12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

Part - A
1.
விரிவாக்கம் JPEG
Joint Photo exports gross
Joint Photographic experts group
Joint processor experts group
Joint Photographic expression group
2.
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.
TIFF
BMP
RTF
JPEG
3.
GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.
8 பிட்
13 பிட்
8 MB
13 MB
4.
_______ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.
Lotus 1-2-3
PageMaker
Maya
Flash
5.
PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _______.
Ctrl + A
Ctrl + B
Ctrl + C
Ctrl + W
6.
பின்வருவனவற்றில் மின்னணு தரவு பரிமாற்றத்திற்கு (EDI) என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?
TSLFACT
SETFACT
FTPFACT
EDIFACT
7.
EDI ன் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்
எட் கில்பர்ட்
பாஸ்கல்
மேற்கூறிய எவரும் இல்லை
8.
பின்வருவனவற்றுள் எது மின்- வணிக பாதுகாப்பு உறுப்பு அல்ல?
நம்பகத்தன்மை
ரகசியத்தன்மை
ஃபிஷிங்
தனியுரிமை
9.
பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______ மூலம் அடையாளம் காணலாம்.
html://
http://
htmls://
https://
10.
பின்வருவனவற்றுள் RANSOMWARE தொடர்பான சரியான கூற்று எது?
தீநிரலின் ஒரு உப தொகுப்பு அல்ல
RANSOMWARE உடனடியாக கோப்பை நீக்குகிறது.
TYPOPARICY என்பது ஒரு வகையான RANSOMWARE
பாதிக்கபட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.
11.
______ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.
Delete database database_name
Delete database_name
Drop database database_name
Drop database_name
12.
Tuple என்பது உறவுநிலை தரவுதளத்தில் _________ யை குறிக்கிறது.
அட்டவணை
வரிசை
நெடுவரிசை
பொருள்
13.
MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.
திட்டம் (Schema)
பார்வை (View)
நிகழ்வு (Instance)
அட்டவணை (table)
14.
கூற்று: பேரின மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன .
காரணம்: விலையுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பேரின மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்று தவறு காரணமும் சரி.
15.
பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை VPA வாக பயன்படுத்த முடியும்
VPA ல் எண்கள் அடங்கவில்லை
VPA ஒரு தனித்த (Unique) முகவரி
பல வங்கிக் கணக்குகள் ஒற்றை VPA கொண்டிருக்க முடியாது
16.
PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?
Adobe
windows
Apache
IIS
17.
பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்
i) num = 41
ii) $ num = 41
iii) echo $ num = 41
iv) echo 41
(i) மற்றும் (ii) இரண்டும்
(ii) மட்டும்
(i) மட்டும்
அனைத்தும்
18.
டாட்காம் நிகழ்வு எதனுடன் தொடர்புடையது?
நெசவுத் தொழில்
கைப்பேசி நிறுவனங்கள்
இணையம் சார்ந்த நிறுவனங்கள்
மேற்கூறிய அனைத்தும்
19.
G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
உள் நோக்கல் மற்றும் வெளி நோக்கல்
அக இணையம் மற்றும் புற இணையம்
முதல் அலை மற்றும் இரண்டாம் அலை
இடது நோக்கல் மற்றும் வலது நோக்கல்
20.
பின்வருவனவற்றில் எது மின்- வணிகத்தின் பண்பு அல்ல.
கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில் ஆய்வு செய்யலாம்.
உடனடியாக விநியயோகம் செய்யப்படும்
ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.
வணிகத்தின் வரையெல்லை உலகளாவியது.
21.
மென்பொருளின் மூலக்குறிமுறையை பொது மக்கள் இலவசமாக மாற்ற முடிந்தால் அது ______.
இலவச மென்பொருள்
மென்பொருள்
திறந்த மூல மென்பொருள்
பொது மூல மென்பொருள்
22.
பின்வருவனவற்றுள் எது Network Simulation மென்பொருள் இல்லை.
Ns2
OPNET
SSFNet
C++
23.
PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?
செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}
தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
24.
கீழ்கண்டவற்றுள் எது அணியை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஆகும்.
i. State[0] = “Tamilnadu”;
ii. \($\)state[ ] = array(“Tamilnadu”);
iii. \($\)state[0] = “Tamilnadu”;
iv. \($\)state = array(“Tamilnadu”);
(iii) and (iv)
(ii) and (iii)
Only (i)
(ii), (iii) and (iv)
25.
அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.
count
Sizeof
Array_Count
Count_array
26.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
\($\)x ;
if (\($\)x==0)print “hi”; else
print “how are u”;
print “hello”
? >
how are u hello
hig hello
hi
வெளியீடு ஏதும் இல்லை
27.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
\($\)a= “” ;
if (\($\)a)
print “all”;
else
print “some”;
? >
All
some
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
28.
ARPANET உள்ளது _______.
அமெரிக்க ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்
மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் பகுதி நெட்வொர்க்
கேட்ச் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்
அமெரிக்க ஆராய்ச்சி நிகழ்ச்சிகள் மற்றும் நெட்வொர்க்
29.
UTP விரிவாக்கம் _______.
இடைவிடாத ட்விஸ்டட் ஜோடி
தடையற்ற ட்விஸ்டட் நெறிமுறை
அவிழ்த்திராத twisted pair
யுனிவர்சல் ட்விஸ்டட் நெறிமுறை
30.
பொருத்துக
| 1. | ஈத்தர் நெட் | தொடர்பி |
| 2. | RJ45 இணைப்பி | ஈத்தர் நெட் |
| 3. | RJ45 ஜாக் | பிளக் |
| 4. | RJ45வடம் | 802.3 |
| A | B | C | D |
| 1 | 2 | 4 | 3 |
| A | B | C | D |
| 4 | 1 | 3 | 2 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
31.
பிரத்தியேகமாக அணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மடக்கு ______.
While
Do while
for
for each
32.
ஒரு குறிப்பிட்ட தடவை மடக்கினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்கினை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
வரம்பற்ற மடக்கு (Unbounded)
வரம்புக்குட்பட்ட மடக்கு (Bounded)
While மடக்கு
for மடக்கு
33.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ? php
\($\)count = 12;
do{
printf(“%d squared = %d < br/ > ”,
\($\)count, pow(\($\)count, 2));
} while(\($\)count < 4);
? >
12 squared 141
12 squared=141
“12 squared=141”
இயக்க நேரப்பிழை
34.
IPv4 முகவரிகளை குறிக்க பின்வரும் எந்த குறிமுறை பயன்படுத்தப்படுகிறது?
இரும
புள்ளி-தசம
பதினறும
அ மற்றும் ஆ
35.
ஒரு முனையத்தின் (node) சிட்டையில் (label) பயன்படுத்தப்படும் அதிகபட்ச எழுத்துகள்?
255
128
63
32
36.
Wi-fi-ன் விரிவாக்கம் _______.
Wireless Fidelity
wired fidelity
wired optic fibre
wireless optic fibre
37.
ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்ட அணுகலைக் கொண்ட TCP / IP வலையமைப்பு_______.
LAN
MAN
WAN
Intranet
38.
எது மின்னஞ்சல் சேவையை வழங்குகிறது?
DNS
TCP
FTP
SMTP
39.
40.
கணினிக்கு ஆபத்தானது______.
வலைப்பதிவாளர்கள்
உலாவி
ஹேக்கர்கல்
ட்விட்டர்
41.
PHP இல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_query(“Connection Object”,”SQL Query”)
query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“SQL Query”)
42.
PHP இல் இணைப்பை மூடுவதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_close(“Connection Object”);
close(“Connection Object”);
mysql_close(“Connection Object”);
mysqli_close(“Database Object”);
43.
கீழ்கண்டவற்றுள் எது PHP இன் சரியான MySQLi செயற்கூறு அல்ல?
Mysqli_connect() Function
Mysqli_close() Function
mysqli_select_data() Function
mysqli_affected_rows() Function
44.
முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மால் பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML ______.
Pseudo இனக்குழுக்கள்
CSS இனக்குழுக்கள்
Javascript இனக்குழுக்கள்
இவையேதுமில்லை
45.
fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது?
PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.
தொலை சேவையகத்தினை திறக்க உதவுகின்றது
PHP யில் கோப்பினை எழுத உதவுகிறது
தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகின்றது.
Part - B
46.
வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்
47.
EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சில வகை வணிக ஆவணங்களை பட்டியலிடுக.
48.
EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?
49.
பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.
50.
உரைத்தொகுதி என்றால் என்ன?
51.
தகவல் கசிவு பற்றி எழுதுக.
52.
ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.
53.
கோப்பு செயலாக்க முறையின் (File Processing System) சில குறைபாடுகளை பட்டியலிடுக.
54.
மின்-பணப்பை கருத்தை விளக்குக.
55.
மறையீட்டு நாணயத்தில் கிளை நாணயம் என்றால் என்ன?
56.
வலை சேவையகம் என்றால் என்ன?
57.
கிளைன்ட் சேவையகம் கட்டமைப்பை வரையறு
58.
மின்-வணிகம் வரையறு.
59.
புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
60.
திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.
61.
NRCFOSS விளக்கம் தருக.
62.
அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள் என்றால் என்ன ?
63.
PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.
64.
நிபந்தனை கூற்றை வரையறு.
65.
PHP ல் if….elseif…..else கூற்றினை வரையறு.
66.
ஒரு ஈத்தர்நெட் போர்ட் என்ன?
67.
சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?
68.
மடக்கு கட்டமைப்பை வரையறு.
69.
for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.
70.
URL என்றால் என்ன?
71.
ஒரு மண்டலம் என்ன?
72.
73.
விரிவாக்கம் தருக – HTTP, HTTPS, FTP.
74.
இணையத்தை வரையறு.
75.
கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்புகள் இடையே உள்ள வேறுபாடு.
76.
இணைத்தல் (Connection) மற்றும் மூடுதல் (Close) செயற்கூறுகளை வேறுபடுத்துக.
77.
mysqli_affected_rows ( ) செயற்கூறை வரையறு.
78.
PHP ல் உள்ள படிவத்தை கையாள்வதில் உள்ள வழிமுறையினைப் வரையறு.
79.
கோப்பினை திறக்கும் செயற்கூறின் பயன் யாது?
80.
ஹேக்கிங் என்றால் என்ன?
81.
குறிமறையாக்கம் என்றால் என்ன?
82.
MP3 பற்றி குறிப்பு வரைக.
83.
AVI படிவம் பற்றி குறிப்பு வரைக.
84.
பேஜ்மேக்கரில் உரைத் தொகுதியை எவ்வாறு உருவாக்குவதை?
85.
ஈத்தர்நெட் வடமிடல் என்றால் என்ன?
86.
ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?
87.
பேஜ்மேக்கரில் மாஸ்டர் பக்கத்தில் உள்ள பொருள்களை எவ்வாறு மறைப்பாய்?
88.
நிரல்களின் பங்களிப்பினால் திறந்த மூல மென்பொருள் சமுதாயம் பெறும் நன்மைகளைப் பட்டியலிடுக.
89.
விரிவாக்கம் தருக.
i) CDAC
ii) FOSS
iii) GNU - GPL
90.
மின் - வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான குறைகளைப் பட்டியலிடுக.
91.
இணைய பரிவர்த்தனையைப் பற்றி முதலில் முன்மொழிந்தவர் யார்? அவரைப் பற்றி எழுதுக.
92.
பரவலாகப் பயன்படுத்தப்படும் அட்டை அடிப்படையிலானப் பணம் செலுத்தல் முறைகளை பட்டியலிடுக.
93.
விற்பனை முனை (POS) என்றால் என்ன?
94.
தேர்வுப்பெட்டி மற்றும் ரேடியோ பொத்தான் வேறுபடுத்துக.
95.
HTML படிவம் என்றால் என்ன?
96.
RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.
97.
தரவுத்தள என்றால் என்ன?
98.
வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?
99.
அக்கினிப் போர்கள் என்றால் என்ன?
100.
Li - Fi என்றால் என்ன?
101.
TCP / IP என்றால் என்ன?
102.
வலையமைப்பு மாதிரி கொண்டுள்ள மூன்று தரவுத்தள கூறுகள் யாவை?
103.
பரிவர்த்தனைக் கட்டுபாட்டு மொழியின் கட்டளைகளின் பயன் யாது?
104.
கிடைப்பெயர் வெளியின் குறைபாடு யாது?
105.
இணைய சேவையகம் என்றால் என்ன?
106.
PHP-ல் லுள்ள தரவு வகைகளைப் பட்டியிலிடு.
107.
PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியிலிடு.
Part - C
108.
ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.
109.
அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்
110.
EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.
111.
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?
112.
சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.
113.
தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.
114.
நுண் மின்னணு பணம் செலுத்துதல் மற்றும் மின்-வணிகத்தில் அதன் பங்கை வரையறு.
115.
சேவையக பக்க ஸ்கிரிப்டிங் மொழிகளின் (Server scripting languages) சிறப்பியல்புகளை எழுதுக.
116.
Name-Your-Price இணையதளங்கள் பற்றிக் குறிப்பு வரைக.
117.
திறந்த மூல கருத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை விவரி
118.
அணிகளை பற்றி சிறு குறிப்பு வரைக
119.
Switch கூற்றினை பற்றி சிறு குறிப்பு எழுதுக
120.
RJ45 இணைப்பியில் ஒரு சிறிய குறிப்பை எழுதவும்.
121.
மடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.
122.
களப்பெயர் மற்றும் URL ஐ வேறுபடுத்து
123.
இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?
124.
சமூக வலையமைப்புகுகளின் சில பயன்களை பட்டியலிடுங்கள்
125.
MySQLi இல் உள்ள செயற்கூறுகளின் பயன்களை எழுதவும்.
126.
படிவத்தை கையாளும் செயற்கூறுகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
127.
வரையறு:
1. நட்பான மோசடி
2. தெளிவான மோசடி
3. முக்கோண மோசடி
128.
PNG படிவம் பற்றி எழுதுக.
129.
டாங்கிள் என்றால் என்ன?
130.
NS2 ன் அம்சங்களை விவரி.
131.
புனை மெய்ம்மை (Augmented Reality) பற்றிக் குறிப்பு வரைக.
132.
பேஜ்மேக்கரில் தேவையில்லாத பக்கங்களை எவ்வாறு நீக்குவாய்?
133.
PHP - ல் உள்ள செல்லுபடியாக்கல் வகைகளை விவரி.
134.
PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?
135.
சமூக வலையமைப்புகளில் உள்ள பொதுவானப் பண்புகளைப் பட்டியலிடு.
136.
TCP ன் செயல்பாட்டை விவரி
137.
வெளித் திறவுகோல் என்றால் என்ன?
138.
மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?
139.
பயனர் வரையறுக்க செயற்கூறுகள் பற்றி விரிவாக எழுதுக.
Part - D
140.
பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.
141.
மின்-வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் பற்றி எழுதுக.
142.
143.
வலைசேவையகம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக
144.
ஏதேனும் ஐந்து மின்-வணிக வருவாய் மாதிரிகளை விளக்குக.
145.
திறந்த மூல மென்பொருள் தனி உரிம மென்பொருள் வேறுபாடு தருக
146.
PHP-ல் செயற்கூறின் கருத்துருக்களை விவரி.
147.
if... elseif ....else கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
148.
நெட்வொர்க் கேபிள்களின் வகைகளை விளக்குங்கள்.
149.
Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.
150.
களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.
151.
TCP / IP மற்றும் OSI குறிப்பு மாதிரிக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
152.
கணினி வலையமைப்பு /வணிக, வீட்டு, மொபைல், சமூக பயன்பாட் டில் பிணையத்தின் சில பயன்பாடுகளை குறிப்பிடவும்.
153.
PHP – ல் தரவுத்தளத்தில் பிழையை கையாளும் முறை மற்றும் தரவுத்தள மேலாண்மை செயல்முறை பற்றி விரிவாக விளக்கவும்.
154.
HTTP பதிவேற்ற செயல்பாட்டின் கருத்துருவினை பற்றி விளக்குக.
155.
கணினியில் படங்களை உருவாக்கும் முறைகளை விவரி.
156.
பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியிலிடு.
Part - A
1.
(b)
Joint Photographic experts group
2.
(c)
RTF
3.
(a)
8 பிட்
4.
(b)
PageMaker
5.
(d)
Ctrl + W
6.
(d)
EDIFACT
7.
(b)
எட் கில்பர்ட்
8.
(c)
ஃபிஷிங்
9.
(d)
https://
10.
(d)
பாதிக்கபட்டவர்களிடமிருந்து கோப்புகளை மீட்க பணம் கோரப்படும்.
11.
(c)
Drop database database_name
12.
(b)
வரிசை
13.
(a)
திட்டம் (Schema)
14.
(d)
கூற்று தவறு காரணமும் சரி.
15.
(c)
VPA ஒரு தனித்த (Unique) முகவரி
16.
(c)
Apache
17.
(b)
(ii) மட்டும்
18.
(c)
இணையம் சார்ந்த நிறுவனங்கள்
19.
(a)
உள் நோக்கல் மற்றும் வெளி நோக்கல்
20.
(b)
உடனடியாக விநியயோகம் செய்யப்படும்
21.
(c)
திறந்த மூல மென்பொருள்
22.
(d)
C++
23.
(d)
செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}
24.
(a)
(iii) and (iv)
25.
(a)
count
26.
(b)
hig hello
27.
(b)
some
28.
(c)
கேட்ச் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டம் ஏஜென்சி நெட்வொர்க்
29.
(c)
அவிழ்த்திராத twisted pair
30.
(c)
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
31.
(c)
for
32.
(b)
வரம்புக்குட்பட்ட மடக்கு (Bounded)
33.
(b)
12 squared=141
34.
(d)
அ மற்றும் ஆ
35.
(c)
63
36.
(a)
Wireless Fidelity
37.
(d)
Intranet
38.
(d)
SMTP
39.
(a)
40.
(c)
ஹேக்கர்கல்
41.
(c)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
42.
(a)
mysqli_close(“Connection Object”);
43.
(c)
mysqli_select_data() Function
44.
(b)
CSS இனக்குழுக்கள்
45.
(a)
PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.
Part - B
46.
பல்லூடகம் என்னும் சொல் 'பல' மற்றும் 'ஊடகம்' என இரண்டு சொற்களை உள்ளடக்கியது. அதாவது ஊடகங்களின் பல வடிவங்களை ஒன்றாக இணைக்கிறது. சேமித்தல், தகவல் தொடர்பு, வழங்கல் மற்றும் உரை, ஒளி, நிழற்படம், வரைகலை மற்றும் ஒலி ஆகியவற்றின் உள்ளீடு/வெளியீடு ஊடாடுதல் போன்ற சேவைகளையும் வழங்குகிறது.
அதன் சிறப்பம்சம் :
(i) ஊடகங்களை ஒரே ஊடகத்தில் ஒரே தகவல் தொகுப்பில் ஒன்றிணைக்கிறது .
(ii) தகவல்துறையில் பல்லூடகம் சமீபத்திய செறிவூட்டும் அனுபவமாக மாறி வருகிறது .
47.
(i) டெலிவரி குறிப்புகள் (Delivery Notes)
(ii) விலைப்பட்டியல்கள் (Invoices)
(iii) கொள்முதல் ஆணைகள் (Purchase Orders)
(iv) செயல்பாட்டு ஒப்புகைகள் (Functional Acknowledgment)
48.
1. EDIFACT பதிப்புகள் கோப்பகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
2. EDIFACT கோப்பகத்தில் புதிய செய்திகளை சேர்க்க அல்லது புதுப்பிக்க ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி என வருடத்திற்கு இருமுறை திருத்தி அமைக்கப்படும்.
3. EDIFACT கோப்பகங்கள் D. 18B போன்ற பெயர்களைக் கொண்டுள்ளன.
49.
விண்டோஸ் 7 இயக்க அமைப்பில், start > All Programs > Adobe > Page Maker 7.0 > Adobe PageMaker 7.0 என்ற வரிசையில் கிளிக் செய்து அடோப் பேஜ்மேக்கரைத் திறக்கலாம்.
50.
1. பேஜ்மேக்கரில் உள்ள எல்லா உரைகளும் உரைத் தொகுதி என்று அழைக்கப்படும் கலன்களின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.
2. உரைத்தொகுதியானது நாம் தட்டச்சு செய்த உரையையோ (அ) ஒட்டிய உரையையோ (அ) வேறு ஆவணத்திலிருந்து கொண்டு வரப்பட்ட உரையையோ கொண்டிருக்கும்.
51.
1. மின்-ஆவணங்களை இடைமறித்து திருடுதல் தகவல் கசிவு என அழைக்கப்படுகிறது.
2. மின்-வணிகத்தில் வர்த்தக ஆவண இரகசியங்கள் கசிவு இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.
3. விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையிலான பரிமாற்றத்தின் உள்ளடக்கம் மூன்றாம் தரப்பினரால் திருடப்படுவது.
4. வணிகர் (அ) வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றவரால் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவது.
52.
1. ஃபிஷிங் என்பது ஒரு வகை மின்-வணிக அச்சுறுத்தலாகும்.
2. உண்மையான வங்கி அதிகாரியாக தன்னை பாசாங்கு செய்யும் ஒருவர், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் பயனரை தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு எண், கடன் அட்டை விவரங்கள், OTP,PIN அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கிய தரவை கேட்டு தனிநபர்களை வலையில் சிக்க வைக்க முயற்சிப்பார்.
3. அதன் விளைவு அடையாள திருட்டு மற்றும் நிதி இழப்பு போன்ற பேரழிவு செயல்களுக்கு வழிவகுக்கும்.
53.
1. தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கத்திற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஒரே தரவின் பல நகல்களை உருவாக்கி இடங்களை வீணாக்கியது.
2. அதிக பராமரிப்பு : அணுகல் கட்டுப்பாட்டு மற்றும் நிலைத்தன்மையைச் சரிபார்க்க அதிக பராமரிப்புத் தொகை தேவைப்பட்டது.
3. பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கபட்டது.எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
54.
மின்னணு பணப்பை (e-Wallets) பயனர்கள் மின்னணு பரிவர்த்தனைகளைத் திறன் பேசிகள் அல்லது கணினிகள் மூலம் இணையத்தில் விரைவாக மற்றும் பாதுகாப்பாகச் செய்ய அனுமதிக்கிறது. ஒரு உண்மை யான பணப்பை போலவே மின்னணு பணப்பையானது நம்முடைய பணத்தை மின்னணு வடிவில் தேக்கி வைத்திருக்கும். நிகழ்நிலையில் (ONLINE) பொருட்களை வாங்குவதற்கு ஒரு வசதியாக வழி ஆகும்
55.
(i) பல மறையீட்டு நாணயங்கள் ஒரே மூல குறிமுறையின் அடிப்படையில் இயங்குகின்றன
(ii) இதில் நிரலர், நேரம், தேதி, தொகுதிகளில் எண்ணிக்கை போன்ற சில அலப்புருக்களில் சிறிய மாற்றங்களை மட்டுமே செய்கின்றனர்
(iii) அந்த நாணயங்கள் கிளை நாணயங்கள் எனப்படும்
56.
வலை சேவையகம் என்பது பயணர்களுக்கு வலை பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.
57.
1. சேவையகம் என்பது கிளைன்ட் என்று அழைக்கப்படும் மற்ற நிரல்கள் (அ) சாதனங்களின் செயல்திறனை வழங்கும் ஒரு கணிப்பொறி (அ) சாதனங்களின் கட்டமைப்பே கிளைன்ட் சர்வர் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
2. வலையமைப்பில் (இணையகம்/அகஇணையகம்) இரண்டு விதமான வன்பொருள் அமைப்புகளிடையே பயன்பாடுகளை பகிரும் வழிமுறைகளை பயனாளர் சேவையக கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
58.
மின்- வணிகம் என்பது கணிப்பொறி வலையமைப்புகள் வழியாகப் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களை வாங்கும் அல்லது விற்கும் வழிமுறை ஆகும்.
59.
ஒரு நிறுவனம் தனது வேலையின் ஒரு பகுதியை செய்ய மற்றொரு நிறுவனத்தை பணியமர்த்தினால், அது புறத்திறனீட்டம் என்று அழைக்கப்படுகிறது.
60.
திறந்த மூல மென் பொருள் என்பது மென் பொருளின் மூலக்குறிமுறையை பயன்படுத்த அல்லது மாற்றம் செய்ய பயனர் மற்றும் பிற நிரலருக்கு வாய்ப்பு வழங்கும் முறை ஆகும்.
1. திறந்த மூல மென்பொருள் என்பது பலரது கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு அனைவரும் இலவசமாக அணுக்க கூடியதாக உள்ளது
2. பத்தாண்டு களுக்கு பின்பு அதாவது 1990களில் உருவாக்கப்பட்ட Open Source Software கருத்துருவானது மென்பொருள் மாற்றம், தொடங்குறிமுறை திருத்தம், உரிமம் வழங்கல் மற்றும் விநியோகித்தல் ஆகியவை வலியுறுத்துகிறது
61.
National Resource Centre for Free and Open Source Software (NRCFOSS) என்ற இந்திய அரசாங்கத்தின் அமைப்பு இந்தியாவின் இலவச திறந்த மூல மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கு உதவி செய்கிறது
62.
மதிப்புக்களை அளப்புருக்களின் மூலம் ஒரு அளப்புருவிலிருந்து அளப்புருவுக்கு அனுப்ப முடியும்.
அளபுருக்களை செயலுருபுகள் என்றும் அழைக்கலாம். இது மாறிகளை போன்று இருக்கும். செயலுறுபுகள் செயற்கூறின் பெயருக்கு பின்னால் அடைப்பு குறிகளுக்குள் குறிப்பிட பட வேண்டும். செயலுருபுகளை அனுப்புவதற்கு எந்த விதமான வரம்பும் இல்லை. அவற்றை காற்புள்ளிகளால் பிரிக்க வேண்டும்.
63.
function function Name ( )
{
Custom Logic code to be excuted ;
}
64.
நிபந்தனைக் கூற்றுகள் என்பன நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்யப் பயன்படும் கூற்றுகள் ஆகும்.
65.
1. ifelseif - else கூற்று என்பது if -else கூற்றுகளின் கலவையாகும்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் நிபந்தனையின் அடிப்படையில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.
66.
1. ஈத்தர்நெட் போர்ட் (அ) தொடர்பி என்பது ஈத்தர்நெட் அட்டையில் ஒரு திறவுப் பகுதியாகும். இது RJ45 இணைப்பியை ஏற்கிறது
2. ஈத்தர்நெட் வடத்தின் RJ45 இணைப்பியை ஏற்படுகிறது
3. மதர்போர்டில் உள்ள ஈத்தர்நெட் அட்டையுடன் ஈத்தர்நெட் வடத்தை இணைக்கிறது
67.
RJ-21 இணைப்பான் ஒரு முனையில் 25 ஊசிகளும் அடுத்த முனையில் 25 ஊசிகளுமாக மொத்தம் 50 ஊசிகளைக் கொண்டுள்ளது. இது சாம்ப் இணைப்பி அல்லது ஆம்பனோஸ் இணைப்பி எனவும் அழைக்கப்படுகிறது.
68.
மடக்கு அமைப்பு: நிரலாக்கம் செய்யும் போது ஒரே குறிமுறைத் தொகுதியை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்துவதற்கோ (அ) குறிப்பிட்ட நிபந்தனையை அடையும் வரை செயல்படுத்தப் பயன்படும் கூற்றுகள். இது பன்முறை செயல்பாடுகளை எழுதுவதற்கு பயன்படுகிறது.
69.
| for மடக்கு | foreach மடக்கு | |
| 1 | குறிமுறைத் தொகுதியைக் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்த உதவுகிறது. | அணிகளில் பன்முறையைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது. |
| 2 | PHP உட்பட C, C++, Java போன்ற மொழிகளில் பயன்படும் மடக்கு அமைப்பாகும். | PHP-ல் மிகவும் பிரத்யேகமான ஒன்றாகும். |
70.
URL(Uniform Resource Locator) என்பது இணையத்தில் ஒரு ஆவணத்தின் தனித்த முகவரியாகும்.
URL ஆனது நான்கு பகுதிகளைக் கொண்டது.
அவை
1. நெறிமுறைகள் (protocols)
2. புரவலன் பெயர் (Host name)
3. கோப்புறை பெயர் (Folder name)
4. கோப்பு பெயர் (File name)
71.
(i) மண்டலம் என்பது தொடர்ச்சியான களங்கள் மற்றும் துணைக்களங்களால் ஆனது.
(ii) ஒரு மண்டலத்தில் ஒரே ஒரு களம் மட்டும் இடம்பெற்றிருந்தால் அங்கு களமும் மண்டலமும் ஒன்றேயே குறிக்கும்.
72.
73.
| HTTP | Hypertext Transfer Protocol |
| HTTPS | Hypertext Transfer protocol Secure. |
| FTP | File Transfer Protocol. |
74.
1. இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பு - உலகளாவிய வலையமைப்பு ஆகும்.
2. இது உலகளாவிய தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு.
3. இது கல்வி, தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
75.
| குறிப்பு | கம்பி வலையமைப்பு | கம்பியில்லா வலையமைப்பு |
| பரிமாற்ற ஊடகம் | தாமிரக்கம்பிகள், கண்ணாடி இழை கம்பிகள் ஈதர்நெட் | மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், அகச் சிவப்புக் கதிர்கள். |
| செயல்பாட்டின் வேகம் | அதிகம் | குறைவு |
| விலை | குறைவு | அதிகம் |
| நிறுவுதல் | கடினம் மற்றும் அதிக நேரம் தேவை | சுலபம் மற்றும் குறைந்த நேரம் தேவை. |
| நம்பகத் தன்மை | அதிகம் | குறைவு |
76.
| இணைத்தல் | மூடுதல் | |
| 1 | mysqli_connect() மூலம் செயற்கூறின் PHP நிரல் மொழி வழியாக தரவுதள சேவையக கணினியை இணைக்க முடியும். | mysqli_close () செயற்கூறு PHP ஸ்கிரிப்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்துள்ள தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது. |
| 2 | இதில் நான்கு அளபுருக்கள் பயன்படுத்தப்படுகிறது. | இதில் இரண்டு அளபுருக்கள் பயன்படுத்தப்படுகிறது. |
77.
mysqli_affected_rows (): முந்தைய SELECT, INSERT, UPDATE, REPLACE (அ) DELETE வினவல்களினால் பாதிக்கப்பட்ட வரிசைகளின் எண்ணிக்கையைத் திருப்பித் தரும் செயற்கூறாகும்.
1. 0 வை விட பெரிய முழு எண் மதிப்பு பாதிக்கப்பட்ட வரிசைகளின் எண்ணிக்கையையும், 0 என்ற மதிப்பு எந்த ஒரு பதிவும் பாதிக்கப்படவில்லை என்பதையும், -1 என்ற மதிப்பு வினவில், பிழையைத் திருப்பி அனுப்பியதையும் குறிக்கும்.
int mysqli_affected_rows(Connection object);
78.
1. படிவ ஒட்டு (< Form >tag), ஆவணத்திலுள்ள அனைத்து படிவ உறுப்புகளைக் கட்டுப்படுத்தவும், வழிமுறையைக் (POST (அ) GET) குறிப்பிடவும் பயன்படுகின்றது.
2. முறைமை என்பது HTML ல் உள்ள படிவ ஓட்டின் (< Form >tag) ஒரு பண்புக்கூறாகும்.
3. HTML படிவ உறுப்புகளில் பயனர் உள்ளீடுகளை வழங்கி submit பொத்தானைக் கிளிக் செய்யும் பொழுது, கோரிக்கை (Request) ஒன்று உருவாக்கப்பட்டு படிவ ஓட்டின் Action பண்புக்கூறில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள PHP கோப்பினை அடைகின்றது. அனைத்து உள்ளீட்டு மதிப்புகளும் தொகுக்கப்பட்டு POST (அ) GET வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
79.
PHP கோப்பினை திறத்தல்:
1. fopen ( ) என்பது PHP ல் உள்ள அமைப்பு செயற்கூறாகும்.
2. இந்த செயற்கூறானது சேவையகத்திலுள்ள ஒரு கோப்பினைத் திறக்க உதவுகிறது.
3. இது இரண்டு அளபுருக்களைக் கொண்டுள்ளது.
4. கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பயன்படுகின்றது.
80.
1. ஹேக்கிங் என்பது கணிப்பொறி (அ) வலையமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத ஊடுருவலை குறிக்கிறது.
2. சட்டவிரோதமாகக் கணிப்பொறியின் பாதுகாப்பு அரணை உடைத்து, இணையதளத்தில் உள்புகுதல் மற்றும் இரகசியத் தகவலை இடைமறித்தல் செயல் ஆகும்.
81.
குறிமறையாக்கம்: அங்கீகரிக்கப்படாத அணுகலிலிருந்து தரவுகளைப் பாதுகாக்க () மறைக்க ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி, ஒழுங்கற்ற தரவாக மாற்றும் முறை.
82.
MP3(MPEG layer-3 Format) :
1. இசையை சேமிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் பிரபலமான வடிவம் MPEG Layer -3 வடிவமாகும்.
2. WAV கோப்புகளின் பத்தில் ஒரு பங்கு சமமான அளவுக்கு MP3 கோப்புகள் தோராயமாக குறுக்கப்படும்.
83.
1. ஒரு விண்டோஸிற்கான ஒரு ஒளிக்காட்சி கோப்பு வடிவமாகும்.
2. இங்கு, ஒலி மற்றும் படத்தின் கூறுகளைக் கோப்பில் மாற்ற நெடுவரிசை தொகுப்பில் சேமிக்கப்படுகிறது.
84.
1. ஆவணப் பக்கத்தில் அல்லது ஒட்டுப்பலகையில் டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்து இழுத்து, அதில் தட்டச்சு செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
2. ஒரு காலியான ஆவணப்பக்கத்திலோ அல்லது பத்தியிலோ உரையேற்றப்பட்ட பணிக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம் உரைத் தொகுதியை உருவாக்கலாம்.
85.
ஈத்தர்நெட் வடமிடல் (Ethernet Cabling) என்பது ஈத்தர்நெட் வடங்களைப் பயன்படுத்தி கணினிகளை மற்ற சாதனங்களுடன் இணைக்கும் செயலாகும்.
86.
ஈத்தர்நெட் அட்டை என்பது வலையமைப்பில் உள்ள சாதனங்களை இணைக்கவும், அவற்றுக்கிடையே தரவுகளை பரிமாற்ற அனுமதிக்கும் வலையமைப்பு இடைமுக அட்டை (NIC) ஆகும்.
87.
மாஸ்டர் பக்கத்தில் உள்ள பொருள்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் தெரியாமல் மறைக்க View > Dispaly Master Items என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
88.
(i) தகவல் தொடர்புக் கருவிகள்.
(ii) பகிர்வு சீர்திருத்த கட்டுப்பாட்டு அமைப்புகள்
(iii) பிழைகண்காணிப்பாளர் மற்றும் பணிக்கான பட்டியல்
(vi) சோதனை மற்றும் பிழைத்திருத்தம் கருவிகள்.
89.
| i) CDAC | Centre for Development of Advanced Computing |
| ii) FOSS | Free Open Source Software |
| iii) GNU - GPL | GNU General Public License |
90.
1. மக்கள் அனைத்துப் பொருட்களையும் நிகழ்நிலையில் வாங்குவதில்லை
2. போட்டி மட்டும் பெருநிறுவன பாதிப்பு
3. பாதுகாப்பு
4. வாடிக்கையாளர் பற்றிணைப்பு
5. திறன்மிக்க ஊழியர்களின் பற்றாக்குறை
6. பரிவர்த்தனைகள் அளவு மற்றும் பாதிப்பு.
91.
(i) 1979 ல் ஆங்கிலேய தொழில் முனைவோர் மைக்கேல் ஆல்ட்ரிச் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் இடையே இணையப் பரிவர்த்தனையைச் செயல்படுத்தும் ஒரு செயல் நுட்பத்தை முன்மொழிந்தார். பின்னாளில் அது தொழில் ரீதியாக மின் - வணிகம் என்று அழைக்கப்பட்டது.
(ii) 1980 ல் அவர் தொலைக்காட்சி, கணினி மற்றும் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் தொழில்நுட்பங்கள் அடங்கிய Teleputer எனும் பல்நோக்கு இல்ல தகவமைவு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.
92.
1. கடன் அட்டை (பிறகு செலுத்து)
2. பற்று அட்டை (இப்போதே செலுத்து)
3. சேமிக்கப்பட்ட மதிப்பு கொண்ட அட்டை (முன்பே செலுத்து)
93.
(i) விற்பனை முனையின் (POS) - இது வாடிக்கையாளர்கள் கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு பணம் செலுத்த வழிவகை செய்கிறது.
(ii) வாடிக்கையாளர் வசதிக்காக சில வங்கிகள் POS முனையங்களில் பற்று அட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தை பெற அனுமதிக்கின்றன.
94.
| தேர்வுப்பெட்டி | ரேடியோ போத்தான் |
| ஒரு நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மதிப்பினைத் தேர்வு செய்ய முடியும். | ஒரு நேரத்தில் ஒரு மதிப்பினைத் தான் தேர்வு செய்ய முடியும். |
95.
HTML: (Hypertext mark - up language) என்பது வலைப்பக்கங்கள் மற்றும் வலைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவான குறியீட்டு மொழியாகும். ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பாறையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிர்பிட் (or) PHP ஸ்கிர்பிட்மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
96.
1. mySQL
2. Oracle
3. IBM DB2
4. மைக்ரோசாப்ட் SQL SERVER
97.
தரவுத்தளம்: ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். இதில் தரவுகள் கணினியில் மின்னணு முறையில் தேக்கி வைக்கப்பட்டு தேவையானபோதெல்லாம் அணுகப்படுகின்றன.
98.
வீட்டில் வலையமைப்புகள் இரு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
1. கம்பி வலையமைப்பு
2. கம்பியில்லா வலையமைப்பு
(i) கம்பி மூலம் இணைக்கப்பட்ட பிணைய அமைப்பு. உதாரணமாக ஒலிபெருக்கி, cctv, ஆச்சுப் பொறிகள் மற்றும் வருடிகள் போன்ற சாதனங்கள் கேபிள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.
(ii) கம்பியில்லா வலையமைப்பு கேபிள்களே இல்லாமல் டேப்லெட் கம்ப்யூட்டர், உட்புற கேமராக்கள் மற்றும் e-readers போன்ற சத்தங்களை இணைக்கிறது.
99.
(i) அக்கினி போர்கள் இணையதள பயனர்களிடையே நடைபெறும் ஒரு வாக்கு வாதம்.
(ii) ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தாக்குதல்களை மின்னஞ்சல் மூலம் மற்றும் ஆன்லைன் தொடர்புகளின் பிற வடிவங்களில் தூண்டிவிடுவதாகும்.
100.
1. Li - Fi என்பது தரவுப் பரிமாற்றத்திற்கு ஒளி உமிழும் இரு முனையங்களைப் (LEDS) பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பமாகும்.
2. Li - Fi என்பது Light Fidelity என்பதன் சுருக்கமாகும்.
3. ஷரால்டு ஹாஸ் என்பவரால் முதல் முதலில் Li - Fi என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
4. கணினி அறிவியலாளர்கள் ஆய்வகத்தில் 224 gbps வேகம் வரை செயல்படுத்தி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
101.
1. Transmission Control Protocol / Internet Protocol (TCP / IP) என்பது இணையத்தின் அனைத்து கணினிகளிலும் தகவல் தொடர்புகளை நிர்வகிக்கும் நெறிமுறைகளின் தொகுப்பாகும்
2. TCP / IPநெறிமுறை தகவலை எவ்வாறு தொகுத்து அனுப்புவது, பெறுவது மற்றும் அதனுடைய இலக்கு இடத்தை ஏற்பாடு அடைவது என்றும் கூறுகிறது.
102.
1. வலையமைப்புத் திட்டம் : தரவுத்தள கட்டமைப்பு பற்றிய அனைத்தையும் வரையறுக்கிறது.
2. துணைத்திட்டம் : பயனருக்கு தரவுத்தளங்களில் கட்டுப்பாடு விதிக்கிறது.
3. மொழி : தரவுத்தளத்தை அணுகுவதற்கான அடிப்படை செயல்முறை.
103.
1. பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு மொழியில் உள்ள SQL கட்டளைகள் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கிறது.
2. மேலும் அது மாற்றங்களை நிரந்தரமாக தரவுத்தளத்தில் சேமிக்க உதவுகிறது.COMMIT, ROLLBACK, SET TRANSACTION மற்றும் SAVEPOINT ஆகிய கட்டளைகள் இந்த வகையைச் சார்ந்ததாகும்.
104.
கிடைப்பெயர் வெளியில் உள்ள முக்கிய குறைபாடு அவை பெரிய அளவிலான அமைப்பில் (large system) பயன்படுத்தப்பட்ட முடியாது. ஏனெனில் பெரிய அளவிலான அமைப்புகளில் சிக்கல் மற்றும் உபரி நிலையைத் தவிர்பதற்காக அவை மைய நிலையில் அணுகப்பட மற்றும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
105.
(i) இணைய சேவையகம்: இணைய (WWW) பயனரின் வினவல்களைக் கையாளும் பிரத்யேக கணினியில் இயங்கும் ஒரு நிரலாகும்
(ii) வலைத்தளங்களை நிறுவும், HTTPஐப் பயன்படுத்தி வலைத்தளங்களின் உள்ளிடக்ககளை பயனருக்குக் காட்ட பயன்படுத்தப்படுகிறது.
106.
1. String
2. Array
3.Integer
4. Object
5. Float
6. NULL
7. Boolean
8. Resource
107.
PHP யானது
1. திறந்த மூலம் ஆகும்.
2. எழுத்து வகை உணர்வு கொண்டவை.
3. செயல்திறன் மிக்க நிரலாக்க மொழி ஆகும்.
4. இயங்குதளம் சார்பற்ற நிரல் மொழி ஆகும்.
5. நிகழ்நேர அணுகல் கண்காணிப்பு நிரல் மொழி.
Part - C
108.
1. AVI (Audio Video Interleave)
2. MPEG (Moving Pictures Experts Group)
109.
அசைவூட்டலில், திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
(i) எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
(ii) குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைக் கொடுக்கும்.
(iii) இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்பம் :
(i) அசைவூட்டல் இரு (அ) முப்பரிமாணங்களைக் கொண்டது.
(ii) திரையில் X, மற்றும் Y அச்சுகளுக்கு இடையேயான பரப்பில் இரு பரிமாண அசைவூட்டல் நிழற்படத்தை உயிரோட்டமாகக் கொண்டு வருகிறது.
(iii) முப்பரிமாண அசைவூட்டத்தில் X,Y மற்றும் Z ஆகிய மூன்று அச்சுகளுக்கிடையே உயிரோட்டம் நடைபெறுகிறது.
(iv) அசைவூட்டல் கருவிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இரண்டு வகையான அசைவூட்டல்களாவன:
1. பாதை அசைவூட்டல்
2. சட்டக அசைவூட்டல்
1. பாதை அசைவூட்டல் :
மாறாத பின்னணியைக் கொண்ட திரையில் ஒரு பொருளை நகர்த்துவதை உள்ளடக்கியது.
2. சட்டக அசைவூட்டல் :
பல பொருட்கள் ஒரே சமயத்தில் நகர்வதற்கு அனுமதிக்கிறது மற்றும் பின்னணி (அ) பொருள்களும் மாறுகிறது.
110.
மின்னணு தரவு பரிமாற்றக் கட்டமைப்பு நான்கு வெவ்வேறு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது
1. பயன்பாட்டு அடுக்கு
2. தரப்பாடுகள் அடுக்கு
3. இடமாற்று அடுக்கு
4. பரும அடுக்கு
111.
1. Master Pages பணிக்குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்பொழுது டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்தால் செருகும் புள்ளி I-beam ஆக மாறும்.
3. பக்க எண் இட வேண்டிய இடது மாஸ்டர் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
5. இடது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'LM' எனத் தோன்றும்.
6. இதே போன்று பக்க எண் இட வேண்டிய வலது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
8. வலது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'RM' எனத் தோன்றும் மற்ற பக்கங்களில் சரியான பக்க எண்கள் தெரியும்.
112.
(i) சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் (Asymmetric i Key Encryption) பொதுக் குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இது பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களை பயன்படுத்துகிறது.
(iii) RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
113.
(i) தரவுகளை சேமித்தல் என்ற கருத்துரு பல்வேறு வடிவமைப்பில் 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
(ii) முந்தைய நாட்களில், தரவுகளை சேமிக்க துளை அட்டை (Punched Card) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பிறகு கோப்புகள் (Files) பயன்படுத்தப்பட்டன.
(iii) கோப்பு அமைப்புகளே தரவுதள அமைப்பின் முன்னோடி என்றழைக்கப்படுகின்றன.
(iv) கோப்பு அமைப்பில், குறியீட்டு, சீரற்ற மற்றும் தொடர் அணுகல் போன்ற பல்வேறு அணுகல் முறைகள் உள்ளன. கோப்பு அமைப்பில் பின்வரும் பல வரம்புகள் இருந்தன.
தரவு நகல்கள் : ஒரே தரவானது, செயலாக்கதிற்கான பல வளங்களால் பயன்படுத்தப்பட்டது.
அதிக பராமரிப்பு: அணுகல் கட்டுப்பாடு மற்றும் தரவு நிலைத்தன்மையை சரிபார்க்க அதிக பராமரிப்பு தொகை தேவைப்பட்டது.
பாதுகாப்பு : தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கப்பட்டது. எனவே, கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுதள அமைப்புகள் பிரபலமானது.
114.
(i) இது செயல்திறன் மிக்க, சிறிய அளவிலான மற்றும் அடிக்கடி பணம் செலுத்தலை அனுமதிக்கும் ஒரு மின்னணு பணம் செலுத்தல் அமைப்பு ஆகும்.
(ii) பெரும்பாலான நுண் மின்செலுத்தல் அமைப்புகள், இணையம் மூலம் எளிய பொருட்களுக்குப் பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
(iii) எடுத்துக்காட்டு நிகழ்நிலை விளையாட்டுகளுக்கான சந்தா, இணையத்தில் மின்-இதழ்களை வாசிப்பது. ஒரு பாடலைக் கேட்பது அல்லது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றவற்றிற்கான கட்டணங்கள்.
115.
(i) குறிமுறைகள் முழுவதுமாக தொலைதூர கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வலைசேவையகத்தில் இயக்கப்படுகின்றது.
(ii) நிகழ்நேர வலை உருவாக்கத்திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலைப் பக்கங்களை உருவாக்குகின்றது.
(iii) பயனர் குறிமுறையைப் பெறுகிறார் மற்றும் வலைதள உள்ளடக்கத்தை இணைய உலவி மூலம் கணிப்பொறியில் பார்க்கிறார்.
(iv) மிகவும் பாதுகாப்பானது.
116.
Name-Your-Price இணையதளங்கள் சாதாரண இணையதளங்கள் சில்லறை இணையதளங்கள் போல இருக்கும். மாறாக, நுகர்வோர் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது சேவைக்குச் சேவை வழங்குனருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இது C2B மின்- வணிக மாதிரி அடிப்படையில் இயங்குகிறது. https://in.hotels.com/
117.
1. Organizations related to Open Source
2. Apache Software Foundation
4. The Eclipse Foundation
5. Free Software Foundation
6. Linux Foundation
7. OpenCourseWare Consortium
8. Open Source Initiative
118.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
PHP-ல் அணிகளின் பயன்கள் :
1. PHP -ல் அணிகளைப் பயன்படுத்தி foreach கூற்றுடன் இணைப்பது மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
2. மிகச்சிறிய குறிமுறையைக் கொண்டு கூட மடக்கினுள் விரைவாக அணியை செலுத்தலாம்.
PHP-ல் அணிகளின் வகைகள் :
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமான அணிகள்
119.
1.switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்ய பயன்படுகிறது.
switch(n) {
case lable 1:
code to be executed if n=labell;
break;
case lable2:
code to be executed if n= label 2; .
break;
case lable3:
code to be executed if n=;lableI3;
break;
default:
code to be executed if n is different
from all labels;
}
2. break கூற்றை ஒவ்வொரு case கூற்றின் இறுதியில் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த case தொகுதியைத் தொடர்ந்து வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும்.
120.
(i) RJ45 ஈத்தர்நெட் இணைப்பி ஒரு சிறிய பிளாஸ்டிக் cube ஆகும். இதில் கம்பிகள் இணைக்கப்பட்டு இணையத்தொடர்பினை ஏற்படுத்த தயார் செய்யப்படுகிறது
(ii) RJ45 இணைப்பி ஒரு தொலைபேசி ஜாக் (Jack) போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் அளவில் சற்று பெரியது
(iii) ஒவ்வொரு RJ45 இணைப்பிற்கும் எட்டு ஊசிகள் (pins) உள்ளன
(iv) RJ45 இணைப்பிகள் ஈத்தர்நெட் வடத்தின் இருமுனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது
(v) இது 8 - position, 8 - contact (8P8C) இணைப்பி என்றும் அறியப்படுகிறது
121.
1. நாம் நிரல் எழுதும் போது ஒரே குறிமுறைத் தொகுதியை நிரலின் பல இடங்களில் அடிக்கடி பயன்படுத்த வேண்டுமெனில் மடக்கினை பயன்படுத்தலாம்.
2. பண்முறைச் செயல்பாடுகளை எழுதுவதற்குப் பயன்படுகிறது.
122.
| களப்பெயர் (Domain Name) | URL | |
| 1 | நினைவில் கொள்வதற்கு எளிதான வலைதளங்களின் IP முகவரியின் வடிவம் | இணையத்தில் உள்ள ஆவணத்தின் முகவரியாகும். |
| 2 | URL ன் ஒரு பகுதி ஆகும். எ.கா: tnresults.nic.in |
களப் பெயரைப் பகுதியாகக் கொண்டது. எ.கா: http://tnresults.nic.in/rgnfs.htm |
123.
| வகை | வரையறை | எடுத்துக்காட்டு |
| இணையம் | ஒரு உலகளாவிய வலையமைப்பு, உலகெங்கிலும் பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் பொதுவான TCP/IP வலையமைப்பை கொண்டதாகும். | நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்புதல் |
| அகஇணையம் | ஒரு நிறுவனத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு அணுகல் அனுமதி தடை செய்யப்பட்ட TCP/IP வலையமைப்பைக் கொண்டதாகும். | பணியாளர்களின் தனிப்பட்ட கோப்பில் ஒருவருடைய பதிவை அணுகுதல். |
| புறஇணையம் | உறுப்பினர்களுக்கு அணுகல் அனுமதி மறுக்கப்பட்ட TCP/IP வலையமைப்பைக் கொண்டதாகும். | புற வணிகர்களிடமிருந்து பொருளின் இருப்பு நிலையைச் சோதனை செய்தல். |
124.
நீண்டதூர குழு தகவல் பகிர்வு: நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மொபைல் ஃபோன் அழைப்புகளிலோ (அ) உரை செய்திகளிலோ தொடர்பு கொள்ளலாம் என்றாலும் சமூக வலைகள் தொடர்பில் இருப்பதற்கு மேலும் சிறந்த சூழலைத் தருகின்றன. குழு கலந்துரையாடல்கள் மிகவும் வசதியானவை.
ஒளிபரப்பு அறிவிப்புகள்:
1. இதன் மூலம் சமூக வலையமைப்பில் வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் விளம்பரம் பற்றி உள்ளூர் கடைகள் விளம்பரம் செய்யலாம்.
2. மேலும் நகரங்களில் அவசரகாலச் செய்திகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஆகியவற்றைப் பரப்புவது எளிதாகிறது. வணிகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனது பொருட்களை சந்தைப்படுத்த முடியும்.
பன்முக சிந்தனையை வளர்த்தல்:
1. சமூக வலைகள் ஒத்த பின்னணி மற்றும் ஆர்வம் கொண்ட மக்களை ஈர்ப்பதாக சிலரால் விமர்சிக்கப்படுகிறது. நிகழ்நிலை விவாதங்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமானவை.
2. தனிநபர்கள் அதிக தீவிர கருத்துக்களைத் தொடங்கவிட்டாலும், காலபோக்கில் அவர்களது சிந்தனை, மற்றவர்களின் கருத்துகள் சிலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
125.
(i) MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும்.
(ii) இது MySQLi தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
(iii) MySQLi தரவுத்தளத்தை தொடர்பு கொள்ளவே MySQLi செயற்கூறுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(iv) இந்த செயற்கூறுகள் MySQLi தரவுத்தள சேவையகத்தை அணுக அனுமதிக்கிறது.
126.
(i) fopen() என்பது PHP கோப்பினை திறக்கப்பட உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும்.
(ii) fread() செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை படிப்பதற்கு உதவுகின்றது.
(iii) fclose() செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது.
(iv) fwrite() செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
(v) file_put_contents() செயற்கூறானது ஒரு கோப்பினை சேர்க்க உதவுகிறது.
127.
1. நட்பான மோசடி:
வாடிக்கையாளர், பொருட்களைப் பெறவில்லை என்ற பொய்யான தகவல் தந்துசெலுத்திய பணம் திரும்பக் கொடுக்க கோருதல்.
2. தெளிவான மோசடி:
திருடப்பட்ட ஒரு கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை வாங்குதல்.
3. முக்கோண மோசடி:
போலி நிகழ்நிலை கடைகள் மலிவு விலை சலுகைகள் அறிவித்து கடன் அட்டை தகவல்களை விற்றல்.
128.
PNG (Portable Network Graphics)
1. குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு குறுக்கப்பட்டு செவ்வக நிழற்படங்களாக சேமிக்கப்படும் ஒரு நீட்டிப்பு கோப்பு வடிவமாகும்.
2. GIF-க்கு மாற்றாகச் செயல்படுகிறது மற்றும் Tiff-ன் பல பொதுவான பயன்களையும் மாற்றுகிறது.
3. நிகழ்நிலை பார்வையிடு பயன்பாடான உலகாளாவிய வலையில் PNG நன்றாக வேலை செய்யும்.
4. சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்[பட்டுள்ளது.
129.
1. டங்கில் ஒரு சிறிய புறச் சாதனம் ஆகும்.
2. இது இணையும் ஒரு SIM Slot ஐக் கொண்டிருக்கும்.
3. மேலும் இது கணினியை இணையத்துடன் இணைக்க மோடம் போல் செயல்படுகிறது
130.
(i) NS2ஐ உருவாக்க மற்றும் இயக்க. OTCL மற்றும் C++ உதவுகின்றன.
(ii) NS2 விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களில் இயக்க கூடியது.
(iii) கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்பிற்கு ஆதரவளிக்கிறது.
(iv) கட்டளை வரி பயனர் இடைமுகத்தையும், API என்ற நிகழ்வு சார்ந்த மென்பொருள் கருவையாயும் பயன்படுத்துகிறது.
(v) இதில் உள்ள பல மாதிரிகள் மூலம் பயனர் விரும்பும் வெளியீட்டை எளிதில் பெற முடியும்
131.
1. AR என்பது இயல்பான உண்மையான பொருள்களை மெய் நிகர் கொண்டு புனைவதன் மூலம் மெய்நிகர் பொருள்களின் முப்பரிமாணக் காட்சியாக பார்க்கும் அனுபவம் ஆகும்.
2. இத்தொழில்நுட்பம் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட உடையில் எவ்வாறு தோற்றமளிப்பார் என்பதைத் தாங்களாகவே பார்க்க அனுமதிக்கிறது. உண்மையில் குறிப்பிட்ட உடைய அணியடக் தேவையில்லை.
3. புனை மெய்ம்மை மற்றும் தோற்ற மெய்ம்மை ஆகியவை வாடிக்கையாளர் அனுபவங்களை மாற்றியமைக்கின்ற மற்றும் அவர்கள் மேம்பட்ட வாங்கும் அனுபவத்தைப் பெறுவதால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக வாங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
132.
1. பட்டிப்பட்டையில் Layout > Remove pages என்பதைக் கிளிக் செய்யவும்.
2. Remove pages உரையாடல் பெட்டி தோன்றும்.
3. நீக்க வேண்டிய பக்கங்களின் தொடக்க எண்ணெயும் கொடுக்க வேண்டும்.
133.
PHP - ல் இரண்டு வகையான செல்லுபடியாக்கல் உள்ளது. அவை பின்வருமாறு.
1. கிளை பக்க செல்லுபடியாக்கல்:
(i) உள்ளீடு செய்யப்பட்டத் தரவுகள் கிளை கணிப்பொறியின் வலை உளவியில் செல்லுபடியாக்கல் செய்யப்படுகின்றன.
(ii) இதற்காக கிளை பக்க ஸ்கிரிப்ட்களான ஜாவா ஸ்கிரிப்ட் (அ) HTML - ன் Input ஒட்டிலுள்ள 'required' என்ற பண்புகூறினை வலை உலவிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
2. சேவையக பக்க செல்லுபடியாக்கல்:
(i) தரவினைச் சமர்பித்த பிறகு, சேவையகப் பக்கத்தில் செல்லுபடியாக்கல் செய்யப்படுகின்றது.
(ii) இதற்காக சேவைக் கணிப்பொறியிலுள்ள, PHP, ASP (or) JSP போன்ற நிரலாக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
134.
mysqll_close( ) செயற்கூறு PHP ஸ்கிரிப்ட்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது.
கட்டண அமைப்பு:
mysquli_close("Connection Object");
எ.கா:
< ? php
$con = mysqli_connect ("localhost", " $user", "$password", "SCHOOL_DB");
mysqli_close($con);
? >
135.
உறுப்பினர் நிலை: சமூக வலைகள் அனைத்தும் போலிக் கணக்குகளை தவிர்க்கவும், இரகசியம் காக்கவும் பயனர்கள் பொதுவாக பெயர்கள் மற்றும் கணக்குகளைப் பத்திர செய்ய வலியுறுத்துகிறது.
கருதுப் பகிர்வு: இந்த வலையமைப்புகள் உறுப்பினர்கள் கருத்துக்கள், திரைப்படங்கள், இசை, குறும்படங்கள் மற்றும் புகைப்படங்களை மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றன.
அடிக்கடி திரும்பி வருதல்: ஆரோக்கியமான சமூக வலை தொடர்ச்சியாக கருத்து பங்களித்தல் மற்றும் மேம்படுத்தலுக்காக உறுப்பினர்களின் மையத்தை அமைக்கிறது.
மனித உறவு கட்டமைத்தல்: பெரும்பாலான சமூக வலையமைப்புகளின் பொதுவான குறிக்கோள் மக்கள் சமூகங்களுடன் வலுவான இணைப்புகளை உருவாக்குவதற்கான தொடர்பாடலை அனுமதிக்கிறது.
136.
TCP செயல்பாடு: இரண்டு நெறிமுறைகளின் கலவையாகும்.
1. Transmission Control Protocol (TCP)
2. Internet Protocol (IP)
(i) இணைய நெறிமுறை (IP) பொதுவாக வலைப்பின்னல்களில் அனுப்பப்படும் பாக்கெட்டுகளில் தளவமைப்புகளை குறிக்கிறது
(ii) இது பாக்கெட்டுகள் எங்கே போவது, எப்படிப் போவது மற்றும் இலக்கை எவ்வாறு அடைவது போன்றவற்றைக் குறிக்கிறது
(iii) பரிமாற்றக் கட்டுப்பாட்டு நெறிமுறை (TCP) என்பது தரவுப் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது.
(iv) பொட்டலங்கள் பிழைகளை சரிபார்த்து தேவைப்படின் மறு பரிமாற்றம் செய்வதற்கான கோரிக்கை வைக்கிறது
137.
1. வெளித் திறவுகோல் : முதன்மைத் திறவுகோளின் நகல் ஆகும்.
2. இரண்டு தொடர்புகளுக்கு இடையே உள்ள உறவுநிலையை உறுதிப்படுத்துகிறது.
3. வெளித்திறவுகோல், முழுமையான அதன் பெற்றோர் முதன்மைத் திறவுகோலின் நகல் ஆகும்.
4. முதன்மைத் திறவுகோல் இணைப்பைக் கொண்டிருக்குமானால், வெளித்திறவுகோலும் இணைப்பைக் கொண்டிருக்கும்.
5. வெளித்திறவுகோலின் மதிப்புகள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டியதில்லை.அது வெற்று (null) மதிப்பகவும் இருக்கலாம்.
6. இணைப்பு வெளித்திறவுகோல், சில வெற்றுப் பண்புக்கூறுகளையும், மற்ற வெற்று இல்லாத பண்புக்கூறுகளையும் கொண்டிருக்க முடியாது.
138.
மாறிகள்: நிரலில் பின்னர் கையாளுவதற்காக மதிப்புகளை சேமிக்கும் இடம்.
மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் :
1. மாறியின் பெயர் எப்பொழுதும் '$'என்ற குறியுடன் தொடங்க வேண்டும்.
2. மாறியின் பெயர் ஒருபோதும் எண்ணில் தொடங்க கூடாது.
3. மாறியின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு உடையதாகும்.
எ.கா"
$a=5;$b=10;
$a_ 1="Computer Application"
$c=$a+$c;
139.
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள் ஏற்கனவே உள்ள நிரலின் தொகுதிக்குள் பயனர் சொந்தமாக ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை எழுதும் வசதியை அளிக்கிறது.
2. நிரலர் பயனர் வரையறுத்த செயற்கூறுகளை உருவாக்குவதற்கான இரண்டு முக்கியமான படிநிலைகள் .
1. செயற்கூறு அமைப்பு :
(i) ஒரு பயனர் வரையறுத்த செயற்கூறு function என்ற சிறப்புச் சொல்லை, முன்னொட்டாகக் கொண்டிருக்கும்.
(ii) பயனர் செயற்கூறின் தொகுத்திற்குள் எந்த விதமான தனிப்பயனாக்கப்பட்ட தருக்கங்களை எழுத முடியும்.
கட்டளை அமைப்பு :
function function Name( )
{
Custom Logic code to be executed;
}
2. செயற்கூறினை அழைத்தல்:
ஒரு செயற்கூறு அறிவிப்பு பகுதி ஒரு செயற்கூறு அழைப்பின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. நிரலர் அழைக்கும் செயற்கூறின் பகுதி அதனை சார்ந்த நிரலுக்குள் உருவாக்க வேண்டும்.
கட்டளை அமைப்பு :
functionName ( );
எ.கா:
<?php
function insertMsg( ){
echo"Student Details Inserted Successfully!";
}
insertMsg( );//call the function
?>
Part - D
140.
தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் பரிமாற்ற ஊடகத்தின் அடிப்படையில் EDI கீழ்கண்டவாறு வகைப்படுதலாம்.
1. நேரடி EDI
2. VAN வழியாக EDI
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI
4. இணையம் வழி EDI
5. கைப்பேசி வழி EDI
1. நேரடி EDI:
i. இது முனையம்-முனையம் EDI என்றும் அழைக்கப்படுகிறது.
ii. பல்வேறு வணிக கூட்டாளிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
iii. தொடர் வணிக பரிவர்த்தனைகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. VAN வழியாக EDI:
i. மதிப்புக் கூட்டப்பட்ட வலையமைப்பு வழியாக நடைபெறும் EDI ஆகும்.
ii. இங்கு EDI ஆவணங்கள் மூன்றாம் தரப்பு வலை சேவை வழங்குநர்களின் ஆதரவுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
iii. பல நிறுவனங்கள் வலையமைப்பு தொழில் நுட்பங்களின் புதுப்பித்தல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த வகையை விரும்புகின்றன.
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI:
FTP/VPN, SFTP மற்றும் FTPS போன்ற நெறிமுறைகளை பயன்படுத்தி இணையம் அல்லது அகஇணையம் அடிப்படையில் EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்வது பொதுவாக FTP/VPN, SFTP, FTPS வழியாக EDI என அழைக்கப்படுகிறது.
4. இணையம் வழி EDI:
(i) இணைய அடிப்படையிலான EDI, இணையம் வழியாக ஒரு உலாவியை பயன்படுத்தி நடைபெறுகிறது.
(ii) இங்கு நிறுவனங்கள் ஒரு உலாவியைப் பயன்படுத்தி தரவை தங்கள் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு பரிமாற்றம் செய்கின்றன.
(iii) சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற எளிமையையும் மற்றும் வசதியையும் கொண்டது இணைய EDI ஆகும்.
5. கைப்பேசி வழி EDI:
திறன்பேசி அல்லது பிற கையடக்க சாதனங்களை EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் போது அது கைப்பேசி வழி EDI எனப்படுகிறது. கைப்பேசி வழி EDI பயன்பாடுகள், EDI பரிமாற்றங்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
141.
பாதுகாப்பு சிக்கல்கள் மின்- வணிகத்திற்கு மிகவும் கவலையளிக்கும் பிரச்சனையாக இருப்பதால், மின்- வணிக செயல்பாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மின்-வர்த்தகத்தின் முக்கிய ஆராய்ச்சித் துறையாக மாறிவிட்டது. மின்- வணிகம் தொடர்புடைய சில பாதுகாப்பு அம்சங்கள் பின்வருமாறு.
(i) அங்கீகாரம் (Authenticity): தரவு மூலத்தை அங்கிகரித்தல்.
(ii) இருப்பு (Availability): தரவு தாமதம் அல்லது நீக்கத்தை தடுத்தல்.
(iii) முழுமை (Completeness): தகவல்களையும் ஒன்றிணைத்தல்.
(iv) இரகசியத்தன்மை (Confidentiality): அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து தரவை பாதுகாத்தல்.
(v) திறனுடைமை (Effectiveness): வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவை முழுமையாகவும் திறம்படவும் கையாளுதல்.
(vi) நேர்மை (Integrity): அங்கீகரிக்கப்படாத தரவு மாற்றத்தை தடுத்தல்.
(vii) மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation): உடன்படிக்கை மீறாதிருத்தல்.
(viii) தனியுரிமை (Privacy): வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பிறர் பயன்படுத்தாமல் தடுத்தல்.
(ix) நம்பகத்தன்மை (Reliability): தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அடையாளங்காணல்.
(x) மீளாய்வு திறன் (Review ability): தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் வணிகச் செயல்பாடுகளை கண்காணிக்கும் திறன்.
142.
143.
படிநிலை 1 :
Apache foundation வலைத்தளத்திற்கு சென்று Httpd வலைசேவையக மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும்.
http;//http.apache.org\download.cgi
படிநிலை 2 :
1. MSI கோப்பினை Apache foundation வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த பிறகு, பயனர் MSI கோப்பினைத் துவக்கி சேவையகக் கணிப்பொறியில் நிறுவுதலை முடிக்க தொடர்ந்து வரும் Next பொத்தான்களைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. மென்பொருள் தானமைவு, இடைமுக எண்ணாக 130 (அ) 130130 யை எடுத்து கொள்ளும்.
3. ஒருமுறை பயனர் இதனை முடித்து பிறகு வலை சேவையக மென்பொருளானது சேவையக கணிப்பொறியில் ஒரு சேவையாக நிறுவப்பட்டு கட்டமைக்கப்படும்.
படிநிலை 3 :
1. Apache Httpd வலை சேவையகத்தின் நிறுவுதலை சோதிக்க, பயனாளர் கணிப்பொறியில் நிறுவப்பட்டுள்ள வலை உலவியிலிருந்து கிழ்கண்ட URL யை உள்ளீடு செய்ய வேண்டும்.
http"localhost:130/ (or)
http ://localhost :130130
"Its Works" என்பதை வெளியீட்டு பக்கம் காட்டும்.
படிநிலை 4 :
விண்டோஸ் கட்டுபாட்டு பலகம் மூலமாக நிர்வாகியான பயனர் வலை சேவையக எந்த நேரத்திலும் தொடங்கலாம். நிறுத்தலாம் மற்றும் மீண்டும் தொடங்கலாம் சேவைகள் நிறுத்தப்பட்ட பின் சேவையக கணிப்பொறியிலிருந்து பதில் செய்தியினை பயனாளர் கணிப்பொறி பெற இயலாது.
படிநிலை 5 :
"http.conf" என்ற வலைசேவையகக் கட்டமைப்பை நிறுவும் கோப்பு 'Apache Installation'அடைவின் (directory) கீழ் conf என்ற அடைவுக்குள் அமைந்துள்ளது. இந்த கோப்பினை மாற்றம் செய்து PHP ஸ்கிரிப்டிங் மொழியை இயக்க PHP தொகுதியை செயல்படுத்துகின்றது.
144.
வழக்கமான முறையில் பொருட்களை விற்பது மட்டுமின்றி, இணையத்தளம் மூலம் பணம் ஈட்ட ஒரு நிறுவனத்திற்கு பல வழிகள் உள்ளன. மின்-வணிக செயல்பாடுகளின் பிற வடிவங்கள்:
1. துணை இணையதளம் (Affiliate website) என்பது மூன்றாம் தரப்பு சந்தைப்படுத்துதலின் ஒரு வடிவம் ஆகும். இதில் தள உரிமையாளர் செயல்திறன் அடிப்படையில் பணம் பெறலாம். இந்த துணைத் தளம் என்பது ஒரு விலை ஒப்பீடு சேவை, வணிக விவரக்குறிப்புகள், சாதாரண சில்லறை விற்பனை இணையதளத்திற்கு ஒரு மீத்தொடுப்பை கொண்ட வலைப்பக்கம் அல்லது வலைப்பதிவாகவும் இருக்கலாம்.
2. மின்-ஏல இணையதளம் (Auction website) என்பது இணையத்தில் பொருட்களை ஏலம் மூலம் விற்க உதவும் ஒரு வகை வலைத்தளம் ஆகும். மேலும் இது ஒவ்வொரு விற்பனையிலிருந்தும் விற்பனை தரகைப் (commission) பெறும். : https://www.ebay.com/
3. பதாகை விளம்பர தளம்: பிற நிறுவனங்களில் விளம்பரங்களை தனது வலைப்பக்கங்களில் காட்சிப்படுத்துகிறது. அதன் மூலம் வருவாய் ஈட்டவும் செய்கிறது
4. மொத்த கொள்முதல் இணையதளம் (Bulk-buying websites). ஒரே வகையான பொருட்களை வாங்க விரும்பும் பல நுகர்வோர்களையும் ஒன்றாகச் சேகரிக்கும். பின் தளம் உற்பத்தியாளருடன் தள்ளுபடி பேச்சுவார்த்தை செய்து அதில் ஒரு விற்பனை தரகைப் (commission) பெறுகிறது. எடுத்துக்காட்டு https://www.alibaba.com/
5. எண்முறை பதிப்பக இணையதளம் (Digital Publishing websites) இணையத்தில் மின்-புத்தகங்கள் அல்லது மின்-சஞ்சிகைகளைத் திறம்படப் பதிப்பிக்கிறார்கள். விளம்பரம், விற்பனை போன்ற பல வழிகளில் அவர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். https://wordpress.org/
145.
| திறந்த மூல மென்பொருள் | தனி உரிம மென்பொருள் |
| 1. பலரது கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டு அனைவரும் இலவசமாக அணுகக் கூடியதாக உள்ளது. | தனிநபர் அல்லது நிறுவனத்திற்குச் சொந்தமானது. |
| 2. இவ்வகை மென்பொருளின் மூலக்குறிமுறையை பயனர் மற்றும் பிற நிரலர் இலவசமாக பயன்படுத்த மூலகுறிமுறையில் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது. | இவ்வகை மென்பொருளை உருவாக்குபவர் நிரலின் குறிமுறையை பயனர் மற்றும் பிறநிரலர் பார்க்க அல்லது மாற்ற அனுமதிப்பதில்லை. |
| 3. புதிய மென்பொருளை உருவாக்கும், நிரலை எடுத்துக்கொள்ள முடியும். | புதிய மென்பொருளை உருவாக்கும் நிரலை எடுத்துக்கொள்ள இயலாது. |
| 4. பிற நிரலர்களையும், திறமையான பயனாளர்களையும் இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. | அனைத்து பயனர்களையும் இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. |
| எ.கா: Android, Firefox, Libre office, Ubuntu | Windows, MacOS, Adobe Flash Player |
146.
PHP-ல் உள்ள செயற்கூறுகள் :
1. ஒரு நிரலில் உள்ள ஒரு தொகுதியின் ஒரு பகுதி குறிப்பிட்ட செயல்பாட்டு பணிகளை செய்கிறது. (சேர்த்தல், செயற்படுத்துதல், நீக்குதல் கணக்கீடுதல் போன்றவை ).இந்த பகுதி (Segment) செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது.
2. ஒரு செயற்கூறு என்பது ஒரு வகை துணை நிரல் அல்லது ஒரு நிரலில் உள்ள செயல்முறை ஆகும்.
3. ஒரு செயற்கூறானது அழைப்பின் மூலம் செயற்படுத்தப்படுகிறது.மற்றும் அச்செயற்கூறானது எந்த தரவு வகை மதிப்புகளையும் திருப்பி அனுப்பும் (அ) அந்த நிரலைச் சார்ந்த பகுதியில் உள்ள அழைக்கப்படும் செயற்கூற்றிக்கு வெற்று மதிப்பை அனுப்பும்.
செயற்கூறு வகைகள் :
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள்.
2. முன் வரையறுக்கப்பட்ட (அ) அமைப்பு (அ) உள்ளிணைத்த செயற்கூறுகள்.
3. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகள்.
147.
1. if...elseif...else கூற்று என்பது PHP இல் ஒரு நிபந்தனை கூற்றாகும்.
2. இந்தக் கூற்றானது பல நிபந்தனைகளைச் சரிபார்த்து, எந்த நிபந்தனை உண்மை என்பதை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு குறிமுறையை இயக்க அனுமதிக்கிறது.
3. இவ்வகையான கூற்றானது 'if' என்ற சிறப்புச் சொல்லுடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'elseif' இடம் பெறலாம். இறுதியாக 'else' பகுதியுடன் முடிவடையும்.
கட்டளை அமைப்பு:
if (condition1)
{
// code to be executed if conditionl is true;
}
elseif (condition2)
{
// code to be executed if condition1 is false and condition2 is true;
}
elseif (condition3)
// code to be executed if condition1 and condition2 are false and condition3 is true;
}
else
{
// code to be executed if all conditions are false;
}
எடுத்துக்காட்டு
<?php
$ x = 12 ;
if ($x > 20)
{
echo "x is greater than 20";
}
elseif ($x > 15)
{
echo "x is greater than 15 but not greater than 20;
}
elseif (\$ x > 10 )
{
echo "x is greater than 10 but not greater than 15;
}
else
{
echo "x is not greater than 10;
}
?>
வெளியீடு:
x is greater than 10 but not greater than 15
148.
வலையமைப்பில் பயன்பாட்டில் உள்ள சில வகையான வடங்கள்:
| 1. இணையச்சு வடம் | i. தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும். இது 1880களின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது ii. தொலைக்காட்சியை அலைவங்கியுடன் இணைக்கப் பயன்படுகிறது iii. 10 mbps வேகத்தில் தகவலை பகிர்கிறது.இவை இருவகைப்படும் 1. இலகு வலை வடம் 2. தடிமன் வலை வடம் i. உட்பகுதியில் தாமிரக் கம்பியைக் கொண்டு சுற்றிலும் காப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் iv. அளவில் பெரியவை என்பதால் எடுத்துச் செல்வதும் மாற்றுவதும் கடினமானது v) இதனை நிறுவுவதும் பராமரிப்பதும் எளிதல்ல |
| 2. முறுக்கு இணை வடம் | i. இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட காப்பிடப்பட்டு முறுக்கப்பட்டக் கம்பிகளின் தொகுப்பாகும் ii. வேகம் 10 mbps யில் துவங்கி 100 mbps வேகத்துடன் வெளியிடப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டு 10 mbps வேகத்துடன் 10 BASE - T என்ற பெயரில் அழைக்கப்படுகிறது iii. மின்காந்தக் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக 8 கம்பிகள் முறுக்கப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு வகைகள் 1. காப்பிடப்பட்ட முறுக்கு இணைக் கம்பி (STP) 2. காப்பிடப்படாத முறுக்கு இணைக் கம்பி (UTP) |
| 3. ஒளி இழை வடம் | i. வடம் கண்ணாடி இழைகளால் ஆனது ii. தகவல்களைப் பரிமாற ஒளித் துடிப்புகளைப் பயன்படுத்துகிறது. iii. முக்கியமாக பரந்த வலையமைப்பில் பயன்படுத்தப்படுகிறது iv. கேபிள்களுக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்க அவை தரையின் ஆழத்தில் புதைக்கப்படுகிறது v. ஒளி இல்லை வடத்தில் இரண்டு வகைகள் உள்ளன 1. ஒற்றை முறை ஒளியியல் வடம் (Single mode Cable - 100 Base BX) 2. பன்முறை ஒளியியல் வடம் (Multimode Cable - 100 SX) |
| 4. USB கேபிள் (Universal Serial Bus) | (i) விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது. (ii) ஆனால் Dongle எனப்படும் சில சிறப்பு USB வலையமைப்பு சாதனங்கள் இணைய இணைப்பை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் (iii) மைக்ரோ USB என்பது மொபைல் சாதனங்களை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் (iv) USB இந்த சிறிய பாதிப்பாகும். இது ஸ்மார்ட் போன்கள், GPS சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் போன்ற சாதனங்களை இணையத்துடன் இணைக்கிறது |
| 5. தொடர் மற்றும் இணை வடங்கள் | 1990க்கு முன்பு கணினியை இணையத்துடன் இணைக்க தொடர் மற்றும் இணை வடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இணை வடங்கள் அச்சுப்பொறி மற்றும் பிற வட்டு இயக்கிகளை கணிப்பொறியுடன் இணைக்கப் பயன்படுகின்றன |
| 6. ஈத்தர் வடம் | (i) வீடு (அ) அலுவலங்களில் கணினிகளை இணைக்கப் பையன்படும் பொதுவான வடம் ஆகும் (ii) வளைப் பகிர்வு மற்றும் இணைய அணுகலுக்காக குறும்பரப்பு வலையில் (LAN) உள்ள கம்பித் தொடர்பு சாதனங்களை இணைக்கிறது |
149.
do while மடக்கு எப்பொழுதும் மடக்கினை முதல் முறை செயல்படுத்தும் போதே மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒரு முறை செயல்படுத்தும். ஆனால், கொடுக்கப்பட்ட நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரே ஒரு முறையேனும் செயல்படுத்தும். அதாவது, இங்கே நிபந்தனை, மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
கட்டளை அமைப்பு:
do {
code to executed;
} while (condition is true);
எ.கா:
< ?php
$Student_ count = 10;
$student_ number= 1;
do
{
echo "The student number is:
$student_ number< br >";
$student_ number++;
}
while($student_ number< = $Student_ count)
? >
150.
களப்பெயர் வெளி:
1. களப்பெயர்களை ஒரு படிநிலை மற்றும் தருக்க மர அமைப்பில் கொண்டுள்ள ஒரு பெயரிடும் அமைப்பு.
2. படிநிலை பெயர்வெளியை அடைய களப் பெயர்வெளி வடிவமைப்பில் குறிக்கபப்படுகிறது.
3. இதில் பெயர்கள் தலைகீழ் மர வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
4. இதன் வேர் உறுப்பு மேலிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. இந்த மர அமைப்பு, மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
6. மேற்காண் படம் களப்பெயர்வெளியை குறிக்கிறது. இங்கு வேர் உறுப்பு மிக உயர்ந்த மட்டத்தில் அதாவது மட்டம் 0 வில் உள்ளது.
7. வேர் உறுப்பு எப்போதும் NULL சரத்தைக் குறிக்கிறது.
8. வேர் உறுப்புக்கு அடுத்த மட்டத்தில் முனைகள் (வேர் உறுப்புகளின் குழந்தைகள்) உள்ளன.
9. மர அமைப்பில் ஒவ்வொரு முனையும் ஒரு சிட்டை/ அடையாளம் மற்றும் களப் பெயரைக் கொண்டிருக்கும்.
151.
| ஒப்பீடு அடிப்படையில் | TCP/IP மாதிரி | OSI மாதிரி |
| விரிவாக்கம் | Transmission Control Protocol/ Inemet Protocol | Open System Interconnection |
| நோக்கம் | இது இணையத்தில் தரவு பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் | இது கணினி முறைமைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாட்டு மாதிரி ஆகும். |
| அடுக்குகளின் எண்ணிக்கை | 4 அடுக்குகள் | 7 அடுக்குகள் |
| உருவாக்கப்பட்டது | பாதுகாப்பு துறை (DOD) Department of Defense | ISO |
| உறுதித்தன்மை | ஆம் | இல்லை |
| பயன்பாடு | பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. | ஒரு போதும் பயன்படுத்தியது இல்லை |
152.
வணிகத்தில் வலையமைப்பு:
1. வேகமான கணினி வலையமைப்புகள், வலிமையான இணையம் மற்றும் கம்பியில்லா தொடர்புகள் வணிகத்தின் வழியை மாற்றிவிட்டன.
2. கிளவுட் கம்பியூட்டிங் போன்ற சமீபத்திய தொழில்நுட்பப் பயன்பாடு மூலம், பாதுகாப்பை அதிகரிக்கவோ (அ) பயனர் அணுகலைக் கட்டுப்படுத்தவோ முடியும். இங்கே இணைய உரையாடல்கள் விரைவாக நடக்கும், விரைவு முடிவு எடுத்தல் நிறைய நேரத்தை சேமிக்கிறது. வணிகத்தில் ஒவ்வொரு நொடியும் பணம் என்று அனைவருக்கும் தெரியும்.
3. மின் வங்கிச் சேவை மூலம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்கிறது. இதற்கு Payment Gateways வழிவகை செய்கிறது.
4. இந்த முறையிலேயே குறைந்த விலையில் பொருட்களை வாங்கவும் வழிவகை செய்கிறது.
5. இன்று பொருட்களை பற்றி இணையத்தில் தேடுவது மிகவும் எளிது.
6. இணையத்தின் வழியாக மிக எளிமையாக குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க முடியும்.
7. நிறுவன உரிமம் புதுப்பித்தல், பிற சான்றிதழ்கள், பங்கு பராமரிப்பு, இன்டர் நெட் மற்றும் கணினி வலையமைப்புகள் வழியாக எந்த புவியியல் எல்லைகளையும் இல்லாமல் செய்ய முடியும்.
8. அரசு மானியங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வியாபாரத்தை ஊக்குவிக்கின்றன.
9. இணையத்தால் நேரடி மனித உரையாடல்கள் குறைந்து வருகின்றன. உழைக்கும் சுழலும் கூட சுருங்கி வருகிறது.
10. வாங்குபவரும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்த செலவில் வாங்குவார், நடுத்தர நபர் தரகு கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
வீட்டு வலையமைப்புகள்:
E-banking, e-learning, e-governance, e-health, telemedicine, அழைப்புதவி மையங்கள், வீடியோ கான்பரன்சிங், நினைவுகள் டிஜிட்டல்மயமாக்கல் போன்றவற்றை எளிதாக அணுகவும் மற்றும் பயன்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இ-சந்தையில் (அ) ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கார், ஆபரணங்கள், அனைத்து பயண டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் இணையம் மற்றும் கணினி வலையமைப்பு மூலமாக எளிதாக செய்ய முடியும்.
மொபைல் வலையமைப்பு:
1. மொபைல் (அ) செல்லுலார் ஃபோன் வழியாக இணையத்தை அணுகுவதற்கு எளிதாக உள்ளது. எங்கு சென்றாலும் நாம் அணுகலாம்.
2. மொபைல் வலையமைப்பு வழியாக யாருடனும் தொடர்பு கொள்ளலாம்.
3. கணினி அறிவு இல்லாத பயனரும் எளிதாக இணையத்தை அனுக மொபைல் வலையமைப்பு உதவுகிறது.
சமூகப் பயன்பாடு:
1. சமூக வலையமைப்பு என்பது ஊடகத்தில் அனைத்து மக்களையும் எளிதாகவும், விரைவாகவும் இணைக்கும் ஊடகமாகும்.
2. உதாரணமாக WhatsApp, முகநூல் (Facebook), டிவிட்டர் வலைப்பதிவுகள் (blogs), Pinterest, instagram, class mates மற்றும் பல.
3. மேலே உள்ள சமூக ஊடகங்கள் மூலம் நாம் வெவ்வேறு வடிவங்களில் நமது சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
153.
1. தரவுத் தளத்தில் பிழைகளைக் கையாளும் முறை என்பது நம் நிரலால் உருவாகும் பிழைகளை அறிந்து அதன் பிறகு பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுதல் ஆகும்.
2. PHP ல் பிழைகளைக் கையாளுதல் மிகவும் எளிதாகும்.
PHP ல் பிழைகளைக் கையாளவும் மேலாண்மை செய்யவும் பயன்படும் செயற்கூறுகள்:
1. die () செயற்கூறு: செய்தியைக் காண்பித்தபின் ஸ்கிரிப்ட் நிரலை விட்டு வெளியேறப் பயன்படுகிறது.
i) நிரல் காட்டும் பிழைச் செய்திக்குப் பதிலாக பயனர் விரும்பும் செய்தியைக் காட்டப் பயன்படுகிறது.
ii) சர வடிவிலான செய்திகளை மட்டுமே வெளியிடப் பயன்படுகிறது.
2. mysqli_connect_error (): die () செயற்கூறுடன் இதைப் பயன்படுத்தி, கடைசி இணைப்பில் ஏற்படும் பிழையிலிருந்து பிழையின் விளக்கத்தை காண்பிக்கப் பயன்படுத்தலாம்.
3. mysqli_connect_errno (): கடைசி இணைப்பின் பிழைக் குறியீட்டு எண்ணைத் திருப்பித் தரும் : பிழை இல்லை எனில் 0 என்ற மதிப்பைத் தரும்.
எ.கா:
< ?php
$conn= mysqli _connect("locaIhost", "liser 1",
"Password", "Employee");
if(!$conn)
{
die("Connection error: ".mysqli_connect_
error ());
die("Error is :".mysqli_connect_error());
}
else
echo"Connected Successfully";
154.
1. கோப்பினை பதிவேற்றம் செய்தல் என்பது கிளைக் கணிப்பொறியிலிருந்து ஒரு கோப்பினைத் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து சேவையக கணிப்பொறிக்கு அனுப்பப் பயன்படும் முக்கிய அம்சமாகும்.
2. படிவ ஒட்டானது POST அல்லது GET வழிமுறையைக் குறிப்பிடவும் enctype பண்புக் கூறானது multipart /form -data என்பதைக் குறிப்பிடவும் பயன்படுகின்றது.
3. < input >ஒட்டில் type = 'file' பண்புக் கூறானது. உள்ளீட்டு புலத்தை கோப்பு தேர்ந்தெடுத்தல் (file-select) உறுப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து Browse பொத்தானைக் காட்டப் பயன்படுகின்றது.
4. சேவையகக் கணிப்பொறியில் உள்ள 'PHP.ini' கோப்பில் file uploads directive -வினைத் தேடி அதனை on என மாற்றவும்.
1. மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிவமானது தரவினை "student -photo-upload. PHP என்ற கோப்பிற்கு அனுப்புகின்றது.
2. Upload பொத்தானைக் கிளிக் செய்தபிறகு அந்தக் கோரிக்கையானது student -photo-upload.php கோப்பினை அடைகின்றது.
3. கோப்பிலுள்ள $_FILES மாறியானது பதிவேற்றம் செய்யப்பட்ட கோப்பின் அனைத்து தகவல்களையும்.
உதாரணமாக கோப்பின் அளவு மற்றும் கோப்பின் விரிவு ஆகியவற்றைச் சேகரிக்கிறது. அனைத்து விவரங்களும் முழுவதுமாக பரிசோதிக்கப்படுகின்றது.மற்றும் பிழைகள் ஒரு அணி மாறியில் சேமிக்கப்படுகின்றது .
4. இந்த அணியின் பிழை மாறிகள் காலியாக இருந்தால் எந்த பிழையும் சேமிக்கப்படவில்லையெனில் கோப்பானது இறுதியாக image கோப்புகளுக்கு நகர்த்தப்படுகிறது.
எ.கா:
< !DOCTYPE html >
< html >
< body >
< form action="Student-photo_upload.php" method="post"
enctype ="multipart / form-data" >
Select image to upload:
< input type="file" name="fileToUpload" id="fileToUpload If >
< input type="submit" value="Upload Image" name="submit" >
< /form >
< /body >
< /html >
Student_photo _upload.php:
< ?php
if(isset($ _ FILES['image'])) {
$errors= array ( );
$file_name = $FILES['image']['name'];
$file_size =$FILES['image']['size'];
$file_tmp =$_FILES['image']['tmp_name'];
$file_type $_FILES[;image'['type'];
$file_ext=strtolower(end(explode('.', $_FILES ['image']['name'])));
$extensions=array("jpeg","jpg","png");
if (in_array($file_ext,$extensions)===false){$errors[]="extension not allowed, please choose a JPEG or PNG file.";
}
if ($file_sizemust be excately 2MB';
}
if (empty ($errors)==true){
move_uploaded_file($file_tmp,"images/".$file_name);
echo"Success";
}else{
print_r($errors);
}
}
? >
155.
கணினியில் படங்களை இரு வகையில் உருவாக்கலாம்.
1. பிட் மேப் (அ) செவ்வக படம்
2. வெக்டர் படங்கள்
1. பிட்மேப் (அ) செவ்வக படங்கள் :
1. கணினியில் படங்களைச் சேமிக்கும் பொதுவான ,மற்றும் பரந்த வடிவம் பிட்மேப் (அ) செவ்வக படமாகும்.
2. பிட்மேப் என்பது படப்புள்ளி என்றழைக்கப்படும் சிறிய புள்ளிகளின் எளிய அணியாகும்.
3. ஒவ்வொரு படப்புள்ளியும் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட நிறங்களைக் கொண்டுள்ளது.
4. பிட்டுகளில் எவ்வளவு தரவு என்பதன் அடிப்படையைப் பயன்படுத்தி நிறங்களில் எண்ணிக்கையைத் தீர்மானித்து நிறத்தின் ஆலத்தைத் தீர்மானிக்கலாம்.
எ.கா : ஒரு பிட்டுக்கு இரண்டு நிறங்கள், நான்கு பிட்டுகள் என்றால் பதினாறு நிறங்கள், எட்டு பிட்டுகள் என்றால் 256 நிறங்கள் மற்றும் பல.
2. வெக்டர் படங்கள்:
1. வரையும் கூறுகளான அல்லது பொருள்களான வரிகள், செவ்வகங்கள், வட்டங்கள் மற்றும் பல படங்களை உருவாக்குவது வெக்டர் படங்களின் அடிப்படையில் அமையும்.
2. படத்தைக் குறிக்க ஒப்பிட்டளவில் சிறிதளவு தரவு தேவைப்படும்.
3. அதன் மூலம் படத்தைச் சேமிக்க குறைந்த அளவு நினைவகம் தேவைப்படும். இதுவே அதன் நன்மையாகும்.
4. குறுக்க நுட்பம் படங்களின் கோப்பு அளவை குறைக்கப் பயன்படுகிறது.
5. அதாவது அதிக எண்ணிக்கையில் படங்களைச் சேமிக்கவும் வலைப்பின்னலில் உள்ள பயன்பாடுகளுக்கிடையே பரிமாற்றத்தை வேகப்படுத்தவும் பயன்படுகிறது. எ.கா : GIF, TIFF மற்றும் JPEG.
156.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் | F9 |
| 2.ரொட்டேட்டிங் டூல் | Shift+F2 |
| 3.லைன் டூல் | Shift +F3 |
| 4.ரெக்டாங்கல் டூல் | Shift+F4 |
| 5.எலிப்ஸ் டூல் | Shift+F5 |
| 6.பாலிகான் டூல் | Shift+F6 |
| 7.ஹேண்ட் டூல் | Shift+Alt+Drag Left mouse button |
| 8.டெக்ஸ்ட் டூல் | Shift+Alt+F1 |
| 9.கிராப்பிங் டூல் | Shift+Alt+F1 |
| 10.கன்ஸ்ட்ரெய்ன்டு லைன் டூல் | Shift+Alt+F2 |
| 11. ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் | Shift+Alt+F4 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards