12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
கணினி வலையமைப்பின் பொதுவான நன்மைகள் என்ன ?
2.
இணையம் பற்றி சிறு குறிப்பு வரைக.
3.
கணினி வலையமைப்பு என்பது யாது?
4.
மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?
5.
6.
உங்களுக்குத் தெரிந்த நான்கு URL களை பட்டியலிடு.
7.
IP முகவரி என்றால் என்ன?
8.
ஏதாவது நான்கு களப்பெயர்களை பட்டியலிடுக.
9.
URL மற்றும் அதன் வகைகள் பற்றி குறிப்பு வரைக.
10.
மொபைல் வலையமைப்புகள் பற்றி குறிப்பு வரைக.
11.
சமூக வலையமைப்புகளின் சில பயன்களை பட்டியலிடுக.
12.
வளப்பகிர்வு பற்றி குறிப்பு வரைக.
13.
14.
HTTP, HTTPS, FTP – சிறுகுறிப்பு வரைக.
15.
முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?
16.
IPv4 மற்றும் IPv6 வேறுபடுத்துக
17.
கணினி வலையமைப்பின் நன்மைகளை விளக்குக.
18.
OSI மாதிரியை அதன் அடுக்குகளோடு விவாதிக்கவும்.
19.
IP முகவரியை அதன் வகைகளுடன் விளக்கவும்.
1.
1. தொடர்பாடல் (communication),
2. வளப்பகிர்வு
3. தரவு (அல்லது) மென்பொருள் பகிர்வு
4. பணம் சேமிப்பு
2.
INTERNET என்பதின் விளக்கம் INTERconnected NETwork இணையம் என்பது தனிப்பட்ட வலைப்பின்னல்களின் இணைப்பு என வரையறுக்கப்படுகிறது. இது கல்வி, தொழில், அரசு, மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படுகிறது.
3.
கணினி வலையமைப்பு என்பது வளங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்ட கணினிகளின் தொகுப்பு ஆகும்.
4.
மொபைல் வலையமைப்பின் பயன்கள் :
(i) மொபைல் சாதனங்கள் இயங்க குறைவான மின்சாரம் பயன்படுகிறது.
(ii) செல் கோபுரங்கள் வேறுபட்ட பல இணைப்புகளை இணைக்கின்றன.
(iii) கம்பியில்லாமல் மொபைல் வலையமைப்பினை இணைக்க முடியும்.
5.
6.
(i). https.//www.google.com/
(ii) http://www.yahoo.com/
(iii) http://www.rediff.com/
(iv) http://www.facebook.com/
7.
IP முகவரி:
(i) IP (Internet Protocol) முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு தருக்க (Unique) முகவரியாகும்.
(ii) ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியை கண்டறிய ஐபி முகவரி பயன்படுத்தப்படுகிறது.
8.
(i) .com - வணிக அமைப்பு
(ii) .edu - கல்வி நிறுவனங்கள்
(iii) .gov (அமெரிக்க) அரசு
(iv) .mil (அமெரிக்க) இராணுவக் குழுக்கள்
9.
URL (Uniform Resource Locator) இணையத்தில் ஒரு ஆவணத்தின் முகவரியாகும். இது நான்கு பகுதிகளைக் கொண்டது. அவை
1. நெறிமுறைகள் (Protocols)
2. கலைப்பெயர் (domain name)
3.கோப்புறை பெயர் (Folder name) மற்றும்
4. கோப்பு பெயர் (File name). ஒவ்வொரு பகுதியும் அதற்கென்று குறிப்பிட்ட செயல்பாடுகளை கொண்டுள்ளது. பயன்பாட்டைப் பொறுத்து, கூடுதல் தகவல்களை URL உடன் சேர்க்க முடியும்.
URL -ன் வகைகள் ஆவணத்தின் இருப்பிடத்தை பொறுத்து URIL இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. முழு நிலை URL (Absolute URL)
2. சார்பு நிலை URL (Relative URL)
10.
(i) மொபைல் வலையமைப்பு என்பது கம்பியில்லாமல் வலையமைப்பை ஏற்படுத்த உதவும் சாதனங்கள் ஆகும்.
(ii) மடிக்கணினிகள், டேப்லெட் மற்றும் கைக்கணினி போன்ற மொபைல் கணினிகள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளாக இருக்கின்றன. நிலப்பகுதிகளில் கம்பியில்லா வலையமைப்புகள் பல பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.
(iii) ஒவ்வொன்றும் ஓரிட பெறுவழங்கி மூலம் வழங்கப்படுகின்றன. ஆனால் பொதுவாக மூன்று செல் தளங்கள் அல்லது ஒரு அடிப்படை பெறுவழங்கி மூலம் வழங்கப்படுகின்றன.
(iv) இந்த அடிப்படை நிலையம் வலையமைப்பு பரப்பெல்லை மற்றும் குரல், தரவு மற்றும் பிற உள்ளடக்கம் ஆகியவற்றை பரிமாற்றுவதற்காக பயன்படுத்தக்கூடிய பிற அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
11.
(i) நீண்ட தூர குழு தகவல் பகிர்வு
(ii) ஒளிபரப்பு அறிவிப்புகள்
(iii) பன்முக சிந்தனையை வளர்த்தல்
12.
வளப்பகிர்வு அனைத்து வகையான நிரல்கள், உபகரணங்கள் மற்றும் தரவுகளை வலையமைப்பு வழியாக அதன் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இங்கு வளம் என்பது அச்சுப்பொறிகள், ஸ்கேனர், PDA, தொலைநகல் இயந்திரம் மற்றும் மோடம்கள் போன்றவை ஆகும்.
13.
14.
1. HTTP -இது வலை பயனருக்கும் வலை சேவையகத்திற்கும் இடையே பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பற்ற தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.
2. HTTPS- இது வலைப்பயனருக்கும் வலை சேவையகத்திற்கும் இடையே பயன்படுத்தப்படுகிது. இது பாதுகாப்பான தரவு பரிமாற்றத்தை உறுதிசெய்கிறது.
3. FTP - இது கணினிகளுக்கிடையே கோப்புகளை அனுப்பவும், பெறவும் பயன்படுகிறது.
15.
| முழுமையான URL | சார்பு URL | |
| 1 | இது இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி. | இது இணையத்தில் உள்ள கோப்பின் முழுமையற்ற முகவரி. |
| 2 | இது இணையத்தில் கோப்பினைத் தேடித் கண்டுபிடிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. | இது கோப்புப் பெயர் அல்லது கோப்புறையுடன் கூடிய கோப்புப் பெயரைக் கொண்டது. |
16.
| IPv4 | IPv6 | |
| 1 | IPv4 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 32 பிட் தனித்த முகவரி ஆகும். | IPv6 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 128 பிட் தனிப்பட்ட முகவரி ஆகும். |
| 2 | IPv4 முகவரியில் 232 முகவரிகளை உருவாக்க முடியும். | IPv6 ஐ பயன்படுத்தி 2128 முகவரிகளை உருவாக்க முடியும். |
| 3 | (எ.கா) : 0011100110001001 0011100000000111 |
(எ.கா) : 2001:0000:3231: DFE1 :0063:0000:0000: FEFB |
17.
(1) தகவல் தொடர்பு (Communication)
(2) வளப்பகிர்வு (Resource Sharing)
(3) தகவல் பகிர்வு (Information Sharing)
(1) தகவல் தொடர்பு:
(i) கணினி வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால், உலகெங்கிலும் உள்ள ஒருவர் மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளலாம்.
(ii) மொபைல், சமூக ஊடகம், தொலைபேசி, மின்னஞ்சல், அரட்டை, ஒளி ஒலி உரை மற்றும் அசைவூட்டப்பட்ட படங்கள், வீடியோ கான்பரன்சிங், எஸ்எம்எஸ், எம்எம்எஸ் மற்றும் பலவற்றின் மூலமாக மிகக் குறைந்த விலையில் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
(2) வளப்பகிர்வு:
(i) வளப்பகிர்வு அனைத்து வகையான நிரல்கள். உபகரணங்கள் மற்றும் தரவுகளை வலையமைப்பு வழியாக அதன் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
(ii) இங்கு வளம் என்பது அச்சுப்பொறிகள், ஸ்கேனர், PDA, தொலைநகல் இயந்திரம் மற்றும் மோடம்கள் போன்றவை ஆகும்.
(3) தகவல் பகிர்வு:
(i) கணினி வலையமைப்பை பயன்படுத்தி, எந்த பயன்பாடு அல்லது பிற மென்பொருட்களையும் மைய கணினி அல்லது சேவையகத்தில் சேமிக்க முடியும். மென்பொருட்களை வலையமைப்பிலுள்ள மற்ற கணினிகளுக்கும் பகிர முடியும்.
(ii) இது அதிக நம்பகத்தன்மையுள்ள மற்றும் காப்புப்பிரதி வசதி வழங்குகின்றது. இதனால் எதிர்பாரா செயலிழப்பு ஏற்பட்டால் எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் கோப்புகளை சேமிக்கவும் முடியும்.
18.
OSI மாதிரி:
(i) Open System Interconnection (OSI) 1934 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
(ii) இது மென்பொருளுடன் வலையமைப்பு நெறிமுறைகளை இயக்கும் பொதுவான கட்டமைப்பு ஆகும்.
(iii) மேலும் அமைப்பு பொதுவான வழிகாட்டுதல் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. கணினி தொடர்பிற்கான தரநிலைகளை விவரிக்கிறது.
OSI அடுக்குகள்:
(i) பருநிலை அடுக்கு (Physical Layer): இது முதலாம் அடுக்கு ஆகும். இது சாதனங்களுக்கு மின் மற்றும் பருநிலை குறிப்புகளை வரையறுக்கிறது.
(ii) தரவு இணைப்பு அடுக்கு (Datalink Layer): இது இரண்டாம் அடுக்கு ஆகும். இது பரிமாற்றப்படும் தரவுகள் பிழைகள் இல்லாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது ஈதர் நெட்டுக்கு 802.3 மற்றும் Wi-Fiக்கு 802.11 போன்ற எளிய நெறிமுறைகளைக் கொண்ட அடுக்காகும்.
(iii) வலையமைப்பு அடுக்கு (Network Layer): இது மூன்றாம் அடுக்கு ஆகும். இது தரவு பொட்டலங்களின் பாதையைத் தீர்மானிக்கிறது. இந்த அடுக்கில் IP முகவரியைப் பயன்படுத்தி தரவுப் பொட்டலங்களின் பாதை கண்டுபிடிக்கப்படுகிறது.
(iv) இடமாற்ற அடுக்கு (Transport Layer): இது நான்காம் அடுக்காகும். இது தரவு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. இது பிழை சோதனை செயல்பாட்டை கொண்டுள்ளது.
(v) தொடர் அடுக்கு (Session Layer): இது ஐந்தாம் அடுக்காகும். இது பல்வேறு வலையமைப்பு நிறுவனங்களுக்கிடையே நிறுவப்பட்ட அமைப்பு தொடரை கண்டறிகிறது. இது கணினிகளிடையே உரையாடல்களை கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, தொலைவில் உள்ள ஒரு கணினியை அணுகும் போது உங்கள் கணினிக்கும் தொலைவில் உள்ள கணினிக்கு இடையே தொடர் உருவாக்கப்படுகிறது.
(vi) விளக்கக்காட்சி அடுக்கு (Presentation Layer): இது ஆறாவது அடுக்கு ஆகும். இது அடுத்த (பயன்பாட்டு அடுக்கிற்கு தரவை மொழி பெயர்த்து தருகிறது. குறியாக்கம் மற்றும் மறைகுறியாக்க நெறிமுறைகள் இந்த அடுக்கில் ஏற்படுகின்றன. இது பாதுகாப்பு துளை அடுக்கை (Secure Socket Layer SSL) ஐ ஒத்ததாகும்
(vii) பயன்பாட்டு அடுக்கு (Application Layer): இது ஏழாவது அடுக்காகும். இது கணினியில் உள்ள மென்பொருளை உள்ளடக்கிய பயனர் இடைமுக மேடையாக செயல்படுகிறது.
19.
IP (Internet Protocol) முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினியைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண உதவும் ஒரு தருக்க முகவரி ஆகும்.
1. ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியைக் கண்டறிய IP முகவரி பயன்படுத்தப்படுகிறது.
2. வலையமைப்பில் பயன்படுத்தப்படும் கணினிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிக எண்ணிக்கையிலான முகவரிகள் தேவைப்படுகின்றன.
3. இது இரண்டு வகையான முகவரி முறைகளுக்கு வழிவகுத்து உள்ளது.
i. IPv4
ii. IPv6
IPv4 முகவரி:
(i) IPv4 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 32 பிட் தனித்த முகவரி ஆகும்.
(ii) இரண்டு கணினிகளுக்கு ஒரே IP முகவரி இருக்க முடியாது.
(iii) ஒரு வலையமைப்பில் P இணைப்புகள் இருந்தால், அங்கே P முகவரிகளும் இருக்க வேண்டும்.
(iv) முகவரி வெளி (Address space) என்பது நெறிமுறையால் (IP) உருவாக்க முடிகின்ற மொத்த விலை முகவரிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
(v) இது நெறிமுறை பயன்படுத்துகின்ற பிட்டுகளின் எண்ணிக்கையைப் பொருத்தது.
(vi) ஒரு நெறிமுறையானது n பிட்டுகளைப் பயன்படுத்தினால் அந்த நெறிமுறையின் முகவரி வெளியானது 2n முகவரிகளை கொண்டிருக்க முடியும்.
(vii) எனவே IPv4 வகையில் 232 முகவரிகளை உருவாக்கலாம்.
(viii) இந்த IP முகவரிகளை குறிப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன.
(1) இரு நிலை குறியீடு (Binary Notation)
(2) புள்ளி -தசம குறியீடு (Dotted Decimal Notation)
(ix) இரு நிலை குறியீட்டு முறையில் முகவரியானது 32 பிட் இரு நிலை எண்ணாகும்.
(x). புள்ளி -தசம குறியீட்டில் புள்ளிகளால் (.) பிரிக்கப்பட்ட தசம வடிவத்தில் முகவரி எழுதப்படுகிறது.
எ.கா: 128.143.137.144
IPv6 முகவரி:
(i) IPv6 முகவரி என்பது வலையமைப்பில் உள்ள ஒரு கணினிக்கு வழங்கப்படும் 128 பிட் தனிப்பட்ட முகவரி ஆகும்.
(ii) இந்த முறையில் 2128 முகவரிகளை உருவாக்க முடியும்.
(iii) இந்த 128 பிட்டுகள் எட்டு 16 பிட் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
(iv) ஒவ்வொரு தொகுதியும் நான்கு இலக்க பதினறும நிலை எண்களாக மாற்றப்பட்டு முக்காற்புள்ளியால் பிரிக்கப்பட்டுள்ளது.
எ.கா: 2001: 0000: 32313: DFE1: 0063: 0000 :0000:FEFB
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards