12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
2.
கூட்டு பங்கு தொழில் முனைவோரின் மற்றொரு பெயர் என்ன?
3.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்களை எழுதுக.
4.
தொழில் முனைவோரின் மேலாண்மை பணிகளை பட்டியலிடுக. (ஏதேனும் 2)
5.
காசோலை என்றால் என்ன?
6.
கடனுறுதிச்சீட்டின் சிறப்பு இயல்புகளில் இரண்டினை குறிப்பிடுக.
7.
சரக்கு விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளைப் பட்டியலிடுக.
8.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன?
9.
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர் பற்றி சுருக்கமாக எழுதுக.
10.
தனி உரிமை தொழில் முனைவோர் என்பவர் யார்?
11.
தொழில் முனைவோரின் தோற்றுவிக்கும் பணிகளைக் கூறுக. (ஏதேனும் 3)
12.
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக. (ஏதேனும் 3)
13.
இரண்டு வகை கீறல்களின் வரைபடத்தை வரைக.
14.
மாற்றுச்சீட்டின் சிறப்பு இயல்புகளை கூறுக. (ஏதேனும் 3)
15.
மாற்றுமுறை மற்றும் உரிமை மாற்றம் இவைகளை வேறுபடுத்துக. (ஏதேனும் 3)
16.
தற்போதைய / இருக்கின்ற சரக்கு என்றால் என்ன?
17.
பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி.
18.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)
19.
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
20.
நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.
1.
(i) வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர்.
(ii) இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடுபொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
2.
தோற்றுவிப்புப் பணியாளர்.
3.
1. நிதிப்பிரச்சினை
2. இயக்கத்தடை
3. கல்வியறிவு இன்மை
4. ஆதரவு இன்மை
5. கடும்போட்டி
6. உணர்ச்சி வயப்படல்
7. போதிய விவரமின்மை
8. சார்ந்து வாழும் கலாச்சாரம்
4.
1. திட்டம் தீட்டல்
2. அமைப்புப்பணி
3. கட்டளையிடல்
4. கட்டுப்பாடு காத்தல்
5. ஒருங்கிணைப்பு
5.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881ன் பிரிவு 6ன்படி வெளிப்படையாக கேட்டாலன்றி வேறு எப்போதும் பணம் தரக்கூடாது என வாடிக்கையாளரால் வங்கியின் மீது எழுதப்படும் மாற்றுச் சீட்டே காசோலை எனப்படும்.
6.
(i) கடனுறுதிச் சீட்டு எழுதப்பட்டிருக்க வேண்டும்.
(ii) பணம் செலுத்த நிபந்தனை அற்ற உறுதி மொழியை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
(iii) உறுதிமொழி நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்.
7.
(i) இருதரப்பினர்
(ii) பொருளின் மீதான உரிமை மாற்றம்
(iii) சரக்கு / பொருள்
(iv) விலை
(v) விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு
8.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்பது எந்த ஒப்பந்தத்தின் வாயிலாகப் பொருளை விற்பவர் வாங்குநருக்கு விலை என்ற மறுபயன் பெற்றுக் கொண்டு பொருளின் மீதான உரிமையை மாற்றித் தருகிறாரோ அதுவே சரக்கு விற்பனை ஒப்பந்தமாகும்.
9.
(i) மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களை தங்களின் அறிவு, ஆற்றல், வல்லமையை வைத்துக்கொண்டு வேறுமுறையில் வடிவமைப்பவர்கள்.
(ii) இவர்கள் மேலைநாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை தங்களின் உள்ளூர் தேவைக்கு ஏற்றபடி உருமாற்றி வெளியிடுபவர்கள்.
(iii) உதாரணமாக மேலைநாடுகளில் புத்தம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல மின்னணு பொருட்களை வளரும் நாடுகள் வேறுமுறையில் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
10.
தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்த இடரில் நிதியை திரட்டி தொழில் நடத்த முனைபவர் தனி உரிமை தொழில் முனைவோர் எனப்படுகிறார்கள்.
11.
(i) வாய்ப்புகளை கண்டறிதல்: எந்தெந்த தொழிலில் நுழைந்தால் என்னென்ன வாய்ப்புகள் கிட்டும் என எப்போதும் சிந்திக்க வேண்டும். தொழில் துவங்கும் எண்ணம் சுயமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ அரும்பலாம். எனவே எந்த செயல்வினை பலனளிக்கும் என சீராய்ந்து ஒன்றை தெரிவு செய்வது முதல் பணியாகும்.
(ii) தொழிலின் நோக்கத்தினை தீர்மானித்தல்: தான் நுழைந்த தொழிலின் தன்மை, மற்றும் தொழிலின் வகை அதாவது உற்பத்தி செயலா அல்லது வணிகச் செயலா என்பதை மனதில் வைத்தும், தொழிலினை செயலாக்க தேர்வு செய்யப்பட்ட தொழில் அமைப்பு முறையினை மனதில் கொண்டும் தொழில் நிறுமத்தின் நோக்கத்தினை தீர்மானிக்க வேண்டும்.
(iii) ஆழ்ந்த பகுப்பாய்வு: தொழில் முனைபவர் உற்பத்தி செய்ய அல்லது விற்பனை செய்ய விரும்பும் பொருளினை பற்றிய விரிவான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். உத்தேசித்த பொருளின் சந்தை வாய்ப்பு அதாவது தேவை எப்படி உள்ளது. அந்த பொருளை வெற்றிகரமாக உற்பத்தி செய்ய முடியுமா என்று தீவிரமாக ஆய்வில் இறங்க வேண்டும்.
(iv) தொழில் நிறுமத்தின் அமைப்பு முறையினை தேர்வு செய்வது: தொழில் முனைவோர் தான் துவங்க விரும்பும் வினையினை செயல்படுத்த பொருத்தமான தொழில் அமைப்பு முறையை தீர்மானிக்க வேண்டும். அதாவது தனியாள் வணிகமா, கூட்டாண்மை வியாபார நிறுமமா அல்லது கூட்டுறவு அமைப்பா என்பதை முடிவு செய்திடல் வேண்டும்.
12.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைபவர் | மேலாளர் |
| (i) | நோக்கு | ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து தன்னுடைய வினையை துவக்குவது. | துவக்கிய வினையில் செவ்வனே பணியாற்றுவது இவரின் நோக்கு. |
| (ii) | தகுநிலை | தொழில் முனைபவர் தான் துவங்கிய அமைப்பின் உரிமையாளர். | மேலாளர் ஊதியம் பெறும் உழைப்பாளி. |
| (iii) | இடர் ஏற்றல் | தொழில் முனைபவர் தான் துவங்கிய வினையினால் ஏற்படும் இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தாங்குபவர். |
மேலாளர்கள் வினையின் இடரில் பங்கு பெறுவது இல்லை. மாறாக இடர் ஏற்படும்போது வேறு நிறுமத்திற்கு தாவி விடும் பருவகால நண்பர்கள். |
| (iv) | வெகுமதி | தொழில் முனைபவர் தன்னுடைய இடர் ஏற்பிற்கு வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர். | மேலாளர்கள் இலாபத்தில் பங்கு பெறுவது இல்லை. ஊதியம் மேல் ஊதியம், படிகள், ஊக்க ஊதியம் பெறுபவர்கள். |
| (v) | ஆற்றல் | தொழில் முனைபவர்கள் படைப்பாற்றல். உள்ளுணர்வு மற்றும் எதையாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் பெற்றவர்கள். | மேலாளர்கள் நல்ல கோட்பாட்டு அறிவும், மனித உறவு திறனும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். |
13.

14.
மாற்றுச்சீட்டின் சிறப்பியல்புகள் :
(i) மாற்றுச்சீட்டு எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.
(ii) மாற்றுச்சீட்டில் “கொடுக்க” என்ற கட்டளை இருக்க வேண்டும்.
(iii) கட்டளை நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்.
(iv) மாற்றுச்சீட்டை விடுநர் அல்லது எழுதுபவர் கையொப்பம் இடவேண்டும்.
(v) காலச்சீட்டாயின் (time bill) அதனை விடப் பெறுபவர் ஏற்பு செய்ய வேண்டும்.
15.
| வ.எண் | வேறுபாடுகள் | மாற்றுமுறைத் தன்மை | உரிமைமாற்றம் |
| 1 | சட்டமுறை உரிமை மாற்றம் | ஆவண மாற்றுமுறை ஆவணத்தைப் பொறுத்தவரை உரிமையை மேலெழுதித் தருவதன் மூலமாகவோ அல்லது கொணர்பவர் மாற்றுச் சீட்டை வகையில் ஒப்படைப்பதன் மூலமாகவோ உரிமை மாற்றம் செய்ய முடியும். | உரிமை மாற்றும் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட சடங்கு முறைப்படி உரிமை மாற்ற வேண்டும். |
| 2 | அறிவிப்பு | மாற்றுமுறை ஆவணத்தைக் கொண்ட நபர் கடனாளியிடமிருந்து பணத்தை செலுத்தி கேட்க தேவையில்லை. | உரிமை மாற்றத்தில் உரிமை மாற்றம் பெற்றவர் கடனாளியிடமிருந்து தன்னிடம் கடன் தொகையை செலுத்த அறிவிக்க வேண்டும். |
| 4 | மறுபயன் | மாற்றுமுறைத் தன்மையில் மறுபயன் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. | உரிமை மாற்றம் பெற்றவர் மறுபயனை மெய்ப்பிக்க வேண்டும். |
16.
ஒப்பந்தம் செய்யும் போது விற்பனையாளரின் கைவசம் உள்ள சரக்கு இருக்கின்ற சரக்கு. விற்பனை செய்ய முகவரின் வசம் ஒப்படைக்கப்பட்ட சரக்கும் அல்லது அடமானம் பெற்றவர் விற்கும் அடமான சொத்தும் இருக்கின்ற சரக்கு என்ற பொருளில் உள்ளடக்கம் பெறும்.
இருக்கின்ற சரக்கு: ஒப்பிய சரக்கு, உறுதி செய்யப்பட்ட சரக்கு, உறுதியிடா சரக்கு.
1. ஒப்பிய சரக்கு - விற்பனை ஒப்பந்தம் செய்யும் போது இனம் கண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட சரக்கு ஒப்பிய சரக்கு.
2. உறுதி செய்யப்பட்ட சரக்கு - ஒப்பிய சரக்கைப் போன்ற பொருள் உடையது தான் உறுதி செய்யப்பட்ட சரக்கு. அதாவது விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு இன்னதுதான் என்று உணரப்பட்ட சரக்கு உறுதி செய்யப்பட்ட சரக்கு.
3. உறுதியிடா சரக்கு - ஒப்பந்தம் செய்யும் முன்பாக இவைதான் என இனம் காணப்படாத சரக்கு.
17.
பணிசார் வகைப்பாடு :
(i) புதுமை படைக்கும் தொழில் முனைவோர் : ஒரு புதுமை புகுத்திக் கொண்டே இருப்பவர். இவர்கள் எப்போதும் வியாபாரச் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். அதன் அடிப்படையில் நுகர்வோருக்கு எந்தெந்த தேவை நிறைவேறாமல் இருக்கிறது என்பதைப் பகுத்து ஆய்ந்து அதனை தங்களுடைய பொருட்களின் மூலம் நிறைவேற்றுவார்கள்.
(ii) மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்:
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களை தங்களின் அறிவு, ஆற்றல், வல்லமையை வைத்துக்கொண்டு வேறுமுறையில் வடிவமைப்பவர்கள். இவர்கள் மேலைநாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை தங்களின் உள்ளூர் தேவைக்கு ஏற்றபடி உருமாற்றி வெளியிடுபவர்கள்.
(iii) காலம் கடத்தும் பழமைவாத தொழில்முனைவோர் :
பழமை தொழில் முனைவோர்கள் எதையும் புதிதாக புகுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள். குறிப்பாக புதியது புகுத்தினால் இடர் வந்துவிடும் என அச்சம் கொள்பவர்கள். தொழில் சூழ்நிலைகள் மாறிவரும் போதிலும் மாறாத இவர்கள் மாற்றத்தை வேறு வழி இல்லாத நிலையில் ஏற்க தள்ளப்படுபவர்கள்.
(iv) மந்தமான தொழில் முனைவோர் (அ) ஆண் தேனி தொழில் முனைவோர் :
மந்தமான தொழில் முனைவோர்களும் பழமைவாத தொழில் முனைவோருக்கு நிகராக மாறுதல்களை ஏற்க விரும்பாதவர்கள். இவர்கள் யாரும் நுழைய விரும்பாத அல்லது பெரிய நிறுமங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறிய சந்தையில் செயல்படுபவர்கள். அதாவது சிறிய குட்டையில் பெரிய மீனாக அரசாள்பவர்கள். அந்த சிறுசந்தையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே இயங்குபவர்கள்.
18.
மகளிர் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : மகளிர் தொழில் முனைவோர்கட்கு மேற்குறிப்பிட்டவாறு ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே விவாதிப்போம்.
(i) நிதிப்பிரச்சினை: மகளிர் தொழில் முனைவோர்களுக்கு தங்களின் தொழில் வினையில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. தங்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாத மகளிர் உரிமையாளர்கள் பிணைக்கடன் பெறுவதில் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
(ii) இயக்கத்தடை : மகளிர் தொழில் முனைவோர்கள்
நமது நாட்டு கலாச்சாரப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலில் வீட்டுப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் தொழில் உரிமையாளராக மகளிர் உயர்ந்தாலும் தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக தன்னுடைய கடமைகளை தட்டிக்கழிக்க முடிவதில்லை. தொழிலை துவங்கிய பின் பல்வேறு காரணங்களுக்காக மகளிர் வெளியில் செல்ல முடிவதில்லை.
(iii) கல்வியறிவு இன்மை : ஏட்டறிவு இல்லா அல்லது குறைவாக படித்துள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் வியாபாரம் அல்லது தொழில் தொடர்பான கருத்துக்களை முழுவதாக புரிந்து கொள்ள முடியாதவராக உள்ளனர். உதாரணமாக கணக்கை பராமரித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை கணக்கு வைத்துக் கொள்ளுதல், பொருளை சந்தையிடத் தொழில்நுட்ப கருத்துக்களை உள்வாங்குதல் போன்ற பல தரப்பட்ட செய்திகளை தெளிவாக விளங்கிக் கொள்ள குறைவான படிப்பு அல்லது படிப்பறிவு இன்மை மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
(iv) ஆதரவு இன்மை : மகளிர் தொழில் முனைவோர் செம்மையாக தன் வினையை செயல்படுத்த பலதரப்பட்ட மக்களின் கனிவு, பரிவு மற்றும் ஆதரவு இவைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், வாழ்க்கைப்பட்ட இடம், நண்பர்கள், அயல் அண்டையில் வசிப்பவர்கள் என பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
v) கடும்போட்டி : தாராளமயமான போட்டி உலகில் மகளிர் தொழில் முனைவோர்கள் பெரிய நடுத்தர தொழில்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். போட்டியை வலுவாக எதிர்கொள்ள விளம்பரம் மற்றும் விற்பனைப் பெருக்க யுக்திகளை கையாள வேண்டியுள்ள சூழ்நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
19.
| வ.எண் | வேறுபாடு | மாற்றுச்சீட்டு | காசோலை |
| 1 | வரையப்படுவது | மாற்றுச் சீட்டு வங்கி உட்பட ஒரு குறிப்பிட்ட நபர் மீது வரையப்படுவது. | ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுவது. |
| 2 | செலுத்தப்படுவது | கேட்டவுடனோ அல்லது குறிப்பிட்ட காலமுதிர்வின் போதோ தருமாறு எழுதப்படுவது. | எப்போதும் கேட்டவுடனே பணம் கொடுக்குமாறு எழுதப்படுவது. |
| 3 | ஏற்பு | கால மாற்றுச்சீட்டைப் பொறுத்தவரையில் அதை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும். | காசோலையை ஏற்பு செய்திட தேவையில்லை. |
| 4 | சலுகை நாள் | மாற்றுச்சீட்டின் முதிர்வு காலம் முடிந்த நாளிற்கு பின் பணம் தர மூன்று சலுகை நாட்கள் வழங்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் தர வங்கிக்கு சலுகை நாட்கள் தரப்படுவதில்லை. |
| 5 | படிகள் | அந்நிய மாற்றுச்சீட்டு மூன்று படிகள் தயாரிக்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் பெற படிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை |
| 6 | வருவாய்த்தலை | மாற்றுச்சீட்டில் வருவாய்த்தலை அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒட்ட வேண்டும். | காசோலையில் வருவாய்த்தலை ஒட்ட வேண்டியதில்லை. |
20.
| வ.எண் | வேறுபடுத்தும் கூறுகள் | நிபந்தனைகள் | நம்புறுதிகள் |
| 1. | பொருள் | ஒப்பந்தத்தின் கருப் பொருளாகத் திகழ்வது. | நம்புறுதி ஒப்பந்தத்திற்குத் துணையாக இருக்கிறது. |
| 2. | முக்கியத்துவம் | ஒப்பந்தத்தில் நிபந்தனையை மீறுவது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கொள்ளப்படுகிறது. | நம்புறுதியை மீறுவது ஒப்பந்தத்தினை மீறுவதற்கு ஒப்பாகாது. |
| 3. | உரிமை மாற்றம் | நிபந்தனை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியாது. | நம்புறுதியை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியும். |
| 4. | பரிகாரம் / தீர்வு | நிபந்தனை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்வதுடன் நட்ட ஈடு கோரும் உரிமையைப் பெறுகிறார். | நம்புறுதியை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் நட்ட ஈடு கேட்கும் உரிமையை மட்டுமே பெற்றுள்ளார். |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards