12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாப விகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.2,50,000, விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.2,10,000 மற்றும் கொள்முதல் ரூ.1,80,000.
2.
கீதா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
(i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.55,00,000.
(ii) அவ்வாண்டின் இறுதியில் நிலைச் சொத்துகள் ரூ.5,00,000.
3.
புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?
4.
விரைவு விகிதம் என்றால் என்ன?
5.
ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிகர இலாபத்தைக் கணக்கிடவும்
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 3,50,000 |
| விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை | 1,50,000 |
| நிர்வாகச் செலவுகள் | 50,000 |
| விற்பனைச் செலவுகள் | 10,000 |
6.
ஹரிணி நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.9,60,000. அந்த கணக்காண்டின் இறுதியில் இதன் வியாபார கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு தொகை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000. கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சுழற்சி விகிதம் மற்றும் கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) கணக்கிடவும்.
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | ரூ |
|---|---|
| மொத்த நடப்புப் பொறுப்புகள் | 1,00,000 |
| மொத்த நடப்புச் சொத்துகள் | 2,50,000 |
| சரக்கிருப்பு | 50,000 |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 15,000 |
8.
பின்வரும் தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கண்டறியவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ |
|---|---|---|---|
| குறுகிய கால முதலீடுகள் | 80,000 | வணிகக் கடனீந்தோர் | 1,60,000 |
| சரக்கிருப்பு | 1,60,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,00,000 |
| கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 4,00,000 | கொடுபட வேண்டிய செலவுகள் | 1,40,000 |
| ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 1,20,000 | முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 40,000 |
9.
ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து நிகர இலாப விகிதம் கணக்கிடவும்
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் | 9,60,000 |
| விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை | 5,50,000 |
| அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகள் | 1,45,000 |
| விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள் | 25,000 |
10.
வேலவன் நிறுமத்தின் கடன் விற்பனை மூலம் பெற்ற வருவாய் தொகை ரூ.10,00,000. கணக்காண்டின் இறுதியில் இந்நிறுமத்தின் கடனாளிகள் மற்றும் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுத் தொகை முறையே ரூ.1,10,000 மற்றும் ரூ.1,40,000. கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதத்தையும், கடன் வசூலிப்புக் காலத்தையும் (மாதங்களில்) கணக்கிடவும்
11.
பின்வரும் தகவல்களிலிருந்து முதல் உந்துதிறன் விகிதத்தைக் கணக்கிடவும்.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| அ) பங்கு முதல் | |
| நேர்மைப்பங்கு முதல் | 4,00,000 |
| 5% முன்னுரிமைப்பங்கு முதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | |
| பொதுக்காப்பு | 2,50,000 |
| மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப்பொறுப்புகள் | |
| நீண்டகாலக்கடன்கள் (6% கடனீட்டுப்பத்திரங்கள்) | 3,00,000 |
| 3. நடப்புப்பொறுப்புகள் | |
| கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,20,000 |
| வரி ஒதுக்கு | 30,000 |
| மொத்தம் | 13,50,000 |
12.
முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
(I) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 5,00,000 |
| II. இதர வருமானம் | |
| முதலீடு மூலம் வருவாய் | 40,000 |
| III. மொத்த வருவாய் (I + II) | 5,40,000 |
| IV. செலவுகள் | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 1,80,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | 20,000 |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | 30,000 |
| இதர செலவுகள் | 1,10,000 |
| வரி ஒதுக்கு | 50,000 |
| மொத்த செலவுகள் | 3,90,000 |
| V. அவ்வாண்டிற்கான இலாபம் | 1,50,000 |
13.
கல்பனா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து, கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகளின் சுழற்சி விகிதம், சராசரி கடன் செலுத்தும் காலம் (நாட்களில்) கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| 2018 – 2019 –ல் கடன் கொள்முதல் | 1,00,000 |
| 1.4.2018 அன்று வியாபார கடனீந்தோர் | 20,000 |
| 31.3.2019 அன்று வியாபார கடனீந்தோர் | 10,000 |
| 1.4.2018 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 4,000 |
| 31.3.2019 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 6,000 |
14.
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
| விவரம் | ரூ. |
|---|---|
| விற்பனை மூலம் பெற்ற வருவாய் | 1,90,000 |
| அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 |
| அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு | 20,000 |
| அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் | 90,000 |
| உள்தூக்குக்கூலி | 10,000 |
15.
பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 1,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 60,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) | 80,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 50,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் | 30,000 |
| மொத்தம் | 3,20,000 |
16.
மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,00,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் | 50,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) குறுகிய காலக் கடன்கள் | 17,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 25,000 |
| (இ) இதர நடப்புப் பொறுப்புகள் | |
| கொடுபட வேண்டிய செலவுகள் | 3,000 |
| (ஈ) குறுகியகால ஒதுக்குகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
| சொத்துகள் | |
| 1. நீண்டகால சொத்துகள் | |
| (அ) நிலைச் சொத்துகள் | |
| புலனாகும் சொத்துகள் | 1,50,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 45,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் | 70,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 30,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 3,00,000 |
(i) நடப்பு விகிதம்
(ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.
17.
அப்துல் நிறுமத்தின் 2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய) பின்வருமாறு
| விவரம் | ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்குமுதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 50,000 |
| 2. நீண்டகால பொறுப்புகள் | |
| நீண்டகால கடன்கள் | 1,50,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,30,000 |
| (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் | 5,000 |
| (இ) குறுகிய கால ஒதுக்குகள் | 20,000 |
| மொத்தம் | 5,55,000 |
அவ்வாண்டில் வட்டி மற்றும் வரிக்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000.
அவ்வாண்டில் பயன்படுத்திய முதலிலிருந்து பெற்ற வருவாய் விகிதம் கணக்கிடவும்.
18.
டெரிக்ஸ்டன் நிறுமத்தின் பின்வரும் இலாப நட்ட அறிக்கையிலிருந்து
(i) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.
| விவரம | ரூ. |
|---|---|
| I. விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் | 24,00,000 |
| II. இதர வருமானம்: | |
| முதலீடுகளிலிருந்து பெற்ற வருமானம் | 70,000 |
| III.மொத்த வருவாய் (I+II) | 24,70,000 |
| IV. செலவுகள்: | |
| கொள்முதல் செய்த சரக்குகள் | 18,80,000 |
| சரக்கிருப்பு மாற்றம் | (–)80,000 |
| பணியாளர் நலன்களுக்கான செலவுகள் | 2,90,000 |
| இதர செலவுகள் | 1,10,000 |
| வரி ஒதுக்கு | 30,000 |
| மொத்த செலவுகள் | 22,30,000 |
| V. அவ்வாண்டின் இலாபம் | 2,40,000 |
19.
ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்
(ii) உரிமையாளர் விகிதம்
(iii) முதல் உந்துதிறன் விகிதம்
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள் | |
| 1. பங்குதாரர் நிதி | |
| (அ) பங்கு முதல் | |
| நேர்மைப் பங்குமுதல் | 2,50,000 |
| 6% முன்னுரிமைப் பங்கு முதல் | 2,00,000 |
| (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி | 1,50,000 |
| 2. நீண்டகாலப் பொறுப்புகள் | |
| நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) | 3,00,000 |
| 3. நடப்புப் பொறுப்புகள் | |
| (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் | 2,00,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் | 1,00,000 |
| மொத்தம் | 12,00,000 |
| II. சொத்துகள் | |
| 1. நீண்டகாலச் சொத்துகள் | |
| நிலைச் சொத்துகள் | 8,00,000 |
| 2. நடப்புச் சொத்துகள் | |
| (அ) சரக்கிருப்பு | 1,20,000 |
| (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் | 2,65,000 |
| (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் | 10,000 |
| (ஈ) இதர நடப்புச் சொத்துகள் | |
| முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் | 5,000 |
| மொத்தம் | 12,00,000 |
20.
கீழ்க்கண்ட நிலைகளில் இயக்க இலாப விகிதம் காணவும்.
நிலை 1: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,00,000, இயக்க இலாபம் ரூ.1,50,000.
நிலை 2: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.15,00,000, இயக்க அடக்கம் ரூ.12,00,000.
நிலை 3: விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.20,00,000, மொத்த இலாபம் விற்பனை மூலம் பெற்ற வருவாயில் 30%, இயக்கச் செலவுகள் ரூ.4,00,000
1.

மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவில்லை
= 2,50,000-2,10,000=ரூ.40,000
\(\therefore \) மொத்த இலாப விகிதம் = \(\cfrac { 40,000 }{ 2,50,000 } =\times 100=16\%\)
2.

= \(\cfrac { 55,00,000 }{ 5,00,000 } \)
= 11 மடங்கு
3.
(i) புற அக பொறுப்புகள் விகிதம் ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுகிறது.
(ii) புற அக பொறுப்புகள் விகிதம் நீண்டகால கடன் மற்றும் பங்குதாரர் நிதிக்கும் உள்ள தொடர்பினை வெளிப்படுத்துகிறது.
(iii) இது கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
புற அக பொறுப்புகள் விகிதம்

4.
(i) விரைவு விகிதம் நீர்மைச் சொத்துக்களுக்கும், நடப்புப் பொறுப்புகளுக்குமுள்ள விகிதாச்சாரமாகும்.
(ii) இது ஒரு வணிக நிறுவனம் தன்னுடைய நடப்புப் பொறுப்புகளை எப்போது செலுத்த வேண்டுமோ அப்போது அதை நீர்மைச் சொத்துகளிலிருந்து எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதா என்பதை குறிக்கிறது.

5.
நிகர இலாப விகிதம் = x 100 = \(\frac {1,40,000}{3,50,000}\) x 100 = 40%
நிகர இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை – நிர்வாகச் செலவுகள் – விற்பனைச் செலவுகள்
= 3,50,000 – 1,50,000 – 50,000 – 10,000 = ரூ.1,40,000
6.
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் =
= \(\frac {9,60,000}{1,60,000}\) = 6 மடங்குகள்
கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் = கடனாளிகள் + பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்
= 1,00,000 + 60,000 = ரூ.1,60,000
கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் தொடக்க இருப்பு கொடுக்கப்படாததால், கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகளின் சராசரிக்குப் பதிலாக, கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் இறுதி இருப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது
கடன் வசூலிப்புக் காலம் (மாதங்களில்) =
= \(\frac {12}{6}\) = 2 மாதங்கள்
7.
விரைவு விகிதம் = = \(\frac {1,85,000}{1,00,000}\) = 1.85:1
நீர்மைச் சொத்துகள் = நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 2,50,000 – 50,000 – 15,000
= ரூ.1,85,000
8.
நடப்பு விகிதம் = = \(\frac {8,00,000}{4,00,000}\) = 2:1
நடப்புச் சொத்துகள் = குறுகிய கால முதலீடுகள் + சரக்கிருப்பு + கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் + ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் + முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 80,000 + 1,60,000 + 4,00,000 + 1,20,000 + 40,000 = ரூ. 8,00,000
நடப்புப் பொறுப்புகள் = வணிக கடனீந்தோர் + செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு + கொடுபட வேண்டிய செலவுகள்
= 1,60,000 + 1,00,000 + 1,40,000 = ரூ.4,00,000
9.

நிகர இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை - நிர்வாகச் செலவுகள் - விற்பனைச் செலவுகள்
= 9,60,000-5,50,000-1,45,000-25,000
= ரூ2,40,000
\(\therefore \) நிகர இலாப விகிதம் = \(\cfrac { 2,40,000 }{ 9,60,000 } \times 100=25\%\)
10.

கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் = கடனாளிகள் பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்
= 1,10,000+1,40,000 =ரூ.2,50,000
\(\therefore \) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம் = \(\cfrac { 10,00,000 }{ 2,50,000 } =4\) மடங்கு

= \(\cfrac { 12 }{ 4 } =3\) மாதங்கள்
11.

நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 5% முன்னுரிமைப் பங்குமுதல் +6% கடனீட்டுப் பத்திரங்கள்
= 1,00,000+3,00,000
= ரூ.4,00,000
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக்காப்பு +மிகுதி
= 4,00,000+2,50,000+1,50,000= ரூ.8,00,000
\(\therefore \) முதல் உந்துதிறன் விகிதம் = \(\cfrac { 4,00,000 }{ 8,00,000 } =0.5:1\)
12.
(i) மொத்த இலாப விகிதம் = x 100 = \(\frac {3,00,000}{5,00,000}\) x 100 = 60%
மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை
= 5,00,000 – 2,00,000 = ரூ.3,00,000
விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை = கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம்
= 1,80,000 + 20,000 = ரூ.2,00,000
(ii) நிகர இலாப விகிதம் = x 100 = \(\frac {1,50,000}{5,00,000}\) x 100 = 30%
13.
= \(\frac {1,00,000}{20,000}\) = 5 மடங்கு
= \( \frac {(20,000+4,000)+(10,000+6,000)}{2}\) = \(\frac {40,000}{2}\) = ரூ.20,000
= \(\frac {365}{5}\) = 73 நாட்கள்.
14.
சரக்கிருப்பு சுழற்சி விகிதம் = = \(\frac {1,20,000}{30,000}\) = 4 மடங்கு
விற்பனை மூலம் பெற்ற வருவாயின் அடக்கவிலை
தொடக்கச் சரக்கிருப்பு + நிகரக் கொள்முதல் + நேரடிச் செலவுகள் (உள்தூக்குக் கூலி) – இறுதிச் சரக்கிருப்பு
= 40,000 + 90,000 + 10,000 – 20,000
= ரூ.1,20,000
சராசரி சரக்கிருப்பு = = \(\frac {4,000+20,000}{2}\) = ரூ.30,000
மாற்று காலம்
சரக்கிருப்பு மாற்று காலம் (மாதங்களில்) = =\(\frac {12}{4}\)= 3 மாதங்கள்
15.
புற அக பொறுப்புகள் விகிதம் = =\(\frac {80,000}{1,60,000}\) = 0.5:1
நீண்டகாலக் கடன் = கடனீட்டுப் பத்திரங்கள் = ரூ.80,000
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 1,00,000 + 60,000 = ரூ.1,60,000
16.
(i) நடப்பு விகிதம் = = \(\frac{1,50,000}{50,000}\) = 3.1
நடப்புச் சொத்துகள் = சரக்கிருப்பு + கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் + ரொக்க ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் + முன்கூட்டிச் செலுத்தியச் செலவுகள்
= 45,000 + 70,000 + 30,000 + 5,000 = ரூ.1,50,000
நடப்புப் பொறுப்புகள் = குறுகியகாலக் கடன்கள் + கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் + கொடுபட வேண்டிய செலவுகள் + குறுகிய கால ஒதுக்குகள்
= 17,000 + 25,000 + 3,000 + 5,000 = ரூ.50,000
(ii) விரைவு விகிதம் = =\(\frac {1,00,000}{50,000}\) = 2:1
நீர்மைச் சொத்துகள் = மொத்த நடப்புச் சொத்துகள் – சரக்கிருப்பு – முன்கூட்டிச் செலுத்திய செலவுகள்
= 1,50,000 – 45,000 – 5,000 = ரூ.1,00,000
17.

பயன்படுத்தப்பட்ட முதல் = பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி + நீண்டகாலக் கடன்கள்
= 2,00,000+50,000+1,50,000
= ரூ.4,00,000
முதலீடு மீதான வருவாய் = \(\cfrac { 60,000 }{ 4,00,000 } \times 100 = 15\%\)
18.

மொத்த இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் - விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவில்லை
விற்பனை மூலம் வருவாய்க்கான அடக்கவிலை
= கொள்முதல் செய்த சரக்குகள் + சரக்கிருப்பு மாற்றம்
= 18,80,00+(-80,00,000)
= ரூ.18,00,000
மொத்த இலாபம் = 24,00,000-18,00,000
= ரூ.6,00,000
\(\therefore \) மொத்த இலாப விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 24,00,000 } \times 100\)
= 25%
(iii)

=\(\cfrac { 2,40,000 }{ 24,00,000 } \times 100\)
= 10%
19.
(i) புற அக பொறுப்புகள் விகிதம்

நீண்டகாலக் கடன் = 8% கடனீட்டுப் பத்திரங்கள்
பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்கு முதல் + முன்னுரிமைப் பங்குமுதல் + காப்புகள் மற்றும் மிகுதி
= 2,50,000+2,00,000+1,50,000
= ரூ.6,00,000
\(\therefore \) புற அக பொறுப்புகள் விகிதம் = \(\cfrac { 3,00,000 }{ 6,00,000 } =0.5:1\)
(ii)

உரிமையாளர் நிதி = ரூ.6,00,000
மொத்த சொத்துகள் = ரூ.12,00,000
\(\therefore \) உரிமையாளர் விகிதம் = \(\cfrac { 6,00,000 }{ 12,00,000 } =0.5:1\)
(iii)

நிலையான வட்டி மற்றும் நிலையான பங்காதாயம் ஈட்டுகின்ற நிதிகள் = 6% முன்னுரிமைப் பங்கு முதல் + 8% கடனீட்டுப் பத்திரங்கள்
நேர்மைப் பங்குதாரர் நிதி = நேர்மைப் பங்குமுதல் + பொதுக்காப்பு +மிகுதி
= 2,50,000+1,50,000
= ரூ.4,00,000
\(\therefore \) முதல் உந்துதிறன் விகிதம் = \(\cfrac { 5,00,000 }{ 4,00,000 } =1.25:1\)
20.
நிலை 1: இயக்க இலாப விகிதம் = x 100
= \(\frac {1,50,000}{10,00,000}\) x 100 = 15%
நிலை 2: இயக்க இலாப விகிதம் = x 100
= \(\frac {3,00,000}{15,00,000}\) x 100 = 20%
இயக்க இலாபம் = விற்பனை மூலம் பெற்ற வருவாய் – இயக்க அடக்கம்
= 15,00,000 – 12,00,000 = ரூ.3,00,000
நிலை 3: இயக்க இலாப விகிதம் = x 100
= \(\frac {2,00,000}{20,00,000}\) x 100 = 10%
மொத்த இலாபம் = 20,00,000 30/100 = ரூ.6,00,000
இயக்க இலாபம் = மொத்த இலாபம் – இயக்கச் செலவுகள்
இயக்க இலாபம் = 6,00,000 – 4,00,000 = ரூ.2,00,000
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards