12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
சைமாலஜி என்பது
நொதித்தல் மற்றும் அதன் செயல்முறை பயன்
பயோரியாக்டர்களின் பெயர்
மேல்கால் பதப்படுத்துதல் முறை பற்றிய இயல்
கீழ்கால் பதப்படுத்துதல் பற்றிய இயல்
2.
3.
கீழ்கண்டவற்றைப் பொருத்துக
| பகுதி - அ | பகுதி - ஆ |
| 1) முழு ஆக்குத்திறன் | A) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறுதல் |
| 2) வேறுபாடிழத்தல் | B) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள் |
| 3) பிரிகூறு | C) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு |
| 4) வேறுபாடுறுதல் | D) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல் |
| 1 | 2 | 3 | 4 |
| C | A | D | B |
| 1 | 2 | 3 | 4 |
| A | C | B | D |
| 1 | 2 | 3 | 4 |
| B | A | D | C |
| 1 | 2 | 3 | 4 |
| D | B | C | A |
4.
முழு ஆக்குத்திறன் என்பது _____.
மரபணு ஒத்த தாவரங்களை உருவாக்கும் திறன்
எந்த தாவர செல்/ பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன்
கலப்பின புரோட்டோபிளாஸ்ட்களை உருவாக்கும் திறன்
நோயற்றத் தாவரங்களில் இருந்து வளமான தாவரங்களை மீளப்பெறுதல்
5.
பின்வருவனவற்றைப் பொருத்துக
| பகுதி -அ | பகுதி -ஆ |
| 1. எக்சோநியுக்ளியேஸ் | a) பாஸ்ஃபேட்டை சேர்த்தல் அல்லது நீக்குதல் |
| 2. எண்டோநியுக்ளியேஸ் | b) DNA துண்டுகளை இணைத்தல் |
| 3. அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் | c) நுனிப்பகுதியில் DNA வை துண்டித்தல் |
| 4. லைகேஸ் | d) DNA வை நடுவில் துண்டித்தல் |
| 1 | 2 | 3 | 4 |
| a | b | c | d |
| 1 | 2 | 3 | 4 |
| c | d | b | a |
| 1 | 2 | 3 | 4 |
| a | c | b | d |
| 1 | 2 | 3 | 4 |
| c | d | a | b |
6.
pBR 322, BR என்பது ______.
பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு
பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம்
பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்
பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ்
7.
பின்வரும் கூற்றை கருதுக:
I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது.
II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொய்லிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக்கடத்தியாகும்
III. தடைக்கட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது.
மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
I, II மற்றும் III
8.
பிளாஸ்மிட் என்பது _____.
வட்டவடிவ புரத மூலக்கூறுகள்
பாக்டீரியாவினால் தேவைப்படுவது
நுண்ணிய பாக்டீரியங்கள்
உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க
9.
சைபிரிட் என்றால் என்ன?
10.
DNA லைகேசின் செயல்பாட்டினை விளக்குக.
11.
செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

13.
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.
14.
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய்?
15.
உயிரி மருந்தாக்கம் பற்றி குறிப்பு வரைக.
16.
தாவர மீளுருவாக்க வழித்தடத்தை விளக்குக.
17.
வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருள்களின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்? அதனை விளக்குக.
18.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
19.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்து கொள்வது என்ன?
20.
புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக.
21.
திசு வளர்ப்பிற்கான அடிப்படை சூழல்கள் யாவை?
22.
உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
23.
பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக.
1.
(a)
நொதித்தல் மற்றும் அதன் செயல்முறை பயன்
2.
(b)
3.
(a)
| 1 | 2 | 3 | 4 |
| C | A | D | B |
4.
(b)
எந்த தாவர செல்/ பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன்
5.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| c | d | a | b |
6.
(c)
பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்
7.
(d)
I, II மற்றும் III
8.
(d)
உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க
9.
வேறுபட்ட செல்களின் உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட்டை இணைத்துப் பெறப்படுவது சைபிரிட் என அழைக்கப்படுகிறது.
10.
(i) DNA லைகேஸ் நொதி இரட்டை இழையின் சர்க்கரை மற்றும் பாஸ்ஃபேட் மூலக்கூறுகளை 5'- PO, மற்றும் ஒரு 3'-OH உடன், ஒரு அடினோசைன் டிரை பாஸ்ஃபேட் சார்ந்த வினையில் சேர்க்கப்படுகின்றது.
(ii) இது T4 ஃபாஜிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
11.
வரையறை:
சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பையோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை - செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
12.
இது திசு வளர்ப்பின் அடிப்படைத் தொழில்நுட்ப முறை
2) ஊடகம் தயாரித்தல்
3) வளர்ப்புச் சூழல்
4) கேலஸ் தூண்டப்படுதல்
5) கருவுருவாக்கம்
6) வன்மையாக்குதல்
13.
நேரடி (அ) தாங்கிக் கடத்தி அற்ற மரபணு மாற்ற முறையில் விரும்பத்தகுந்த அயல் மரபணுவை தாங்கிக் கடத்தி உதவி இல்லாமல் ஓம்புயிரி தாவரத்திற்குள்ளாக செலுத்தப்படுகிறது.
வேதியியல் வழி மரபணு மாற்றம்
பாலி எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெக்ஸ்ட்ரான் சல்ஃபேட் போன்ற சில வேதிப்பொருட்கள் தாவரங்களில் புரோட்டோபிளாஸ்ட்களுக்குள் DNA வை எடுத்துக் கொள்ளத் தூண்டுகின்றன.
14.
1. உருளைக்கிழங்கு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச் கொண்ட கழிவுநீர்.
2. வைக்கோல்
3. வெல்லச்சக்கைப்பாகு
4. விலங்கு உரம்
5. கழிவு நீர்
15.
உயிரி மருந்தாக்கம்
(i) மூலக்கூறு மருந்தாக்கம் எனவும் அழைக்கப்படும். உயிரி மருந்தாக்கம் மனித பயன்பாட்டுக்காக மருந்து சார் பொருட்களை உண்டாக்க மரபணுப் பொறியியல் மூலம் மரபணு மாற்றமடைந்த தாவரங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதாகும்.
(ii) இது மூலக்கூறு வேளாண்மை அல்லது மூலக்கூறு மருந்தாக்கம்” எனவும் அறியப்படுகிறது. இயல்பான மருத்துவ தாவரங்களிலிருந்து இவை மாறுபட்டவை. தாவரங்களை உயிரி வினைக்கலன்களாக (bioreactors) மாற்றிப் பயன்படுத்துதல் நவீன உயிரி தொழில்நுட்பத்தில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
(iii) மரபணு மாற்றமடைந்த தாவரங்களைப் பயன்படுத்தி பல வகையான மருந்துப் பொருட்களை பெறலாம். எடுத்துக்காட்டு : பொன்நிற அரிசி.
16.
பிரிகூறிலிருந்து உடல் கருவுருவாக்கம் அல்லது உறுப்புகளாக்கம் மூலம் தாவரங்கள் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது.
17.
பிரிகூறு அடிப்படையில் தாவரத்தில் வளர்ப்பின் வகைகளாவன
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
4. செல் மிதவை வளர்ப்பு
1. உறுப்பு வளர்ப்பு
2. ஆக்குத்திசு வளர்ப்பு
வளர்ஊடகத்தில் ஆக்குத்திசுவை வளர்த்தல்
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
(செல்சுவரற்ற, ஆனால் செல்சவ்வு (அ) பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்ட செல் அமைப்பாகும்) புரோட்டாபிளாஸ்ட்டை பயன்படுத்தி ஒற்றைச் செல்லிலிருந்து முழுத் தாவரத்தை மீளுருவாக்கம் செய்து இரு புரோட்டோபிளாஸ்டுகளை இணைத்து (உடலக் கலப்பினம்) உடல கலப்பின செல்களை உருவாக்க இயலும்.
4. செல் மிதவை வளர்ப்பு
கேலஸிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு திரவ ஊடகத்தில் செல்மிதவை வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாம் நிலை வளர்சிதை பொருட்கள் உற்பத்தி
செல் மிதவை வளர்ப்பின் மூலமாக இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் சில உத்திகள் (உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் மற்றும் முடக்க வளர்ப்பு முறை) பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
18.
| பண்புகள் | செயல்/பணி | |
| அ | தன்னிச்சையாகப் பெருக்கமடைய திறன் | ஓம்புயிரி செல்களுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது. |
| ஆ. | சிறிய அளவு -குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kb க்கும் குறைவு) | இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைத்தால், மாறுதல் எளிதாகிறது. |
| இ. | பெருக்கமடைதல் தோற்றுவிக்க காணப்பட வேண்டும்.(Ori) | காணப்பட்டால் மட்டுமே ஓம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும். |
| ஈ. | அடையாளக் குறி (உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும். | இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல்லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும். |
| உ. | DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் கலங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தாங்கியிருக்கும் DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகுப்புடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். | இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். |
| ஊ. | ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது. | MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. |
19.
1. pBR 322 என்பது மறுகட்டமைக்கப்பட்ட பிளாஸ்மிட் ஆகும்.
2. இதில் 4361 bp கொண்டுள்ளது.
3. p = பிளாஸ்மிட்
4. BR - பிளாஸ்மிட் உருவாக்கி, அறிஞர்களான பொலிவர் மற்றும் ரொட்ரிக்ஸ் ஆகிய இருவரையும் குறிக்கின்றன.
5. 322 = அவர்களுடைய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பிளாஸ்மிட்டின் எண்ணிக்கையாகும்.
இதில் காணப்படுவன
1. இரு வேறுபட்ட உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணுக்கள் (ampR, tetR)
2. பல தடைக்கட்டு நொதிகளுக்கான அடையாளக் களங்கள் (Hind III, EcoRI, Bam H1, SalI, PvuII, Pst1, ClaI)
3. Ori -மரபணு
4. Rop - பிளாஸ்மிட் பெருக்கமடைவதில் ஈடுபடும் புரதங்களையும் Rop குறியீடு செய்கிறது.
20.
செல் சுவரற்றை செல்லின் பிற பகுதிகள் புரோட்டோபிளாஸ்ட் எனப்படும் (செல் சவ்வு - சைட்டோபிளாசம் + உட்கரு நுண்ணுறுப்புகள்)
1. படிகள்
II. புரோட்டோபிளாஸ்ட்கள் இணைதல்
தகுந்த இணைவுக் காரணியாக (PEG) பாலிஎத்திலீன் கிளைக்கால் மூலம் நிகழ்கிறது.
III. புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு
அ) புரோட்டோபிளாஸ்ட் உயிர்ப்புத்திறன் சோதனை
ஃப்ளூரசின் டைஅசிட்டேட்டைக் கொண்டு உயிர்ப்புத்திறன் சோதிக்கப்படுகிறது.
ஆ) M.S வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பு
நுண் துளி தட்டு (அ) நுண் துளி வரிசை (array) முறையில் வளர்க்கப்படுதல்.
இ) அடைகாத்தல் (Incubation)
25o C வெப்பநிலையில் முதல் 1000 - 2000 லக்ஸ் ஒளிச் செறிவில் வைக்கப்படுகிறது. (24 - 48) மணிநேரம்
ஈ) செல்சுவர் தோன்றல் (24 - 48 மணிநேரத்திற்குப் பின்)
உ) செல்பிரிதல் நடத்தல் (2- 7 நாட்கள்)
IV. உடல் கலப்பினச் செல்களைத் தேர்ந்தெடுத்தல்
1. வேறுபட்ட செல்களின் உட்கரு அற்ற புரோட்டோபிளாஸ்ட் ⟶ இணைத்துப் பெறுவது சைபிரிட்
2. இதற்கு பின்பு உட்கரு இணைதல்
இந்த நிகழ்வு உடலக் கலப்பினமாக்கல் என அழைக்கப்படும்.
21.
1. pH - 5.6 to 6 க்குள் இருக்க வேண்டும்.
2. வெப்பம் - 25°C ± 2°C நிலையான வெப்பம் உகந்தது
3. ஈரப்பதம் மற்றும் ஒளிச்செறிவு
50 - 60% ஒப்பு ஈரப்பதமும், தோராயமாக 1000 லக்ஸும் 16 மணி ஒளிக்காலத்துவம் தேவை
4. காற்றோட்டம்
(i) தானியங்கி குலுக்கி மூலம் கொடுக்கப்படுகிறது.
(ii) இது காற்று வடிகட்டி மூலம் நுண்ணுயிரி நீக்கப்பட்டு ஊடகத்தில் செலுத்தப்படுகிறது.
22.
நுண்ணுயிரிகள் (அ) தாவரங்களைக் கொண்டு சூழல் மாசுறுதலை சுத்திகரிக்கும் அணுகுமுறைக்கு உயிரிவழித் திருத்தம் என்று பெயர்.
அணுகுமுறை:
1. கழிவுநீர் சுத்திகரிப்பு
2. தொழிற்சாலை கழிவு
3. திடக்கழிவுகள் போன்றவை
சுத்திகரிப்பது:
1. மண் மற்றும் நிலத்தடி நீர், கடலில் எண்ணெய் கசிவு ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு
2. பெட்ரோலிய வேதிய எச்சங்கள்
3. வன் உலோகங்கள்
4. பூச்சிக்கொல்லிகள் போன்றவை
சாதகமான பண்புகள்:
1. மலிவானது -அதிக நன்மையுடையது.
2. சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறை (eco friendly)
3. தொடர் பயன்தருவது (sustainable)
4. குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை அதிக திறனுடன் இது நீக்கிவிடும்.
5. (எ.கா) சூடோமோனாஸ் பியுடிடா எனும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவை கொண்டு கடலிலுள்ள (அ) நீரிலுள்ள கச்சா எண்ணெய் கசிவுகளை நீக்குதல்.
23.
| சதர்ன் ஒற்றியெடுப்பு | நார்தெர்ன் ஒற்றியெடுப்பு | வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு | ||
| 1 | பெயர் | கண்டுபிடிப்பாளரின் பெயர் சதர்ன் ஆகும். | நார்தெர்ன் என்பது ஒரு தவறான பெயராகும். | வெஸ்டர்ன் என்பது ஒரு தவறான பெயராகும். |
| 2 | பிரிக்கப்படுவது | DNA | RNA | புரதங்கள் |
| 3 | இயல்பிழத்தல் (Denaturation) |
தேவைப்படுகிறது | தேவையில்லை | தேவைப்படுகிறது |
| 4 | சவ்வு | நைட்ரோசெல்லுலோஸ்/ நைலான் | அமினோபென்சைலாக்சி மெத்தில் | நைட்ரோசெல்லுலோஸ் |
| 5 | கலப்புற்றம் | DNA - DNA | RNA -DNA | புரதம் - எதிர்ப்புரதம் (antibody) |
| 6 | காட்சிபடுத்துதல் (visualizing) |
கதிரியக்க படம் (autoradiogram) |
கதிரியக்க படம் | இருள் அறை |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards