12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
A = {1,2,4,5} B = {1,6,7,5}
print (A & B)
{1,2,4,5,6,7}
[2,4]
{2,4}
(2,4)
2.
பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
s = [i **2 for x in range (1,2)]
print (s)
[1,4]
[1,2]
[1]
[1,4]
3.
பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
li = ['T','E','C','M']
for i in li
print (li[1])
T
E
C
M
4.
private இனக்குழு மாறியின் முன்னொட்டு எது
__
&&
##
**
5.
If List=[17,23,41,10] எனில் List.append(32) ன் விடை ______.
[32,17,23,41,10]
[17,23,41,10,32]
[10,17,23,32,41]
[41,32,23,17,10]
6.
பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
A = {'A', 2, 4, 'D'}
B = {'A','B ', 'C', 'D'}
print (A \(_{ | }^{ | }\) B)
print (A & B)
print (A - B)
print (A ^ B)
7.
பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
(i) print (list (range (1,11,2)))
(ii) print (list (range (2,11,2)))
8.
பின்வரும் நிரலை படித்து அதற்கான வெளியீட்டைத் தருக.
list = ['T','H','N',M']
del List [1]
(i) print (list)
del list (1 : 3)
(ii) print (list)
del (list)
(iii) print (list)
9.
பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
(i) List = [34,45,48]
print (list.append(80))
(ii) List = [34,45,48]
print (list.extend (80,90))
(iii) List = (34,98,47,55)
list.insert (3,90)
print (list)
10.
பைத்தானில் ஆக்கியை எவ்வாறு உருவாக்குவாய்?
11.
இனக்குழு என்றால் என்ன?
12.
பைத்தானில் set என்றால் என்ன?
13.
List - ன் del மற்றும் remove( ) செயற்கூறின் வேறுபாடுகள் யாவை?
14.
ஒற்றை உறுப்பு கொண்ட Tuples எவ்வாறு உருவாக்குவாய் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
பின்வரும் நிரலின் வெளிப்பாடு யாது?
MyList = [2,4,5,8,10]
print ("MyList elements before update....")
for x in MyList:
print (x)
MyList[2] = 6
print ("MyList elements after Updation....")
for y in MyList:
print (y)
16.
பின்வரும் நிரலை படித்து கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Class sample:
x, y = 10, 20
s = sample ( )
print (s. x + s. y)
(i) sample எதனை குறிக்கிறது?
(ii) x மற்றும் y எதனை குறிக்கின்றன?
(iii) s என்பது எதனை குறிக்கிறது?
17.
பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பிகளை எவ்வாறு வரையறுப்பாய்?
18.
இனக்குழு உறுப்புகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு வரையறுப்பாய்?
19.
List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?
20.
Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
21.
List மற்றும் Tuples-ஒப்பிடுக.
22.
ஆக்கி மற்றும் அழிப்பி பற்றி பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
23.
பைத்தானிலுள்ள பல்வேறு set செயல்பாடுகளை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
24.
List-ல் ஒரு உறுப்பை சேர்ப்பதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
1.
(c)
{2,4}
2.
(c)
[1]
3.
(b)
E
4.
(a)
__
5.
(b)
[17,23,41,10,32]
6.
வெளியீடு ;
(i) {'A',2,4,'D','C','B','C'}
(ii) {'A', 'D'}
(iii) {2,4}
(iv) {2,4,'B','C'}
7.
வெளியீடு :
(i) [1,3,5,7,9]
(ii) [2,4,6,8,10]
8.
(i) ['T','N','M']
(ii) ['T']
(iii) பிழை
9.
(i) 34,45,48,80
(ii) 34,45,48,80,90
(iii) 34,98,47,90,55
10.
ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும்பொழுது ஆக்கி என்னும் சிறப்புச் செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது. பைத்தானில், “init” என்னும் சிறப்பு செயற்கூறு ஆக்கியாக செயல்படுகிறது. இது இரட்டை அடிக்கீறில் (UnderScore) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் முடிய வேண்டும்.
___ init ___ வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம்
def__init__(self, [args .........]):
< statements >
11.
பைத்தானில் மிக முக்கிய கட்டமைப்பு கூறுகளாகத் திகழ்பவை இனக்குழுவாகும். இனக்குழு என்பது பொருளின் வார்ப்புரு ஆகும்.
12.
(i) பைத்தானில், set என்பது தரவின தொகுப்பின் மற்றொரு வகையாகும். Set என்பது மாறக்கூடிய மற்றும் நகல்கள் இல்லாத வரிசைப்படுத்தப்படாத உறுப்புகளின் தொகுப்பாகும்.
(ii) அதாவது , Set -ல் உள்ள உறுப்புகள் மீண்டும் இடம்பெற முடியாது. இந்த சிறப்பியல்பு உறுப்பு சோதனையை சேர்க்கவும் மற்றும் நகல் உறுப்புகளை நீக்கவும் பயன்படுகிறது.
13.
| del கூற்று சுட்டெண் | remove() செயற்கூறு |
| del கூற்று சுட்டெண் தெரிந்த உறுப்புகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. | remove( ) செயற்கூறு சுட்டெண் தெரியாத உறுப்புகளை List- லிருந்து நீக்குவதற்கு பயன்படுகிறது. del கூற்று முழு List-ஐ நீக்குவதற்கும் பயன்படுகிறது. |
14.
Tuples-ஐ ஒற்றை உறுப்புடன் உருவாக்கும் போது, உறுப்பின் இறுதியில் காற்புள்ளியை சேர்க்க வேண்டும். காற்புள்ளி இல்லையெனில், பைத்தான் அந்த உறுப்பை ஒரு சாதாரண தரவினம் போல எடுத்துக் கொள்ளும், Tuples ஆக கருதாது. ஒரு உறுப்புடன் Tuples-ஐ உருவாக்குவது "சிங்கிள்டன்" (singleton) Tuples என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு :
> > > MyTup4 = (10)
> > > type(MyTup4)
<class 'int'>
> > > MyTup5 = (10,)
> > > type(MyTup5)
<class 'Tuples'>
15.
MyList elements before update...
2
4
5
8
10
MyList elements after updation...
2
4
6
8
10
16.
(i) sample என்பது இனக்குழுவை குறிக்கிறது.
(ii) x மற்றும் y என்பது இனக்குழுவின் மாறிகளைக் குறிக்கிறது.
(iii) s என்பது பொருளைக் குறிக்கிறது இனக்குழுவில் உள்ள உறுப்புகளை அணுகுவதற்கு.
17.
ஆக்கி :
ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும் பொழுது ஆக்கி என்னும் சிறப்புச் செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது. பைத்தானில், “init” என்னும் சிறப்பு செயற்கூறு ஆக்கியாக செயல்படுகிறது. இது இரட்டை அடிக்கீறில் (UnderScore)தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் முடிய வேண்டும்.
__init__வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம்
def __init__(self, [args .......]):
<statements>
அழிப்பி :
பொருள்களை அழிப்பதற்கான சிறப்பு செயற்கூறு அழிப்பி (destructor) ஆகும். இது ஆக்கியின் செயல்பாட்டிற்கு எதிரானது ஆகும். பைத்தானில், _ del _( ) செயற்கூறு அழிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
18.
(i) இனக்குழுக்குள்ளே வரையறுக்கப்படும் மாறிகள் இனக்குழு மாறிகள் (Class variables) என்றும் செயற்கூறுகள் வழிமுறைகள் (methods) என்றும் அழைக்கப்படும்.
(ii) இனக்குழு மாறிகள் மற்றும் வழிமுறைகள் சேர்ந்து இனக்குழுவின் உறுப்புகள் (members) எனப்படும்.
(iii) இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் பொருள்கள் அல்லது சான்றுருக்கள் மூலமாகவே அணுகுதல் வேண்டும்.
(iv) பைத்தானில், இனக்குழுவை வரையறுக்க class என்னும் சிறப்புச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு இனக்குழுவும் தனித்த பெயருடன் முக்காற்புள்ளி(:) யைக் கொண்டு முடியும்.
தொடரியல்
class class_name:
statement_1
statement_2
....................
....................
statement_n
19.
(i) List என்பது வரிசைப்படுத்திய உறுப்புகளின் தொகுப்பாகும். ஆனால் Dictionary ஒரு உறுப்பை (திறவுகோல்) மற்றொரு உறுப்புடன் (மதிப்பு) பொறுத்தப் பயன்படும் தரவு அமைப்பாகும்.
(ii) List -ன் சுட்டெண்கள் குறிப்பிட்ட உறுப்பை அணுகுவதற்குப் பயன்படுகின்றன. ஆனால், Dictionary- ல் திறவுகோல் சுட்டெண்ணைக் குறிக்கிறது. ஒரு சரத்தின் எண்ணாகவும், திறவுகோல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
(iii) சுட்டெண் மதிப்புகள் பார்க்க List -ன் மதிப்பை பயன்படுகிறது. Dictionary ஒரு மதிப்பை எடுத்துக் கொண்டு மற்றொரு மதிப்பை பார்க்க பயன்படுகிறது.
20.
sort() - List-ல் உள்ள உறுப்புகளை வரிசையாக்கம் செய்கிறது. reverse, key இரண்டு செயலுருபுகளும் கட்டாயமில்லாதவை
(i) reverse ஐ True என பொருத்தினால் இறங்கு வரிசையில் லிஸ்ட் வரிசையாக்கமாகும்.
(ii) ஏறுவரிசை தானமைவு வரிசையாக்கமாகும்.
(iii) Key=myFunc; "myFunc" வரிசையாக்க வரண்முறையைக் குறிப்பிடும் பயனர் வரையறுத்த செயற்கூறின் பெயர்.
தொடரியல் :
List.sort(reverse=True|False, key=myFunc)
எடுத்துக்காட்டு :
MyList=["Thilothamma', 'Tharani', 'Anitha', 'SaiSree', 'Lavanya']
MyList.sort()
print(MyList)
MyList.sort(reverse=True)
print(MyList)
வெளியீடு:
['Anitha', 'Lavanya', 'SaiSree', "Tharani', "Thilothamma']
['Thilothamma', 'Tharani', 'SaiSree', 'Lavanya', 'Anitha']
21.
(i) List-ன் உறுப்புகளை மாற்றலாம் ஆனால் Tuples-ன் உறுப்புகளை மாற்ற முடியாது. இதுவே List மற்றும் Tuples -க்கு இடையே உள்ள முக்கியமான வேறுபாடு ஆகும்.
(ii) List-ன் உறுப்புகள் சதுர அடைப்புக் குறிக்குள் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால், Tuples-ன் உறுப்புகள் வளைவு குறிக்குள் அடைக்கப்பட்டிருக்கும்.
(iii) Tuple-ன் மடக்குச் செயல் List-ஐ காட்டிலும் விரைவானது.
22.
பைத்தானில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் :
ஆக்கி :
(i) ஓர் இனக்குழுவின் சான்றுரு பயன்பாட்டிற்கு வரும் பொழுது ஆக்கி என்னும் சிறப்புச் செயற்கூறு தானாகவே இயக்கப்படுகிறது. பைத்தானில், “init” என்னும் சிறப்பு செயற்கூறு ஆக்கியாக செயல்படுகிறது. இது இரட்டை அடிக்கீறில் (UnderScore) தொடங்கி இரட்டை அடிக்கீறலுடன் முடிய வேண்டும்.
(ii) இந்த செயற்கூறு சாதாரண செயற்கூறுவைப் போல செயல்படும், ஆனால் பொருள் உருவாக்கப்பட்டவுடன். தானாகவே இயக்கப்படும். இந்த ஆக்கி செயற்கூறை அளபுருக்களுடனோ அல்லது இல்லாமலோ வரையறுக்கலாம்.
_init_வழிமுறையின் (ஆக்கி) பொதுவடிவம் def __init__(self, [args .......]):
<statement >
(எ.கா) ஆக்கியை விளக்கும் நிரல்
class Sample: \(\rightarrow\) இனக்குழு பெயர்
அளபுரு
\(\uparrow\)
def __init__(self, num):
print("Constructor of class Sample...")
self.num=num \(\rightarrow\) சான்றுரு மாறி
print("The value is:", num)
S=Sample(10)
(iii) மேலே உள்ள இனக்குழு "sample", இது "num"என்னும் ஒரே ஒரு அளபுருவுடன் கூடிய ஆக்கியைக் கொண்டுள்ளது. ஆக்கி இயக்கப்படும் போது முதல் "Print"கூற்று, "Constructor of class sample..." என்பதை அச்சிடும். பிறகு ஆக்கிக்கு அனுப்பப்படும் மதிப்பு. self,num=num என்ற சான்றுரு மாறியில் இருத்தப்படுகிறது.
(iv) இறுதியாக, கொடுக்கப்பட்ட சரத்துடன் அனுப்பப்பட்ட மதிப்பையும் அச்சிடுகிறது. S என்ற பொருள் 10 என்ற மெய்யான அளபுருவுடன் உருவாக்கப்படும் போது மேலே உள்ள ஆக்கி தானாகவே இயக்கப்படும். பின்வரும் வெளியீடு கிடைக்கிறது.
Constructor of class sample...
The value is : 10
ஆக்கியின் உள்ளே வரையறுக்கப்படும் இனக்குழு மாறியானது, இனக்குழுவில் உருவாக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும்.
அழிப்பி :
பொருள்களை அழிப்பதற்கான சிறப்பு செயற்கூறு அழிப்பி (destructor) ஆகும். இது ஆக்கியின்
செயல்பாட்டிற்கு எதிரானது ஆகும். பைத்தானில், _del_() செயற்கூறு அழிப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா) _del_ () வழிமுறையை விளக்கும் நிரல்
class Sample:
num=0
def _init__(self, var):
Sample.num+=1
self.var=var
print("The object value is = ",self.var)
print("The value of class variable is=", Sample.num)
def _del_(self):
Sample.num-=1
print("Object with value %d is exit from the scope"%self.var)
S1=Sample(15)
S2=Sample(35)
S3-Sample(45)
del S1, S2,S3
குறிப்பு:
del என்பதை பயன்படுத்தி ஒரு பொருளை அழிக்கும் போது __del__ () செயற்கூறு தானாகவே அழைக்கப்படும்.
23.
கணிதத்தில் கற்ற Set செயற்பாடுகள் ஆகிய ஒட்டு (Union), வெட்டு (intersection) வேறுபாடு (difference) சமச்சீரான வேறுபாடு (Symmetric difference) , போன்றவற்றை பைத்தானிலும் பயன்படுத்தலாம்.
ஒட்டு (Union) : இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட Set -களின் அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கும்.

(i) பைத்தானின் என்ற செயற்குறி இரண்டு Set களின் இணைப்பை உருவாக்கப்பயன்படுகிறது. Union செயற்கூறும் பைத்தானின் இரண்டு Set களை இணைக்கப் பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு: ஒட்டு (Union) செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு Set களை இணைப்பதற்கான நிரல்
set_A ={2,4,6,8}
set_B ={'A','B','C','D'}
U_Set=Set_A | set_B
print(U_set)
வெளியீடு:
{2,4,6,8,'A', 'D', 'C', 'B'}
வெட்டு (intersection) : இது இரண்டு Setகளின் பொதுவான உறுப்புகளை உள்ளடக்கியது.

(i) பைத்தானில் & செயற்குறி இரண்டு Set களை வெட்டுவதற்கு பயன்படுகிறது. வெட்டு (intersection()) செயற்கூறும் பைத்தானில் இரண்டு Set களை வெட்டுவதற்கு பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு : intersection()செயற்குறியைப் பயன்படுத்தி இரண்டு Setகளை வெட்டுவதற்கான நிரல்
set_A={'A', 2, 4, 'D'}
set_B={'A', 'B', 'C', 'D'}
print(set_A.intersection (set_B))
வெளியீடு : {'A', 'D'}
வேறுபாடு (Difference): இது முதல்Set(A)ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது. இது இரண்டாவது Set-ஐ தவிர்க்கிறது.

(i) பைத்தானில் -(minus) செயற்குறி Set செயற்பாட்டின் வேறுபாட்டைக் கண்டறிய பயன்படுகிறது. difference() செயற்கூறும் வேறுபாட்டு செயற்பாட்டிற்காக பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு : (-) Minus பயன்படுத்தி இரண்டு setகளின் வேறுபாட்டுக்கான நிரல்
set_A={'A', 2, 4, 'D'}
set_B={'A', 'B', 'C', 'D'}
print(set_A - set_B)
வெளியீடு : {2, 4}
சமச்சீரான வேறுபாடு (Symmetric difference): இது இரண்டு Set-ல் உள்ள பொதுவான உறுப்புகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது.

(i) Caret(^) செயற்குறி பைத்தானில் சமச்சீரான வேறுபாட்டை கண்டறிய பயன்படுகிறது. Symmetric difference() செயற்கூறும் அதே செயலை செய்ய பயன்படுகிறது.
(ii) எடுத்துக்காட்டு : Caret (^) செயற்குறியைப் பயன்படுத்தி சமச்சீரான வேறுபாட்டை கண்டறியும் நிரல்.
set_A={'A', 2, 4, 'D'}
set_B={'A', 'B', 'C', 'D'}
print(set_A ^ set_B)
வெளியீடு :: {2, 4, 'B', 'C'}
24.
List-ல் உறுப்புகளை சேர்த்தல்:
(i) பைத்தானில்,append () செயற்கூறு ஒரு உறுப்பையும் extend () செயற்கூறு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளையும் ஏற்கனவே உள்ள List-ல் சேர்க்க பயன்படுகிறது.
தொடரியல் :
List.append (element to be added)
List.extend ([elements to be added])
(ii) extend() செயற்கூறில், பல உறுப்புகளை சதுர அடைப்புக் குறிக்குள் செயற்கூறின் செயலுருபுகளைப் போலவே குறிப்பிட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
>>> MyList=[34, 45, 48]
>>> MyList.append(90)
>>> print(MyList)
[34, 45, 48, 90]
(iii) மேலே உள்ள எடுத்துக்காட்டில், MyList என்பது மூன்று உறுப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. >>> MyList.append(90) என்ற கூற்றின் மூலம் 90 என்ற கூடுதல் மதிப்பு ஏற்கனவே உள்ள List-ல் கடைசி உறுப்பாக சேர்க்கப்படுகிறது.
Print கூற்று MyList என்ற லிஸ்ட்-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது.
எடுத்துக்காட்டு :
>>> MyList.extend ([71, 32, 29])
>>> print(MyList)
[34, 45, 48, 90, 71, 32, 29]
(iv) மேலே உள்ள குறிமுறையில், extend() செயற்கூறு பல உறுப்புகளை சேர்ப்பதற்கு பயன்படுகிறது. Print கூற்று, கூடுதல் உறுப்புகள் சேர்க்கப்பட்ட பிறகு List-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் காண்பிக்கிறது.
List உறுப்புகளை செருகுதல்:
(i) பைத்தானில் உள்ள append( ) ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது. ஆனால், இது List-ன் இறுதியில் உறுப்பை சேர்க்கிறது.
(ii) நீங்கள் உங்களுக்கு விருப்பமான இடத்தில் ஒரு உறுப்பை சேர்க்க விரும்பினால், insert () செயற்கூறை பயன்படுத்த வேண்டும். insert()செயற்கூறு, List-ன் எந்தவொரு இடத்திலும் ஒரு உறுப்பை சேர்க்கப் பயன்படுகிறது.
தொடரியல்: List.insert (position index, element)
எடுத்துக்காட்டு:
>>> MyList=[34,98,47, Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']
>>> print(MyList) [34, 98, 47, 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']
>>> MyList.insert(3, 'Ramakrishnan')
>>> print(MyList)
[34, 98, 47, 'Ramakrishnan', 'Kannan', 'Gowrisankar', 'Lenin', 'Sreenivasan']
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards