12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
அமீபா வகை டபீட்டம் என்றால் என்ன?
2.
நாஃப்ஸ் உப்புக் கரைசலின் கூறுகள் யாவை?
3.
சில உயிரினங்கள் யூரிதெர்மல் என்றும் மற்ற சில ஸ்டெனோதெர்மல் என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன.
4.
மனித ஆரோக்கியத்திற்குக் காரணமான உடல் நீர்மங்களின் பெயர்களைத் தருக.
5.
மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.
6.
நகல்கள் என்றால் என்ன?
7.
முழுதாவரத்தை ஒரு தாவர செல்லினின்று உருவாக்கலாம் - விளக்குக?
8.
மண் அடுக்கமைவு என்றால் என்ன? மண்ணின் வெவ்வேறு அடுக்குகளைப் பற்றி விவரிக்கவும்.
9.
மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது.
10.
பூச்சி மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
11.
மாலஸ் தாவரத்தில் வகை போத்து _________ உள்ளது?
வேர் போத்துகள்
தண்டு போத்துகள்
இலை போத்துகள்
மொட்டு விடும்
12.
ஒற்றை மடியக் கரு வினை ஆய்வுக்கூட சோதனை முறையில் இந்திய அறிவியலாளர்கள் எதில் இருந்து உருவாக்கினர்
நிக்கோட்டியாணாவின் சூல்
டத்தூராவின் மகரந்தப் பை
டாலியாவின் கேமீட்
கேரட்டின் சைகோட்
13.
கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
கலோட்ராபிஸ்
அக்கேசியா
நெப்பந்தஸ்
யூட்ரிகுலேரியா
14.
பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?
அகார் கடற்பாசியில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை
கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல்கருக்களை உற்பத்தி செய்கிறது
மெர்குரிக் புரோமைடைப் பயன்படுத்தி பிரிகூறுகளை புறப்பரப்பு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது
வளர்ப்பு ஊடகத்தின் pH 5.0 முதல் 6.0
15.
தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை ______.
இயற்கைத் தேர்வு
கலப்புறுத்தம்
சடுதிமாற்றம்
உயிரி – உரங்கள்
16.
20% மற்றும் 60% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமானவை முறையே_______.
N2O மற்றும் CO2
CFCs மற்றும் N2O
CH4 மற்றும் CO2
CH4 மற்றும் CFCs
17.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரைய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பால்
ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
18.
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)-க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2 வில் எதிர்பார்க்கப்படும் RRYY x rryy புறத்தோற்றம் யாது?
உருண்டை விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும்
சுருங்கிய விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்
19.
தாவரங்களை பாதிக்கும் சூழல் காரணிகள் யாவை?
20.
விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)
21.
மஞ்சளின் பயன்களை பட்டியலிடுக.
22.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
23.
சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?
1.
1. மூன்றாவது வகை.
2. செல்சுவர் இழக்கப்படாமல் மகரந்த அறையினுள் செல்கள் ஊடுருவுகின்றன.
3. ஆண் மலட்டுத் தன்மையுடன் தொடர்புடையது.
4. பெரிபிளாஸ்மோடிய வகை டபீட்டத்துடன் குழப்பக் கூடும்.
2.
இது சுக்ரோஸ் கரைசலில் கரைந்துள்ள பல்வேறு உப்புகள் யாவை?
(i) கால்சியம் குளோரைடு: 3.0 கிராம்
(ii) பொட்டாசியம் நைட்ரேட்: 1.0 கிராம்
(iii) மெக்னீசியம் சல்பேட்: 1.0 கிராம்
(iv) டைபேசிக் பொட்டாசியம் பாஸ்பேட்: 1.0 கிராம்
II. சுக்ரோஸ்: 50 கிராம்
அயனிகள் நீக்கப்பட்ட நீர்: 1000 மிலி
3.
யூரிதெர்மல்:
அதிக வெப்பநிலை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்துக் கொள்ளும் உயிரினங்கள்.
எ.கா. ஜோஸ்டீரா (கடல் ஆஞ்சியோஸ்பெர்ம்) மற்றும் ஆர்ட்டிமீசியா ட்ரைடென்டேட்டா.
ஸ்டெனோதெர்மல்:
குறைந்த வெப்பநிலை மாறுபாடுகளை மட்டும் பொறுத்து கொள்ளக்கூடிய உயிரினங்கள்.
எ.கா. மா மற்றும் பனை (நில வாழ் ஆஞ்சியோஸ்பெர்ம்கள்)
4.
(i) வாதம்
(ii) பித்தம்
(iii) கபம்
5.
நேரடி (அ) தாங்கிக் கடத்தி அற்ற மரபணு மாற்ற முறையில் விரும்பத்தகுந்த அயல் மரபணுவை தாங்கிக் கடத்தி உதவி இல்லாமல் ஓம்புயிரி தாவரத்திற்குள்ளாக செலுத்தப்படுகிறது.
வேதியியல் வழி மரபணு மாற்றம்
பாலி எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெக்ஸ்ட்ரான் சல்ஃபேட் போன்ற சில வேதிப்பொருட்கள் தாவரங்களில் புரோட்டோபிளாஸ்ட்களுக்குள் DNA வை எடுத்துக் கொள்ளத் தூண்டுகின்றன.
6.
பாலிலா இனப்பெருக்க முறையில் தோன்றும் உயிரினங்கள், புற அமைப்பிலும், மரபியலும் ஒத்துள்ளன. இவை நகல்கள் எனப்படும்.
7.
1. தகுந்த சூழலில், முழு தாவரத்தை, ஒரு தாவர செல்லினின்று உருவாக்கும் மரபணு சார் திறன் முழு ஆக்குத்திறன் (totipotent) ஆகும்.
2. கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தாவரத்திசுக்களை தனிப்பட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கலாம். இது திசு வளர்ப்பு எனப்படும்.
நுண் பெருக்கம் (Micropropagation)
முழு தாவரம், தனி செல்லிலிருந்து திசு வளர்ப்பு மூலம் பெருகுவது நுண் பெருக்கமாகும்.
நவீன முறைகளின் நிறைகள்
1. தாவரங்கள் குறைந்த காலத்தில் விரைவாகப் பெருகும்.
2. ஒத்த மரபணு சார் தாவரங்கள்.
3. திசு வளர்ப்பு எந்தப் பருவத்திலும் மேற்கொள்ளலாம்.
4. முளைக்கும் திறனற்ற விதை கொண்ட தாவரத்தை திசு வளர்ப்பினால் பெருக்கலாம்.
5. அபாயத்திற்குட்பட்ட தாவரங்களைப் பெருக்கலாம்.
6. நோய்களற்ற தாவரங்களை ஆக்குத்திசு வளர்ப்பால் பெருக்கலாம்.
7. மரபணுசார் ரீதியான மாற்றமடையச் செய்யலாம்.
நவீன முறைகளின் குறைகள்
1. உழைப்பும், திறனுள்ள பணியாளர் தேவை.
2. நோய்க்கிருமிகளற்ற சூழல் தேவைப்படுவதால், செலவாகும்.
3. புதிய நோய், சூழ்நிலை மாற்றத்தால் தாவரம் அழியலாம்.
4. விரும்பத்தகாத மரபணு மாற்றத்தால் கேலஸ் வணிகப் பயன்பாடு இல்லாமல் போகும்.
8.
(i) மண் பொதுவாக வெவ்வேறு அடுக்கு மண்டலங்களாக பல்வேறு ஆழத்தில் பரவியுள்ளது. இவை அவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் பண்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
(ii) தொடர்ச்சியான ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மண்ணின் பகுதியே மண்ணின் நெடுக்க வெட்டு விவரம் எனப்படும்.
| மண்வகை | அளவு | ஒப்பீட்டளவு | |
|---|---|---|---|
| 1 | களிமண் | 0.002 nm க்கு குறைவாக | 50% களிமண் மற்றும் 50% வண்டல் மண் |
| 2 | வண்டல் மண் | 0.002 முதல் 0.02 nm வரை | 90% வண்டல் மற்றும் 10 மணல் |
| 3 | பசலை மண் | 0.002 முதல் 2 nm வரை | 70% மணல் மற்றும் 30% களிமண் (அ) வண்டல் (அ) இரண்டும் |
| 4 | மணல் | 0.2 முதல் 2 nm வரை | 85% மணல் மற்றும் 15% களிமண் |
9.
மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல். அறிமுக ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை -தாவரப் பண்புகளைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத்தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது.

10.
1. பெரிதான மலர்கள், சிறிய மலர்கள் நெருக்கமான மஞ்சரியாகும். (எ.டு. ஆஸ்ட்ரேசி)
2. பிரகாசமான வண்ணம் (எ.டு பாய்ன்செட்டியா)
3. மணம், பூந்தேனும் மலரை நாடி வரும் விருந்தாளிகளுக்கு வெகுமதி.
4. ஈக்கள், வண்டுகளால் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் ஈர்க்க, துர்நாற்றம் பரப்பும்
5. சாறு செல்களைக் கொண்ட மலர்களின் சாற்றை பூச்சிகள் ஓட்டையிட்டு உறிஞ்சும்.
11.
(a)
வேர் போத்துகள்
12.
(b)
டத்தூராவின் மகரந்தப் பை
13.
(a)
கலோட்ராபிஸ்
14.
(b)
கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல்கருக்களை உற்பத்தி செய்கிறது
15.
(b)
கலப்புறுத்தம்
16.
(d)
CH4 மற்றும் CFCs
17.
(d)
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
18.
(d)
உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்
19.
(i) காலநிலைக் காரணிகள்: சூரியஒளி, மழைப்பொழிவு கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் நீராவி
(ii) உயிரி காரணிகள்: பறவைகள், பூச்சிகள், மனிதன், மேயும் விலங்குகள், கொறித்துண்ணிகள், தாவர நோய்க்கிருமிகள், தொற்றுத்தாவரங்கள்
(iii) நிலப்பரப்பியல் காரணிகள்: மண் சரிவமைவு, மண் நீர், மண்ணின் இயற்பியல் அமைப்பு மண் கனிமங்கள், மண் வளி
20.
சூலகக் காம்பு (Funiculus), சதைப்பற்றுடன் வண்ணமயமான விதை ஒட்டுத்தாளாகிறது. (எ.கா) மிரிஸ்டிகா பித்தசிலோபியம்.
21.
மஞ்சளின் பயன்கள்:
(i) குழம்பு பொடியின் கலவைப் பொருள்
(ii) மருந்தாக, இனிப்பு பண்ட, உணவுத் தொழிற்சாலைகளில் நிறமூட்டி.
(iii) விழாக்களில் மஞ்சள் தடவிய புனித அரிசி பயனாகிறது.
(iv) தோல், நூல், பேப்பர், விளையாட்டுப் பொருள்களை நிறமூட்டப் பயன்படும்.
(v) மஞ்சள் நிறத்துக்குக் காரணமான 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் ஆண்டி - ஆக்சிடெண்ட்
(vi) புற்றுநோய், வீக்கம், சர்க்கரை நோய், பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் எதிர்ப்புப் பொருள்.
(vii) இரத்தக்குழாய்களில் தட்டை செல்கள் உறைதலைத் தடுத்து, மாரடப்பைத் தடுக்கும்.
22.
| பண்புகள் | செயல்/பணி | |
| அ | தன்னிச்சையாகப் பெருக்கமடைய திறன் | ஓம்புயிரி செல்களுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது. |
| ஆ. | சிறிய அளவு -குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kb க்கும் குறைவு) | இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைத்தால், மாறுதல் எளிதாகிறது. |
| இ. | பெருக்கமடைதல் தோற்றுவிக்க காணப்பட வேண்டும்.(Ori) | காணப்பட்டால் மட்டுமே ஓம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும். |
| ஈ. | அடையாளக் குறி (உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும். | இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல்லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும். |
| உ. | DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் கலங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தாங்கியிருக்கும் DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகுப்புடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். | இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். |
| ஊ. | ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது. | MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. |
23.
(i) DNA தவிர்த்த சைட்டோபிளாச உறுப்புகளான பசுங்கணிகங்கள், மைட்டோகாண்டிரியங்கள் பாரம்பரியத்தின் தாங்கிக் கடத்திகளாக செயல்படுவது சைட்டோபிளாசம் மூலம் கடத்தப்படுகின்றன.
(ii) பசுங்கணிக, மைட்டோகாண்டிரியங்களில் உள்ள DNA பல மரபணுக்களைக் கொண்டுள்ளன.
(iii) இவ்வகை மரபணுக்கள் பிளாஸ்மா மரபணுக்கள் எனப்படும்.
(iv) உட்கரு சம்பந்தப்படாததால் இது உட்கரு சாரா பாரம்பரியம் எனவும் கருதப்படுகிறது.
(v) எ.கா 4 மணி தாவரத்தின் இலைகளில் காணப்படும் இரு வகை வேறுபட்ட நிறங்கள் அடர்பச்சை, & வெளிர் பச்சை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards