12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.
2.
நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?
3.
பங்குகளின் பிரிவுகளை எழுதி விளக்குக.
4.
விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?
5.
இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?
6.
பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.
7.
முதல் மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
8.
கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கும் முறைகளை எழுதுக.
9.
கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச் செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
(ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
(iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது
10.
ரோஜா, நீலா மற்றும் கனகா என்ற கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல் 1 அன்று ரோஜா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டன.
(i) கட்டடத்தின் மதிப்பில் ரூ.30,000 அதிகரிக்க வேண்டும்.
(ii) சரக்கிருப்பு மதிப்பில் ரூ. 5,000 மற்றும் அறைகலன் மதிப்பில் ரூ.12,000 குறைக்க வேண்டும்.
(iii) கொடுபடா பொறுப்புகளுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
11.
நிதிநிலை அறிக்கைகள் கடந்தகால விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எப்படி ஒரு குறைபாடாகும் என விளக்கவும்.
12.
விகித பகுப்பாய்வின் ஏதேனும் மூன்று நன்மைகள் தரவும்
13.
விகித பகுப்பாய்வின் நோக்கங்களை விளக்கவும்.
14.
15.
பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் |
ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 40,000 | ||
| பிரின்ஸ் | 30,000 | பொறித்தொகுதி | 50,000 | |
| தேவ் | 50,000 | அறைகலன் | 10,000 | |
| சசிரேகா | 20,000 | 1,00,000 | சரக்கிருப்பு | 15,000 |
| இலாப நட்டப் பகிர்வு க/கு | 10,000 | கடனாளிகள் | 20,000 | |
| பொதுக்காப்பு | 15,000 | வங்கி ரொக்கம் | 15,000 | |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 17,000 | |||
| பற்பல கடனீந்தோர் | 8,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
16.
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் | 1,50,000 |
| 2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 40,000 |
| கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது | 90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது | 10,000 |
| விற்பனைத் திருப்பம் | 40,000 |
| 2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 30,000 |
| 2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் | 1,30,000 |
| ரொக்க விற்பனை | 2,00,000 |
17.
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| 31.3.2019 அன்று இறுதி முதல் | 1,90,000 |
| அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | 50,000 |
| அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 1.4.2018 அன்று தொடக்க முதல் | ? |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | 40,000 |
18.
டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | 2018, மார்ச் 31 ரூ. |
2019, மார்ச் 31 ரூ. |
|---|---|---|
| சரக்கிருப்பு | 1,40,000 | 1,00,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 80,000 | 60,000 |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 40,000 | 50,000 |
| நிலைச் சொத்துகள் | 5,50,000 | 5,00,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
(ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
(iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.
19.
அருணன் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம் மற்றும்
(iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 1,50,000 |
| 8% முன்னுரிமைப் பங்குமுதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (9% கடனீட்டுப் பத்திரங்கள்) | 4,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள் | 25,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 75,000 |
| மொத்தம் | 10,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 7,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 1,00,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் | 27,500 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது | 2,500 |
| மொத்தம் | 10,00,000 |
20.
அஞ்சலி மற்றும் நித்யா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்துவருகின்றனர். அவர்கள் பிரமிளா என்பவரை 1.1.2018 அன்று கூட்டாளியாகச் சேர்த்தனர். அந்நாளில் அவர்களின் இருப்பு நிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் பகிர்ந்து தரா நட்டம் ரூ.40,000 ஆக இருந்தது. சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை பகிர்வதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
1.
நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்கள்:
1) வருவாயீட்டும் தன்மை மற்றும் இலாபமீட்டும் திறனை ஆய்வு செய்வதற்காக.
2) நீண்டகால மற்றும் குறுகிய கால கடனைத் தீர்க்கும் திறன் பற்றி அறிய
3) சொத்துகளை பயன்படுத்துவதிலும், செயல்பாடுகளிலும் ஆற்றலைத் தீர்மானிப்பதற்கு
4) நிர்வாகம் மற்றும் பணியாளர்களின் திறமையைத் தீர்மானிப்பதற்கு
5) உற்பத்தி, மற்றும் விற்பனையின் போக்கினைத் தீர்மானிப்பதற்கு
6) எதிர்கால முன்கணிப்பு மற்றும் திட்டபட்டியல் தயாரிப்பதற்கு
7) நிறுவனத்திற்குள்ளேயும், பிற நிறுவங்களோடும் ஒப்பீடு செய்வதற்கு.
2.
கூட்டாண்மை நிறுவனங்களில் கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் நற்பெயர் மதிப்பீடுச் செய்வதற்கான தேவை எழுகிறது. கூட்டாளிகளின் உரிமைகளைக் காக்கும் பொருட்டு பின்வரும் சூழ்நிலைகளில் நற்பெயரை மதிப்படுவதற்கான தேவை எழுகிறது:
(i) இலாபப் பகிர்வு விகிதத்தில் மற்றம் ஏற்படும்போது
(ii) கூட்டாண்மை நிறுவனத்தில் புதிய கூட்டாளி சேர்க்கப்படும்போது
(iii) கூட்டாண்மை நிறுவனத்தில் இருக்கும் கூட்டாளி ஒருவர் நிறுவனத்தை விட்டு விலகும் போது அல்லது கூட்டாளி ஒருவர் இறக்கும் போது
(iv) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை கலைக்கும் போது
3.
ஒரு நிறுமத்தின் பங்குமுதல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன:
1) அங்கீகரிக்கப்பட்ட முதல்:
i) இது அமைப்பு முறையேட்டின் படி அங்கீகரிக்கப்பட்ட முதல் ஆகும்.
ii) அதிகபட்சமாக முதலாக திரட்ட அனுமதிக்கப்பட்ட தொகை.
iii) இதனைப் 'பதிவு செய்யப்பட்ட முதல்' அல்லது 'பெயரளவு முதல்' என்றும் கூறலாம்.
2) வெளியிட்ட முதல்:
வாங்குவதற்கென வெளியிடப்பட்ட அங்கீகரித்த முதலின் ஒரு பகுதி வெளியிட்ட முதல் ஆகும்.
3) ஒப்பிய முதல்:
வெளியிட்ட முதலில், வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட, மேலும் நிறுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் ஒப்பிய முதல் ஆகும்.
4) அழைக்கப்பட்ட முதல்:
பணம் செலுத்தப்பட, நிறுமத்தால் அழைக்கப்பட ஒப்பிய முதலில், ஒரு பகுதி அழைக்கப்பட்ட முதல் ஆகும்.
5) செலுத்தப்பட்ட முதல்:
பங்குதாரர்களால் உண்மையில் செலுத்தப்பட்ட அழைக்கப்பட்ட முதலின் ஒரு பகுதி செலுத்தப்பட்ட முதல் ஆகும்.
6) காப்பு முதல்:
ஒரு நிறுமம் அதன் கலைப்பின்போது மட்டும் அழைப்பு விடுக்கலாம் என ஒதுக்கி வைத்துள்ள அழைக்கப்பட்ட முதலின் ஒரு பகுதியினை 'காப்பு முதல்' என்று அழைக்கலாம்.
4.
(i) கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் விலகும் போது, நற்பெயர், பகிர்ந்து தரா இலாபம் அல்லது நாட்டம், மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நாட்டம், கூட்டாளியின் ஊதியம் ஆகியவற்றை சரிகட்டிய பிறகு கிடைக்கக்கூடிய முதல் கணக்கின் இருப்பு அக்கூட்டாளிக்கு செலுத்தப்பட வேண்டும்
(ii) கூட்டாண்மை ஒப்பாவனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவருக்கு சேர வேண்டிய தொகையைத் தீர்வுச் செய்ய வேண்டும். பின்வரும் வழிகளில் விலகும் கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகை தீர்க்கப்படலாம்
1. அவருக்கு சேரவேண்டிய முழுத் தொகையையும் ரொக்கமாக உடனடியாக செலுத்தலாம்
2. மொத்தத் தொகையும் கூட்டாளியின் கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
3. பாதித் தொகையை உடனடியாக ரொக்கமாகவும் மீதித் தொகையை கடன் கணக்கிற்கு மாற்றி விடலாம்
5.
1) இலாப நோக்கம் இல்லாமல் செயல்படும் அமைப்புகளே இலாப நோக்கற்ற அமைப்புகள் எனப்படும்.
2) அவற்றின் முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது பெரும்பாலான பொதுமக்களுக்கோ சேவை செய்வதாகும்.
3) பொதுவாக அவை வணிகம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில்லை.
4) இவைகளின் முக்கிய வருமான ஆதாரம் உறுப்பினர் சந்தா, நன்கொடைகள், மானியம் மற்றும் உயில்கொடை போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.
6.
பாரம்பரிய அடிப்படையில், எந்த நிதிநிலை அறிக்கையிலிருந்து விகிதங்கள் கணக்கிடப்படுகின்றன என்பதன் அடிப்படையில் விகிதங்கள்.
(i) இருப்புநிலைக் குறிப்பு விகிதங்கள்
(ii) வருமான அறிக்கை விகிதங்கள் மற்றும்
(iii) அறிக்கைகளுக்கிடையேயான விகிதங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
(i) இருப்புநிலைக் குறிப்பு விகிதம் :
ஒரு விகிதத்தின் இரு இனங்களும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டால், அது இருப்புநிலைக் குறிப்பு விகிதம் என வகைப்படுத்தப்படுகிறது.
(ii) வருமான அறிக்கை விகிதம் :
ஒரு விகிதத்தின் இரு இனங்களும் வருமான அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டால் அது வருமான அறிக்கை விகிதம் என வகைப்படுத்தப்படுகிறது.
(iii) அறிக்கைகளுக்கிடையான விகிதம் :
ஒரு இனம் வருமான அறிக்கையிலிருந்தும் மற்றொரு இனம் இருப்புநிலைக் குறிப்பிலிருந்தும் எடுத்து விகிதம் கணக்கிடப்பட்டால், அது அறிக்கைகளுக்கிடையேயான விகிதம் என அழைக்கப்படுகிறது.
7.
(i) முதல் மீது வட்டி நடப்பாண்டுக்குரிய தொடக்க முதல்ல கணக்கிடப்படுகிறது.
(ii) அவ்வாண்டில் கூட்டாளிகள்கூடுதல் முதல் எதாவது கொண்டு வந்திருந்தாலோ, அல்லது முதல் தொகையை நிரந்திரமாக திரும்ப எடுத்திருந்தாலோ, அது முதல் தொகையில் மாற்றத்தை உண்டாக்கும்
(iii) எனவ, நடப்பாண்டுக்குரிய வட்டியானது முதல் தொகையில் ஏற்பட்ட மாற்றங்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப கணக்கிடப்படுத்தல் வேண்டும்.
(iv) முதல் மீது வட்டி = முதல் தொகை x ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் x வட்டிக்குரிய காலம்
8.
கூட்டாளிகள், கூட்டாண்மை நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகை கூட்டாளிகளின் முதல் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்திலுள்ள கூட்டாளிகளின் முதல் கணக்குகளைப் பின்வரும் ஏதேனும் இரு முறைகளில் பராமரிக்கலாம்.
(i) நிலைமுதல் முறை மற்றும்
(ii) மாறுபடும் முதல் முறை
(i) நிலைமுதல்:
நிலைமுதல் முறையில், கூட்டாளிகளின் முதல் மாறாமல் இருக்கும் மற்றும் பொதுவாக அதே தொகையாக, நிலையானதாக இருக்கும். ஒவ்வொரு கூட்டாளிக்கும் இரண்டு கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும். அதாவது (அ) முதல் கணக்கு மற்றும் (ஆ) நடப்புக் கணக்கு, தொடக்க முதல் கொண்டு வந்தது, கூடுதல் முதல் கொண்டு வந்தது போன்றவை தொடர்பான நடவடிக்கைகள் முதல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) மாறுபடும் முதல் முறை:
இம்முறையில், ஒவ்வொரு கொட்டலிக்கும் முதல் கணக்கு மட்டும் பராமரிக்கப்படுகிறது கூட்டாளி மற்றும் நிறுவனத்திற்கு இடையேயுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முதல் கணக்கில் பதியப்படுகின்றன. கூட்டாளியால் கொண்டு வரப்பட்ட தொடக்க முதல் மற்றும் கூடுதல் முதல், முதல் மீது வட்டி, கூட்டலியின் ஊதியம், கழிவு மற்றும் கூட்டாளியின் இலாபப் பங்கு போன்றவை இக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. முதல் திரும்ப எடுத்தது, எடுப்புகள் மீது வட்டி மற்றும் கூட்டாளிக்குரிய நட்டப்பங்கு போன்றவை இக்கணக்கில் பற்று வைக்கப்படுகின்றன
9.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | (i) கவின் முதல க/கு | ப | 1,50,000 | ||
| டிசம்பர் 31 | வங்கி க/கு | 1,50,000 | |||
| (தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது) | |||||
| " | (ii) கவின் முதல் க/கு | ப | 1,50,000 | ||
| கவின் கடன் க/கு | 1,50,000 | ||||
| (தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| " | (iii) கவின் முதல் க/கு | ப | 1,50,000 | ||
| வங்கி க/கு | 1,00,000 | ||||
| கவின் கடன் க/கு | 50,000 | ||||
| (ரூ.1,00,000 உடனடியாகச் செலுத்தப்பட்டு, மீதித் தொகை கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
10.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2017 | கட்டடம் க/கு | ப | 30,000 | ||
| மறுமதிப்பீட்டுக் க/கு | 30,000 | ||||
| (கட்டடம் மதிப்பு உயர்த்தப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 18,000 | ||
| சரக்கிருப்பு க/கு | 5,000 | ||||
| அறைகலன் க/கு | 12,000 | ||||
| கொடுபடா பொறுப்பு க/கு | 1,000 | ||||
| (சரக்கிருப்பு, அறைகலன் மீது தேய்மானம் நீக்கியது மற்றும் கொடுபடா பொறுப்பு கணக்கு உருவாக்கியது) | |||||
| " | மறுமதிப்பீட்டுக் க/கு | ப | 12,000 | ||
| ரோஜா முதல் க/கு | 4,800 | ||||
| நீலா முதல் க/கு | 3,600 | ||||
| கனகா முதல் க/கு | 3,600 | ||||
| (மறுமதிப்பீட்டு இலாபம் பகிர்ந்தளிக்கப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடம் க/கு | 30,000 | |
| அறைகலன் | 12,000 | |||
| கொடுபடா பொறுப்பு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம் | ||||
| ரோஜா முதல் க/கு \(\left( 12,000\times \frac { 4 }{ 10 } \right) \) | 4,800 | |||
| நீலா முதல் க/கு \(\left( 12,000\times \frac { 3 }{ 10 } \right) \) | 3,600 | |||
| கனகா முதல் க/கு (12,000 x 3/10) | 3,600 | 12,000 | ||
| 30,000 | 30,000 |
11.
1) கடந்த கால விவரங்களின் பதிவேடு:
நிதிநிலை அறிக்கைகள் கடந்த கால விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.எனவே அவை நடப்பு நிலைமையை வெளிப்படுத்தாமல் போகலாம்.
2) இடைக்கால அறிக்கைகளை மட்டுமே தருகிறது:
நிதிநிலை அறிக்கைகள் ஒவ்வொரு கணக்காண்டின் இறுதியில் தயாரிக்கப்படுகின்றன ஆனால், வணிகத்தின் உண்மையான நிலவரத்தை, நிறுவனத்தின் கலைப்பின் போது மட்டுமே அறிய இயலும். எனவே, நிதிநிலை அறிக்கைகள் நிறுவனத்தின் துல்லியமான நிலையினை வெளிக்காட்டாது.
12.
விகிதப் பகுப்பாய்வின் நன்மைகள் பின்வருமாறு :
(i) செயல்பாடுகளின் செயல்திறனை அளவிடுகிறது :
விகிதப் பகுப்பாய்வு, இயக்க அடக்கவிலை மற்றும் வருவாய்க்கும் இடையே உள்ள உறவை கண்டறிவதன் மூலமும், தற்போதைய விகிதங்களைக் கடந்த கால விகிதங்களுடன் ஒப்பீடு செய்வதன் மூலமும் செயல்பாடுகளின் செயல்திறனை அளவிடுகிறது.
(ii) நிதிநிலையின் கடன் தீர்க்கும் திறனை அளவிடுகிறது :
விகிதப் பகுப்பாய்வு, ஒரு வணிக நிறுவனத்தின் நீர்மைத் தன்மை அல்லது குறுகிய கால கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை அறிய உதவுகிறது.
(iii) முதலீட்டு முடிவுகளுக்கு வழிவகை செய்கிறது :
விகிதப் பகுப்பாய்வு இலாபகரமான முதலீடு வழிவகைகள் தொடர்பான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு நிர்வாகத்திற்கு உதவுகிறது.
13.
விகிதப் பகுப்பாய்வின் நோக்கங்கள் பின்வருமாறு :
(i) கணக்கியல் தொகைகளை சுருக்கமாகக் கூற
(ii) நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகை செய்ய
(iii) தொழில் நிறுவனத்தின் இயக்க செயல் திறனை பகுப்பாய்வு செய்ய
(iv) திட்டமிடுதல் மற்றும் முன்கணித்தலுக்கு உதவ
(v) நிறுவனத்திற்குள்ளேயும் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயும் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்க.
14.
15.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 1 | இலாப நட்டப் பகிர்வு க/கு | ப | 10,000 | ||
| பொதுக்காப்பு க/கு | ப | 15,000 | |||
| தொழிலாளர் ஈட்டு நிதி க/கு | ப | 17,000 | |||
| பிரின்ஸ் முதல் க/கு (42000 x 2/7) | 12,000 | ||||
| தேவ் முதல் க/கு (42000 x 4/7) | 24,000 | ||||
| சசிரேகா முதல் க/கு (42000 x 1/7) | 6,000 | ||||
| (பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்புகள் அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு பழைய இலாப விகிதத்தில் மாற்றப்பட்டது) |
16.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 40,000 | ரொக்கக் க/கு | 90,000 |
| கடனாளிகள் க/கு (அவ்வாண்டில் மாற்றுச்சீட்டு பெற்றது - இருப்புக் கட்டும் தொகை) | 90,000 | கடனாளிகள் க/கு (பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது) | 10,000 |
| இருப்பு கீ/இ | 30,000 | ||
| 1,30,000 | 1,30,000 |
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | 1,50,000 | ரொக்கக் க/கு | 3,90,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு (மறுக்கப்பட்டது) | 10,000 | விற்பனைத் திருப்பம் க/கு | 40,000 |
| விற்பனை க/கு (கடன்) (இருப்புக் கட்டும் தொகை) | 4,90,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு* (மாற்றுச்சீட்டு பெற்றது) | 90,000 |
| இருப்பு கீ/இ | 1,30,000 | ||
| 6,50,000 | 6,50,000 |
மொத்த விற்பனை = ரொக்க விற்பனை + கடன் விற்பனை
= ரூ. 2,00,000 + ரூ. 4,90,000
= ரூ. 6,90,000
17.
| விவரம் | ரூ. |
|---|---|
| இறுதி முதல் (31.3.2019) | 1,90,000 |
| கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் | 30,000 |
| 2,20,000 50,000 |
|
| கழிக்க: அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் | |
| சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் | 1,70,000 2,10,000 |
| கழிக்க: தொடக்க முதல் (1.4.2018) (இருப்புக் கட்டும் தொகை) | |
| 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் | (-) 40,000 |
18.
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = \(\frac {6,00,000}{1,20,000}\) = 5 மடங்கு
= \(\frac {1,40,000+1,00,000}{2}=\frac {2,40,000}{2}\) = ரூ.1,20,000
=\(\frac {10,50,000}{70,000}\) = 15 மடங்கு
= \(\frac {80,000+60,000}{2}=\frac {1,40,000}{2}\) = ரூ.70,000
= \(\frac {4,50,000}{45,000}\) = 10 மடங்கு
= \(\frac {40,000+50,000}{2}\) = \(\frac {90,000}{2}\) = ரூ.45,000
=\(\frac {10,50,000}{5,25,000}\) = 2 மடங்கு
(v)
=\(\frac {5,50,000+5,00,000}{2}\) = \(\frac {10,50,000}{2}\) = ரூ.5,25,000
19.
(i) புற அக பொறுப்புகள் விகிதம் = =\(\frac {4,00,000}{5,00,000}\) = 0.8:1
நீண்டகாலக் கடன் = 9% கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.4,00,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,50,000 + 2,00,000 + 1,50,000 = ரூ.5,00,000
(ii) உரிமையாளர் விகிதம் = =\(\frac {5,00,000}{10,00,000}\) = 0.5:1
(iii) முதல் உந்துதிறன் விகிதம் = =\(\frac {6,00,000}{3,00,000}\) = 2.1
நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள்
= 8% முன்னுரிமைப் பங்கு முதல் + 9% கடனீட்டுப் ப த்திரங்கள்
= 2,00,000 + 4,00,000 = ரூ. 6,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக் காப்பு + மிகுதி
= 1,50,000 + 1,50,000 = ரூ. 3,00,000
20.
| நாள் | விவரம் | பே.ப. எண் |
பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2018 | அஞ்சலி முதல் க/கு (40,000 x 5/8) | ப | 25,000 | ||
| ஜனவரி 1 | நித்யா முதல் க/கு (40,000 x 3/8) | ப | 15,000 | ||
| இலாப நட்ட க/கு | 40,000 | ||||
| (பகிர்ந்து தரா நட்டம் பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குக்கு பழைய இலாபவிகிதத்தில் மாற்றப்பட்டது) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards