12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
PHP கோப்புகளை எவ்வாறு அணுக முடியும்?
வலை உலவி மூலம்
HTML கோப்புகள் மூலம்
வலை சேவையகம் மூலம்
இவை அனைத்தும்
2.
fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது?
PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.
தொலை சேவையகத்தினை திறக்க உதவுகின்றது
PHP யில் கோப்பினை எழுத உதவுகிறது
தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகின்றது.
3.
முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மால் பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML ______.
Pseudo இனக்குழுக்கள்
CSS இனக்குழுக்கள்
Javascript இனக்குழுக்கள்
இவையேதுமில்லை
4.
PHP இல் MySQLi மூடுதல் (Close) செயற்கூறுக்கு எத்தனை அளவுருக்கள் தேவைப்படுகிறது?
1
2
3
5
5.
PHP இல் MySQLi இணைக்க (connect) எத்தனை அளவுருக்கள் தேவைப்படுகிறது?
2
3
4
5
6.
PHP இல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?
mysqli_query(“Connection Object”,”SQL Query”)
query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
mysql_query(“SQL Query”)
7.
எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?
சமூக வலை
மொபைல் தொழில்நுட்பம்
மொபைல் பயன்பாடு
a & b இருவரும்
8.
கணினிக்கு ஆபத்தானது______.
வலைப்பதிவாளர்கள்
உலாவி
ஹேக்கர்கள்
ட்விட்டர்
9.
வியாபாரிகளுக்கு கம்ப்யூட்டர் வலையமைப்புகளில் சவால் விடுவிப்பது எது?
ஹேக்கிங்
வைரஸ்கள்
அ மற்றும் ஆ
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
10.
Wi-fi-ன் விரிவாக்கம் _______.
Wireless Fidelity
wired fidelity
wired optic fibre
wireless optic fibre
11.
இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது
சமூக ஊடகம்
மொபைல் வலையமைப்பு
வாட்ஸ்ஆப்
மென்பொருள்
12.
வணிகத் தகவல்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய தொழில்நுட்பம் எது?
புற இணையம்
அக இணையம்
ஆர்பா நெட்
ஆர்க்நெட்
13.
TLD குறிக்கிறது _______.
Top Level Data
Top Logical Domain
Term Level Data
Top Level Domain
14.
பின்வருபவற்றில் எது களப்பெயரை IP முகவரியாக மாற்றுவதைத் துவக்குகிறது?
மண்டலம்
களம்
தீர்வி
பெயர் சேவையகங்கள்
15.
களப்பெயரில், சிட்டைகளைப் பிரிப்பது.
அரைப்புள்ளி (;)
புள்ளி (.)
முக்காற்புள்ளி (:)
Null
16.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
{
print $x;
}
? >
123456713910412
123456713910
1234567139104
முடிவில்லா மடக்கு
17.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
for (\($\)x = 1; \($\)x < 10;++\($\)x)
{
print “*\t”;
}
? >
**********
*********
************
முடிவில்லா மடக்கு
18.
கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.
for மடக்கு
while மடக்கு
foreach மடக்கு
மேற்கண்ட அனைத்தும்
19.
RJ45 வடங்களில் எத்தனை ஊசிகள் (Pins) பயன்படுத்தப்படுகின்றன?
8
6
50
25
20.
பின்வரும் இணைப்பானில் எது சேம்ப் இணைப்பி என அழைக்கப்படுகிறது?
RJ11
RJ21
RJ61
RJ45
21.
ஈத்தர்நெட் வடங்களில் எந்த இணைப்பி (Connector) பயன்படுத்தப்படுகிறது?
RJ11
RJ21
RJ61
RJ45
22.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
if (-100)print “hi”; else
print “how are u”;
? >
how are u
hi
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
23.
இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?
if கூற்று
if else கூற்று
then else கூற்று
else one கூற்று
24.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
\($\)x = 0;
if (\($\)x++)print “hi”;else
print “how are u”;
? >
hi
வெளியீடு ஏதும் இல்லை
பிழை
how are u
25.
அணியின் சுட்டெண்கள் சரங்களாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
$my_array {4}
$my_array [4]
$my_array| 4 |
மேற்கண்ட எதுவும் இல்லை
26.
PHP-ல் சுட்டு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு _______ ல் இருந்து தொடங்குகிறது
1
2
0
-1
27.
PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?
function
__def
def
functiondef
28.
Open NMS குழு யாரால் உருவாக்கப்பட்டது.
Balog
Matt Brozowski
David Hustace
All of them
29.
பின்வருவதில் எது சிமுலேட்டரின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணமாக்க மற்றும் சோதிக்க உதவுகிறது.
வலை சோதிப்பான்
வலை மென்பொருள்
Trace கோப்பு
வலை ஆவணம்
30.
பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது.
Network software
Network simulation
Network testing
Network calculator
31.
பின்வருவனவற்றில் எது மின்- வணிகத்தின் பண்பு அல்ல.
கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில் ஆய்வு செய்யலாம்.
உடனடியாக விநியோகம் செய்யப்படும்
ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.
வணிகத்தின் வரையெல்லை உலகளாவியது.
32.
SME ன் விரிவாக்கம் _______.
Small and medium-sized enterprises
Simple and medium enterprises
Sound messaging enterprises
Short messaging enterprises
33.
ஒரு நிறுவனத்தை மின்-வணிக நிறுவனம் என்று எப்போது கூறலாம் ?
உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்
இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.
அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.
பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.
34.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?
\r;
\n;
/n;
/r;
35.
ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.
< php >
< ?php? >
< ?? >
< ?php? >
36.
PHP – ன் விரிவாக்கம் என்ன?
தனிப்பட்ட முகப்பு பக்கம் (Personal Home Page)
மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)
முன் உரை மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Pretext Hyper text preprocessor)
முன் உரை முகப்பு பக்கம் (Pre – Processor Home Page)
37.
கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்.
வாடிக்கையாளர்
வியாபாரி
சந்தைப்படுத்தல் மேலாளர்
பெறுபவர்
38.
பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை VPA வாக பயன்படுத்த முடியும்
VPA ல் எண்கள் அடங்கவில்லை
VPA ஒரு தனித்த (Unique) முகவரி
பல வங்கிக் கணக்குகள் ஒற்றை VPA கொண்டிருக்க முடியாது
39.
பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை_______ மற்றும் _______ என வகைப்படுத்தலாம்
நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்
நுண் மற்றும் நானோ செலுத்தல்
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்
அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்
40.
MySQL – லுடன் தொடர்பை ஏற்படுத்தப் பயன்படுவது ______.
SQL
Network calls
Java
API’s
41.
MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்தது?
பொருள் நோக்கு (Object oriented)
படிநிலை (Hierarchical)
உறவுநிலை (Relational)
வலையமைப்பு (Network)
42.
தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?
உறவு நிலை (Relational)
கட்டமைப்பு (Structural)
வினவல் (Query)
தொகுப்பி (Compiler)
43.
பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______ மூலம் அடையாளம் காணலாம்.
html://
http://
htmls://
https://
44.
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.
1999
1996
1969
1997
45.
இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட_______ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)
எண்முறைச் சான்றிதழ்கள்
சமச்சீர் குறியீடு குறியாக்கம்
பொது குறியீடு குறியாக்கம்
46.
ஒற்றை EDIFACT செய்திகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை _______.
5
6
4
3
47.
பின்வருவனவற்றுள் எது EDI தரவு பரிமாற்ற வடிவம் அல்ல?
VML
XML
ANSI ASC X12
TXT
48.
பின்வருவனவற்றில் மின்னணு தரவு பரிமாற்றத்திற்கு (EDI) என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?
TDIFACT
SETFACT
FTPFACT
EDIFACT
49.
PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.
Ctrl+A
Ctrl+P
Ctrl+C
Ctrl+V
50.
_________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
Text tool
Line tool
Zoom tool
Hand tool
51.
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?
File menu
Edit menu
Layout menu
Type menu
52.
_______ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.
உரை வடிவம்
ஒலி
MP3
அசைவூட்டல்
53.
பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.
TIFF
BMP
RTF
JPEG
54.
பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் ________.
வலையமைப்பு
CD இயக்கி
நல்ல யோசனை
நிரலாக்க திறன்
55.
PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியலிடு.
56.
PHP-ல் உள்ள தரவு வகைகளைப் பட்டியலிடு.
57.
இணைய சேவையகம் என்றால் என்ன?
58.
காப்புப் பிரதி என்றால் என்ன?
59.
அட்டவணை என்றால் என்ன?
60.
Li - Fi என்றால் என்ன?
61.
வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?
62.
SQL மற்றும் MySQL என்றால் என்ன?
63.
RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.
64.
HTML படிவத்தின் பயன் யாது?
65.
பரிசு அட்டை என்றால் என்ன?
66.
பற்று அட்டை என்றால் என்ன?
67.
மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.
68.
முதல் மின் - வணிக பரிவர்த்தனை எனக் குறிக்கப்படுவது எது?
69.
விரிவாக்கம் தருக.
i) CDAC
ii) FOSS
iii) GNU - GPL
70.
திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன?
71.
பேஜ்மேக்கரில் மாஸ்டர் பக்கத்தில் உள்ள பொருள்களை எவ்வாறு மறைப்பாய்?
72.
பேஜ்மேக்கரில் சதுரம் மற்றும் வட்டத்தை எவ்வாறு வரைவாய்?
73.
ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?
74.
AIFF என்றால் என்ன?
75.
MP3 பற்றி குறிப்பு வரைக.
76.
புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?
77.
சைபர் (Cyber) Squatting என்றால் என்ன?
78.
HTML ல் உள்ள Browse பொத்தானுக்கான கட்டளை அமைப்பினை எழுது
79.
mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.
80.
மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.
81.
மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?
82.
ஒரு களம் என்றால் என்ன?
83.
for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.
84.
சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?
85.
நிபந்தனை கூற்றை வரையறு.
86.
PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.
87.
திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.
88.
மின்-வணிகம் வரையறு.
89.
வலை சேவையகம் வரையறு.
90.
மின்-பணப்பை கருத்தை விளக்குக.
91.
SQL பற்றி குறிப்பு வரைக?
92.
எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.
93.
Desktop publishing என்றால் என்ன?
94.
EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?
95.
வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்
96.
நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.
97.
நவீன கடன் அட்டையின் உடற்கூறை விவரி.
98.
பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.
99.
மின் வணிகத்தில் நுகர்வோர்க்கான குறைபாடுகளை விவரி.
100.
மின் வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான நன்மைகளை விவரி.
101.
பல்லூடகம் பயன்படுத்தப்படும் துறைகள் சிலவற்றை விவரி.
102.
எண்முறைக் கையொப்பம் மற்றும் எண்முறைச் சான்றிதழ்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தருக.
103.
குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.
104.
கோப்பினைக் கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.
105.
MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
106.
கணினி வலையமைப்பின் வளர்ச்சி விளக்குங்கள்.
107.
மொபைல் வலையமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மை, தீமைகளை விளக்குக.
108.
களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.
109.
Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.
110.
நெட்வொர்க் கேபிள்களின் வகைகளை விளக்குங்கள்.
111.
Switch கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
112.
பலபரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.
113.
பல்வேறு வகையான திறந்த மூல உரிமைகளைக் கூறு.
114.
மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.
115.
வலைதளம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக
116.
கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக.
117.
தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.
118.
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்குக.
119.
பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.
120.
பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.
121.
அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.
122.
123.
பயனர் வரையறுக்க செயற்கூறுகள் பற்றி விரிவாக எழுதுக.
124.
மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?
125.
HTML-ல் PHP-ஐ எவ்வாறு உட்பொதிப்பாய்?
126.
கட்டளைகளின் செயல்பாட்டைப் பொறுத்து அதன் முக்கிய வகைகள் யாவை?
127.
மிகப் பிரபலமான பயன்பாடு (Application Layer) நெறிமுறைகளை விவரி.
128.
உறவுநிலை நிகழ்வு என்றால் என்ன?
129.
HTTPS - ன் பயன் யாது?
130.
TCP ன் செயல்பாட்டை விவரி
131.
மொபைல் வலையமைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது?
132.
மின் அரசாண்மை குறிப்பு வரைக
133.
PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?
134.
MySQLi என்றால் என்ன?
135.
படிவ ( < Form > ) ஒட்டின் பண்புகளை விவரி.
136.
file_put_contents( ) செயற்கூறின் அளபுருக்களை விவரி.
137.
நகர்பேசி வங்கிச் செயல்பாடுகளைச் செயல்படுத்தும் பல்வேறு வழிகள் யாவை?
138.
பற்று அட்டை பரிவர்த்தனைச் செயல்பாடுகளின் வகைகள் யாவை?
139.
மின் - வணிகத்தில் C2C மாதிரியை விளக்குக.
140.
மின் - தொழில் கட்டமைப்புத் தொகுதிகளைப் பற்றிக் குறிப்பு வரைக
141.
Open NMS குழு - பற்றி வரைக.
142.
உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைப் குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.
143.
NS2 ன் அம்சங்களை விவரி.
144.
பேஜ்மேக்கரில் உள்ள தலைப்புப் பட்டைப் பற்றி குறிப்பு வரைக.
145.
கம்பி வலை அமைப்புகளுக்கும், கம்பியில்லா வலையமைப்புகளுக்கும் இடையேயான வேறுபாடுகளை எழுதுக.
146.
MPEG பற்றி குறிப்பு வரைக.
147.
PNG படிவம் பற்றி எழுதுக.
148.
வரையறு:
1. நட்பான மோசடி
2. தெளிவான மோசடி
3. முக்கோண மோசடி
149.
வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).
150.
GET வழிமுறை மற்றும் POST வழிமுறை பற்றி எழுது.
151.
MySQLi -ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக
152.
இணையத்தின் குறைபாடுகள் யாவை?
153.
154.
HTTP, HTTPS, FTP – சிறுகுறிப்பு வரைக.
155.
முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
156.
மடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.
157.
ஃபைபர் ஆப்டிக் கேபிள்களின் வகைகள் என்ன?
158.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
159.
அணிகளை பற்றி சிறுகுறிப்பு வரைக
160.
திறந்த மூல வன்பொருள் குறிப்பு தருக.
161.
மின்-வணிகத்தின் இயல் பொருள் சர்ச்சை பற்றிய குறிப்பு எழுதுக.
162.
வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக
163.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையையும் அதன் வகைகளையும் சுருக்கமாக விளக்கவும்.
164.
தரவுதளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன? அவற்றை பட்டியலிடுக.
165.
ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.
166.
மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?
167.
EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.
1.
(d)
இவை அனைத்தும்
2.
(a)
PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.
3.
(b)
CSS இனக்குழுக்கள்
4.
(a)
1
5.
(c)
4
6.
(c)
mysql_query(“Connection Object”,”SQL Query”)
7.
(d)
a & b இருவரும்
8.
(c)
ஹேக்கர்கள்
9.
(c)
அ மற்றும் ஆ
10.
(a)
Wireless Fidelity
11.
(b)
மொபைல் வலையமைப்பு
12.
(a)
புற இணையம்
13.
(d)
Top Level Domain
14.
(c)
தீர்வி
15.
(b)
புள்ளி (.)
16.
(d)
முடிவில்லா மடக்கு
17.
(b)
*********
18.
(d)
மேற்கண்ட அனைத்தும்
19.
(a)
8
20.
(b)
RJ21
21.
(d)
RJ45
22.
(a)
how are u
23.
(b)
if else கூற்று
24.
(d)
how are u
25.
(a)
$my_array {4}
26.
(c)
0
27.
(a)
function
28.
(d)
All of them
29.
(c)
Trace கோப்பு
30.
(b)
Network simulation
31.
(b)
உடனடியாக விநியோகம் செய்யப்படும்
32.
(a)
Small and medium-sized enterprises
33.
(b)
இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.
34.
(b)
\n;
35.
(d)
< ?php? >
36.
(b)
மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)
37.
(c)
சந்தைப்படுத்தல் மேலாளர்
38.
(c)
VPA ஒரு தனித்த (Unique) முகவரி
39.
(a)
நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்
40.
(a)
SQL
41.
(c)
உறவுநிலை (Relational)
42.
(c)
வினவல் (Query)
43.
(d)
https://
44.
(b)
1996
45.
(a)
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)
46.
(b)
6
47.
(d)
TXT
48.
(d)
EDIFACT
49.
(b)
Ctrl+P
50.
(c)
Zoom tool
51.
(a)
File menu
52.
(d)
அசைவூட்டல்
53.
(c)
RTF
54.
(c)
நல்ல யோசனை
55.
PHP யானது
1. திறந்த மூலம் ஆகும்.
2. எழுத்து வகை உணர்வு கொண்டவை.
3. செயல்திறன் மிக்க நிரலாக்க மொழி ஆகும்.
4. இயங்குதளம் சார்பற்ற நிரல் மொழி ஆகும்.
5. நிகழ்நேர அணுகல் கண்காணிப்பு நிரல் மொழி.
56.
1. String
2. Array
3.Integer
4. Object
5. Float
6. NULL
7. Boolean
8. Resource
57.
(i) இணைய சேவையகம்: இணைய (WWW) பயனரின் வினவல்களைக் கையாளும் பிரத்யேக கணினியில் இயங்கும் ஒரு நிரலாகும்
(ii) வலைத்தளங்களை நிறுவும், HTTPஐப் பயன்படுத்தி வலைத்தளங்களின் உள்ளடக்கங்களை பயனருக்குக் காட்ட பயன்படுத்தப்படுகிறது.
58.
காப்புப் பிரதி :
அட்டவணை உள்ளடக்கங்களை ஒரு கோப்பில் பிற்காலத் தேவைக்காக நகல் எடுக்கும் நிரல் (அ) செயல்முறை காப்புப் பிரதி எனப்படும்.
59.
1. வரிசை மற்றும் நெடுவரிசைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்.
2. உறவுகளின் எளிய உருவமைப்பாகும்.
60.
1. Li - Fi என்பது தரவுப் பரிமாற்றத்திற்கு ஒளி உமிழும் இரு முனையங்களைப் (LEDS) பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பமாகும்.
2. Li - Fi என்பது Light Fidelity என்பதன் சுருக்கமாகும்.
3. ஹரால்ட் ஹாஸ் என்பவரால் முதல் முதலில் Li - Fi என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
4. கணினி அறிவியலாளர்கள் ஆய்வகத்தில் 224 gbps வேகம் வரை செயல்படுத்தி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
61.
வீட்டில் வலையமைப்புகள் இரு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
1. கம்பி வலையமைப்பு
2. கம்பியில்லா வலையமைப்பு
(i) கம்பி மூலம் இணைக்கப்பட்ட பிணைய அமைப்பு. உதாரணமாக ஒலிபெருக்கி, cctv, அச்சுப் பொறிகள் மற்றும் வருடிகள் போன்ற சாதனங்கள் கேபிள்கள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.
(ii) கம்பியில்லா வலையமைப்பு கேபிள்களே இல்லாமல் டேப்லெட் கம்ப்யூட்டர், உட்புற கேமராக்கள் மற்றும் e-readers போன்ற சாதனங்களை இணைக்கிறது.
62.
SQL: நிரலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு காலம் சார்ந்த மொழியாகும். இது உறவுநிலைக் தரவுத்தள மேலாண்மை அமைப்பில் தரவை வடிவமைக்கவும். மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது.
MySQL: திறந்த மூல உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். (Open Source RDBMS)
63.
1. MySQL
2. Oracle
3. IBM DB2
4. மைக்ரோசாப்ட் SQL SERVER
64.
(i) ஒரு HTML படிவம் என்பது வலைத்தளத்தை பார்வையிடுவர் மூலம் உள்ளீடு பெற்று அதனை CGI, ASP ஸ்கிரிப்ட் (or) PHP ஸ்கிரிப்ட் மூலம் back-end பயன்பாட்டிற்கு அனுப்புகிறது.
(ii) back-end பயன்பாடானது அனுப்பப்பட்ட தரவின் மீது தேவையான செயல்பாடுகளைச் செய்கின்றது.
65.
பரிசு அட்டைகள்: ஒரு மின்-வணிகம் பரிசாக வழங்கும் பணத்தின் மதிப்பை மெய்நிகர் வடிவில் கொண்டிருக்கும் ஒரு காந்தப்பட்டை அல்லது சில்லு அட்டை.
66.
பற்று அட்டை (Debit Card) என்பது வாடிக்கையாளரின் அங்கீகாரத்தின் பெயரில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பரிவர்த்தனை தொகையை பிடித்தம் செய்யும் ஒரு மின்செலுத்தல் அட்டை ஆகும்.
67.
1. G2C என்பது அரசு நிறுவனங்கள் அல்லது அதன் துறைகளுக்கு இடையேயான இணையவழி.
2. G2G ன் முதன்மையான நோக்கம் மின் - ஆளுகையைச் செயல்படுவதே ஆகும்.
3. G2C மாதிரியானது அரசின் முகமை துறைகளுக்கு இடையே தரவு (அ) தகவல்களைப் பகிர்ந்தளித்தால் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஆதரவை வழங்குகிறது.
68.
1994 ஆகஸ்ட் பிலடெல்பியாவில் (அமெரிக்கா) இருந்து, Phil Brandenberger நாஷ்வாவில் (அமெரிக்கா) இருக்கும் kohn என்பவரிடமிருந்து String's "Ten Summoners' Tales" என்ற ஒரு இசை குறுந்தகட்டை வாங்க, தனது கடன் அட்டையைப் பயன்படுத்தி $12.48 மற்றும் Shipping கட்டணங்களை நிகழ்நிலையில் செலுத்தினார். இது முதல் மின் - வணிக பரிவர்த்தனை என குறிக்கப்படுகிறது.
69.
| i) CDAC | Center for Development of Advanced Computing |
| ii) FOSS | Free Open Source Software |
| iii) GNU - GPL | GNU General Public License |
70.
திறந்த மூல மென்பொருள் என்பது மென்பொருளின் மூலக் குறிமுறையை பயனர் மற்றும் பிற நிரலர் இலவசமாகப் பயன்படுத்த, மூல குறிமுறையில் மாற்றம் செய்ய (அ) புதிய மென்பொருளாக உருவாக்க கூடிய நிரலைக் குறிக்கிறது.
71.
மாஸ்டர் பக்கத்தில் உள்ள பொருள்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் தெரியாமல் மறைக்க View > Display Master Items என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
72.
1. Shift விசையை அழுத்திக் கொண்டு ரெக்டாங்கல் டூலைப் பயன்படுத்தினால் சதுரம் வரையப்படும்.
2. shift விசையை அழுத்திக் கொண்டு எலிப்ஸ் டூலைப் பயன்படுத்தினால் வட்டம் வரையப்படும்.
73.
ஈத்தர்நெட் அட்டை என்பது வலையமைப்பில் உள்ள சாதனங்களை இணைக்கவும், அவற்றுக்கிடையே தரவுகளை பரிமாற்ற அனுமதிக்கும் வலையமைப்பு இடைமுக அட்டை (NIC) ஆகும்.
74.
AIFF (Audio Interchange File Format) :
Apple நிறுவனம் பயன்படுத்தும் தரமான ஒலி வடிவம்.
75.
MP3 (MPEG layer-3 Format) :
1. இசையை சேமிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் பிரபலமான வடிவம் MPEG Layer-3 வடிவமாகும்.
2. WAV கோப்புகளின் பத்தில் ஒரு பங்கு சமமான அளவுக்கு MP3 கோப்புகள் தோராயமாக குறுக்கப்படும்.
76.
Pretty Good Privacy (PGP) மற்றும் X.509.
77.
சைபர் Squatting (Cyber Squatting) என்பது பின்னர் அதிக இலாபத்திற்கு விற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்றொரு நபர் விரும்பக்கூடிய ஒரு இணைய களப்பெயரைப் பதிவு செய்யும் சட்டவிரோத நடைமுறையாகும்.
78.
Browse பொத்தானிற்கான கட்டளை அமைப்பு:
< input type ="file"name ="name" id ="id1" >
79.
PHP நிரல் மொழி வழியாகத் தரவுத்தள சேவையகக் கணினியை இணைக்கும் போது ஏற்படும் பிழை விவரங்களைத் தரப் பயன்படும் செயற்கூறு. பிழையேதுமில்லை எனில், NULL என்ற மதிப்பைத் திருப்பியனுப்பும்.
கட்டளை அமைப்பு:
mysqli_connect_error();
80.
1. கைபேசி கோபுரங்கள் நெருக்கமாக இருப்பதால், ஒற்றை பரிமாற்றி அல்லது செயற்கைக் கோள்களை ஒப்பிடும் போது கைபேசி சாதனங்கள் குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகின்றன.
2. செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன. இது பெரிய டிரான்ஸ்மிட்டரை காட்டிலும் திறன் அதிகமானது.
3. கைபேசிகள் அதிக அளவுக்கு தரவுசார் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படுவதால், கைபேசி வலையமைப்புகள் எப்போது முழுமையாக பயன்பாட்டிலேயே உள்ளது.
81.
மொபைல் வலையமைப்பின் பயன்கள் :
(i) மொபைல் சாதனங்கள் இயங்க குறைவான மின்சாரம் பயன்படுகிறது.
(ii) செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன.
(iii) கம்பியில்லாமல் மொபைல் வலையமைப்பினை இணைக்க முடியும்.
82.
களம் : ஒரு களம் (Domain) என்பது களப்பெயர் வெளியின் ஒரு ஒற்றை முனை ஆகும். களப்பெயர் வெளியின் மர அமைப்பில் ஒரு துணை மரமாகும். களம் மேலும் துணை களங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
83.
| for மடக்கு | foreach மடக்கு | |
| 1 | குறிமுறைத் தொகுதியைக் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்த உதவுகிறது. | அணிகளில் பன்முறையைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது. |
| 2 | PHP உட்பட C, C++, Java போன்ற மொழிகளில் பயன்படும் மடக்கு அமைப்பாகும். | PHP-ல் மிகவும் பிரத்யேகமான ஒன்றாகும். |
84.
RJ-21 இணைப்பான் ஒரு முனையில் 25 ஊசிகளும் அடுத்த முனையில் 25 ஊசிகளுமாக மொத்தம் 50 ஊசிகளைக் கொண்டுள்ளது. இது சாம்ப் இணைப்பி அல்லது ஆம்பனோஸ் இணைப்பி எனவும் அழைக்கப்படுகிறது.
85.
நிபந்தனைக் கூற்றுகள் என்பன நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்யப் பயன்படும் கூற்றுகள் ஆகும்.
86.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
87.
திறந்த மூல மென்பொருள் என்பது மென்பொருளின் மூலக்குறிமுறையை பயன்படுத்த அல்லது மாற்றம் செய்ய பயனர் மற்றும் பிற நிரலருக்கு வாய்ப்பு வழங்கும் முறை ஆகும்.
1. திறந்த மூல மென்பொருள் என்பது பலரது கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு அனைவரும் இலவசமாக அணுக கூடியதாக உள்ளது
2. பத்தாண்டுகளுக்கு பின்பு அதாவது 1990களில் உருவாக்கப்பட்ட Open Source Software கருத்துருவானது மென்பொருள் மாற்றம், தொடங்குறிமுறை திருத்தம், உரிமம் வழங்கல் மற்றும் விநியோகித்தல் ஆகியவை வலியுறுத்துகிறது
88.
மின்- வணிகம் என்பது கணிப்பொறி வலையமைப்புகள் வழியாகப் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்களை வாங்கும் அல்லது விற்கும் வழிமுறை ஆகும்.
89.
வலை சேவை : சேவையகம் கணிப்பொறியில் இயங்கும் மென்பொருளாகும். இது பயனர்களுக்கு வலை பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் ஆகும்.
90.
மின்னணு பணப்பை (e-Wallets) பயனர்கள் மின்னணு பரிவர்த்தனைகளைத் திறன் பேசிகள் அல்லது கணினிகள் மூலம் இணையத்தில் விரைவாக மற்றும் பாதுகாப்பாகச் செய்ய அனுமதிக்கிறது. ஒரு உண்மை யான பணப்பை போலவே மின்னணு பணப்பையானது நம்முடைய பணத்தை மின்னணு வடிவில் தேக்கி வைத்திருக்கும். நிகழ்நிலையில் (ONLINE) பொருட்களை வாங்குவதற்கு ஒரு வசதியாக வழி ஆகும்
91.
SQL-Structured query language தரவுத் தளங்களை அனுகவும் மற்றும் கையாளவும் பயன்படும் தரநிலை மொழியே SQL ஆகும். American National Standards Institute (ANSI) International Organization for Standardization (ISO) ஆல், தரநிலையானது முறையே அறிவிக்கப்பட்டது. SQL என்பது தரநிலை மொழியாக இருந்தாலும் வேறுபட்ட பதிப்புகள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பராமரிக்கப்படுகின்றன.
92.
எண்முறைக் கையொப்பம் என்பது ஒரு குறிப்பிட்ட மின்னணு ஆவணம், செய்தி அல்லது பரிவர்த்தனை நம்பகமானதா என சரிபார்க்கப் பயன்படும் ஒரு அமைப்பு ஆகும்.
93.
டெஸ்க்டாப் பப்ளிசிங் (Desktop publishing) என்பது DTP மென்பொருளைப் பயன்படுத்தி ஆவணங்களுக்கான பக்கங்களை வடிவமைப்பு (Page Layout) செய்வதாகும்.
94.
1. Standard Document Format
2. Translator and Mapper
3. Communication Software
4. Communication Network
95.
அசைவூட்டல் :
அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல்.
அசைவூட்டலில் திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சம் :
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைப் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
96.
படி 1: முன்னதாக வங்கி வழங்கிய பிரத்யேக பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நிகழ்நிலை வங்கிக் கணக்கில் உள்நுழையவும்.
படி 2: நிதி பரிமாற்றத்தைச் செயல்படுத்த பயனாளியை "பணம் பெறுபவரில் சேர்க்கவும்". பயனாளியின் வங்கிக் கணக்கு எண். பெயர், IFSC போன்றவற்றை, "புதிய பணம் பெறுபவரின் பிரிவை சேர்" பகுதியில் நிரப்பப்பட வேண்டும்.
படி 3: பயனாளி சேர்க்கப்பட்டவுடன், நிதி பரிமாற்ற முறையை (RTGS/NEFT/IMPS) தேர்வு செய்யவும்.
படி 4: பணத்தைச் செலுத்த வேண்டிய கணக்கைத் தேர்ந்தெடுக்கவும், பணம் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கவும், அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு குறிப்புரையை (விருப்பத்தேர்வு) சேர்க்கவும்.
படி 5: சமர்ப்பி கொடுக்கவும்.
படி 6: வங்கி கணக்குடன் தொடர்புடைய கைப்பேசி எண்ணுக்குப் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.
நவீன மின்னணு பணப் பரிமாற்றம் தனிப்பட்ட அடையாள எண் (PIN). ஒரு முறை கடவுச் சொல் (OTP) போன்றவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு தானியங்கி தீர்வை அமைப்பு (ACH) அதன் பின் பணம் செலுத்தும்.
97.
நவீன கடன் அட்டையில் உள்ள விவரங்கள்:
1. வழங்குபவர்: வழங்கும் வங்கியின் சின்னம் (துணை பிரிவு அல்லது திட்டம் ஏதேனும் இருப்பின் அதனுடன் சேர்த்து)
2. கடன் அட்டை எண்: நவீன கடன் அட்டை எண் 16 இலக்க தனித்துவ அடையாள எண்.
3. வாடிக்கையாளர் பெயர்: அட்டையின் முன்பக்கத்தில் புடைப்பு எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் மேலும் காந்த பட்டையிலும் சேமிக்கப்படும்.
4. EMV சில்லு: இது காந்தப் பட்டைக்கு கூடுதலாக அட்டையின் தகவல்களைச் சேமிக்க உள்ள ஒரு உட்பொதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சில்லு. EMV என்பது Europay - Mastercard - Visa என்பதன் சுருக்கமாகும். இந்த மூன்று பெயர்களும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிறுவனங்களின் பெயர்களைக் குறிக்கிறது. இது சில்லுடன் பின் கையொப்பம் மற்றும் சில்லுடன் - (PIN) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
5. RFID சின்னம்: சாய்ந்த Wi-Fi சின்னம் போன்ற வலதுபுற நோக்கி நான்கு வளைவு கொடுக்கல் இருக்கும். இது ஒரு தொடர்பு இல்லாத சூட்டிகை அட்டை (Contactless Smart Card) என்பதைக் குறிக்கிறது.
6. காலாவதி மாதம் மற்றும் ஆண்டு: அட்டையின் முன்பக்கத்தில் இருக்கும். அச்சிடப்பட்ட மாதத்தின் கடைசி நாள் வரை அட்டை செல்லுபடியாகும்.
7. அட்டை நிறுவன அடையாள சின்னம்: இது கடன் அட்டை அமைப்பின் பெயர். விசா மற்றும் மாஸ்டர்கார்டு முன்னணி கடன் அட்டை நிறுவனங்கள் ஆகும். RUPAY என்பது 2012 ல் தொடங்கப்பட்ட இந்திய உள்நாட்டு திறந்த வளையக் கடன் அட்டை அமைப்பு ஆகும்.
9 முப்பரிமாணப் ஒளிப்படிமம்: நகலெடுத்தலை தடுக்கும் ஒரு பாதுகாப்பு அம்சம். ஒளி கற்றையின் குறுக்கீட்டால் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவமாகும்.
10 கையொப்பம் பலகம்: அட்டையின் பின்புறத்தில் வாடிக்கையாளரின் கையொப்பம் இருக்கும். இது வாடிக்கையாளரை அடையாளம் காணும் முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அட்டை எண்ணின் கடைசி 4 இலக்கங்களையும் கொண்டிருக்கும்.
11. CVC/CVV: அட்டை சரிபார்ப்பு குறியீடு/மதிப்பு (Card Verification Code/Value) என்பது வழக்கமாக கையொப்ப பலக்கத்தின் இடதுபுறம் அச்சிடப்படும் 3 இலக்க குறியீடு ஆகும். CVC2 தொலை பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலே குறிப்பிட்டவை தவிர, ஒவ்வொரு கடன் அட்டையும் வழங்குனரின் பொறுப்புத் திறப்பு செய்தி, முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
98.
| கருவிகள் | விசைப்பலகை குறுக்கு வழி |
| 1. பாயின்டர் டூல் | F9 |
| 2. ரொட்டேட்டிங் டூல் | Shift+F2 |
| 3. லைன் டூல் | Shift +F3 |
| 4. ரெக்டாங்கல் டூல் | Shift+F4 |
| 5. எலிப்ஸ் டூல் | Shift+F5 |
| 6. பாலிகான் டூல் | Shift+F6 |
| 7. ஹேண்ட் டூல் | Shift+Alt+Drag Left mouse button |
| 8. டெக்ஸ்ட் டூல் | Shift+Alt+F1 |
| 9. கிராப்பிங் டூல் | Shift+Alt+F1 |
| 10. கன்ஸ்ட்ரெய்ன்டு லைன் டூல் | Shift+Alt+F2 |
| 11. ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் | Shift+Alt+F4 |
99.
(i) பொருட்களை விநியோகிக்க அதை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப வேண்டும். இது நீண்ட நேரத்தையும், பணத்தையும் எடுத்துக் கொள்ளும்.
(ii) மின் வணிகத்தில் ஒரு பொருளுக்கான அனுப்பாணை கொடுப்பதிலிருந்து அதைக் கையில் பெறும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சில மின் வணிக நிறுவனங்கள் தங்கள் அனுப்பும் பொருள் இருக்குமிடத்தை வாடிக்கையாளருக்குத் தகவல் புதுப்பித்தல் மூலம் கையாளுகிறது.
(iii) மின் வணிகம் மூலம் பெற்ற பொருட்களை திருப்பி அனுப்புவது ஒரு சிரமமான பணியாக உள்ளது. திரும்பி அனுப்பும் காலம் பற்றிய சந்தேகங்கள், திரும்பிய பொருட்கள் வணிகரைச் சென்றடையும் நேரம், பணத்தை திரும்பப் பெறுதல், பரிமாற்றம் மற்றும் அஞ்சல் செலவுகள் ஆகியவை களைப்பான செயலாக்க கருதப்படுகிறது.
தனியுரிமைச் சிக்கல்கள்: மின் - வணிகத்தில் மிகவும் கவலைக்குரியவை. மின் வணிகத்தில் ஒரு நிறுவனம் நுகர்வோர் பற்றிய தகவல்களைத் திரட்டுவது தவிர்க்க முடியாது. பல நிறுவனங்கள் அந்த தகவல்களைப் பயன்படுத்தி அதிலிருந்து பணம் ஈட்டத் துவங்கியுள்ளனர்.
இயல் பொருள் சார்ந்த சர்ச்சைகள்: மின் - வணிகத்தில் விற்பனையாளர் தேர்வு செய்த படத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும். பெரும்பாலும் நுகர்வோர் இணையம் வழியாகத் தனித்துவமான (அ) சிக்கலான பொருட்களை காட்டிலும் ஒரு சிறிய குழப்பமற்ற பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
எ.கா: இணையம் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் சில பொருட்கள் விற்பனையாளரிடம் நுகர்வோரை அடையும் வரை பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.
விநியோகத் தெளிவின்மை: மின் வணிகத்தில் வணிகங்கள் உலகம் முழுவதும் இருந்து நடத்தப்படுகின்றன என்பதால், வர்த்தக நிறுவனங்கள் நேர்மையானவையோ (அ) அவர்கள் நமது பணத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார்களா என்பது நிச்சயமில்லாமல் இருக்கலாம். புகார் கொடுக்கவோ சட்ட உதவியைப் பெறவோ நாம் அவர்களின் கதவைத் தட்டுவது கடினம். மேலும் பொருட்கள் அனுப்பப்பட்டாலும், அது வந்து சேருமா இல்லையா என ஐயம் கொள்வது எளிது.
100.
உலகளாவிய சந்தை அணுகல்:
1. இணையம் மின்-வணிக உலாக்காய் இயக்கிக் கொண்டிருக்கிறது. இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு நபருடனும் (அ) எந்த நிறுவனத்துடனும் வர்த்தகம் செய்ய முடியும்.
2. உலகளாவிய சந்தையை அணுக உதவுகிறது.
குறைந்த பரிவர்த்தனை செலவு: மின் வணிகம் வியாபார பரிவர்த்தனையில் செலவைக் கணிசமாகக் குறைகிறது.
எ.கா: மின் - வங்கிச் சேவையை பயன்படுத்துவதன் மூலம் ஒரு வங்கியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊழியர்களைக் குறைக்கலாம்.
24 x 7 வேலை: மின் - வணிக நிறுவனம் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய தகவல்களை எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என்பதால் எப்போது வேண்டுமானாலும் கொள்முதல் ஆணைகளைப் பெறவும், பொருட்களை விநியோகம் செய்வதைக் கண்காணிக்கவும், பணம் செலுத்துதல்களைப் பெறவும் முடியும்.
குறைந்த முதலீடு : இன்று சில்லறை விற்பனையாளர்கள் ஒரு குறைந்த முதலீட்டுடன் நல்ல வலைத்தளத்தைக் கட்டமைத்து மிகச் சாதாரணமாக தங்கள் மரபு சார்ந்த கடையை நிகழ்நிலையில் நகர்த்தி வருகின்றன
கணினி பணித்தள சார்பின்மை:
1. மின் வணிகத்தில் பங்கேற்ற நுகர்வோர் தங்கள் கணினியை மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை.
2. மின் - வணிகவியல் பயன்பாடுகள் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
3. ஏனெனில் குறிப்பிட்ட தளம் சார்ந்தது அல்ல. இணையத்தின் பொது நலன்காணல் பண்பு மின் - வணிகத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இணைத்தரகர்களை நீக்குதல்:
1. மின் - வணிகம் இடைத்தரகர்களை தாண்டிச் சென்று, இறுதி வாடிக்கையாளரை இணையம் மூலம் சென்றடைவதன் பயனை பெறுகிறது.
2. வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் பொருட்களையும் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தையும் சாத்தியமாகிறது.
101.
1. கல்வி
2. பொழுதுபோக்கு
3. வணிக அமைப்பு
4. மருத்துவ சேவைகள்
5. பல்லூடகக் கலந்துரையாடல்
6. பொது இடங்கள்
1. கல்வி (Education) :
(i) பாரம்பரிய கற்பித்தல் முறைக்குப் பதிலாக சிறந்த மாற்று முறையினை வழங்குவதில் பல்லூடகம் முக்கிய பங்கு ஆற்றுகின்றது. இது மாணவர்களை, அசைவூட்டல் மூலம் பல்வேறு கருத்துக்களை பற்றி ஆய்வு செய்யவும், கற்றுக் கொள்ளவும் அனுமதிக்கின்றது.
(ii) மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இந்த பல்லூடக வழிக் கற்றல் முறையையும் மற்றும் பல்லூடக கற்றல் பொருட்களையும் விரும்புகின்றனர்.
(iii) பல கல்வியாளர்கள், பல்லூடகம், புதிய வழிகளில் வகுப்பறையில் சிந்திப்பதை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர்.
(iv) ஜெர்மனியிலுள்ள GMU ஆனது பல்லூடக வழி கற்பித்தல் மற்றும் கற்றல் அமைப்பிற்கு MODULO எனப் பெயரிட்டுள்ளது.
(v) இது இணையத்தை தழுவிய சூழல் கொண்டு உருவாக்கப்பட்டு மாற்றத்தக்க மற்றும் பரவலாக்கப்பட்ட கற்றல் சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(vi) இந்தியாவில், மின் வழிக் கற்றல் (e-learning) தொலைதூர
வழி கற்றல் (distance learning)/மெய்நிகர் கற்றல் (Virtual Learning) போன்றவற்றை கற்பித்தல் மற்றும் கற்றலுக்காக பல்வேறு வழிகளில் பல்லூடகம் பயன்படுத்துகின்றன.
(vii) EDUSAT (Educational Satellite) என்பது கல்வி துறையில் மெய்நிகர் வகுப்பறைகள் பயனுள்ள முறையில் உருவாக்குவதற்கான சேவைகளை வழங்க இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளாகும்.
2. பொழுதுபோக்கு (Entertainment):
(i) பொழுதுபோக்கு தொழில் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு பல்லூடக தொழில்நுட்பம் முக்கிய காரணமாகும்.
(ii) இந்த தொழில்நுட்பமானது வானொலி, தொலைக்காட்சி ஆன்லைன் விளையாட்டு, தேவைப்படும் ஒளிக்காட்சி போன்ற அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களில் தேவைப்படுகிறது.
(iii) தேவைப்படும் ஒளிக்காட்சி (அ) தேவைப்படும் திரைப்படத்தை வீடுகளில் உள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு தனிப்பட்ட முறையில் வழங்குவது ஒரு சேவையாகும்.
3. வணிக அமைப்பு (Business Systems):
(i) பல்லூடக வணிகப் பயன்பாடுகள் வழங்குதல், பயிற்சி, இணைய நெறிமுறை போன்றவற்றை உள்ளடக்கியது.
(ii) சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர நிறுவனங்கள் அசைவூட்ட தொழில்நுட்பத்தை வியாபார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.
(iii) பணியாளர் அடையாளத்தை (ID) உருவாக்குவதில் பல்லூடகமானது பொதுவாக பயன்படுத்துகின்றது.
(iv) பல்லூடகத்தை வழங்குவதற்கு அதிக தெளிவு திறன் கொண்ட படவீழ்த்தி (Projectors) தேவை, புளுடூத் (Bluetooth) மற்றும் தனிப்பட்ட இலக்க உதவியாளர் (Personal Digital Assistant) ஆகியவை வணிகத்திற்கான பல்லூடகத் தொடர்புகளை மிகவும் பயனுள்ளதாக உருவாக்குகின்றன.
4. மருத்துவ சேவைகள் (Medical Service) :
(i) பல்லூடகத்தின் வளர்ச்சியினால் மருத்துவ சேவைகளும் வியத்தகு முறையில் வளர்ச்சி அடைந்துள்ளன.
(ii) மருத்துவ மாணவர்கள் உண்மையாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் உருவாக்கப்படுதல் (Simulation) மூலம் அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி பயிற்சி செய்கின்றனர்.
(iii) சிறிய இலக்க கேமராக்கள் மனித உடலில் செருகப்பட்டு உடலின் உட்பகுதியானது காட்சியாகக் காண்பிக்கப்படுகின்றது.
(iv) இதன் மூலம் மருத்துவ பயிற்சியாளர்கள் உடலினை வெட்டி சோதிக்காமல் உடலின் உட்பகுதிகளை பார்க்க முடிகின்றது.
5. பொது இடங்கள் (Public Places)
(i) தொழில் கண்காட்சி, நூலகங்கள், இரயில் நிலையங்கள், அருங்காட்சியகம், பெரிய கடைகள், விமான நிலையங்கள் உணவகங்கள் மற்றும் கண்காட்சி போன்ற பொது இடங்களில் தானியங்கு சேவை வழங்கி (Kiosks) வடிவத்தில் பயன்படுத்துகின்றது.
(ii) இது வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை வழங்கி உதவுகின்றது.
(iii) தானியங்கு சேவை வழங்கியில் Kiosks-ல் வழங்கப்பட்ட தகவல்களானது அசைவூட்டம், ஒளிக்காட்சி, அசையா படங்கள், வரைகலை வரைபடம், படங்கள், ஒலி மற்றும் உரை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
4. வங்கிகள் தானியங்கு சேவை வழங்கிகளை (Kiosks) ATM இயந்திர வடிவில் பயன்படுத்துகின்றன.
6. பல்லூடக கலந்துரையாடல் (Multimedia Conferencing) :
(i) பல்லூடக கலந்துரையாடல் (அ) ஒளிக்காட்சி கலந்துரையாடல் என்பது ஒரு அமைப்பாகும்.
(ii) இதில் பங்கேற்கும் பயனர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்தும் ஒரே அறையில் அமர்ந்து ஆலோசிப்பதைப் போன்று நேருக்கு நேராக கலந்துரையாட முடியும்.
102.
| எண்முறைக் கையொப்பம் | எண்முறைச் சான்றிதழ்கள் |
| ஒரு எண்முறைக் கையொப்பம் ஒரு மின்னணு ஆவணம், செய்தி அல்லது பரிவர்த்தனை உண்மையானதா என்பதைச் சரிபார்க்கப் பயன்படும் ஒரு செயல்முறையாகும். | ஒரு எண்முறைச் சான்றிதழ் என்பது சான்றிதழ் வைத்திருப்பவருக்கும் ஒரு குறிப்பிட்ட பொது குறியீட்டுக்கும் இடையில் உள்ள உறவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் ஒரு கணிப்பொறி கோப்பு ஆகும். |
| அனுப்பப்படும் தரவு நம்பகத்தன்மையை சரிபார்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. | அனுப்புனரின் நம்பகத்தன்மை சரிபார்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. |
| தரவரிசையில் இருந்தே ஒரு தரவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மற்றும் மூன்றாம் தரப்பினரால் மாற்றப்படவில்லை. | ஒரு பொருளுடன் ஒரு எண்முறைக் கையொப்பத்தை பிணைக்கிறது. |
| பரிமாறப்படும் தரவுகளுக்கு அங்கீகாரம், மறுதலிக்கப்படாதிருத்தல் மற்றும் நேர்மை ஆகியவற்றை வழங்குகிறது. | பரிமாறப்படும் தரவுகளுக்கு அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. |
| Digital Signature Standard - DSS என்ற நெறிமுறையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது தகவலை மறைகுறியாக்க மற்றும் குறியாக்க செய்ய SHA-1 (அ) SHA-2 வழிமுறையை பயன்படுத்துகிறது. | Public Key Cryptography Standards (PKCS) நெறிமுறையின் அடிப்படையில் வேலை செய்கிறது. இது X.509 அல்லது PGP வடிவத்தில் சான்றிதழை உருவாக்குகிறது. |
| ஆவணம் அனுப்பும் முடிவில் குறியாக்கம் செய்யப்பட்டு சமச்சீரற்ற விசையைப் பயன்படுத்தி பெறும் முடிவில் குறியாக்கம் செய்யப்படுகிறது. | சான்றிதழ் உரிமையாளர் பெயர் மற்றும் பொதுக் குறியீடு காலாவதி தேதி, சான்றிதழ் ஆணையத்தின் பெயர், ஒரு சான்றிதழ் ஆணையத்தின் எண்முறைக் கையொப்பம் கொண்டிருக்கும். |
103.
1. குறியாக்கத் தொழில் நுட்பம் என்பது ஒரு செயல்திறன் மிக்க தகவல் பாதுகாப்பு அமைப்பாகும்.
2. குறியாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு மூல உரையை அர்த்தமற்ற மறைஎழுத்து உரையாக மாற்றுவது குறியாக்கம் என்று வரையறுக்கப்படுகிறது.
3. இதனால் தரவுகளின் இரகசியத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
4. குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்கம் வழிமுறைகள் தரவை குறியாக்கம் (அ) குறிநீக்கம் செய்ய குறியீட்டை உபயோகப்படுத்துகிறது.
5. இரண்டு குறியாக்கத் தொழில்நுட்பங்கள்
i. சமச்சீர் குறியீடு குறியாக்கம்
ii. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்
i. சமச்சீர் குறியீடு குறியாக்கம்:
1. சமச்சீர் குறியீடு குறியாக்கம், நெறிமுறை குறியாக்கம் மற்றும் மறைக் குறியாக்கம் ஆகிய இரண்டிற்கும் ஒரே குறியீட்டை பயன்படுத்துகின்றன.
2. இதில் ஒரு குறிப்பிட்ட நீளமுடைய இயல் உரையை பல சிக்கலான செயல்பாடுகள் மூலம் அதே நீளம் கொண்ட மறைகுறி உரையாக மாற்றப்படுகிறது.
3. சமச்சீர் குறியீடு குறியாக்கம் வழிமுறைகள் ஒரு குறியீட்டை மட்டுமே பயன்படுத்துவதால், கோட்பாட்டின் படி, குறியாக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துல்லியமான குறியீட்டை அறிந்தவர்கள் மட்டுமே மறைகுறியாக்கம் செய்ய முடியும்.
4. AES, RC4, DES, 3DES போன்ற பிரபலமான குறியாக்கத் தொழில்நுட்பங்கள் சமச்சீர் குறியீடு குறியாக்கம் நெறிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.
ii. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம்:
1. சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் பொது குறியீடு குறியாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
2. பொது குறியீடு மற்றும் எண்முறைச் சான்றிதழ்களைப் பயன்படுத்துகிறது.
3. இதில் தகவல் பரிமாற்றம் செய்யும் நபர்களுக்கு மற்றவரின் தனிப்பட்ட குறியீடு தெரிந்திருக்க வேண்டியதில்லை.
4. ஒவ்வொரு பயனரும் தனிப்பட்ட குறியீடு மற்றும் பொது குறியீடு என அவர்களின் சொந்தக் குறியீட்டு ஜோடியை உருவாக்குவர்.
5. பொதுக் குறியீட்டு குறியாக்கம் முறையில் ஒரு பொதுக் குறியீட்டை கொண்டு இயல் உரையை மறை உரையாக மாற்றி பின் ஒரு தனிப்பட்ட குறியீட்டை கொண்டு மறை உரையை மீண்டும் இயல் உரையாக மாற்றப்படுகிறது.
எ.கா: RSA, DSS தொழில் நுட்பங்கள்
104.
1. PHP கோப்பினை திறத்தல்:
1) fopen ( ) என்பது PHP ல் உள்ள ஒரு அமைப்பு செயற்கூறாகும்.
2) இந்த செயற்கூறானது.
3) இரண்டு அளவுருக்களைக் கொண்டுள்ளது.
4) கோப்பின் பெயரைக் குறிப்பிட ஒன்று மற்றொன்று எந்த முறைமையில் (mode) கோப்பினைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப் பயன்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
$file _ Object= fopen(" File Name " ", "Read/ WriteMode") or die("Error Message! ");
எ.கா:
< ?PHP
$myfile = fopen("Student. txt", "r") or die("Unable to open file! ");
? >
2. PHP கோப்பினை படித்தல்: fread ( ) செயற்கூறு திறந்துள்ள கோப்பிலிருந்து படிக்க உதவுகின்றது. File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு:
fread($file _ Object,filesize("FileName"));
எ.கா:
< ?php
fread($myfile,filesize(" Student. txt"));
? >
3. PHP கோப்பினை மூடுதல்:fclose ( )
செயற்கூறானது திறக்கப்பட்ட ஒரு கோப்பினை மூடுவதற்கு உதவுகின்றது File object என்பது fopen செயற்கூறிலிருந்து பெறப்படுகின்றது.
கட்டளை அமைப்பு: fclose($file _Object);
எ.கா:
< ?php
$myfile = fopen("student.txt", "r");
// some code to be executed ....
fclose($myfile );
? >
4. PHP கோப்பினை எழுதுதல்: fwrite ( ) செயற்கூறானது கோப்பில் எழுத உதவுகிறது.
கட்டளை அமைப்பு:
fwrite($myfile, $txt);
எ.கா:
< ?php
$myfile = fopen("new_school_file. txt","W")
or die("Unable to open file! ");
$txt = "School Name\n";
fwrite($myfile, $txt);
$txt = "Student Name\n";
fwrite($myfile, $txt);
fclose($myfile );
? >
5. PHP கோப்பினை சேர்த்தல்:
file_put_contents ( ) செயற்கூறானது ஒரு கோப்பினைச் சேர்க்க உதவுகின்றது.
கட்டளை அமைப்பு :
file_put_contents(file,data,mode,context)
எ.கா:
< ?php
$txt="student id";
$myfile =file_put_contents('logs.txt',
$txt.
PHP_EOL, FILE_APPEND |LOCK_EX);
? >
105.
MySQL வினவல்கள்:
(i) MySQL மற்றும் PHP-ஐ இணைத்தலின் மிக முக்கிய நோக்கம் MySQL தரவுத்தள சேவையகத்திலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் மற்றும் கையாளுதல் ஆகும்.
(ii) SQL PHP, MySQL: நீட்டிப்புடன் சேர்ந்து MySQL மற்றும் PHP இணைப்பின் நோக்கத்தை அடைவதற்கு உதவுகின்றன. mysqli_query() என்பது PHP மொழியிலுள்ள SQL வினவல் கூற்றுகளை இயக்குவதற்கு உதவுகின்றது.
கட்டளை அமைப்பு :
mysqli_query ("Connection Object", "SQL query)
எடுத்துக்காட்டு :
$con=mysqli_connect("localhost", "my_user", "my_password", "Student_DB"); $sql = "SELECT student_name,student_age FROM student";mysqli_query($con,$sql);
106.
1. இணையம் என்பது அதிவேக தரவு தடங்கல் மற்றும் கம்பியில்லா முறைமைகள் மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய கணினிகளின் வலையமைப்பு ஆகும். உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை இணையம் இணைத்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 300 மில்லியனாக உயரக்கூடும்.
2. மொபைல் வலையமைப்பு உள்கட்டமைப்பின் வளர்ச்சிகள் -4G மற்றும் 3G வலையமைப்புகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துகின்றன. அதன் வளர்ச்சியடைந்த பகுதிகளில் மக்கள் தங்கள் ஸ்மார்ட் மொபைல் போன்களில் வீடியோ ஒளிபரப்பு முறைமை மற்றும் மொபைல் தொலைக்காட்சி போன்றவற்றை அனுமதிக்கிறது. பொது மக்கள் ஹாட்ஸ்பாட்டுகள் (அ) ஸ்மார்ட் ஃபோன்கள் வழியாகப் பணியிடத்தில் ஒரு வலையமைப்பு வழியாக எப்போது வேண்டுமானாலும் எல்லா நேரங்களிலும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
3. 4G மொபைல் வலையமைப்பு உலகின் பல பகுதிகளில் இன்னும் எட்டப்படவில்லை என்றாலும், தொலைத் தொடர்பாடல் துறை அடுத்த தலைமுறை "5" செல்லுலார் கம்யூனிகேஷன் டெக்னலாஜி வளர்ச்சிக்கு கடினமாக உழைக்கிறது.
4. செயற்கை நுண்ணறிவு பராமரிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் உதவும். போக்குவரத்துத் தாக்குதல் போன்றவற்றைக் கண்காணிக்க மற்றும் தடுக்க உதவுகிறது. இந்த செயற்கை வலையமைப்பு ஆற்றல் வழிமுறைகள் மிகவும் புத்திசாலித்தனமாக மாறும்.
5. செயற்கை நுண்ணறிவு ஒரு சிறந்த முன்னறிவிப்புடையதாக இருக்கலாம். இது உரிய நேரத்தில் தரவுகளைச் சேகரிக்கிறது மற்றும் பகுப்பாய்வு செய்கிறது. இதனால் பிணைய மேலாளர்கள் சிலர் உலகக் கோப்பை, ஒலிம்பிக்ஸ் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு சிறப்பாகத் தயாராக உள்ளனர்.
107.
| வளர்ச்சி | சிறப்பம்சம் | நன்மை | தீமை |
| முதலாம் தலைமுறை (1G)-1981 |
NMT வெளியீடு (Nordic Mobile Telephone Communication) |
1. ஒப்புமை பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 2. மிகக் குறைந்த போக்குவரத்து அடர்த்தி. |
1. மிக மோசமான குரல் தரம். 2. உறுதியற்ற மற்றும் குறியாக்கமற்ற பரிமாற்றங்கள். |
| இரண்டாம் தலைமுறை (2G)-1991 |
GSM (Global System for Mobile Communication) வெளியீடு -900MHz மற்றும் 1800MHz அதிர்வெண் கற்றைகளைப் பயன்படுத்தி பிரபலமான தரநிலை. |
1. இலக்க வகை பரிமாற்றம். தொழில்நுட்பம் பயனரின் அடையாளத்தை அங்கீகரிக்கவும், விலைப்பட்டியல் நோக்கங்களுக்காகவும் பயன்பட்டது. 2. தரவுக் குறியாக்கத்தைக் கொண்டிருந்தது. 3. அனுப்பப்படும் தகவல்களின் அளவை அதிகரிக்க TDMA மற்றும் CDMA வழிமுறையைப் பின்பற்றியது. 4. தரவு பரிமாற்ற வேகம் பொதுவாக 9.6 kbit/s |
1. அணுகல் வலையமைப்புகள் மற்றும் ரூட்டிங் தளங்களுக்கு இடையே தடையற்ற ரோமிங்கைத் தடுக்கிறது. |
| இரண்டிலிருந்து மூன்றுக்கு இடைப்பட்ட தலைமுறை (2.5G)-2000 |
GPRS ( Global Positioning Radio Service) தரவு சேவை வெளியீடு |
1. செய்திகள், படச் செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் மொபைல் சாதனங்களைச் செயல்படுத்துகிறது. 2. EDGE -ஐப் பயன்படுத்தி 115 kbit.s முதல் 384 kbit/s வரை இயக்க வேகங்களை அனுமதிக்கிறது. |
1. 2G மற்றும் 3G இடையேயான மொபைல் வலையமைப்பிற்கான வளர்ச்சியில் மிக அதிக காலம் இருந்ததாகக் கருதப்படுகிறது. |
| மூன்றாம் தலைமுறை (3G)-2003 |
UK 3G வெளியீடு -UMTS | 1. பல்வேறு வகையான மொபைல் தொழில் நுட்பத் தரநிலைகளை ஒன்றிணைக்கிறது. 2. தரவு பரிமாற்றத்திற்கான அதிக அதிர்வெண் பட்டைகளைப் பயன்படுத்துகிறது. |
1. வேறுபட்ட அணுகல் வலையமைப்புகள் மற்றும் ரூட்டிங் தளங்களுக்கு அப்பால் தடையற்ற ரோமிங்கைத் தடுக்கிறது. |
| 1. பல்லூடகச் சேவைகளை அதிகரிக்கின்றது. 2. தரவு பரிமாற்றம், WCDMA தொழில் நுட்பம் மூலம் 384 kbit/s மற்றும் 2048 kbit/s இடையே உள்ள தரவு விகிதங்களைப் பெறுகிறது. |
|||
| நான்காம் தலைமுறை (4G)-2007 |
ஆராய்ச்சி நிலையில் | 1. Adhoc வலையமைப்பு மாதிரியை அடிப்படையாக கொண்டது. 2. நிலையான உள் கட்டமைப்பு செயல்பாடு தேவையில்லை. 3. மொபைல் சாதனங்களுக்கான IP முகவரிக்கு துணை புரிகின்ற உலகளாவிய IPv6 ன் இணைப்பு தேவை. 4. 2 Mbit/s லிருந்து 10-100 Mbit/s வரை ரோமிங் செய்யலாம். 5. தாமதங்களைக் குறைத்து புதிய சேவைகளை வழங்குகிறது. |
1. Adhoc வலையமைப்பில் தன்னைத் தானே வடிவமைத்துக் கொள்வதற்கு மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு தேவை. |
| ஐந்தாம் தலைமுறை (5G)-2019 |
4G (LTE/WiMax) - ஐ தொடர்ந்து வரும் நிலை | 1. அதீத தரவு விகித செயல்பாடு (வினாடிக்கு 20 ஜிகா பிட் வேகம்). 2. குறைந்த உழைப்பு 3.ஆற்றல் சேமிப்பு. 4. உயர்ந்த அமைப்பு, திறன் மற்றும் பிற உயரிய சாதன இணைப்பு. |
108.
களப்பெயர் வெளி:
1. களப்பெயர்களை ஒரு படிநிலை மற்றும் தருக்க மர அமைப்பில் கொண்டுள்ள ஒரு பெயரிடும் அமைப்பு.
2. படிநிலை பெயர்வெளியை அடைய களப் பெயர்வெளி வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
3. இதில் பெயர்கள் தலைகீழ் மர வடிவமைப்பில் குறிக்கப்படுகிறது.
4. இதன் வேர் உறுப்பு மேலிருக்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. இந்த மர அமைப்பு, மட்டங்கள் 0 முதல் 127 வரை மொத்தம் 128 மட்டங்களைக் கொண்டிருக்கும்.
6. மேற்காண் படம் களப்பெயர்வெளியை குறிக்கிறது. இங்கு வேர் உறுப்பு மிக உயர்ந்த மட்டத்தில் அதாவது மட்டம் 0 வில் உள்ளது.
7. வேர் உறுப்பு எப்போதும் NULL சரத்தைக் குறிக்கிறது.
8. வேர் உறுப்புக்கு அடுத்த மட்டத்தில் முனைகள் (வேர் உறுப்புகளின் குழந்தைகள்) உள்ளன.
9. மர அமைப்பில் ஒவ்வொரு முனையும் ஒரு சிட்டை/ அடையாளம் மற்றும் களப் பெயரைக் கொண்டிருக்கும்.
109.
do while மடக்கு எப்பொழுதும் மடக்கினை முதல் முறை செயல்படுத்தும் போதே மடக்கின் உடற்பகுதியில் உள்ள கூற்றுகளை ஒரு முறை செயல்படுத்தும். ஆனால், கொடுக்கப்பட்ட நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரே ஒரு முறையேனும் செயல்படுத்தும். அதாவது, இங்கே நிபந்தனை, மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிக்கப்படுகிறது.
கட்டளை அமைப்பு:
do {
code to executed;
} while (condition is true);
எ.கா:
< ?php
$Student_ count = 10;
$student_ number= 1;
do
{
echo "The student number is:
$student_ number< br >";
$student_ number++;
}
while($student_ number< = $Student_ count)
? >
110.
வலையமைப்பில் பயன்பாட்டில் உள்ள சில வகையான வடங்கள்:
| 1. இணையச்சு வடம் | i. தொலைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும். இது 1880களின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது ii. தொலைக்காட்சியை அலைவங்கியுடன் இணைக்கப் பயன்படுகிறது iii. 10 mbps வேகத்தில் தகவலை பகிர்கிறது.இவை இருவகைப்படும் 1. இலகு வலை வடம் 2. தடிமன் வலை வடம் i. உட்பகுதியில் தாமிரக் கம்பியைக் கொண்டு சுற்றிலும் காப்பிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் iv. அளவில் பெரியவை என்பதால் எடுத்துச் செல்வதும் மாற்றுவதும் கடினமானது v) இதனை நிறுவுவதும் பராமரிப்பதும் எளிதல்ல |
| 2. முறுக்கு இணை வடம் | i. இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட காப்பிடப்பட்டு முறுக்கப்பட்டக் கம்பிகளின் தொகுப்பாகும் ii. வேகம் 10 mbps யில் துவங்கி 100 mbps வேகத்துடன் வெளியிடப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டு 10 mbps வேகத்துடன் 10 BASE - T என்ற பெயரில் அழைக்கப்படுகிறது iii. மின்காந்தக் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்காக 8 கம்பிகள் முறுக்கப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு வகைகள் 1. காப்பிடப்பட்ட முறுக்கு இணைக் கம்பி (STP) 2. காப்பிடப்படாத முறுக்கு இணைக் கம்பி (UTP) |
| 3. ஒளி இழை வடம் | i. வடம் கண்ணாடி இழைகளால் ஆனது ii. தகவல்களைப் பரிமாற ஒளித் துடிப்புகளைப் பயன்படுத்துகிறது. iii. முக்கியமாக பரந்த வலையமைப்பில் பயன்படுத்தப்படுகிறது iv. கேபிள்களுக்கு சேதம் ஏற்படாமல் தவிர்க்க அவை தரையின் ஆழத்தில் புதைக்கப்படுகிறது v. ஒளி இல்லை வடத்தில் இரண்டு வகைகள் உள்ளன 1. ஒற்றை முறை ஒளியியல் வடம் (Single mode Cable - 100 Base BX) 2. பன்முறை ஒளியியல் வடம் (Multimode Cable - 100 SX) |
| 4. USB கேபிள் (Universal Serial Bus) | (i) விசைப்பலகை, சுட்டி மற்றும் பிற புறச் சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது. (ii) ஆனால் Dongle எனப்படும் சில சிறப்பு USB வலையமைப்பு சாதனங்கள் இணைய இணைப்பை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் (iii) மைக்ரோ USB என்பது மொபைல் சாதனங்களை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் (iv) USB இந்த சிறிய பாதிப்பாகும். இது ஸ்மார்ட் போன்கள், GPS சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் போன்ற சாதனங்களை இணையத்துடன் இணைக்கிறது |
| 5. தொடர் மற்றும் இணை வடங்கள் | 1990க்கு முன்பு கணினியை இணையத்துடன் இணைக்க தொடர் மற்றும் இணை வடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இணை வடங்கள் அச்சுப்பொறி மற்றும் பிற வட்டு இயக்கிகளை கணிப்பொறியுடன் இணைக்கப் பயன்படுகின்றன |
| 6. ஈத்தர் வடம் | (i) வீடு (அ) அலுவலங்களில் கணினிகளை இணைக்கப் பையன்படும் பொதுவான வடம் ஆகும் (ii) வளைப் பகிர்வு மற்றும் இணைய அணுகலுக்காக குறும்பரப்பு வலையில் (LAN) உள்ள கம்பித் தொடர்பு சாதனங்களை இணைக்கிறது |
111.
இது ஒரு கிளைபிரிப்புக் கூற்றாகும். ஒரு நிபந்தனையின் அடிப்படையில், தரப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளில் ஒன்றுக்குக் கட்டுப்பாட்டை எடுத்துச் செல்லும்.
switch கூற்று பல நிபந்தனைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட நிபந்தனைகளுக்கு, வெவ்வேறு குறிமுறைத் தொகுதியை இயக்குகிறது.
கட்டளை அமைப்பு:
switch (expression)
{
case value1:
//code to be executed if expression = value1; break;
case value2:
//code to be executed if expression = value2: break;
...
default:
// code to be executed if expression is not equal to any of the values;
}
எ.கா :
< ?php
$x = 10;
switch ($x)
{
case 5:
echo "x is equal to 5";
break;
case 10:
echo "x is equal to 10"; break;
case 15:
echo "x is equal to 15"; break;
default:
echo "x is not equal to 5, 10, or 15";
}
: x is equal to 10
112.
1. பலபரிமாண அணி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளைக் கொண்ட ஒரு அணி ஆகும்.
2. PHP பல்வேறு வகையான (அ) அளவுள்ள பல பரிமாண அணிகளை உருவாக்க முடியும் அல்லது புரிந்து கொள்ள முடியும்.
3. அதாவது இரண்டு மூன்று நான்கு ஐந்து (அ) அதற்கும் அதிகமான அளவுள்ள பரிமாண அணிகளை உருவாக்கலாம்.
4. ஆனால் பயனர் மூன்றுக்கும் அதிகமான பரிமாணங்களை (அ) நிலைகளைக் கையாளுவது கடினம்.
எ.கா
// A two-dimensional array
$student=array
(
array(“Iniyan”,100,96),
array(“Kavin”,60,59),
array(“Nilani”,1313,139)
);
echo $$student[0][0].”: Tamil Mark: “.$student [0][1].”. English mark: “.$student [0]
[2].”
”;
echo $$student[1][0].”: Tamil Mark: “.$student [1][1].”. English mark: “.$student [1][2].”
”;
echo $$student[2][0].”: Tamil Mark: “.$student [2][1].”. English mark: “.$student [2]
[2].”
”;
?>
113.
● Apache license 2.0
● BSD 3-Clause “New” or “Revised” License
● BSD 2-Clause “Simplified” or “Free BSD” License
● GNU General Public License (GPL)
● GNU Library of “Lesser” General Public License (LGPL)
● MIT License
● Mozilla Public License 2.0
● Common Development and Distribution License
● Eclipse Public License
114.
1. வணிகம் - வணிகம் (B2B)
2. வணிகம் - நுகர்வோர் (B2C)
3. வணிகம் - அரசாங்கம் (B2G)
4. நுகர்வோர் - வணிகம் (C2B)
5. நுகர்வோர் - நுகர்வோர் (C2C)
6. நுகர்வோர் - அரசாங்கம் (C2G)
7. அரசாங்கம் - வணிகம் (G2B)
8. அரசாங்கம் - நுகர்வோர் (G2C)
9. அரசாங்கம் - அரசாங்கம் (G2G)
1. வணிகம் - நுகர்வோர் (B2C):
(i) B2C மின் வணிகத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் இறுதி - நுகர்வோருக்கு இடையே இணையகம் வழியாக நேரடி வர்த்தகம் நடைபெறுகிறது
(ii) B2C நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நிலையில் பொருட்கள், தகவல் (அ) சேவைகளை அதிக தனிப்பட்ட மற்றும் சக்தி வாய்ந்த சூழலில் விற்பனை செய்கின்றன
(iii) ஒரு மரபு சார்ந்த கடைக்காரருக்கு உண்மையான போட்டியாளராக கருதப்படுகிறது
(iv) இவ்வகை மின் - வணிக மாதிரி நுகர்வோருக்குப் பயனளிக்கக் கூடியது. மின் வணிகம் இணையத்தின் சில்லறை விற்பனையாக செயல்படுகிறது என்றும் கூறலாம்
எ.கா: வாடிக்கையாளர்களுக்குப் புத்தகங்களை நேரடியாக விற்பனை செய்யும் ஒரு புத்தக நிறுவனம்
2. வணிகம் - அரசாங்கம் (B2G):
(i) B2G என்பது பொருட்கள், சேவைகள் (அ) தகவல்களை அரசாங்கத்திற்கோ (அ) அதன் நிர்வாகத்திற்கோ விற்பனை செய்யும் வியாபார அமைப்புகளைக் குறிப்பிடும் ஒரு வணிக மாதிரியாகும்
(ii) ஒரு நிறுவனம் தனது பொருட்கள் அல்லது சேவைகளுக்கு இணையம் மூலம் அரசாங்கத்திடம் பணம் பெறும் போது அது B2G மின் வணிக மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா: ஒரு அரசு (அ) அதன் நிர்வாகம் ஒரு வணிக நிறுவனத்திடமிருந்து மாணவர்களுக்கான மடிக்கணினிகளை வாங்குதல்
3. நுகர்வோர் - வணிகம் (C2B)
(i) இந்த மின் - வணிக மாதிரியில் வாடிக்கையாளர்களால் பரிவர்த்தனை துவக்கப்படுகிறது
(ii) குறிப்பிட்ட விலை (அ) தேவைகளில் தொகுப்பை நிர்ணயித்து நுகர்வோர்கள் ஒரு சேவை (அ) பொருளைக் கோருவோர்கள்
(iii) C2B மாதிரி தலைகீழ் ஏல மாதிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வாடிக்கையாளர் ஒரு சேவை அல்லது ஒரு தயாரிப்புக்கான விலையை நிர்ணயம் செய்கிறார்.
(iv) பின் அந்த வலைத்தளம் வாடிக்கையாளரின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் பல்வேறு வாய்ப்புகளை கண்டறியும்.
எ.கா: ஒரு பயண வலைத்தளத்தில் ஒரு வாடிக்கையாளர் அவரது பயண தேதி, புறப்படும் மற்றும் சேரும் இடம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தங்கும் விடுதியின் தரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்
4. நுகர்வோர் - அரசாங்கம் (C2G):
(i) C2G மின் வணிகத்தில் நுகர்வோரும் அரசும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரு தனி நுகர்வோர் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்கிறார்
(ii) C2G மாதிரிகள் வழக்கமாக வருமான வரி அல்லது வீட்டு வரி செலுத்துதல்கள், சான்றிதழ்கள் அல்லது பிற ஆவணங்களை வழங்குவதற்கான கட்டணங்கள் செலுத்துதல் ஆகியவை அடங்கும்
115.
1. வலையமைப்பு மூலம் வலைத்தள உருவாக்கம் மற்றும் வழங்குதல் பற்றி வலை உருவாக்க கருத்துரு விரிவாக விவரிக்கிறது.
2. வலைப் பொருளடக்க உருவாக்கம், வலைபக்க வடிவமைத்தல், வலைதள பாதுகாப்பு போன்ற வலை உருவாக்கச் செயல்களைக் கொண்டுள்ளது.
3. PHP ஸ்கிரிப்ட் எவ்வாறு வேலை செய்கிறது.
(i) ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி, வலைதளம் (அ) வலைப்பக்கம் நிரலால் உருவாக்கப்படுகிறது.
(ii) இறுதியாக, வலைதள குறிமுறைகள் அனைத்தும், தொலைதூர சேவையகப் பாதைக்கு நகர்த்தப்படும்.
(iii) பயனாளர் சார்ந்த கணிப்பொறியில் இருந்து இறுதிப்பயனர் உலவியைத் திறந்து, வலைதளம் (அ) வலைப்பக்கத்தில் URL லைத் தட்டச்சு செய்து, வலையமைப்பில் தொலைதூர சேவையகக் கணிப்பொறிக்கு கோரிக்கையைத் தொடங்கி வைக்கிறது.
(iv) பயனாளர் கணிப்பொறியிலிருந்து கோரிக்கையைப் பெற்ற பிறகு, தொலைதூர கணிப்பொறியில் உள்ள குறிமுறையை வலைசேவையகம் தொகுத்து, மொழி பெயர்க்க முயற்சி செய்யும்.
(v) பிறகு பதில் உருவாக்கப்பட்டு வலையமைப்பிலுள்ள வலைச் சேவையகத்திலிருந்து பயனாளர் கணிப்பொறிக்குத் திருப்பி அனுப்பப்படும்.
(vi) இறுதியாக பயனாளர் கணிப்பொறியில் நிறுவப்பட்ட உலவி பதிலைப் பெற்று வெளியீட்டைப் பயனருக்கு காண்பிக்கும்.

116.
கடன் அட்டை பரிவர்த்தனையின் முக்கிய பங்களிப்பாளர்கள்:
1. வாடிக்கையாளர் : கடன் அட்டை கணக்கை வைத்திருப்பவர், கடனை முழுமையாக (transactor) அல்லது அதில் ஒரு பகுதியை (revolver) மட்டும் (மீதமுள்ள தொகை மற்றும் வட்டி கணக்கில் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும்) செலுத்த வேண்டியவர்.
2. வியாபாரி : கடை உரிமையாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை வழங்குபவர், கடன் அட்டை மூலம் தனது வாடிக்கையாளர்களால் செய்யப்படும் பணம் செலுத்தல்களைப் பெறுகின்றவர்.
3. பெறுபவர்: வியாபாரியின் சார்பாக பணம் பெற்றுக் கொள்வதற்கு உதவும் வங்கி. இது உரிய வழியில் கடன் அட்டை வழங்குபவருக்கு அங்கீகார கோரிக்கைகளை அனுப்பும்.
4. கடன் அட்டை அமைப்பு: இது வங்கிகளுக்கு இடையேயான இடைநிலை அமைப்பு, இந்த நிறுவனம் பெறுபவர் மற்றும் வழங்குபவர் இடையே பரிவர்த்தனை தகவல் பரிமாற்றங்களுக்கு பொறுப்புடையது. எடுத்துக்காட்டு: விசா, மாஸ்டர்கார்டு, RUPAY.
5. வழங்குபவர்: கடன் அட்டையை வழங்கும் வங்கி, கொள்முதலுக்கான வரம்பை அமைக்கிறது. பரிவர்த்தனைகளின் அங்கீகாரத்தைத் தீர்மானிக்கிறது. பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது, காப்பீடு, கூடுதல் அட்டைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.
117.
தரவுதள தொழில்நுட்பம், உறவுநிலை மற்றும் பொருள் உறவுநிலை பண்புகளைக் கொண்ட மாதிரிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. முக்கியமான தரவுதள மாதிரிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
1. படிநிலை தரவுதள மாதிரி :
(i) IBM- இன் முதல் DBMS ஆன IMS (Information Management System) தகவல் மேலாண்மை அமைப்பு என்பது ஒரு பிரபலமான படிநிலை தரவுதள மாதிரியாக இருந்தது.
(ii) இந்த மாதிரியின் ஒவ்வொரு பதிவிலும் (records) தகவல்கள் மரக்கிளை அமைப்பைப் போன்று பெற்றோர் குழந்தை உறவுநிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
(iii) இது உறவுநிலை மாதிரியின் அட்டவணைகளுக்கு (Tables) நிகரானது.

2 . வலையமைப்பு மாதிரி :
(i) முதன் முதலில் Honeywell-இல் உருவாக்கப்பட்ட தரவு மாதிரி IDS (Integrated Data Store) ஆகும்.
(ii) இது படிநிலை தரவுத்தள மாதிரியை ஒத்திருக்கும் தவிர ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உரிமையாளரைக் கொண்டுள்ளனர்.
(iii) பலவற்றுடன் பல உறவுநிலையானது எளிய முறையால் கையாளப்படுகிறது. மூன்று தரவுதள கூறுகளைக் கொண்டுள்ளது.
(iv) அவை, வலையமைப்புத் திட்டம், துணைத் திட்டம் மற்றும் தரவு மேலாண்மைக்கான மொழி ஆகும்.

3. உறவுநிலை மாதிரி :
(i) Oracle, DB2 ஆகியவை தற்போது பயன்பாட்டில் உள்ள சில உறவுநிலை மாதிரிகள் ஆகும்.
(ii) உறவுநிலை மாதிரி சான்றுரு (instance) மற்றும் திட்டம் (schema) என்ற இரண்டு சொற்களால் வரையறுக்கப்படுகிறது.
(iii) சான்றுரு: வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட ஒரு அட்டவணை ஆகும்.

4. பொருள் சார்ந்த தரவுத்தள மாதிரி :
(i) இந்த மாதிரி பொருள் நோக்கு நிரலாக்க கருத்துருக்கள் (oop's) மற்றும் தரவுத்தள தொழில்நுட்பங்கள் ஆகிய பிணைப்பை உள்ளடக்கியது. இந்த மாதிரி உறவுநிலை மாதிரியின் அடிப்படையாக உள்ளது.
(ii) பொருள் என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய எளிய மென்பொருளை பொருள் நோக்கு நிரலாக்கம் பயன்படுத்துகிறது. இவை பொருள் நோக்கு தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன.

118.
1. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை என்பது, குறிப்பாக இணையம் வழியாக கடன் அட்டை மூலம் மின்னணு பணம் செலுத்தல்களுக்கான பாதுகாப்பு நெறிமுறை ஆகும்.
2. இது, GTE, IBM மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஸ்கேப்பின் பங்களிப்புடன், 1996ல் விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது.
3. SET இன் செயலாக்கம் எண்முறைக் கையொப்பம் மற்றும் பரிமாற்ற தரவின் குறியாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாக்கப்படுகிறது.
4. தனியுரிமையை உறுதிப்படுத்த இரட்டைக் கையொப்பங்களை உறுதிப்படுத்த, பயன்படுகிறது.
5. இது மூன்று பங்களிப்பாளர்களை உள்ளடக்கியது:
i. வாடிக்கையாளர்
ii. விற்பவர்
iii. விற்பவரின் வங்கி
6. இந்த அமைப்பு முறைக்கு மூன்று பங்களிப்பாளர்களிலிருந்தும் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.
7. வாடிக்கையாளரின் மற்றும் விற்பனையாளரின் சான்றிதழ்கள் அந்தந்த வங்கிகளின் மூலம் வழங்கப்படுகின்றன. அதன் பிறகுதான் வர்த்தக பரிவர்த்தனை நடைபெற முடியும்.
9. இந்த SET நெறிமுறையில், கடன் அட்டை எண் விற்பவருக்குத் தெரியாமல் இருக்கும்.
10. எனவே விற்பவரின் கோப்புகளில் சேமிக்கப்பட முடியாது. மேலும் ஒரு ஹேக்கர் மூலம் மீட்க முடியாது.
11. திறந்த பிணையத்தில், கடன் அட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் மின்னணு பரிவர்த்தனையின் பாதுகாப்புக்கு SET நெறிமுறை உத்தரவாதம் அளிக்கிறது.
12. இதில் பரிமாற்றத் தரவு மாற்றமடையாமல் இருப்பது மற்றும் பரிவர்த்தனைகளை மறுதலிக்கப்படாமல் இருப்பது ஆகியவற்றை உறுதி செய்வது போன்ற நன்மைகள் உண்டு.
13. எனவே, மின்னணு கடன் அட்டை பரிமாற்றத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமாக மாறியுள்ளது.
119.
| கருவியின் பெயர் | கருவிப் பெட்டி | சுட்டுக் குறி | பயன் |
| பாயின்டர் டூல் | உரை மற்றும் வரைகலைப் படங்களைத் தேர்ந்தெடுக்க நகர்த்த அளவை மாற்ற | ||
| டெக்ஸ்ட் டூல் | உரையை உள்ளிட தேர்ந்தெடுக்க பதிப்பிக்க | ||
| ரொடேட்டிங் டூல் | பொருட்களைத் தேர்ந்தெடுக்க மற்றும் சுழற்ற | ||
| க்ராப்பிங் டூல் | வரைகலைகளை ஒழுங்கமைக்க | ||
| லைன் டூல் | ![]() |
நேர்கோடு வரைய | |
| கன்ஸ்ட்ரெய்ன்டு டூல் | ![]() |
கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கோடுகள் வரைய | |
| ரெக்டாங்கல் டூல் | ![]() |
சதுரம் மற்றும் செவ்வகம் வரைய | |
| ரெக்டாங்கல் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான செவ்வகங்களை வரைய | |
| எலிப்ஸ் டூல் | ![]() |
வட்டம் மற்றும் நீள்வட்டம் வரைய | |
| எலிப்ஸ் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான நீள்வட்டங்களை வரைய. | |
| பாலிகான் டூல் | ![]() |
பல கோணங்கள் வரைய | |
| பாலிகான் ஃபிரேம் டூல் | ![]() |
உரை மற்றும் வரைகலைகளை வைப்பதற்கான பல கோணங்களை வரைய | |
| ஹேண்ட் டூல் | பக்கத்தை திரை உருளல் செய்ய | ||
| ஜூம் டூல் | ![]() |
![]() |
பக்கத்தின் அளவை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் பார்க்க. |
120.
தகவல் தொடர்பு இணைப்புகள் மற்றும் பரிமாற்ற ஊடகத்தின் அடிப்படையில் EDI கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. நேரடி EDI
2. VAN வழியாக EDI
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI
4. இணையம் வழி EDI
5. கைப்பேசி வழி EDI
1. நேரடி EDI:
i. இது முனையம்-முனையம் EDI என்றும் அழைக்கப்படுகிறது.
ii. பல்வேறு வணிக கூட்டாளிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது.
iii. தொடர் வணிக பரிவர்த்தனைகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. VAN வழியாக EDI:
i. மதிப்புக் கூட்டப்பட்ட வலையமைப்பு வழியாக நடைபெறும் EDI ஆகும்.
ii. இங்கு EDI ஆவணங்கள் மூன்றாம் தரப்பு வலை சேவை வழங்குநர்களின் ஆதரவுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
iii. பல நிறுவனங்கள் வலையமைப்பு தொழில்நுட்பங்களின் புதுப்பித்தல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த வகையை விரும்புகின்றன.
3. FTP / VPN, SFTP, FTPS வழியாக EDI:
FTP/VPN, SFTP மற்றும் FTPS போன்ற நெறிமுறைகளை பயன்படுத்தி இணையம் அல்லது அகஇணையம் அடிப்படையில் EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்வது பொதுவாக FTP/VPN, SFTP, FTPS வழியாக EDI என அழைக்கப்படுகிறது.
4. இணையம் வழி EDI:
(i) இணைய அடிப்படையிலான EDI, இணையம் வழியாக ஒரு உலாவியை பயன்படுத்தி நடைபெறுகிறது.
(ii) இங்கு நிறுவனங்கள் ஒரு உலாவியைப் பயன்படுத்தி தரவை தங்கள் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு பரிமாற்றம் செய்கின்றன.
(iii) சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற எளிமையையும் மற்றும் வசதியையும் கொண்டது இணைய EDI ஆகும்.
5. கைப்பேசி வழி EDI:
திறன்பேசி அல்லது பிற கையடக்க சாதனங்களை EDI ஆவணங்களை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் போது அது கைப்பேசி வழி EDI எனப்படுகிறது. கைப்பேசி வழி EDI பயன்பாடுகள், EDI பரிமாற்றங்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
121.
நம் காலத்தின் மிகப்பெரிய சினிமா படங்களின் பின்னால் சில டிஜிட்டல் அனிமேட்டர்ஸ் உள்ளனர். இன்றைய பாப் கலாச்சார சூழலில் டிஜிட்டல் அனிமேஷன் நடுநாயகமாகத் திகழ்கிறது என்பதற்கு ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு தொழில் துறைகளில் டிஜிட்டல் அனிமேஷன் வேலைகள் சாத்தியமாகும்.
திரைப்படத் துறையில் உள்ள அனிமேஷன் வாய்ப்புகள் :
அசைவூட்டல் தொழில், ஆர்வம் மற்றும் ஆக்கப்பூர்வமான விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
1. முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குபவர்கள் :
(3D Modellers) : பார்வையாளர்கள் பொருளை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட பொருளை அனைத்துக் கோணங்களிலிருந்து கணினி மாதிரிகளாக உருவாக்குபவர்கள்.
2. கதாபாத்திர அனிமேட்டர்ஸ் (Character Animators) : ஒரு கதையை சொல்லக் கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் பொருத்தமான உடல் இயக்கங்களை உருவாக்குபவர்கள்.
3. இயக்க வரைகலை கலைஞர்கள் (Motion Graphics Artists) : பல்வேறு நிலைகளில் ஆக்கபூர்வமான செயல்முறைக்கு பொறுப்பானவர்கள். இயக்கத்தை சித்தரிக்க இரு பரிமாண, முப்பரிமாண அசைவூட்டப் படங்களை உருவாக்குபவர்கள்.
4. நுண் அமைப்பு கலைஞர்கள் (Texture Artists) : அசைவூட்டம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்தை (அ) கலை வேலைப்பாட்டைச் சுற்றியுள்ள உடைமைப் பொருட்களுக்கான அமைப்பு, வண்ணம் மற்றும் முப்பரிமாண பயன்படுத்துபவர்கள்.
5. ஒளி கலைஞர்கள் (Lighting Artists) : காட்சியை உண்மை தன்மையுடனும் முறைகளின்றி உருவாக்க, சரியான ஒளி மற்றும் நிழல் விளைவுகளை ஒளி துறையுடன் பணிபுரிபவர்கள்.
6. தந்திரக் கலைஞர்கள் (Rigging Artists) :
1. துல்லியமான மற்றும் விரிவான பார்வை தேவை உள்ளவர்கள்.
2. உருவாக்குதல் சவால்களைத் தீர்ப்பதற்கும் கதாபாத்திரங்களின் இயக்கங்களை சாத்தியமாக்குவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு மாதிரிகளை உருவாக்குபவர்கள் மற்றும் அசைவூட்டக் கலைஞர்களோடு ஒத்திசைவுடன் வேலை செய்பவர்கள்.
இயக்கப்பட்ட தொடர் சித்திரக் கலைஞர்கள் (Story board Artists) :
கையாலோ கணினி மூலமாகவோ தொடர்/சினிமாக் காட்சிகளை ஒவ்வொரு சட்டங்களாக வரைந்து காட்சிப்படுத்துபவர்கள்.
தொகுத்தல் கலைஞர்கள் (compositing Artists) :
பல்லூடகப் பயன்பாட்டில் பின்-உருவாக்குதல் செயல்பாட்டிற்கான முக்கியமானக் கலைஞர்களில் இவர்களும் ஒருவர் ஆவர். திட்டப் பணிக்கு இறுதிச் செயல்பாடுகளை இவர்கள் தருகிறார்கள்.
122.
123.
1. பயனர் வரையறுத்த செயற்கூறுகள் ஏற்கனவே உள்ள நிரலின் தொகுதிக்குள் பயனர் சொந்தமாக ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளை எழுதும் வசதியை அளிக்கிறது.
2. நிரலர் பயனர் வரையறுத்த செயற்கூறுகளை உருவாக்குவதற்கான இரண்டு முக்கியமான படிநிலைகள் .
1. செயற்கூறு அமைப்பு :
(i) ஒரு பயனர் வரையறுத்த செயற்கூறு function என்ற சிறப்புச் சொல்லை, முன்னொட்டாகக் கொண்டிருக்கும்.
(ii) பயனர் செயற்கூறின் தொகுத்திற்குள் எந்த விதமான தனிப்பயனாக்கப்பட்ட தருக்கங்களை எழுத முடியும்.
கட்டளை அமைப்பு :
function function Name( )
{
Custom Logic code to be executed;
}
2. செயற்கூறினை அழைத்தல்:
ஒரு செயற்கூறு அறிவிப்பு பகுதி ஒரு செயற்கூறு அழைப்பின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. நிரலர் அழைக்கும் செயற்கூறின் பகுதி அதனை சார்ந்த நிரலுக்குள் உருவாக்க வேண்டும்.
கட்டளை அமைப்பு :
functionName ( );
எ.கா:
<?php
function insertMsg( ){
echo"Student Details Inserted Successfully!";
}
insertMsg( );//call the function
?>
124.
மாறிகள்: நிரலில் பின்னர் கையாளுவதற்காக மதிப்புகளை சேமிக்கும் இடம்.
மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் :
1. மாறியின் பெயர் எப்பொழுதும் '$'என்ற குறியுடன் தொடங்க வேண்டும்.
2. மாறியின் பெயர் ஒருபோதும் எண்ணில் தொடங்க கூடாது.
3. மாறியின் பெயர்கள் எழுத்து வடிவுணர்வு உடையதாகும்.
எ.கா"
$a=5;$b=10;
$a_1="Computer Application"
$c=$a+$c;
125.
1. PHP ஸ்கிரிப்ட் HTML குறிமுறையின் உள்ளே எழுதுவதால் அந்த கோப்பினை php நீட்டிப்புடன் சேமிக்கலாம்.
2. உட்பொதிந்த PHP கோப்பு வலை சேவையகத்தில் இயக்கப்படும்.
3. உலவி HTML மற்றும் பிற பயனாளர் சார்ந்த கோப்புகளை மட்டும் பெறும்.
4. உலவியல் PHP-யின் மூலக் குறிமுறைகள் எதுவுமே புலப்படாது.
5. அதாவது பயனாளர் கணிப்பொறியிலுள்ள உலவிக்கு PHP மொழி பெயர்ப்பி மூல HTML கோப்புகளை உருவாக்கும்.
126.
ஐந்து முக்கிய வகைகள் :
1. தரவு வரையறை மொழி (Data Definition Language-DDL)
2. தரவு கையாளுதல் மொழி (Data Manipulation Language-DML)
3. தரவு வினவல் மொழி (Data Query Language-DQL)
4. பரிவர்த்தனைக் கட்டுப்பாடு மொழி (Transaction Control Language-TCL)
5. தரவுக் கட்டுப்பாட்டு மொழி (Data Control Language-DCL)
127.
(i) Hypertext Transfer Protocol (HTTP):
உலகளாவிய வலையின் முக்கிய நெறிமுறை ஆகும்.
(ii) File Transfer Protocol (FTP):
சேவையகத்தில் இருந்து பயனருக்கு முழுமையான கோப்புகளை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.
(iii) Simple Mail Transfer Protocol (SMTP):
மின்னஞ்சல் சேவைகளை வழங்குகிறது.
(iv) Domain Name System (DNS): பிற கணினிகளை எண்களைக் காட்டிலும் பெயர்களைக் கொண்டு குறிப்பிட பயன்படுகிறது.
128.
ஒவ்வொரு உருப்பொருளின் வகையிலும் உள்ள உறுப்பினர்களுக்கு இடையேயான உறவுநிலைகளின் ஒவ்வொரு நிகழ்வும் உறவுநிலை நிகழ்வு என அழைக்கப்படுகிறது.
எ.கா: Employee மற்றும் department உருப்பொருள்களின் உறவுநிலை 'works-for' என்றால், Ram என்பவர் comp.sc துறையிலும் Shyam என்பவர் Electrical துறையிலும் பணிபுரிவது போன்றவை works-for உறவு நிலையின், உறவுநிலை நிகழ்வுகள் ஆகும்.
129.
(i) HTTPS என்பது Hyper Text Transfer Protocol Secure என்பதாகும்
(ii) குறிக்கப்பட்ட தரவை பாதுகாப்பான இணைப்பில் பரிமாற்றம் செய்வதற்கான நெறிமுறை ஆகும்.
(iii) HTTPS தரவை அதிகப்படுத்துகிறது மற்றும் Wi - Fi போன்ற பொது வலையமைப்புகளில் தரவுப் பாதுகாப்பை வழங்குகிறது.
130.
TCP செயல்பாடு: இரண்டு நெறிமுறைகளின் கலவையாகும்.
1. Transmission Control Protocol (TCP)
2. Internet Protocol (IP)
(i) இணைய நெறிமுறை (IP) பொதுவாக வலைப்பின்னல்களில் அனுப்பப்படும் பாக்கெட்டுகளில் தளவமைப்புகளை குறிக்கிறது
(ii) இது பாக்கெட்டுகள் எங்கே போவது, எப்படிப் போவது மற்றும் இலக்கை எவ்வாறு அடைவது போன்றவற்றைக் குறிக்கிறது
(iii) பரிமாற்றக் கட்டுப்பாட்டு நெறிமுறை (TCP) என்பது தரவுப் பரிமாற்றத்தை உறுதி செய்கிறது.
(iv) பொட்டலங்கள் பிழைகளை சரிபார்த்து தேவைப்படின் மறு பரிமாற்றம் செய்வதற்கான கோரிக்கை வைக்கிறது
131.
1. மொபைல் வலையமைப்பு என்பது கம்பியில்லா வலையமைப்பை ஏற்படுத்த உதவும் சாதனங்கள் ஆகும்.
2. நிலப் பகுதிகளில் கம்பியில்லா வலையமைப்புகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.
3. ஒவ்வொன்றும் ஓரிட பெறுவழங்கி (Transceiver) மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால் பொதுவாக மூன்று செல் தளங்கள் (அ) ஒரு அடிப்படை பெறுவழங்கி மூலம் வழங்கப்படுகின்றன.
4. இந்த அடிப்படை நிலையம் வலையமைப்பு பரப்பெல்லை மற்றும் குரல், தரவு மற்றும் பிற உள்ளடக்கம் ஆகியவற்றை பரிமாற்றுவதற்காகப் பயன்படுத்தக்கூடிய பிற அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
5. எல்லா வானொலி ரேடியோ பரப்பெல்லையும் இணைந்து பரந்த புவியியல் பகுதி என அழைக்கப்படுகிறது.
6. நகரும் பெறுவழங்கி நிலையான பெறுவழங்கியுடன் தொடர்பு கொண்டு பரிமாற்றத்தின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட செல் வழியாக நகரும்.
132.
மின் அரசாண்மை: அரசாங்க சேவைகள் அணுகுவதற்கான பயன்பாடாகும், தகவல் பரிமாற்றங்கள், பல்வேறு தரநிலை அமைப்புகளில் குடிமகனுக்கு அரசாங்கத்திற்கும், இடையேயான வர்த்தகம். மின் அரசாண்மை மூலம் சான்றிதழ்களை எளிதாகப் பெறமுடியும்.
133.
mysqli_close( ) செயற்கூறு PHP ஸ்கிரிப்ட்டிங் மற்றும் MySQL தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை மூடுவதற்குப் பயன்படுகிறது.
கட்டளை அமைப்பு:
mysqli_close("Connection Object");
எ.கா:
< ? php
$con = mysqli_connect ("localhost", " $user", "$password", "SCHOOL_DB");
mysqli_close($con);
? >
134.
(i) MySQLi என்பது PHP மொழியின் நீட்டிப்பு ஆகும்.
(ii) இது MySQLi தரவுத்தளத்தை அணுகப் பயன்படுகிறது.
(iii) MySQLi என்பது MySQLi Improved என்பதைக் குறிக்கும்.
(iv) இதன் தற்போதைய பதிப்பு 5.0.0
135.
(i) படிவ ஒட்டின "action = back - end script" என்ற பண்புக்கூறானது பெறப்பட்ட தரவினை செயல்படுத்த தயார் நிலையில் இருக்கும்.
(ii) Method என்ற பண்புக் கூறினைத் தரவினை பதிவேற்றம் செய்யப் பயன்படுத்த வேண்டும். GET மற்றும் POST ஆகியவை அடிக்கடி பயன்படுத்தப்படும் வழிமுறைகள் ஆகும்.
(iii) Target என்னும் பண்புக்கூறு எங்கு ஸ்கிரிப்டின் முடிவு தெரிய வேண்டிய இலக்கு சன்னல் திரை (அ) சட்டத்தினை குறிப்பிடுகின்றது.
(iv) இது blank, Self, parent போன்ற மதிப்புகளை ஏற்கின்றது.
(v) enctype பண்புக்கூறு தரவில்லை சேவையகத்திற்கு அனுப்பும் முன் உளவியானது எவ்வாறு குறிமுறைப் படுத்த வேண்டும் என்பதனைக் குறிப்பிட பயன்படுகின்றது.
எ.கா:
< form action = "Welcome.php" method = "post" Target = "-Self" enctype = "multipart/from - data >
136.
file_put_contents(file, data, mode, context)
| File | கட்டாயம் குறிப்பிட வேண்டும். எந்த கோப்பில் எழுதல் வேண்டும் என்பதை குறிப்பிடுகின்றது. அந்தக் கோப்பு இல்லையெனில் இந்த செயற்கூறானது ஒரு புதிய கோப்பினை உருவாக்குகின்றது. |
| Data | கட்டாயம் குறிப்பிட வேண்டும் கோப்பில் எழுதுவதற்கானத் தரவை குறிக்கின்றது. இது சரம், அணி அல்லது தரவுத்தரையாக இருக்கலாம். |
| Mode | குறிப்பிடுவது கட்டாயம் இல்லை. கோப்பினை எவ்வாறு திறப்பது / எழுதுவது என்பதைக் குறிக்கின்றது. |
| Context | குறிப்பிடுவது கட்டாயம் இல்லை. கோப்பினை கையாள்வதில் உள்ள சூழல்களைக் குறிக்கின்றது. இந்த சூழல்களைக் குறிக்கின்றது. இந்த சூழல்கள் தரையின் பண்பினை மாற்றுவதற்கான பல்வேறுத் தேர்வுகளைக் கொண்டுள்ளது. |
137.
(i) அழைப்புதவி மையத்தை தொடர்பு கொள்ளுதல்.
(ii) தானியங்கி IVR தொலைபேசி சேவை.
(iii) SMS வழியாக நகர்பேசியை பயன்படுத்துதல்.
(iv) WAP தொழில்நுட்பம்
(v) திறன்பேசி பயன்பாடுகளைப் பயன்படுத்துதல்.
138.
1. EFTPOS - Electronic Funds Transfer at Point of Sale நிகழ்நிலை பற்று (அ) PIN பற்று என்று அறியப்படுகிறது.
2. அகல்நிலை பற்று - கையொப்பப் பற்று என்றும் அறியப்படுகிறது.
3. மின்னணு பணப்பை (e - wallet) அட்டை முறை.
139.
1. C2C மின் - இணையம் மூலம் இணைக்கப்பட்ட நுகர்வோர்களுக்கிடையே பொருள்கள் அல்லது சேவைகளை வர்த்தகம் செய்ய வாய்ப்பளிக்கிறது.
2. இணையத்தைப் பயன்படுத்தி இரு நுகர்வோர்கள் அவர்களுக்குள் ஏதாவது ஒன்றை வாங்குவதோ விற்பனை செய்வதோ C2C மின் - வணிகம் எனக் குறிப்பிடப்படுகிறது.
3. இந்த வகை மின்-வணிகம், நுகர்வோர் - வணிகம் நுகர்வோர் (C2B2C) என்ற அமைப்பில் வேலை செய்கிறது.
4. பெரும்பாலான ஏல இணையதளங்கள் மற்றும் திருமண தகவல் இணையதளங்கள் இந்த முறையில் வேலை செய்கின்றன.
எ.கா: தனது சொத்துக்களை விற்க விரும்பும் ஒரு வாடிக்கையாளர் இணையத்தில் ஒரு விளம்பரத்தை பதிவு செய்யலாம். ஒரு சொத்தை வாங்குவதில் ஆர்வமுள்ள மற்றொரு நபர், இந்த தளத்தில் பதிவிட்ட சொத்து விளம்பரங்களை பார்வையிட முடியும்.
140.
(i) மின் - தொழில் வலையமைப்பு உட்கட்டமைப்புகள்: இணையம், அகஇணையம், புற இணையம் போன்றவை.
(ii) பல்லூடக உள்ளடக்கம் மற்றும் வலையமைப்பு வெளியீடுகள் உட்கட்டமைப்புகள்: நிகழ்நிலை, சந்தைப்படுத்துதல் போன்றவை.
(iii) செய்தி மற்றும் தகவல் பகிர்வு உட்கட்டமைப்புகள்: மின்னஞ்சல் கணினிமயமாக்கப்பட்ட பொருள் இருப்பு நிலை மேலாண்மை போன்றவை.
(iv) பிற பொதுவான வணிக சேவைக் கட்டமைப்புகள் மின்னணு செலுத்தல்கள், உலகளாவிய விநியோகத் தொடர் மேலாண்மை நிகழ்நிலை பரிவர்த்தனை செயலாக்கம் போன்றவை.
141.
(i) 2004 - ல் ஓப்பன் NMS குழுவானது பலூக், மாட் பிரேஸ்க்கோவ்ஸ்கி, மற்றும் டேவிட் ஹஸ்டஸ் ஆல் உருவாக்கப்பட்டது.
(ii) இது ஜாவா மொழியில் எழுதப்பட்டது.
(iii) பல வகையான பணித்தளங்களில் வேலை செய்கிறது.
(iv) இது நிகழ்வு மேலாண்மை அறிவிப்பு கண்டுபிடித்து வழங்குதல் சேவைக் கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு வசதி அளிக்கிறது.
(v) சிறந்த பல மென்பொருளுக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளது.
142.
| தேர்ந்தெடுக்க | அழுத்த வேண்டியவை |
| ஒரு எழுத்து இடது புறமாக | Shift+\(\longleftarrow \) |
| ஒரு எழுத்து வலது புறமாக | Shift+\(\longrightarrow \) |
| ஒரு வரி மேலே | Shift+\(\uparrow \) |
| ஒரு வரி கீழே | Shift+\(\downarrow \) |
| வரியின் இறுதிவரை | Shift+End |
| வரியின் தொடக்கம் | Shift+Home |
| ஆவணம் முழுவதும் | Ctrl+A |
143.
(i) NS2ஐ உருவாக்க மற்றும் இயக்க. OTCL மற்றும் C++ உதவுகின்றன.
(ii) NS2 விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்கு தளங்களில் இயக்க கூடியது.
(iii) கம்பி மற்றும் கம்பியில்லா வலையமைப்பிற்கு ஆதரவளிக்கிறது.
(iv) கட்டளை வரி பயனர் இடைமுகத்தையும், API என்ற நிகழ்வு சார்ந்த மென்பொருள் கருவையாயும் பயன்படுத்துகிறது.
(v) இதில் உள்ள பல மாதிரிகள் மூலம் பயனர் விரும்பும் வெளியீட்டை எளிதில் பெற முடியும்
144.
1. தலைப்புப் பட்டை சன்னல் திரையின் மேல் பகுதியில் உள்ளது. இதன் வலது ஓரத்தில் சிறிதாக்குப் பொத்தான், பெரிதாக்குப் பொத்தான், மூடு பொத்தான் போன்ற கட்டுப்பாட்டு பொத்தான்கள் இடம் பெற்றிருக்கும்.
2. தலைப்புப் பட்டையின் இடது ஓரத்தில் Adobe PageMaker 7.0 என்னும் மென்பொருளின் பெயரையும் அதை தொடர்ந்து Untitled-1 என்னும் ஆவணத்தின் கொடாநிலைப் பெயரையும் காண முடிகிறது.
3. சிறிதாக்குப் பொத்தானை அழுத்துவதன் மூலம் சன்னல் திரை சிறிய பொத்தானாக மாறி பணிப்பட்டைக்கு வந்துவிடும்.
4. பெரிதாக்குப் பொத்தான், ஆவணம் திரை முழுவதும் நிரம்பும் வகையில் பெரிதாக்குப் பயன்படுகிறது.
5. மூடு பொத்தானை ஆவணத்தை மூடுவதற்கு பயன்படுகிறது.
145.
| கம்பி வலையமைப்பு | கம்பியில்லா வலையமைப்பு |
| 1. காப்பிடாத மற்றும் காப்பிடப்பட்ட முறுக்கு இணைக் கம்பிகள் ஒளியிழை வடங்கள் போன்றவை ஊடங்களாகப் பயன்படுகின்றன. | அகச்சிவப்புக் கதிர்கள், புளுடூத் மற்றும் வைஃபை (WiFi) போன்றவை ஊடங்களாகப் பயன்படுகின்றன. |
| 2. அதிக இணைய வேகம் மற்றும் பாதுகாப்பானது | குறைந்த இணைய வேகம் மற்றும் பாதுகாப்பற்றது. |
| 3. பெரிய பரப்பளவில் நிறுவ மிகுந்த செலவை ஏற்படுத்தும் | பெரிய பரப்பளவில் நிறுவ குறைந்த செலவை ஏற்படுத்தும் |
146.
1. MPEG என்பது இலக்க ஒளிக்காட்சி மற்றும் ஒலி குறுக்கத்தை ISO குழுவினரால் உருவாக்கப்படும் ஒரு தர நிலை ஆகும்.
இந்த குழுவினர் உருவாக்கியவை :
1. MPEG-1 : ஒளிக்காட்சி CD மற்றும் MP3 ஆகியவற்றிற்கான தரநிலை.
2. MPEG-2 : இலக்க தொலைக்காட்சி செட்டாப் பெட்டி மற்றும் DVD களை ஆதரிக்கும் தரநிலை.
3. MPEG-3: பல்லூடகம் மற்றும் கைப்பேசி வலைக்கான தரநிலையாகும்.
4. MPEG-7 : ஒலி மற்றும் ஒளி பொருளடக்கத்தைத் தேடுவதற்கான தரநிலையாகும்.
5. 2000ல் MPEG-21 : பல்லூடாகக் கட்டமைப்பு பற்றிய ஆய்வைத் தொடங்கியது.
147.
PNG (Portable Network Graphics)
1. குறைந்த இழப்பு, சிறியது மற்றும் நன்கு சுருக்கப்பட்டு செவ்வக நிழற்படங்களாக சேமிக்கப்படும் ஒரு நீட்டிப்பு கோப்பு வடிவமாகும்.
2. GIF-க்கு மாற்றாகச் செயல்படுகிறது மற்றும் Tiff-ன் பல பொதுவான பயன்களையும் மாற்றுகிறது.
3. நிகழ்நிலை பார்வையிடு பயன்பாடான உலகளாவிய வலையில் PNG நன்றாக வேலை செய்யும்.
4. சிறந்த திரையிடும் தேர்வுகளுடன் முழுவதுமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
148.
1. நட்பான மோசடி:
வாடிக்கையாளர், பொருட்களைப் பெறவில்லை என்ற பொய்யான தகவல் தந்து செலுத்திய பணம் திரும்பக் கொடுக்க கோருதல்.
2. தெளிவான மோசடி:
திருடப்பட்ட ஒரு கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை வாங்குதல்.
3. முக்கோண மோசடி:
போலி நிகழ்நிலை கடைகள் மலிவு விலை சலுகைகள் அறிவித்து கடன் அட்டை தகவல்களை விற்றல்.
149.
1. மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation) உடன்படிக்கை மீறாதிருத்தல்.
2. ஆவணத்தில் எண்முறை கையொப்பமிட்டவர் அதை நிராகரிக்க முடியாததை உறுதிசெய்கிறது.
3. எண்முறை கையொப்பமிட்ட ஆவணங்கள் அதன் பெறுநருக்கு ஆதாரத்தை வலுப்படுத்துகிறது.
4. எனவே, பின் ஒரு நேரத்தில் எளிதில் மறுக்க முடியாது என்பதால் எண்முறை கையொப்பத்தை, பெறுநர் வலுவாக வலியுறுத்த முடியும்.
150.
1. POST வழிமுறை: Post வழிமுறை மூலம் சேவையகத்திற்கு அனுப்பப்படும் உள்ளீடு செய்யப்பட்ட தரவானது, பயனர் கணிப்பொறியின் HTTP request -னுடைய கோரிக்கை உடற்பகுதியில் (request body) சேமிக்கப்படுகின்றது.
2. GET வழிமுறை: URL முகவரி வழியாக GET வழிமுறை மூலம் உள்ளீடு தரவானது, சேவையகத்திற்கு அனுப்பப்படுவதை வினவல் சரம் (query string) என்கிறோம். உள்ளீடு செய்யப்பட்ட அனைத்துத் தரவினையும் பயனர் Submit பொத்தானை கிளிக் செய்த பிறகும் காண முடியும்.
151.
கட்டளை :
mysqli_connect("Server Name", "User Name", "Password", "DB Name");
எடுத்துக்காட்டு : $conn=mysqli_connect($dbhost, $dbuser, $dbpass);
152.
1. இணையத்தில் தேவையற்ற தகவல்களை தேடுவதன் (Surfing) மூலம் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்கும்.
2. இணையப்பக்கங்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றில் ஏராளமான தேவையற்ற தகவல்களை சில நேரங்களில் சிலர் பதிவிடுகின்றனர்.
3. பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான களவுகள் ஹேக்கர்கள் மற்றும் நச்சுநிரல்கள் மூலம் இணையத்தில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
153.
154.
1. HTTP -இது வலை பயனருக்கும் வலை சேவையகத்திற்கும் இடையே பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பற்ற தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.
2. HTTPS- இது வலைப்பயனருக்கும் வலை சேவையகத்திற்கும் இடையே பயன்படுத்தப்படுகிது. இது பாதுகாப்பான தரவு பரிமாற்றத்தை உறுதிசெய்கிறது.
3. FTP - இது கணினிகளுக்கிடையே கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயன்படுகிறது.
155.
| முழுமையான URL | சார்பு URL | |
| 1 | இது இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி. | இது இணையத்தில் உள்ள கோப்பின் முழுமையற்ற முகவரி. |
| 2 | இது இணையத்தில் கோப்பினைத் தேடித் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. | இது கோப்புப் பெயர் அல்லது கோப்புறையுடன் கூடிய கோப்புப் பெயரைக் கொண்டது. |
156.
1. நாம் நிரல் எழுதும் போது ஒரே குறிமுறைத் தொகுதியை நிரலின் பல இடங்களில் அடிக்கடி பயன்படுத்த வேண்டுமெனில் மடக்கினை பயன்படுத்தலாம்.
2. பன்முறைச் செயல்பாடுகளை எழுதுவதற்குப் பயன்படுகிறது.
157.
ஒளி இழை வடத்தில் இரண்டு வகைகள் உள்ளன
1. ஒற்றை முறை ஒளியியல் வடம் (Single mode Cable - 100 Base BX)
2. பன்முறை ஒளியியல் வடம் (Multimode Cable - 1000BaseX)
(i) ஒற்றை முறை வடம்: தொலைதூர பரிமாற்றத்திற்கு உதவுகிறது. விலை அதிகமானது
(ii) பன்முறை ஒளியியல் வடம்: குறைந்த தூர பரிமாற்றத்திற்கு உதவுகிறது, விலை மலிவானது
158.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
159.
அணி என்பது ஒரே தரவு வகையைச் சார்ந்த (ஒரே மாதிரியான) ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரு அணியின் மாறியில் தேக்கி வைப்பதாகும்.
PHP-ல் அணிகளின் பயன்கள் :
1. PHP -ல் அணிகளைப் பயன்படுத்தி foreach கூற்றுடன் இணைப்பது மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
2. மிகச்சிறிய குறிமுறையைக் கொண்டு கூட மடக்கினுள் விரைவாக அணியை செலுத்தலாம்.
PHP-ல் அணிகளின் வகைகள் :
1. சுட்டு எண்கள் கொண்ட அணிகள்
2. தொடர்புருத்த அணிகள்
3. பல பரிமாண அணிகள்
160.
(i) வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் உலகில் போட்டி மற்றும் இணைய குற்றம் அதிகரித்துள்ளது.
(ii) தனிநபர்/நிறுவனம் பயன்படுத்தும் பொருட்களில் போட்டி நிறுவனத்தால் வைக்கப்பட்ட உளவு பார்க்கும் வன்பொருட்கள் இருக்கக்கூடும்.
(iii) திறந்த மூல வன்பொருள் தொழில்நுட்பம் இந்த பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது.
(iv) இந்த முறையில் நமக்கு பொருளின் பகுதிகள், அதன் செயல் விளக்கப்படம் கிடைக்கிறது.
(v) எனவே நாம் தேவையற்ற பகுதிகள் ஏதேனும் இருந்தால் அதை கண்டறிந்து நீக்க முடியும்.
161.
(i) இயல் பொருள் சார்ந்த சர்ச்சைகள் மின் வணிகத்தின் ஒரு பெரும் குறைபாடு ஆகும்.
(ii) மின்- வணிக கொள்முதல்கள் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குக் காரணம், மின் - வணிகத்தில் பொருட்களை நாம் நேரடியாக அணுக முடியாது.
(iii) இணையம் என்பது காட்சி சார்ந்த மற்றும் ஒலித் தகவலுக்கு ஒரு சிறந்த ஊடகம் என்றாலும், அது நமது புலன்களுக்கு முழு வாய்ப்பையும் அனுமதிக்காது.
(iv) நாம் ஏதாவது ஒரு பொருளை நேரில் வாங்கும் பொழுது, அதனை ஆய்வு செய்ய விரும்பினால், அதை எப்படிச் சோதிக்க வேண்டும் என்பதை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
(v) மின்- வணிகத்தில் விற்பனையாளர் தேர்வு செய்த படத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும்.
(vi) பெரும்பாலும் நுகர்வோர் இணையம் வழியாகத் தனித்துவமான அல்லது சிக்கலான பொருட்களை காட்டிலும் ஒரு சிறிய குழப்பமற்ற (அவர்கள் ஏற்கனவே பார்த்த அல்லது முன் அனுபவம் பெற்ற பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
162.
1. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகளின் தொகுத்தல் மற்றும் இயக்குவதற்கானப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கின்றது.
2. சேவையகப் கணிப்பொறியில் இயங்கும் வலை சேவையக மென்பொருள் சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் தொகுத்தலை இடைநிலை பைட் குறிமுறைகளாக மாற்றுவதை நிர்வகிக்கின்றது. இந்த குறிமுறையானது இயக்க நேர இயந்திரம் மூலம் மொழி பெயர்க்கப்படுகின்றது.
3. இது வலைப்பக்கங்களை உருவாக்கும் கோப்புகளை வழங்கப் பயன்படுகிறது
163.
(i) சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை (Stored Value Card/Prepaid Card) என்பது ஒரு குறிப்பிட்ட தொகை (மதிப்பு) முன்னதாகவே செலுத்தப்பட்ட பற்று அட்டையின் ஒரு வகை ஆகும். இது பண மதிப்பை உருவகமாக கொண்டிருக்கும் ஒரு அட்டை ஆகும்.
(ii) அட்டையின் மதிப்பை முழுவதும் பயன்படுத்திய பிறகு அதை மீண்டும் பயன்படுத்த மறு ஊட்டம் செய்யலாம். சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையின் முக்கிய நன்மை, இவ்வகை அட்டையைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையில் இரண்டு வகைகள் உள்ளன.
1. மூடிய வளையம் (ஒற்றை நோக்கு). எடுத்துக்காட்டு சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டை
2. திறந்த வளையம் (பல்நோக்கு). எடுத்துக்காட்டு விசா பரிசு அட்டைகள்.
164.
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. மேலும் ER மாதிரியானது கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகைகளைச் சார்ந்துள்ளது.
(i) ஒன்றுடன் ஒன்று உறவுநிலை (One to-one relationship) :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் (அ) 1 நிலை, உருப்பொருள் B-இன் 0 (அ) 1 நிலையுடன் தொடர்பு படுத்தப்படும் பொழுதோ மற்றும் உருப்பொருள் B-இன் 0 (அ) 1 நிலை, உருப்பொருள் A-இன் 0 (அ) 1 நிலையுடன் தொடர்புபடுத்தப்படும் பொழுதோ, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், ஒன்றுடன் ஒன்று (1:1) உறவுநிலை உருவாகிறது.
(ii) ஒன்றுடன் பல உறவுநிலை (one-to-many relationship) :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் 1 நிலை, உருப்பொருள் B-இன் 0 (அ) 1 (அ) பல நிலைகளுடனும், மற்றும் உருப்பொருள் B-இன் 1 நிலை, உருப்பொருள் A-இன்) (அ) 1 நிலைகளுடனும் தொடர்புபடுத்தப்படும் பொழுது, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், ஒன்றுடன் பல (1:N) உறவுநிலை உருவாகிறது.
(iii) பலவற்றுடன் பல உறவுநிலை (Many-to many relationship) :
A மற்றும் B என்ற இரண்டு உருப்பொருள்களை எடுத்துக் கொள்வோம். உருப்பொருள் A-இன் 1 நிலை, உருப்பொருள் B-இன் 1 நிலை, உருப்பொருள் A-இன் 0 (அ) 1 (அ) பல நிலைகளுடனும் தொடர்புபடுத்தப்படும் பொழுது, உறவுநிலை தரவுதள வடிவமைப்பில், பலவற்றுடன் பல (M:N) உறவுநிலை உருவாகிறது.
165.
1. தரவு சிதைப்பு (Tampering)
2. பண மோசடிகள் (Payment frauds)
3. தகவல் கசிவு (Information Leakage)
4. தீங்கிழைக்கும் நிரல் அச்சுறுத்தல்கள் (Malicious code threats)
5. பரவல் சேவை மறுக்கப்படல் தாக்குதல்கள் (Distributed Denial of Service - DDoS)
6. சைபர் Squatting (Cyber Squatting)
7. டைபோபைரஸி (Typopiracy)
166.
1. Master Pages பணிக்குறியில் கிளிக் செய்ய வேண்டும்.
2. இப்பொழுது டெக்ஸ்ட் டூலைக் கிளிக் செய்தால் செருகும் புள்ளி I-beam ஆக மாறும்.
3. பக்க எண் இட வேண்டிய இடது மாஸ்டர் பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
4. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
5. இடது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'LM' எனத் தோன்றும்.
6. இதே போன்று பக்க எண் இட வேண்டிய வலது மாஸ்டர் பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
7. Ctrl+Alt+P என்பதை அழுத்த வேண்டும்.
8. வலது மாஸ்டர் பக்கத்தில் பக்க எண் 'RM' எனத் தோன்றும் மற்ற பக்கங்களில் சரியான பக்க எண்கள் தெரியும்.
167.
மின்னணு தரவு பரிமாற்றக் கட்டமைப்பு நான்கு வெவ்வேறு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது
1. பயன்பாட்டு அடுக்கு
2. தரப்பாடுகள் அடுக்கு
3. இடமாற்று அடுக்கு
4. பரும அடுக்கு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards