மூலக்கூறில் ஆல்டிஹைடு தொகுதி (-CHO)இருப்பதற்கான சாத்தியமில்லை என அறியலாம் .
6.சோடியம் -பாதரசக் கலவை மற்றும் நீர் உடன் பிரக்டோசின் பகுதியளவு ஒடுக்கமடைந்து சார்பிட்டால் மற்றும் மானிடால் கலவை உருவாகிறது .இவை இரண்டும் இரண்டாம் கார்பனில் மாறுபட்ட அமைப்பை கொண்ட எபிமர்கள் ஆகும்.அதாவது ஒரு புதிய சீர்மையற்ற கார்பன் C -2 வில் உருவாகியுள்ளது.இது மூலக்கூறில் கீட்டோ தொகுதி உள்ளதை உறுதிப்படுத்துகிறது.
7.நைட்ரிக் அமிலம் கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது , பிரக்டோசின் அமைப்பும் கிளைகாலிக் அமிலம் மற்றும் டாட்டாரிக் அமிலங்களை தருகிறது.இவை பிரக்டோஸின் மூலக்கூறை விட குறைவான கார்பன் அணுக்களை கொண்ட மூலக்கூறுகளாகும்.
கீட்டோ தொகுதியானது C -2 கார்பனில் அமைந்துள்ளதை இது காட்டுகிறது மேலும் C -1 மற்றும் C -6 கார்பன்களில் 1o ஆல்கஹால் தொகுதிகள் அமைந்துள்ளதையும் இது காட்டுகிறது.மேற்கண்ட வினையிலிருந்து பிரக்டோஸ் ஆனது பின்வருமாறு அமைகிறது.
6.
ஒரு அமில தாங்கல் கரைசலில் உள்ள ஹைட்ரோனியம் அயனிச் செறிவானது, கரைசலில் உள்ள வலிமை குறைந்த அமிலத்தின் செறிவு மற்றும் அதன் இணைகாரத்தின் செறிவு ஆகியவற்றிற்கிடையே உள்ள விகிதத்தை சார்ந்திருக்கும் என்பதை நாம் முன்னரே கற்றறிந்தோம்.
வலிமை குறைந்த அமிலமானது மிகக் குறைந்தளவு மட்டுமே பிரிகையடைகிறது. மேலும், பொது அயனி விளைவின் காரணமாக, பிரிகையடைதல் மேலும் குறைகிறது. எனவே, அமிலத்தின் சமநிலை செறிவானது, அயனியுறா அமிலத்தின் துவக்கச் செறிவிற்கு ஏறத்தாழ சமமாக உள்ளது. இதேபோல, இணைக்காரத்தின் செறிவானது, சேர்க்கப்பட்ட உப்பின் துவக்கச் செறிவுக்கு ஏறத்தாழ சமமாக உள்ளது.
இங்கு [அமிலம்] மற்றும் [உப்பு] ஆகியன முறையே தாங்கல் கரைசல்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அமிலம் மற்றும் உப்பின் துவக்கச் செறிவுகளாகும்.
சமன்பாட்டின் இருபுறமும் மடக்கை எடுக்கும்போது
இருபுறமும் குறியீடு மாற்றம் செய்யும் போது
இதேபோன்று ஒரு காரத் தாங்கல் கரைசலில்
7.
\({ CH }_{ 3 }COOH\rightleftharpoons { CH }_{ 3 }COO^{ - }+H^{ + }\). ......(1)
சோடியம் அசிட்டேட் முழுவதுமாக அயனியாக்கப்படுவதால் அதிகளவு \({ CH }_{ 3 }COO^{ - }\) அயனிகள் தாங்கல் கரைசல் உள்ளன .
\(CH_{ 3 }COONa\longrightarrow { CH }_{ 3 }COO^{ - }+Na^{ + }\).....(2)
HCl -சேர்க்கும் போது :
(i) HCl ஐ சேர்க்கும் போது, H + அயனிகளின் செறிவு அதிகரிக்கும்.
(ii) இவை அசிட்டேட் அயனிகளுடன் இணைந்து பிரிகையடையாத,\({ CH }_{ 3 }COOH\) ஐ தருகின்றன.
(iii) எனவே, சேர்க்கப்படும் H+அயனிகள் நடுநிலையாக்கப்படுவதால் தாங்கல் கரைசலின் pH மாறாமல் உள்ளது.
(iv) \({ CH }_{ 3 }COOH\) ன் செறிவு அதிகரிப்பதால் சமன்பாடு சமநிலை (1) ன் வலபக்கம் நகர்ந்து H+ அயனிகளின் செறிவை அதிகரிக்கிறது.
(v) இது HCl ஐ சேர்க்கும்போது தாங்கல் கரைசலின் pH மதிப்பு மிகச் சிறிதளவு குறைவதை விளக்குகிறது.
(vi) NaOH ஐ சேர்க்கும்போது. சேர்க்கும் போது, OH - அயனிகள்\({ CH }_{ 3 }COOH\) உடன் இணைந்து \({ CH }_{ 3 }COO^{ - }\) மற்றும் \(H_{ 2 }O\) வைத் தருகிறது.
(vii) எனவே, தாங்கல் கரைசலின் pH மாறாமல் உள்ளது.
கார தாங்கல் வினைகள் :
(i) \(NH_{ 4 }OH\) /\(NH_{ 4 }Cl\) தாங்கல் கரைசலுடன் HCl ஐ சேர்க்கும் போது, H + அயனிகள்\(NH_{ 4 }OH\) சேர்ந்து \({ NH }_{ 4 }^{ + }\) மற்றும் \(H_{ 2 }O\) வை தருவதால், pH மாறாமல் உள்ளது.
(ii) இதேபோல், NaOH ஐ சேர்க்கும்போது, OH -ஐ அயனிகள் தாங்கல் கரைசலிலுள்ள அயனிகளுடன் இணைந்து, \(NH_{ 4 }OH\) ஐ தருவதால், pH மாறாமல் உள்ளது.
8.
1. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியானது, ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலியை (K) அதன் பிரிகை வீதம் (\(\alpha\)) மற்றும் செறிவுடன் (c) தொடர்புபடுத்துகிறது. ஒரு சேர்மத்தின் மொத்த மோல் எண்ணிக்கையில், சமநிலையில் பிரிகையடைந்த மோல்களின் பின்னம், பிரிகை வீதம் (\(\alpha\)) என்றழைக்கப்படுகிறது.
NH4OH என்ற வலிமை குறை காரத்தை கருதுக: அதன் பிரிகையாதல்: \(\mathrm{NH}_{4} \mathrm{OH} \rightleftharpoons \mathrm{NH}_{4}^{+}+\mathrm{OH}^{-}\)
\(\mathrm{K}_{\mathrm{b}}=\frac{\left[\mathrm{NH}_{4}^{+}\right]\left[\mathrm{OH}^{-}\right]}{\left[\mathrm{NH}_{4} \mathrm{OH}\right]}\) ............. 1
| NH4OH | NH4+ | OH- | |
| ஆரம்பநிலை மோல்களின் எண்ணிக்கை | 1 | - | - |
| NH4OH ன் பிரிகைவீதம் | \(\alpha\) | - | - |
| சமநிலையில் மோல்களின் எண்ணிக்கை | 1-\(\alpha\) | \(\alpha\) | \(\alpha\) |
| சமநிலைச் செறிவு | (1-\(\alpha\))C | \(\alpha\)C | \(\alpha\)C |
2. இம்மதிப்புகளை சமன்பாடு 1ல் பிரதியிட
\(K_{b}=\frac{(\alpha C)(\alpha C)}{(1-\alpha) C} \\
K_{b}=\frac{\alpha^{2} C}{1-\alpha}
\)
3. ஒரு வலிமை குறை காரம் சிறிதளவே பிரிகை அடைகிறது.
a<<1 எனில்; 1 - \(\alpha\) = 1 (\(\alpha\) புறக்கணிக்கத்தக்கது)
\(\therefore K_{b}=\alpha^{2} C\)
4. நீர்த்தல் அதிகரிக்கும் போது ஒரு வலிமை குறைந்த மின்பகுதியின் பிரிகை விதமும் அதிகரிக்கிறது"
5. இது ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி எனப்படும்.
6. மேலும் :\(\left[\mathrm{OH}^{-}\right]=\alpha \mathrm{C}\) மற்றும் \(\mathrm{OH}^{-}=\sqrt{\mathrm{K}_{b} \cdot \mathrm{C}}\)
9.
நார்மாலிட்டி = மோலாரிட்டி × காரத்துவம்
= 0.04 \(\times\)1
= 0.04
= 4 \(\times\) 10-2
pH = - log10 [H3 O+] log1010 = 1
= - log 4 \(\times\)10-2
= -[log 4 - 2log10]
pH = -2 - log4
= 2 - 0.6021
= 1.3979
=1.40
10.
11.
Kw = [H3O+][OH-1] = 1 \(\times\) 10-14 (25°C)
தூய நீரின் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராஸில் அயனிகளின் செறிவுகளின் பெருக்கற்பலன் நீரின் அயனிப்பெருக்கம் எனப்படும். 25°Cல் அதன் மதிப்பு 1 \(\times\) 10-14 mol2 L-2 ஆகும்.
12.
| நோய் | குறைபாடு வைட்டமின் |
| ரிக்கட்ஸ் | வைட்டமின் -D (கோலேகால்சிஃபெரால் D3 எர்கோகால்சிஃபெரால்-D2) |
| ஸ்கர்வி | வைட்டமின்-C (அஸ்கார்பிக் அமிலம்) |
13.
| ஹார்மோன்கள் | வைட்டமின்கள் | |
| 1 |
விலங்குகளின் உடல்களில் தொகுக்கப்படுகின்றன. |
தாவரங்களில் தொகுக்கப்படுகின்றன. |
| 2 | நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கப்படுகின்றன. (எண்டோகிரைன்) | வைட்டமின் Dயைத் தவிர உணவின் மூலம் வழங்கப்பட வேண்டும். |
| 3 | உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்படுகின்றன | நோய்களை நீக்க, உடலில் சேமித்து வைக்கப்படுகின்றன. |
| 4 | எ.கா: ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், தைராக்ஸின் etc | எ.கா : வைட்டமின் A(ரெட்டினால்), வைட்டமின் C (ஆஸ்கார்பிக் அமிலம்) etc |
14.
நொதிகள் எனப்படுபவை எளிய அல்லது இணைப்பு புரதங்களாகும்; இவை உயிரின அமைப்புகளின் உயிரியல் வினைவேக மாற்றிகளாகும்.
எ.கா: கார்பானின் அன்ஹைட்ரேஸ், லாக்டேஸ், இன்வர்டேஸ்
15.
அமிலம் : அமிலம் என்பது நீர்க்கரைசலில் பிரிகையடைந்து ஹைட்ரஜன் அயனிகளை தரவல்ல ஒரு சேர்மமாகும்.
எ.கா.: HCl, H2SO4
காரம் : காரம் என்பது, நீர்க்கரைசலில் பிரிகையடைந்து ஹைட்ராக்ஸில் அயனிகளை தரவல்ல ஒரு சேர்மமாகும்.
எ.கா.: NaOH, Ca(OH)2
16.
நீர்க்கரைசலில் ஒரு அமினோ அமிலத்தின் கார்பாக்ஸில் தொகுதியிலுள்ள புரோட்டானை அமினோ தொகுதிக்கு மாற்ற இயலும். இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் எதிரெதிர் மின்சுமைகளை பெறுகின்றன. நேர் மற்றும் எதிர் என இரண்டு மின்சுமைகளையும் கொண்டிருப்பதால் மூலக்கூறு நடுநிலைத் தன்மை கொண்டது மேலும் இது ஈரியல்பு தன்மை கொண்டுள்ளது. இந்த அயனிகள் சுவிட்டர் அயனிகள் என்றழைக்கப்படுகின்றன.
17.
(i) ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியானது, ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலியை (Ka ) அதன் பிரிகை வீதம் (\(\alpha \)) மற்றும் செறியுடன் (c ) தொடர்புபடுத்துகிறது. ஒரு சேர்மத்தின் மொத்த மோல் எண்ணிக்கையில், சமநிலையில் பிரிகையடைந்த மோல்களின் பின்னம், பிரிகை விதம் (\(\alpha \)) என்றழைக்கப்படுகிறது.

ஒரு வலிமை குறைந்த அமிலம் , அதாவது அசிட்டிக் அமிலத்தை (CH3COOH), எடுத்துக்காட்டாக கொண்டு ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டை நாம் வருவிப்போம். அசிட்டிக் அமிலத்தின் பிரிகையடைதலை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\mathrm{CH}_3 \mathrm{COOH} \rightleftharpoons \mathrm{H}^{+}+\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\)
அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி,
\(\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\left[\mathrm{H}^{+}\right]\left[\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\right]}{\left[\mathrm{CH}_3 \mathrm{COOH}\right]}\) ......(1)
| CH3COOH | H+ | CH3COO- | |
| ஆரம்ப நிலை மோல்களின் எண்ணிக்கை | 1 | - | - |
| CH3COOH ன் பிரிகைவீதம் | \(\alpha \) | - | - |
| சமநிலையில் மோல்களின் எண்ணிக்கை | 1-\(\alpha \) | \(\alpha \) | \(\alpha \) |
| சமநிலைச் செறிவு | (1 - \(\alpha \)) C | \(\alpha \)C | \(\alpha \)C |
சமன்பாடு (1) இல் சமநிலைச் செறிவை பிரதியிட
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{(\alpha \mathrm{C})(\alpha \mathrm{C})}{(1-\alpha) \mathrm{C}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{K}_{\mathrm{a}}=\frac{\alpha^2 \mathrm{C}}{1-\alpha}
\end{aligned}\) .....(2)
வலிமை குறைந்த அமிலமானது மிகக் குறைந்தளவே பிரிகையடைகிறது என்பதை நாம் அறிவோம். எண் ஒன்றுடன் ஒப்பிடும்போது \(\alpha\) மதிப்பு மிகச்சிறியது. எனவே, சமன்பாட்டின் விகுதியிலுள்ள (1 - \(\alpha\)) \(\simeq\) 1. இப்போது சமன்பாடு (2) பின்வருமாறு எழுதலாம்.
\(\mathrm{K}_{\mathrm{a}}=\left(\alpha^2 \mathrm{C}\right)\)
\(\alpha^2=\mathrm{Ka} / \mathrm{C} ; \alpha=\sqrt{\frac{\mathrm{Ka}}{\mathrm{C}}}\)
"நீர்த்தல் அதிகரிக்கும் போது ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை விதமும் அதிகரிக்கிறது”
இது ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி எனப்படும்.
மேலும்: [H+) = \(\alpha\)C மற்றும்
\(\begin{aligned}
{\left[\mathrm{H}^{+}\right]=\left[\frac{\sqrt{\mathrm{Ka}}}{\mathrm{C}}\right] \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{KaC}^2}{\mathrm{C}}}=\sqrt{\mathrm{Ka} \cdot \mathrm{C}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{Kb}=\alpha^2 \mathrm{C}, \quad \because \alpha=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}}} \text {, }
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{OH}^{-}\right] \alpha \mathrm{C}=\sqrt{\frac{\mathrm{Kb}}{\mathrm{C}} \times \mathrm{C}}=\sqrt{\frac{\mathrm{KbC}^2}{\mathrm{C}}}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\sqrt{\mathrm{KbC}}
\end{aligned}\)
18.
ஒவ்வொரு புரதமும், தனிச்சிறப்பு வாய்ந்த முப்பரிமாண அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த முப்பரிமாண அமைப்புகளில், டைசல்பைடு பிணைப்பு, ஹைட்ரஜன் பிணைப்பு, நீர்விலக்கும் மற்றும் நிலைமின்னியல் இடையீடுகள் காணப்படுகின்றன. பரதங்களை உயர் வெப்பநிலைகளுக்கு உட்படுத்துவதாலோ,யூரியா போன்ற வேதிப்பொருட்களுடன் சேர்ப்பதாலோ,pH மற்றும் கரைசலின் அயனி வலிமையை மாற்றுவது போன்ற செயல்களால் இந்த இடையீடுகளை சிதைக்க முடியும். இவை முப்பரிமாண அமைப்பை பகுதியளவோ அல்லது முற்றிலுமாகவோ இழக்கச் செய்கின்றன. ஒரு புரதம், அதன் முதல்நிலை அமைப்பு பாதிக்கப்படாமல், உயர்நிலை அமைப்பை மட்டும் இழக்கும் நிகழ்வு இயல்பிழத்தல் என்றழைக்கப்படுகிறது. ஒரு புரதத்தின் இயல்பிழத்தலின்போது அதன் உயிரியல் செயல்பாடுகளும் முற்றிலுமாக இழக்கப்படுகிறது.
முதல்நிலை அமைப்பானது நிலையாக இருப்பதால், சில புரதங்களின் இயல்பிழத்தலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும். தன்னிச்சயாகவோ அல்லது சேப்ரான்கள் என்றழைக்கப்படும் சிறப்புவகை நொதிகளின் (புரதங்கள் சரியாக மடிய உதவி புரியும் புரதங்கள்) உதவியுடனோ புரதங்கள் தங்களின் பழைய நிலையை அடைய முடியும்.
எடுத்துக்காட்டு : வெப்பத்தின் காரணமாக முட்டை வெண்கரு கெட்டிப்படுதல்.
19.
20.
H2O அயனியாவதிலிருந்து உருவாகும் [H3O]+ கருத்தில் கொள்ளாத போது
\([H_{3}O^{+}]=[HCl]=10^{-7}M\)
i.e., pH = 7, இது நடுநிலைக் கரைசலின் pH மதிப்பாகும். HCl கரைசலின் செறிவு எதுவாயினும் அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது என்பதை நாம் அறிவோம். அதாவது pH மதிப்பு 7 ஐ விட குறைவாக இருத்தல் வேண்டும். இந்த நேர்வில் அமிலத்தின் செறிவு மிகக் குறைவு (10–7M) எனவே, நீரின் சுய அயனியாக்கத்திலிருந்து உருவாகும் \([H_{3}O]^{+}(10^{-7}M)\) செறிவை நாம் ஒதுக்க முடியாது.
எனவே, இதில் நீரின் சுய அயனியாக்கத்திலிருந்து உருவாகும் [H3O]+ செறிவை கருத்தில் கொள்ள வேண்டும்.
[H3O]+= 10-7 (நீரிலிருந்து) + [H3O]+ = (HCl அமிலத்திலிருந்து)
= 10-7(1+1) = \(2\times10^{-7}\)
pH = -log10 [H3O+]
\(=-log_{10}(2\times10^{-7}) = -[log2+log10^{-7}]\)
= -log2-(-7).log1010
= 7-log2
= 7-0.3010 = 6.6990
= 6.70
21.
ஒரு புரோட்டானால் மட்டும் வேறுபடும் வேதிக்கூறுகள் இணை அமிலகார இரட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.
22.
1. உயிரினங்களில் நிகழும் அனைத்து உயிர்வேதி வினைகளும் நொதிகள் என்றழைக்கப்படும் வினைவேக மாற்ற புரதங்களால் வினையூக்கப்படுகின்றன.
2. கெராட்டின், கொல்லஜன் போன்ற புரதங்கள் கட்டமைப்பு அலகுகளாக செயல்படுகின்றன.
3. மூலக்கூறுகளை கடத்தவும் (ஹீமோகுளோபின்), செல் உள்ளுறுப்புகளாகவும், செல்களுக்குள்ளும் வெளியேயும் மூலக்கூறுகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் (இடமாற்றிகள்) புரதங்கள் பயன்படுகின்றன.
4. பல்வேறு நோய்களுக்கு எதிராக செயல்புரிய உடலுக்கு உடற்காப்பு மூலங்கள் உதவுகின்றன.
5. புரதங்கள், பல்வேறு செயல்பாடுகளை ஒன்றிணைக்கும் தகவலாளர்களாக பயன்படுகின்றன. இன்சுலின் பற்றும் குளுக்ககான் ஆகியள இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன.
6. சில சமிக்ஞ்சை மூலக்கூறுகளை கண்டறியவும், சரியான துவங்களை தூண்டுவதற்காகவும் புரதங்கள் உணர்வேற்பிகளாக செயல்படுகின்றன.
7. இரும்பு (ஃபெர்ரிடின்) போன்ற உலோகங்களை சேமிக்கவும் பாதங்கள் பயன்படுகின்றன
23.
1. கார்போஹைட்ரேட்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் பரவலாக காணப்படுகின்றன. அவை ஆற்றல் மூலங்களாகவும், கட்டமைப்பு பலபடிகளாகவும் செயலாற்றுகின்றன.
2 கார்போஹைட்ரேட் மனித உடலில் கிளைக்கோஜன் ஆகவும், தாவரங்களில் ஸ்டார்ச் ஆகவும் சேமிக்கப்படுகிறது.
3. தாவரங்களின் செல் சுவரின் முக்கிய பகுதிப்பொருளான செல்லுலோஸ் போன்ற கார்போஹைட்ரேட்கள் காகிதம், மரச் சாமான்கள் மற்றும் பருத்தி உடைகள் ஆகியவற்றை பெற பயன்படுகிறது
4. எளிய சர்க்கரையான குளுக்கோஸ் ஆனது உடனடி ஆற்றல் மூலமாக செயல்புரிகிறது.
5. ரிபோஸ் சர்க்கரைகள், நியுக்ளிக் அமிலங்களின் முக்கிய பகுதிப்பொருட்களில் ஒன்றாகும்.
6. ஹைராலுனேட் (கிளைக்கோஸமினோகிளைக்கேன்கள்) போன்ற மாற்றமடைந்த கார்போஹைட்ரேட்கள் விலங்குகளின் உடலில் அதிர்வேற்பிகளாகவும், உயவுப்பொருளாகவும் பயன்படுகின்றன.
24.
ஒரே ஒரு சீர்மையற்ற மையத்தில் மட்டும், மாறுபட்ட தொகுதி இட அமைவு கொண்ட சர்க்கரைகள் எபிமர்கள் என அறியப்படுகின்றன. ஒரு எபிமர் மற்றொரு எலிமராக மாறும் செயல்முறையானது எபிமராக்கல் என்றழைக்கப்படுகிறது, மேலும் இச்செயல்முறை நிகழ எபிமரேஸ் எனும் நொதி தேவைப்படுகிறது. இதே வழிமுறையில், காலக்டோஸ் நமது உடலில் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards