12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு அயனியின் வீழ்படிவாக்கும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?
அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
அயனியின் உருவளவை மட்டும்
அயனியின் மின்சுமையளவை மட்டும்
அயனியின் மின்சுமையின் குறியை மட்டும்
2.
x என்பது பரப்புகவர் பொருளின் அளவு, m என்பது பரப்புப் பொருளின் அளவு எனக் கொண்டால், பின்வரும் தொடர்புகளில் பரப்பு கவர்தல் செயல்முறையுடன் தொடர்பில்லாதது எது?
மாறாத T யில் \(\frac{x}{m}\) = f(P)
மாறாத P யில் \(\frac{x}{m}\) = f(T)
மாறாத \(\frac{x}{m}\) யில் P = f(T)
\(\frac{x}{m}\) = PT
3.
ஒரு வாயுவானது, ஒரு திண்ம உலோக பரப்பின்மீது பரப்பு கவரப்படுதல் என்பது தன்னிச்சையான மற்றும் வெப்பம் உமிழ் நிகழ்வாகும், ஏனெனில் ____________
ΔH அதிகரிக்கிறது
ΔS அதிகரிக்கிறது
ΔG அதிகரிக்கிறது
ΔS குறைகிறது
4.
பின்வருவனவற்றுள் எது ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தல்
தொடு முறையில் கந்தக அமிலம் தயாரித்தல்
எண்ணெய்யின் ஹைட்ரஜனேற்றம்
நீர்த்த HCl முன்னிலையில் சுக்ரோஸின் நீராற்பகுத்தல்
5.
கொல்லோடியன் என்பது பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால் ஈதர் கலவையில் 4% கரைசலாகும்?
நைட்ரோகிளிசரின்
செல்லுலோஸ் அசிட்டேட்
கிளைக்கால் டைநைட்ரேட்
நைட்ரோசெல்லுலோஸ்
6.
7.
ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு ___________
எதிர்மின்வாய் தொங்கலசைவு
மின்முனைக்கவர்ச்சி
திரிதல்
டிண்டால் விளைவு
8.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பரப்புஇழுவிசை குறைப்பி அல்ல?
CH3 — (CH2)15— \(\underset { { N } } { + } \) — (CH3)2 CH2Br
CH3 —(CH2)15 — NH2
CH3 — (CH2)16 — CH2 OSO2 - Na+
OHC— (CH2)14 —CH2 —COO - Na+
9.
As2S3 கூழ்மத்தை திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி __________
NaCl
Ba(NO3)2
K3[Fe(CN)6]
Al2 (SO4)3
10.
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
பால்மம் - புகை
களி - வெண்ணெய்
நுரைப்பு - பனிமூட்டம்
கலக்கப்பட்ட கிரீம் - கூழ்ம கரைசல்
11.
தலைமுடி கிரீம் என்பது ஒரு _____________
களி
பால்மம்
திண்மக் கூழ்மம்
கூழ்மக் கரைசல்.
12.
கூற்று : Al3+ அயனியின் வீழ்படிவாக்கும் திறன் Na+ அயனியை விட அதிகம்.
காரணம் : சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ள போது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
13.
மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?
வாயுவில் திண்மம்
வாயுவில் வாயு
வாயுவில் நீர்மம்
நீர்மத்தில் வாயு
14.
பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது?
\(\triangle G\) மற்றும் \(\triangle H\) எதிர்குறி மதிப்பையும் ΔS நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
ΔG மற்றும் ΔS எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔH நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
ΔG எதிர்குறி மதிப்பையும் ஆனால் ΔH மற்றும் ΔS நேர்குறி மதிப்பையும் பெற்றுள்ளன.
ΔG, ΔH மற்றும் ΔS அனைத்தும் எதிர்குறி மதிப்பை பெற்றுள்ளன.
15.
இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?
மீள்தன்மை கொண்டது
வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு
புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது
16.
CuCl2 முன்னிலையில் காற்றைக் கொண்டு HCl ஐ ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தல்.
17.
Cu முன்னிலையில் H2 மற்றும் O2 ஆகியன வினை புரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
18.
MnO2 முன்னிலையில் KClO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
19.
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வினை வேக மாற்றியின் செயல்பாடு கீழ்க்காணுமாறு விளக்கப்படுகிறது?
20.
வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.
21.
ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றியாக திகழ பரப்பு நீக்கம் அவசியம். ஏன்?
22.
நனைக்கப்பட்ட படிகாரத்தை தேய்க்கும்போது இரத்தக்கசிவு நிறுத்தப்படுவது ஏன்?
23.
படிகாரங்கள் சேர்ப்பதால் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஏன்?
24.
கரைப்பான் விரும்பும் கூழ்மங்கள், கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களைவிட அதிக நிலைப்புத் தன்மை வாய்ந்தவை . ஏன்?
25.
கூழ்மநிலையிலுள்ள Fe(OH)3 மற்றும் As2S3 ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?
26.
27.
இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப்பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம். ஏன்?
28.
NH3 அல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?
29.
ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?
30.
மின்னாற் சவ்வூடு பரவல் பற்றி குறிப்பு வரைக.
31.
கூற்றை பற்றி கருத்துரைக்க: கூழ்மம் என்பது ஒரு சேர்மமல்ல, ஆனால் அது சேர்மத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையாகும்.
32.
பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.
33.
வினைவேக மாற்றியின் செயல்பாடு மற்றும் தெரிவுத்திறன் பற்றி நீவீர் அறிவது என்ன?
34.
ஒரு திண்மத்தின் மீது ஒரு வாயு மூலக்கூறுகள் பரப்பு கவரப்படுதலை பாதிக்கும் காரணிகள் யாவை ?
35.
பின்வரும் வினையில் Cl- ஐ CN– கொண்டு பதிலீடு செய்தல்.

36.
வினைவேக மாற்றம் பற்றிய பரப்பு கவர்தல் கொள்கையை விவரி. [அல்லது ]
பலபடித்தான வினைவேகமாற்று வினையில் பரப்பு கவர்தலின் பங்கு என்ன?
37.
வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
38.
ஜியோலைட்டுகள் வினைவேகமாற்றத்தின் சில சிறப்புப் பண்புகளை விவரி.
39.
நொதிகள் என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினை வழிமுறை பற்றி குறிப்பு வரைக.
1.
(a)
அயனியின் மின்சுமையளவு மற்றும் மின்சுமையின் குறி.
2.
(d)
\(\frac{x}{m}\) = PT
3.
(d)
ΔS குறைகிறது
4.
(d)
நீர்த்த HCl முன்னிலையில் சுக்ரோஸின் நீராற்பகுத்தல்
5.
பைராக்ஸிலின் (நைட்ரோ செல்லுலோஸ்)
6.
(b)
7.
டிண்டால் விளைவு ஒளிச்சிதறல்
8.
(b)
CH3 —(CH2)15 — NH2
9.
Al2 (SO4)3 என்பது ஒரு எதிர்குறியைப் பெற்றுள்ள கூழ்மம். அது அதிக இணைத்திறனுள்ள எளிதாக கட்டியாக்கப்படும். எ.கா A13+
10.
(b)
களி - வெண்ணெய்
11.
பால்மம் (பிரிகை நிலை மற்றும் ஊடகம் திரவம்)
12.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
13.
(c)
வாயுவில் நீர்மம்
14.
\(\Delta\)G, \(\Delta\)H மற்றும் \(\Delta\)S அனைத்தும் எதிர்க்குறி மதிப்பை பெற்றுள்ளன.
பரப்புகவர்தல் ஒழுங்கற்ற தன்மையை அதிகரிக்கின்றது. பரப்புகவர்தல் நிகழ \(\Delta\)S < 0 என்றிருக்கவேண்டும்.
\(\Delta\)G = \(\Delta\)H - T\(\Delta\)S
எதிர்க்குறியினை பெற்றிருக்க வேண்டும் \(\Delta\)S என நாம் அறிவோம்.
T\(\Delta\)S எதிர்குறி எனில் \(\Delta\)H
நேர்க்குறியைப் பெற்றிருக்கும் \(\Delta\)H எதிர்க்குறியினைப் பெற -ve எதிர்க்குறியையும் \(\Delta\)H > T\(\Delta\)S எனவும் இருக்க வேண்டும்.
15.
வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது
இயற்புறப்பரப்பு கவர்தல் ஒரு வெப்ப உமிழ்வினை. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது இயற்புறப்பரப்பு கவர்தல் அதிகரிக்கிறது.
16.
2CuCl2 → Cl2 + Cu2Cl2
2Cu2Cl2 + O2 → 2Cu2OCL2
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
2Cu2OCl2 + 4 HCl → 2H2O + 4CuCl2
17.
2Cu + \(\frac{1}{2}\) O2 → Cu2O
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
Cu2O + H2 → H2O + 2Cu
18.
2KClO3 → 2KCl+3O2 → வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்
2KClO3 + 6MnO2 → 6MnO3 + 2KCl
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
6MnO3 → 6MnO2 + 3O2
19.
CH3 Cl+AlCl3 → [CH3]+[AlCl4]-
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
C6H6+[CH3+][AlCl4]- → C6H5CH3+AlCl3+HCl
20.
வினைவேக மாற்ற வினைகளில் சில சேர்மங்களை சேர்க்கும் போது, அவை வினைவேகமாற்றிகளின் செயல்திறனை குறைக்கவோ அல்லது முழுவதுமாக இழக்கவோ செய்கின்றன. அத்தகைய சேர்மங்கள் வினைவேகமாற்ற நச்சுகள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்,
\(2 \mathrm{SO}_2+\mathrm{O}_2 \rightarrow 2 \mathrm{SO}_3\) என்ற வினையில் செயல்படும் Pt வினைவேகமாற்றிக்கு As2 O3 நச்சாக செயல்படுகிறது.
அதாவது, As2 O3 ஆனது Pt வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச்செய்கிறது. வினைவேகமாற்றியிலுள்ள கிளர்வு மையங்களை As2O3 அடைத்துக்கொள்கிறது. இதனால் அதன் செயல்பாடு இழக்கப்படுகிறது.
21.
ஒரு வினைவேகமாற்றியின் புறப்பரப்பிலிருந்து விளைபொருள் அல்லது வினைபடாத வினைபடு பொருள் நீக்கப்படவேண்டும். இதனை பரப்பு நீக்கம் ஆதரிக்கிறது.
இது வினைவேக மாற்றியை அடுத்த வினைக்கு தயார்படுத்துகிறது. அதாவது புதிய வினைபடு பொருட்கள் பரப்புகவர்தலில் ஈடுபட உதவுகிறது.
22.
இரத்தம் ஒரு கூழ்மக்கரைசல் (sol) ஆகும். நனைக்கப்பட்ட படிகாரத்தை, காயமுற்ற இடத்தில் தேய்க்கும் போது, இரத்தத்தின் திரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த திரிதலானது (வீழ்படிவாதல்) இரத்தக் கசிவை நிறுத்துகிறது. நனைக்கப்பட்ட படிகாரம் ஒரு மின்பகுளியாகும்.
23.
Al3+ உள்ள படிகாரங்களை [K2SO4.Al2SO3.24H2O] சேர்ப்பதால், நீரில் தங்கியிருக்கும் மாசுக்கள் வீழ்படிவதால், நீர் சுத்திகரிக்கப்படுதல் செயலாக்கம் பெறுகிறது. படிகாரம் எதிர் மின்சுமையை பெற்றிருப்பதால் நீரில் எளிதில் விரவுகிறது.
துகளின் உருவளவு பெரிதாவதாலும் விலக்குதலுக்கு காரணமான மின்னூட்டங்கள் இல்லாததாலும் படிகாரத் துகள்கள் அடியில் தங்குகின்றன அல்லது நீரில் மேலெழுந்து மிதக்கின்றன. துகள்கள் நடுநிலையாக்கப்பட்டபின் அவை ஒருங்கிணைகின்றன, இதற்கு காரணமான வாண்டர்வால்ஸ் விசைகளின் அங்கமான லண்டன்பிரிகை விசைகளாகும். குவாண்டத்தால் மூலக்கூறுகளில் தூண்டப்படும் உடனடி முனைவுறுதல் காரணமாக, வலிமை குறை மூலக்கூறுவிசைகள் தோன்றுகின்றன, இவை முனைவற்ற மூலக்கூறுகளையும் ஒன்றை ஒன்று ஈர்க்கச் செய்கின்றன. இதற்கு வினை இடைச்செயல் புரியும் மூலக்கூறுகளிடையே உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் காரணமாகும். இறுதியில் துகள்கள் படிகின்றன.
24.
கரைப்பான் விரும்பும் கூழ்மங்களில், பிரிகை நிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே வலுவான கவர்ச்சி விசை நிலவுகிறது.
எடுத்துக்காட்டுகள்: புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றின் கூழ்ம கரைசல்கள். இவை அதிக நிலைப்புத் தன்மை கொண்டவை, எளிதில் வீழ்படிவாவதில்லை. அவை வீழ்படிவான பின்பும் கூட, பிரிகை ஊடகத்தை சேர்த்து மீளவும் கூழ்மநிலைக்கு கொண்டுவர இயலும்.
கரைப்பான் வெறுக்கும் கூழ்மங்களில், பிரிகைநிலைமைக்கும் பிரிகை ஊடகத்திற்கும் இடையே கவர்ச்சி விசைகள் ஏதுமில்லை. இவை குறைந்த நிலைப்புத் தன்மை கொண்டவைகளாகும். மேலும் எளிதில் வீழ்படிவாகின்றன ஆனால், பிரிகை ஊடகத்தை சேர்ப்பதன் மூலம் மீண்டும் இவற்றை உருவாக்க இயலாது அவை, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தாமாகவே திரிந்துவிடுகின்றன. இவை மீளாக் கூழ்மங்கள் என்றழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: கோல்டு, சில்வர், பிளாட்டினம் மற்றும் காப்பர் கூழ்மங்கள்.
25.
அயனிகளின் மின்சுமைகளின் நடுநிலையாக்கல் நடைபெறும். எனவே வீழ்படிவாதல் ஏற்படும் அதாவது Fe3+ மற்றும் O2-அயனிகள் நடுநிலையாக்கப்படுகின்றன. எனவே புதிய சேர்மங்கள் உருவாகும்.
Fe(OH)3 ஒரு நேர்மின்சுமையுடைய கூழ்மம்
As2O3 ஒரு எதிர்மின் சுமையுடைய கூழ்மம்
26.
27.
வேதிப்புறப்பரப்பு கவர்தலில், வாயுமூலக்கூறுகள் புறப்பரப்புடன் வேதிப்பிணைப்பு உருவாதலால் மூலக்கூறுகள் புறப்பரப்பில் ஈர்ப்பு விசைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. வலிமையான பிணைப்பு உருவாதலால், சுமார் 400 kJ/mol பரப்புக் கவர்தல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. இயற்பரப்பு கவர்தலில் உள்ள வாண்டர்வால்ஸ் விசைகளைக் காட்டிலும் வேதிப்புறப்பரப்புக்கவர்தலில் உள்ள வேதிபிணைப்புகள் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும்.
28.
NH3 ன் நிலைமாறு வெப்பநிலை 406 K மற்றும் CO2 வின் நிலைமாறு வெப்பநிலை 304 K ஆகும். எனவே NH3 ஆனது CO2 வை விட அதிக நிலைமாறு வெப்பநிலையையும், அதிக வான்டர்வால்ஸ் ஈர்ப்பு விசையையும் பெற்றுள்ளது. எனவே CO2 வை விட NH3 அதிக அளவில் பரப்பு கவரப்படுகிறது.
29.
| வ.எண் | ஒரு படித்தான வினைவேக மாற்றம் | பலபடித்தான வினைவேக மாற்றம் |
| 1. | ஒரு படித்தான வினைவேக மாற்ற வினையில் வினைபடு பொருட்கள், வினை விளைபொருட்கள் மற்றும் வினைவேக மாற்றிகள் ஆகியன ஒரே நிலைமையில் உள்ளன. எ.கா: \(2 \mathrm{SO}_2+\mathrm{O}_2+[\mathrm{NO}] \rightarrow 2 \mathrm{SO}_3+[\mathrm{NO}]\) [NO] - வினைவேகமாற்றி; வாயுநிலை SO2, O2, & SO3 வாயுக்கள் |
ஒரு பலபடித்தான வினைவேக மாற்ற வினையில் வினைவேக மாற்றியானது வேறு நிலைமையில் இருக்கும். அதாவது, வினைபடு பொருட்கள் மற்றும் விளைபொருட்களைப் போல் ஒரே நிலைமையில் இருக்காது. எ.கா: \(\mathrm{N}_2+3 \mathrm{H}_2 \xrightarrow{\mathrm{Fe}} 2 \mathrm{NH}_3\) Fe - வினைவேகமாற்றி; திண்மம் N2,H2 & NH3, வாயுக்கள் |
| 2. | இது ஒரு தொடர்பு வினைவேக மாற்றம் அல்ல | இது ஒரு தொடர்பு வினைவேக மாற்றமாகும்; உலோக வினைவேக மாற்றியானது நன்கு தூள் செய்யப்பட்ட நிலையிலோ கம்பிவலைபோன்றோ இருக்கும். |
| 3. | இது இடைநிலை சேர்மம் உருவாதல் கொள்கையால் விளக்கப்படுகிறது. | இது பரப்புக்கவர்தல் கொள்கையால் விளக்கப்படுகிறது. |
30.
ஒரு கூழ்மக்கரைசல் நடுநிலைத்தன்மை கொண்டது. எனவே கரைசலிலுள்ள பிரிகைதுகள்களின் மின்சுமைக்கு சமமான ஆனால் எதிரான மின்சுமையை ஊடகம் பெற்றிருக்கும். கூழ்மத் துகள்களின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளபோது, மின்புலத்தில், கூழ்மத்துகள்கள் நகரும் திசைக்கு எதிர்திசையில் ஊடகம் நகருகிறது. மின்புலத்தில் பிரிகை ஊடகம் நகரும் இச்செயல்பாடானது மின்னாற் சவ்வூடுபரவல் என்றழைக்கப்படுகிறது.

31.
கூழ்மம் அதன் உருவளவை பொருத்தது அல்ல. துகளின் அளவு 1nm முதல் 1000nm வரை உள்ளபோது ஒரு கூழ்மம் உருவாகிறது. உதாரணமாக சோப்பானது நீரில் கரைந்து ஒரு கூழ்மத்தை உருவாக்குகிறது; ஆனால் ஆல்கஹாலில் கரைந்து அது உண்மை கரைசலாகிறது. இவ்வாறு நிலை மாறுகிறது. கூழ்மநிலையானது உண்மை கரைசலிற்கும், தொங்கலிற்கும் இடையேயான ஒரு நிலையாகும்.
மேலும் சில போலி படிகங்கள் (crystalloids) சில சூழல்களில் கூழ்மங்களாகும். நீர் ஊடகத்தில் NaCl ஆனது போலிபடிகமாகும்; ஆனால் பென்சீனுடன் அது ஒரு கூழ்மமாக செயல்படுகிறது.
32.
1. பால்மங்கள் உணவுத் தொழிலில் பயன்படுகின்றன. உணவுப்பொருட்களான பால், கிரீம், வெண்ணெய் போன்றவை பால்மங்களாகும்.
2. மருந்துகள் சம்பந்தமான தொழிலில் பால்மங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அநேக மருந்துகள் பால்மங்களாகும். எ.கா: மெக்னீஷியா பால்மமானது வயிற்று உபாதைகளை சரிசெய்ய பயன்படுகிறது. அநேக லோஷன்களும், களிம்புகளும் பால்மங்களாகும்.
3. பால்ம பெயிண்டுகள், மை போன்றவை பால்மங்களாகும்.
4. அயனித் தன்மையற்ற பால்மங்கள் அவற்றின் குறைந்த நச்சுத்தன்மை காரணமாக பெயர் பெற்றவை.
5. நேர்மின் பால்மங்கள் எதிர் நுண்ணுயிர் பண்புகளை பெற்றவை.
6. விவசாயத் தொழிலில், பூச்சுக் கொல்லிகள், பூஞ்சை கொல்லிகள் மற்றும் உயிர்கொல்லிகள் ஆகியவற்றிற்கு தாங்கிகளாக பயன்படுகின்றன.
7. முடி மற்றும் தோல் கண்டிஷனர்களுக்கும் தாங்கிகளாக பயன்படுகிறது.
8. இரத்தம், தாவரம் மற்றும் விலங்கு செல்களிலுள்ள புரோட்டாபிளாசம் மற்றும் குடல்களிலுள்ள கொழுப்பு ஆகியவை பால்மங்களாகும்.
33.
அ. செயல்பாடு:
கிளர்வு மையங்கள்:
வினைவேக மாற்றியின் புறப்பரப்பானது வழுவழுப்பாக இருப்பதில்லை. அதில், பல்வேறு தடங்கள், விரிசல்கள் மற்றும் முனைகள் காணப்படுகின்றன. புறப்பரப்பிலுள்ள இத்தகைய பகுதிகளில் காணப்படும் அணுக்கள் நிறைவுறா பிணைப்புகளை கொண்டுள்ளதால் அதிகளவு எச்ச கவர்ச்சி விசைகளை கொண்டுள்ளன. இத்தகைய மையங்கள் கிளர்வு மையங்கள் என்றழைக்கப்படுகின்றன. எனவே, புறப்பரப்பானது அதிக பரப்பு கட்டிலா ஆற்றலை பெற்றுள்ளது.
இந்த கிளர்வு மையங்கள் வினைபடு மூலக்கூறுகளை பரப்பு கவர்ந்து, அவற்றை கிளர்வுறச் செய்து வினையின் வேகத்தை அதிகரிக்கின்றன.
உலோகங்கள் மற்றும் உலோக ஆக்சைடு துகள்களின் உருவ அளவை குறைக்கும்போது அவற்றின் பரப்பளவு அதிகரிக்கிறது. இதனால், அவற்றின் வினைவேகமாற்றியாக செயல்படும் திறனும், வினையின் வேகமும் அதிகரிக்கின்றன.
வினைவேகமாற்றியின் கிளர்வு மையங்களை நச்சு பொருள் ஆக்கிரமிக்கும்போது வினைவேகமாற்ற நச்சுத் தன்மை உருவாகிறது.
உயர்த்திகள் புறப்பரப்பிலுள்ள கிளர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.
ஆ) தெரிவுத்திறன்:
ஒரு வினை வேக மாற்றியானது ஒரு குறிப்பிட்ட வகை வினைக்கு மட்டும் வினையூக்கியாக செயலாற்றுகின்றன. எனவே அவை இயற்கையில் தேர்ந்து செயலாற்றக்கூடியவை எனலாம். நொதி வினைவேகமாற்றம் மிக தேர்ந்து செயலாற்றக் கூடியவை ஆகும்.
யூரியேஸ்
\(\mathrm{NH}_2 \mathrm{CONH}_2+\mathrm{H}_2 \mathrm{O} \longrightarrow 2 \mathrm{NH}_3+\mathrm{H}_2 \mathrm{O}\)
யூரியாவின் இந்த வினையின் வினைவேக மாற்றியான் யூரியேஸ் ஆனது மெத்தில் யூரியா வினைக்கு வினைவேக மாற்றியாக செயல்படாது.
யூரியேஸ்
\(\mathrm{NH}_2 \mathrm{CONHCH}_3+\mathrm{H}_2 \mathrm{O} \longrightarrow\) வினை இல்லை
இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையானது ஒரு வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மையை விளக்குகிறது.
34.
பரப்பு கவர்தலை பாதிக்கும் பல்வேறு காரணிகள்:
i) பரப்புப் பொருளின் தன்மை
ii) பரப்புகவர் பொருளின் தன்மை
iii) அழுத்தம்
iv) குறிப்பிட்ட வெப்பநிலையில் செறிவு
i) பரப்புப் பொருளின் தன்மை:
பரப்பு கவர்தல் என்பது ஒரு புறப்பரப்பு நிகழ்வாக இருப்பதால், அது பரப்புப் பொருளின் பரப்பளவை சார்ந்து அமைகிறது. அதாவது புறப்பரப்பு பரப்பளவு அதிகம் எனில்,பரப்பு கவரப்பட்ட பொருளின் அளவும் அதிகமாக இருக்கும்.
ii) பரப்புகவர் பொருளின் தன்மை:
பரப்புகவர் பொருளின் தன்மையும் பரப்பு கவர்தலை பாதிக்கிறது. SO2, NH3,HCI மற்றும் CO2 போன்ற வாயுக்கள் அதிக வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையை கொண்டிருப்பதால் எளிதில் திரவமாகின்றன. அதே சமயம் நிரந்தர வாயுக்களான H2, N2 மற்றும் O2 போன்றவை எளிதில் திரவமாவதில்லை. இந்த நிரந்தர வாயுக்கள் குறைந்த நிலைமாறு வெப்பநிலையை கொண்டுள்ளன. மேலும் மெதுவாக பரப்புகவரப்படுகின்றன. ஆனால் உயர் நிலைமாறு வெப்பநிலையை கொண்டுள்ள வாயுக்கள் எளிதாக பரப்புகவரப்படுகின்றன.
iii) வெப்பநிலையின் விளைவு:
வெப்பநிலையை அதிகரிக்கும்போது வேதிப்புறப்பரப்பு கவர்தலானது முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது. ஆனால் இயற்பரப்புக் கவர்தல் வெப்பநிலையை அதிகரிக்கும் போது குறைகிறது.
iv) அழுத்தத்தின் விளைவு:
அழுத்தம் அதிகரிக்கும்போது வேதிப் புறப்பரப்பு கவர்தலானது வேகமாக நிகழ்கிறது. ஆனால், பரப்பு கவர்தலின் அளவை மாற்றுவதில்லை. இயற்பரப்புக் கவர்தலில் அழுத்தம் அதிகரிக்கும்போது பரப்பு கவர்தலின் அளவும் அதிகரிக்கிறது.
35.
R-Cl = 1- குளோரா ஆக்டேன்
R-CN =1- சயனோஆக்டேன்
கரிமநிலைமையிலுள்ள 1- குளோரா ஆக்டேன் உடன் நீர்த்த நிலைமையிலுள்ள சோடியம் சயனைடு கலக்கப்பட்ட இருநிலைமை கலவையை பல நாட்களுக்கு நேரடியாக வெப்பப்படுத்தினாலும் 1-சயனோ ஆக்டேன் கிடைப்பதில்லை ஆனால், சிறிதளவு டெட்ரா ஆல்கைல் அம்மோனியம் குளோரைடு போன்ற நான்கிணைய உப்பை சேர்க்கும்போது, அதிவேகமாக, 100% விளைச்சலுடன் ஓரிரு மணித்துளிகளில் 1-சயனோ ஆக்டேன் உருவாகிறது. இந்த வினையில் நீர்வெறுக்கும் மற்றும் நீர்விரும்பும் முனைகளைக் கொண்டுள்ள டெட்ரா ஆல்கைல் அம்மோனியம் நேரயனியானது,அதன் நீர்விரும்பும் முனையை பயன்படுத்தி நீர்த்த நிலைமையிலிருக்கும் CN- அயனிகளை கரிமநிலைமைக்கு நகர்த்தி 1- குளோரா ஆக்டேனுடன் வினை புரிய தூண்டுகிறது.

எனவே, நிலைமைமாற்ற வினைவேகமாற்றியானது, ஒரு வினைபடுபொருளை ஒரு நிலைமையிலிருந்து, மற்றொரு நிலைமைக்கு கடத்துவதன் மூலமாக, வினையின் வேகத்தை அதிகரிக்கின்றன.
36.
லாங்மியூர் என்பவர் பலபடித்தான வினைவேகமாற்ற வினையில், வினைவேக மாற்றியின் செயல்பாட்டை, பரப்பு கவர்தலை அடிப்படையாக கொண்டு விளக்கினார். வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்படுவதால், இதை தொடர்பு வினைவேக மாற்றம் எனவும் அழைக்கலாம். இக்கொள்கையின்படி, வினைபடு மூலக்கூறுகள், வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்பட்டு கிளர்வு அணைவை உருவாக்குகின்றன. இவை உடனே சிதைந்து விளைபொருட்களை தருகின்றன.

பலபடித்தான வினைவேகமாற்ற வினையில் நிகழும் பல்வேறு படிநிலைகள்:
1. வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பை நோக்கி நகர்கின்றன.
2. வினைபடு மூலக்கூறுகள் வினைவேக மாற்றியின் புறப்பரப்பில் பரப்பு கவரப்படுகின்றன.
3. பரப்புகவரப்பட்ட வினைபடு மூலக்கூறுகள் கிளர்வுற்ற “கிளர்வு அணைவு" உருவாகிறது. மேலும், இந்த கிளர்வு அணைவு சிதைவடைந்து, விளைபொருட்களை உருவாக்குகின்றன.
4. விளைபொருள் மூலக்கூறுகள் பரப்பு நீக்கம் அடைகின்றன.
5. விளைபொருளானது வினைவேகமாற்றியின் புறப்பரப்பை விட்டு விலகிச் செல்கின்றன.
37.
வினைவேக மாற்றிகள், குறைந்த கிளர்வு ஆற்றலைக் கொண்ட புதிய பாதையை உருவாக்குகின்றன.
ஒரு படித்தான வினைவேக மாற்ற வினைகளில் ஒரு வினைவேகமாற்றியானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருட்களுடன் இணைந்து ஒரு இடைநிலை சேர்மத்தை உருவாக்குகிறது.
இந்த இடைநிலைச் சேர்மமானது, மற்றொரு வினைபடுபொருளுடன் வினைப்பட்டோ அல்லது தாமாக சிதைந்தோ வினைபொருட்களை உருவாக்குகின்றன.
மேலும் வினைவேகமாற்றியானது மீள் உருவாக்கம் பெறுகிறது.
\(\begin{aligned} \mathrm{A}+\mathrm{B} \xrightarrow{\mathrm{C}} \mathrm{AB} \end{aligned}\) ....(1)
A + C \(\rightarrow\) AC (இடைநிலை சேர்மம்) ....(2)
C என்பது வினைவேக மாற்றி
AC + B \(\rightarrow\) AB + C ....(3)
(2) மற்றும் (3) ஆம் வினைகளுக்கான கிளர்வுறு ஆற்றல்கள், வினை (1) ஐவிட குறைவாக உள்ளன. எனவே, இடைநிலைச் சேர்மம் உருவாதல் மற்றும் சிதைதல் மூலம் வினையின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு 1:
ஃபிரீடல் கிராஃப்ட் வினையின் வினைவழிமுறை.
நீரற்ற AlCl3
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\mathrm{CH}_3 \mathrm{Cl} \xrightarrow{} \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{HCl}\)
வினைவேக மாற்றியின் செயல்பாடு
\(\mathrm{CH}_3 \mathrm{Cl}+\mathrm{AlCl}_3 \rightarrow\left[\mathrm{CH}_3\right]^{+}\left[\mathrm{AlCl}_4\right]^{-}\)
(இடைநிலை)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{C}_6 \mathrm{H}_6+\left[\mathrm{CH}_3^{+}\right]\left[\mathrm{AlCl}_4\right]^{-} \rightarrow \mathrm{C}_6 \mathrm{H}_5 \mathrm{CH}_3+\mathrm{AlCl}_3+\mathrm{HCl}\)
எடுத்துக்காட்டு 2:
\(2 \mathrm{KClO}_3 \xrightarrow{\mathrm{MnO}_2} 2 \mathrm{KCl}+3 \mathrm{O}_2\)
MnO2 முன்னிலையில் KCIO3 யின் வெப்பச்சிதைவு வினை பின்வருமாறு நிகழ்கிறது.
2KClO3 → 2KCl + 3O2, வினையில் நிகழும் படிகளை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{KClO}_3+6 \mathrm{MnO}_2 \rightarrow 6 \mathrm{MnO}_3+2 \mathrm{KCl}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(6 \mathrm{MnO}_3 \rightarrow 6 \mathrm{MnO}_2+3 \mathrm{O}_2\)
எடுத்துக்காட்டு 3:
\(2 \mathrm{H}_2+\mathrm{O}_2 \xrightarrow{\mathrm{Cu}} 2 \mathrm{H}_2 \mathrm{O}\)
Cu முன்னிலையில் H2, மற்றும் O2, ஆகியன வினைபுரிவதால் நீர் உருவாகும் வினையை பின்வருமாறு எழுதலாம்.
\(2 \mathrm{Cu}+\frac{1}{2} \mathrm{O}_2 \rightarrow \mathrm{Cu}_2 \mathrm{O}\)
இது ஒரு இடைநிலைச் சேர்மமாகும்.
\(\mathrm{Cu}_2 \mathrm{O}+\mathrm{H}_2 \rightarrow \mathrm{H}_2 \mathrm{O}+2 \mathrm{Cu}\)
சிறப்புகள்:
வினைவேக மாற்றியின் தேர்ந்து செயலாற்றும் தன்மை
வினைவேகமாற்றியின் செறிவு அதிகரிப்பை பொறுத்து வினையின் வேகம் அதிகரித்தல். ஆகியவற்றை இக்கொள்கை விளக்குகிறது.
வரம்புகள்:
வினைவேகமாற்ற நச்சு மற்றும் உயர்த்திகளின் செயல்பாடுகளை இடைநிலைச் சேர்மக் கொள்கையால் விளக்க இயலவில்லை.
பலபடித்தான வினைவேகமாற்ற வினைகளின் வினைவழிமுறையை இக்கொள்கையால் விளக்க இயலவில்லை.
38.
ஜியோலைட்டுகள் நுண்துளைகளையுடைய, படிகவடிவமுடைய, நீரேறிய அலுமினோ சிலிக்கேட்டுகளாகும். இவை சிலிக்கான் மற்றும் அலுமினியம் நான்முகிகளால் ஆனவை.
இயற்கையில் காணப்படும் 50 வெவ்வேறு வகை ஜியோலைட்டுகளும், 150 தொகுப்பு ஜியோலைட்டுகளும் காணக்கிடைக்கின்றன.
சிலிக்கான் நான்கு இணைதிறனையும், அலுமினியம் மூன்று இணைதிறனையும் கொண்டிருப்பதால் ஜியோலைட்டு அணிக்கோவையில் மிகையான எதிர்மின்சுமை காணப்படுகிறது.
இந்த எதிர்மின்சுமையை நடுநிலையாக்க H+ அல்லது Na+ போன்ற கட்டமைப்புசாரா அயனிகள் காணப்படுகின்றன. புரோட்டான்களைக்
கொண்டுள்ள ஜியோலைட்டுகள் திண்ம அமிலங்களாகவும், வினைவேக மாற்றிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இவை பெட்ரோலிய தொழிற்சாலைகளில் உயர் ஹைட்ரோகார்பன்களை சிதைத்து பெட்ரோல், டீசல் போன்றவற்றை பெறுவதிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
Na+ அயனிகளைக் கொண்டுள்ள ஜியோலைட்டுகள் கார வினைவேக மாற்றிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
ஜியோலைட்டுகளின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று அவற்றின் வடிவ தெரிவுத்திறனாகும். ஜியோலைட்டுகளில், கிளர்வு மையங்கள் அதாவது புரோட்டான்கள் நுண்துளைகளினுள் அமைந்துள்ளன.
எனவே, ஜியோலைட்டுகளின் நுண் துளைகளுக்குள் மட்டுமே வினைகள் நிகழ்கின்றன.
வினைப்பொருள் தெரிவுத்திறன்:
வினைப்பொருள் கலவையிலுள்ள பெரிய மூலக்கூறுகள், ஜியோலைட் படிகத்தின் கிளர்வு மையங்களை சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன. இந்த தெரிவுத்திறனானது வினைப்பொருள் வடிவத் தெரிவுத்திறன் என்றழைக்கப்படுகிறது.
இடைநிலைச் சேர்ம தெரிவுத்திறன்:
வினையில் உருவாகும் இடைநிலைச் சேர்மமானது, ஜியோலைட்டுகளின் நுண்துளை அளவை விட பெரியதாக இருந்தால் விளைபொருள் உருவாகாது.
வினைப்பொருள் தெரிவுத்திறன்:
சில விளைபொருள் மூலக்கூறுகள் ஜியோலைட்டுகளின் நுண்துளைகளிலிருந்து வெளியேற இயலாத அளவிற்கு மிகப்பெரியதாக இருக்கும்போது, இந்த சிக்கல் உருவாகிறது.
39.
நொதிகள் என்பவை முப்பரிமாண அமைப்பு கொண்ட சிக்கலான புரத மூலக்கூறுகளாகும். இவை உயிரினங்களில் நிகழும் வேதி வினைகளுக்கு வினையூக்கிகளாக செயல்படுகின்றன .
அநேக நேரங்களில் நொதிகள் கூழ்மநிலையில் காணப்படுகின்றன.
மேலும், அவற்றின் வினையூக்க செயல்பாடுகளில் தேர்ந்து செயலாற்றக்கூடியவைகளாக உள்ளன.
ஒரு குறிப்பிட்ட உயிருள்ள செல்லில் உருவாகும் ஒவ்வொரு நொதியும், நிகழும் ஒரு குறிப்பிட்ட வினைக்கு வினைவேக மாற்றியாக செயல்பட முடியும்.
நொதிவினைவேக மாற்றத்திற்கான சில பொதுவான எடுத்துக்காட்டுகள்:
கிளைசைல் L - குளுட்டமைல் L - தைரோசின் எனும் பெப்டைடானது, பெப்சின் எனும் நொதியால் நீராற்பகுப்படைகிறது.
டையஸ்டேஸ் எனும் நொதி ஸ்டார்ச்சை மால்டோசாக நீராற்பகுக்கிறது.
\(2\left(\mathrm{C}_6 \mathrm{H}_{10} \mathrm{O}_5\right) \mathrm{n}+\mathrm{nH}_2 \mathrm{O} \rightarrow \mathrm{nC}_{12} \mathrm{H}_{22} \mathrm{O}_{11}\)
ஈஸ்ட்களில் உள்ள சைமேஸ் எனும் நொதியானது குளுக்கோசை எத்தனாலாக மாற்றமடையச் செய்கிறது.
\(\mathrm{C}_6 \mathrm{H}_{12} \mathrm{O}_6 \rightarrow 2 \mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OH}+2 \mathrm{CO}_2\)
மைக்கோ டெர்மா அசிட்டி எனும் நொதி ஆல்கஹாலை அசிட்டிக் அமிலமாக ஆக்சிஜனேற்றமடையச் செய்கிறது.
\(\mathrm{C}_2 \mathrm{H}_5 \mathrm{OH}+\mathrm{O}_2 \rightarrow \mathrm{CH}_3 \mathrm{COOH}+\mathrm{H}_2 \mathrm{O}\)
சோயா பீன்களில் உள்ள யூரியேஸ் எனும் நொதி யூரியாவை நீராற்பகுக்கிறது.
\(\mathrm{NH}_2-\mathrm{CO}-\mathrm{NH}_2+\mathrm{H}_2 \mathrm{O} \rightarrow 2 \mathrm{NH}_3+\mathrm{CO}_2\)
நொதிவினைவேக மாற்ற வினையின் வினைவழிமுறை.
\(\mathrm{E}+\mathrm{S} \rightleftharpoons \mathrm{ES} \rightarrow \mathrm{P}+\mathrm{E}\)
இங்கு E என்பது நொதி, S என்பது வினைபடுபொருள், ES என்பது கிளர்வு அணைவு, P என்பது விளைபொருள் என குறிப்பிடுகின்றன.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards