12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
பின்வரும் கூற்றில் எது ஒருங்குயிரி நிலையுடன் தொடர்புடையது அல்ல.
அனபினா என்னும் பாசி சைகஸ் (ஜிம்னோஸ்பெர்ம்)
அத்தி பழங்களில் காணப்படும் குளவிகள்
ஆந்தோசெராஸ் உடலத்தில் காணப்படுகிற சயனோபாக்டீரியம்
டில்லான்ஷியா பைன் மரப்பட்டைகளின் மேலே வளர்தல்.
2.
மெல்ச்சர் மற்றும் குழுவினர் உருவாக்கியது
நிக்கோட்டியானா சிற்றினத்தின் உடல கலப்பியம்
உருளை மற்றும் தக்காளி பேரினங்களுக்கிடையே உருவான 'போமாட்டோ'
நிக்கோட்டியான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ்டோர்ஃபி
பூக்கும் தாவரங்களில் ஆய்வுக்குழாய் (Invitro) கருவுறுதல்
3.
கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
கலோட்ராபிஸ்
அக்கேசியா
நெப்பந்தஸ்
யூட்ரிகுலேரியா
4.
தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை ______.
இயற்கைத் தேர்வு
கலப்புறுத்தம்
சடுதிமாற்றம்
உயிரி – உரங்கள்
5.
6.
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.
50:50
7 :1: 1:7
96.4: 3.6
1 :7 :7 :1
7.
பின்வரும் கூற்றை கருதுக:
I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளுதலை விவரிக்கிறது.
II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டிலிருந்து பொய்லிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக்கடத்தியாகும்
III. தடைக்கட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது.
மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் III
I, II மற்றும் III
8.
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல் _____.
நுண்வித்து
பெருவித்து
உட்கரு
முதல்நிலை கருவூண் திசு
9.
அனைத்து வகையான சூழல் மண்டலத்திற்கும் பொதுவான உணவுச்சங்கிலி எது? ஏன்? (அ) மட்குபொருள் உணவுச்சங்கிலி என்றால் என்ன?
10.
சாயங்கள் பண்டைக்காலத்திலிருந்து உபயோகத்தில் உள்ளன? விளக்குக.
11.
கதிர் அரிவாள் அனீமியாவில் காணப்படுவது இணைக்காரணி [அ] முழுமையற்ற ஓங்கு தன்மையா? விவரி
12.
ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?
13.
‘இருமடிய வித்தாக்கம்’ என்ற சொல்லை வரையறு.
14.
சிறுதானியங்கள் என்றால் என்ன?அவற்றின் சிறப்பு என்ன?
15.
தாவரங்களை வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்துதல் என்றால் என்ன?
16.
பசுமை இல்ல விளைவு (அ) ஆல்பிடோ விளைவு என்றால் என்ன?
17.
மறுவேறுபாடுறுதல் (Redifferentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (Dedifferentiation) வேறுபடுத்துக.
18.
கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. ஏதேனும் ஒரு காரணம் தருக.
19.
இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.
20.
கரும்பின் பயன்கள் கூறு?
21.
உயிரி உரங்களின் வகைப்பாட்டினை பட்டியலிடுக
22.
23.
பல்வேறு வகையான ஒட்டுண்ணிகளைப் பற்றி தொகுத்து எழுதுக.
1.
(d)
டில்லான்ஷியா பைன் மரப்பட்டைகளின் மேலே வளர்தல்.
2.
(b)
உருளை மற்றும் தக்காளி பேரினங்களுக்கிடையே உருவான 'போமாட்டோ'
3.
(a)
கலோட்ராபிஸ்
4.
(b)
கலப்புறுத்தம்
5.
(b)
6.
(b)
7 :1: 1:7
7.
(d)
I, II மற்றும் III
8.
(a)
நுண்வித்து
9.
1. இந்த வகையான உணவுச்சங்கிலி இறந்த கரிமப் பொருட்களிலிருந்து தொடங்குகிறது.
2. இது முக்கியமான ஆற்றல் மூலமாக உள்ளது.
3. கரிமப்பொருட்கள் பொதுவாக தாவர, விலங்கு கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. எனவே இந்த உணவுச் சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
10.
1. எகிப்தின் கல்லறை ஓவியங்களில் சாயங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன.
2. அவுரி, குங்குமப்பூவின் சாயங்கள் மம்மியைச் சுற்றி சிமெண்ட்களில் உள்ளன.
3. இந்தியப் பாறை ஓவியங்களும் உள்ளன.
11.
(i) கதிர் அரிவாள் அனீமியா - ஒரு ஒத்த காரணி ஒடுங்கு பண்பு தன்மையால் ஏற்படும் நோய்.
(ii) Hb - S Hbs - என்ற ஒத்த ஒடுங்கு காரணி தன்மையால் ஹீமோகுளோபின் மூலக்கூறு புரத அமைப்பு சடுதி மாற்ற மாறுபாடு அடைந்து கதிர் அரிவாள் வடிவத்தை அடைகிறது இதனால் ஆக்சிஜனை சரிவர எடுத்துச் செல்ல இயலாததால் அனீமியா (இரத்த சோகை நோய்) ஏற்படுகிறது
12.
| பண்புகள் | செயல்/பணி | |
| அ | தன்னிச்சையாகப் பெருக்கமடைய திறன் | ஓம்புயிரி செல்களுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது. |
| ஆ. | சிறிய அளவு -குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kb க்கும் குறைவு) | இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைத்தால், மாறுதல் எளிதாகிறது. |
| இ. | பெருக்கமடைதல் தோற்றுவிக்க காணப்பட வேண்டும்.(Ori) | காணப்பட்டால் மட்டுமே ஓம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும். |
| ஈ. | அடையாளக் குறி (உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும். | இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல்லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும். |
| உ. | DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப்பட்ட இலக்குக் கலங்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தாங்கியிருக்கும் DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகுப்புடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். | இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். |
| ஊ. | ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது. | MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. |
13.
பெருவித்து தாய் செல் நேரடியாக இருமடிய கருப்பையாக மாறும். வழக்கமாக நடைபெறும் குன்றல் பகுப்பு நடைபெறுவதில்லை. (எ.கா) யூட்டோரியம், எர்வா.
14.
ஆப்பிரிக்கா, ஆசியாவில், பழங்கால மக்களால், முதலில் பயிரிடப்பட்ட சிறிய விதைகள். இவை தரச புரத பசையற்ற (குளூட்டன்), குறைவான சர்க்கரை அளவுக் குறியீட்டைக் கொண்ட தானிய வகைகள்.
15.
அது தாவரச் சிற்றினங்களை மனிதனின் கட்டுக்குள் கொண்டு வருவதாகும்
16.
சிறிய துகள்களைக் கொண்ட ஏரோசால்கள் வளிமண்டலத்தினுள் நுழையும் சூரியக் கதிர்வீச்சினை பிரதிபலிக்கும். இது ஆல்பிடோ விளைவு எனப்படுகிறது.
17.
| மறுவேறுபாடுறுதல் | வேறுபாடிழத்தல் |
|---|---|
| ஏற்கனவே வேறுபாடற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும். | முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறிக் கேலஸ் திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி. |
18.
(i) கடலின் ஆழமான அடுக்குகளில் போதுமான சூரிய வெளிச்சம் காணப்படாததால் அப்பகுதி மிகவும் இருண்டு காணப்படும்.
(ii) பசும்பாசிகளின் ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியமாதலால் இங்கு அவை காணப்படுவதில்லை.
(iii) பசும்பாசிகளின் வளர்ச்சிக்கு உவர்நீர் (சிறிது உப்புநீர்) தேவைப்படுகிறது இதுவும் இங்கே இல்லாத காரணத்தினால் பசும்பாசிகள் காணப்படுவதில்லை.
19.
(i) மாற்று வேளாண்மை முறை
(ii) உயிரியல் இடுபொருள்களைப் பயன்படுத்தி, இயற்கையாகத் தாவரங்கள் பயிரப்படும்.
(iii) இதனால் மனவளமும், சுற்றுச்சூழலும் பராமரிக்கப்படும்.
(iv) மாசு, இழப்பு குறைக்கப்படும்.
20.
போயேசி குடும்பத்தை சேர்ந்த சாக்கரம் அஃபிசினாரம்
தோற்றம், விளையுமிடம்
நியூ கினியா காட்டு ரகமான, சாக்கரம் ஆஃபிசினாரம். இந்தியாவின் சாக்கரம் ஸ்பான்டேனியத்துடன், பிற்கலப்பு செய்து உருவானது. கன்னியாகுமரி, நீலகிரி தவிர எல்லா தமிழ்நாட்டு இடங்களிலும் விளைகிறது.
பயன்கள் :
1. வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி மூலப்பொருள்
2. சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை, மதுபானம், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன்படும்.
3. கரும்புச் சாறு புத்துணர்ச்சி தரும் பானம்.
4. வெல்லக் கழிவு பாகு (Molasses) எத்தில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருள்.
21.
| வ.எண் | குழுக்கள் | எடுத்துக்காட்டு | |
| அ | நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள் | ||
| 1 | தனி உயிரிகள் | அசோடோபாக்டர், க்ளாஸ்ட்ரிடியம், அனபீனா, நாஸ்டாக் | |
| 2 | கூட்டுயிர் வாழ்க்கை முறை | ரைசோபியம், அனாபீனா அசோலா | |
| 3 | இணை கூட்டுயிர் வாழ்க்கை முறை | அசோஸ்பைரில்லம் | |
| ஆ | பாஸ்பரசை கரைக்கும் உயிரி உரங்கள் | ||
| 1 | பாக்டீரியாக்கள் | பேசில்லஸ் சப்டிலிஸ், சூடோமோனாஸ், ஸ்டெய்ரிட்டா | |
| 2 | பூஞ்சைகள் | பெனிசில்லியம், ஆஸ்பர்ஜில்லஸ் | |
| இ | பாஸ்பரஸை திரட்டும் உயிரி உரங்கள் | ||
| 1 | ஆர்பஸ்குலார் மைக்கோரைசா | குலோமஸ், ஸ்குட்டெல்லோஸ்போரா | |
| 2 | புறவேர் பூஞ்சை | அமானிடா | |
| ஈ | நுண் ஊட்டச்சத்துக்களுக்கான உயிரி உரங்கள் | ||
| 1 | சிலிகேட் மற்றும் துத்தநாக கரைப்பான்கள் | பேசில்லஸ் | |
| உ | தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ரைசோபாக்டீரியா | ||
| 1 | சூடோமோனாஸ் | சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் | |
22.
23.
ஒட்டுண்ணி வாழ்க்கை(Parasitism):
இவை இரண்டும் வெவ்வேறான சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களாகும். இதில் சிறிய கூட்டாளியானது (ஒட்டுண்ணி) பெரிய கூட்டாளியிடமிருந்து (ஓம்புயிரி அல்லது தாவரம்) உணவினைப் பெறுகின்றது. ஒட்டுண்ணி சிற்றினமானது பயன்பெறும் போது ஓம்புயிரிகளானது பாதிப்படைகிறது. இவை இரண்டும் வகைகளான வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை முழு ஒட்டுண்ணி மற்றும் பாதி ஒட்டுண்ணி
முழு ஒட்டுண்ணிகள் (Holoparasites):
ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஓம்புயிரி தாவரத்தினை முழுவதுமாக சார்ந்திருந்தால் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. மொத்த ஒட்டுண்ணிகள்.
எடுத்துக்காட்டு:
ஓம்புயிரிகளான அக்கேசியா, டுராண்டா மற்றும் பல்வேறு தாவரங்களின் மீது கஸ்குட்டா என்ற தாவரம் முழுதண்டு ஒட்டுண்ணியாகக் காணப்படுகின்றன.
பாதி ஒட்டுண்ணிகள் (Hemiparasites):
ஓர் உயிரினமானது ஓம்புயிரியிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை மட்டும் பெற்று, தானே ஒளிச்சேர்க்கையின் மூலமாகத் தனக்குத் தேவையான உணவினைத் தயாரித்துக் கொள்பவை பாதி ஒட்டுண்ணி எனப்படும். இது பகுதி ஒட்டுண்ணி (partial parasites) எனவும் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
(i) விஸ்கம் மற்றும் லோரான்தஸ் தண்டுவாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
(ii) சேண்டலம் (சந்தனக்கட்டை) வேர்வாழ் பகுதி ஒட்டுண்ணியாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards