12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
எந்த மாதிரியானது தரவை பொருள்கள், பண்புக்கூறுகள், வழிமுறைகள், இனக்குழு மற்றும் மரபுரிமம் போன்ற வழிகளில் சேமிக்கிறது.
ER தரவுத்தளம்
வலையமைப்பு
உறவுநிலை
பொருள் நோக்கு
2.
பின்வருவனவற்றுள் எந்தக் கட்டுப்பாடு ஒரு புலம் எப்பொழுதும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும்?
NULL
NOT NULL
YES
ALWAYS
3.
DML என்பது
Data Manipulation language
Data Meaningful Language
Directional Manipulate Language
Data Management Language
4.
அட்டவணை அமைப்புடன் சேர்த்து முழு அட்டவணையை நீக்க பயன்படும் கட்டளை
DROP
DELETE
DELETES ALL
ALTER TABLE
5.
ஒரு tuple என்பது ______.
table
row
attribute
field
6.
பின்வருவனவற்றிற்கான செயற்குறி யாது?
(i) SELECT
(ii) PROJECT
(iii) ஒட்டுதல்
(iv) வெட்டுதல்
(v) வேறுபாடு
(vi) கார்டிசியன் பெருக்கல்
7.
பின்வரும் கட்டளைகளுக்கான தொடரியலை எழுதுக
(i) INSERT
(ii) DELETE
(iii) UPDATE
8.
பின்வரும் பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழியின் கட்டளை பற்றி எழுதுக
(i) Commit
(ii) Rollback
(iii) Savepoint
9.
அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
10.
Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.
11.
படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
12.
தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?
13.
SQL -ல் உள்ள TCL கட்டளைகளை பற்றி சிறு குறிப்பு வரைக.
14.
ER தரவுதள மாதிரி பற்றி எழுதுக.
15.
தரவு கையாளுதல் மொழி பற்றி எழுதுக
16.
Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.
17.
கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.
18.
கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
DBA-வின் பணி என்ன?
20.
SQL ன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.
21.
22.
ஒட்டுதல், வெட்டுதல், வேறுபாடு மற்றும் கார்டீசியன் பெருக்கல் போன்றவற்றை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
23.
DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக.
1.
(d)
பொருள் நோக்கு
2.
(b)
NOT NULL
3.
(a)
Data Manipulation language
4.
(a)
DROP
5.
(b)
row
6.
(i) \(\sigma \)
(ii) \(\Pi \)
(iii) \(\cup \)
(iv) \(\cap \)
(v) \(-\)
(vi) x
7.
(i) INSERT INTO < table-name > [column VALUES list] (values);
(ii) DELETE FROM table-name WHERE condition;
(iii) UPDATE < table-name > SET column name = value, column-name = value, ... WHERE condition;
8.
(i) Commit: தரவுத்தள பரிவர்த்தனையை நிரந்தரமாக சேமிக்கும்
(ii) Rollback: ஒரு தரவுத்தளத்தை முந்தைய commit நிலைவரை மீட்டெடுக்கும்
(iii) Savepoint: Rollback செய்வதற்கு ஏதுவாக தரவுத்தள பரிவர்த்தனையை தற்காலிகமாக சேமிக்கும்
9.
| நெடுவரிசை கட்டுப்பாடு | அட்டவணை கட்டுப்பாடு |
| தனிப்பட்ட நெடுவரிசைக்கு மட்டுமே நெடுவரிசை கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். | அட்டவணை கட்டுப்பாடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகளுக்கு பயன்படுத்த முடியும். |
10.
| Unique | Primary Key | |
| (i) | இந்த கட்டுப்பாடு குறிப்பிட்ட நெடுவரிசைகளில் எந்த இரு வரிசைகளும் ஒரே மதிப்பை கொண்டிருக்காது என்பதை உறுதி செய்கிறது. | தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை Primary Key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும். |
| (ii) | UNIQUE கட்டுப்பாட்டை Not NULL என்று அறிவிக்கப்பட்ட புலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். | Primary Key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது. |
11.
| படிநிலை மாதிரி | வலையமைப்பு மாதிரி |
| (i) படிநிலை மாதிரியில், ஒரு குழந்தை பதிவு ஒரே ஒரு பெற்றோர் முனையத்தை மட்டுமே கொண்டிருக்கும். | (i)வலையமைப்பு மாதிரியில் ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் முனையங்கள் இருக்கலாம். |
| (ii) இது ஒன்றிலிருந்து பல (one to many) உறவு நிலையை குறிக்கிறது. | (ii) இது தரவை பலவற்றிலிருந்து பலவற்றிற்கு (many to many) உறவுநிலையை குறிப்பிடுகிறது. |
| (iii) இந்த மாதிரியில் தரவு எளிமையான மரக்கிளை அமைப்பில் குறிப்பிடப்படுகிறது. | (iii) வலையமைப்பு மாதிரி எளிமையாகவும், விரைவாகவும் தரவுகளை அணுக பயன்படுகிறது. |
12.
தரவு நிலைத்தன்மை என்பது தரவுத்தளத்தில் அனைத்து இடங்களிலும் ஒத்த மதிப்புடைய தரவுகளாகும்.
13.
தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை (TCL) நிர்வகிக்க பரிவர்த்தனை கட்டுப்பாட்டு
மொழி பயன்படுகிறது. DML கூற்றுகளின் மூலம் அட்டவணையில் உள்ள தரவுகளுக்கு செய்யப்படும்
மாற்றங்களை நிர்வகிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
SQL – லில் உள்ள பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள்:
Commit தரவுத்தள பரிவர்த்தனையை நிரந்தரமாக சேமிக்கும்.
Rollback ஒரு தரவுத்தளத்தை முந்தைய commit நிலைவரை மீட்டெடுக்கும்.
Savepoint Rollback செய்வதற்கு ஏதுவாக தரவுத்தள பரிவர்த்தனையை தற்காலிகமாக சேமிக்கும்.
14.
(i) இந்த தரவு மாதிரியில், பொருளை உருப்படியாகவும் அதன் பண்புகளை, பண்புக் கூறுகளாகவும் பிரித்து உறவு நிலை உருவாக்குகிறது.
(ii) 1976ல் Chen சென் என்பவரால் உருவாக்கப்பட்டது.
(iii) இந்த மாதிரி தரவுத்தளத்திற்கான கருத்து வடிவமைப்பை உருவாக்க பயன்படுகிறது.
(iv) தரவின் விளக்கப்படத்தை வடிவமைக்க மிகவும் எளிமையாக உள்ளது.
(v) ER மாதிரியைக் கொண்டு நிரலர் அமைப்பை எளிமையாக புரிந்து கொள்ள முடியும். செவ்வகம் உருப்படிகளைக் குறிக்கிறது.
15.
தரவு கையாளுதல் மொழி (DML) என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை சேர்த்தல், அழித்தல் மற்றும் மாற்றியமைப்பதற்காக பயன்படும் ஒரு கணிப்பொறி நிரலாக்க மொழியாகும். SQL - ல் தரவு கையாளுதல் மொழி தரவுத்தள அட்டவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மாற்றியமைக்க பயன்படும் SQL தரவு மாற்றுக் கூற்றுகளை கொண்டிருக்கும்.
தரவுத்தள திட்ட வடிவமைப்பின்படி, தரவுத்தளம் உருவாக்கிய பின்னர், DML ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல் முறைகளின் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்
16.
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி, மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்.
தொடரியல்: SAVEPOINT savepoint _name;
எ.கா. UPDATE Student SET Name = 'Mini' WHERE Admno=105;
SAVEPOINT A;
INSERT INTO Student VALUES(106, 'Jisha', 'F', 19, 'Delhi');
SAVEPOINT B;
17.
கட்டுப்பாடுகள் என்பது ஒரு புலம் அல்லது புலங்களின் தொகுதிக்கு பயன்படுத்தக்கூடிய நிபந்தனையை குறிக்கும்.
(i) Primary Key கட்டுப்பாடு:
தரவுத்தளத்திலுள்ள ஒரு பதிவை தனித்தன்மையோடு அடையாளம் காட்ட ஒரு புலத்தினை primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்க வேண்டும்.
(ii) இது unique கட்டுப்பாட்டினை போன்றே காணப்பட்டாலும் அட்டவணையின் ஒரு புலத்தை மட்டுமே primary key ஆக குறிப்பிட முடியும்.
(iii) primary key கட்டுப்பாடு வெற்று (NULL) மதிப்புகளை அனுமதிக்காது என்பதால், primary key என்ற கட்டுப்பாட்டுடன் அறிவிக்கப்படும் புலம், NOT NULL என்ற கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும்.
18.
i) இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது. இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.
2) A x B என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள் என்பன வேறுபட்ட பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து நெடுக்கைகளை ஒன்று சேர்க்க பயன்படுகிறது.

19.
தரவுத்தள நிர்வாகி அல்லது DBA என்பவர் முழு தரவுத்தள மேலாண்மை அமைப்பையும் நிர்வகிப்பவர் ஆவார். இவர் DBMS பாதுகாப்பு, உரிமங்களை நிர்வகித்தல், பயனர் கணக்குகள் மற்றும் அணுகல்களை நிர்வகித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.
20.
SQL- கட்டளைகள் ஐந்து பொதுப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
(i) DML - தரவு கையாளுதல் மொழி
(ii) DDL - தரவு வரையறை மொழி
(iii) DCL - தரவு கட்டுப்பாடு மொழி
(iv) TCL - பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி
(v) DQL - தரவு வினவல் மொழி
(i) தரவு வரையறை மொழி:
தரவு வரையறை மொழி(DDL) தரவுத்தள அமைப்பு அல்லது திட்ட வடிவமைப்பினை வரையறுக்கும் SQL கூற்றுகளை கொண்டிருக்கும். இது தரவுத்தள திட்ட வடிவமைப்பின் விளக்கங்களுடன் செயல்படுகிறது. மேலும், தரவுத்தளங்களில் உள்ள தரவுத்தள உறுப்புகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் பயன்படுகிறது
தரவு வரையறை மொழியின் கீழ்வரும் SQL கட்டளைகள் பின்வருமாறு:
CREATE தரவுத்தளத்தில் அட்டவணைகளை உருவாக்க
ALTER தரவுத்தளத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க
DROP தரவுத்தளத்தில் உள்ள அட்டவணைகளை நீக்க
TRUNCATE ஒரு அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அளிக்கும், மேலும் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் விடுவிக்கும்
(ii) தரவு கையாளுதல் மொழி:
தரவு கையாளுதல் மொழி (DML) என்பது ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை சேர்த்தல் அழித்தல் மற்றும் மாற்றியமைப்பதற்காக பயன்படும் ஒரு வினவல் மொழியாகும். SQL- ல் தரவு கையாளுதல் மொழி தரவுத்தள அட்டவணையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மாற்றியமைக்க பயன்படும் SQL தரவு மாற்று கூற்றுகளை கொண்டிருக்கும்
தரவுத்தள திட்ட வடிவமைப்பின்படி, தரவுத்தளம் உருவாக்கிய பின்னர், DML ல் குறிப்பிடப்பட்டுள்ள செயல் முறைகளின் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்
SQL-லில் உள்ள தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகள்:
INSERT ஒரு அட்டவணையில் தரவுகளை நுழைத்தல்
UPDATE அட்டவணையில் ஏற்கனவே உள்ள தரவுகளை புதுப்பித்தல்
DELETE அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும் நீக்கும். ஆனால் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நினைவாக பகுதியை விடுவிக்காது
(iii) தரவு கட்டுப்பாடு மொழி:
ஒரு தரவு கட்டுப்பாடு மொழி என்பது தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் அணுகுதலை கட்டுப்படுத்தும் ஒரு நிரலாக்க மொழியாகும். இது தரவுத்தளத்தை அணுகுவதற்கான சிறப்புரிமையை கட்டுப்படுத்துகிறது (அங்கீகாரம்). இத்தகைய சிறப்புரிமைகள் வரிசைத்தொடர்களை உருவாக்கல், அட்டவணைகளை பார்வையிடுதல் போன்ற அனைத்து தரவுத்தள செயல்பாடுகளை செயல்படுத்துவதைக் குறிக்கும்
SQL- லில் உள்ள தரவு கட்டுப்பாடு மொழியின் கட்டளைகள்:
GRANT ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு அனுமதி வழங்கும்
REVOKE Grant கட்டளையினால் தரப்பட்ட அணுகல் அனுமதி திரும்பப் பெறப்படும்.
(iv) பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி :
தரவுத்தளத்தில் உள்ள பரிவர்த்தனைகளை (TCL) நிர்வகிக்க பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி பயன்படுகிறது. DML கூற்றுகளின் மூலம் அட்டவணையில் உள்ள தரவுகளுக்கு செய்யப்படும் மாற்றங்களை நிர்வகிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
SQL - லில் உள்ள பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழியின் கட்டளைகள்:
Commit தரவுத்தள பரிவர்த்தனையை நிரந்தரமாக சேமிக்கும்.
Roll back ஒரு தரவுத்தளத்தை முந்தைய Commit நிலைவரை மீட்டெடுக்கும்
Save point Rollback செய்வதற்கு ஏதுவாக தரவுத்தள பரிவர்த்தனையை தற்காலிகமாக சேமிக்கும்
(v) தரவு வினவல் மொழி:
தரவு வினவல் மொழி ஒரு தரவுதளத்தில் உள்ள தரவுகளை வினவலுக்கும், மீட்டெடுப்பதற்கான கட்டளைகளை கொண்டுள்ளது. தரவு வினவல் மொழியில் உள்ள அத்தகைய ஒரு SQL கட்டளை SELECT ஆகும்
Select: அட்டவணையிலுள்ள பதிவுகளை வெளிக்காட்டும்
21.

22.
உறவுநிலை இயற்கணிதம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரும உறவுநிலைச் செயற்பாடுகள்
SELECT ( symbol: \(\sigma \))
PROJECT (symbol:\(\Pi \) )
Set தேற்றத்தில் இருந்து உறவுநிலை இயற்கணித செயற்பாடுகள்
1) ஓட்டுதல் (∪)
2) வெட்டுதல் (\(\cap\))
3) வேறுபாடு (-)
4) கார்டீசியன் பெருக்கல் (X)
SELECT (symbol:\(\sigma \))
1) பொதுவடிவம் \(\sigma \)c (R): என்பது உறவுநிலை மற்றும் அதனுடைய பண்புக்கூறுகளின் நிபந்தனை C.
2) இந்த select செயற்பாடு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் துணைத் தொகுதியை tuples களுடன் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
3) நிபந்தனைகளை நிறைவேற்ற tuples களை Select வடிகட்டுகிறது.
STUDENT:
| Stud no | Name | Course | Year |
| cs 1 | Kannan | Big Data | II |
| cs 2 | Gowri Shankar | R language | I |
| cs 3 | Lenin | Big Data | I |
| cs 4 | Padmaja | Python Programming | I |
அட்டவணை A
\(\sigma \)course= "Big Data" (STUDENT) :
| Stud no | Name | Course | Year |
| cs 1 | Kannan | Big Data | II |
| cs 3 | Lenin | Big Data | I |
PROJECT (Symbol: II)
1) இந்த PROJECT செயற்பாடு குறிப்பிடப்பட்டுள்ள உள்ளீட்டு தொடர்புகளின் பண்புக்கூறுகளை நீக்குகிறது. இந்த செயற்பாடு கிடைமட்ட துணைத் தொகுதியின் ஒப்பீடுகளை வரையறுக்கிறது
2) எடுத்துக்காட்டு 1 அட்டவணை A ஐ பயன்படுத்தி
\(\Pi \)course(STUDENT)
Result
| Course |
| Big Data |
| R language |
| Python Programming |
எடுத்துக்காட்டு 2 (அட்டவணை A)
\(\Pi \)studno.course(STUDENT)
| Stud no | Course |
| cs 1 | Big Data |
| cs 2 | R language |
| cs 3 | Big Data |
| cs 4 | Python Programming |
ஓட்டுதல் (Symbol: ∪)
1) இது A அல்லது B அட்டவணையில் உள்ள அனைத்து tuples -களையும் உள்ளடக்கியது. இது நகல்களையும் நீக்குகிறது. தொகுதி A ஒட்டுதல் தொகுதி B என்பது A ∪ B
2) எடுத்துக்காட்டு 3( அட்டவணை A ஐ பயன்படுத்தி) பின்வரும் அட்டவணையை நோக்குக.
| Table A | |
| Stud no | Name |
| cs 1 | Kannan |
| cs 3 | Lenin |
| cs 4 | Padmaja |
| Table B | |
| Stud no | Name |
| cs 1 | Kannan |
| cs 2 | Gowri Shankar |
| cs 3 | Lenin |
விடை: அட்டவணை B
| Table A ∪ B | |
| Stud no | Name |
| cs 1 | Kannan |
| cs 2 | Gowri Shankar |
| cs 3 | Lenin |
| cs 4 | Padmaja |
வேறுபாடு (Symbol:-)
1) இது A மற்றும் B அட்டவணைகளை ஒப்பிட்டு A அட்டவணையில் உள்ள வேறுபட்ட tuples களை மட்டும் தருகிறது. B அட்டவணையைத் தவிர்க்கிறது. A பண்புக்கூறின் பெயர் B பண்புக்கூறின் பெயரோடு பொருந்த வேண்டும்.
2) எடுத்துக்காட்டு 4 (அட்டவணை B ஐ பயன்படுத்தி)
விடை:
|
Table A - B |
|
| cs 4 | Padmaja |
வெட்டு (Symbol: \(\cap\))A\(\cap\)B
1) இது A மற்றும் B அட்டவணைகளில் பொதுவாக உள்ள அனைத்து tuples களையும் உள்ளடக்கியது.
2) எடுத்துக்காட்டு 5 (அட்டவணை B ஐ பயன்படுத்தி)
| Table A \(\cap\) B | |
| cs 1 | Kannan |
| cs 3 | Lenin |
கார்டீசியன் பெருக்கல் (Symbol: X)
1) இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது. இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.
2) AxB என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள் என்பன வேறுபட்ட பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து நெடுக்கைகளை ஒன்று சேர்க்க பயன்படுகிறது.

23.
| ஒப்பீட்டு அடிப்படை | DBMS | RDBMS |
| விரிவாக்கம் | Database Management System தரவுதள மேலாண்மை அமைப்பு | Relational Database Management System உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பு. |
| தரவு சேமிப்பு | வழிசெலுத்தல் மாதிரி அதாவது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பதிவுகளின் தரவு | உறவுநிலை மாதிரி (அட்டவணையில்) அட்டவணையில் வரிசை மற்றும் நெடுவரிசை உள்ள தரவுகள் |
| மிகைமைத் தரவு | இடம் பெற்றுள்ளது | இடம் பெறவில்லை |
| இயல்பாக்கம் | செய்ய இயலாது | இயல்பாக்கத்தை பயன்படுத்துகிறது. |
| தரவு அணுகல் | அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. | DBMS உடன் ஒப்பிடும் போது வேகமானது. |
| திறவு கோல்கள் மற்றும் குறியீடுகள் | பயன்படுத்தப்பட வில்லை | உறவுநிலையை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது. |
| பரிவர்த்தனை மேலாண்மை | திறமையற்றது, பிழைகளைக் கொண்டது பாதுகாப்பற்றது. | திறமையானது மற்றும் பாதுகாப்பானது. |
| பரவல் தகவல் தளம் | ஒத்துழைக்காது | ஒத்துழைக்கும் |
| எடுத்துக்காட்டு | Dbase, FoxPro | SQL server, Oracle, mysql, MariaDB, SQLite, MS - Access |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards