12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பாயங் எந்த வகையில் காடுகளை பாதுகாத்தார்?
2.
ஒட்டுண்ணி வாழ்க்கை என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
3.
4.
மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை விளக்குக.
5.
6.
எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
7.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?
8.
கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்களை வரிசைப்படுத்துக
9.
முதன் முதலாக உருவான மரபுப்பொருள் ஆர்.என்.ஏ தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது - காரணங்களுடன் நிரூபிக்க.
10.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?
11.
12.
சுயதடைகாப்பு நோய் என்பது திசைமாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும்-நியாயப்படுத்துக.
13.
தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
14.
தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
15.
காலா-அசார் என்றால் என்ன?
16.
அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரை எழுதுக.
ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளை எழுதுக.
இ) இந்த நோய் எவ்வாறு பரவுகிறது.
17.
பனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆய்வு நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது தேவைதானா?கருத்தைத் தெரிவிக்கவும்.
18.
கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
19.
குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.
20.
மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.
21.
குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?
22.
தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி
23.
இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?
24.
பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும் முறைகளை எழுதுக
1.
1. இந்தியாவின் வன மனிதன் "என்றழைக்கப்படும் 'ஜாதவ் பாயங்' 36 வருடத்தில் 1360 ஏக்கர் அடர்ந்த காடுகளை உருவாக்கினார்.
2. இன்று பாயங்கின் காடு ஐந்து வகைப் புலிகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மற்றும் பல்வேறு பறவை இனங்களுக்கு வசிப்பிடமாக விளங்குகிறது.
3. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2012-ம் ஆண்டு "புவிதினத்தன்று" இந்தியாவின் வனமனிதன் என்ற பட்டத்தை அளித்து கௌரவிக்கப்பட்டது.
4. குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பண முடிப்பினை வழங்கி பாராட்டினார்.
5. இவர் பத்மஸ்ரீ. விருதினையும் பெற்றவர்.
2.
இரு வேறு சிற்றினங்களுக்கு இடையே உள்ள இவ்வகைத் தொடர்பில் ஒரு சிற்றினம் 'ஒட்டுண்ணி' எனவும் மற்றொன்று விருந்தோம்பி எனவும் அழைக்கப்படும்.
ஒட்டுண்ணி தனக்குத் தேவையான இருப்பிடம் மற்றும் பாதுகாப்பை விருந்தோம்பியிடமிருந்து பெறுகிறது.
ஒட்டுண்ணிகள் வைரஸாகவோ நுண்ணுயிரிகளாகவோ, தாவர ஒட்டுண்ணியாகவோ மற்றும் விலங்கு ஒட்டுண்ணியாகவோ இருக்கலாம்.
ஒட்டுண்ணிகள் வைரஸாகவோ நுண்ணுயிரிகளாகவோ, தாவர ஒட்டுண்ணியாகவோ மற்றும் விலங்கு ஒட்டுண்ணியாகவோ இருக்கலாம்.
ஒட்டுண்ணிகள் விருந்தோம்பிகளின் மேல்பரப்பில் ஒட்டிக் கொண்டோ அல்லது வசிக்கவோ செய்யலாம். அல்லது விருந்தோம்பியின் உடலுக்குள் வாழலாம். பொதுவாக அக ஒட்டுண்ணிகள் உணவுப்பாதை, உடற்குழி, பல்வேறு உறுப்புகள் இரத்தம் அல்லது பிற திசுக்களில் வாழும்.
ஒட்டுண்ணிகள் தற்காலிக அல்லது நிரந்தர ஒட்டுண்ணிகளாக இருக்கலாம்.
தற்காலிக ஒட்டுண்ணிகள் தன் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியை மட்டும் ஒட்டுண்ணியாகக் கழிக்கின்றன. எடுத்துக்காட்டு: அனோடோண்டாவின் கிளாக்கிடியம் லார்வா, மீன்களின் உடலின் மீது ஒட்டிக் கொண்டு வாழும்.
நிரந்தர ஒட்டுண்ணிகள் தன் வாழ்நாள் முழுவதும் விருந்தோம்பியைச் சார்ந்து வாழ்கின்றன. எடுத்துக்காட்டு பிளாஸ்மோடியம், என்டமீபா, உருளைப்புழுக்கள், ஊசிப்புழு தட்டைப்புழுக்கள் போன்றவை.
3.
4.
டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில்நுட்பத்தால் இன்சுலினை உற்பத்தி செய்யும் முறை 1970 களின் பிற்பகுதியில் துவங்கப்பட்டது.
இத்தொழில் நுட்பத்தில், மனித இன்சுலினுக்கான மரபணு, எ.கோலையின் பிளாஸ்மிட்டினுள் நுழைக்கப்படுகிறது. ஒரு தலைமை வரிசையை முன்புறம் கொண்டு அதைத் தொடர்ந்த A மற்றும் B துண்டங்கள் மற்றும் அவற்றை இணைக்கும் 'C' என்னும் மூன்றாவது சங்கிலி ஆகியவற்றால் ஆன முன்னோடி பாலிபெப்டைடு சங்கிலியாக முதன்மை முன்னோடி இன்சுலின் உருவாகிறது.
மொழி பெயர்ப்புக்குப் பின் C சங்கிலியும் வெட்டப்பட்டு நீக்கப்படுவதால், A மற்றும் B சங்கிலிகள் மட்டும் எஞ்சுகின்றன.
டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் இன்சுலின் ஆகும்.
5.
6.
சிற்றினமாக்கம்
மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தன்மை உடைய இயற்கையான இனக்கூட்டத்திற்கு சிற்றினம் என்று பெயர். சிற்றினமாக்கம் என்பது ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது ஆகும்.
வகைகள்
ஓரிடச் சிற்றினமாக்கம் அல்லது இனப்பெருக்கம் சார்ந்த சிற்றினமாக்கம்
ஒரிடச் சிற்றினமாக்கம் முறையில் ஒற்றை மூதாதை இடமிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் பரிணாமம் பெற்றுத் தோன்றுகின்றன. ஒரே புவிப் பகுதியில் அவை இரண்டும் வாழ்கின்றன.
வேற்றிடச் சிற்றினமாக்கம் அல்லது புவி சார்ந்த சிற்றினமாக்கம்
வேற்றிடச் சிற்றினமாக்கல் முறையில் மரபணு ஓட்டம் ஆனது, ஒரு உயிரியல் இனக் கூட்டத்தினைச் சேர்ந்த ஒத்த சிற்றினங்கள் தனிமைப்படுத்தப்படும் போது தடுக்கப்படுகிறது. ஒரே சிற்றினத்தினை சேர்ந்த இனக்கூட்டம் ஆனது புவியியல் தடையின் காணமாக பிரிந்து இரண்டு சிற்றினங்களாக மாறுகின்றன.
7.
| முதல்நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு | இரண்டாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு | |
| 1. | வடிகட்டுதல் மற்றும் படிய வைத்தல் முறைகள் மூலம் கழிவு நீரிலிருந்து திட, கரிம துகள்கள் மற்றும் கனிம பொருட்களை பிரித்தெடுப்பது முதல் நிலை சுத்திகரிப்பில் அடங்கும். | முதல்நிலையில் உருவான கலங்கள் நீரில் சுவாச நுண்ணுயிரிகள் வளர்ச்சியினால் கரிம பொருட்கள் சிதைக்கப்படுகின்றன. |
| 2. | மிதக்கும் குப்பைகள் தொடர் வடிகட்டல் முறையிலும் மண் மற்றும் சிறு கற்கள் படிய வைத்தல் முறை மூலம் நீக்கப்படுகிறது. | முதல்நிலையில் உருவான கலங்கள் நீரில் உள்ள கரிமப் பொருட்கள் சுவாச நுண்ணுயிரிகள் மற்றும் காற்றற்ற சுவாசம் மேற்கொள்ளும் பாக்டீரியாக்கள் மூலம் அழிக்கப்படுகின்றன. |
| 3. | உயிரிய ஆக்ஸிஜன் தேவை (BOD) அதிகமாகவே காணப்படும். | இதில் பெருமளவில் உயிரிய ஆக்ஸிஜன் தேவையை (BOD) குறைக்கின்றது. |
| 4. | முதல்நிலை படியும் தொட்டி, வடிகட்டல் தொட்டி பயன்படுத்தப்படுகிறது. | இங்கு காற்றூட்டல் தொட்டி மற்றும் காற்றில்லா சுவாச கசடு சிதைப்பான் போன்ற தொட்டிகள் பயன்படுகின்றன. |
| 5. | இதில் உயிரிய வாயு உருவாவதில்லை. | கசடிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் செரிமானம் அடையும் போது உயிரிய வாயுவை (மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு) உற்பத்தி செய்கின்றன. இது ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது. |
| 6. | இது குறுகிய காலத்தில் நடைபெறுகிறது. | இது நீண்ட காலம் நடைபெறுகிறது. |
8.
1. ஆக்சிஜேனற்ற சூழலில் கரிமப் பொருட்களை சிதைவடையச் செய்து பெறப்படும் பலவகை வாயுக்களின் கலவையே உயிர் வாயு (அ) சாண எரிவாயு ஆகும்.
2. விவசாய கழிவுகள், நகராட்சி கழிவுகள், உரங்கள், தாவர பொருட்கள், கழிவு நீர், உணவு கழிவுகள் போன்ற மூலப்பொருட்களிலிருந்து உயிரி வாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
3. கிராமப்புற பகுதிகள் கால்நடைகள் அதிகமாக வளர்க்கப்படுவதால் சாணம் என்ற கால்நடைக் கழிவு அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
4. மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியங்கள் கால்நடைகளின் இரைப்பையிலும் ஆக்சிஜேனற்ற கசடுகளிலும் காணப்படுகின்றன.
5. கால்நடை சாணத்தை காற்றற்ற சூழலில் மக்கச் செய்வதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
6. இதில் சிறிதளவு ஹைட்ரஜனுடன் கூடிய மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் மற்றும் சிறிய அளவில் வேறு சில வாயுக்களும் உள்ளன.
7. ஒளியூட்டலுக்கும், சமைப்பதற்கும் உயிர் வாயு பயன்படுகிறது.
8. இதிலுள்ள எஞ்சிய நோயூக்கிகள் அற்ற சாண கரைசல் உரமாக பயன்படுகிறது.
9. இதனால் கிராமப்புற மக்கள் சமைப்பதற்கு மரக்கட்டைகளை சேகரிக்கவேண்டிய அவசியமில்லை.
10. மேலும் சுற்றுசூழலை மாசுபடுத்தாத மணமற்ற புகையற்ற நீலச்சுடரை தரவல்ல எரிபொருளாக உயிர் வாயு பயன்படுகிறது.
11. பொதுவாக உயிர் வாயு ஒரு மனிதன் ஒரு ஆண்டிற்கு பயன்படுத்தும் 4.5 டன் மரக்கட்டைகள் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. இதனால் 4 டன் பச்சைவீடு வாயுக்கள் வெளியேறுவதும் தவிர்க்கப்படுவதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) கூறியுள்ளது.
12. கழிவுகளை உயிர் வாயு தயாரிக்க பயன்படுத்துவதால் இயற்கையில் இந்த கழிவுகள் சிதைந்து பச்சைவீடு வாயுவான மீத்தேன் வாயு வெளியேறுவதும் தவிர்க்கப்படுகிறது.
13. இவ்வாறு இயற்கைக் கழிவுகள் உயிர் வாயு தயாரிக்க பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் தூய்மையாக பாதுகாக்கப்படுகிறது.
14. இவ்வாறு உயிர் வாயு வீடுகளில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்துவதால் சுற்றுசூழல் மாசுபாடு தவிர்க்கப்படுகிறது. மக்கள் சுகாதாரமாக வாழ வழிவகுக்கிறது.
9.
அளவு: ஒரு மாதிரி செல் ஒன்றுக்குள் DNA வை விட பத்து மடங்கு அதிக அளவில் RNA உள்ளது.
பணிகள்: பரந்துப்பட்ட பல பணிகளை மேற்கொள்கிறது. (வளர்சிதை மாற்றம் மொழியாக்கம், பிளவுறுதல் போன்ற இன்னபிற)
சான்றுகள்:
1. ஃபிரன்கெல் - கான்ராட் & சிங்கர் (1957) ஆகியோர் (TMV) புகையிலை மொசைக் வைரஸில் RNA மரபணுவாக உள்ளது என்று முதன்முதலாக கூறினார்.
2. TMV - விலிருந்து RNA வைப் பிரித்தெடுத்தார்.
3. லெஸ்லி ஆர்ஜெல், பிரான்சிஸ் பிரிக் மற்றும் கார்ல் வோயஸ் (மூன்று மூலக்கூறு அறிவியலாளர்கள்) பரிணாமத்தின் முதல் நிலையாக RNA உலகம் என அறிமுகப்படுத்தினார்கள்.
4. வால்டர் கில்பெர்ட் (1986) RNA உலகம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
5.
என இரண்டாகவும் செயலாற்றக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது. வினையூக்கி RNA - ரிபோசைம் எனப்படும். வினையூக்கி என்பதால் RNA வின் நிலைப்புத் தன்மை குறைவு. எனவே முதல் மரபணுப்பொருள் என்பதும் DNA - RNA விலிருந்து பல மாற்றங்களுடன் பின் பரிணாம அடைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
10.
I. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பன்:
ஹெர்ஷே மற்றும் சேஸ் - கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட கார்பனை பயன்படுத்தியிருந்தால், - அது பாக்டீரியாவின் எல்லா செல்களிலும் காணப்பட்டிருக்கும்.(கார்பன் எல்லா கரிம மூலக்கூறுகளிலும் உள்ளது)
II. கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜன்:
1. அவர்கள் கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட நைட்ரஜனை பயன்படுத்தியிருந்தால், நியூக்ளியோலஸ், செல்சவ்வு மற்றும் முழுவதும், கூடவே பாக்டீரியோபேஜின் பிரிதலுற்ற பொருட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
2. நைட்ரஜன் - புரதத்தில், DNA விலும் அமைப்புக் கூறாக உள்ளது.
3. எனவே கதிரியக்க ஐசோடோப்புகள் பாஸ்பரஸ் நியூக்ளிக் அமிலங்களில், கதிரியக்க கந்தகம் புரதங்களில் மட்டும் காணப்பட்டது.
4. இவர்கள் மரபுப்பொருள் DNA - RNA யா (அ) புரதமா உறுதிசெய்யவே இவ்வாறு பயன்படுத்தினர்.
11.
12.
1. சுய தடை காப்பு குறைபாடு என்பது இலக்கு தவறிய தடைகாப்பு துலங்களாகும்.
2. இது சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை பிரித்தறிய இயலாத தன்மையினால் ஏற்படுவதாகும்.
3. நமது உடலில் சுய எதிர்பொருட்களையும் மற்றும் செல்நச்சாக்க T செல்களையும் உற்பத்தி செய்து நமது திசுக்களை அழிக்கின்றன.
4. இதுவே சுய தடைக் காப்பு நோய் எனப்படும்.
5. இது இரு வகைப்படும்.
i. உறுப்பு சார்ந்த சுயத்தடைக்காப்பு நோய் - எ.கா. அடிசன் நோய் கிரேவின் நோய்
ii. உறுப்பு சாரா சுயத்தடைக்காப்பு நோய் - எ.கா. ரூமாட்டிக் மூட்டுவலி தண்டுவட மரப்பு நோய்.
13.
அ. இது அந்த நோய்க்கிருமிகள் ஒத்த பலவீனமாக்கப்பட்ட அல்லது செயலாக்கமிழந்த அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியாகவோ அல்லது அவற்றின் நச்சுப்பொருள்களாகவோ அல்லது அதன் புறப்பரப்பு புரதமாகவோ இருக்கலாம்.
ஆ. தடுப்பு மருந்துகளின் வகைகள்:
முதல் தலைமுறை தடுப்பு மருந்து:
1. வீரியமிழந்த உயிருள்ள தடுப்பு மருந்து.எ.கா. MMR
2. கொல்லப்பட்ட தடுப்பு மருந்துகள். எ.கா.சால்க் போலியோ
3. நச்சு அல்லது வேதிப்பொருள் தடுப்பு மருந்துகள். எ.கா. DTP
இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்து:
நோய்க்கிருமிகளின் புறப்பரப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளைக் கொண்டவையாகும். எ.கா. கல்லீரல் அழற்சி, தடுப்பு மருந்து.
மூன்றாம் தலைமுறை தடுப்பு மருந்து:
செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகளாகும். எ.கா. மறுசேர்க்கை தடுப்பு மருந்து ஆகும்.
14.
தொண்டை அடைப்பான்:
1. நோய்க்காரணி: சையனோ பாக்டீரியம் டிப்தீரியா
2. பரவும் முறை: கேழைத்துளிகள் மூலம்.
3. அறிகுறி: காய்ச்சல், தொண்டையில் புண் மூச்சுவிட சிரமபடல்
டைஃபாய்டு:
1. நோய்க்காரணி - சால்மோனெல்லா டைஃபி
2. பரவும் முறை - மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக
3. அறிகுறி - அசௌகாரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு.
15.
காலா – அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ்
லீஷ்மேனியா டோனோவானி என்ற ஒட்டுண்ணியின் காரணமாக காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் என்ற நோய் ஏற்படுகிறது.
காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் நோயினை பரப்பும் நோய்க் கடத்தியாக மணல் பூச்சி உள்ளது.
எண்டோதீலியல் செல்கள், எலும்பு மஜ்ஜை, கல்லீரல், நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரலின் இரத்தக் குழாய்கள் முதலிய உடல் பாகங்களில் காலா - அசார் நோயின் தொற்று ஏற்படுகிறது.
காலா - அசார் அல்லது வயிற்றறை லீஷ்மேனியாசிஸ் நோயின் அறிகுறிகள் எடை குறைதல், இரத்த சோகை, காய்ச்சல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் முதலியன ஆகும்.
16.
அ. உச்செரேரியா பான்கிராஃப்டி என்ற ஒட்டுண்ணிதான் யானைக்கால் நோயை ஏற்படுத்துகிறது.
ஆ. புழுக்களின் திரட்சியால் நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் அடைப்பு நிணநீர் முடிச்சுகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இ. இந்த நோய் பெண் கியுலக்ஸ் கொசுவின் மூலம் பரவுகிறது.
17.
(i) இது கருவின் குறைபாடுகளை, கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறியும் தொழில்நுட்பம்.
(ii) கருவின் குரோமோசோம் பிறழ்ச்சிகளைக் கண்டறியலாம்.
(iii) வளர்கருவின் பால் தன்மை அறியலாம்.
(iv) பால் தெரிந்தால் பெண்கருக்கொலை செய்ய வாய்ப்புள்ளது.
(v) எனவே இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
18.
அ) அண்ட செல் விடுபடுநிலை - புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன்
ஆ) அண்டக ஹார்மோன்கள் - FSH நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்கள்
பிட்யூட்டரி ஹார்மோன்கள் - LH -லூட்டினைசிங் ஹார்மோன்
இ) i) எண்டோ மெட்ரியம் புதுப்பிக்கப்படுதல்
ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும்.
iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது.இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது.
ஈ) C -இரண்டாம் நிலை நுண்பை செல்கள்
H - கார்பஸ் லூட்டியம்
| இரண்டாம் நிலை நுண்பை செல்கள் | கார்பஸ் லூட்டியம் | |
|---|---|---|
| 1. | நுண்பை நிலையில் காணப்படும். | இவை லூட்டியல் நிலையில் உருவாகும். |
| 2. | இவற்றைச் சுற்றி கிரானுலேசா செல்களும் தீகா அடுக்கும் காணப்படும். | இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. |
| 3. | இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி பின்னர் முதிர்ந்த கிராபியன் ஃபாலிகிளாகின்றன. | கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவடு உருவாக்கும். |
19.
குழந்தை பிறப்பு,பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின்,ரிலாக்ஸின் பங்கு.
ரிலாக்ஸின்:
(i) ரிலாக்ஸின் இடுப்பு எலும்பு மூட்டுகளைத் தளர்வடையச் செய்கிறது.
(ii) கருப்பையின் வாய்ப்பகுதியை, வலிமையான சுருக்கங்களால் விரிவடைய செய்கிறது.
ஆக்ஸிடோசின்:
(i) பால் சுரப்பின் மீச்சிறு கதுப்புகளிலிருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள ஆக்ஸிடோசின் உதவுகின்றது. இது நிர்பந்த அனிச்சைக் செயல்(Let Down Reflex) எனப்படும்.
(ii) கருப்பையை, கர்ப்ப காலத்தின் முந்தைய நிலைக்கு மாற்றுகின்றது.
20.
மாதவிடாய் சுழற்சி :
பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி(அண்டகச் சுழற்சி) நிகழும்.
1. மாதவிடாய் நிலை (3-5 நாட்கள்) (Menstrual Phase) :
(i) புரோஜெஸ்டிரான்,ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது.
(ii) கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து,மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.
(iii) அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும்.
(iv) மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது,கருவுற்று இருப்பதன் அறிகுறி.
(v) மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்த சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது.
2. நுண்பை நிலை(பெருகு நிலை): (Follicular Phase,Proliferative Phase)
(i) மாதவிடாயின் 5 ஆம் நாளிலிருந்து, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம்.
(ii) FSH,LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது.
(iii) முதல்நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன.
(iv) எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
(v) நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது.
3. அண்ட செல் விடுபடும் நிலை (Ovulatory Phase)
(i) LH,FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன.
(ii) LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது.
(iii) இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை(Luteal (or) Secretory Phase)
(i) எஞ்சியுள்ள கிராபியன் ஃபாலிக்கிள்,கார்ப்பஸ் லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லா சுரப்பியாகும்.
(ii) கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை புதிய ஏற்ற சூழலை உருவாக்கும்.
(iii) கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.
(iv) கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது.
21.
(i) பாலினங்களை அடையாளம் காண உதவுகின்றது.
(ii) நீக்கம் இரட்டித்தல் இடம் பெயர்தல் குரோமோசோம்கள் பிரியாநிலை போன்ற குரோமோசோம் பிறழ்ச்சிகளை கண்டறிய பயன்படுகிறது.
(iii) ஒழுங்கற்ற பன்மயம் கண்டறிய பயன்படுகிறது.
(iv) சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகின்றது.
(v) மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களை கண்டறியலாம்.
22.
ஒற்றைமயம் - இரட்டைமயம் நிலை [உ.ம்] தேனீ,எறும்பு, குளவி.
(i) இம் முறையில் சேய் உயிரிகளின் பாலினம் அவை பெறுகிற குரோமோசோம் தொகுதியின் எண்ணிக்கையை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
(ii) கருவுற்ற முட்டைகள் பெண் உயிரிகளாக வளர்ச்சியடைகின்றன.
(iii) கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக கன்னி இனப்பெருக்க முறையில் வளர்ச்சியடைகின்றன.
(iv) ஆண் தேனீக்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியளவே உள்ளன. (ஒற்றைமயம்)
(v) பெண் தேனீக்களில் குரோமோசோம் இரு மடங்காக உள்ளன. (இரட்டை மயம்) இதனால் இம்முறை ஒற்றைமய-இரட்டைமய பால்நிர்ணயம் என அழைக்கப்படுகிறது.
23.
இளவுயிரி நிலை :
(i) இது நிலை உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக் காலம்.
(ii) சில விலங்குகளின் இளம் உயிரிகள்
பசு - கன்று,
பூச்சி - லார்வா,
மனிதகுரங்கு - குழந்தை,
பூனை - பூனைக்குட்டி,
இனப்பெருக்க நிலை :
(i) ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
(ii) ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும்.
(iii) பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இளம் உயிரிகள் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். எ.கா) முயல், கோழிகள்
24.
(i) முன்பின் தெரியாதவர், பலருடன் பாலுறவைத் தவிர்த்தல்.
(ii) கருத்தடை உறைகளைப் பயன்படுத்துதல்
(iii) மருத்துவ ஆலோசனை, முழுமையான சிகிச்சை
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards