12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு ____________
SN1 வினை
SN2 வினை
எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை
எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை
2.
HO CH2 CH2 – OH ஐ பீரியாடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது ___________
மெத்தனாயிக் அமிலம்
கிளையாக்சால்
மெத்தனால்
CO2
3.
4.
பின்வரும் மின்கலங்களில்
I) லெக்லாஞ்சே மின்கலம்
II) நிக்கல் – காட்மியம் மின்சேமிப்புக்கலம்
III) லெட் சேமிப்புக்கலம்
IV) மெர்குறி மின்கலம்
எவை முதன்மை மின்கலங்களாகும்?
I மற்றும் IV
I மற்றும் III
III மற்றும் IV
II மற்றும் III
5.
பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னூட்டம் தேவைப்படும்? \(MnO_{4}^{-} \rightarrow Mn^{2+}\)
5F
3F
1F
7F
6.
7.
சம கனஅளவுடைய, 1,2 மற்றும் 3 எனும் pH மதிப்புகளைக் கொண்ட மூன்று அமிலக்கரைசல்கள் ஒரு கலனில் கலக்கப்படுகின்றன. கலவையில் உள்ள H+ அயனிச் செறிவு என்ன?
\(3.7\times10^{-2}\)
10-6
0.111
இவை எதுவுமல்ல
8.
பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிஸ் காரமாக செயல்படக்கூடியது எது?
BF3
PF3
CF4
SiF4
9.
ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு ___________
\(2.42\times10^{-8} mol^{3} L^{-3}\)
\(2.66\times10^{-12} mol^{3} L^{-3}\)
\(4.5\times10^{-11} mol^{3} L^{-3}\)
\(5.619\times10^{-12} mol^{3} L^{-3}\)
10.
ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை ஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையை பெற்றுள்ளன. இதற்கு காரணம் _______.
வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக நிகழும் கார்பாக்சிலிக் அமில மூலக்கூறுகளின் கூட்டமைவு
கார்பாக்சிலேட் அயனி உருவாதல்
ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்
மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
11.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விகிதக்கூறு சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஆல்டால் குறுக்கம்
கான்னிசரோ வினை
பென்சாயின் குறுக்கம்
இவற்றில் ஏதுமில்லை
12.
அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?
கருகவர் பதிலீட்டு வினை
எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
கருகவர் சேர்ப்பு வினை
13.
[Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம் ______________
வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்
வடிவ மற்றும் ஒளி சுழற்சி மாற்றியம்
ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்
வடிவ மாற்றியம் மட்டும்
14.
பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
TiCl4
[CoCl6]4-
[Cu(NH3)4]2+
[Ni(CN)4]2-
15.
K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் ____________
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)
பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
16.
C2H6O (A) என்ற கரிமச் சேர்மம் அடர் H2SO4 உடன் 443K-ல் வெப்பப்படுத்த நிறைவுறா ஹைட்ரோகார்பன் C2H4 (B)ஐ கொடுக்கிறது. இதனை தொடர்ந்து பேயர்காரணியின் வினைபடுத்த சேர்மம் C2H6O2 (C) கொடுக்கிறது. இது தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர் பொருளாகப் பயன்படுகிறது. சேர்மம் (C) அடர் H2SO4 வாலை வடிக்கும் போது வளையச் சேர்மமான (C4H8O2)(D) ஐக் கொடுக்கிறது. மேலும் சேர்மம் (A) அடர் H2SO4 உடன் 413K-ல் வெப்பப்படுத்த C4H10O (E) ஐக் கொடுக்கிறது எனில் (A) முதல் (E) வரை உள்ள சேர்மங்களைக் கண்டறிந்து வினைகளை எழுதுக.
17.
ஒரு வலிமை குறை காரத்தின் ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியை விவரி.
18.
அசிட்டால்டிஹைடின் ஆல்டால் குறுக்க வினையின் வினைவழிமுறையை எழுதுக.
19.
விக்டர் மேயர் ஆய்வினை விவரி.
20.
லூகாஸ் சோதனையைப் பற்றி எழுதுக.
21.
pH மற்றும் pOH ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விவரி .
22.
23.
கோல்ராஷ் விதியை கூறு. அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் மோலார் கடத்துத்திறன் நிர்ணயித்தலில் கோல்ராஷ் விதி எவ்வாறு பயன்படுகிறது?
24.
பொது அயனி விளைவை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
25.
எவ்வாறு தயாரிப்பாய்?
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு
26.
27.
[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.
28.
எத்தனால் மற்றும் பீனால்களை வேறுபடுத்தி அறியும் சோதனைகள் யாவை?
29.
ஒரு கால்வானிக் மின்கலத்தின் குறியீட்டை குறிப்பிடும்போது, பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் யாவை?
30.
உல்ஃப்கிஷ்னர் ஒடுக்கம் - விளக்கு.
31.
கிளிசராலை எவ்வாறு அக்ரோலீனாக மாற்றுவாய் ?
32.
பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
i) குளோரோபென்சின்
ii) ஐசோபுரப்பைல் பென்சீன்
33.
தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .
34.
மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.
35.
Ca3(PO4)2 இன் கரைதிறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.
36.
VB கொள்கையின் வரம்புகள் யாவை?
37.
38.
பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
அ) NH3
ஆ) en
இ) OX2-
ஈ) பிரிடின் (pyridine)
39.
[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.
40.
ஃபார்மலின் என்பது யாது? அதன் பயன் யாது?
41.
1,4 டை ஆக்சேன் எவ்வாறு உருவாகிறது?
42.
HVZ வினை குறிப்பு வரைக.
43.
நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா? கொடுக்கப்பட்டது: (\(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) மற்றும் \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\))
44.
நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.
45.
லூயி அமிலங்கள் மற்றும் காரங்கள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
1.
(b)
SN2 வினை
2.
(c)
மெத்தனால்
3.
(c)
4.
(a)
I மற்றும் IV
5.
7MnO4 + 5e- \(\rightarrow\) Mn2 + 4H2O
தேவைப்படும் 5 மோல் எலக்ட்ரான்கள் அதாவது 5F மின்சுமை
6.
(c)
7.
\(\begin{aligned}
3.7 \times 10^{-2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{pH}=-\log _{10}\left[\mathrm{H}^{+}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore\left[\mathrm{H}^{+}\right]=10^{-\mathrm{pH}}
\end{aligned}\)
கனஅளவு x mL என கருதுக
V1M1 + V2M2 + V3M3 = NM
\(\therefore\) x ml of 10-1 M + x ml
of 10-2M + x ml of 10-3M
= 3x ml of [H+]
\(\begin{aligned}
\therefore\left[\mathrm{H}^{+}\right] & =\frac{\mathrm{x}[0.1+0.01+0.001]}{3 \mathrm{x}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{0.1+0.01+0.001}{3}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{0.111}{3}=0.037
\end{aligned}\)
\(\begin{aligned}
=3.7 \times 10^{-2}
\end{aligned}\)
8.
PF3
BF3 \(\rightarrow\) எலக்ட்ரான் குறை \(\rightarrow\) லூயிஸ் அமிலம் PF3 \(\rightarrow\)எலக்ட்ரான் மிகுதி \(\rightarrow\) லூயிஸ் காரம் CF4 \(\rightarrow\) நடுநிலை \(\rightarrow\)லூயிஸ் அமிலம் காரம் இரண்டும் அல்ல
SiF4 \(\rightarrow\) நடுநிலை \(\rightarrow\) லூயிஸ் அமிலம் அல்ல லூயிஸ் காரமும் அல்ல
9.
\(\begin{aligned}
\mathrm{Ag}_2 \mathrm{C}_2 \mathrm{O}_4 \rightleftharpoons 2 \mathrm{Ag}^{+}+\mathrm{C}_2 \mathrm{O}_4^{2-}
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{Ag}^{+}\right]=2.24 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}}
\end{aligned}\)
\(\begin{aligned}
{\left[\mathrm{C}_2 \mathrm{O}_4^{2-}\right]=\frac{2.24 \times 10^{-4}}{2} \mathrm{molL}^{-1}}
\end{aligned}\)
\(\begin{aligned}
=1.12 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{~K}_{\mathrm{sp}}=\left[\mathrm{Ag}^{+}\right]^2\left[\mathrm{C}_2 \mathrm{O}_4^{2-}\right]
\end{aligned}\)
\(\begin{aligned}
=\left(2.24 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}\right)^2\left(1.12 \times 10^{-4} \mathrm{~mol} \mathrm{~L}^{-1}\right)
\end{aligned}\)
= 5.619 \(\times\) 10-12 mol3 L-3
10.
(d)
மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
11.
(b)
கான்னிசரோ வினை
12.
(d)
கருகவர் சேர்ப்பு வினை
13.
வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்
\(\left[M A_4 B_2\right]^{\prime *}\) அணைவில் வடிவ மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
\(\left\{\left[\begin{array}{l} \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right), \mathrm{Br}_2\right] \mathrm{Cl} \\ {\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right), \mathrm{Br} \mathrm{Cl}\right] \mathrm{Br}} \end{array}\right\} \rightarrow\right.\) அயனியாதல் மாற்றியம்
14.

15.
(d)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
16.
சேர்மம் (A) என்பது எத்தனால், இது அடர் H2SO4உடன் 443K வெப்பநிலையில் வினைபுரிந்து சேர்மம் (B) ஈத்தீனைத் தருகிறது.
\(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{OH}+\text { Conc } \mathrm{H}_{2} \mathrm{SO}_{4} \stackrel{443 \mathrm{~K}}{\longrightarrow} \mathrm{CH}_{2}=\mathrm{CH}_{2}+\mathrm{H}_{2} \mathrm{O}\)
சேர்மம் (B) ஆனது பேயரின் கரணியுடன் வினைபுரிந்து சேர்மம் (C) எத்திலின் கிளைக்காலைத் தருகிறது.
சேர்மம் (C) யை அடர் H2SO4 வாலை வடிக்கும் போது வளையச் சேர்மமான சேர்மம் (D) 1, 4 டை ஆக்சேனைத் தருகிறது.
சேர்மம் (A) ஐ அடர் H2SO4 உடன் 413K-ல் வெப்பப்படுத்த சேர்மம் (E) டைஎத்தில் ஈதரைக் கொடுக்கிறது.
\(\mathrm{CH}_{3} \mathrm{CH}_{2} \mathrm{OH}+\mathrm{HO}-\mathrm{CH}_{2} \mathrm{CH}_{3} \stackrel{410 \mathrm{~K} / \mathrm{conH}_{3} \mathrm{SO}_{4}}{\longrightarrow} \mathrm{CH}_{3} \mathrm{CH}_{2}-\mathrm{O}-\mathrm{CH}_{2} \mathrm{CH}_{3}+\mathrm{H}_{2} \mathrm{O}\)
சேர்மம் (A) - எத்தனால்
சேர்மம் (B) - ஈத்தீன்
சேர்மம் (C) - எத்திலின் கிளைகால்
சேர்மம் (D) - 1, 4 - டை ஆக்சேன்
சேர்மம் (E) - டைஎத்தில் ஈதர்
17.
1. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியானது, ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலியை (K) அதன் பிரிகை வீதம் (\(\alpha\)) மற்றும் செறிவுடன் (c) தொடர்புபடுத்துகிறது. ஒரு சேர்மத்தின் மொத்த மோல் எண்ணிக்கையில், சமநிலையில் பிரிகையடைந்த மோல்களின் பின்னம், பிரிகை வீதம் (\(\alpha\)) என்றழைக்கப்படுகிறது.
NH4OH என்ற வலிமை குறை காரத்தை கருதுக: அதன் பிரிகையாதல்: \(\mathrm{NH}_{4} \mathrm{OH} \rightleftharpoons \mathrm{NH}_{4}^{+}+\mathrm{OH}^{-}\)
\(\mathrm{K}_{\mathrm{b}}=\frac{\left[\mathrm{NH}_{4}^{+}\right]\left[\mathrm{OH}^{-}\right]}{\left[\mathrm{NH}_{4} \mathrm{OH}\right]}\) ............. 1
| NH4OH | NH4+ | OH- | |
| ஆரம்பநிலை மோல்களின் எண்ணிக்கை | 1 | - | - |
| NH4OH ன் பிரிகைவீதம் | \(\alpha\) | - | - |
| சமநிலையில் மோல்களின் எண்ணிக்கை | 1-\(\alpha\) | \(\alpha\) | \(\alpha\) |
| சமநிலைச் செறிவு | (1-\(\alpha\))C | \(\alpha\)C | \(\alpha\)C |
2. இம்மதிப்புகளை சமன்பாடு 1ல் பிரதியிட
\(K_{b}=\frac{(\alpha C)(\alpha C)}{(1-\alpha) C} \\
K_{b}=\frac{\alpha^{2} C}{1-\alpha}
\)
3. ஒரு வலிமை குறை காரம் சிறிதளவே பிரிகை அடைகிறது.
a<<1 எனில்; 1 - \(\alpha\) = 1 (\(\alpha\) புறக்கணிக்கத்தக்கது)
\(\therefore K_{b}=\alpha^{2} C\)
4. நீர்த்தல் அதிகரிக்கும் போது ஒரு வலிமை குறைந்த மின்பகுதியின் பிரிகை விதமும் அதிகரிக்கிறது"
5. இது ஆஸ்வால்ட் நீர்த்தல் விதி எனப்படும்.
6. மேலும் :\(\left[\mathrm{OH}^{-}\right]=\alpha \mathrm{C}\) மற்றும் \(\mathrm{OH}^{-}=\sqrt{\mathrm{K}_{b} \cdot \mathrm{C}}\)
18.
அசிட்டால்டிஹைடின் ஆல்டால் குறுக்க வினையானது மூன்று படிகளில் நிகழ்கிறது.
படி 1 : காரத்தின் உதவியுடன் \(\alpha \)- ஹைட்ரஜன் அணுவானது புரோட்டானாக நீக்கப்பட்டு கார்பனில் எதிரயனி உருவாகிறது.
படி 2 : இந்த கார்பன் எதிரயனியானது மற்றொரு அயனியுறா ஆல்டிஹைடிலுள்ள கார்பனைல் கார்பனை தாக்கி ஆல்காக்சைடு அயனியை உருவாக்குகிறது.
படி 3 : இவ்வாறு உருவான ஆல்காக்சைடு அயனியானது நீரினால் புரோட்டானேற்றம் பெற்று ஆல்டாலை உருவாக்குகிறது.
வெப்பப்படுத்தும்போது இந்த ஆல்டால் விரைவாக நீர்நீக்கம் அடைந்து \(\alpha -\beta \) நிறைவுறா ஆல்டிஹைடை உருவாக்குகிறது.
19.
விக்டர் மேயர் சோதனை:
வெவ்வேறு வகையான ஆல்கஹால்கள் உருவாக்கும் நைட்ரோ ஆல்கேன்கள், நைட்ரஸ் அமிலத்துடன் எத்தகைய வினைபுரியும் தன்மையைப் பெற்றுள்ளன என்பதனை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இம்முறை பின்வரும் படிநிலைகளை உள்ளடக்கியது.
(i) ஆல்கஹால்களை I 2/P உடன் வினைப்படுத்த ஆல்கைல் அயோடைடு உருவாக்குதல்
(ii) இவ்வாறு உருவான ஆல்கைல் அயோடைடை AgNO2 உடன் வினைப்படுத்தி நைட்ரோ ஆல்கேன்களை உருவாக்குதல்.
(iii) இறுதியாக நைட்ரோ ஆல்கேன்கள் HNO2 உடன் (NaNO2 / HCl கலவை) வினைப்படுத்தி பெறப்படும் விளைபொருளுடன் KOH சேர்க்கப்பட்டுக் கரைசல் காரத்தன்மை பெறச்செய்தல்.
முடிவு
(i) ஓரிணைய ஆல்கஹால்கள் சிவப்பு நிறத்தினைத் தருகின்றன.
(ii) ஈரிணைய ஆல்கஹால்கள் நீல நிறத்தைத் தருகின்றன.
(iii) மூவிணைய ஆல்கஹால்கள் எவ்வித நிறத்தையும் தருவதில்லை.
20.
லூகாஸ் சோதனை:
ஆல்கஹால்களை லூகாஸ் காரணியுடன் (அடர் HCl மற்றும் நீரற்ற ZnCl2 கலவை) அறை வெப்பநிலையில் வினைப்படுத்தும் போது, மூவிணைய ஆல்கஹால்கள் உடனடியாக ஆல்கைல் ஹாலைடுகளைத் தருகின்றன. இது வினை நிகழ்வு ஊடகத்தில் கரையாத் தன்மையினைப் பெற்றிருப்பதால் உடனடியாகக் கலங்கல் தன்மை உருவாகிறது. ஈரிணைய ஆல்கஹால்கள் 5 முதல் 10 நிமிடங்களில் ஆல்கைல் குளோரைடைத் தருவதால் கலங்கல் தன்மை தாமதமாக ஏற்படுகிறது. ஆனால் அறை வெப்பநிலையில் ஓரிணைய ஆல்கஹால்கள் லூகாஸ் காரணியும் எவ்வித வினையிலும் ஈடுபடாததால் கலங்கல் தன்மையினைத் தருவதில்லை.
21.
pH = -log 10 [H3O+] .........(1)
pOH = -log 10 [OH-] ...........(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றை கூட்ட,
pH + pOH = - log 10 [H3O+] - log 10 [OH-]
= -(log 10 [H3O+] + log 10 [OH-] )
pH + pOH = - log 10 [H3O+] [OH-]
[\(\because \) log a +log b = log ab ]
நாமறிந்தபடி
[H3O+] [OH-] = K w
\(\Rightarrow \) pH + pOH = - log 10 K w
[\(\because \) pK w =\(-log_{ 10 }^{ k_{ w } }\)]
\(\Rightarrow \) pH + pOH = pK w ..........(3)
\(25^{ o }C\) - இல் நீரின் சுய அயனி பெருக்கம்,
pK w = -log 1010-14
= 14 log1010
= 14
\(\therefore \) \(25^{ o }C\) -ல் pH + pOH = 14.
22.
23.
கோல்ராஷ் விதி:
அளவிலா நீர்த்தலில், ஒரு மின்பகுளியின் வரம்புநிலை மோலார் கடத்துத்திறன் மதிப்பானது, அதன் பகுதிக்கூறு அயனிகளின் வரம்புநிலை மோலார் கடத்துத்திறன்களின் கூடுதலுக்கு சமமாக இருக்கும். அதாவது நேரயனிகள் ஒரு திசையிலும், எதிரயனிகள் அதற்கு எதிர்திசையிலும் ஒன்றையொன்று சாராமல் நகர்வதால் மோலார் கடத்துத்திறன் கிடைக்கிறது.
NaCl, போன்ற ஒற்றை-ஒற்றை இணைதிற மின்பகுளிக்கு கோல்ராஷ் விதியானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
\(\left ( \Lambda^{0}_m \right )_{NaCl}=\left ( \lambda ^{0}_m \right )_{Na^{+}}+\left ( \lambda^{0}_m \right )_{Cl^-}\)
பொதுவாக அளவிலா நீர்த்தலில் Ax By எனும் வாய்ப்பாடு கொண்ட ஒரு மின்பகுளியின் மோலார் கடத்துத்திறனை கோல்ராஷ் விதிப்படி பின்வருமாறு எழுதலாம்.
\(\left ( \Lambda^{0}_m \right )_{A_xB_y}=X\left ( \lambda ^{0}_m \right )_{A^{y+}}+Y\left ( \lambda^{0}_m \right )_{B^{x-}}\)
ஆ) கோல்ராஷ் விதியின் பயன்கள்.
அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமைகுறைந்த மின்பகுளியின் மோலார் கடத்துத்திறனை சோதனை மூலம் நிர்ணயித்தல் என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். எனினும், அதே மதிப்பை கோல்ராஷ் பயன்படுத்தி கணக்கிட முடியும்.
எடுத்துக்காட்டாக, HCl, NaCl மற்றும் CH3COONa, போன்ற வலிமைமிகு மின்பகுளிகளின் சோதனை மூலம் கண்டறியப்பட்ட மோலார் கடத்துத்திறன் மதிப்புகளிலிருந்து CH3 COOH அமிலத்தின் மோலார் கடத்துத்திறன் மதிப்பை கணக்கிட முடியும்.
\(\begin{aligned}
\Lambda_{\mathrm{CH}_3 \mathrm{COONa}}^{\mathrm{o}} & =\lambda_{\mathrm{Na}^{+}}^0+\lambda_{\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}}^0
\end{aligned}\) ...(1)
\(\begin{aligned}
\Lambda_{\mathrm{HCl}}^0 & =\lambda_{\mathrm{H}+}^0+\lambda_{\mathrm{Cl}^{-}}^0
\end{aligned}\) ...(2)
\(\begin{aligned}
\Lambda_{\mathrm{NaCl}}^0 & =\lambda_{\mathrm{Na}^{+}}^0+\lambda_{\mathrm{Cl}^{-}}^0
\end{aligned}\) ...(3)
சமன்பாடு (1) + சமன்பாடு (2) - சமன்பாடு (3) கொடுப்பது,
\(\begin{aligned}
& \left(\Lambda_{\mathrm{CH}_3 \mathrm{COONa}}^0\right)+\left(\Lambda_{\mathrm{HCl}}^0\right)-\left(\Lambda_{\mathrm{NaCl}}^0\right)=\lambda_{\mathrm{H}+}^0+\lambda_{\mathrm{CH}_3 \mathrm{CoO}^{-}}^0 \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& =\Lambda_{\mathrm{CH}_3 \mathrm{COOH}}^0
\end{aligned}\)
24.
(i ) வலிமை குறைந்த மின்பகுளியுடன், ஒரு பொது அயனியை கொண்டுள்ள உப்பை (CH3COONa) சேர்க்கும்போது அந்த வலிமை குறைந்த மின்பகுளியின் (CH3COOH) பிரிகையடைதல் குறைகிறது. இது பொது அயனி விளைவு என்றழைக்கப்படுகிறது.
விளக்கம்:
ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் உப்பை, அதே அமிலத்துடன் சேர்க்கும்போது, அந்த அமிலத்தின் பிரிகைவீதம் மேலும் குறைகிறது. எடுத்துக்காட்டாக, அசிட்டிக் அமில கரைசலுடன் சோடியம் அசிட்டேட்டை சேர்க்கும்போது, ஏற்கனவே குறைந்தளவு பிரிகையடைந்துள்ள அசிட்டிக் அமிலத்தின் பிரிகை வீதமானது மேலும் குறைக்கப்படுகிறது. இந்நேர்வில், CH3COOH மற்றும் CH3COONa ஆகிய இரண்டும் CH3COO - எனும் பொது அயனியை பெற்றுள்ளன.
காரணம்: அசிட்டிக் அமிலம் ஒரு வலிமை குறைந்த அமிலமாகும். இது நீர்க்கரைசலில் முழுமையாக பிரிகையடைவதில்லை. எனவே, பின்வரும் சமநிலை உருவாகிறது.
\(\mathrm{CH}_3 \mathrm{COOH}(\mathrm{aq}) \rightleftharpoons \mathrm{H}^{+}(\mathrm{aq}) \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}(\mathrm{aq})\)
எனினும், சேர்க்கப்பட்ட சோடியம் அசிட்டேட் உப்பானது முழுமையாக பிரிகையடைந்து Na+ மற்றும் CH3COO - அயனிகளை உருவாக்குகின்றன.
\(\mathrm{CH}_3 \mathrm{COONa}(\mathrm{aq}) \rightarrow \mathrm{Na}^{+}(\mathrm{aq})+\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}(\mathrm{aq})\)
எனவே, ஒட்டுமொத்த CH3COO- அயனிச் செறிவு அதிகரிக்கிறது, மேலும், அமில பிரிகையடைதல் சமநிலை பாதிக்கப்படுகிறது. லீ-சாட்லியர் கொள்கைப்படி, சமநிலையில் உள்ள ஒரு அமைப்பின்மீது ஏதேனும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும்போது, அந்த சமநிலை அமைப்பானது தன்னைத்தானே சரிசெய்து கொண்டு பாதிப்பின் விளைவை பூஜ்ஜியமாக்கிக் கொள்ளும் என்பது நாமறிந்ததே. எனவே, சமநிலையை பராமரிக்கும் பொருட்டு, அதிகப்படியாக உள்ள CH3COO - அயனிகள் H+ அயனிகளுடன் இணைந்து அதிக அயனியுறா தன்மைகொண்ட CH3COOH ஆக மாறுகிறது. சமநிலையானது இடதுபுறமாக நகருகிறது. CH3COOH அமிலத்தின் பிரிகையாதல் குறைக்கப்படுகிறது.
25.
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி.
P₂O5 போன்ற வலிமை மிகுந்த நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அவற்றின் அமில நீரிலிகளை உருவாக்குகின்றன.
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
குறைந்த கார்பன் எண்ணிக்கை கொண்ட ஆல்கஹாலை எஸ்டரிலிருந்து P₂O5 உயர் ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுகின்றன.
iii. மெத்தில் சயனைடிலிருந்து அசிட்டமைடு
ஆல்கைல் சயனைடுகளை குளிர்ந்த கார்பன் அடர் HCl கொண்டு பகுதியளவு நீராற்பகுக்கும் போது அமைடுகள் உருவாக்குகின்றன.
iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
டொலுயீன் அமிலம் கலந்த KMnO4 முன்னிலையில் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.
பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
பென்சால்டிஹைடானது N, N டைமெத்தில் அனிலீன் போன்ற அரோமேடிக் அமீன்களுடன் குறுக்க வினைக்கு உட்பட்டு ட்ரைபீனைல் மீத்தேன் சாயத்தை உருவாக்குகின்றன.
26.

27.
a) \(
{\left[\mathrm{Cr}\left(\mathrm{NH}_3\right)_6\right]^{3+}} \)
\( { }_{24} \mathrm{Cr}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 4 s^1 3 \mathrm{~d}^5 \\
{ }_{21} \mathrm{Cr}^{3+}-\quad{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^3
\)

\(d ^ 2sp ^ 3\) இனக்கலப்பு (எண்முகி)
n = 3
பாராகாந்தத் தன்மையுடையது
\(\begin{aligned}
\mu_{\mathrm{s}} & =\sqrt{\mathrm{n}(\mathrm{n}+2)} \mathrm{BM} \\
& =\sqrt{3(3+2)}=\sqrt{15}=3.87 \mathrm{BM}
\end{aligned}\)
b) \(\left[\mathrm{Ni}(\mathrm{CN})_4\right]^{2-}\)
\( { }_{28} \mathrm{Ni}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^8 \\
{ }_{26} \mathrm{Ni}^{2+}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^8
\)

CN- ஒரு வலிமை மிகு ஈனியாகும். எனவே 3d எலக்ட்ரான்களை இரட்டையாக்குகிறது
[Ni (CN) 4 ]2-

dsp² இனக்கலப்பு (தளசதுரம்)
n = 0
டையாகாந்தத் தன்மையுடையது
\(mu_{s} = 0\)
28.
i) பென்சீன் டையசோனியம் குளோரைடுடன் ஆரஞ்சு சிவப்பு நிற சாயம் கிடைக்கிறது மாறாக எத்தனாலை தருவதில்லை
ii) நடுநிலை FeCl3 உடன் பினால் கரு ஊதா நிறத்தை தருகிறது. ஆனால் ஆல்கஹால்கள் தருவதில்லை.
iii) பீனால் NaOH உடன் சோடியம் பீனாக்ஸைடை தருகிறது ஆனால் எத்தனால் NaOH உடன் வினைபடுவதில்லை.
29.
1. கால்வானிக் மின்கலமானது மின்கல குறியீட்டின் மூலம் குறிப்பிடப்படுகிறது, எடுத்துக்காட்டாக டேனியல் மின்கலமானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
\(\mathrm{Zn}_{(\mathrm{s})} \mid \mathrm{Zn}_{\text {(aq) }}^{2+}\left\|\mathrm{Cu}_{(\mathrm{aq})}^{2+}\right\| \mathrm{Cu}_{(\mathrm{s})}\)
2. மேற்காண் குறியீட்டில், ஒற்றை செங்குத்துக் கோடானது (I) நிலைமை எல்லையையும், இரட்டை செங்குத்து கோடானது (||) உப்புப் பாலத்தையும் குறிப்பிடுகிறது.
3. நேர்மின்முனை அரை மின்கலமானது உப்புப் பாலத்திற்கு இடது புறத்திலும், எதிர்மின்முனை அரை மின்கலமானது உப்புப் பாலத்திற்கு வலது புறத்திலும் எழுதப்படுகின்றன.
4. நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகள் முறையே இடது ஓரத்திலும், வலது ஓரத்திலும் எழுதப்படுகின்றன.
5. மின்கலத்தின் emf மதிப்பானது மின்கல குறியீட்டின் வலது புறத்தில் எழுதப்படுகிறது.
30.
ஆல்டிஹைடுகள் மற்றும் கீட்டோன்களை ஹைட்ரசீன் (NH2NH2 ) மற்றும் சோடியம் ஈத்தாக்சைடுடன் சேர்த்து வெப்பப்படுத்தும் போது ஹைட்ரோகார்பன்கள் பெறப்படுகின்றன. இதில் ஹைட்ரசீன் ஒடுக்கும் காரணியாகவும், சோடியம் ஈத்தாக்சைடு வினைவேக மாற்றியாகவும் பயன்படுகின்றன.
ஆல்டிஹைடுகள் (அல்லது) கீட்டோன்கள் முதலில் அவற்றின் ஹைட்ரசோன்களாக மாற்றப்படுகின்றன. இந்த ஹைட்ரசோனை வலிமைமிகு காரத்துடன் வெப்பப்படுத்தும்போது ஹைட்ரோகார்பன்கள் உருவாகின்றன.
31.
\(\begin{matrix} \underset { | }{ CH_{ 2 }OH } \\ \underset { | }{ CHOH } \\ CH_{ 2 }OH \end{matrix}\quad \overset { KHSO_{ 4 } }{ \underset { -2H_{ 2 }O }{ \longrightarrow } } \quad \quad \left[ \begin{matrix} \underset { || }{ CH_{ 2 } } \\ \underset { || }{ C } \\ CHOH \end{matrix} \right] \longrightarrow \begin{matrix} \underset { || }{ CH_{ 2 } } \\ \underset { | }{ CH } \\ CHO \end{matrix}\)
Unstable Acrolein
கிளிசரால் KHSO4 உடன் நீர் நீக்க வினைக்கு உட்பட்டு அக்ரோலினைத் தருகிறது.
32.
குளோரோ பென்சீன்:
300 வளிமண்டல அழுத்தம் மற்றும் 633 K வெப்பநிலை கொண்ட மூடிய கலனில் வைத்து குளோரோ பென்சீனை 6-8% NaOH கொண்டு நீராற்பகுக்கும் போது முதலில் சோடியம் பீனாக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த HCl கொண்டு வினைப்படுத்த பீனால் கிடைக்கிறது.

ஐசோபுரப்பைல் பென்சீன்:
523 K வெப்பநிலையில் H3PO4, வினையூக்கி முன்னிலையில் ஒரு மூடிய கலனில் பென்சீன் மற்றும் புரப்பீன் கலந்த கலவையை வெப்பப்படுத்தும் போது கியூமின் (ஐசோபுரப்பைல் பென்சீன்) கிடைக்கிறது. கியூமின் மற்றும் 5% நீரிய சோடியம் கார்பனேட் கரைசலுடன் காற்றை செலுத்தும்போது ஆக்ஸிஜனேற்றமடைந்து கியூமின் ஹைட்ரோபெராக்ஸைடு கிடைக்கிறது. இதனை நீர்த்த அமிலத்துடன் வினைப்படுத்தும் போது பீனால் மற்றும் அசிட்டோன் கிடைக்கிறது. அசிட்டோன் இவ்வினையில் முக்கிய துணை விளைபொருளாக கிடைக்கிறது.

33.
எதிர்முனைப் பாதுகாப்பு : மின்முலாம் பூசுதலைப் போலல்லாமல், இந்த தொழில்நுட்ப உத்தியில் பாதுகாக்கப்படவேண்டிய உலோகம் முழுவதும் பாதுகாப்பு உலோகத்தை பூசவேண்டிய அவசியமில்லை. மாறாக, Mg அல்லது ஜிங்க் போன்ற இரும்பைவிட எளிதில் அரிமானமடையும் உலோகங்களை தன்னிழப்பு நேர்மின்முனையாக பயன்படுத்த முடியும். இரும்பு எதிர்மின்முனையாக செயலாற்றுகிறது. எனவே இரும்பு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் Mg அல்லது Zn அரித்தலுக்கு உள்ளாகின்றன.
34.
முதல் விதி:
மின்னாற்பகுத்தலின்போது மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் நிறையானது (m) மின்கலத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவிற்கு (Q) நேர் விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Q
m \(\alpha\) It
m = z It
Z = பொருளின் மின்வேதிச் சமானம்
I = மின்னோட்டம்
t = மின்னோட்டம் பாயும் காலம்
இரண்டாம் விதி :
ஒரே அளவு மின்னோட்டத்தை வெவ்வேறு மின்பகுளி வெவ்வேறு மின்பகுளிக் கரைசல்களின் வழியே செலுத்தும்போது, மின்முனைகளில் விடுவிக்கப்படும் பொருளின் அளவானது அவற்றின் மின்வேதிச் சமானங்களுக்கு நேர்விகிதத்திலிருக்கும்.
m \(\alpha\) Z
\(\frac{\mathrm{m}_1}{\mathrm{Z}_1}=\frac{\mathrm{m}_2}{\mathrm{Z}_2}\)
m = விடுவிக்கப்படும் உலோகத்தின் நிறை
Z = மின்வேதிச் சமானம்
35.
\(\begin{array}{rl}
\mathrm{Ca}_3\left(\mathrm{PO}_4\right)_2(\mathrm{~s}) \rightleftharpoons 3 \mathrm{Ca}^{2+}(\mathrm{aq})+2 \mathrm{PO}_4^{3-}(\mathrm{aq}) \\
\end{array}\)
S 3S 2S
\(\begin{array}{rl}
\mathrm{~K}_{\mathrm{sP}} & =\left[\mathrm{Ca}^{2+}\right]^3\left[\mathrm{Po}_4^{3-}\right]^2
\end{array}\)
\(\begin{array}{rl}
\mathrm{~K}_{\mathrm{sp}} & =(3 \mathrm{~S})^3(2 \mathrm{~S})^2
\end{array}\)
\(\begin{array}{rl}
=27 \mathrm{~s}^3 4 \mathrm{~s}^2
\end{array}\)
\(\begin{array}{rl}
\mathrm{~K}_{\mathrm{sp}} & =108 \mathrm{~s}^5
\end{array}\)
மாற்றுமுறை:
Ksp = mm. nn(s)m+n
\(=3^3 \cdot 2^2 \cdot_{(\mathrm{s})}\space^{3+2}=27 \times 4 \times \mathrm{s}^5\)
= 108 s5
36.
VB கொள்கையின் வரம்புகள்:
1. அணைவுச் சேர்மங்களின் நிறங்களை இக்கொள்கை விளக்கவில்லை.
2. இது சுழற்சியால் ஏற்படும் காந்தத் திருப்புத் திறனை மட்டுமே கருத்திற்கொண்டது. காந்தத் திருப்புத் திறனின் பிற கூறுகளை கருத்திற்கொள்ளவில்லை.
3. ஒரே உலோகத்தின் அணைவுச் சேர்மங்களில் சில, உள் ஆர்பிட்டால் அணைவுகளாகவும் மற்ற சில சேர்மங்கள், ஆர்பிட்டால் அணைவுகளாகவும் காணப்படுகின்றன. ஏன் இவ்வாறு மாறுபட்ட அணைவுகள் உருவாகின்றன என்பதற்கு உரிய விளக்கத்தினை இக்கொள்கை தரவில்லை.
4. எடுத்துக்காட்டு:
\(\left[\mathrm{Fe}(\mathrm{CN})_6\right]^{4-}\)ஆனது டையாகாந்தப்பண்புடையது (குறை சுழற்சி அணைவு) ஆனால் \(\left[\mathrm{FeF}_6\right]^{4-}\) ஆனது பாரா காந்தத்தன்மையுடையது (உயர் சுழற்சி அணைவு).
37.
38.
| ஈனி | வழங்கி அணுக்களின் எண்ணிக்கை | ஈனியின் வகை | |
|---|---|---|---|
| அ | NH3 | 1 | ஒரு முனை ஈனி |
| ஆ | en | 2 | இரு முனை ஈனி |
| இ | OX2- | 2 | இரு முனை ஈனி |
| உ | பிரிடின் (pyridine) | 1 | ஒரு முனை ஈனி |
39.
\(\begin{array}{l|l}
{ }_{22} \mathrm{Ti}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^2 & { }_{21} \mathrm{Sc}-{ }_{18}[\mathrm{Ar}] 4 \mathrm{~s}^2 3 \mathrm{~d}^1 \\
{ }_{19} \mathrm{Ti^{3+}}-{ }_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^1 & { }_{18} \mathrm{Sc}^{3+}{ -}_{18}[\mathrm{Ar}] 3 \mathrm{~d}^0
\end{array}\)
(i) [Ti(H2O)6]3+, அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனி Ti3+ ஆனது d1 எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளது. இது ஈனி புலத்தில் t2g ஆர்பிட்டால் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
(ii) இந்த அணைவுச் சேர்மத்தின் மீது வெண்மைநிற ஒளி விழும் போது d எலக்ட்ரான் ஒளியினை உட்கவர்ந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு கிளர்வுறுகிறது. நிறமாலைத் தரவுகளிலிருந்து உட்கவர் பெருமம் மதிப்பு eg ஆகும்.
(iii) இது படிக புலப் பிளப்பு ஆற்றல் (\(\Delta^o\)) 239.7 KJ mol-1 20000-1 cm இணையானதாகும். இந்த உட்கவர்தலால், பிரதிபலிக்கப்படும் நிறம் ஊதாநிறம்.
(iv) இவ்வாறு \(\left[\mathrm{Ti}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) ல் d-d இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
(v) ஆனால், \(\left(\mathrm{Sc}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_6\right]^{3+}\) Sc3+ ன் எலக்ட்ரான் அமைப்பு 3d° ஆகும். இதில் d-d இடப்பெயர்ச்சி நடைபெறாது. எனவே நிறமற்றதாக உள்ளது.
40.
ஃபார்மலின்: 40% ஃபார்மால்டிஹைடின் நீர்க்கரைசல் ஃபார்மலின் எனப்படும். இது உயிரியல் மாதிரிகளை பதப்படுத்தப் பயன்படுகிறது.
41.
அடர் H2SO4 உடன் வாலை வடிக்கும்போது, கிளைக்கால் டை ஆக்சேனைத் தருகிறது.
42.
43.
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{ox}}^0\right)_{\mathrm{FFe}^{2+}}=+0.44 \mathrm{~V}
\end{aligned}\)
\(\begin{aligned}
\left(\mathrm{E}_{\mathrm{red}}^0\right)_{\mathrm{Cu}^{2+} |\mathrm{Cu}}=+0.34 \mathrm{~V}
\end{aligned}\)
இந்த +Ve emf மதிப்புகள் இரும்பு ஆக்ஸிஜனேற்றமடைகிறது எனவும் காப்பர் ஒடுக்கமடைகிறது எனவும் தெரிவிக்கின்றன. (எனவே) இரும்புக் கலனில் காப்பர் சல்பேட்டை சேமித்து வைக்க இயலாது.
44.
Kw = [H3O+][OH-1] = 1 \(\times\) 10-14 (25°C)
தூய நீரின் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராஸில் அயனிகளின் செறிவுகளின் பெருக்கற்பலன் நீரின் அயனிப்பெருக்கம் எனப்படும். 25°Cல் அதன் மதிப்பு 1 \(\times\) 10-14 mol2 L-2 ஆகும்.
45.
லூயி அமிலம்: எலக்ட்ரான் இரட்டையை ஏற்றுக் கொள்ளும் சேர்மம் அமிலமாகும்.
எகா: Ag+, BF3; AlCl3
லூயி காரம்: எலக்ட்ரான் இரட்டையை வழங்கும் சேர்மம் காரமாகும்.
எகா: CI-; NH3, H2O
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards