12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
பட்டை வரைபடம் என்றால் என்ன?
2.
MAX ( ) மற்றும் MIN ( ) செயற்கூறுகள் பற்றி சிறு குறிப்பு வரைக
3.
SQL ல் துணைநிலை கூற்றுகள் யாவை?
4.
Select வினவல் என்றால் என்ன? அதன் பயன் யாது?
5.
6.
பொதுவான தரவு காட்சிப்படுத்துதல் வகையை பட்டியலிடுக.
7.
கூறுநிலைகளின் பயன் யாது?
8.
விரிவாக்கம் தருக
(i) SWIG
(ii) MinGW
9.
Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவார்த்த வேறுபாடு யாது?
10.
COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.
11.
fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.
12.
C++ நிரலை பைத்தான் மூலம் இயக்கும் வழிமுறைகளை எழுதுக.
13.
பைத்தானில் பயன்படுத்தப்படும் இடைமுகங்கள் யாவை?
14.
fetchone( ) மற்றும் fetchmany( ) வேறுபடுத்துக.
15.
SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?
16.
sys.argv என்றால் என்ன?
17.
MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?
18.
பைத்தான் மற்றும் C++ வேறுபடுத்துக.
19.
ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை எழுதுக
20.
பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
21.
பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
(அ) plt.xlabel
(ஆ) plt.ylabel
(இ) plt.title
(ஈ) plt.legend( )
(உ) plt.show( )
22.
Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.
23.
HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.
24.
SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.
25.
getopt( ) என்ற செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.
26.
27.
பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
Python < filename.py > - < i > < C++ filename without cpp extension >
28.
பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.
29.
பின்வருவனவற்றுள் சக்தி வாய்ந்த கட்டளை எது?
pip
title
label
plot ( )
30.
பைத்தான் தொகுப்புகளை நிறுவுவதற்கான ஒரு மேலாண்மை மென்பொருள் எது?
pip
plt
cse
pip
31.
தரவுகளை புள்ளிகளின் தொகுப்பாக காட்டுவது எது?
வரி வரைவிடம்
ஸ்கேட்டர் வரைவிடம்
பெட்டி வரைவிடம்
வட்ட வரைவிடம்
32.
அனைத்து வளங்களையும் ஒன்றுபட்ட ஒன்றை காட்சி திரையில் காண்பிக்க பயன்படுவது எது?
அட்டவணைகள்
வரைகலை
இன்போகிராபிக்ஸ்
டேஷ்போர்ட்
33.
தகவல்களை வரைகலை முறையில் உருவமைக்கப் பயன்படுவது எது?
அட்டவணைகள்
வரைகலை
இன்போகிராபிக்ஸ்
டேஷ்போர்ட்
34.
பைத்தானில் SQL கட்டளைகள் எத்தனை மேற்கோள் அடைப்புக் குறிகளுக்குள் சாரமாக வரையறுக்க வேண்டும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
35.
SQL அல்லது SQlite க்கு கட்டளைகளை அனுப்ப எது தேவை?
Connection
execute
cursor
close
36.
ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு எது?
cursor
connection
close
execute
37.
எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பு எது?
CSV
Perl
SQLite
Ruby
38.
பயனர்கள் மற்றும் தரவுத்தளத்திற்கு இடையே உள்ள தொடர்புக்கு பயன்படும் மென்பொருள் எது?
தரவுத்தளம்
தரவுத்தள மேலாண்மை
செயற்கூறு
சரங்கள்
39.
உரை, எண்கள், படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தரவுகளச் செயலாக்க பயன்படுவது எது?
C++
பைத்தான்
Java
HTML
40.
மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் Scripting மொழி எது?
VB ஸ்கிரிப்
PHP
ரூபி
இவை அனைத்தும்
41.
ஒரு தொகுப்பு மொழி எது?
பைத்தான்
C++
HTML
Java
42.
ஒரு வரி மொழி மாற்றி மொழி எது?
பைத்தான்
C++
HTML
Java
43.
ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழி யாது?
பைத்தான்
C++
இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
1.
பட்டை வரைவிடம் (அல்லது பட்டை வரைபடம்) என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் மாறிக்கும், வகை மாறிகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும். இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ தொகுப்பப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
2.
(i) The MAX ( ) சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகப்பெரிய மதிப்பை விடையாகக் கொடுக்கும்
(ii) The MIN ( ) சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகச்சிறிய மதிப்பை விடையாகக் கொடுக்கும்
3.
(i) DISTINCT
(ii) WHERE
(iii) GROUP BY
(iv) ORDER BY
(v) HAVING
4.
SELECT கூற்று SQL - ல் மிக அதிகமாக பயன்படும் கூற்று ஆகும். இந்த கூற்று தரவுத் தளத்திலிருந்து தரவை பெற பயன்படுத்தப்படுகிறது. இந்த கூற்றுக்கான கட்டளை அமைப்பு "Select * from table-name அட்டவணையின் அனைத்து தரவுகளையும் பட்டியலாக ஒரு பொருளில் பெற முடியும்
5.
6.
(i) விளக்கப்படங்கள் (Charts)
(ii) அட்டவணைகள் (Tables)
(iii) வரைகலை (Graphs)
(iv) நிலப்படங்கள் (Maps)
(v) இன்போகிராபிக்ஸ் (Infographics)
(vi) டேஷ்போர்டு (Dashboards)
7.
கூறுநிலை நிரலாக்கம் என்பது குறிமுறையை சிறுசிறு பகுதிகளாக பிரிப்பதற்கான மென்பொருள் வடிவமைப்பு நுட்பமாகும். இந்த பகுதிகள் கூறுநிலைகள் என்றழைக்கப்படுகின்றன.
பயன் :
(i) கூறுநிலை, குறிமுறையின் மறுபயனாக்கத்தை வழங்குகிறது.
(ii) வெவ்வேறு நிரல்களில், நாம் மிகுதியாக பயன்படுத்தும் செயற்கூறு வரையறைகளை நகலெடுப்பதற்கு பதிலாக, அவற்றை ஒரு கூறுநிலையில் வரையறுத்து, தருவித்துக் கொள்ளலாம்.
8.
(i) SWIG - Simplified Wrapper Interface Generator
(ii) MinGW - Minimalist GNU for Windows (விண்டோஸ்-க்கான குறைந்த பட்ச GNU)
9.
(i) அடிப்படையில் அனைத்து scripting மொழிகளும் நிரலாக்க மொழிகளாகும். இரண்டுக்குமிடையே கருத்தியலான வேறுபாடு என்னவெனில், Scripting மொழிக்கு தொகுத்தல் படிநிலைத் தேவைப்படாது, மாறாக வரிமொழி மாற்றம் தேவைப்படும்.
(ii) உதாரணத்திற்கு, ஒரு C++ நிரல் இயக்குவதற்கும் முன்பாக, தொகுக்கப்பட வேண்டும். அதே சமயம் ஜாவாஸ்கிரிப்ட் அல்லது பைத்தான் போன்ற scripting மொழிகள் தொகுக்கப்பட தேவையில்லை.
(iii) நிரலாக்க மொழிக்கு நிரல்பெயர்ப்பி தேவைப்படுவது போல scripting மொழிக்கு வரிமொழி மாற்றி தேவைப்படுகிறது.
10.
WHERE துணை நிலை கூற்றில் குறிப்பிட்டுள்ள நிபந்தனையை நிறைவேற்றும், அட்டவணையில் உள்ள வரிசைகளில் எண்ணிக்கையை SQL COUNT ( ) சார்பு விடையாகக் கொடுக்கும்
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect('Academy.db'')
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT COUNT(*) FROM student ")
result = cursor.fetchall ( )
print(result)
வெளியீடு:
[(7,)]
11.
fetchone ( ) செயற்கூறு வினவல் முடிவுத் தொகுதியின் உள்ளே உள்ள அடுத்த வரிசையைக் கொடுக்கும் (அல்லது) எந்த வரிசையும் இல்லை என்றால் None என்ற மதிப்பை கொடுக்கும்.
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect("Academy.db")
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT * FROM student")
print("\nfetch one:")
res = cursor.fetchone( )
வெளியீடு:
fetch one:
(1, 'Akshay', 'B', 'M', 87.8, '2001-12-12')
12.
(i) MinGW run -ன் முனையத்தை இரட்டைக் கிளிக் செய்யவும்.
(ii) பைத்தான் மென்பொருள் அமைந்திருக்கும் (python.exe) கோப்புறைக்கு செல்லவும்.
இந்த உதாரணத்தில், பைத்தான் கோப்புறை C:\Program Files\OpenOffiice 4\Python என்ற அமைவிடத்தில் காணலாம்.
c: \ > கோப்புறையிலிருந்து பைத்தான் அமைந்திருக்கும் கோப்புறைக்கு மாறுவதற்கான தொடரியல்.
cd < absolute path >
இதில் "cd" கட்டளை change directory என்பதையும் absolute path என்பது பைத்தான் நிறுவப்பட்டிருக்கும் முழுமையான பாதையையும் குறிக்கும்.
13.
பொதுவாக பயன்படுத்தப்படும் இடைமுகங்களாவன.
(i) Python-C-API (API -Application Programming Interface C நிரல்களுடன் தொடர்பு கொள்ள)
(ii) Ctypes (c நிரல்களுடன் தொடர்பு கொள்ள)
(iii) SWIG (Simplified Wrapper Interface Generator-C மற்றும் C++ இரண்டு மொழிகளுக்கும்)
(iv) Cython (C-நீட்டிபுக்களை எழுதுவதற்கான ஒரு பைத்தான் போன்ற மொழியாகும்)
(v) Boost. Python (Python மற்றும் C++ தொடர்பு கொள்வதற்கான கட்டமைப்பு)
(vi) MinGW (விண்டோஸ்-க்கான குறைந்தபட்ச GNU)
14.
| வ.எண் | fetchone ( ) | fetchmany( ) |
| 1. | fetchone ( ) செயற்கூறு வினவல் முடிவுத் தொகுதியின் உள்ளே உள்ள அடுத்த வரிசையைக் கொடுக்கும் (அல்லது) எந்த வரிசையும் இல்லை என்றால் None என்ற மதிப்பை விடையாகக் கொடுக்கும் | cursor.fetchmany () செயற்கூறு முடிவுத்தொகுதியில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் பதிவுகளை திருப்பும். |
| 2. | while மடக்கு மற்றும் fetchone ( ) செயற்கூறு பயன்படுத்தி அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் காண முடியும் | குறிப்பிட்ட எண்ணிக்கை - யிலான பதிவுகளைக் காண்பிக்க fetchmany() செயற்கூறு பயன்படுகிறது. |
15.
SQLite என்பது எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பாகும். இது தரவுகளை வழக்கமான தரவுக்கோப்புகளாக கணினியின் உட்புற நினைவகத்தில் சேமித்து வைக்கும். பயன்பாடுகளில் தனியாக MySQL மற்றும் Oracle போன்ற சேவையக தரவுத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இது பயன்பாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்மைகள் :
(i) வேகமாகவும், மிகுந்த சோதிக்கப்பட்டதாகவும் மற்றும் நெகிழ்வானதாகவும் உள்ளதால் SQLite -ல் வேலை செய்வது எளிதாகும்.
(ii) SQLite -ற்காக பைத்தான் உள்ளிணைந்த நூலகத்தைக் கொண்டுள்ளது.
16.
(i) sys.argv என்பது பைத்தான் நிரலுக்கு அனுப்பி வைக்கப்படும் கட்டளை வரி செயலுருபுகளின் பட்டியலாகும். argv கட்டளை வரி உள்ளீட்டு வழியாக வரும் உருப்படிகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இது அடிப்படையில் நிரலின் கட்டளை வரி செயலுருபுகளைக் கொண்ட ஓர் அணியாகும்.
(ii) sys.argv ஐ பயன்படுத்த முதலில் நீங்கள் sys கூறுநிலையைத் தருவித்துக் கொள்ள வேண்டும். முதல் செயலுருபு sys.argv [0] எப்பொழுதும் செயல்படுத்த வேண்டிய நிரலின் பெயராக இருக்கும். மேலும் sys.argv [1] என்பது நிரலுக்கு (இங்கு இது C++ கோப்பு) அனுப்பப்படும் முதல் செயலுருபு ஆகும்.
17.
(i) MinGW இயக்க நேர தலைப்புக் கோப்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் வகையில், C,C++ மற்றும் FORTRAN நிரல் குறிமுறைகளைத் தொகுக்கவும், இணைக்கவும் இது பயன்படுகிறது.
(ii) MinGW - W64 (MinGW இன் பதிப்பு) Windows இன் C++க்கு சிறந்த தொகுப்பான் / நிரல் பெயர்ப்பி ஆகும். C++ நிரல்களை தொகுத்து, இயக்க, விண்டோஸ் இயக்க அமைப்புக்கு 'g++' தொகுப்பான் தேவை. MinGW, g++ஐ பயன்படுத்தி பைத்தான் நிரல் மூலம் C++ நிரல்களை தொகுத்து, இயக்க அனுமதிக்கிறது.
(iii) C++ நிரல் குறிமுறையைக் கொண்ட பைத்தான் நிரல்களை கட்டளை வரி அல்லது Run Terminal மூலம் இயக்க முடியும்.
(iv) g++ என்பது GCC-யை (GNU C தொகுப்பான்) அழைக்கும் நிரல். இது தானாகவே தேவையான C++ நூலக கோப்புகளை இலக்க நிரலுடன் இணைக்கிறது.
18.
| பைத்தான் | C ++ | |
|---|---|---|
| 1. | பைத்தான் ஒரு ''வரி மொழி மாற்றி (Interpreter) மொழியாகும். | C++ மொழி, ஒரு நிரல்பெயர்ப்பி (Compiler) மொழியாகும். |
| 2. | பைத்தான் மாறும் தன்மைக் கொண்ட மொழியாகும். | C++ நிலையான தன்மைக் கொண்ட தொகுக்கப்பட்ட மொழி. |
| 3. | மாறியை அறிவிக்கும் போது, அது சார்ந்த தரவின வகையை குறிப்பிடத் தேவையில்லை. | மாறியை அறிவிக்கும் போது, தரவினத்தை குறிப்பிட வேண்டும். |
| 4. | இது Scripting மற்றும் பொதுப் பயன் மொழியென இருவகையிலும் செயல்பட முடியும். | இது ஒரு பொதுப்பயன் நிரலாக்க மொழியாகும். |
19.
ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பின்வருமாறு குறிப்பிடலாம்:
1. ஹிஸ்டோகிராம் வரைபடம், எண் வகை தரவுகளுக்கு இடையேயான அதிர்வெண்ணை பட்டை வடிவ வரைபடத்தில் காட்டும், பட்டை வரைபடம் பல்வேறு வகையான தரவுகளை ஒப்பிட பயன்படுகிறது.
2. ஹிஸ்டோகிராம், மாறிகளின் தொடருக்கு இடையேயான அதிர்வெண்ணை பட்டை வடிவ வரைபடம் வெவ்வேறான மாறிகளை ஒப்பிடும் படத்தை காண்பிக்கும்
3. ஹிஸ்டோகிராம் எண்வகை தரவுகளும், பட்டை வரைபடம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளிலும் செயலாற்றும்.
4. ஹிஸ்டோகிராம் உள்ள பட்டைகளுக்கு இடையே இடைவெளியிருப்பதில்லை. ஆனால் பட்டை வரைப்படத்தில் தோன்றும் பட்டைகளிடையே முறையான இடைவெளிகள் மூலம் தரவுகளுக்கிடையே தொடர்பின்மையை காண்பிக்கும்
5. ஹிஸ்டோகிராம் எண்கள் உறுப்புகளாக அவை தரவுகளின் தொடர்புகளை வெளிப்படுத்த ஒன்றாக வகைப்படுத்தப்படும், பட்டை வரைபடத்தில் தரவுகள் தனி உறுப்புகளாக கருதப்படுகிறது
6. பட்டை வரைப்படத்தில் தொகுதிகளை உச்ச மதிப்பிலிருந்து குறைந்த மதிப்பிற்கு மறு வரியிறக்கம் செய்ய முடியும். ஆனால் ஹிஸ்டோகிராமில் இவை தொடர் வரிசையாக இருப்பதால் இது சாத்தியமில்லை.
7. ஹிஸ்டோகிராமில் செவ்வக தொகுதியின் அகலம் ஒரே அளவில் இல்லாதிருக்கலாம். ஆனால் பட்டை வரைபடத்தில் எப்போதும் அகலம் ஒரே மாதிரியானதாக இருக்கும்.
20.
பைத்தான் வெற்றிகரமான C++ நிரலை இயக்குவது மட்டுமல்லாது, தொகுத்தலின் போது C++ கூற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை வெளியிடவும் உதவுகிறது. உதாரணத்திற்கு, கீழ்க்காணும் C++ நிரலின் ஒரு பிழை உள்ளது. பைத்தான் மூலம் தொகுக்கும் போது என்ன நேரும் என்பதைத் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு :
// C++ program to print the message Hello
// Now select File-s-New in Notepad and type the C++ program
#include< iostream >
using namespace std ;
int main( )
{
std::cout<<"hello"
}
// Save this file as hello.cpp
#Now select File\(\rightarrow \)New in Notepad and type the Python program as main.py
# Program that compiles and executes a .cpp file
# Python main.py -i hello
import sys, os, getopt
def main(argv):
cpp_file ="
exe_ file ="
opts,args = getopt.getopt( argv,"i:" ,['ifile='])
for o, a in opts :
if in ("-i", "--ifile"):
cpp_file = a + '.cpp'
exe_file = a + '.exe'
runecpp_file, exe_file)
def runecpp_file, exe_file):
print=Compiling " + cpp _file)
os.system('g++ ' + cpp_file +' -o' +exe_ file)
print("Running " + exe_file)
print("_______ ")
print
os.system( exe_file)
print
if____ name =='____ main_____ ':
main(sys.argv[l:])
நிரலின் வெளியீடு
C:\Program Files\OpenOffice 4\
program > Python c:\pyprg\main.py -i c:\pyprg\hello
[('-i', 'c:\\pyprg\\hello')] .
Compiling c:\pyprg\heHo.cpp
c:\pyprg\hello.cpp: In function 'int main( )':
before 'return'
std::cout < <"hello"
/\
;
return 0;
------------
Running c:\pyprg\ch14\cpp __file.exe
_______
'c:\pyprg\hello.exe' is not recognized as an internal or external command, operable program or batch file.
C:\Program Files\OpenOffice 4\program>
21.
(அ) plt.xlabel
X - அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(ஆ) plt.ylabel
Y - அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(இ) plt.title
வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
(ஈ) plt.legend( )
plt.legend() கட்டளையைக் கொண்டு கொடாநிலை புனைவுகள் செயலாக்கலாம்.
(உ) plt.show( )
வரைபடத்தை காண்பிக்க உதவுகிறது.
22.
Matplotlib பெட்டி வரைபடம், ஹிஸ்டோகிராம், ஸ்கேட்டர் வரைவு, பட்டை விளக்கப்படம் போன்ற பல்வேறு வகையான வரைவிகளை உருவாக்க பயன்படுகிறது.
கோட்டு வரைவு:
கோட்டு வரைவு அல்லது கோட்டு விளக்கப்படம் என்பது தகவல்களை, "குறிப்பான்கள்" (Marker) என்று அழைக்கப்படும் தரவு புள்ளிகளின் தொடரை நேர்கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது. ஒரு கோட்டு வரைவு பொதுவாக கால இடைவெளி (Interval of time) நேரத் தொடர் (Time series) போன்ற போக்கு பகுப்பாய்வுக்கான (Trend analysis) தரவுகளை காட்சிப்படுத்த பயன்படுகிறது. எனவே, இதன் கோடுகள் கால வரிசையில் அமையும்.
எடுத்துக்காட்டு: வரி வரைபடம்:
import matplotlib.pyplot as plt
years [2014, 2015, 2016, 2017, 2018]
total_populations = [8939007, 8954518, 8960387, 8956741, 8943721]
plt.plot (years, total_populations)
plt.title("Year vs Population in India")
plt.xlabel ("Year")
plt.ylabel ("Total Population")
plt.show()
இந்த நிரலில்,
plt.title() \(\rightarrow\) வரைப்படத்தின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.xlabel() \(\rightarrow\) X-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.
plt.ylabel() \(\rightarrow\) Y-அச்சின் தலைப்பை குறிப்பிடுகிறது.

பட்டை விளக்கப்படம்:
பட்டை வரைவி (அல்லது) பட்டை விளக்கப்படம் என்பது மிகவும் பொதுவான வரைவிடம் வகையாகும். இது எண் வகை தரவுகளுக்கும், மதிப்புகளுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்துகிறது. பட்டை விளக்கப்படம் வகைப்படுத்தப்பட்ட தரவுகளை செவ்வக பட்டையாக காட்டும்.
இப்பட்டைகள் செங்குத்தாகவோ அல்லது கிடை மட்டமாகவோ தொகுக்கப்படலாம். இம்முறை கொடுக்கப்பட்ட எண் மதிப்புகளை பல்வேறு வகையுடன் ஒப்பிட்டு பார்க்க உதவும்.
Matplotlib-ல் பட்டை விளக்கப்படத்தை உருவாக்க, plt.bar() என்ற செயற்கூறினை பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
import matplotlib.pyplot as plt
# Our data
labels = ["TAMIL", "ENGLISH", "MATHS", "PHYSICS", "CHEMISTRY", "CS"]
usage [79.8, 67.3, 77.8, 68.4, 70.2, 88.5]
#Generating the y positions. Later, we'll use them to replace them with labels.
y_positions range (len(labels))
#Creating our bar plot
plt.bar (y_positions, usage)
plt.xticks (y_positions, labels)
plt.ylabel ("RANGE")
plt.title("MARKS")
plt.show()
வெளியீடு:

வட்ட விளக்கப்படம் :
வட்ட விளக்கப்படம் ஒரு பொதுவான விளக்கப்பட வகையாகும். வட்ட வடிவில் தோன்றும் இந்த விளக்கப்படம் எண் விகிதத்தை விளக்கும் விதத்தில் துண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். வட்ட விளக்கப்படத்தில் உள்ள துண்டுகள் முழு படத்துடன் உள்ள உறவை வெளிக்காட்டும்.
Matplotlib கொண்டு வட்ட விளக்கப்படத்தை உருவாக்க plt.pie() செயற்கூறினை பயன்படுத்த வேண்டும். autopct அளவுரு, Python சரம் வடிவமைப்பை பயன்படுத்தி மதிப்பை சதவீதத்தில் காட்டும்.
எடுத்துக்காட்டு :
import matplotlib.pyplot as plt
sizes = [89, 80, 90, 100, 75]
labels = ["Tamil", "English", "Maths", "Science", "Social"]
plt.pie (sizes, labels = labels, autopct = "%.2f")
plt.show()
வெளியீடு:

23.
குழு சார்புகளைப் பொறுத்து தரவுகளை வடிகட்ட HAVING துணை நிலைக்கூற்று பயன்படுகிறது. இது WHERE நிபந்தனை கூற்றை ஒத்ததாகும் ஆனால் குழு சார்புகளுடன் பயன்படுகிறது. குழு சார்புகளை WHERE துணை நிலைக் கூற்றில் பயன்படுத்த முடியாது. ஆனால் HAVING துணை நிலைக் கூற்றில் பயன்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டு:
import sqlite3
connection = sqlite3.connect("Academy.db")
cursor = connection.cursor( )
cursor.execute("SELECT GENDER,COUNT(GENDER) FROM Student GROUP BY GENDER HAVING COUNT( GENDER) > 3")
result = cursor.fetchall( )
co = [i[0] for i in cursor. description]
print(co)
print(result)
வெளியீடு:
['gender', 'COUNT(GENDER)']
[('M', 5)]
24.
(i) SQLite என்பது எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பாகும். இது தரவுகளை வழக்கமான தரவுக்கோப்புகளாக கணினியின் உட்புற நினைவகத்தில் சேமித்து வைக்கும்.
(ii) பயன்பாடுகளில் தனியாக MySQL மற்றும் Oracle போன்ற சேவையக தரவுத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இது பயன்பாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(iii) வேகமாகவும், மிகுந்த சோதிக்கப்பட்டதாகவும் மற்றும் நெகிழ்வானதாகவும் உள்ளதால் SQLite-ல் வேலை செய்வது எளிதாகும். SQLite-க்காக பைத்தான் உள்ளிணைந்த நூலகத்தைக் கொண்டுள்ளது. SQLite யைப் பயன்படுத்த,
(iv) படிநிலை 1: sqlite 3 இணைக்கவும்.
(v) படிநிலை 2: connect() வழிமுறையைப் பயன்படுத்தி இணைப்பை உருவாக்கி தரவுத்தளத்தின் பெயரை இணைக்கவும்.
(vi) படிநிலை 3: cursor=connection.cursor() என்றக் கூற்றைப் பயன்படுத்தி cursor என்னும் பொருளை அனுப்பவும்.
(vii) படிநிலை 2 ல் தரவுத்தளத்தை இணைத்தல் என்பது, அணுக வேண்டிய தரவுத்தளத்தின் பெயரை அனுப்புதல் என்பதாகும். அவ்வாறு அனுப்பும்போது, அத்தரவுத்தளம் ஏற்கனவே இருக்குமாயின் அது இணைக்கப்படும். இல்லாவிடில், பைத்தான் கொடுக்கப்பட்ட பெயரில் ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்கும்.
(viii) படிநிலை 3ல் cursor என்பது ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாகும், இது தரவுத்தளப் பதிவுகளை இணைக்கப் பயன்படுகிறது.
(ix) பைத்தானில், cursor மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அனைத்து கட்டளைகளும் cursor பொருள் மூலம் மட்டுமே இயக்கப்படும்.
(x) ஒரு தரவுத்தளத்தில் அட்டவணையை உருவாக்க, ஒரு பொருளை உருவாக்கி அதற்கான SQL கட்டளைகளை எழுத வேண்டும். எடுத்துக்காட்டு:- sql_comm = "SQL statement".
(xi) கட்டளைகளை நிறைவேற்ற cursor வழிமுறையைப் பயன்படுத்தி sql கட்டளையின் பெயரை ஒன்றன் பின் ஒன்றாக அளபுருக்களாக அனுப்ப வேண்டும். sql_commல் பல கட்டளைகள் சேமிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும். அனைத்து செயல்களையும் முடித்த பின்னர் மாற்றங்களைக் கோப்பில் சேமித்து பின்னர் இணைப்பை மூட வேண்டும்.
25.
பைத்தான் getopt கூறுநிலை : பைத்தானில் getopt கூறுநிலை கட்டளை வரி தேர்வுகளையும் செயலுருபுகளையும் பிரித்தெடுக்க உங்களுக்கு உதவும். இந்த கூறுநிலை கட்டளைவரி செயலுருபு பிரித்தெடுத்தலை செயல்படுத்த செயற்கூறுகளை வழங்குகிறது.
getopt.getopt செயற்கூறு:
இந்த செயற்கூறு கட்டளை வரி தேர்வுகளையும், அளபுருக்களின் பட்டியலையும் பிரித்தெடுக்கும். இந்த வழிமுறைக்கான தொடரியல் பின்வருமாறு
<opts>,<args>=getopt.getopt(argv, options, [long_options])
அளபுருக்களின் விவரங்கள் :
(i) argv - இது பிரிக்கப்பட வேண்டிய அளபுருக்களின் மதிப்புகளின் பட்டியலைக் குறிக்கும். நமது நிரலில், கட்டளை முழுமையும் பட்டியலாக அனுப்பப்படுகிறது.
(ii) options-இது உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறைகளை குறிக்கும். சர எழுத்து தேர்வுக்களாகும். இங்கு 'i' அல்லது 'o' போன்ற தேர்வுகளும், அதைத் தொடர்ந்து முக்காற்புள்ளியும் (:) அமைந்திருக்கும். இங்கு (:) முறைமை குறிப்பிடப் பயன்படுகிறது.
(iii) long_options - இந்த அளபுரு சரங்களின் பட்டியலை கொண்டுள்ளது, Long options-ன் செயலுருபைத் தொடர்ந்து அதன் அமைவிடத்தின் முழு முகவரியுடன் '=' சமக்குறி இடம்பெற வேண்டும். நம்முடைய நிரலில் C++ கோப்பின் பெயர் சரமாக செலுத்தப்படும். மேலும், அது ஒரு உள்ளீடு கோப்பு என்பதைக் குறிக்க, அதனுடன் 'i' என்ற தேர்வும் செலுத்தப்படும்.
வழிமுறை இரண்டு உறுப்புகளை கொண்டுள்ள மதிப்புகளை திருப்பியனுப்பும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக opts மற்றும் args என்ற இரண்டு வெவ்வேறு பட்டியலில் (அணிகள்) சேமிக்கப்படும்.
Opts முறைமை, பாதைப் போன்ற பிரிக்கப்பட்ட சரங்களின் பட்டியலைக் கொண்டிருக்கும். Args, தவறான பாதை அல்லது முறைமையின் காரணமாக பிரிக்கப்பட முடியாத எந்தவொரு சரத்தின் பட்டியலைக் கொண்டிருக்கும்.
getopt() வழிமுறையின் மூலம் சரங்களை பிரித்தெடுக்கும் போது பிழையேதும் இல்லாவிட்டால் args வெற்று அணியாக அமையும்.
உதாரணத்திற்கு, p4 என்ற C++ கோப்பினை, கட்டளை வரியில் இயக்கப்போகும் பைத்தான் நிரல், பின்வரும் ஒன்றைப் போல getopt() வழிமுறையைக் கொண்டிருக்கும்.
opts, args = getopt.getopt (argv, "i:",['ifile='])
| opts | [('-i', 'c:\\pyprg\\p4')] என்பதைக் கொண்டிருக்கும். |
| -i : | தேர்வு முறைமையினைத் தொடர்ந்து இடம் பெற்றிருக்க வேண்டும். |
| 'c:\\pyprg\\p4' | மதிப்பு C++ கோப்பின் முழுமையான பாதை |
நம்முடைய எடுத்துக்காட்டுகளில், கட்டளை வரி கட்டளைகளை அனைத்தும் பிரிக்கப்பட்டிருப்பதாலும், செயலுருபு மீதமில்லாமலிருப்பதாலும்,
இரண்டாவது செயலுருபு args வெறுமையாக இருக்கும். Print() கட்டளையைப் பயன்படுத்தி args வெளிக்காட்டப்பட்ட செய்திருந்தால், வெளியீடு [] என இருக்கும்.
>>>print(args)
[ ]
26.
27.
| Python | கட்டளை வரியிலிருந்து பைத்தான் நிரலை செயல்படுத்துவதற்கான சிறப்புச் செயல் |
| filename.py | செயல்படுத்த வேண்டிய பைத்தான் நிரலின் பெயர் |
| -i | உள்ளீட்டு முறைமை |
| C++ filename without cpp extension | தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய C++ நிரலின் பெயர் |
உதாரணத்திற்கு, கட்டளை தூண்டுக்குறியில் "Python pycpp.py - i pali" என்று உள்ளிட்டு enter விசையை அழுத்தவும். தொகுத்தல் வெற்றிகரமாக முடிந்தால் நீங்கள் எதிர்பார்த்த வெளியீடு கிடைக்கும் இல்லையேல் பிழைச் செய்தி வெளியிடப்படும்.
28.
(i) பைத்தான் பயனிலா (garbage) மதிப்புகளைச் சேகரிக்கும் தானியங்கியைப் பயன்படுத்துகிறது. இந்த பண்புக்கூறு C++ல் கிடையாது.
(ii) C++ நிலையான வகையைச் சார்ந்த மொழி, ஆனால் பைத்தான் ஒரு மாறக்கூடிய வகையைச் சார்ந்த மொழியாகும்.
(iii) பைத்தான் வரி மொழி மாற்றி மூலம் இயங்குகிறது. ஆனால் C++ நிரல் பெயர்ப்பியின் மூலம் தொகுக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
(iv) C++ நிரல் குறிமுறையைக் காட்டிலும் பைத்தான் குறிமுறை 5-லிருந்து 10 மடங்கு குறைவானது.
(v) பைத்தானில், வெளிப்படையாக தரவினங்களை அறிவிக்க தேவையில்லை.
29.
(d)
plot ( )
30.
(d)
pip
31.
(b)
ஸ்கேட்டர் வரைவிடம்
32.
(d)
டேஷ்போர்ட்
33.
(c)
இன்போகிராபிக்ஸ்
34.
(c)
மூன்று
35.
(c)
cursor
36.
(a)
cursor
37.
(c)
SQLite
38.
(b)
தரவுத்தள மேலாண்மை
39.
(b)
பைத்தான்
40.
(d)
இவை அனைத்தும்
41.
(b)
C++
42.
(a)
பைத்தான்
43.
(c)
இரண்டும்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards