12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஓம் விதியைக் கூறு.
2.
டை எத்தில் ஈதரின் பயன்களை நான்கினை கூறுக?
3.
பீனால்ப்தலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?
4.
எதிர் ஆக்சிஜனேற்றிகள் அல்லது ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகள் பற்றி குறிப்பு வரைக.
5.
உணவு பதனப்பொருட்கள் என்பவை யாவை?
6.
வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக் குறிப்பிடுக.
7.
நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?
8.
நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.
9.
அரிமானத்திலிருந்து ஓர் உலோகத்தை பாதுகாக்கும் முறைகள் யாவை?
10.
ரீமர்-டீமன் வினை பற்றி குறிப்பு எழுதுக.
11.
மின்பகுளிக் கடத்துத்திறனை பாதிக்கும் காரணிகளில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
12.
செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் யாவை? இரு உதாரணம் தருக.
13.
தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .
14.
டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
15.
மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?
16.
மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
17.
அனிசோலின் எலக்ட்ரான் கவர் விகைளை விளக்குக.
18.
அனிசோலின் பின்வரும் வினைகளை எழுதுக.
(i) ஹேலோஜனேற்றம்,
(ii) நைட்ரோ ஏற்றம்,
(iii) ப்ரீடல் கிராப்ட்ஸ் வினை.
19.
திட்ட ஹைட்ரஜன் மின்முனை (SHE ) பற்றி குறிப்பு வரைக.
20.
நைலான் -6,6 தயாரித்தல் மற்றும் பயன்களை எழுதுக.
21.
பீனாலை Zn துகளுடன் வாலை வடித்து பின் புரப்பைல் குளோரைடுடன் சேர்ந்து பிரீடல் – கிராப்ட் ஆல்கைல் ஏற்ற வினைக்கு உட்படுத்தும் போது சேர்மம் A உருவாகிறது. A வை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யும் போது B உருவாகிறது. A மற்றும் B யைக் கண்டறிக.
22.
23.
24.
டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.
1.
மாறாத வெப்பநிலையில், ஒரு மின்கலத்தின் வழியே பாயும் மின்னோட்டமானது (I), அந்த மின்சாரத்தின் மின்னழுத்த வேறுபாட்டிற்கு (V) “ நேர் விகிதத்திலிருக்கும்
\(\mathrm{I} \infty \mathrm{V}\\ I=\frac{V}{R}(\text { I }) V=I R \)
இங்கு R = மின்கலத்தின் மின் தடையாகும்.
2.
(i) அறுவை சிகிச்சையின் மயக்க மருந்தாக பயன்படுகிறது.
(ii) கரிம சேர்மங்களை பிரித்தெடுத்தல் மற்றும் கரிம வினைகளில் சிறந்த கரைப்பானாக பயன்படுகிறது.
(iii) டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களில் ஆவியாகும் தொடக்க திரவமாக டை எத்தில் ஈதர் பயன்படுகிறது.
(iv) இது ஒரு குளிரூட்டியாகவும் பயன்படுகிறது.
3.
4.
1. எதிர் ஆக்சிஜனேற்றிகள் என்பவை உணவுப் பொருட்கள் ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போதலை தடுக்கும் சேர்மங்களாகும்.
2. இவை பொதுவாக எதிர் ஆக்சிஜனேற்றிகள் என்றழைக்கப்படுகின்றன .
3. எண்ணெய்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதால் உருவாக்கப்படும் தனி உறுப்புகளுடன், இச்சேர்மங்கள் வினைபட்டு ஆக்சிஜனேற்றம் அடையும் சங்கிலி வினையானது நிறுத்தப்படுகிறது. சல்பர் டையாக்சைடும் சல்பைடுகளும் உணவு கூட்டுப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை எதிர் நுண்ணுயிரிகளாகவும் எதிர் ஆக்சிஜனேற்றிகளாகவும் ,மற்றும் நொதி தடுப்பான்களாகவும் செயல்புரிகின்றன.
5.
நுண்ணுயிரிகளின் வளர்ச்சி காரணமாக, நொதித்தல், அமிலமாக்கல் அல்லது மற்ற உணவுக் கெட்டுப்போகும் செயல்முறைகளை தடுக்கவோ, ஒடுக்கவோ செய்யும் திறன் படைத்த வேதிப்பொருட்கள்,
பதனப்பொருட்கள் எனப்படும். இவை உணவை கெட்டுப்போகச் செய்யும் நுண்ணுயிர்களை அழிக்கும் பொருட்டு உணவில் சேர்க்கப்படும் பொருட்களாகும்.
எ.கா:
சோடியம் பென்சோவேட், NaCl, அசிட்டிக் அமிலம், சோடியம் மெட்டாபைசல்பைட். பொட்டாசியம் மெட்டாபைசல்பைட் etc.,
6.
ஆஸ்பிரின்
7.
நீர்த்தலின் போது செறிவு குறைகிறது. செறிவு குறையும்போது கடத்துதிறன் (அல்லது நீர்த்தலின் போது) குறைகிறது. ஏனெனில் நீர்த்தலின்போது ஒரு கரைசலில் மின்னோட்டம் எடுத்துச் செல்லும் ஓரலகு பருமனில் உள்ள அயனிகளின் எண்ணிக்கை குறைகிறது.
8.
நேர் மின்முனை: ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் மின்முனை நேர்மின்முனை எனப்படும்.
எதிர் மின்முனை: ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் மின்முனை எதிர் மின்முனை எனப்படும்.
9.
i) உலோக பரப்புகளின் மீது வர்ணம் பூசுதல்
ii) துத்தநாக முலாம் பூசுதல்: ஜிங்க் போன்ற மற்ற உலோகங்களைக் கொண்டு முலாம் பூசுதல். ஜிங்க் உலோகமானது இரும்பை விட வலிமைமிகுந்த ஆக்ஸிஜனேற்றியாகும். அதாவது, இரும்பிற்கு பதிலாக ஜிங்க் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
iii) எதிர்முனைப் பாதுகாப்பு: மின்முலாம் பூசுதலைப் போலல்லாமல், இந்த தொழில்நுட்ப உத்தியில் பாதுகாக்கப்பட வேண்டிய உலோகம் முழுவதும் பாதுகாப்பு உலோகத்தை பூச வேண்டிய அவசியமில்லை. மாறாக Mg அல்லது ஜிங்க் போன்ற இரும்பைவிட எளிதில் அரிமானமடையும் உலோகங்களை தன்னிழப்பு நேர்மின்முனையாக பயன்படுத்த முடியும். இரும்பு எதிர்மின்முனையாக செயலாற்றுகிறது. எனவே இரும்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் Mg அல்லது Zn அரித்தலுக்கு உள்ளாகின்றன.
1. செயலறுத்தல் - உலோகமானது, அடர் HNO3 போன்ற வலிமைமிகு ஆக்ஸிஜனேற்ற காரணிகளுடன் வினைபுரிய அனுமதிக்கப்படுகின்றன. இதனால், உலோக புறப்பரப்பின்மீது ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்படுகிறது.
2. உலோக கலவை உருவாக்கம் - மற்ற அதிக நேர்மின் தன்மை கொண்ட உலோகங்களுடன் சேர்ந்து உலோக கலவைகளை உருவாக்குவதன் மூலம் இரும்பின் ஆக்ஸிஜனேற்றமடையும் திறனை குறைக்க முடியும். எடுத்துக்காட்டு, துருப்பிடிக்கா எஃகு - Fe மற்றும் Cr சேர்ந்த உலோக கலவை,
10.
11.
மின்பகுளிக் கடத்துத்திறனை பாதிக்கும் காரணிகள்:
(i ) அதிக மின்காப்பு மாறிலியை கொண்ட கரைப்பானில் கொண்டுள்ளது.
(ii ) வெப்பநிலை அதிகரிக்கும்போது மின்பகுளிக் கரைசலின் கடத்துத்திறனும் அதிகரிக்கிறது.
(iii ) பாகுநிலைத்தன்மை குறையும்போது கடத்துத்திறன் அதிகரிக்கிறது.
(iv ) ஒரு கரைசலின் மோலார் கடத்துத்திறன் மதிப்பு நீர்த்தலின் போது அதிகரிக்கிறது.
12.
1. சோதனை சாலைகளில் தயாரிக்கப்படும் சில வேதிப்பொருட்கள் கரும்புச் சர்க்கரையை விட பல மடங்கு அதிக இனிப்பு சுவை தருபவை.
2. இவற்றையே செயற்கை இனிப்பு சுவையூட்டிகள் என்கிறோம்.
எ.கா.:
1. சாக்கரின்
2. டல்சின்
13.
எதிர்முனைப் பாதுகாப்பு : மின்முலாம் பூசுதலைப் போலல்லாமல், இந்த தொழில்நுட்ப உத்தியில் பாதுகாக்கப்படவேண்டிய உலோகம் முழுவதும் பாதுகாப்பு உலோகத்தை பூசவேண்டிய அவசியமில்லை. மாறாக, Mg அல்லது ஜிங்க் போன்ற இரும்பைவிட எளிதில் அரிமானமடையும் உலோகங்களை தன்னிழப்பு நேர்மின்முனையாக பயன்படுத்த முடியும். இரும்பு எதிர்மின்முனையாக செயலாற்றுகிறது. எனவே இரும்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் Mg அல்லது Zn அரித்தலுக்கு உள்ளாகின்றன.
14.
(i) ஒற்றைப்படிகள் எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெரெப்தாலிக் அமிலம் (அல்லது டைமெத்தில் டெரெப்தாலேட்) ஆகியன ஒற்றைப்படிகளாக உள்ளன.
(ii) வினையூக்கி ஜிங்க் அசிட்டேட் மற்றும் ஆன்டிமனி ட்ரையாக்சைடு
(iii) வெப்பநிலை : 500 K
(iv) விளைபொருள் : டெரிலீன்
பயன்கள் : பஞ்சு அல்லது கம்பளி இழைகளுடன் கலத்தலிலும் பாதுகாப்பு தலைக்கவசங்களில் கண்ணாடி பொருளாகவும் பயன்படுகிறது.
15.
இவை நரம்பு மண்டலத்தை தாக்கும் மருந்துகளாகும். வேலியம், டையசிபாம் போன்றவை மூளையிலுள்ள டோபமைன் எனும் நரம்புத் தூண்டல் கடத்தியை முடக்குவதன் மூலம் மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகின்றன.
இவை, காமா அமினோ பியூட்ரிக் அமிலம் (GABA) என்ற நரம்புத் தூண்டல் கடத்தியின் செயல்பாட்டை தூண்டுகிறது. இதனால் மூளையில் நரம்பு உந்துதல் பரிமாற்றம் தடுக்கப்பட்டு பதற்றம் குறைகிறது. இவற்றின் பக்க விளைவுகள் பார்பிட்ரேட்டுகளைப் போல் உள்ளன. அதாவது தூக்கம் அயர்வு, நிலையற்ற நடைபோன்றவை.
16.
முதல் விதி:
மின்னாற்பகுத்தலின்போது மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் நிறையானது (m) மின்கலத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவிற்கு (Q) நேர் விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Q
m \(\alpha\) It
m = z It
Z = பொருளின் மின்வேதிச் சமானம்
I = மின்னோட்டம்
t = மின்னோட்டம் பாயும் காலம்
இரண்டாம் விதி :
ஒரே அளவு மின்னோட்டத்தை வெவ்வேறு மின்பகுளி வெவ்வேறு மின்பகுளிக் கரைசல்களின் வழியே செலுத்தும்போது, மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் அளவானது அவற்றின் மின்வேதிச் சமானங்களுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Z
\(\frac{\mathrm{m}_1}{\mathrm{Z}_1}=\frac{\mathrm{m}_2}{\mathrm{Z}_2}\)
m = விடுவிக்கப்படும் உலோகத்தின் நிறை
Z = மின்வேதிச் சமானம்
17.
18.
(i ) ஹேலோஜனேற்றம் வினைவேக மாற்றி இல்லாத சூழ்நிலையிலும் அனிசோல் அசிட்டிக் அமிலத்தில் கலந்த புரோமினுடன் புரோமினேற்றம் அடைகிறது. இதில் பாரா புரோமோ அனிசோல் முக்கிய விளைபொருளாகக் கிடைக்கிறது.
(ii )நைட்ரோ ஏற்றம்:
அனிசோல் நைட்ரோ ஏற்ற கலவை (அடர் H2SO4 / அடர் HNO3 உடன் வினைபட்டு ஆர்த்தோ நைட்ரோ அனிசோல் மற்றும் பாரா நைட்ரோ அனிசோலின் கலவையாக கொடுக்கிறது.
(iii ) ப்ரீடல் கிராப்ட்ஸ் வினை
நீரற்ற AlCl3 முன்னிலையில் அனிசோல் ப்ரீடல் கிராப்ட்ஸ் வினைக்கு உட்படுகிறது.
19.
மின்முனை மின்னழுத்தத்தை அளவிடுதல்:
(i ) ஒட்டு மொத்த ஆக்ஸிஜனேற்ற- ஒடுக்க வினையானது இரண்டு அரை வினைகளின் கூடுதலாக கருதப்படுகிறது. அதாவது, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம். இதேபோல, மின்கலத்தின் emf மதிப்பும், எதிர்மின்முனை மற்றும் நேர்மின்முனைகளில் உள்ள மின்முனை மின்னழுத்தங்களின் கூடுதலாக கருதப்படுகிறது.
\({ E }_{ cell }={ (E }_{ ox })_{ anode }+{ (E }_{ red })_{ cathode }\quad \quad \quad \quad \quad .....(1)\)
(ii ) இங்கு, \({ (E }_{ ox })_{ anode }\) என்பது நேர்மின் முனையின் ஆக்ஸிஜனேற்ற மின்னழுத்தத்தையும், \({ (E }_{ red })_{ cathode }\) என்பது எதிர்மின்முனையின் ஒடுக்க மின்னழுத்தத்தை குறிப்பிடுகிறது.
(iii ) ஒரு தனித்த மின்முனையின் emf மதிப்பை கணக்கிடுதல் சாத்தியமற்றது. ஆனால், வோல்ட் மீட்டரை பயன்படுத்தி இரண்டு மின்முனைகளுக்கிடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டை (E cell ) நம்மால் அளவிட முடியும்.
(iv ) மின்கலத்திலுள்ள ஏதேனும் ஒரு மின்முனையின் emf மதிப்பு நமக்கு தெரிந்தால், அளவிடப்பட்ட மின்கல மின்னழுத்த (சமன்பாடு 1) மதிப்பைக் கொண்டு மற்றொரு மின்முனையின் emf மதிப்பை நம்மால் கணக்கிட முடியும். எனவே, emf மதிப்பு தெரிந்த ஒரு நோக்கீட்டு மின்முனை நமக்குத் தேவை.
(v ) இந்த நோக்கத்திற்காக, திட்ட ஹைட்ரஜன் மின்முனையானது (SHE ) நோக்கீட்டு மின்முனையாக (reference electrode ) பயன்படுத்தப்படுகிறது. இதன் emf மதிப்பு தன்னிச்சையாக பூஜ்ஜியம் வோல்ட் என நிர்ணயிக்கப்பட்டது.
(vi ) இது, 1M HCl கரைசல் மற்றும் 1atm ஹைட்ரஜன் வாயுவுடன் தொடர்பிலுள்ள பிளாட்டின மின்முனையை கொண்டுள்ளது. படத்தில் காட்டியுள்ளவாறு 25 \(^{ o }\)C வெப்பநிலையில் ஹைட்ரஜன் வாயுவானது கரைசலின் வழியே குமிழிகளாக செலுத்தப்படுகிறது.
(Vii ) SHE எதிர்மின்முனையாகவும், நேர்மின்முனையாகவும் செயல்பட முடியும். அரைக் கலவினைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(viii ) SHE ஆனது எதிர்மின்வாயாக பயன்படுத்தப்பட்டால் நிகழும் ஒடுக்கம் வினை
2H+(aq, 1M )+2e- \(\longrightarrow \)H2(g, 1 atm )
\({ E }^{ o }\) = 0 volt
SHE ஆனது நேர்மின்வாயாக பயன்படுத்தப்பட்டால் நிகழும் ஆக்ஸிஜனேற்ற வினை
H2(g, 1 atm )\(\longrightarrow \)2H+(aq, 1M )+2e-
\({ E }^{ o }\)= 0 volt
விளக்கம் :
ஜிங்க் சல்பேட் கரைசலில் மூழ்கவைக்கப்பட்டுள்ள ஜிங்க் மின்முனையின் ஒடுக்க மின்னழுத்தத்தை SHE ஐ பயன்படுத்தி நாம் கணக்கிடுவோம்.
படி:1 SHE ஐ பயன்படுத்தி பின்வரும் கால்வானிக் மின்கலம் கட்டமைக்கப்படுகிறது.
\(Zn(s)\quad |Zn^{ 2+ }(aq,1M)||H^{ + }(aq,1M)|H_{ 2 }(g,1 atm)|\quad Pt(s)\)
படி:2 மேலே குறிப்பிட்ட கால்வானிக் மின்கலத்தின் emf மதிப்பானது வோல்ட் மீட்டரை பயன்படுத்தி அளக்கப்படுகிறது. இந்த நேர்வில் மேற்காண் கால்வானிக் மின்கலத்தின் அளந்தறியப்பட்ட emf மதிப்பு 0.76V.
20.
நைலான் 6-6 சமஅளவு மோல் எண்ணிக்கையில் அடிப்பிக் அமிலம் மற்றும் ஹெக்ஸா மெத்திலீன் டையமீன் கலந்து நைலான் உப்பு பெறப்படுகிறது. இந்த உப்பை வெப்பப்படுத்தும்போது நீர் மூலக்கூறு வெளியேறுவதனால் அமைடு பிணைப்புகள் உருவாகி நைலான்-6,6 கிடைக்கிறது.
இது ஜவுளித்துறையிலும், அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
21.

22.
23.
24.
டேனியல் மின்கலம் ஒரு கால்வானிக் மின்கலமாகும். இது ஒரு வோல்டாயிக் மின்கலம் ஆகும்.
இது இரண்டு அரை மின்கலங்களைக் கொண்டுள்ளது.
அ) ஆக்ஸிஜனேற்ற அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த ஜிங்க் சல்பேட் கரைசலில் ஜிங்க் உலோகப்பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
ஒடுக்க அரை மின்கலன்
முகவையிலுள்ள நீர்த்த காப்பர் சல்பேட் கரைசலில் காப்பர் உலோகப் பட்டை மூழ்க வைக்கப்பட்டுள்ளது.
அரை மின்கலங்களை இணைத்தல்
ஜிங்க் மற்றும் காப்பர் பட்டைகள் வெளிப்புறமாக ஒரு கம்பி மூலம் இணைக்கப்படுகின்றன. இதனூடே ஒரு இணைப்பியும் (k) ஒரு மின்மூலமும் இணைக்கப்பட்டுள்ளன. (எடுத்துக்காட்டு: வோல்ட் மீட்டர்).
எதிர்மின்முனைப் பகுதி மற்றும் நேர்மின்முனைப் பகுதிகளிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள U வடிவ குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த U வடிவ குழாயில், அகார்-அகார் ஜெல்லுடன் KCl, Na2 SO4 போன்ற வினையுறா மின்பகுளிகள் கலந்த பசை வைக்கப்பட்டுள்ளது. இது உப்பு பாலமாக செயல்படுகிறது.
இணைப்பி (k) மூலம் மின்சுற்றை மூடும்போது, எலக்ட்ரான்கள் ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன. இதற்கு காரணம் அந்தந்த மின்முனைகளில் நிகழும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளே ஆகும்.

நேர்மின்வாய் ஆக்ஸிஜனேற்றம்
i) ஜிங்க் பட்டை நேர்மின்முனை என்றழைக்கப்படுகிறது.
ii) ஜிங்க் மின்முனையில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது.
iii) ஜிங்க் ஆனது Zn2+ அயனிகளாகவும், எலக்ட்ரான்களாகவும் ஆக்ஸிஜனேற்றமடைகின்றன.
iv) இந்த Zn2+அயனிகள் கரைசலுக்குள் நுழைகின்றன.
v) எலக்ட்ரான்கள் கம்பியின் வழியே வெளிச்சுற்றிற்கு பாய்கின்றன. பின்னர் அவை காப்பர் பட்டைக்குள் நுழைகின்றன.
vi) ஜிங்க் மின்முனையில் எலக்ட்ரான்கள் விடுவிக்கப்படுவதால், எதிர்குறியை (-ve) பெறுகிறது.
\(\mathrm{Zn}_{(\mathrm{s})} \rightarrow \mathrm{Zn}_{(\mathrm{aq})}^{2+}+2 \mathrm{e}^{-}\) (எலக்ட்ரான் இழப்பு -ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின்வாய் ஒடுக்கம் :
காப்பர் பட்டை - எதிர்மின்வாய்வாக செயல்படுகிறது.
ஆக்ஸிஜன் ஒடுக்கம் நடைபெறுகிறது.
மின்சுற்று வழியே ஜிங்க் பட்டையிலிருந்து காப்பர் பட்டைக்கு பாய்கின்றன.
கரைசலிலுள்ள Cu2+ அயனிகள் எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டு காப்பர் உலோகமாக ஒடுக்கமடைகின்றன.
இவை காப்பர் மின்முனையின் மீதே படிகின்றன.
காப்பர் மின்முனை எலக்ட்ரான்களை உட்கொள்ளப்படுவதால் நேர்க்குறியை (+ve) பெறுகிறது.
\(C u_{(a q)}^{2+}+2 e^{-} \rightarrow C u_{(s)}\)
(எலக்ட்ரான் ஏற்பு - ஒடுக்கம்)
உப்புப்பாலம் :
இரண்டு அரை மின்கலன்களிலுள்ள மின்பகுளிக் கரைசல்கள் உப்புப்பாலத்தை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன.
இரண்டு மின்நடுநிலைத்தன்மையை பகுதிகளிலும் பராமரிக்க, வினையுறா எதிரயனிகள் Cl- (உப்புப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள KCI லிருந்து) உப்புப் பாலத்திலிருந்து நேர்மின்முனைப்பகுதிக்குள் நுழைகின்றன.
எதிர்மின்முனை ஒடுக்கத்தால் எதிர்மின்முனை கரைசல் அதிகளவு SO42- அயனியை கொண்டுள்ளது.
மின் நடுநிலைத் தன்மையை பராமரிக்க K+அயனிகள் உப்புப்பாலத்திலிருந்து எதிர்மின்முனைப்பகுதிக்குள் நகருகின்றன.
மின்சுற்று முழுமையடைதல்:
எதிர்மின்சுமை கொண்ட ஜிங்க் மின்முனையிலிருந்து, நேர்மின்சுமை கொண்ட காப்பர் மின்முனையை நோக்கி வெளிச்சுற்றின் வழியே எலக்ட்ரான்கள் பாய்கின்றன.
அதே நேரத்தில், எதிரயனிகள் நேர்மின்முனைப் பகுதியை நோக்கியும், நேரயனிகள் எதிர்மின்முனைப் பகுதியை நோக்கியும் நகருகின்றன.
இதனால் மின்சுற்று முழுமையடைகிறது.
மின்முனைகள் அழிதல்:
டேனியல் மின்கலமானது செயல்பட, ஜிங்க் மின்முனையில் நிறை தொடர்ந்து குறைகிறது, ஆனால் காப்பர் மின்முனையின் நிறை தொடர்ந்து அதிகரிக்கிறது.
எனவே ஜிங்க் மின்முனையானது முற்றிலுமாக Zn2+ அயனிகளாக மாறும் வரையிலோ அல்லது மொத்த Cu2+ அயனிகளும் உலோக காப்பராக மாறும் வரையிலோ மின்கலன் வேலை செய்யும்.
Zn(s) + CuSO4(aq) \(\rightarrow\) ZnSO4(aq) + Cu(s)
கால்வானிக் மின்கல குறியீடு
\(Z n_{(s)}\left|Z n_{(a q)}\right| C u^{2+}_{(a q)}| C u_{(s)}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards