12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குறை ஒப்பம் என்றால் என்ன?
2.
புதிய இலாப விகிதம் என்றால் என்ன?
3.
மதிப்பூதியம் என்றால் என்ன?
4.
செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
5.
டேலியின் நுழைவாயில் என்றால் என்ன?
6.
கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் யாவை?
7.
முதல் மீதான வட்டி என்றால் என்ன?
8.
ராமு, சோமு மற்றும் கோபு என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3:5:7 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கோபு என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை 3:1 எனும் விகிதத்தில் ராமுவும் சோமுவும் எடுத்துக்கொள்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
9.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் கருவிகளைப் பட்டியலிடவும்.
10.
அம்பிகா, தரணி மற்றும் பத்மா மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அம்மூவரும் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரம்யா என்பவரை 25% இலாபம் தருவதாக கூட்டாண்மையில் அனுமதித்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.
11.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க கடனீந்தோர் | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் | 20,000 |
| கடனீந்தோருக்குச் செலுத்தியது | 4,50,000 |
| இறுதிக் கடனீந்தோர் | 1,90,000 |
12.
பின்வரும் விவரங்களிலிருந்து தருண் & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.
| விவரம் | 2016-17 | 2017-18 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 |
| இதர வருமானங்கள் | 50,000 | 40,000 |
| செலவுகள் | 1,50,000 | 1,20,000 |
13.
விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
14.
பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000
15.
முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?
16.
விரைவு விகிதம் என்றால் என்ன?
17.
உயர் இலாபம் என்றால் என்ன?
18.
கீழ்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்து திறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 6% முன்னுரிமைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | |
| பொதுக் காப்பு | 1,25,000 |
| மிகுதி | 75,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்) | 2,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்யவை | 1,50,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்தம் | 9,00,000 |
19.
மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ரூ.30,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
20.
சுரேஷ், செந்தாமரை மற்றும் இராஜ் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 3:2:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுரேஷ் என்பவர் அக்கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவர் விலகிய நாளில் நிறுவனத்தின் நற்பெயர் ரூ. 36,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் எனக் கொண்டு நற்பெயர் பதிவிற்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
21.
ஜெயம் டயர்ஸ் நிறுமம் 15,000 சாதாரணப்பங்குகளை ரூ. 10 வீதம் பின்வருமாறு செலுத்தும்படி வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3 ஒதுக்கீட்டின் மீது ரூ.5 முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. அனைத்து தொகையும் பெறப்பட்டது. ஆனால் 100 பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரர் அழைப்பு பணத்தை செலுத்தத் தவறினார். அழைப்பு நிலுவைக் கணக்கைப் பயன்படுத்தி அழைப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
22.
பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 |
| இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 |
| மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது | 60,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 5,000 |
23.
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் | 40,000 |
| கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் | 1,00,000 |
| அளித்த தள்ளுபடி | 5,000 |
| விற்பனைத் திருப்பம் | 2,000 |
| 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் | 60,000 |
24.
பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) | 2,00,000 |
| ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) | 3,50,000 |
| அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | 70,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 40,000 |
25.
பின்வரும் விவரங்களிலிருந்து மேரி வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.
| விவரம் | 2015-16 | 2016-17 |
|---|---|---|
| ரூ. | ரூ. | |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 |
| இயக்கச் செலவுகள் | 2,00,000 | 1,80,000 |
| வருமான வரி (வரிக்கு முன் இலாபத்தில் %) | 20 | 50 |
1.
1) பொது மக்களுக்கு வெளியிடப்படும் அனைத்துப் பங்குகளும் முழுவதும் ஒப்பப்படாமல் போகலாம்.
2) வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஒப்பப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது குறை ஒப்பம் எனப்படும்.
2.
புதிய இலாப விகிதம் என்பது, தொடரும் கூட்டாளிகள் எதிர்காலத்தில் இலாபத்தைப் பிரித்துக் கொள்ள ஒப்புக் கொண்ட ஒரு விகிதம் ஆகும்
3.
ஒரு நிறுவனத்தில் வழக்கமான ஊழியராக இல்லாத ஒருவருக்கு வழங்கப்படும் ஊதியமே மதிப்பூதியம் எனப்படும். இது ஒரு வருவாயினச் செலவாகும்.
4.
செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
(i) நீர்மைத் தன்மை விகிதங்கள்.
(ii) நீண்டகால கடன்தீர்க்கும் விகிதங்கள்
(iii) சுழற்சி விகிதங்கள்
(iv) இலாபத் தன்மை விகிதங்கள்
5.
(i) ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tally-ஐ துவக்கும் போதும் Tally யின் திரை தோன்றும்.
(ii) இந்தத் திரையே டேலியின் நுழைவாயில் (Gateway of Tally) என அழைக்கப்படுகிறது. இது தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்தை இடது பலகத்தில் காண்பிக்கும்.
6.
கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) அறிக்கை உருவாக்குதலின் நோக்கத்தை வரையறுக்கவும்.
(ii) அறிக்கையின் கட்டமைப்பை குறிப்பிடவும்.
(iii) தரவுத்தளத்துடன் தொடர்புகொண்டு ஏடுகளில் இருந்து தரவுகளை எடுக்க, மாற்றம் செய்ய, சேர்க்க அல்லது அழிக்க தரவுத்தள கேள்விகளை உருவாக்கவும்.
7.
(i) முதல் மீது வட்டி என்பது கூட்டாளிகளின் முதல் மீது அனுமதிக்கப்படும் வட்டி ஆகும்.
(ii) பொதுவாக, கூட்டாளிகளின் முதல் அவர்களின் இலாபப் பகிர்வு விகிதத்திற்கு சமனற்றவையாக இருந்தால் முதல் மீது வட்டி அனுமதிக்க கூட்டாளிகள் ஒப்புக் கொள்ளலாம்.
(iii) முதல் மீதான வட்டி வீதம் பொதுவாக கூட்டாளிகள் ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்
8.
கோபு பங்கு = \(\frac { 7 }{ 15 } \)
ஆதாயப் பங்கு = விலகும் கூட்டாளியின் பங்கு x ஆதாயப் பங்கின் விகிதாச்சாரம்
ராமு = \(\frac { 7 }{ 15 } \times \frac { 3 }{ 4 } =\frac { 21 }{ 60 } \)
சோமு = \(\frac { 7 }{ 15 } \times \frac { 3 }{ 4 } =\frac { 21 }{ 60 } \)
ஆதாய விகிதம் = \(\frac { 21 }{ 60 } :\frac { 7 }{ 60 } \) அதாவது 3 : 1
தொடரும் கூட்டாளிகளின் புதிய பங்கு + ஆதாயப் பங்கு
ராமு = \(\frac { 3 }{ 15 } +\frac { 21 }{ 60 } =\frac { 12+21 }{ 60 } =\frac { 33 }{ 60 } =\frac { 11 }{ 20 } \)
சோமு = \(\frac { 5 }{ 15 } +\frac { 7 }{ 60 } =\frac { 20+7 }{ 60 } =\frac { 27 }{ 60 } =\frac { 9 }{ 20 } \)
ஆகையால், ராமு மற்றும் சோமு ஆகியோரின் புதிய விகிதம் = \(\frac { 11 }{ 20 } :\frac { 9 }{ 20 } \) அதாவது 11 : 9
9.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கு பயன்படுத்தப்படும் கருவிகளில் பொதுவானவை
பின்வருமாறு:
1) ஒப்பீட்டு அறிக்கை
2) பொது அளவு அறிக்கைகள்
3) போக்குப் பகுப்பாய்வு
4) நிதி ஓட்டப் பகுப்பாய்வு
5) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு
10.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப்பகிர்வு விகிதம் கணக்கிடுதல்:
அம்பிகா, தாரணி மற்றும் பத்மாவின் பழைய இலாப விகிதம் = 5 : 3 : 2 அல்லது \(\frac { 5 }{ 10 } :\frac { 3 }{ 10 } :\frac { 2 }{ 10 } \)
இலாபத்தில் இரம்யாவின் பங்கு 25% அல்லது \(\frac { 25 }{ 100 } \) அல்லது \(\frac { 1 }{ 4 } \)
மொத்த பங்கு 1 என எடுத்துக் கொள்ளவும்.
மீதப்பங்கு = \(1-\frac { 1 }{ 4 } =\frac { 4-1 }{ 4 } =\frac { 3 }{ 4 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = மீதப் பங்கு x பழையப் பங்கு
அம்பிகா = \(\frac { 3 }{ 4 } \times \frac { 5 }{ 10 } =\frac { 15 }{ 40 } \)
தரணி = \(\frac { 3 }{ 4 } \times \frac { 3 }{ 10 } =\frac { 9 }{ 40 } \)
பத்மா = \(\frac { 3 }{ 4 } \times \frac { 2 }{ 10 } =\frac { 6 }{ 40 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
இரம்யா = \(\frac { 1 }{ 4 } \)
இரம்யா பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 10 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
இரம்யாவின் பங்கு = \(\frac { 1 }{ 4 } \times \frac { 10 }{ 10 } =\frac { 10 }{ 40 } \)
அம்பிகா, தாரணி, பத்மா மற்றும் இரம்யாவின் இலாபப் பகிர்வு விகிதம் = \(\frac { 15 }{ 40 } :\frac { 9 }{ 40 } :\frac { 6 }{ 40 } :\frac { 10 }{ 40 } \)
அதாவது, 15 : 9 : 6 : 10
11.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| ரொக்கக் க/கு (அளித்தது) | 4,50,000 | இருப்பு கீ/கொ | 1,70,000 |
| கொள்முதல் திருப்பம் க/கு | 20,000 | கொள்முதல் க/கு (கடன்) | 4,90,000 |
| இருப்பு கீ/இ | 1,90,000 | (இருப்புக்கட்டும் தொகை) | |
| 6,60,000 | 6,60,000 |
12.
| விவரம் | 2016-17 | 2017-18 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
தவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 2,00,000 | 2,50,000 | +50,000 | +25 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 50,000 | 40,000 | –10,000 | –20 |
| மொத்த வருமானங்கள் | 2,50,000 | 2,90,000 | +40,000 | +16 |
| கழிக்க: செலவுகள் | 1,50,000 | 1,20,000 | –30,000 | –20 |
| வரிக்கு முன்னர் உள்ள இலாபம் | 1,00,000 | 1,70,000 | +70,000 | +70 |
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் கூடுதல் மற்றும் குறைதல் சதவீதக் கணக்கீடு
x 100 = 25%
13.
தியாக விகிதம் மற்றும் புதிய இலாபப் பகிர்வு விகிதம் கணக்கிடுதல் :
தியாகப் பங்கு மற்றும் தியாகப் பங்கின் விகிதம் மற்றும் புதிய இலாபப் பங்கு விகிதம் குறிப்பிடாத போது, பழைய இலாபப் பகிர்வு விகிதத்தை இருக்கும் கூட்டாளிகளின் தியாகப் பங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, 2:1.
விமல் மற்றும் ஆதியின் தியாக விகிதம் 2:1
மொத்த பங்கு 1 என எடுத்துக் கொள்ளவும்
ஜெயம் பங்கு = \(\frac { 1 }{ 4 } \)
மீதமுள்ள பங்கு =\(1-\frac { 1 }{ 4 } =\frac { 4-1 }{ 4 } \)
=\(\frac { 3 }{ 4 } \)
பழைய கூட்டாளியின் புதிய பங்கு = மீதப் பங்கு x பழைய பங்கு
விமல் =\(\frac { 3 }{ 4 } \times \frac { 2 }{ 3 } =\frac { 6 }{ 12 } \)
ஆதி =\(\frac { 3 }{ 4 } \times \frac { 1 }{ 3 } =\frac { 3 }{ 12 } \)
புதிய கூட்டாளியின் பங்கு
ஜெயம் =\(\frac { 1 }{ 4 } \)
ஜெயம் பங்கிற்குரிய பகுதியை சமன் செய்யும் பொருட்டு, 3 ஆல் பெருக்கி மற்றும் வகுக்க வேண்டும்.
ஜெயம் பங்கு =\(\frac { 1 }{ 4 } \times \frac { 3 }{ 3 } =\frac { 3 }{ 12 } \)
விமல், ஆதி மற்றும் ஜெயம் அவர்களின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் =\(\frac { 6 }{ 12 } :\frac { 3 }{ 12 } :\frac { 3 }{ 12 } \) அதாவது, 2 : 1 : 1.
14.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| நடப்பாண்டில் பெற்ற சந்தா | 50,000 | |||
| கழிக்க:2017 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 5,000 | |||
| 45,000 | ||||
| கழிக்க:2019 ஆம் ஆண்டுக்கான சந்தா பெற்றது | 7,000 | |||
| 38,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டு பெற வேண்டிய சந்தா: | 6,000 | |||
| 44,000 | ||||
| கூட்டுக: 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது | 4,000 | 48,000 |
15.
(i) முதலீடு மீதான வருவாய், வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபத்திற்கும் பயன்படுத்தப்பட்ட முதலுக்கும் உள்ள விகிதத்தைக் காட்டுகிறது. (பங்குதாரர் நிதி மற்றும் நீண்டகாலக் கடன்கள்).
(ii) இந்த விகிதமானது பயன்படுத்தப்பட்ட முதல், வணிகத்தில் எவ்வாறு திறமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அளவிடுகின்றது.
(iii) இது வணிக நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத் தன்மையை அளவிடுகிறது.
(iv) முதலீடு மீதான வருவாய் = வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் / பயன்படுத்தப்பட்ட முதல் x 100
16.
(i) விரைவு விகிதம் நீர்மைச் சொத்துக்களுக்கும், நடப்புப் பொறுப்புகளுக்குமுள்ள விகிதாச்சாரமாகும்.
(ii) இது ஒரு வணிக நிறுவனம் தன்னுடைய நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது அதை நீர்மைச் சொத்துகளிலிருந்து எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதா என்பதை குறிக்கிறது.

17.
ஒரு வியாபாரத்தின் உயர் இலாபம் என்பது சாதாரண இலாபத்தை விட கூடுதலாக உள்ள சராசரி இலாபம் ஆகும்.
உள்ள இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
18.
முதல் உந்துதிறன் விகிதம் =
= \(\frac {3,00,000}{4,00,000}\) = 0.75:1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்குமுதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
= 1,00,000 + 2,00,000 = ரூ.3,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 2,00,000 + 1,25,000 + 75,000 = ரூ.4,00,000
19.
எடுப்புகள் மீதான வட்டி = எடுப்புத்தொகை x வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
= ரூ.30,000 x \(\frac {6}{100}\times\frac {4}{12}\)
= ரூ.600
| நாள் | விவரம் | பே.ப எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 டிசம்பர் 31 |
மணி முதல் க/கு | ப | 600 | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு (எடுப்புகள் மீது வட்டி விதித்தது) |
600 | ||||
| ' | எடுப்புகள் மீது வட்டி க/கு | ப | 600 | ||
| இலாப நட்டப் பகிர்வு க/கு (எடுப்புகள் மீது வட்டி கணக்கை |
600 |
20.
புதிய இலாப விகிதமும், தொடரும் கூட்டாளிகளின் ஆதாய விகிதமும் தரப்படாததால், அவர்கள் 2:1 என்ற பழைய இலாப விகிதத்திலேயே ஆதாயம் பெறுகிறார்கள் எனக் கொள்ள வேண்டும். ஆகவே, ஆதாய விகிதம் = 2:1 ஆகும்.
நற்பெயரில் சுரேஷின் பங்கு \(=36,000\times \frac { 3 }{ 6 } =Rs.18,000\)
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|---|---|---|---|---|
| செந்தாமரை முதல் க/கு (18000 x 2/3) ப | 12,000 | |||
| இராஜ் முதல் க/கு (18000 x 1/3) ப | 6,000 | |||
| சுரேஷ் முதல் க/கு | 18,000 | |||
| (நற்பெயரில் சுரேஷின் பங்கு சரிக்கப்பட்டது) |
21.
| நாள் | விவரம் | பே. ப.எ |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (15,000 × 2) | ப | 30,000 | |||
| பங்குமுதல் க/கு | 30,000 | ||||
| (பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (14,900 × 2) | ப | 29,800 | |||
| அழைப்பு நிலுவை க/கு (100 × 2) | ப | 200 | |||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு | 30,000 | ||||
| (அழைப்பு பணம் பெறப்பட்டது, பெறப்படாத தொகை அழைப்பு நிலுவைக் கணக்கில் எடுத்துச் செல்லப்பட்டது) |
22.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 20,000 | ரொக்கக் க/கு | 60,000 |
| கடனாளிகள் க/கு (அவ்வாண்டில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 75,000 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 5,000 |
| இருப்பு கீ/இ | 30,000 | ||
| 95,000 | 95,000 |
23.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | ரொக்கக் க/கு (பெற்றது) | 1,00,000 |
| விற்பனை க/கு (கடன்) | 1,27,000 | அளித்த தள்ளுபடி க/கு | 5,000 |
| முதல் (இருப்புக் கட்டும் தொகை) | விற்பனைத் திருப்பக் க/கு | 2,000 | |
| இருப்பு கீ/இ | 60,000 | ||
| 1,67,000 | 1,67,000 |
24.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2017) | 3,50,000 40,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | |
| 3,90,000 70,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 3,20,000 2,00,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2016) | |
| அவ்வாண்டின் இலாபம் | 1,20,000 |
25.
| விவரம் | 2015-16 | 2016-17 | தொகையின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
சதவீதத்தின் கூடுதல் (+) அல்லது குறைவு (-) |
|---|---|---|---|---|
| ரூ. | ரூ. | ரூ. | ||
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 4,00,000 | 5,00,000 | +1,00,000 | +25 |
| கூட்டுக: இதர வருமானங்கள் | 2,00,000 | 1,80,000 | –20,000 | –10 |
| வரிக்கு முன் இலாபம் | 2,00,000 | 3,20,000 | +1,20,000 | +60 |
| கழிக்க: வருமானவரி | 40,000 | 1,60,000 | +1,20,000 | +300 |
| வரிக்கு பின்னர் உள்ள இலாபம் | 1,60,000 | 1,60,000 | - | - |
குறிப்பு: வருமானவரி கணக்கீடு
2015-2016 2,00,000 x 20% = 40,000
2016-2017 3,20,000 x 50% = 1,60,000
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards