12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டம் ________ ஆண்டு
1967
1976
1981
1951
2.
மொத்த நாட்டு உற்பத்தி என்பது .............
GDP
GNP
GNI
ஏதுமில்லை
3.
\(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) x என்ற ஒட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது_______
சாரா மாறி
சார்பு மாறி
தொடர்ச்சி மாறி
மேற்சொன்ன எதுவுமல்ல
4.
சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ______ பெயர்.
உடன் தொடர்புக் கெழு
சரிவு
ஒட்டுறவு
பிழைக் கருத்து
5.
ஒட்டுறவுப் பகுப்பாய்வின் நோக்கம்?
ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினைக் கண்டறிவது
சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது
இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவு கொண்டுள்ள என்பதை தெரிந்து கொள்வதற்கு
சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு மாறியின் மதிப்பினை அளித்தல்
6.
ஒரு சிதறல் விளக்கப்படத்தில் ஒரு மாறி அதிகரித்துச் செல்லும்பொழுது மற்றொரு மாறி குறைந்து சென்றால் உடன் தொடர்புக்கெழுவின் அளவு எவ்வாறாக இருக்கும்?
முழு நேர்மறையாக
முழு எதிர்மறையாக
எதிர்மறையாக
0
7.
8.
புள்ளியியல் எண் விவரங்களைப் பற்றிப் படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?
ஹோராஸ் செக்ரிஸ்ட்
ஆர்.ஏ.ஃபிஷர்
யா-லன்-சூ
போடிங்டன்
9.
10.
சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?
மஹாத்மா காந்தி
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
எஸ்.என்.அகர்வால்
எம்.என்.அகர்வால்
11.
நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்
மேம்பாட்டுத் திட்டம்
மேம்பாடு இல்லாத திட்டம்
முன்னோக்குத் திட்டம்
முன்னோக்கமற்ற திட்டம்
12.
குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு பெயர்.
கட்டுப்படுத்தும் திட்டம்
கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம்
சுழல் திட்டம்
சுழற்சியற்ற திட்டம்
13.
அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சுச் சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன ஏனென்றால்
சேமிப்புக் குறைவாகவோ உள்ளது
முதலீடு குறைவாகவோ உள்ளது
திறன் மிக்க அரசு இல்லை
அ மற்றும் ஆ
14.
பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.
உற்பத்தித் திறன் வளர்ச்சி
பெயரளவு வருமான அதிகரிப்பு
உற்பத்தி அதிகரிப்பு
இவை எதுவுமில்லை
15.
உலக வெப்பமயமாதல் ______ என்றும் குறிப்பிடப்படுகிறது.
சூழலியல் மாறுபாடு
பருவநிலை மாறுபாடு
வளிமண்டல மாறுபாடு
மேற்சொன்ன எதுவுமல்ல
16.
கார்பன் மோனாக்சைட் அதிகமாவதில் பங்களிப்பைச் செய்வது
மோட்டார் வாகனங்கள்
தொழில்செயற்பாடுகள்
நிலையாக எரிபொருள் எரிக்கும் கருவிகள்
மேற்சொன்ன எதுவுமில்லை
17.
சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துக்களில் ஒன்றும், அங்காடி தோல்விக்கு காரணமானதும் ______ ஆகும்.
நேர்மறை புற விளைவுகள்
எதிர்மறை புற விளைவுகள்
இரண்டும்
மேற்சொன்ன எதுவுமல்ல
18.
சுற்றுச்சூழல் பண்டங்கள் என்பவை_____________?
சந்தைப் பொருட்கள்
அங்காடியிடா பண்டங்கள்
இரண்டும்
மேற்சொன்ன எதுவுமல்ல
19.
சூழலியல் என்பது எந்த ஒன்றின் சிறிய பகுதி?
அயனோஸ்பியர்
லித்தோஸ்பியர்
பையொஸ்பியர்
மெஸ்ஸோஸ்பியர்
20.
உயிர்சார்" (biotic) என்ற வார்த்தையின் பொருள் என்ன?
உயிர் வாழ்வன
உயிரற்றவை
பருப்பொருள்
மேற்சொன்ன எதுவுமில்லை
21.
புள்ளியியலின் தந்தை பற்றி சிறு குறிப்பு.
22.
ஒட்டுறவு என்பதனை வரையறு.
23.
புள்ளிவிவர வகைகள் யாவை?
24.
உய்த்துணர்வு புள்ளியியல் என்றால் என்ன?
25.
நிதி ஆயோக் பற்றிக் குறிப்பு வரைக.
26.
பொருளாதாரத் திட்டமிடலின் வரைவிலக்கணம் எழுதுக.
27.
பொருளாதார முன்னேற்றம் - வரையறு.
28.
விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.
29.
தலா (per capita) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
30.
சுற்றுச்சூழல் என்பதன் பொருள் கூறுக.
31.
நிதி ஆயோக்கின் சிறந்த நிர்வாகமான 7 தூண்கள் யாவை?
32.
பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினை காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20.
33.
பல்வகையான உடன் தொடர்புகளைக் கூறி விளக்குக.
34.
புள்ளியியலின் பணிகள் யாவை?
35.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகளை விவரி.
36.
வறுமை நச்சுச் சுழற்சியை எப்படித் தடுப்பது ?
37.
வறுமையின் நச்சுச் சுழற்சிக்கான காரணங்களை வரைபடத்துடன் தெளிவுப்படுத்துக.
38.
இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.
39.
நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?
40.
பல்வகையான காற்று மாசுகளை விளக்குக
41.
பின்வரும் விவரங்களிலிருந்து Y மீது X, X மீது Y ஆகியவற்றினைக் கண்டறிக:
| Y: | 45 | 48 | 50 | 55 | 65 | 70 | 75 | 72 | 80 | 85 |
| X : | 25 | 30 | 35 | 30 | 40 | 50 | 45 | 55 | 60 | 65 |
42.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.
43.
44.
பொருளாதார முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.
45.
நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
46.
47.
மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
1.
(c)
1981
2.
(b)
GNP
3.
(b)
சார்பு மாறி
4.
(b)
சரிவு
5.
(a)
ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினைக் கண்டறிவது
6.
(c)
எதிர்மறையாக
7.
(a)
8.
(d)
போடிங்டன்
9.
(d)
10.
(b)
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
11.
(c)
முன்னோக்குத் திட்டம்
12.
(a)
கட்டுப்படுத்தும் திட்டம்
13.
(d)
அ மற்றும் ஆ
14.
(c)
உற்பத்தி அதிகரிப்பு
15.
(b)
பருவநிலை மாறுபாடு
16.
(a)
மோட்டார் வாகனங்கள்
17.
(b)
எதிர்மறை புற விளைவுகள்
18.
(b)
அங்காடியிடா பண்டங்கள்
19.
(c)
பையொஸ்பியர்
20.
(a)
உயிர் வாழ்வன
21.
முக்கிய புள்ளியியல் பங்களிப்பினை ஆர்ஏஃபிஷர் (1890-1962) உடற்கூறு மரபியல், உளவியல், கல்வியியல், விவசாயம் மற்றும் இதர துறைகளுக்கான பயன்பாட்டினை விரிவாக்கினார். இதனுடன், மதிப்பீட்டுக் கோட்பாடு, மாறுபாட்டுப் பகுப்பாய்வு, வடிவமைப்புச் சோதனைகள் போன்ற புள்ளியியல் பாடங்களின் முதன்மையாளராக இருந்தார். அதனால் அவர் புள்ளியியலின் தந்ைத எனப்படுகிறார்.
22.
ஒரு மாறியின் மதிப்பில் மாற்றம் மற்ற மாறியின் மதிப்பில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே ஒட்டுறவு ஆகும். இங்கு இரு மாறிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
23.
புள்ளி விவரங்கள் இருவகைப்படும். அவை:
1. அளவு விவரங்கள் (Quantitative Data)
2. பண்பு விவரங்கள் (Qualitative Data)
24.
ஒரு முழுத்தொகுப்பின் புள்ளி விவரங்களைப் பற்றி உய்த்துணர்வதற்கு மாதிரி ஆய்வுப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்துதல் உய்த்துணர்வுப் புள்ளி விவரம் எனப்படும்.
25.
National Institution for Transforming India (NITI) என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும்.
இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என புரிந்து கொள்ளலாம்.
இதனை 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-13, திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது. இதன்படி ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
இந்திய பிரதமரே நிதி ஆயோக்கின் தலைவர்.
26.
இராபின்ஸ் கூற்றுப்படி, “பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி, வழங்கல் நடவடிக்கைகளைக் கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்”. (அல்லது) "பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சந்தித்து, இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளே ஆகும்" என்று டால்டன் கூறுகிறார்".
27.
பொருளாதார முன்னேற்றம் என்பது பின்தங்கிய நாடுகளின் சிக்கல்களைக் கொண்டதாகும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் தேவையை அடைய பயன்படுத்தும் வழிமுறையைக் குறிக்கும்.
28.
ஒரு விதை மண்ணால் மூடி வைக்கப்படுகிறது.
அந்த மண் உரம் கலந்த களிமண்ணாகும்.
பின்பு அது உலர்த்தப்பட்டு எங்கு வேண்டுமோ அங்கு அதனை விதைக்கலாம்.
இவ்வாறு செய்யும் போது, அந்த விதை முன்பே நடப்பட்டுவிட்டது என்றே பொருள்.
29.
1. சவுதி அரேபியா
2. ஆஸ்திரேலியா
3. அமெரிக்கா
4. கனடா
5. தென் கொரியா
30.
சுற்றியிருப்பவைகள் என்ற பொருள்படும் "Environ " எனும் பிரெஞ்ச் சொல்லிலிருந்து தோன்றியது சுற்றுச்சூழல்.
சுற்றுச்சூழல் என்பது, நம்மை சுற்றியுள்ள அனைத்து நிலைமைகள், சூழ்நிலைகள், உயிர்கள், அல்லது உயிர் தொகுப்பு ஆகியவைகளை குறிப்பிடுவது ஆகும்.
31.
(i) மக்கள் சார்பு - சமூகம் மற்றும் தனிநபர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்.
(ii) செயல்திறன் சார்பு - குடிமகனுக்கு தேவைப்படும். எதிர்பார்ப்புகள். மற்றும் செயல்திறன்கள்.
(iii) பங்கேற்பு - குடிமகனின் ஈடுபாடு.
(iv) மேம்பாடு - அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், அனைத்தையும் உள்ளடக்கியது,
(v) சமத்துவம் - இளைஞர்களுக்கான வாய்ப்பு.
(vi) வெளிப்படைத்தன்மை அரசாங்கத்தின் பொறுப்பான பார்வை.
32.
உண்மையான சராசரியிலிருந்து திட்டவிலக்கத்தினைக் காணும் முறை
| ப.எண் | மதிப்பு (X) | X-\(\bar { X }\) | \({ (X-\bar { X } ) }^{ 2 }\) |
| 1 | 25 | 25-25=0 | 0 |
| 2 | 15 | 15-25=10 | 100 |
| 3 | 23 | 23-25=-2 | 4 |
| 4 | 42 | 42-25=17 | 289 |
| 5 | 27 | 27-25=2 | 4 |
| 6 | 25 | 25-25=0 | 0 |
| 7 | 23 | 23-25=-2 | 4 |
| 8 | 25 | 25-25=0 | 0 |
| 9 | 20 | 20-25=-5 | 25 |
| N=9 | 225 | 0 | 426 |
\(\begin{aligned}
& \overline{\mathrm{X}}=\frac{225}{9}=25
\end{aligned}\)
\(\begin{aligned}
\sigma=\sqrt{\left(\frac{\sum(\mathrm{x}-\overline{\mathrm{x}})^2}{n}\right)}=\sqrt{\frac{426}{9}}=\sqrt{47.33}=\mathbf{6 . 8 8}
\end{aligned}\)
33.
உடன் தொடர்பின் வகைகள் :
மாறிகளுக்கு இடையேயான உறவின் திசை அடிப்படையில்: மாறிகள் ஒன்றுக்கொன்று நேர்கணியமாகவோ, எதிர்மறையாகவோ உறவு கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் உடன் தொடர்பினை நேர்கணிய உடன்தொடர்பு, எதிர்மறை உடன்தொடர்பு என பாகுபடுத்தப்படுகின்றது.
நேர்கணிய உடன்தொடர்பு : இரு மாறிகளின் மதிப்புகளும் ஒரே திசையில் நகர்ந்து சென்றால் அதனை நேர்கணிய உடன் தொடர்பு என்கிறோம்.
எதிர்மறை உடன்தொடர்பு : இரு மாறிகளின் மதிப்புகள் எதிர் எதிர் திசையில் நகர்ந்து சென்றால் அதனை எதிர்மறை உடன் தொடர்பு என்கிறோம்.
பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மாறிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்:
உடன்தொடர்பு பகுப்பாய்வுக்கு எவ்வளவு எண்ணிக்கையிலான மாறிகளை எடுத்துக் கொள்கிறோம்.
எளிய உடன்தொடர்பு : உடன்தொடர்பு பகுப்பாய்வில் ஒரு நேரத்தில் இரு மாறிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் அதனை எளிய உடன் தொடர்பு என்கிறோம்.
பன்முக உடன்தொடர்பு : உடன்தொடர்பு பகுப்பாய்வில் இரண்டிற்கும் மேற்பட்ட காரணிகளை ஒரு சேர எடுத்துக் கொண்டால் அது பன்முக உடன் தொடர்பு என்கிறோம்.
பகுதி உடன்தொடர்பு : உடன்தொடர்பு பகுப்பாய்வில் இரண்டுக்கு மேற்பட்ட காரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் இரண்டு காரணிகளை மட்டும் (மற்றவை மாறாமல் இருக்கும் என வைத்துக் கொண்டு பகுத்தாய்ந்தால், அதனை பகுதி உடன்தொடர்பு என்கிறோம்.

பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மாறிகளின் மாறும் விகித அடிப்படையில் :
நேர்கோட்டு உடன்தொடர்பு : இரு மாறிகளின் மாறும் விகிதங்கள் ஒரே அளவாக இருந்தால் அதனை நேர்கோட்டு உடன்தொடர்பு என்கிறோம்.
வளைகோட்டு உடன்தொடர்பு : இரு மாறிகளின் மாறும் விகிதங்கள் ஒரே அளவாக இல்லாமல் குறைந்து வந்தாலோ, அல்லது அதிகரித்து வந்தாலோ அதனை வளைகோட்டு உடன்தொடர்பு என்கிறோம்.
34.
புள்ளியியலின் பணிகள்:
1. புள்ளியியல் விவரங்களை துல்லியமான வடிவில் வழங்குகிறது.
2. இது பரந்த விவரங்களை சுருக்கித் தருகிறது.
3. இது ஒப்பீடுகளைச் செய்ய உதவுகிறது.
4. இது எடுகோள்களை உருவாக்கவும், சோதனைக்கு உட்படுத்தவும் உதவுகிறது.
5. இது மதிப்புகளைச் செய்ய உதவுகிறது.
6. கொள்கைகளை உருவாக்குவதில் இது உதவுகிறது.
35.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகள் :
நாட்டின் அங்காடிகளின் இயக்கத்தை முடுக்கி விடுதலும் உறுதியாக்குதலும் : பின்தங்கிய நாடுகளில் அங்காடி சக்திகள் சரிவர இயங்காததற்கு அறியாமையும், பிரபலமும் இல்லாததே காரணம் ஆகும். எனவே, திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
வேலையின்மையை அகற்றுதல் : மூலதனக் குறைவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஏற்படுவதால் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசுகளுக்கு அறை கூவலாக உள்ளது. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மையையும் மறைமுக வேலையின்மையையும் அகற்றத் திட்டமிடுதல் அவசியமாகும்.
சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்: பொருளாதாரத்தின் பல துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான பெரிய நிறுவனங்கள் இல்லாத சூழ்நிலையில் திட்டக்குழுவே சரிசம முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். பின்தங்கிய நாடுகளில் வேளாண்மை, தொழில், சமூகக் கட்டமைப்பு, உள்நாட்டு வாணிகம் பன்னாட்டு வாணிகம் ஆகியத் துறைகளின் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெறத் தேவைப்படுகிறது.
திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும் : திட்டமிடல் என்பது மட்டுமே பின்தங்கிய நாடுகள், நாட்டு வருமானம், தலா வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையையும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
36.
வறுமையின் நச்சுச் சுழற்சியைத் தடுத்தல் :
1. அளிப்புப் பக்கத்தில் வறுமையின் நச்சுச் சுழற்சி குறைவான சேமிப்பு மற்றும் குறைவான முதலீட்டினால் இயங்கத் துவங்குகிறது.
2. ஆகவே பின்தங்கிய நாடுகளில் முதலீட்டையும், மூலதன ஆக்கத்தையும் அதிகரிக்கும் போது நுகர்வு அளவு குறையாமல் இருக்க வேண்டும்
3. மேலும் கடந்த கால சராசரி சேமிப்பு விகிதத்தைவிட இறுதிநிலை சேமிப்பு அளவை அதிகரிக்கச் செய்யவேண்டும்.
4. தேவைப் பக்கத்தில் வறுமை நச்சுச் சுழற்சியை உடைத்தெறிய, நர்க்ஸ் சரிசம வளர்ச்சி உத்தியைப் பரிந்துரைக்கிறார்.
5. ஒவ்வொரு தொழிலிலும் வேலை கிடைத்த தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை வேறு தொழிலிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது சரிநிகர் சமமான முன்னேற்றம் நடைபெறும் என நர்க்ஸ் கூறுகிறார்.
6. எனவே அனைத்துத் தொழில்களின் சரிநிகர் சமமான வளர்ச்சியின் மூலம் தேவையின் பக்கத்தில் இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியைத் தடுக்க முடியும்.
37.
வறுமையின் நச்சுச் சுழற்சி: நச்சுச் சுழலானது ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று ஏழைநாடுகளை தொடர்ந்து வறுமை நிலையிலேயே வைத்திருக்கும் விதத்தில் செயல்படுவதைக் குறிப்பாக ராக்னார் நர்க்ஸ் கூறுகிறார்.
வறுமையின் நச்சுச் சுழற்சி தேவைப் பக்கத்திலிருந்தும் அளிப்பின் பக்கத்திலிருந்தும் செயல்படுகிறது.
அளிப்பின் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக சேமிப்பு அளவு குறைகிறது. இது முதலீட்டு அளவைக் குறையச் செய்து மூலதனப் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இதனால் உற்பத்தித் திறன் குறைந்து வருமானமும் குறைகிறது. இவ்வாறு அளிப்புப் பக்கத்தில் வறுமை நச்சுச் சுழற்சி செயல்படுகிறது.
தேவைப் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக தேவையும் குறைவாக இருக்கும்.
இது முதலீட்டைக் குறைக்கச் செய்யும், இதனால் மூலதன பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி குறைந்து வருமானத்தை குறைக்கும்.

38.
செய்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் E-கழிவுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுகின்றன.
இவை குளிர்சாதனப் பெட்டிகள், காற்றுச் சீரமைப்பிகள், (Air conditioners), கைபேசிகள், கணினிகள் முதலான பெருமளவில் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தும் மின்னணுச் சாதனங்களை உள்ளடக்கியவையாகும்.
தொலைக்காட்சி, கணினிகள், கேட்கும் கருவிகள், தொலைபேசி, VCR, DVD, தொலைநகல், நகலெடுக்கும் இயந்திரங்கள், கம்பியில்லா கருவிகள் முதலான வீட்டு பயன்பாட்டு பொருட்களை கழிக்கும் போதோ அல்லது மறுசுழற்சி செய்யும் போதோ E-கழிவுகள் தோன்றும்.
39.
கழிவு நீரும் தேவையற்ற நீரும் வெளியேற்றப்படுதல்:
பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், வேளாண்மைக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றன.
இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப் பண்டங்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றன.
திடக் கழிவுகள் குவித்தல் : திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
எண்ணெய் சிந்துதல் : கப்பல்களில் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களின் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துகின்றது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமில மழை : காற்று மாசுவால் அமில மழை ஏற்பட்டு நீர் மாசு ஏற்படுத்துகின்றது. காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
புவி வெப்பமடைதல் : புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்பநிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
40.
உட்புறக் காற்று மாசு : மனிதர்களின் வாழிடத்திற்குள் தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுகள், காற்றில் கலந்திருப்பதை உட்புற காற்று மாசு என்கிறோம். எ.கா. திட எரிபொருட்களைக் கொண்டு சமையல் செய்கின்றபோது உட்புறக் காற்று மாசு அடைகின்றது.
வெளிப்புறக் காற்று மாசு : காற்று மண்டலத்தில் திட, திரவ, அல்லது காற்று வடிவ மாசுகள் கலந்திருப்பதே வெளிப்புற காற்று மாசு எனப்படுகிறது. தொழிற்சாலைகளாலும், மோட்டார் ஊர்திகளாலும் வெளிப்புறக் காற்று மாசு அடைகின்றது.
41.
| X | Y | dx = X - 45 | dy = Y - 65 | dx2 | dy2 | dxdy |
| 25 | 45 | -20 | -20 | 400 | 400 | 400 |
| 30 | 48 | -15 | -17 | 225 | 289 | 255 |
| 35 | 50 | -10 | -15 | 100 | 225 | 150 |
| 30 | 55 | -15 | -10 | 225 | 100 | 150 |
| 40 | 65 | -5 | 0 | 25 | 0 | 0 |
| 50 | 70 | 5 | 5 | 25 | 25 | 25 |
| 45 | 75 | 0 | 10 | 0 | 100 | 0 |
| 55 | 72 | 10 | 7 | 100 | 49 | 70 |
| 60 | 80 | 15 | 15 | 225 | 225 | 225 |
| 65 | 85 | 20 | 20 | 400 | 400 | 400 |
| \(\sum\)X = 435 | \(\sum\)Y = 645 | \(\sum\)dx = (X - A) =-15 |
\(\sum\)dy = (Y - B) = -5 |
\(\sum\)dx2 = 1725 | \(\sum\)dy2 = 1813 | \(\sum\)dx dy = 1675 |

\(\sum\)dx = -15, \(\sum\)dy = -5, \(\sum\)dx2 = 1725, \(\sum\)dy2 = 1813, \(\sum\)dx dy = 1675
\(\begin{aligned}
b_{x y}=\frac{\mathrm{N} \sum \mathrm{d}_x \mathrm{~d}_y-\left(\sum \mathrm{d}_x\right)\left(\sum \mathrm{d}_y\right)}{\mathrm{N} \sum d_y{ }^2-\left(\sum d_y\right)^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{(10)(1675)-(-15)(-5)}{(10)(1813)-(-5)^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{16750-75}{18130-25}
\end{aligned}\)

\(\begin{aligned}
=\frac{3335}{3621}=0.92
\end{aligned}\)
\(\begin{aligned}
b_{y x}=\frac{\mathrm{N} \sum \mathrm{d}_x \mathrm{~d}_y-\left(\sum \mathrm{d}_x\right)\left(\sum \mathrm{d}_y\right)}{\mathrm{N} \sum d_x^2-\left(\sum d_x\right)^2}
\end{aligned}\)
\(\begin{aligned}
=\frac{(10)(1675)-(-15)(-5)}{(10)(1725)-(-15)^2}=
\end{aligned}\)\(\frac{16675}{17250-225}\)\(=\frac{16675}{17025}=0.98\)
X on Y
X - \(\overline{X}\) = bxy(Y - \(\overline{Y}\))
X - 43.5 = 0.92 (Y - 64.5)
X - 43.5 = 0.92Y - 59.34
X = 0.92Y - 59.34 + 43.5
X = 0.92Y - 15.84
Y on X
Y - \(\overline{Y}\) = byx(X - \(\overline{X}\))
Y - \(\overline{Y}\)= byx(X - \(\overline{X}\))
Y - 64.5 = 0.98 (X - 43.5)
Y - 64.5 = 0.98 (X - 43.5)
Y = 0.98 X - 42.63 + 64.5
Y = 0.98X + 21.87
42.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள் :
அங்காடி இயங்காமல் தோல்வியடைந்ததால் அரசு திட்டமிடல் மூலம் தலையிடும் அவசியம் உருவானது.
திட்டமிடலுக்கு எதிராக வாதங்களையும் குறைகளையும் புரிந்து கொள்வோம்.
தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை :
தன் விருப்பம் போல் செயல்பட இயலாததால் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.
திட்டமிடல் கட்டுப்பாடுகளையும் வழி முறை களையும் விதித்து நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது.
தலையிடாப் பொருளாதாரத்தில் நுகர்வு, பணியைத் தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல், விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் தன் விருப்பம்போல் முடிவெடுக்க அனுமதி உள்ளது.
தன் முனைப்புக் குறைதல் :
மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்துதல், புதுமைகளைப் புகுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமிருக்காது.
தனியார் உரிமை இல்லாதது, இலாப நோக்கைக் குறைத்து தொழில் முனைவோர் திறம்பட முடிவு எடுப்பதையும், இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது.
திட்டமிடல் பொருளாதாரத்தில் அனைவருக்கும் அவர்களது முயற்சி, திறமை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் போக்குத் திட்டமிடலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.
அதிகமான நிர்வாகச் செலவு:
திட்டமிடலின் நோக்கமெனனவோ தொழில் மயமாக்கல், சமூகநீதி, நாட்டு நிலைமையைச் சமப்படுத்துதல் ஆகியன உயர்வானவை. ஆனால் அதற்கு நாடு செலவிடும் தொகை அடையவுள்ள பலனைவிட அதிகமாக இருக்கும்.
சரியான புள்ளிவிவரம் இல்லாமை, தவறாக கணிப்பது, திட்டமிடுதலை சரிவர செயல்படுத்துவது ஆகியவை வளங்களை வீணடித்து உபரி அல்லது பற்றாக்குறை நிலைக்குக் கொண்டு செல்லும்.
முன்கணிப்பதில் உள்ள சிரமங்கள் :
அரசு தடையில்லாத நாட்டில், விலை இயக்க முறையில், விலை, தேவை மற்றும் அளிப்பு ஆகியவை தானாக இயங்கி ஒன்றையொன்று சரி செய்து கொள்கின்றன.
திட்டமிடல் நாடுகளில் இப்படி ஒரு வசதி இல்லை. நுகர்வும் உற்பத்தி அளவுகளைத் துல்லியமாக முன்கூட்டியே நிர்ணயிப்பது கடினம்.
நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக, சமத்துவத்தையும் திட்டமிடுதல் மூலம் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
43.
44.
பொருளாதாரம் சார்ந்த காரணிகள் :
இயற்கை வளங்கள் : ஒரு நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களின் அளவு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். முன்னேற்றத்திற்கு தேவைப்படும் அளவுக்கு ஒரு நாடு இயற்கை வளங்களை பெற்றிருக்க வேண்டும்.
மூலதன உருவாக்கம் : மூலதனம் பொருளாதாரத்தின் அனைத்துச் செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனமே, மூலதன உருவாக்கம் என்பர்.
சந்தையின் அளவு : சந்தை அளவானது பெரிய அளவில் இருந்தால் கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு, தலா வருமானம் உயர்வு ஆகியவற்றைத் தூண்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
கட்டமைப்பு மாற்றம் : கட்டமைப்பு மாற்றம் என்பது பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும்.
விற்பனைக்குரிய உபரி : வேளாண் துறையில் குடும்பத்திற்கான நுகர்வுத் தேவையை விட கூடுதலாக செய்யப்படும் உற்பத்தியை விற்பனைக்குரிய உபரி என்கிறோம்.
பன்னாட்டு வாணிகம் : பன்னாட்டு வாணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருந்தால் ஒரு நாடு போதுமான அளவு அயல் நாட்டுச் செலவாணியைக் கையிருப்பில் வைக்க முடியும்.
பொருளாதார அமைப்பு முறை : ஒரு நாடு தடையில்லா பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தால் கட்டளைப் பொருளாதாரத்தைவிட வேகமான வளர்ச்சி பெறும்.
45.
இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்து விட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
மேல்தட்டு மக்களின் ஆடம்பர விருப்பங்கள் மட்டுமல்லாது ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளான, உணவு, துப்புரவு, உடல்நலம், கல்வி முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
நீடித்த நிலையான மேம்பாட்டின் நோக்கங்கள்
1. எல்லா வடிவங்களிலும் எல்லா இடத்திலும் வறுமையை ஒழித்தல்.
2. அனைத்து வயதினரின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்.
3. எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
4. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
5. குடிநீரும், துப்புரவும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
6. தூய்மையான, நீடித்த, நிலையான, எளிதில் பெறக்கூடிய, சக்தியினை அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
7. தேவையான கட்டமைப்புகளை வழங்குதல், தொழில்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
8. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள சமமின்மையை அகற்றுதல்.
9. பாதுகாப்பான, அமைதியான யாவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்
10. நீடித்த நிலையான உற்பத்தியையும் நுகர்வினையும் உறுதிப்படுத்துதல்.
46.

47.
சுற்றுச்சூழல் தரம் என்பது சுற்றுச்சூழல் பண்புகளின் தொகுப்பாகும்.
இன்னும் தெளிவாகக் கூறுவது என்றால் அப்பண்புகள் ஒவ்வொன்றின் அளவும் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற தொகுப்பின் குறியீட்டு எண் ஆகும்.
இத்தரம் பொதுவாகவும் நிர்ணயிக்கப்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கான சூழ்நிலையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படலாம்.
மனிதன் மீதும் இதர உயிரினங்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதால் சுற்றுசூழல் தரம் (நிர்ணயம்) என்பது மிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டிய ஒன்றாகிறது.

முதலாளித்துவ செயல்முறைகளினால் சுற்றுச்சூழல் தரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது.
சுற்றுச்சூழல் என்பது ஒரு பொதுப் பொருளாகும். இப்பொருள் அனைவராலும் நுகரப்படும்.
எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அதைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்க முடியாது. ஒருவர் அப்பொருளைப் பயன்படுத்துவதால், மற்றவர்களுக்குக் கிடைக்கும் அளவு குறைந்து போகாது.
மேலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான இறுதி நிலைச் செலவு கிட்டத்தட்ட சுழியம் ஆகும். இத்தகைய வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
இயற்கை வளங்களின் குறைவும் தேசிய வருமானத்தில் இயற்கை வளங்களின் பங்களிப்பும் தற்பொழுதுள்ள தேசிய வருவாய் கணக்கீட்டில் அளவிடப்படுவதில்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards