12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
2.
ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக
3.
சுருளினை (Spiral) வரைய படிநிலைகளை எழுதுக.
4.
பலகோணங்களை (Polygon) யை படிநிலைகளை எழுதுக.
5.
கட்டங்களை (Grid) வரைய படிநிலைகளை எழுதுக.
6.
அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.
7.
பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் விரிவாக எழுதவும்.
8.
Tools பலகத்தில் காணப்படும் கருவிகள் சிலவற்றை விவரி.
9.
ஆட்டோகேட் இடைமுகத்தைப் பற்றி விவரி.
10.
ரெக்டாங்கல் பொருளைப் பற்றி எழுதுக. ஆட்டோகேடில் செவ்வகம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.
1.
2.
1. பட்டிப்பட்டையில் இருந்து File → Place ஐ தேர்வு செய்யவும்.
2. Place உரையாடல் பெட்டி தோன்றும்.
3. இருத்தப்பட வேண்டிய உரைக் கோப்பை தேர்வு செய்து Place உரையாடல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள Open பொத்தானைக் கிளிக் செய்யவும்.
4. செருகும் புள்ளி செறிவூட்டப்பட்ட உரை செருகும் புள்ளியாக மாறுகிறது. ஆவணத்தில் உரை செருகுவதற்குத் தயாராக உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.
5. உரையை இருத்துவதற்கு கிளிக் செய்யவும் (அ) புதிய உரைச் சட்டகத்தை உருவாக்குவதற்கு கிளிக் செய்து இழுக்கவும்.
6. உரையை உரைச்சட்டகத்தில் இருத்த முடியவில்லை எனில், ஒரு சிவப்பு + குறியானது. உரைசட்டகத்தின் கீழ் வலது எல்லையில் Overflow குறியீடாகத் தோன்றும்.
7. இந்த Overflow குறியீட்டை கிளிக் செய்தால் மீதமுள்ள உரை செருகும் புள்ளியில், கூடுதல் உரைச் சட்டகத்தில் உரையைச் சேர்ப்பதற்காக ஏற்றப்படுகிறது. உரையானது கிளிக் செய்யும் பொழுது இருத்தப்படும்.
3.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திப் பிடித்தவாறே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள சுருள் (Spiral) கருவியைக் கிளிக் செய்யவும்.
3. நீங்கள் பண்பு பட்டையில் உள்ள சுருள் சுழற்சி, பெட்டியில் எண்ணிக்கையைக் கொடுப்பதன் மூலம் தேவையான வட்டம் உடைய புதிய சுருள் அமைப்பை உருவாக்க முடியும்.
4. பின் பண்பு பட்டையில் கீழ்கண்ட ஏதேனும் ஒரு பொத்தானை கிளிக் செய்யவும்.
i) சமசீர் சுருள் (Symmetrical spiral)
ii). மடக்கை சுருள் (Logarithmic spiral)
5. சுழற்சியை வெளிப் புறமாக நகர்த்தும் போது சுருள் விரிவாக்க அளவுகளை விரும்பினால் spiral expansion slider ஐ நகர்த்தவும்.
6. வரையும் சன்னல் திரையில் நமக்கு வேண்டிய அளவு உள்ள சுருள் வரும் வரை சுட்டியை கிடைமட்டமாக இழுக்கவும்.
4.
1. பலகோண உருவம் வரைய polygon கருவியைக் கருவிப்பட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கவும். சுட்டியின் வடிவம் Crosshair குறியுடன் கீழ்ப்பகுதியில் பலகோணம் கொண்ட குறியாக இருக்கும்.
2. இப்போது வரையும் பகுதியில் எங்கு ஐங்கோணம் வரைய வேண்டுமோ அங்கு சுட்டியின் இடது பொத்தனை அழுத்தி பிடித்தவாறு நகர்த்த வேண்டும்.
3. விரும்பும் வடிவமுடைய பலகோணம் உருவானவுடன் சுட்டியின் பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
4. வரைந்த பலகோணத்தின் பக்கங்களை அதிகரிக்க வரைந்த பலகோணத்தை Pick கருவி மூலம் தேர்ந்தெடுக்கவும்.
5. சுட்டியை பண்பு பட்டையில் உள்ள Number of Points on Polygon உரைப்பெட்டியில் கிளிக் செய்து தேவையான பக்கங்களின் எண்ணிக்கையைக் கொடுக்கவும்.
5.
1. பலகோண (Polygon) கருவியின் மீது அழுத்திக் கொண்டே இருந்தால் flyout பட்டி தோன்றி மேலும் பல கருவிகளைக் காட்டும்.
2. flyout பட்டியில் உள்ள Graph Paper கருவியைக் கிளிக் செய்யவும்.
3. பண்புபட்டையில் உள்ள மேல் மற்றும் கீழ்ப் பகுதியில் நெடுவரிசை மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
4. வரையும் பகுதியில் எங்கு கட்டகம் தோன்ற வேண்டுமோ அங்கு கிளிக் செய்யவும்.
5. சுட்டியை கிடைமட்டமாக இழுப்பதன் மூலம் வேண்டிய கட்டகம் வரைய முடியும்.
6. மையப் புள்ளியிலிருந்து வெளிப்புறமாக கட்டங்கள் வரைய Shift விசையை அழுத்தியவாறு நகர்ந்த வேண்டும். கட்டங்களை சதுர வடிவில் அமைக்க Ctrl விசையை அழுத்தியவாறு நகர்ந்த வேண்டும்.
6.
நம் காலத்தின் மிகப்பெரிய சினிமா படங்களின் பின்னால் சில டிஜிட்டல் அனிமேட்டர்ஸ் உள்ளனர். இன்றைய பாப் கலாச்சார சூழலில் டிஜிட்டல் அனிமேஷன் நடுநாயகமாகத் திகழ்கிறது என்பதற்கு ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பல்வேறு தொழில் துறைகளில் டிஜிட்டல் அனிமேஷன் வேலைகள் சாத்தியமாகும்.
திரைப்படத் துறையில் உள்ள அனிமேஷன் வாய்ப்புகள் : அசைவூட்டல் தொழில், ஆர்வம் மற்றும் ஆக்கப்பூர்வமான விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
அனிமேட்டர்களின் வகைகள் :
1. முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குபவர்கள் (3D Modellers ) : பார்வையாளர்கள் பொருளை நன்றாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், குறிப்பிட்ட பொருளை அனைத்துக் கோணங்களிலிருந்து கணினி மாதிரிகளாக உருவாக்குபவர்கள்.
2. கதாபாத்திர அனிமேட்டர்ஸ் (Character Animators) : ஒரு கதையை சொல்லக் கூடிய கதாபாத்திரங்கள் மற்றும் பொருத்தமான உடல் இயக்கங்களை உருவாக்குபவர்கள்.
3. இயக்க வரைகலை கலைஞர்கள் (Motion Graphics Artists ) : பல்வேறு நிலைகளில் ஆக்கப்பூர்வமான செயல்முறைக்கு பொறுப்பானவர்கள். இயக்கத்தை சித்தரிக்க இரு பரிமாண, முப்பரிமாண அசைவூட்டப் படங்களை உருவாக்குபவர்கள்.
4. நுண் அமைப்பு கலைஞர்கள் (Texture artists) அசைவூட்டம் செய்யப்பட்ட கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்தை (அ) கலை வேலைப்பாட்டைச் சுற்றியுள்ள உடைமைப் பொருட்களுக்கான அமைப்பு, வண்ணம் மற்றும் முப்பரிமாண விளைவுகளை உருவாக்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்.
5. ஒளி கலைஞர்கள் (Lighting Artists) :
காட்சியை உண்மைத்தன்மையுடனும், குறைகளின்றி உருவாக்க, சரியான ஒளி மற்றும் நிழல் விளைவுகளை ஒளி துறையுடன் பணிபுரிபவர்கள்.
6. தந்திரக் கலைஞர்கள் (Rigging Artists) :
1. துல்லியமான மற்றும் விரிவான பார்வை தேவை உள்ளவர்கள்.
2. உருவாக்குதல் சவால்களைத் தீர்ப்பதற்கும், கதாபாத்திரங்களின் இயக்கங்களை சாத்தியமாக்குவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு மாதிரிகளை உருவாக்குபவர்கள் மற்றும் அசைவூட்டக் கலைஞர்களோடு ஒத்திசைவுடன் வேலை செய்பவர்கள்.
7. இயக்கப்பட தொடர் சித்திரக் கலைஞர்கள் (Story board Artist) : கையாலோ கணினி மூலமாகவோ தொடர் / சினிமாக் காட்சிகளை ஒவ்வொரு சட்டங்களாக வரைந்து காட்சிப்படுத்துபவர்கள்.
8. தொகுத்தல் கலைஞர்கள் (Compositing Artists) : பல்லூடகப் பயன்பாட்டில் பின் - உருவாக்குதல் செயல்பாட்டிற்கான முக்கியமானக் கலைஞர்களில் இவர்களும் ஒருவர் ஆவர். திட்டப் பணிக்கு இறுதிச் செயல்பாடுகளை இவர்கள் தருகிறார்கள்.
7.
1. தயாரிப்பு மேலாளர்: பல்லூடக உருவாக்குதலில் குறித்த நேரத்தில் முழு தரத்துடன் பல்லூடகத் திட்ட உருவாக்கத்தை வரையறுப்பது மற்றும் ஒருங்கிணைப்பது.
2. பொருளடக்க வல்லுநர் : ஏற்கனவே திட்டமிட்ட பயன்பாட்டின் பொருளடக்கத்தைப் பற்றி அனைத்து ஆராய்ச்சி செயல்பாடுகளையும் செய்வதற்கு பொறுப்பானவர்.
3. ஸ்கிரிப்ட் எழுத்தாளர் : கருத்துருக்களை முப்பரிமாண சூழல்களில் காட்சிப்படுத்துகிறார், தேவை ஏற்படின் நிரல் மீது மெய்நிகர் உண்மை ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தலாம்.
4. உரை பதிப்பாளர் : உரை எப்பொழுதும் கட்டமைப்பாகவும் சரியான இலக்கணத்தோடும் இருக்க வேண்டும் என்பதற்கு பொறுப்பானவர்.
5. பல்லூடக வடிவமைப்பாளர் : பல்லூடகத்தின் அனைத்து அடிப்படைத் தொகுதிகளைப் படைப்பாக்க மென்பொருளைப் பயன்படுத்தி அசைவூட்டல் போன்றவற்றை ஒருங்கிணைப்பவர்.
6. கணினி வரைகலை கலைஞர் : நிரலின் வரைகலைக் கூறுகளான பின்னணி, புல்லட்கள், பொத்தான்கள், பாடப்பதிப்பாய்வு, 3D பொருள்கள், அசைவூட்டல் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றைக் கையாளும் பங்கினை வகிப்பவர்.
7. ஒலி மற்றும் ஒளிக்காட்சி வல்லுநர்: பதிவு செய்தல். ஒலி விளைவுகளைப் பதிப்பாய்வு செய்தல் மற்றும் இலக்கமாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்.
8. கணினி நிரலர் : பொருத்தமான மொழியில் குறிமுறை (அ) ஸ்கிரிப்ட் வரிகளை எழுதுபவர்.
9. வலை வல்லுநர் : ஒரு இணைய வலைப் பக்கத்தை உருவாக்க, அதை பராமரிப்பது மற்றும் இணைய சேவைகள் பரவலான சமூக அணுகுதலை வழங்குதல்.
8.
1. Selection கருவி (V): ஒரு பொருள் (அ) ஒரு பொருளின் பகுதியாகிய வெளிக்கோடு மற்றும் உட்பரப்பு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது.
2. Sub Selection கருவி ( A) : ஒரு பொருளை தேர்ந்தெடுக்க. இழுக்க, மீள் வடிவமைக்க பயன்படுகிறது.
3. Free Transform sal (F): பொருள்களை சுழற்ற, அளவிட, வளைக்க மற்றும் உருக்குலைக்கப் பயன்படுகிறது.
4. 3D Rotation கருவி (W) : மேடையில் முப்பரிமாண வெளியில் சலனப் படத்துண்டுகளை சுழற்றுவதன் மூலம் முப்பரிமாண விளைவுகளை உருவாக்க பயன்படுகிறது.
5. Lasso கருவி (L) : ஒரு பொருளைச் சுற்றி வரைவதன் மூலம், இது பொருள்களை தேர்ந்தெடுப்பதற்கு (அ) ஒரு பொருளின் பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுகிறது.
6. Pen கருவி (P) : நங்கூரப் புள்ளிகள் எனப்படும். தொடர் புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் கோடுகள் மற்றும் வளைகோடுகளை வரைவதற்கு பயன்படுகிறது.
7. Text கருவி (T) : உரையை உருவாக்க மற்றும் பதிப்பிக்கப் பயன்படுகிறது.
8. Line கருவி (N) : நேர்கோடுகளை வரைவதற்கு பயன்படுகிறது. செங்குத்து, கிடைமட்ட மற்றும் 45° மூலைவிட்ட கோடுகளை வரைவதற்கு Shift விசையை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
9. Rectangle கருவி (R) : செவ்வகம் வரையப் பயன்படுகிறது. Shift விசையை அழுத்திப் பிடிப்பதன் மூலம் சதுரம் வரையலாம்.
10. Oval கருவி (O) : நீள்வட்ட வடிவங்களை வரைவதற்குப் பயன்படுகிறது. Shift விசையைப் பயன்படுத்தி வட்டம் வரையலாம்.
9.
ஆட்டோகேட் 2016 இன் இடைமுகமானது ரிப்பன்களையும், பயன்பாட்டுப் பட்டிகளையும் அடிப்படையாகக் கொண்டது.
இந்த இடைமுகத்தின் முக்கியமான அம்சம் வரைகலைப் பகுதியின் அளவு பெரியதாக இருக்கும்.
1. பயன்பாட்டுப் பட்டி :
(i) சிவப்பு நிறத்தில் உள்ள பயன்பாட்டுப் பொத்தானைக் (A) கிளிக் செய்தால், பயன்பாட்டுப் பட்டி தோன்றும்.
(ii) இந்த பட்டியில் உள்ள கோப்புத் தொடர்புடையக் கட்டளைகள் :
* புதிய கோப்பை உருவாக்குதல்,
* ஏற்கனவே உள்ள கோப்பை திறத்தல்,
* நடப்பு கோப்பை சேமித்தல்,
* நடப்புக் கோப்பை வேறொரு பெயரில்,
* வேறு கோப்புறையில் சேமித்தல்,
* வேறு கோப்பு வடிவத்தில் சேமித்தல்,
* நடப்புக் கோப்பை அச்சிடுதல்.
(iii) பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தேடல் பட்டை இடம்பெற்றிருக்கும்.
(iv) இந்தப் பட்டை கட்டளைகளைத் தேடுவதற்குப் பயன்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு முக்கியச் சொல்லை தட்டச்சு செய்தால், தொடர்புடைய கட்டளைகளின் பட்டியலைக் காட்டும்.
(v) பயன்பாட்டுப் பட்டியில் சமீபத்தில் நாம் பயன்படுத்திய கோப்புகள் இருக்கும்.
2. ரிப்பன் :
ஆட்டோகேட் 2016 சன்னல் திரையின் மேல் பகுதியிலுள்ள தலைப்புப் பட்டைக்கு கீழே உள்ள பகுதி ரிப்பன் ஆகும். இந்த ரிப்பன் இரண்டு பகுதிகளை உடையது.
1. ரிப்பன் தொகுதி
2. ரிப்பன் பேனல்
(i) ரிப்பனின் Home தொகுதியில் Draw. Modify, Annotation, Layers போன்ற பேனல்கள் இருக்கும்.
(ii) Draw, Modify போன்ற சில பேனல்கள் திரையில் காண்பிப்பதை விட அதிக பொத்தான்களைக் கொண்டிருக்கும்.
(iii) மேலும் பல கருவிகளைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேனல்களை விரிவாக்க முடியும்.
(iv) பேனல் தலைப்பின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியை க்ளிக் செய்து பேனலை விரிவாக்க முடியும்.
(v) இது கூடுதல் கருவிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும்.
(vi) ஒரு செயல் செயல்பாட்டில் இருக்கும் பொழுது ESC விசையை அழுத்தினால், அது அக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வரும்.
(vii) ஆட்டோகேடில் முன்னதாகப் பயன்படுத்திய கட்டளையைத் திரும்பவும் பயன்படுத்த வேண்டுமெனில், Command: Prompt இல் நுழைவு விசை (அ) இடைவெளி விசையை அழுத்த வேண்டும்
10.
வடிவமைப்பாளர் பயன்படுத்தும் அடிப்படை வடிவங்களில் ஒன்று செவ்வகம் ஆகும்.
ஆட்டோகேட் 2016 இல் உள்ள RECTANGLE கட்டளை, சரியான கோண அளவுகளுடன் ஒரு செவ்வகத்தை ஒரேப் பொருளாக வரைய வழி வகுக்கிறது.
1. Command - RECTANGLE (அல்லது) REC (நுழைவு விசையை அழுத்தவும்).
2. கட்டளை வரியில் செய்தி தோன்றும்.
RECTANGLE
Specify first corner point or [Chamfer/Elevation/Fillet/Thickness/Width]:
செவ்வகத்தின் முதல் முனை (P1) வரைய வேண்டிய இடத்திற்கு சுட்டுக்குறியை நகர்த்தி சுட்டியின் இடது பொத்தானைக் கிளிக் செய்யவும்.
3. கட்டளை வரியில் செய்தி தோன்றும், Specify other corner point or [Area / Dimensions / Rotation]: செவ்வகத்தின் முதல்முனையிலிருந்து சுட்டியை மூலைவிட்டம் வழியாக நகர்த்தி, மறுமுனையில் (P2) சுட்டியின் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது செவ்வகம் வரையப்பட்டிருக்கும்.
எ.கா:
மூலைவிட்ட புள்ளிகள் (20,30) மற்றும் (150. 160) கொண்ட ஒரு செவ்வகம் வரைதல் Command: RECTANGLE↲
Specify first corner point or [chamfer/Elevation! Fillet Thickness/Width] :20,30↲ .
Specify other corner point of [Area/Dimcnsions/ Rotation]: 150,160↲
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards