12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
SQL ன் அண்மை பதிப்பு
SQL 2008
SQL 2019
SQL 2018
SQL 2.0
2.
SQL originally எவ்வாறு அழைக்கப்படுகிறது?
DBMS
RDBMS
SQL
இவற்றில் எதுவுமில்லை
3.
SQL-ன் விரிவாக்கம்
Standard Query Language
Secondary Query Language
Structural Query Language
Standard Question Language
4.
பின்வருவனவற்றுள் எது உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பில் உள்ள தரவுகளை நிர்வகிப்பதற்கும் அணுகுவதற்கும் வடிவமைக்கப்பட்ட மொழி?
DBMS
DDL
DML
SQL
5.
பின்வருவனவற்றுள் எது தரவுத்தளங்களை அணுகுதலுக்கும் கையாளுதலுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு வினவல் மொழியாகும்?
SQL
MySQL
PHP
Python
6.
பின்வருவனவற்றுள் எவை தொடர்புடைய தரவுகளின் களஞ்சியம் ஆகும்?
SQL
தகவல்
உறுப்புகள்
தரவுதளம்
7.
பின்வருவனவற்றுள் எது வடிவமைக்கப்பட்ட தரவாகும்?
அடிப்படை துணுக்கு
தரவுதளம்
தகவல்
DBMS
8.
பின்வருவனவற்றில் எவை தரவில் இருக்கும்?
எழுத்து
எண்
வார்த்தை
இவை அனைத்தும்
9.
பின்வருவனவற்றுள் எவை கணினி அமைப்பிலிருந்து மின்னணு முறையில் பெறப்பட்டு சேமிக்கப்படுகின்ற தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு
Spreadsheet
தரவுதளம்
DBMS
தகவல்
10.
பின்வருவனவற்றுள் எது தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு ஆகும்?
நிரலாக்க மொழி
துணுக்குகள்
வார்த்தைகள்
தரவுதளம்
11.
CSV கோப்பில், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த பின்வரும் எந்த குறியுடன் கொடுக்கப்பட வேண்டும்?
' '
"' "'
;
" "
12.
பின்வரும் எந்த அட்டவணைச் செயலி XLS அல்லது XLSX என்ற வடிவமைப்பு வகையில் கோப்பினை சேமிக்கும்?
Excel
CSV
Word
Notepad
13.
பின்வரும் எந்த கோப்பினை உரைபதிப்பான்களைக் கொண்டு திறக்கலாம்?
Excel
Worksheet
CSV
Python
14.
பின்வருவனவற்றுள் எது பிரிக்கப்பட்ட பல்வேறு புலங்களைக் கொண்டு பயனரால் புரிந்து கொள்ள கூடிய உரைக்கோப்பாகும்?
CSV கோப்பு
CSV நிரல்
CSV தகவல்
CSV உரை
15.
பின்வருவனவற்றுள் எது பைத்தான் நிரலர் CSV கோப்புகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகின்றது?
CSV தரவு
CSV செயற்கூறு
CSV Sheet
CSV flat file
16.
தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.
17.
தரவுத்தள மேலாண்மை என்றால் என்ன?
18.
தரவுக்கும் தகவலுக்கும் உள்ள வேறுபாடு யாது?
19.
RDBMS குறிப்பு வரைக
20.
RDBMS தொகுப்பிற்கு எ.கா தருக
21.
விரிவாக்கம் தருக.
(i) SQL
(ii) DBMS
(iii) RDBMS
22.
விரிவாக்கம் -
(i) CSV
(ii) CRLF
23.
CSV கோப்பில் உள்ள புலத்தின் தரவுகள் காற்புள்ளியை கொண்டிருக்கும் நோக்கம் யாது?
24.
CSV கோப்பின் பயன் யாது?
25.
தரவுதள கட்டமைப்பு பற்றி எழுதுக.
26.
DBMS-ன் நிறைகளை எழுதுக.
27.
தரவுதள மேலாண்மை அமைப்பின் பண்புகளை பட்டியலிடுக.
28.
தரவு வரையறை மொழியின் செயல்பாடுகளை பட்டியலிடுக
29.
தரவு வரையறை மொழி பற்றி எழுதுக
30.
RDBMS ல் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன?
31.
CSV கோப்புகளை reader ( ) செயற்கூறுவின் மூலம் படிக்கும் வழிமுறைகளை எழுதுக.
32.
reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.
33.
எக்ஸெலை பயன்படுத்தி CSV கோப்பினை எவ்வாறு உருவாக்குவாய்?
34.
DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.
35.
பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.
36.
பின்வருவன பற்றி விரிவாக எழுதுக
(i) TRUNCATE கட்டளை
(ii) DROP TABLE கட்டளை
37.
ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக
38.
SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள் பற்றி எழுதுக.
39.
CSV கோப்பின் அனைத்து வரிசையில் உள்ள மதிப்புகளையும் பட்டியலாக சேமிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
40.
ஒரு CSV கோப்பினில் குறிப்பிட்ட புலத்தை மட்டும் படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
41.
பயனரால் வரையறுக்கப்பட்டுள்ள பிரிப்பானைக் கொண்டுள்ள '\(_{ | }^{ | }\)' கொண்டு CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
42.
CSV கோப்பில், பிரிப்பானுக்கு பிறகு உள்ள வெற்றிடை வெளிகளை படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.
43.
பைத்தானில் உள்ள csv.reader ( ) என்ற செயற்கூறு மூலம் கோப்பினை படிக்கும் நிரலை எழுதுக.
1.
(a)
SQL 2008
2.
(c)
SQL
3.
(c)
Structural Query Language
4.
(d)
SQL
5.
(a)
SQL
6.
(d)
தரவுதளம்
7.
(c)
தகவல்
8.
(d)
இவை அனைத்தும்
9.
(b)
தரவுதளம்
10.
(d)
தரவுதளம்
11.
(a)
' '
12.
(a)
Excel
13.
(c)
CSV
14.
(a)
CSV கோப்பு
15.
(b)
CSV செயற்கூறு
16.
DBMS என்பது தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும். இது தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. DBMS, உருவாக்குதல் போன்ற பல தரவுத்தளத்தை வேலைகளை செய்வதற்கான இடைமுகம் (அ) கருவியை வழங்குகிறது. DBMS தரவுத்தளங்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. DBMS இது, பல பயனர்கள் உள்ள நிலையில் தரவு நிலைத்தன்மையும் பராமரிக்கிறது.
17.
DBMS என்பது தரவுத்தளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு மென்பொருளாகும். இது தரவுகளை எளிமையாக சேமிக்க, செயல்படுத்த மற்றும் பகுப்பாய்வு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. DBMS, உருவாக்குதல் போன்ற பல தரவுத்தளத்தை வேலைகளை செய்வதற்கான இடைமுகம் (அ) கருவியை வழங்குகிறது. DBMS தரவுத்தளங்களுக்கு பாதுகாப்பையும் வழங்குகிறது. DBMS இது, பல பயனர்கள் உள்ள நிலையில் தரவு நிலைத்தன்மையும் பராமரிக்கிறது.
18.
| தரவு | தகவல் | |
| 1. | தரவு என்பது கணிப்பொறியில் சேமிக்கப்பட்ட அடிப்படைத் துணுக்குகளாகும் | தகவல் என்பது வடிவமைக்கப்பட்ட தரவாகும். |
| 2. | தரவு, எந்தவொரு எழுத்து, உரை, வார்த்தை அல்லது எண்ணாகவோ இருக்க முடியும். | இது தரவுகளை சில குறிப்பிடத்தக்க வழியில் பயன்படுத்த அனுமதிக்கிறது |
19.
RDBMS என்பது தொடர்புடைய தரவு கூறுகளை இணைக்கும் வரிசை அடிப்படையிலான அட்டவணை வடிவமைப்பைக் கொண்ட ஒரு வகை தரவுத்தள மேலாண்மை அமைப்பாகும். மேலும் Create, Read, Update மற்றும் Delete செயற்பாடுகளை ஒட்டுமொத்த CRUD எனப்படும்
20.
Oracle, MySQL, MS SQL Server, IBM DB2 மற்றும் மைக்ரோசாப்ட் Access போன்றவை உறவுநிலை தரவுத்தள மேலாண்மை அமைப்பதற்கான RDBMS மென்பொருள் தொகுப்புகளாகும்
21.
(i) SQL - Structured Query Language
(ii) DBMS - Database Management System
(iii) RDBMS - Relational Database Management System
22.
(i) CSV - Comma Separated Values
(ii) CRLF - Carriage Return Line Feed
23.
(i) CSV கோப்பில் உள்ள புலத்தின் தரவுகள் காற்புள்ளியை தன்னுடன் கொண்டிருந்தால், காற்புள்ளியுடன் தரவினை வெளிப்படுத்த அத்தகைய பல தரவுகளை இரட்டை மேற்கோள் குறியுடன் (") கொடுக்கவும்.
(ii) தரவின் ஒரு பகுதியாக காற்புள்ளியை கொள்ளவும் புலங்களை பிரிக்க பயன்படும் பிரிப்பானை காற்புள்ளியில் இருந்து இதை பிரித்து காட்டும்.
24.
(i) தரவுத்தளம் அல்லது அட்டவணைச் செயலியில் உள்ள அட்டவணை வகை தரவுகளை சேமிக்க ஒரு எளிய கோப்பு வடிவமாக CSV பயன்படுகிறது.
(ii) எளிய உரைவடிவ கோப்பாக இருப்பதனால் நாம் பயன்படுத்தும் மென்பொருளை பொருட்படுத்தாமல் அட்டவணைச் செயலி அல்லது தரவுத்தளத்தில் இறக்கம் செய்ய இது எளிதாகும்.
25.
(i) ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பே அட்டவணை எனப்படும். இது தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட கோப்பு (அ) அட்டவணை என்றும் அழைக்கப்படுகிறது.
(ii) அட்டவணையில் ஒவ்வொரு வரிசையும் பதிவு என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு தரவுத்தள பதிவிடுதலுக்குமான தரவின் தொகுதி ஆகும்.
(iii) ஓவ்வொரு நெடுவரிசையும் புலம் என அழைக்கப்படுகிறது. இது ஓவ்வொரு தரவின் வகையையும் குறிப்பிட்ட குழுக்களாக பிரிக்கிறது.
(iv) எ.கா. stu.No., stu.Name, stu.age, stu.class , stu.sec.
(v) ஒரு அட்டவணை உறவுகள், வரிசை எனவும் நெடுவரிசை எனவும் அழைக்கப்படுகிறது.
(vi) ஒரு வரிசை பதிவு (tuple) எனப்படும்.
26.
(i) பயன்பாட்டு நிரல்களைப் பிரித்தல்
(ii) தரவுப்பிரதிகளை (Duplication) அல்லது தரவு மிகைமைக் குறைத்தல்
(iii) வினவல் மொழியைப் பயன்படுத்தி தரவை எளிமையாக திரும்பப் பெறுதல்.
(iv) தரவை உருவாக்கும் நேரம் மற்றும் பராமரித்தலைக் குறைத்தல்
27.
(i) அட்டவணையில் சேமிக்கப்பட்ட தரவுகள்
(ii) மிகைமை (தேவைக்கு அதிகமானவற்றை குறைத்தல்)
(iii) தரவுகளின் நிலைத்தனமை
(iv) பல பயனர்கள் மற்றும் ஒத்த அணுகுதலை ஆதரித்தல்
(v) வினவல் மொழி
(vi) பாதுகாப்பு
(vii) DBMS பரிவர்தனைகளை ஆதரித்தல்.
28.
ஒரு DDL கீழ்காணும் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
1. தரவு உருப்படி, பிரிவு மற்றும் தரவுத்தள கோப்பு போன்ற தரவு பிரிவு வகைகளை அடையாளம் காண வேண்டும்
2. ஒவ்வொரு தரவு உருப்படி, பதிவு மற்றும் தரவுத்தள வகைகளுக்கு ஒரு தனித்தன்மையான பெயரை கொடுக்கிறது.
3. இது சரியான தரவு வகையை குறிப்பிட வேண்டும்
4. இது தரவு உருப்படியின் அளவை வரையறுக்க வேண்டும்
5. ஒரு தரவு உருப்படி பயன்படுத்தக்கூடிய மதிப்புகளின் வரம்பை இது வரையறுக்கலாம்
6. அங்கீகரிக்கப்படாத தரவு பதிவுகளை தடுப்பதற்கான தனியுரிமையை குறிக்கலாம்.
29.
தரவு வரையறை மொழி (DDL) தரவுத்தள அமைப்பு அல்லது திட்ட வடிவமைப்பினை வரையறுக்கும் SQL கூற்றுகளை கொண்டிருக்கும். இது தரவுத்தள திட்ட வடிவமைப்பின் விளக்கங்களுடன் செயல்படுகிறது. மேலும், தரவுத்தளங்களில் உள்ள தரவுத்தள உறுப்புகளில் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மாற்றியமைப்பதற்கும் பயன்படுகிறது
DDL தரவுத்தள அமைப்பு சேமிப்பு வடிவமைப்பையும், அணுகல் முறைகளையும் குறிப்பிடப்பயன்படும் வரையறைகளை வழங்குகிறது
30.
RDBMS -ல் உள்ள தரவுகள், தரவுத்தள பொருட்களாக அட்டவணைகளில் (Tables) சேமிக்கப்படும். ஒரு அட்டவணை என்பது தொடர்புடைய தரவுப் பதிவுகளின் தொகுப்பாகும், அட்டவணை வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை கொண்டிருக்கும்.
ஒரு அட்டவணையின் நெடுவரிசை புலம் (field) என்று குறிப்பிடப்படுகிறது இது ஒவ்வொரு பதிவின் தேவையான தகவல்களை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அட்டவணையின் நெடுவரிசையை ஒரு குறிப்பிட்ட புலத்தின் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். ஒரு மாணவர் அட்டவணையில் புலங்களைக் கொண்டிருக்கும்.
ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய புலங்கள் அல்லது நெடுவரிசைகளின் தொகுப்பைக் கொண்ட ஒரு வரிசை, பதிவு (Record) எனப்படும். ஒரு பதிவு என்பது மாணவர் அட்டவணையில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாணவர்களை கொண்டிருக்கும் ஒரு வரிசையாகும்.
31.
(i) CSV கோப்பு : கொடாநிலை பிரிப்பானான காற்புள்ளியை கொண்ட தரவு.
(ii) CSV கோப்பு : தொடக்கத்தில் இடம் கொண்ட தரவுகள்.
(iii) CSV கோப்பு : மேற்கோளுடன் கூடிய தரவுகள்
(iv) CSV கோப்பு : தனிப்பயன் பிரிப்பான கொண்ட தரவு.
32.
csv.reader
( ) செயற்கூறின் தொடரியல்
csv.reader(fileobject, delimiter, fmtparams)
இங்கு,
(i) file object : கோப்பின் பாதையையும் முறைமையையும் திருப்பி அனுப்பும்.
(ii) delimiter : இது விருப்பத்தேர்வு அளபுருவாகும், இது செந்தர வரம்புக் குறிகளை கொண்டிருக்கும். (',) போன்றவை மற்றவைகள் தவிர்க்கப்படும்.
(iii) csv.reader ( ) : கொடாநிலை மதிப்புகளை மேற்பதிப்பு செய்ய/நீக்க பயன்படும் விருப்பத் தேர்வு அளபுருவாகும்.
33.
(i) மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் பயன்பாட்டை பயன்படுத்தி CSV கோப்புகளை உருவாக்க, எக்ஸெல் பயன்பாட்டை திறந்து வடிவத்தை CSV வடிவத்தில் சேமிக்க விரும்பும் கோப்பினை திறக்கவும், எடுத்துக்காட்டாக, எக்ஸெல் அட்டவணைத்தாள் மாதிரி தரவுகளைக் கொண்டுள்ளது.
(ii) அட்டவணைத் தாளில் தரவுகளை உள்ளிட்ட பிறகு File \(\rightarrow \) Save As என்ற விருப்பத்தினை தேர்வு செய்யவும். "Save as type option" என்பதில் CSV காற்புள்ளியில் பிரிக்கப்பட்டு தேர்வு செய்யவும். கோப்பின் பெயருடன் CSV நீட்டிப்பினை தேர்வு செய்யவும்.
34.
தரவுத்தள மேலாண்மை அமைப்பு (DBMS) பின்வரும் ஐந்து கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(i) வன்பொருள்
(ii) மென்பொருள்
(iii) தரவு
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்
(i) வன்பொருள்: கணினி, வன்வட்டு, தரவுக்கான உள்ளீடு/வெளியீடு சாதனங்கள் மற்றும் தரவைச் சேமிக்கப் பயன்படும் வேறு பாகங்கள்
(ii) மென்பொருள்: அனைத்தையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நிரலின் கூறு ஆகும். DBMS மென்பொருளானது தரவுத்தள அணுகல் மொழிகளைப் புரிந்து கொள்ள மற்றும் இயக்கத்திற்கான தரவுத்தள கட்டளைகளை நிரல் பெயர்க்க தகுதி வாய்ந்தது.
(iii) தரவு: இது DBMS ஐ வடிவமைப்பதற்கான வளம் ஆகும். DBMS தரவுகளை சேமிக்கவும், பயன்படுத்தவும் உருவாக்கப்படுகிறது.
(iv) வழிமுறைகள்/செயல்முறைகள்: இது தரவுத்தள மேலாண்மை அமைப்பை பயன்படுத்துவதற்கான பொதுவான கட்டளைகள் ஆகும். அதாவது, DBMSஐ நிறுவுதல், தரவுத்தளங்களின் பிரதி எடுத்தலை (Backups) நிர்வகித்தல் அறிக்கை தயாரித்தல் போன்றவை ஆகும்.
(v) தரவுத்தள அணுகல் மொழிகள்: இவை தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அணுகுதல், சேர்த்தால், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற கட்டளைகளை எழுதுவதற்கு பயன்படும் மொழிகள் ஆகும்.
35.
COMMIT கட்டளை:
COMMIT கட்டளை, தரவுத்தளத்திலுள்ள எந்த ஒரு நடவடிக்கையும் நிரந்தரமாக சேமிக்கப் பயன்படுகிறது. INSERT, UPDATE, DELETE போன்ற DML கட்டளைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மாற்றங்கள் நிரந்தரமல்ல. SQL தூண்டுக்குறியில் COMMIT கட்டளையை கொடுத்து விட்டால் செய்யப்பட்ட மாற்றங்கள் திரும்பப் பெற இயலாது. COMMIT கட்டளை இவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
COMMIT;
ROLLBACK கட்டளை:
ROLLBACK கட்டளை கடைசி COMMIT கட்டளைக்கு பிறகு கொடுத்த அனைத்து கட்டளைகளையும் திரும்பப் பெற. இந்த கட்டளையுடன் SAVEPOINT கட்டளையும் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட savepoint இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
ROLL BACK TO savepoint name;
SAVEPOINT கட்டளை:
SAVEPOINT கட்டளை ஒரு நடவடிக்கையை தற்காலிகமாக சேமித்து வைப்பதால், நாம் தேவைப்படும் சமயங்களில் திரும்பவும் அந்த நிலைக்கு செல்லலாம். நம்முடைய அட்டவணையின் மாறுபட்ட நிலைகளை வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி எந்த சமயத்திலும் சேமித்துக் கொள்ளலாம். மேலும், ROLLBACK கட்டளையைப் பயன்படுத்தி மீண்டும் அந்த நிலையை சென்றடையலாம்
SAVEPOINT savepoint_name;
36.
(i) TRUNCATE கட்டளை:
TRUNCATE கட்டளை அட்டவணையிலுள்ள அனைத்து வரிசைகளையும் நீக்கப் பயன்படுகிறது. அட்டவணையின் வடிவமைப்பு மாறாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் விடுவிக்கப்படும் TRUNCATE கட்டளையின் தொடரியல்
TRUNCATE TABLE table-name;
உதாரணத்திற்கு, மாணவர் அட்டவணையில் உள்ள அனைத்து பதிவுகளையும், அட்டவணையையும் நீக்குவதற்கான கட்டளை:
TRUNCATE TABLE Student;
மாணவர் அட்டவணை நீக்கப்பட்டு நினைவகப்பகுதி விடுவிக்கப்படுகிறது
(ii) DROP TABLE கட்டளை:
DROP TABLE கட்டளை தரவுத்தளத்திலிருந்து ஒரு அட்டவணையை நீக்கப் பயன்படுகிறது. ஒரு அட்டவணையை DROP செய்தால், அட்டவணையில் உள்ள அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டு, அட்டவணையில் வடிவமைப்பு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்படும். அட்டவணையை DROP செய்த பின்பு, அதனை திரும்பப்பெற இயலாது. ஆதலால், DROP TABLE கட்டளைகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருந்தல் வேண்டும். ஒரு அட்டவணையை DROP செய்ய வேண்டுமெனில், அது காலி அட்டவணையாக இருக்க வேண்டும். அட்டவணையில் அனைத்து வரிசைகளையும் DELETE கட்டளை கொண்டு நீக்கப்பட்டிருக்க வேண்டும்
அனைத்து வரிசைகளையும் நீக்க, தேவையான கட்டளை:
DELETE * FROM Student;
அனைத்து வரிசைகளும் நீக்கப்பட்டப் பின்பு, கீழ்காணும் முறையில் DROP TABLE கட்டளையை பயன்படுத்தி அட்டவணையை நீக்கலாம்.
DROP TABLE table-name;
உதாரணத்திற்கு மாணவர் அட்டவணையை நீக்க:
DROP TABLE Student;
37.
ALTER கட்டளை: ALTER கட்டளையைப் பயன்படுத்தி அட்டவணை வடிவமைப்பில் நெடுவரிசையை சேர்த்தல், ஏற்கனவே இருக்கும் புலத்திற்கு மறு பெயரிடல், எந்த ஒரு நெடுவரிசையின் தரவு வகையையோ அல்லது அளவினையோ மாற்றி அமைத்தல் நெடுவரிசையை அட்டவணையிலிருந்து நீக்குதல் போன்ற மாற்றங்களை செய்யலாம். அது கீழ்காணும் முறையில் பயன்படுத்தப்படுகிறது.
ALTER TABLE < table-name > ADD < column-name > < data type > < size >;
மாணவர் அட்டவணையில் 'char' என்ற தரவுவகை சார்ந்த "address" என்ற நெடுவரிசையை சேர்க்க, கட்டளையமைப்பு
ALTER TABLE Student ADD Address char;
அட்டவணையில் ஏற்கனவே இருக்கும் நெடுவரிசையில் மாற்றியமைக்க, ALTER TABLE கட்டளை MODIFY clause உடன் பயன்படுத்தப்படுகிறது
ALTER < table-name > MODIFY < column-name > < data-type > < size >;
ALTER TABLE Student MODIFY Address char (25);
மேற்கண்ட கட்டளை மாணவர் அட்டவணையில் உள்ள address நெடுவரிசை இப்பொழுது 25 எழுத்துக்கள் வரை தேக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கும்.
ALTER கட்டளை கீழ்க்காணும் முறையில் ஏற்கனவே உள்ள நெடுவரிசைக்கு மறு பெயரிட பயன்படுகிறது:
ALTER < table-name > RENAME old-column-name TO new-column-name;
உதாரணத்திற்கு, address என்ற பெயரை கொண்ட நெடுவரிசைக்கு city என்று மறுபெயரிட உதவும் கட்டளை:
ALTER TABLE Student RENAME Address TO City;
ஒரு நெடுவரிசை அல்லது அனைத்து நெடுவரிசைகளையும் நீக்க, ALTER கட்டளையைப் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ALTER TABLE - ன் DROP COLUMN ஐ பயன்படுத்தி, குறிப்பிட்ட நெடுவரிசையை நீக்கலாம், கட்டளை:
ALTER < table-name > DROP COLUMN < column-name >;
மாணவர் அட்டவணையில் city என்ற நெடுவரிசையை நீக்க, பயன்படும் கட்டளை:
ALTER TABLE Student DROP COLUMN City;
38.
SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள்:
1. தரவு வரையறை மொழி (DDL - Data Definition Language): SQL DDL - அட்டவணைகளை (Relational) உறவுநிலை திட்டங்களை (கட்டமைப்பு) வரையறுத்தல், நீக்குதல், மாற்றியமைத்தல் மற்றும் குறிப்புகளை உருவாக்கத்திற்கு தேவையான கட்டளைகளை வழங்கும் ஒரு வரையறை மொழியாகும்.
2. தரவை கையாளுதல் மொழி (DML Data Manipulation Language): SQL DML தரவுத்தளங்களில் வரிசைகளை (tuples) - ஐ சேர்க்கவும், நீக்கவும், பரிமாற்றவும் கட்டளைகளை உள்ளடக்கியது
3. உட்பொதிக்கப்பட்ட தரவுக் கையாளுதல் மொழி (EDML-Embedded Data Manipulation Language): SQL ன் உட்பொதிந்த வடிவம், உயர்நிலை நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
4. ஏனைய வரையறை: SQL அட்டவணையை பார்வையிடுவதற்காக View கட்டளைகளைக் கொண்டுள்ளது.
5. அங்கீகாரம்: SQL உறவுநிலைக்கான அணுகல் உரிமைகளுக்கான கட்டளைகளையும், அட்டவணைகளை பார்வையிடுதலுக்கான கட்டளைகளையும் கொண்டுள்ளது
6. ஒருமைப்பாடு: SQL நிபந்தனையை பயன்படுத்தி ஒருமைப்பாட்டை சரிபார்த்தலுக்கு படிவங்களை வழங்குகிறது
7. பரிவர்த்தனை கட்டுப்பாடு: கோப்பு பரிமாற்றங்களுக்கான கட்டளைகள் மற்றும் பரிவர்த்தனை செயலாக்கத்தின் கட்டுப்பாட்டையும் SQL கொண்டுள்ளது
39.
import csv
# other way of declaring the :filename
inFile= 'c:\\pyprg\\sample.csv'
F=open(inFile,'r')
reader = csv.reader(F)
# declaring array
arrayValue = [ ]
# displaying the content of the list
for row in reader:
arrayValue.append( row)
print(row)
F.close( )
40.
import csv
#opening the csv file which is in different location with read mode
f=open(" c:\\pyprg\ \ch 13sample5. csv" ,'r')
#reading the File with the help of csv.reader( )
readFile=csv.reader( f)
#printing the selected column
for col in readFile :
print col[0],col[3]
f.close( )
41.
import csv
csv.register_dialect('myDialect', delimiter = 'I')
with open'c.upyprgvsamplea.csv', 'r') as f:
reader = csv.reader(f, dialect='myDialect')
for row in reader:
print(row)
f.close( )
42.
import csv
csv.register_dialect('myDialect' ,delimiter = ',',skipinitialspace=True)
F=open('c:\\pyprg\\sample2.csv' ,'r')
reader = csv.reader(F, dialect='myDialect')
for row in reader:
print(row)
F.close( )
43.
import csv
csv.register_dialect('myDialect' ,delimiter =',',skipinitialspace=True)
F=open('c:\\pyprg\\sample2.csv' ,'r')
reader = csv.reader(F, dialect='myDialect')
for row in reader:
print(row)
F.close( )
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards