12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
EDI யின் பல்வேறு அடுக்குகளை பட்டியலிடுக.
2.
மின்வணிகத்தில் தகவல் கசிவு பற்றி எழுதுக.
3.
திறன் அட்டை (Smart Card) என்றால் என்ன?
4.
கடன் அட்டை பற்றி சிறு குறிப்பு வரைக.
5.
மின்-பணப்பை கருத்தை விளக்குக.
6.
எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.
7.
மின்-வணிகத்தின் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை பட்டியலிடுக.
8.
EDI மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சில வகை வணிக ஆவணங்களை பட்டியலிடுக.
9.
EDI தரப்பாடுகள் பற்றி எழுதுக.
10.
மூல உரை, மறை எழுத்து உரை பற்றி எழுதுக.
11.
மின்னணு பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
12.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையையும் அதன் வகைகளையும் சுருக்கமாக விளக்கவும்.
13.
14.
எண்முறைச் சான்றிதழ் பற்றி குறிப்பு வரைக.
15.
ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.
16.
VAN வழியாக EDI சிறுகுறிப்பு வரைக.
17.
18.
சமச்சீர் குறியீடு குறியாக்கம் மற்றும் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் வேறுபாடுகளை எழுதுக.
19.
மின்-வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் பற்றி எழுதுக.
20.
1.
மின்னணு தரவு பரிமாற்றக் கட்டமைப்பு நான்கு வெவ்வேறு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது.
(i) பயன்பாட்டு அடுக்கு (Semantic layer)
(ii) தரப்பாடுகள் அடுக்கு (Standards layer)
(iii) இடமாற்று அடுக்கு (Transport layer)
(iv) பரும அடுக்கு (Physical layer)
இந்த EDI அடுக்குகள் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு தரவு எவ்வாறு பாய்கிறது என்பதை விவரிக்கிறது.
2.
மின்-வணிகத்தில் வர்த்தக ஆவ்ண இரகசியங்கள் கசிவு இரண்டு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ) விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையிலான பரிமாற்றத்தின் உள்ளடக்கம், மூன்றாம் தரப்பினரால் திருடப்படுவது.
ஆ) வணிகர் அல்லது வாடிக்கையாளரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றவரால் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவது. இவ்வாறு மின் - ஆவணங்களை இடைமறித்து திருடுதல் தகவல் கசிவு என அழைக்கப்படுகிறது.
3.
(i) அட்டை அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையின் நவீன வடிவம் திறன் அட்டை ஆகும்.
(ii) திறன் அட்டைகள் அட்டை அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையின் வழக்கமான அம்சங்களுடன் ஒரு EMV சில்லுவையும் கொண்டிருக்கும்.
4.
(i) கடன் அட்டை (Credit Card) என்பது பொதுவாக சில்லறை பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு செலுத்தல் அமைப்பாகும். கடன் அட்டை பற்று அட்டையிலிருந்து வேறுபட்டது.
(ii) ஒவ்வொரு கடன் அட்டைக்கும் வங்கி அல்லது கடன் அட்டை நிறுவனம் அமைத்த கொள்முதல் வரம்பு உள்ளது.
5.
மின்னணு பணப்பை (e-Wallets) பயனர்கள் மின்னணு பரிவர்த்தனைகளைத் திறன் பேசிகள் அல்லது கணினிகள் மூலம் இணையத்தில் விரைவாக மற்றும் பாதுகாப்பாகச் செய்ய அனுமதிக்கிறது. ஒரு உண்மை யான பணப்பை போலவே மின்னணு பணப்பையானது நம்முடைய பணத்தை மின்னணு வடிவில் தேக்கி வைத்திருக்கும். நிகழ்நிலையில் (ONLINE) பொருட்களை வாங்குவதற்கு ஒரு வசதியாக வழி ஆகும்
6.
எண்முறைக் கையொப்பம் என்பது ஒரு குறிப்பிட்ட மின்னணு ஆவணம், செய்தி அல்லது பரிவர்த்தனை நம்பகமானதா என சரிபார்க்கப் பயன்படும் ஒரு அமைப்பு ஆகும்.
7.
(i) குறியாக்கத் தொழில்நுட்பம் (Encryption technology)
(ii) அங்கீகார தொழில்நுட்பம் (Authentication technology)
(iii) பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் (Authentication protocols)
8.
(i) டெலிவரி குறிப்புகள் (Delivery Notes)
(ii) விலைப்பட்டியல்கள் (Invoices)
(iii) கொள்முதல் ஆணைகள் (Purchase Orders)
(iv) செயல்பாட்டு ஒப்புகைகள் (Functional Acknowledgment)
9.
(i) தரநிலை என்பது ஒட்டுமொத்த EDI ல் மிக முக்கியமான பகுதியாகும். EDI தரவு பரிமாற்றம் என்பது ஒரு ஒப்புக்கொண்ட செய்தி வடிவமைப்பின் வடிவத்தில் இருப்பதால், ஒரு ஒருங்கிணைந்த EDI தரத்தை உருவாக்குவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
(ii) EDI தரநிலை முக்கியமாக பின்வரும் அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தரநிலைகள், குறியீடு தரநிலைகள், செய்தி தரநிலைகள், ஆவண தரநிலைகள், மேலாண்மை தரநிலைகள், பயன்பாட்டு தரநிலைகள், தகவல் தொடர்பு தரங்கள் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள்.
10.
(i) குறியாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு மூல உரையை அர்த்தமற்ற மறை எழுத்து உரையாக மாற்றுவது குறியாக்கம் என்று வரையறுக்கப்படுகிறது.
(ii) இதனால் தரவுகளின் இரகசியத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
(iii) சமச்சீர் குறியீடு குறியாக்கத்தில் மூல உரை மற்றும் மறை எழுத்து உரை இரண்டும் ஒரே அளவானதாக இருக்கும்.
11.
(i) மின்னணு நிதிப் பரிமாற்றம் (Electronic funds, transfers EFT) என்பது நிகழ்நிலையில் "மின்னணு" மூலம் பண மதிப்பை பரிமாற்றம் செய்வதாகும்.
(ii) இதில் அனுப்புநரின் வங்கிக் கிளையிலிருந்து அனுப்பப்பட்ட தொகை, அதே நாளில் தொகுதியாகப் பெறுநரின் வங்கிக் கிளைக்கு வரவு வைக்கப்படுகிறது.
(iii) வரைவோலையைத் தபால் மூலம் அனுப்பும் பாரம்பரிய செயல்முறைகள் போலல்லாது, EFT முறை, பணம் பெறுநரை அடைவதில் உள்ள உள்ளார்ந்த தாமதத்தை தடுக்கிறது.
(iv) இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு வங்கிகள் தனிக் கட்டணம் விதிக்கலாம். EFT முறை B2B வணிக மாதிரிகளில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதிகளை மாற்றுவதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.
12.
(i) சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டை (Stored Value Card/Prepaid Card) என்பது ஒரு குறிப்பிட்ட தொகை (மதிப்பு) முன்னதாகவே செலுத்தப்பட்ட பற்று அட்டையின் ஒரு வகை ஆகும். இது பண மதிப்பை உருவகமாக கொண்டிருக்கும் ஒரு அட்டை ஆகும்.
(ii) அட்டையின் மதிப்பை முழுவதும் பயன்படுத்திய பிறகு அதை மீண்டும் பயன்படுத்த மறு ஊட்டம் செய்யலாம். சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையின் முக்கிய நன்மை, இவ்வகை அட்டையைப் பெற வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையில் இரண்டு வகைகள் உள்ளன.
1. மூடிய வளையம் (ஒற்றை நோக்கு). எடுத்துக்காட்டு சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டை
2. திறந்த வளையம் (பல்நோக்கு). எடுத்துக்காட்டு விசா பரிசு அட்டைகள்.
13.
14.
எண்முறைச் சான்றிதழ்:
(i) ஒரு எண்முறைச் சான்றிதழ் என்பது ஒருவரது பொது குறியீட்டின் (Public Key) உரிமையை நிரூபிக்க பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு ஆவணம் ஆகும்.
(ii) இந்த சான்றிதழில் அனுப்புநரின் அடையாளம் பற்றிய தகவல்கள், அனுப்புநரின் எண்முறைக் கையொப்பம் மற்றும் அவரின் பொது குறியீடு போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும்.
(iii) கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளின் பயன்பாடு போன்றே எண்முறை சான்றிதழின் பயன்பாடும் உள்ளது.
(iv) எண்முறை சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு அதிகாரிகளால் (Certification Authorities CA) வழங்கப்படுகின்றது.
15.
1. தரவு சிதைப்பு (Tampering)
2. பண மோசடிகள் (Payment frauds)
3. தகவல் கசிவு (Information Leakage)
4. தீங்கிழைக்கும் நிரல் அச்சுறுத்தல்கள் (Malicious code threats)
5. பரவல் சேவை மறுக்கப்படல் தாக்குதல்கள் (Distributed Denial of Service - DDoS)
6. சைபர் Squatting (Cyber Squatting)
7. டைபோபைரஸி (Typopiracy)
16.
1. இது மதிப்புக் கூட்டப்பட்ட வலையமைப்பு வழியாக நடைபெறும் EDI ஆகும்.
2. இங்கு EDI ஆவணங்கள் மூன்றாம் தரப்பு வலை சேவை வழங்குநர்களின் ஆதரவுடன் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
3. பல நிறுவனங்கள் வலையமைப்பு தொழில் நுட்பங்களின் புதுப்பித்தல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க இந்த வகையை விரும்புகின்றன.
17.
18.
| சமச்சீர் குறியீடு குறியாக்கம் | சமச்சீரற்ற குறியீடு குறியாக்கம் |
| மறைகுறியாக்கம் மற்றும் குறியாக்க இரண்டிற்கும் ஒரே குறியீடு பயன்படுத்தப்படுகிறது | மறைகுறியாக்கம் மற்றும் குறியாக்க இரண்டிற்கும் வெவ்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது |
| மறைகுறியாக்கம் அல்லது குறியாக்கத்தின் வேகம் மிக அதிகம் | மறைகுறியாக்கம் அல்லது குறியாக்கத்தின் வேகம் குறைவு |
| மூலஉரை மற்றும் மறைக் குறியீட்டு உரை இரண்டும் ஒரே அளவானதாக இருக்கும் | தெளி உரை மற்றும் மறைக் குறியீட்டு உரை இரண்டும் ஒரே வெவ்வேறானதாக இருக்கும் |
| DES, AES, RC4 போன்ற நெறிமுறைகள் சமச்சீர் குறியீடு குறியாக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன | RSA, ECC, DSA போன்ற நெறிமுறைகள் சமச்சீரற்ற குறியீடு குறியாக்கத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன |
| இது தரவுகளுக்கு இரகசியத் தன்மையை வழங்குகிறது | இது இரகசியத் தன்மை, அங்கீகாரம் மற்றும் மறுதலிக்கப்படாதிருத்தல் போன்ற நன்மைகளை வழங்குகிறது |
| பயனரின் எண்ணிக்கையை பொறுத்து பயன்படுத்தப்படும் குறியீடுகளின் எண்ணிக்கை அடுக்குகளில் அதிகரிக்கிறது. | பயனரின் எண்ணிக்கையை பொறுத்து பயன்படுத்தப்படும் குறியீடுகளின் எண்ணிக்கை நேர்க்கோட்டில் அதிகரிக்கிறது. |
19.
பாதுகாப்பு சிக்கல்கள் மின்-வணிகத்திற்கு மிகவும் கவலையளிக்கும் பிரச்சனையாக இருப்பதால், மின்-வணிக செயல்பாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மின்-வர்த்தகத்தின் முக்கிய ஆராய்ச்சித் துறையாக மாறிவிட்டது. மின்-வணிகம் தொடர்புடைய சில பாதுகாப்பு அம்சங்கள் பின்வருமாறு.
(i) அங்கீகாரம் (Authenticity): தரவு மூலத்தை அங்கீகரித்தல்.
(ii) இருப்பு (Availability): தரவு தாமதம் அல்லது நீக்கத்தை தடுத்தல்.
(iii) முழுமை (Completeness): தகவல்களையும் ஒன்றிணைத்தல்.
(iv) இரகசியத்தன்மை (Confidentiality): அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து தரவை பாதுகாத்தல்.
(v) திறனுடைமை (Effectiveness): வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவை முழுமையாகவும் திறம்படவும் கையாளுதல்.
(vi) நேர்மை (Integrity): அங்கீகரிக்கப்படாத தரவு மாற்றத்தை தடுத்தல்.
(vii) மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation): உடன்படிக்கை மீறாதிருத்தல்.
(viii) தனியுரிமை (Privacy): வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பிறர் பயன்படுத்தாமல் தடுத்தல்.
(ix) நம்பகத்தன்மை (Reliability): தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அடையாளங்காணல்.
(x) மீளாய்வு திறன் (Review ability): தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் வணிகச் செயல்பாடுகளை கண்காணிக்கும் திறன்.
20.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards