12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
EDI யின் பல்வேறு அடுக்குகளை பட்டியலிடுக.
2.
மின்-பணப்பை கருத்தை விளக்குக.
3.
நுண் மின்னணு செலுத்துதல் மற்றும் பேரின மின்னணு செலுத்துதல் வேறுபடுத்துக.
4.
மின்னணு செலுத்தல் முறை வரையறு.
5.
மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.
6.
ஃபிஷிங் (Phishing) பற்றி எழுதுக.
7.
டைபோபைரஸி பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.
EDI வரையறு.
9.
10.
கடன் அட்டை மற்றும் பற்று அட்டை ஒப்பிட்டு, வேறுபடுத்தவும்.
11.
நுண் மின்னணு பணம் செலுத்துதல் மற்றும் மின்-வணிகத்தில் அதன் பங்கை வரையறு.
12.
சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பற்றி எழுதுக.
13.
ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.
14.
மின்-வணிக பாதுகாப்பு என்றால் என்ன?
15.
UN/EDIFACT பற்றி குறிப்பு வரைக.
16.
VAN வழியாக EDI சிறுகுறிப்பு வரைக.
17.
கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக.
18.
சமச்சீர் குறியீடு குறியாக்கம் மற்றும் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் வேறுபாடுகளை எழுதுக.
19.
20.
பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.
1.
மின்னணு தரவு பரிமாற்றக் கட்டமைப்பு நான்கு வெவ்வேறு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது.
(i) பயன்பாட்டு அடுக்கு (Semantic layer)
(ii) தரப்பாடுகள் அடுக்கு (Standards layer)
(iii) இடமாற்று அடுக்கு (Transport layer)
(iv) பரும அடுக்கு (Physical layer)
இந்த EDI அடுக்குகள் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தரவு எவ்வாறு பாய்கிறது என்பதை விவரிக்கிறது.
2.
மின்னணு பணப்பை (e-Wallets) பயனர்கள் மின்னணு பரிவர்த்தனைகளைத் திறன் பேசிகள் அல்லது கணினிகள் மூலம் இணையத்தில் விரைவாக மற்றும் பாதுகாப்பாகச் செய்ய அனுமதிக்கிறது. ஒரு உண்மை யான பணப்பை போலவே மின்னணு பணப்பையானது நம்முடைய பணத்தை மின்னணு வடிவில் தேக்கி வைத்திருக்கும். நிகழ்நிலையில் (ONLINE) பொருட்களை வாங்குவதற்கு ஒரு வசதியாக வழி ஆகும்
3.
| நுண் மின் செலுத்துதல் முறைகள் | பேரின மின் செலுத்துதல் முறைகள் |
| 1. இது செயல்திறன் மிக்க, சிறிய அளவிலான மற்றும் அடிக்கடி பணம் செலுத்தலை அனுமதிக்கும் ஒரு மின்னணு பணம் செலுத்தல் அமைப்பு ஆகும். | பேரின மின்செலுத்தல் முறைகள் உயர் மதிப்பு கட்டணங்களை செலுத்த உதவும். |
| 2. பரிவர்த்தனை செலவுகளை மிகவும் குறைவாக வைத்திருப்பதற்காக, தகவல் தொடர்பு மற்றும் கணக்கீட்டு செலவுகள் இங்கே குறைக்கப்படுகின்றன. | பேரின செலுத்தல் அமைப்புகளில், அதிகப் பணப் பரிவர்த்தனைகள் காரணமாகப் பாதுகாப்பு தேவைகள் இதில் கடுமையானதாக இருக்கும். |
4.
மின்னணு செலுத்தல் என்பது வங்கி ஊழியர்களின் நேரடி தலையீடில்லாமல் மின்னணு முறைகளை பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்குப் பணம் செலுத்தும் வழிமுறை ஆகும்.
5.
(i) குறியாக்கத் தொழில்நுட்பம் (Encryption technology)
(ii) அங்கீகார தொழில்நுட்பம் (Authentication technology)
(iii) பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் (Authentication protocols)
6.
1. ஃபிஷிங் என்பது ஒரு வகை மின்-வணிக அச்சுறுத்தலாகும்.
2. உண்மையான வங்கி அதிகாரியாக தன்னை பாசாங்கு செய்யும் ஒருவர், மின்னஞ்சல், தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் பயனரை தொடர்பு கொண்டு அவர்களின் வங்கி கணக்கு எண், கடன் அட்டை விவரங்கள், OTP,PIN அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கிய தரவை கேட்டு தனிநபர்களை வலையில் சிக்க வைக்க முயற்சிப்பார்.
3. அதன் விளைவு அடையாள திருட்டு மற்றும் நிதி இழப்பு போன்ற பேரழிவு செயல்களுக்கு வழிவகுக்கும்.
7.
(i) டைபோபைரஸி என்பது சைபர் squatting ன் ஒரு வகையாகும்.
(ii) சில போலி வலைத்தளங்கள் பயனர்களின் பொதுவான தட்டச்சு பிழைகளை பயன்படுத்தி அவர்களை தங்கள் வலைத்தளத்திற்கு திசை திருப்பும் மோசடி ஆகும்.
எ.கா.:
www.goggle.com
www.faceblook.com
8.
மின்னணு தரவு பரிமாற்றம்:
(i) மின்னணு தரவு பரிமாற்றம் (Electronic Data Interchange - EDI) என்பது வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே மின்னணு வணிக ஆவணங்களை பரிமாற்றம் செய்வதை குறிக்கும்.
(ii) இது ஒரு தனிப்பயன் தடம் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ முன் வரையறுக்கப்பட்ட வடிவத்தில், அதிக மனித தலையீடு இல்லாமல் நடைபெறுகிறது.
9.
10.
ஒற்றுமை:
(i) பயன்படுத்தும் முறை ஒன்று போல் இருக்கும்
(ii) தோற்றப் பண்புகளில் ஒன்று போல் இருக்கும்
வேறுபாடு:
| கடன் அட்டை | பற்று அட்டை |
| கடன் அட்டை என்பது பொதுவாக சில்லறை பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு செலுத்தல் அமைப்பாகும். | பற்று அட்டை என்பது வாடிக்கையாளரின் அங்கீகாரத்தின் பெயரில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பரிவர்த்தனை தொகையைப் பிடித்தம் செய்யும் ஒரு மின் செலுத்தல் அட்டை ஆகும். |
| பிறகு பணம் செலுத்தும் முறை | உடனே பணம் செலுத்தும் முறை |
| கடன் அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு மாதமும் 30 நாட்களுக்குள் கடன் அட்டை கட்டணத்தை செலுத்த வேண்டும். | அத்தகைய பில் எதுவும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து நேரடியாக கண்டறியப் படவில்லை. |
11.
(i) இது செயல்திறன் மிக்க, சிறிய அளவிலான மற்றும் அடிக்கடி பணம் செலுத்தலை அனுமதிக்கும் ஒரு மின்னணு பணம் செலுத்தல் அமைப்பு ஆகும்.
(ii) பெரும்பாலான நுண் மின்செலுத்தல் அமைப்புகள், இணையம் மூலம் எளிய பொருட்களுக்குப் பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
(iii) எடுத்துக்காட்டு நிகழ்நிலை விளையாட்டுகளுக்கான சந்தா, இணையத்தில் மின்-இதழ்களை வாசிப்பது. ஒரு பாடலைக் கேட்பது அல்லது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றவற்றிற்கான கட்டணங்கள்.
12.
(i) சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் (Asymmetric Key Encryption) பொதுக் குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) இது பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களை பயன்படுத்துகிறது.
(iii) RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
13.
1. தரவு சிதைப்பு (Tampering)
2. பண மோசடிகள் (Payment frauds)
3. தகவல் கசிவு (Information Leakage)
4. தீங்கிழைக்கும் நிரல் அச்சுறுத்தல்கள் (Malicious code threats)
5. பரவல் சேவை மறுக்கப்படல் தாக்குதல்கள் (Distributed Denial of Service - DDoS)
6. சைபர் Squatting (Cyber Squatting)
7. டைபோபைரஸி (Typopiracy)
14.
மின்-வணிக பாதுகாப்பு என்பது இணையம் மூலம் மின்-வணிக பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக வழி நடத்தும் நெறிமுறைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.
15.
1. United Nations / Electronic Data Interchange for Administration, Commerce and Transport (UN/EDIFACT) ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சர்வதேச EDI தரநிலை ஆகும்.
2. 1987ல் சர்வதேச UN/EDIFACT தரப்படுத்தலுக்கான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.
3. இது வணிக பரிவர்த்தனைகளுக்கு சர்வதேச தரத்திலான பல்-தொழில்துறை மின்னணு தரவு பரிமாற்ற தரப்பாடுகள் ஆகும்.
4. இதில் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்ட தரப்பாடுகள், அட்டவணைகள் மற்றும் தற்சார்பு கணினி அமைப்புகளுக்கிடையே உள்ள கட்டமைக்கப்பட்ட தரவுகளின் மின்னணு பரிமாற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவை அடங்கும்.
16.
1. இது மதிப்புக் கூட்டப்பட்ட வலையமைப்பு வழியாக நடைபெறும் EDI ஆகும்.
2. இங்கு EDI ஆவணங்கள் மூன்றாம் தரப்பு வலை சேவை வழங்குநர்களின் ஆதரவுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
3. பல நிறுவனங்கள் வலையமைப்பு தொழில் நுட்பங்களின் புதுப்பித்தல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த வகையை விரும்புகின்றன.
17.
கடன் அட்டை பரிவர்த்தனையின் முக்கிய பங்களிப்பாளர்கள்:
1. வாடிக்கையாளர் : கடன் அட்டை கணக்கை வைத்திருப்பவர், கடனை முழுமையாக (transactor) அல்லது அதில் ஒரு பகுதியை (revolver) மட்டும் (மீதமுள்ள தொகை மற்றும் வட்டி கணக்கில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும்) செலுத்த வேண்டியவர்.
2. வியாபாரி : கடை உரிமையாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர், கடன் அட்டை மூலம் தனது வாடிக்கையாளர்களால் செய்யப்படும் பணம் செலுத்தல்களைப் பெறுகின்றவர்.
3. பெறுபவர்: வியாபாரியின் சார்பாக பணம் பெற்றுக் கொள்வதற்கு உதவும் வங்கி. இது உரிய வழியில் கடன் அட்டை வழங்குபவருக்கு அங்கீகார கோரிக்கைகளை அனுப்பும்.
4. கடன் அட்டை அமைப்பு: இது வங்கிகளுக்கு இடையேயான இடைநிலை அமைப்பு, இந்த நிறுவனம் பெறுபவர் மற்றும் வழங்குபவர் இடையே பரிவர்த்தனை தகவல் பரிமாற்றங்களுக்கு பொறுப்புடையது. எடுத்துக்காட்டு: விசா, மாஸ்டர்கார்டு, RUPAY.
5. வழங்குபவர்: கடன் அட்டையை வழங்கும் வங்கி, கொள்முதலுக்கான வரம்பை அமைக்கிறது. பரிவர்த்தனைகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கிறது. பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது, காப்பீடு, கூடுதல் அட்டைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.
18.
| சமச்சீர் குறியீடு குறியாக்கம் | சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் |
| மறைகுறியாக்கம் மற்றும் குறியாக்க இரண்டிற்கும் ஒரே குறியீடு பயன்படுத்தப்படுகிறது | மறைகுறியாக்கம் மற்றும் குறியாக்க இரண்டிற்கும் வெவ்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது |
| மறைகுறியாக்கம் அல்லது குறியாக்கத்தின் வேகம் மிக அதிகம் | மறைகுறியாக்கம் அல்லது குறியாக்கத்தின் வேகம் குறைவு |
| மூலஉரை மற்றும் மறைக் குறியீட்டு உரை இரண்டும் ஒரே அளவானதாக இருக்கும் | தெளி உரை மற்றும் மறைக் குறியீட்டு உரை இரண்டும் ஒரே வெவ்வேறானதாக இருக்கும் |
| DES, AES, RC4 போன்ற நெறிமுறைகள் சமச்சீர் குறியீடு குறியாக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன | RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன |
| இது தரவுகளுக்கு இரகசியத் தன்மையை வழங்குகிறது | இது இரகசியத் தன்மை, அங்கீகாரம் மற்றும் மறுதலிக்கப்படாதிருத்தல் போன்ற நன்மைகளை வழங்குகிறது |
| பயனரின் எண்ணிக்கையை பொறுத்து பயன்படுத்தப்படும் குறியீடுகளின் எண்ணிக்கை அடுக்குகளில் அதிகரிக்கிறது. | பயனரின் எண்ணிக்கையை பொறுத்து பயன்படுத்தப்படும் குறியீடுகளின் எண்ணிக்கை நேர்க்கோட்டில் அதிகரிக்கிறது. |
19.
20.
தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் பரிமாற்ற ஊடகத்தின் அடிப்படையில் EDI கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. நேரடி EDI
2. VAN வழியாக EDI
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI
4. இணையம் வழி EDI
5. கைப்பேசி வழி EDI
1. நேரடி EDI:
i. இது முனையம்-முனையம் EDI என்றும் அழைக்கப்படுகிறது.
ii. பல்வேறு வணிக கூட்டாளிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
iii. தொடர் வணிக பரிவர்த்தனைகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. VAN வழியாக EDI:
i. மதிப்புக் கூட்டப்பட்ட வலையமைப்பு வழியாக நடைபெறும் EDI ஆகும்.
ii. இங்கு EDI ஆவணங்கள் மூன்றாம் தரப்பு வலை சேவை வழங்குநர்களின் ஆதரவுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
iii. பல நிறுவனங்கள் வலையமைப்பு தொழில்நுட்பங்களின் புதுப்பித்தல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த வகையை விரும்புகின்றன.
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI:
FTP/VPN, SFTP மற்றும் FTPS போன்ற நெறிமுறைகளை பயன்படுத்தி இணையம் அல்லது அகஇணையம் அடிப்படையில் EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்வது பொதுவாக FTP/VPN, SFTP, FTPS வழியாக EDI என அழைக்கப்படுகிறது.
4. இணையம் வழி EDI:
(i) இணைய அடிப்படையிலான EDI, இணையம் வழியாக ஒரு உலாவியை பயன்படுத்தி நடைபெறுகிறது.
(ii) இங்கு நிறுவனங்கள் ஒரு உலாவியைப் பயன்படுத்தி தரவை தங்கள் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு பரிமாற்றம் செய்கின்றன.
(iii) சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற எளிமையையும் மற்றும் வசதியையும் கொண்டது இணைய EDI ஆகும்.
5. கைப்பேசி வழி EDI:
திறன்பேசி அல்லது பிற கையடக்க சாதனங்களை EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் போது அது கைப்பேசி வழி EDI எனப்படுகிறது. கைப்பேசி வழி EDI பயன்பாடுகள், EDI பரிமாற்றங்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards