12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
_______ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்
சட்டமுறை
ஆண்டுப்பொது
சிறப்பு
வகுப்பு
2.
நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் ______ ஆவார்.
உறுப்பினர்
இயக்குனர்
தன்னிச்சையான ஒப்பந்ததாரர்
ஊழியர்
3.
நிறுமச் சட்டப்படி இயக்குநர்கள் ______ மூலம் நியமிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு
கம்பெனி சட்ட வாரியம்
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
இயக்குனர்கள் குழு
4.
ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ______ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
ஏழு
ஐந்து
மூன்று
இரண்டு
5.
நிறுமச் சட்டம் 2013-ன்படி ஒரு நபர் இயக்குனராக ______ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது.
5 நிறுமம்
10 நிறுமம்
20 நிறுமம்
15 நிறுமம்
6.
முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் _____
ஊக்கப் பங்குகள்
சாதாரணப் பங்குகள்
உரிமைப் பங்குகள்
முன்னுரிமைப் பங்குகள்
7.
ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிருமத்தை தோற்றுவித்தால் அவர் ______
இயக்குபவர்
நிறும செயலாளர்
பதிவாளர்
தோற்றுவிப்பாளர்
8.
ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை ______ நாட்களுக்குள் நிறுமப் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
14 நாட்கள்
21 நாட்கள்
30 நாட்கள்
60 நாட்கள்
9.
______ திட்ட அறிக்கையில் துணிகரம் செய்வதற்கான நெறிமுறையை உள்ளடக்கியது.
வங்கியர்
அரசு
கடன் அளிக்கும் நிறுவனங்கள்
தொழில் முனைவோர்
10.
_______ நிதி ஆதாரங்கள், தொழில் நுட்ப அறிவு, தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சந்தை திறன் மற்றும் இலாபகத்தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்ப
ஸ்டார்ட்டப் இந்தியா
திட்ட அறிக்கை
வளர்ச்சி அறிக்கை
11.
புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _______ முயற்சிக்கிறது.
அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு.
விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி
அடல் இன்னோவேஷன் சென்டர்ஸ்
12.
கூட்டுப்பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர்.
அகத்தொழில் முனைவோர்
தோற்றுவிப்பாளர்
மேலாளர்
பங்குநர்
13.
வணிக தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறி.
விற்பனை
கழிவு
வாங்கல்
தயாரிப்பு
14.
கீழ் குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில்முனைவோரைச் சார்ந்தது?
உற்பத்தி
சந்தையிடுகை
செயல்பாடு
மேற்கூறிய அனைத்தும்
15.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்தது?
கணக்கியல் பணி
ஒருங்கிணைப்பு
வாய்ப்பை கண்டறிதல்
திட்டமிடல்
16.
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது மேலாண்மைப்பணி அல்ல?
திட்டமிடல்
சந்தையிடல்
அமைப்பாற்றல்
கட்டுப்பாடு காத்தல்
17.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை?
துணிகர உணர்வு
நெளிவு சுளிவு
தன்னம்பிக்கை
அனைத்தும்
18.
எத்தனை மாதங்களுக்கு பின் காசோலை காலாவதியாகிறது?
3 மாதங்கள்
4 மாதங்கள்
5 மாதங்கள்
1 மாதங்கள்
19.
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
2
6
3
4
20.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1981
1881
1994
1818
21.
"பகராள்" சிறு குறிப்பு வரைக.
22.
முழுநேர இயக்குநர் என்பவர் யார்?
23.
ஊக்கப் பங்குகள் என்றால் என்ன?
24.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
25.
தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.
26.
வியாபார தொழில் முனைவோரின் இதர பெயர்கள் என்ன?
27.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் சிக்கல்களை எழுதுக.
28.
தொழில் முனைவோரின் தோற்றுவிப்பு பணிகளை குறிப்பிடுக. (ஏதேனும் 2)
29.
காசோலை என்றால் என்ன?
30.
மாற்று முறை ஆவணம் என்றால் என்ன?
31.
காலம் கடத்தும் பழமைவாத தொழில் முனைவோர் பற்றி சுருக்கமாக எழுதுக.
32.
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர் பற்றி சுருக்கமாக எழுதுக.
33.
சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன?
34.
நிழல் இயக்குநர் என்று யாரை அழைக்கிறோம்?
35.
பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)
36.
ஸ்டார்ட்டப் இந்தியா என்றால் என்ன?
37.
தொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் குறிப்பிடுக. (ஏதேனும் 3)
38.
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக. (ஏதேனும் 3)
39.
இரண்டு வகை கீறல்களின் வரைபடத்தை வரைக.
40.
மாற்றுச்சீட்டின் சிறப்பு இயல்புகளை கூறுக. (ஏதேனும் 3)
41.
பலவகையான திறந்த மற்றும் இரகசிய வகையில் செய்யப்படும் வாக்கெடுப்பு முறைகளை விளக்குக.
42.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
43.
இயக்குநரின் பல்வேறு வகைகளை சுருக்கமாக விவரி. (ஏதேனும் 5)
44.
45.
கடன் பத்திரங்களின் வகைகள் யாவை? (ஏதேனும் 5)
46.
பங்குகளுக்கும், கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
47.
புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக.
48.
49.
பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி.
50.
வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)
51.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)
52.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
53.
காசோலையின் இயல்புகள் கூறி விளக்குக. (ஏதேனும் 5)
54.
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
1.
(a)
சட்டமுறை
2.
(d)
ஊழியர்
3.
(c)
நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
4.
(d)
இரண்டு
5.
(c)
20 நிறுமம்
6.
(a)
ஊக்கப் பங்குகள்
7.
(d)
தோற்றுவிப்பாளர்
8.
(c)
30 நாட்கள்
9.
(d)
தொழில் முனைவோர்
10.
(c)
திட்ட அறிக்கை
11.
(a)
அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
12.
(b)
தோற்றுவிப்பாளர்
13.
(d)
தயாரிப்பு
14.
(d)
மேற்கூறிய அனைத்தும்
15.
(a)
கணக்கியல் பணி
16.
(b)
சந்தையிடல்
17.
(d)
அனைத்தும்
18.
(a)
3 மாதங்கள்
19.
(c)
3
20.
(b)
1881
21.
கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள் அவர்களுக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகராள்களை நியமிக்கலாம். பகராள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பகராள் கூட்டம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிறும பதிவு அலுவலகத்தில் தெரிவித்து பதியப்பட வேண்டும்.
22.
நிறுமத்தின் இயக்குநராக பணிபுரியும் ஒருவர் தனது வேலை நேரம் முழுவதையும் நிறுமத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதும் மேலும் இதன் மூலமாக நிறுமத்திற்கு வருமானம் ஏற்படும் வகையில் குறிப்பிடத்தக்க நேரடி ஆர்வத்தைக் காட்டுபவரும் முழுநேர இயக்குநர் ஆவார்.
23.
செயல்முறை விதிகளின்படி ஒரு நிறுமமானது தனது முதலில் ஏற்பட்ட இலாபத்தை பெருக்கும் நோக்கில் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை ஊக்கப்பங்காக வெளியிடுகிறது. இது நிறுமத்தின் பொதுவான இயல்புகளுக்காக வெளியிடப்படுகிறது. குறிப்பாக சொன்னால் நிறுமத்தின் உபரிகளையும் மற்றும் காப்புகளையும் முறையாக பயன்படுத்துதல் ஆகும்.
24.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசின் சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது. உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்திடும் அறிவு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது என்றால் மிகையாகாது.
25.
திருவாளர்கள் திருபாய் அம்பானி, ஜம்சேட் டாடா, T.V. சுந்தரம் ஐயங்கார், சேஷாத்திரி, பிர்லா, நாராயண மூர்த்தி, அஸிஸ் பிரேம்ஜி.
26.
(i) உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்
(ii) வணிகத் தொழில் முனைவோர்
27.
1. நிதிப்பிரச்சினை
2. இயக்கத்தடை
3. கல்வியறிவு இன்மை
4. ஆதரவு இன்மை
5. கடும்போட்டி
6. உணர்ச்சி வயப்படல்
7. போதிய விவரமின்மை
8. சார்ந்து வாழும் கலாச்சாரம்
28.
1. வாய்ப்புகளை கண்டறிதல்
2. தொழிலின் நோக்கத்தினை தீர்மானித்தல்
3. ஆழ்ந்த பகுப்பாய்வு
4. தொழில் நிறுமத்தின் அமைப்பு முறையினை தேர்வு செய்வது
5. தொழில் துவங்கும் சடங்குமுறைகள்
6. தொழில் திட்டம் தயாரித்த செயல்
7. நிதி திரட்டுவது
8. கருவிகள் மற்றும் கச்சா பொருட்கள் பெறுதல்
29.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881ன் பிரிவு 6ன்படி வெளிப்படையாக கேட்டாலன்றி வேறு எப்போதும் பணம் தரக்கூடாது என வாடிக்கையாளரால் வங்கியின் மீது எழுதப்படும் மாற்றுச் சீட்டே காசோலை எனப்படும்.
30.
மாற்றுமுறை ஆவணம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட தொகையை உரிமை வழங்குவதும் மற்றும் மேலெழுதுதல் அல்லது கையில் கொடுப்பது மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு அதன் உரிமையை மாற்ற ஏதுவான ஆவணம் ஆகும்.
31.
(i) பழமை தொழில் முனைவோர்கள் எதையும் புதிதாக புகுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள். குறிப்பாக புதியது புகுத்தினால் இடர் வந்துவிடும் என அச்சம் கொள்பவர்கள்.
(ii) தொழில் சூழ்நிலைகள் மாறிவரும் போதிலும் மாறாத இவர்கள் மாற்றத்தை வேறு வழி இல்லாத நிலையில் ஏற்க தள்ளப்படுபவர்கள்.
(iii) அதாவது மாற்றத்தை உள்வாங்கவில்லை எனில் தொழிலை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றால் மட்டுமே மாற்றத்தை பின்பற்றுவார்கள். காலம் காலமாக தங்களின் மூதாதையர்கள் வகுத்த பழமை முறைகளைப் பிசகாமல் பின்பற்றுபவர்கள்.
32.
(i) மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களை தங்களின் அறிவு, ஆற்றல், வல்லமையை வைத்துக்கொண்டு வேறுமுறையில் வடிவமைப்பவர்கள்.
(ii) இவர்கள் மேலைநாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை தங்களின் உள்ளூர் தேவைக்கு ஏற்றபடி உருமாற்றி வெளியிடுபவர்கள்.
(iii) உதாரணமாக மேலைநாடுகளில் புத்தம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல மின்னணு பொருட்களை வளரும் நாடுகள் வேறுமுறையில் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
33.
சட்டமுறை கூட்டம் (Statutory Meeting)
நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது. ஒரு பொது நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும் கூட்டம் சட்டமுறை கூட்டம் ஆகும். பங்கு முதல் இல்லாத பொது மற்றும் தனி நிறுமங்கள் இத்தகைய கூட்டத்தை கூட்ட தேவையில்லை.
34.
இயக்குநர் குழுவில் இடம் பெறாத ஒருவர் ஆனால் நிறுமத்தை வழி நடத்த அதிகார உள்ளவர் நிழல் இயக்குநர் எனப்படுவார் பிற்காலத்தில் அவர்கள் விருப்பப்பட்டால் இயக்குனராக நியமிக்கப்படலாம்.
35.
(i) குவிவு முன்னுரிமைப் பங்குகள்: அனைத்து பங்காதாய நடவடிக்கைகள் ஒரு சிறப்பான முறையில் செலுத்தி இறுதி வரையிலும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை பயன்படுத்தப்படும்.
(ii) குவியா முன்னுரிமைப் பங்குகள்: ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமைப் பங்குகளுக்கு எதிராக இருப்பது ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமைப் பங்குகள் ஆகும்.
(iii) மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் : ஒரு நிலையான காலம் (அ) தவணை நாள் முடிந்து பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(iv) மீள்தகா முன்னுரிமைப் பங்குகள்: நிறுமத்தை கலைக்கும் போது (அ) சொத்துக்களை விற்று நீர்மைத் தன்மை ஆக்கும் போது பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(v) மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகள்: ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சாதாரண பங்குகளை மாற்றக் கூடிய தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
(vi) மாற்ற முடியாத முன்னுரிமைப் பங்குகள்: எந்த சூழ்நிலையிலும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலாத தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
36.
(i) தொடக்க நிலையில் உள்ள தொழில்கட்கு ஆலோசனை வழங்குவது, வளர்ப்பது ஆதரவு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவற்றை வளர்க்கும் திட்டத்தினை 2016ம் ஆண்டு ஜனவரியில் துவங்கியது.
(ii) துவக்கக் காலம் முதலே பல தொழில் முனைவோர்கள் பலதரப்பட்ட தொழில் வினைகளை துவக்கி வெற்றி கண்டனர். நிதிகளின் நிதி (Fund of Fund) என்ற நிதியின் மூலம் தொடக்க நிலை தொழில் வினைகளுக்கு நிதி வசதி செய்து தரப்பட்டு வருகிறது.
37.
(i) உற்பத்தி அல்லது தயாரிப்பு பணி: உற்பத்தி பணியை பொறுத்தவரை தொழில் முனைவோர் எந்த இடத்தில் தொழிலை நிறுவுவது; தொழிலை நிறுவிய இடத்தின் உள் அமைப்பு எப்படி இருக்கவேண்டும்; என்ன பொருளை தயாரிக்க வேண்டும். எந்த அளவு உற்பத்தி பொருட்கள் இருக்கவேண்டும், பொருளின் வடிவம் எப்படி இருக்க வேண்டும். போன்ற உற்பத்தி தொடர்பான பணிகளை முடிவு செய்து செயலில் இறங்கவேண்டும்.
(ii) சந்தையிடுகை: சந்தையிடுகை என்ற சொல் பொருள் உற்பத்திக்கு முன்பே தொடங்கி பொருளை உற்பத்தி செய்த பின் வாடிக்கையாளர் வசம் கொண்டு சேர்க்கும் வரையிலான ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய சொல். பொருளின் விற்பனையை கூட்ட விற்பனையை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளல், விளம்பரம் செய்தல், பொருளை விற்க விற்பனையாளரை அமர்த்தல் போன்ற பல பணிகளை தொழில். முனைவோர் செய்ய வேண்டும்.
(iii) கணக்கியல் பணி: கணக்கியல் பணி என்பது நிதிநிலையை அறியும் பணி. அதாவது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொண்ட தொழில் முயற்சியில் இலாபம் வந்துள்ளதா அல்லது நட்டம் வந்துள்ளதா எனவும் குறிப்பிட்ட நாளில் முனைந்த தொழிலின் நிதி நிலை எப்படி உள்ளது அதாவது நிலைச் சொத்துக்களின் மதிப்பு என்ன? பொறுப்புகளின் மதிப்பு எண் மூலதனம் எவ்வளவு கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது. பிறருக்கு தரவேண்டிய பொறுப்புகள் எவ்வளவு என அறிய இருப்புநிலை குறிப்பு மற்றும் இலாப நட்டக் கணக்கு தயாரிக்கும் பணியையும் தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டும்.
38.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைபவர் | மேலாளர் |
| (i) | நோக்கு | ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து தன்னுடைய வினையை துவக்குவது. | துவக்கிய வினையில் செவ்வனே பணியாற்றுவது இவரின் நோக்கு. |
| (ii) | தகுநிலை | தொழில் முனைபவர் தான் துவங்கிய அமைப்பின் உரிமையாளர். | மேலாளர் ஊதியம் பெறும் உழைப்பாளி. |
| (iii) | இடர் ஏற்றல் | தொழில் முனைபவர் தான் துவங்கிய வினையினால் ஏற்படும் இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தாங்குபவர். |
மேலாளர்கள் வினையின் இடரில் பங்கு பெறுவது இல்லை. மாறாக இடர் ஏற்படும்போது வேறு நிறுமத்திற்கு தாவி விடும் பருவகால நண்பர்கள். |
| (iv) | வெகுமதி | தொழில் முனைபவர் தன்னுடைய இடர் ஏற்பிற்கு வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர். | மேலாளர்கள் இலாபத்தில் பங்கு பெறுவது இல்லை. ஊதியம் மேல் ஊதியம், படிகள், ஊக்க ஊதியம் பெறுபவர்கள். |
| (v) | ஆற்றல் | தொழில் முனைபவர்கள் படைப்பாற்றல். உள்ளுணர்வு மற்றும் எதையாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் பெற்றவர்கள். | மேலாளர்கள் நல்ல கோட்பாட்டு அறிவும், மனித உறவு திறனும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். |
39.

40.
மாற்றுச்சீட்டின் சிறப்பியல்புகள் :
(i) மாற்றுச்சீட்டு எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.
(ii) மாற்றுச்சீட்டில் “கொடுக்க” என்ற கட்டளை இருக்க வேண்டும்.
(iii) கட்டளை நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்.
(iv) மாற்றுச்சீட்டை விடுநர் அல்லது எழுதுபவர் கையொப்பம் இடவேண்டும்.
(v) காலச்சீட்டாயின் (time bill) அதனை விடப் பெறுபவர் ஏற்பு செய்ய வேண்டும்.
41.
(I) திறந்த நடைமுறை: இம்முறையில் அனைத்து உறுப்பினர்களும் கூடியிருக்கும் கூட்டத்தில் ஒரு உறுப்பினர் யாருக்கு வாக்களிக்கிறார் என மற்றவருக்கு தெரியும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம்முறையில் வாக்கெடுப்பில் எவ்வித ஒளிவு மறைவும் இருக்காது இம்முறை வாக்கெடுப்பில் பின்வரும் முறைகள் உள்ளடங்கும்.
வாக்களிப்பின் வகைகள் :
(i) சத்தத்தின் வாயிலாக வாக்கெடுப்பு: பொதுவாக எந்தவொரு சர்ச்சைக்குரிய விஷயமாக இல்லாமல் அனைவருக்கும் சேர்ந்து வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டியோ அல்லது மேசைகளை தட்டியோ ஓசையை எழுப்பி தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடைப்பெறும்.
(ii) குரல் வாக்கெடுப்பு : இத்தகைய வாக்கெடுப்பு முறையை மிகவும் சிக்கலான அல்லது முரண்பாடுடைய விஷயங்களுக்கு முடிவு எடுக்க பயன்படுத்துவதில்லை. தலைவர் ஒரு முடிவை முன்மொழிந்து அதற்கு ஆதரவாக உள்ளவர் ஆம் என்று குரலை உயர்த்தி கூறவேண்டும். பின்னர் அம்முடிவிற்கு மறுப்பவர்கள் இல்லை என குரலை உயர்த்தி கூற வேண்டும். தலைவர் இவ்விரு வேறுபட்ட ஓசையையும் நன்கு கூர்ந்து கவனித்து தனது முடிவை தெரிவிப்பார்.
(iii) கைகளை உயர்த்துவதன் மூலம் வாக்கெடுப்பு : ஒரு முடிவை முன் மொழிந்து ஆதரவாக மற்றும் எதிராக உள்ளவர்களை கைகளை உயர்த்த சொல்லி வாக்கெடுப்பு நடத்துவது.
(II) இரகசிய வாக்குமுறை: ஒரு உறுப்பினர் அளிக்கும் வாக்கு மற்ற உறுப்பினர்களால் அறிந்துகொள்ள முடியாத வகையில் இரகசியமாக வாக்கெடுப்பு நடத்தப்படுவதை இரகசிய வாக்கு முறை என்கிறோம். சில சிக்கல்களுக்கு முடிவு எடுக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு உறுப்பினர் அளிக்கும் வாக்கு மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படுவதால் இரகசிய வாக்கெடுப்பு முறை ஒரு பிரபலமான முறையாகும்.
(i) வாக்குசீட்டு முறை: இம்முறையில் வரிசை எண் இடப்பட்ட வாக்கு சீட்டு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தரப்படும். அதில் உறுப்பினர் ஒரு இரகசிய அறையில் தனது விருப்பத்தை x அல்லது குறியிட்டு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட வேண்டும். ஓட்டு எண்ணுபவர்கள் அல்லது வேட்பாளரின் முகவர்களின் முன்னிலையில் அப்பெட்டியை திறந்து வாக்குகள் எண்ணப்படும்.
(ii) அஞ்சல் வாக்கு :
பெரிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் பல்வேறு நாடு கடந்து இருப்பார்கள்.
வாக்களிக்க நேரில் வர இயலாததால் அஞ்சல் மூலமாக தனது வாக்குகளை பதிவு செய்வர்.
(III) இயந்திர வாக்குப்பதிவு:
இது ஒரு அதிநவீன முறையாகும்
வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
பச்சை நிற விளக்கு எறிந்தால் சாதகமாக வாக்கு பதியப்படுகிறது என்றும்.
சிவப்பு நிற விளக்கு எறிந்தால் பாதகமாக வாக்கு பதியப்படுகிறது. என பொருள்.
42.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
43.
இயக்குநர்களின் வகைகள் :
(i) இந்திய குடியிருப்பு இயக்குநர் : இந்திய நிறுமச் சட்டம் 2013 பிரிவு 149 (3) ன் படி ஒரு நிறுமத்தின் இயக்குநர் கடந்த நாட்காட்டி ஆண்டில் ஒத்த காலத்தில் குறைந்தது 182 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும். அவ்வாறு உள்ளவரையே இந்திய குடியிருப்பு இயக்குநர் எனப்படுகிறார்.
(ii) சுதந்திர இயக்குநர் : இந்திய நிறுமச் சட்டம் 2013 பிரிவு 149 (6) ன் படி இவர் ஒரு மாற்று இயக்குனராவார். கீழ்க்கண்ட நிறுமங்கள் குறைந்த பட்சம் இரண்டு சுதந்திர இயக்குநர்களை நியமிக்க வேண்டும் அல்லது கொண்டிருக்க வேண்டும்.
(iii) சிறு பங்குதாரர்களின் இயக்குநர் : சிறு பங்குதாரர்களின் இயக்குநர் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுமம் ஒரு இயக்குனரை இவர்கள் சார்பாக நியமிக்கலாம் அவ்வாறு நியமனம் செய்ய குறைந்தபட்சம் 1,000 அல்லது பத்தில் ஒரு பங்கு பங்குதாரர்களுக்கு இது தொடர்பான எழுத்து மூலமான அறிவிப்பு செய்தியை வழங்கி இருக்க வேண்டும்.
(iv) பெயரளவு இயக்குநர் : தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் நிதி நிறுமங்கள் நலன் கருதி அல்லது ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் படியோ அல்லது மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும் நியமிக்கலாம்.
(v) பெண் இயக்குநர்: பிரிவு 149 (1) (a) படி ஒரு இயக்குநர் குழுவில் குறைந்த பட்சம் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேண்டும் கீழ்க்கண்ட நிறுமங்கள் குறைந்த பட்சம் ஒரு பெண் ஏற்கனவே கொண்டிருத்தல் வேண்டும் அவை:
1. அனைத்து பட்டியலிடப்பட்ட பொது நிறுமங்கள்
2. எந்த நிறுமத்தின் செலுத்தப்பட்ட மூலதனம் 100 கோடி அல்லது அதற்கும் மேல் அல்லது விற்பனையின் அளவு 300 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது
(vi) மாற்று இயக்குநர்கள் : ஒரு இயக்குநர் இந்தியாவில் குறைந்தது மூன்று மாதத்திற்கு மேல் இல்லையென்றால் அவருக்கு பதிலாக கூடுதல் இயக்குநர்களை இயக்குநர் குழு நியமிக்கலாம். இந்த மாற்று இயக்குநர் உண்மையான இயக்குனருக்கு முகவராக அல்லது பதிலாக கருதப்படமாட்டார்.
(vii) கூடுதல் இயக்குநர் : நிறுமம் தேவைப்பட்டால் ஒரு தனி மனிதனை இயக்குநராக நியமிக்கலாம்.
(viii) நிழல் இயக்குநர் : இயக்குநர் குழுவில் இடம்பெறாத ஒருவர் ஆனால் நிறுமத்தை நடத்த அதிகாரம் உள்ளவர்.
44.
45.
கடன் பத்திரங்கள் வெளியிடும் முறை மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் பல விதங்களாக பிரிக்கலாம். அவை,
1. மாற்று அடிப்படை:
அ) மாற்ற இயலா கடன் பத்திரங்கள் :
இதை கடனீட்டு பத்திரமாக மட்டுமே வைத்திருக்க முடியும், சாதாரண பங்குகளாக மாற்ற இயலாது.
ஆ) பகுதி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்:
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
இ) முற்றிலும் மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரம் முழுமையாக சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
ஈ) தேர்வின்படி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
வெளியீட்டாளர் முடிவு செய்யும் விலையிலோ / சமயத்திலோ கடனீட்டு பத்திரம் பங்குகளாக மாற்ற முடியும்.
2. பிணையங்கள் (அ) ஈட்டின் அடிப்படை:
அ) பிணையம் தரப்பட்ட கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தி வெளியிடப்படுவது.
இந்திய நிறுமச்சட்டம் 2013 பிரிவு 71 (3)ன்படி மத்திய அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆ) பிணையம் தரப்படாத கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது எவ்வித பற்றுப் பொறுப்பும் ஏற்படுத்தப்படாமல் வெளியிடப்படுவது.
3. மீட்பு அடிப்படை :
அ) மீட்கக்கூடிய கடன் பத்திரம் :
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு இவ்வகை கடன் பத்திரங்களை திரும்ப மீட்டுக் கொள்ளலாம்.
ஆ) மீட்க இயலா கடன் பத்திரம் :
நிறும வாழ்நாளில் இவ்வகையான கடனீட்டு பத்திரங்களை மீட்க இயலாது.
4. பதிவு செய்தல் அடிப்படை :
அ) பதிவு செய்யப்பட்ட கடனீட்டு பத்திரங்கள் :
குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை நிறும ஏட்டில் பதிவு செய்து நிறுமம் கடனீட்டு பத்திரங்களை வெளியிடுவது.
ஆ) கொணர்பவர் / பதிவு செய்யப்படாத பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரங்களை வைத்திருப்பவருக்கு அதன் மீதான உரிமை உண்டு.
46.
| வ.எண் | பங்குகள் | கடன் பத்திரம் |
| 1. | இது நிறுமத்தின் முதலில் ஒரு பங்கு ஆகும். | இது சட்டப்படி ஒரு கடன் ஆகும். |
| 2. | பங்குதாரர்கள் நிறுமத்தின் உறுப்பினர்கள்/ உரிமையாளர்கள் ஆவர். | கடன் பத்திரதாரர்கள் நிறுமத்தின் கடனீந்தோர்கள் ஆவர். |
| 3. | பங்குதாரர்கள் மாறுபடும் விலையில் பங்காதாயம் பெறுவர். | கடன் பத்திரதாரர்கள் நிலையான விதத்தில் வட்டி செலுத்தி அதற்கான பங்காதாயம் பெறுவர். |
| 4. | பங்குகளில் எந்தவிதமான விதிப்பும் கிடையாது. | நிறுமத்தின் சொத்துக்களின் மீது கடன் பத்திரங்கள் விதிக்கப்படும். |
| 5. | பங்குகள் தள்ளுபடியில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே வெளியிட முடியும். | சாதாரண பத்திரங்களை தள்ளுபடியில் வெளியிட எந்த நெறிமுறைகளும், தடைகளும் இல்லை. |
| 6. | இயக்குநர் அவையின் முடிவின் அடிப்படையிலும், இலாபத்தின் அடிப்படையிலும் பங்காதாய வீதம் மாறும். | கடன் பத்திரங்களின் வட்டி வீதம் நிலையானது |
47.
(i) பொருள் தேர்வு எதிர்பார்ப்பு : திறன், உள்நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அவர்/அவள் ஒரு அடையாளக்குறியீடு, புதிய தயாரிப்பு ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஏற்கனவே உற்பத்தி செய்து கொண்டு இருக்கும் பொருட்களின் தன்மையை அதாவது கூடுதல் வசதிகள், இட வசதிகள், எளிதான செயல்திறன், விலையை குறைக்க போன்றவற்றிற்கும் இருக்கும். திட்டத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை தொழில் முனைவோர் ஏற்படுத்த வேண்டும்.
(ii) உரிமையின் வடிவத்தை தேர்வு செய்தல் Selection of form of Ownership:
குடும்பம் உரிமை, கூட்டாண்மை, தனியார் வரம்புக்குட்பட்ட நிறுவனம் ஆகியவற்றிற்கான தொழில்முறை அமைப்பு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். குடும்பத்தின் உரிமைகள் மற்றும் கூட்டாண்மை வடிவங்கள் ஆகியவை நிறுவன நிதியுதவி, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வணிக அனுபவங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
(iii) இடத் தேர்வு Selection of Site : தொழில் முனைவோர் தனது முயற்சியைத் தக்க வைப்பதற்கு பொருத்தமான தொழில் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அவருக்கு இடத்தை தேர்வு செய்ய நான்கு வாய்ப்புகள் உள்ளன.
(iv) மூலதன கட்டமைப்பை தீர்மானித்தல் : தொழில் முனைவோர் தனது தொழிலுக்கு தேவையான முதலை எங்கிருந்து எவ்வாறு திரட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
(v) உற்பத்தியை கையகப்படுத்துதல் என்பதை அறிதல் : தொழில்துறை ஆய்வுக்கூடங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை மேம்பாட்டு பிரிவுகள் மற்றும் தனிப்பட்ட ஆலோசகரிடமிருந்து உற்பத்தி செய்வது பற்றிய ஆலோசனைகளை கேட்டறிதல்.
(vi) திட்ட அறிக்கை தயாரித்தல் : நிதியியல், தொழில்நுட்ப அறிவு, உழைப்பு மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரங்கள் சந்தைதிறன் மற்றும் இலாபத்தன்மை போன்ற அம்சங்களை உள்ளடக்கிய திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
(vii) தற்காலிகமான பதிவு சான்றிதழ் பெறுதல்: தற்காலிகமான பதிவு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தொழில் முனைவோர் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் ஒரு வருட காலத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் வண்ணம் தரப்படும்.
48.
49.
பணிசார் வகைப்பாடு :
(i) புதுமை படைக்கும் தொழில் முனைவோர் : ஒரு புதுமை புகுத்திக் கொண்டே இருப்பவர். இவர்கள் எப்போதும் வியாபாரச் சூழல்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். அதன் அடிப்படையில் நுகர்வோருக்கு எந்தெந்த தேவை நிறைவேறாமல் இருக்கிறது என்பதைப் பகுத்து ஆய்ந்து அதனை தங்களுடைய பொருட்களின் மூலம் நிறைவேற்றுவார்கள்.
(ii) மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்:
மாதிரியை பின்பற்றும் தொழில் முனைவோர்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களை தங்களின் அறிவு, ஆற்றல், வல்லமையை வைத்துக்கொண்டு வேறுமுறையில் வடிவமைப்பவர்கள். இவர்கள் மேலைநாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை தங்களின் உள்ளூர் தேவைக்கு ஏற்றபடி உருமாற்றி வெளியிடுபவர்கள்.
(iii) காலம் கடத்தும் பழமைவாத தொழில்முனைவோர் :
பழமை தொழில் முனைவோர்கள் எதையும் புதிதாக புகுத்துவதில் தயக்கம் காட்டுபவர்கள். குறிப்பாக புதியது புகுத்தினால் இடர் வந்துவிடும் என அச்சம் கொள்பவர்கள். தொழில் சூழ்நிலைகள் மாறிவரும் போதிலும் மாறாத இவர்கள் மாற்றத்தை வேறு வழி இல்லாத நிலையில் ஏற்க தள்ளப்படுபவர்கள்.
(iv) மந்தமான தொழில் முனைவோர் (அ) ஆண் தேனி தொழில் முனைவோர் :
மந்தமான தொழில் முனைவோர்களும் பழமைவாத தொழில் முனைவோருக்கு நிகராக மாறுதல்களை ஏற்க விரும்பாதவர்கள். இவர்கள் யாரும் நுழைய விரும்பாத அல்லது பெரிய நிறுமங்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறிய சந்தையில் செயல்படுபவர்கள். அதாவது சிறிய குட்டையில் பெரிய மீனாக அரசாள்பவர்கள். அந்த சிறுசந்தையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே இயங்குபவர்கள்.
50.
(i) உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்:
இவ்வகையான தொழில் முனைவோர் ஒரு பொருள் (அ) சேவை பொருளை உருவாக்க எண்ணி தொழில் முனைவை மேற்கொள்பவர். இவர் பெரிய அல்லது சிறிய அளவில் தொழிலை ஏற்படுத்தி தன் எண்ணத்தில் உதித்த பொருளை (அ) சேவைப் பொருளை தயாரித்து சந்தை இடுபவர்.
(ii) வணிகத் தொழில் முனைவோர்:
வியாபார தொழில் முனைவோர் பொருளை வாங்கி விற்கும் செயலில் மட்டும் தன்னை உட்படுத்தி கொள்பவர். இவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொருளை வணிகம் செய்பவர். இவர்கள் பொருளை பகிர்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக தங்களது தொழில் முனைவில் கழிவு முறையில் இலாபம் ஈட்டுகின்றனர். பொருளை வெற்றிகரமாக சந்தை இடுவது இவர்களின் பலம்.
(iii) தொழிற்சாலை தொழில் முனைவோர்:
இவர்கள் வாடிக்கையாளரின் தேவைகளை துல்லியமாக கண்டுணர்ந்து அவர்களின் தேவைக்கேற்ப பொருளை உற்பத்தி செய்யும் தொழிலை முனைகின்றனர். இவர்கள் குறுந்தொழில் முனைவோராகவோ, நடுத்தர தொழில் முனைவோராகவோ அல்லது பெருந்தொழில் முனைவோராகவோ இருக்கலாம்.
(iv) கூட்டுப்பங்கு தொழில்முனைவோர்:
கூட்டுப்பங்கு தொழில்முனைவோர் என்பவர் நிறுவனத்தை கூட்டுப்பங்கு வடிவில் தொழிலை துவங்க முனைபவர் ஆவர். தொழிலை கூட்டுறு அடிப்படையில் துவங்க தோற்றப் பணிகளை மேற்கொள்கிறார்.
கூட்டுப்பங்கு நிறும வடிவத்தில் நிர்வாகமும் நிறும உரிமையும் வெவ்வேறு நபர்களிடம் உள்ளது. இயக்குநர்கள் அவையை பல்வேறு சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற வல்லுநர்களை பல பணிகளுக்கு அமர்த்தி அன்றாட நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.
(v) வேளாண் தொழில் முனைவோர்:
வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர். இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடு பொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்த தானியங்களை நேரடியாகவோ அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ சந்தை இடுகின்றனர்.
(vi) சில்லறை தொழில் முனைவோர்:
இவர்கள் சிறு அளவில் பொருட்களை பல்வேறு மொத்த வணிகர்களிடமிருந்து பெற்று பலதரப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து ஒரு கூரையின் கீழ் இறுதி நுகர்வோருக்கு பொருளைத் தருவிக்கும் தொழிலை நடத்துபவர்கள்.
51.
மகளிர் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : மகளிர் தொழில் முனைவோர்கட்கு மேற்குறிப்பிட்டவாறு ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே விவாதிப்போம்.
(i) நிதிப்பிரச்சினை: மகளிர் தொழில் முனைவோர்களுக்கு தங்களின் தொழில் வினையில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. தங்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாத மகளிர் உரிமையாளர்கள் பிணைக்கடன் பெறுவதில் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
(ii) இயக்கத்தடை : மகளிர் தொழில் முனைவோர்கள்
நமது நாட்டு கலாச்சாரப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலில் வீட்டுப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் தொழில் உரிமையாளராக மகளிர் உயர்ந்தாலும் தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக தன்னுடைய கடமைகளை தட்டிக்கழிக்க முடிவதில்லை. தொழிலை துவங்கிய பின் பல்வேறு காரணங்களுக்காக மகளிர் வெளியில் செல்ல முடிவதில்லை.
(iii) கல்வியறிவு இன்மை : ஏட்டறிவு இல்லா அல்லது குறைவாக படித்துள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் வியாபாரம் அல்லது தொழில் தொடர்பான கருத்துக்களை முழுவதாக புரிந்து கொள்ள முடியாதவராக உள்ளனர். உதாரணமாக கணக்கை பராமரித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை கணக்கு வைத்துக் கொள்ளுதல், பொருளை சந்தையிடத் தொழில்நுட்ப கருத்துக்களை உள்வாங்குதல் போன்ற பல தரப்பட்ட செய்திகளை தெளிவாக விளங்கிக் கொள்ள குறைவான படிப்பு அல்லது படிப்பறிவு இன்மை மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
(iv) ஆதரவு இன்மை : மகளிர் தொழில் முனைவோர் செம்மையாக தன் வினையை செயல்படுத்த பலதரப்பட்ட மக்களின் கனிவு, பரிவு மற்றும் ஆதரவு இவைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், வாழ்க்கைப்பட்ட இடம், நண்பர்கள், அயல் அண்டையில் வசிப்பவர்கள் என பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
v) கடும்போட்டி : தாராளமயமான போட்டி உலகில் மகளிர் தொழில் முனைவோர்கள் பெரிய நடுத்தர தொழில்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். போட்டியை வலுவாக எதிர்கொள்ள விளம்பரம் மற்றும் விற்பனைப் பெருக்க யுக்திகளை கையாள வேண்டியுள்ள சூழ்நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
52.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைவோர் | அகத்தொழில் முனைவோர் |
| (i) | சிந்தனை | தொழில் முனைபவர் ஒரு தடையற்ற சிந்தனைவாதி | அகத்தொழில் முனைபவர் தன்னிச்சையான சிந்தனைவாதி, ஆனால் ஒரு தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர். |
| (ii) | சார்புநிலை | தன்னிச்சையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர். |
| (iii) | நிதி திரட்டல் | தொழில் முனைவோர் தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும். | இவருக்கு நிதி திரட்டும் பொறுப்பு இல்லை. ஆனால் திரட்டிய நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| (iv) | வெகுமதி | தொழில் முனைவோர் தங்களின் இடர் ஏற்பு பணிக்காக இலாபம் என்ற வெகுமதியை பெறுகின்றனர். | அகத்தொழில் முனைவோர்க்கு இலாபத்தில் பங்கு இல்லை. ஆனால் ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்பு உண்டு. |
| (v) | இடர் ஏற்றல் | தான் ஆரம்பித்த தொழிலின் இடரை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. | இவர் தொழில் தொடர்பாக எழும் இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. தான் மேற்கொண்ட செயல் திட்டம் தோல்வி நிலைக்கு பொறுப்பு ஏற்பதில்லை. |
| (vi) | தகுநிலை | தொழில் முனைபவர் உரிமையாளர் என்ற தகுநிலை படைத்தவர். | அகத்தொழில் முனைவோர் உரிமையாளர் அல்ல; ஆனால் ஊழியர் தான் மேற்கொண்ட செயலுக்கு தன்னுடைய மேல் அதிகாரிக்கு பதில் சொல்ல கடமையுடையவர். |
| (vii) | செயல்பாடு | தான் தொடங்கிய தொழிலின் புறத்தின் நின்று பெரும்பாலும் செயல்படும் நபர். | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர். |
53.
காசோலையின் இயல்புகள்:
1. காசோலை எழுத்து வடிவில் இருக்க வேண்டும்: காசோலை எழுத்து வடிவில் வரையப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் சட்டமோ அது பென்சிலால் கூட எழுத தடை விதிக்கவில்லை என்றாலும் மோசடி செய்யும் வாய்ப்பைக் கருதி வங்கியாளர்கள் தாங்களே காசோலையை அச்சிட்டு தருகிறார்கள்.
2. நிபந்தனையற்ற ஆணை: காசோலையில் வாடிக்கையாளர் பணம் கொடுக்க என கட்டளை பிறப்பிக்க வேண்டும். தயவு செய்து என்ற வார்த்தை இருந்தாலும் காசோலை செல்லும். ஆனால் கட்டளை நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும்.
3. குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுதல்: காசோலையை ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது மட்டுமே எழுத முடியும். அதுவும் ஒரு வங்கியின் எந்தக் கிளையில் வாடிக்கையாளர் பணம் வைத்துள்ளாரோ சம்பந்தப்பட்ட கிளையில் பணம் கொடுக்குமாறு எழுதவேண்டும். மின்னணு மற்றும் ஒருங்கிணைந்த வங்கி முறை நடைமுறையில் இருக்கும் இந்நாளிலும் எந்த கிளையில் வேண்டுமென்றாலும் பணம் பெறமுடியும்.
4. நிச்சயமான ஒரு தொகை: வங்கியரை ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கும் படி ஆணை இடவேண்டும். குறிப்பிட்ட அளவு பிணையம் வெளியிட ஆணை பிறப்பிக்க முடியாது.
5. பணம் பெறுபவரைத் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும்: காசோலையை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது அவரது ஆணைபெற்றவருக்கு தரும்படி எழுத வேண்டும் அல்லது கொணர்பவர் காசோலை எனின் கொணர்பவருக்கு பணம் தருமாறு ஆணையிடலாம்.
6. கேட்டவுடன் தருமாறு எழுதப்படுவது: காசோலையை கேட்டவுடன் தருமாறு எழுதப்பட வேண்டும். எப்போது தர வேண்டும் என்ற நாள் குறிப்பிடப்பட்டிருப்பின் கேட்டவுடன் கொடுக்க என்ற கட்டளை தேவையற்றது.
54.
| வ.எண் | வேறுபாடு | மாற்றுச்சீட்டு | காசோலை |
| 1 | வரையப்படுவது | மாற்றுச் சீட்டு வங்கி உட்பட ஒரு குறிப்பிட்ட நபர் மீது வரையப்படுவது. | ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுவது. |
| 2 | செலுத்தப்படுவது | கேட்டவுடனோ அல்லது குறிப்பிட்ட காலமுதிர்வின் போதோ தருமாறு எழுதப்படுவது. | எப்போதும் கேட்டவுடனே பணம் கொடுக்குமாறு எழுதப்படுவது. |
| 3 | ஏற்பு | கால மாற்றுச்சீட்டைப் பொறுத்தவரையில் அதை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும். | காசோலையை ஏற்பு செய்திட தேவையில்லை. |
| 4 | சலுகை நாள் | மாற்றுச்சீட்டின் முதிர்வு காலம் முடிந்த நாளிற்கு பின் பணம் தர மூன்று சலுகை நாட்கள் வழங்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் தர வங்கிக்கு சலுகை நாட்கள் தரப்படுவதில்லை. |
| 5 | படிகள் | அந்நிய மாற்றுச்சீட்டு மூன்று படிகள் தயாரிக்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் பெற படிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை |
| 6 | வருவாய்த்தலை | மாற்றுச்சீட்டில் வருவாய்த்தலை அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒட்ட வேண்டும். | காசோலையில் வருவாய்த்தலை ஒட்ட வேண்டியதில்லை. |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards