12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.
2.
ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.
3.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு.
4.
தலா (per capita) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
5.
சூழலியல் என்றால் என்ன?
6.
GST யின் கூறுகள் யாவை?
7.
"சுழிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்" குறிப்பு வரைக.
8.
"பொது நிதி" வரையறு
9.
குறிப்பு வரைக.
அ) பருவநிலை மாற்றம்
ஆ) அமில மழை
10.
நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?
11.
பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.
12.
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பினை சுருக்கமாக கூறு.
13.
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
14.
15.
வரி விதிப்பு விதிகளை விவரிக்க.
16.
நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
17.
மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
18.
19.
கடன் திரும்பச் செலுத்தும் முறைகளை விளக்குக.
20.
பொது நிதியின் எல்லைகளை விளக்குக.
1.
ஒரு விதை மண்ணால் மூடி வைக்கப்படுகிறது.
அந்த மண் உரம் கலந்த களிமண்ணாகும்.
பின்பு அது உலர்த்தப்பட்டு எங்கு வேண்டுமோ அங்கு அதனை விதைக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது, அந்த விதை முன்பே நடப்பட்டுவிட்டது என்றே பொருள்.
2.
ஒலித்தடைகளை ஏற்படுத்துதல்
போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு
ஒலி பெருக்கிகளைக் கட்டுப்படுத்துதல்
பெரிய ஊர்தி செல்லும் நேரத்தைக் கட்டுப்படுத்துதல்
3.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்பவை அங்காடியிடா பொருட்களான தூய்மை காற்று, பசுமையான போக்குவரத்து உள்கட்டமைப்பு, பொது பூங்காக்கள், ஆறுகள், மலைகள், பசுமை, வழிகள், கடற்கரை முதலானவையாகும்.
4.
1. சவுதி அரேபியா
2. ஆஸ்திரேலியா
3. அமெரிக்கா
4. கனடா
5. தென் கொரியா
5.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் உயிரினங்களும், உயிரற்றவைகளும் (தட்பவெப்ப நிலை, பூமி, மண், வளிமண்டலம், பருவ நிலை) ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பே சூழல் அமைப்பு எனப்படுகிறது.
6.
GST-ன் உள்ளடக்கங்கள் மூன்று வகைப்படும் அவை.
CGST - மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (எ.கா. மாநிலத்திற்குள்/ ஒன்றியப்பகுதி)
SGST- மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும். (எ.கா. மாநிலத்திற்குள்/ஒன்றியப்பகுதி)
IGST- மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும். (எ.கா. மராட்டிய மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பொருள் விற்பனை).
7.
இந்திய அரசு 1987-88ல் சுழிய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்தது.
இதில் ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும். புதிய இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
சமூகத்தின் முந்தைய முன்னுரிமைகளை சமூக பொருளாதார நோக்கங்களின் பார்வையில் மறு ஆய்வு செய்யப்பட்டு நியாயப்படுத்தும்.
8.
"பொது நிதி என்னும் பாடம் அரசியலுக்கும் பொருளியலுக்கும் இடையே எல்லைக் கோடாகத் திகழ்கிறது. இது அரசின் பொது அதிகார வெவ்வேறு அமைப்பின் வரவு செலவுகளைப் பற்றியும் அது ஒன்றோடொன்று சரி செய்து கொள்வதைப் பற்றியும் கருத்தில் கொள்கிறது." என்று டால்டன் கூறுகிறார்.
(அல்லது)
“அரசின் வருவாய் மற்றும் செலவுகளின் இயல்பையும், கொள்கைகளையும், ஆராய்வதே பொது நிதியியல் ஆகும்." என்று ஆடம் ஸ்மித் கூறுகிறார்.
9.
(அ) பருவநிலை மாற்றம்: வளிமண்டலத்தில் பசுமைக் குடில் வாயுக்களின் அளவுகள் வளர்ந்துகொண்டே செல்வதால் நீண்ட காலத்தில் ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளே "கால நிலை மாற்றம்" எனப்படும்.
(ஆ) அமில மழை (Acid Rain) :
காற்று மாசுவின் விளைவே அமில மழை ஆகும்.
தொழிற்சாலைகள், ஊர்திகள், கொதிப்பான்கள் முதலானவை வெளியிடும் வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ள நீர்த்துகள்களோடு இணையும்போது அமிலமழை ஏற்படுகின்றது.
இந்த வாயுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, சல்பர் டிரை ஆக்ஸைடு ஆகியவை தண்ணீரோடு கலக்கின்ற போது சல்பரஸ் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்பூரிக் அமிலம் ஆகியவையாக மாறுகின்றன.
10.
கழிவு நீரும் தேவையற்ற நீரும் வெளியேற்றப்படுதல்:
பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன.
இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப் பண்டங்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றன.
திடக் கழிவுகள் குவித்தல் : திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
எண்ணெய் சிந்துதல் : கப்பல்களில் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களின் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துகின்றது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமில மழை : காற்று மாசுவால் அமில மழை ஏற்பட்டு நீர் மாசு ஏற்படுத்துகின்றது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
புவி வெப்பமடைதல் : புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்பநிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
11.
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் R.V. அய்யர்ஸ் "பொருள்சார் சமநிலை அணுகுமுறை” வகுத்துள்ளனர்.
"உற்பத்தி முறைக்குள் உள்நுழையும் எந்தவொன்றும் பிறகு வெளியேறித்தான் ஆக வேண்டும். என்பதை வலியுறுத்துகிறது.
இயற்பியலின் பொருள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான வெப்ப இயக்கவியல் முதல் விதி.
இவ்விதியை ஆதாரமாகக் கொண்டு சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளக்குவதுதான் மேற்சொன்ன பொருள்சார் சமநிலை அணுகுமுறையாகும்.
M = G - (RC - RP) + (RrP + Rrc) = RdP + Rdc
| இயற்கை உலகிலிருந்து பெறப்படும் மூலப் பொருட்களும் சக்தியும் (M) | = | பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தியில் பணிகளும் (G) - நுகர்ச்சிலும் உற்பத்தியிலும் ஏற்படும் கழிவுகள் (Rc + Rp) + மறுசுழற்சி செய்யப்பட்ட உற்பத்தியும் நுகர்ச்சிக் கழிவுகளும் (Rpr + Rcr) | = | இயற்கை உலகில் இறுதியாக விடப்படும் உற்பத்தியும் நுகர்ச்சிக் கழிவுகளும் = (Rpd + Rcd) |
12.
சமூக, அரசியல், அறவியல், தத்துவ, பொருளாதார அமைப்பு முறைகள் மனித வாழ்வினை தீர்மானிக்கின்றன.
மனிதன் தனது வாழ்வாதாரத்திற்காக இயற்கையிலுள்ள மற்ற உயிரினங்களுடனும், உயிரற்ற பொருட்களுடனும் இணைந்துள்ளதால் அவனது வாழ்க்கை முறையைச் சுற்றுச்சூழலே பெருமளவு தீர்மானிக்கிறது.
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பினை விளக்க ஆலன் நீஸ் மற்றும் R.V. அய்யர்ஸ் ஆகியோர் "பொருள்சார் சமநிலை அணுகுமுறை'' வகுத்தளித்துள்ளனர்.
மொத்த பொருளியல் செயல்பாடுகள் உள்ளிடு பொருள்கள், வெளியீடு ஆகியவற்றிற்கிடையே சமமான ஓட்டமாக உள்ளது என்று கருதப்படுகிறது.
13.
| ஒப்பீட்டிற்கான அடிப்படை | நேர்முக வரி | மறைமுக வரி |
| பொருள் | நேர்முக வரி என்பது ஒருவரின் வருமானம், செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு நேரடியாக அரசுக்குச் செலுத்துவதாகும். | மறைமுக வரி என்பது ஒருவர் நுகரும் பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப் பட்டு மறைமுகமாக அரசுக்குச் செலுத்துவதாகும் . |
| இயல்பு | வளர்வீதம் | தேய்வீதம் |
| சுமையும் தாக்கமும் | ஒரே ஒருவர் மீது விழுகிறது. | பலர் மீதும் வரிச்சுமை விழுகிறது. |
14.
15.
ஆடம் ஸ்மித்தின் கருத்துப்படி நான்கு புனித வரி விதிப்புகள் உள்ளன. அவையாவன:
1. செலுத்தும் திறன் பற்றிய விதி:
மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும்.
ஏழை அல்லது நடுத்தரப்பிரிவினரை ஒப்பிடும் போது செல்வந்தர்கள் அதிக வரி செலுத்த வேண்டும்.
2. நிச்சயத்தன்மை விதி:
வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் அரசு வரியினை விதிக்க வேண்டும்.
அரசு தன்போக்கிற்கு வரிகளை விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனையும் பாதிக்கும்.
3. வசதி விதி: வரி செலுத்துவோர்கள் வரியை எளிதாகச் செலுத்தும் வண்ணம் வசதியான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
4. சிக்கன விதி :
அரசு வரிகளை வசூலிப்பதற்கு பணம் செலவிடுகிறது.
எடுத்துக்காட்டாக, வரிகளை வசூலிப்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வசூலிப்பதற்கான செலவு வரிகளை விட அதிகமாக இருந்தால் அவை மோசமான வரிகளாகும்.
16.
இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்து விட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
மேல்தட்டு மக்களின் ஆடம்பர விருப்பங்கள் மட்டுமல்லாது ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளான, உணவு, துப்புரவு, உடல்நலம், கல்வி முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
நீடித்த நிலையான மேம்பாட்டின் நோக்கங்கள்
1. எல்லா வடிவங்களிலும் எல்லா இடத்திலும் வறுமையை ஒழித்தல்.
2. அனைத்து வயதினரின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்.
3. எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
4. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
5. குடிநீரும், துப்புரவும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
6. தூய்மையான, நீடித்த, நிலையான, எளிதில் பெறக்கூடிய, சக்தியினை அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
7. தேவையான கட்டமைப்புகளை வழங்குதல், தொழில்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
8. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள சமமின்மையை அகற்றுதல்.
9. பாதுகாப்பான, அமைதியான யாவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்
10. நீடித்த நிலையான உற்பத்தியையும் நுகர்வினையும் உறுதிப்படுத்துதல்.
17.
சுற்றுச்சூழல் தரம் என்பது சுற்றுச்சூழல் பண்புகளின் தொகுப்பாகும்.
இன்னும் தெளிவாகக் கூறுவது என்றால் அப்பண்புகள் ஒவ்வொன்றின் அளவும் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தொகுப்பின் குறியீட்டு எண் ஆகும்.
இத்தரம் பொதுவாகவும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான சூழ்நிலையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படலாம்.
மனிதன் மீதும் இதர உயிரினங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதால் சுற்றுசூழல் தரம் (நிர்ணயம்) என்பது மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்றாகிறது.

முதலாளித்துவ செயல்முறைகளினால் சுற்றுச்சூழல் தரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது.
சுற்றுச்சூழல் என்பது ஒரு பொதுப் பொருளாகும். இப்பொருள் அனைவராலும் நுகரப்படும்.
எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அதைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருவர் அப்பொருளைப் பயன்படுத்துவதால், மற்றவர்களுக்குக் கிடைக்கும் அளவு குறைந்து போகாது.
மேலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான இறுதி நிலைச் செலவு கிட்டத்தட்ட சுழியம் ஆகும். இத்தகைய வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுவதில்லை.
18.
19.
பொதுக்கடன் பின்வரும் வழிகளில் கடன் தீர்க்கப்படுகிறது:
மூழ்கும் நிதி:
கடனுக்கென அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை "மூழ்கும் நிதி” என்பர்.
அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நிலையான தொகையை செலுத்துகிறது.
கடன் முதிர்ச்சியடையும்போது வட்டியோடு அசலையும் சேர்த்து வழங்கும் வகையில் இந்நிதி பெருகிவிடும்.
கடனை மாற்றுதல்:
இம்முறையில் பழைய கடனை புதியக் கடனாக மாற்றப்படுகிறது.
இம்முறையின் கீழ் அதிக வட்டி கொண்ட பொதுக்கடன் குறைவான வட்டி கொண்ட பொதுக்கடனாக மாற்றப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட உபரி :
உபரி வரவு செலவுத் திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது, அந்த உபரியை கடனைத் திரும்பச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளும்.
பொதுவருவாய், பொதுச் செலவை விட அதிகரிக்கும் போது உபரி ஏற்படுகிறது.
பகுதியாகச் செலுத்துதல் :
அரசு பொதுக்கடனை சமமான ஆண்டுத் தவணைகளாகச் செலுத்துகிறது.
இது பொதுக் கடனைச் செலுத்தும் மிக எளிதான முறையாகும்.
கடன் மறுப்பு:
அரசு கடன் செலுத்தும் சுமையிலிருந்து வெளி வருவதற்கான எளிமையான முறையாகும்.
சாதாரண சூழ்நிலைகளில் கடனை மறுக்க இயலாது. ஏனெனில் அது அரசின் நாணயத் தன்மையைப் பாதித்து விடும்.
வட்டிவீதத்தை குறைத்தல் :
நிதிச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக வட்டியைக் குறைத்துக் கடனை செலுத்துவதும் ஒரு வகையான கடன் தீர்வு முறையாகும்.
மூலதனத் தீர்வு:
ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் அல்லது வளர்ச்சி போக்கில் உள்ள மூலதன சொத்துகள் பெற்றிருப்பின் அதன் மீது அரசு வரி விதிக்கிறது.
இது சர்ச்சைக்குரிய கடன் தீர்வு முறையாகும்.
20.
பொது நிதியியலின் பாடப்பொருள்/எல்லைகள்:
பொது வருவாய்: பொது வருவாய் என்பது வருவாயைப் பெருக்கக்கூடிய முறைகளான வரி வருவாய்கள், வரியல்லா வருமானங்கள் பற்றியும், வரிக்கொள்கை, வரி விகிதம், வரிச்சுமை, வரியின் தாக்கம், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றையும் விளக்குகிறது.
பொதுச் செலவு : இப்பகுதி அரசின் செலவு, பொதுச் செலவின் விளைவுகள், பொதுச் செலவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.
பொதுக்கடன் :
பொதுக்கடன் என்ற பகுதியில் உள்நாடு. வெளிநாட்டின் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி படிக்கிறது.
பொதுக்கடன் சுமை, அதன் விளைவுகள், திரும்பச் செலுத்தும் முறை ஆகியவை இத்தலைப்பின் கீழ் வருகின்றன.
நிதி நிருவாகம் :
இப்பகுதி அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி படிக்கிறது.
வரவு செலவுத் திட்டம் என்பது ஓராண்டிற்கான அரசின் பேரளவு நிதித் திட்டமாகும்.
வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள், அதனைத் தயாரிப்பதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, மதிப்பீடு, தணிக்கை முதலானவை நிதி நிருவாகத்தின் கீழ் வருகின்றன.
நிதிக் கொள்கை:
வரிகள், மானியங்கள், பொதுக்கடன், பொதுச் செலவு ஆகியவை நிதிக்கொள்கையின் கருவிகளாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards