12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
உடன் தொடர்பு என்பதனை வரையறு.
2.
புள்ளியியலின் வகைகள் யாவை?
3.
புள்ளியியல் என்றால் என்ன?
4.
நிதி ஆயோக் பற்றிக் குறிப்பு வரைக.
5.
பொருளாதார முன்னேற்றத்தின் சமூகக் குறியீடுகளைப் பட்டியலிடுக.
6.
பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக.
7.
பொருளாதார முன்னேற்றம் - வரையறு.
8.
இந்தியாவில் புள்ளியியல் ஆதார அமைப்புகளின் முக்கியத்துவத்தை விவாதி.
9.
10.
புள்ளியியலின் பணிகள் யாவை?
11.
நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?
12.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகளை விவரி.
13.
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் யாவை?
14.
வறுமையின் நச்சுச் சுழற்சிக்கான காரணங்களை வரைபடத்துடன் தெளிவுப்படுத்துக.
15.
பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்சனின் உடன்தொடர்புக் கெழுவினைக் கண்டறிக.
| தேவை X | 23 | 27 | 28 | 29 | 30 | 31 | 33 | 35 | 36 | 39 |
| விற்பனை Y | 18 | 22 | 23 | 24 | 25 | 26 | 28 | 29 | 30 | 32 |
16.
புள்ளியியலின் இயல்பு, எல்லைகளை விளக்குக.
17.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.
18.
19.
பொருளாதார முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.
1.
உடன் தொடர்புப் பகுப்பாய்வு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு மாறுகின்றன என்பதைப் பற்றி கணக்கிடுவது ஆகும் என்று சர்ஃபிரான்சிஸ் கால்டன் கூறுகிறார்.
2.
1. விவரிப்பு புள்ளியியல்
2. உய்த்துணர்வு புள்ளியியல்
3.
புள்ளியியல் என்பது மதிப்பீடுகளையும் நிகழ்தகவுகளையும் பற்றிய அறிவியலாகும்.
(அல்லது)
புள்ளியியல் என்பது எண்ணியலான விவரங்களைத் திரட்டி, ஒருங்கிணைந்து வழங்கி, பகுத்தாய்ந்து விவரிப்பது ஆகும்.
4.
National Institution for Transforming India (NITI) என்பதன் சுருக்கமே நிதி ஆயோக் என்பதாகும்.
இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என புரிந்து கொள்ளலாம்.
இதனை 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-13, திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை இந்திய அரசு எடுத்தது. இதன்படி ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
இந்திய பிரதமரே நிதி ஆயோக்கின் தலைவர்.
5.
மக்களின் அடிப்படை தேவைகளையும் கூட்டுத் தேவையையும் நிறைவு செய்வதை சமூகக் குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் நலவாழ்வு, கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு, வீட்டு வசதி ஆகியவையாகும். இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.
6.
| பொருளாதார வளர்ச்சி | பொருளாதார முன்னேற்றம் | |
| 1 | வளர்ந்த நாடுகளின் பொருளாதாரச் சிக்கல்களைக் கையாளுகிறது | வளரும் நாடுகளின் சிக்கல்களைக் கையாளுகிறது. |
| 2 | அதிக அளவான உற்பத்தியைக் குறிக்கிறது. | உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் உற்பத்தியாகும் பொருட்களின் வகைகளும் மாறுகிறது. |
| 3. | குறுகிய எல்லையுடையது | விரிவான பொருள் கொண்ட சொல் முன்னேற்றம் = வளர்ச்சி + மாற்றம் |
7.
பொருளாதார முன்னேற்றம் என்பது பின்தங்கிய நாடுகளின் சிக்கல்களைக் கொண்டதாகும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் தேவையை அடைய பயன்படுத்தும் வழிமுறையைக் குறிக்கும்.
8.
நடுவண் புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office, CSO) :
நாடு முழுவதிலும் நடைபெறும் புள்ளிவிவர சேகரிப்புகளை ஒருங்கிணைப்பதும் அவற்றினைப் பரிசோதிப்பதும், தரமேம்பாட்டினை உறுதிப்படுத்துவதும் ஆகும்.
மேலும், மற்ற சமுதாயப் புள்ளி விவரங்களை சேகரிப்பது, பயிற்சி, பன்னாட்டு ஒத்துழைப்பை பேணுதல், தொழில் பிரிவுகளை நிர்ணயித்தல் ஆகிய பணிகளையும் இது செய்கிறது.
தேசிய மாதிரி கூறெடுத்தல் அலுவலகம் (National Sample Survey Office, NSSO) :
தேசிய மாதிரி கூறெடுத்தல் கழகம் தற்பொழுது, தேசிய மாதிரி கூறெடுத்தல் அலுவலகம் என அழைக்கப்படுகிறது.
இது இந்திய புள்ளியியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.
இது புள்ளியியல் பணியைப் பொருத்த வரை மிகப் பெரிய அமைப்பாகும்.
இது 1950ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சமூக பொருளாதார புள்ளிவிவர விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதில் நான்கு பிரிவுகள் உள்ளன.
1. விசாரணை வடிவமைத்தல், ஆய்வுத் துறை.
2. களப்பணித் துறை.
3. புள்ளிவிவர செயலாக்கத் துறை.
4. ஒருங்கிணைப்பு மற்றும் வெளியீட்டுத் துறை.
திட்ட அமலாக்கத் துறையின் கீழ் மூன்று அமைப்புகள் உள்ளன.
1. 20 அம்ச திட்டம், உள்கட்டமைப்புக் கண்காணிப்பும் திட்டக் கண்காணிப்பும்.
2. பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம். இதைத்தவிர, இந்திய அரசின் தீர்மானத்தின்படி தேசிய புள்ளியியல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிறகு, தன்னாட்சி பெற்ற, நாடாளுமன்ற சட்டத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட இந்திய புள்ளியியல் நிறுவனமும் இருக்கின்றது.
9.

10.
புள்ளியியலின் பணிகள்:
1. புள்ளியியல் விவரங்களை துல்லியமான வடிவில் வழங்குகிறது.
2. இது பரந்த விவரங்களை சுருக்கித் தருகிறது.
3. இது ஒப்பீடுகளைச் செய்ய உதவுகிறது.
4. இது எடுகோள்களை உருவாக்கவும், சோதனைக்கு உட்படுத்தவும் உதவுகிறது.
5. இது மதிப்புகளைச் செய்ய உதவுகிறது.
6. கொள்கைகளை உருவாக்குவதில் இது உதவுகிறது.
11.
1. கூட்டுறவும் போட்டி அடிப்படையிலான கூட்டாட்சியும்
2. நாட்டின் நிகழ்வுகளின் மாநிலங்களைப் பங்கெடுக்க வைத்தல்
3. பரவலாக்கப்பட்டத் திட்டமிடல்
4. தொலைநோக்கும், காட்சித் திட்டமிடலும்
5. நிபுணர்களின் கூட்டமைப்பை உருவாக்குதல்
6. உகந்ததாக்குதல்
7. சச்சரவுத் தீர்த்தல்
8. வெளியுலகத் தொடர்பை ஒருங்கிணைத்தல்
9. உள்நாட்டு ஆலோசனை வழங்குதல்
10. திறன் உருவாக்குதல்
11. கண்காணித்தலும் மதிப்பிடுதலும்
12.
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துகள் :
நாட்டின் அங்காடிகளின் இயக்கத்தை முடுக்கி விடுதலும் உறுதியாக்குதலும் : பின்தங்கிய நாடுகளில் அங்காடி சக்திகள் சரிவர இயங்காததற்கு அறியாமையும், பிரபலமும் இல்லாததே காரணம் ஆகும். எனவே, திட்டமிட்ட பொருளாதாரமே அங்காடிப் பொருளாதாரத்திற்கு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
வேலையின்மையை அகற்றுதல் : மூலதனக் குறைவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் ஏற்படுவதால் அதிகரித்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசுகளுக்கு அறை கூவலாக உள்ளது. பின்தங்கிய நாடுகளில் வேலையின்மையையும் மறைமுக வேலையின்மையையும் அகற்றத் திட்டமிடுதல் அவசியமாகும்.
சமமான முன்னேற்றம் ஏற்படுத்துதல்: பொருளாதாரத்தின் பல துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான பெரிய நிறுவனங்கள் இல்லாத சூழ்நிலையில் திட்டக்குழுவே சரிசம முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். பின்தங்கிய நாடுகளில் வேளாண்மை, தொழில், சமூகக் கட்டமைப்பு, உள்நாட்டு வாணிகம் பன்னாட்டு வாணிகம் ஆகியத் துறைகளின் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் விரைவாக நடைபெறத் தேவைப்படுகிறது.
திட்டமிடல் வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்கும் : திட்டமிடல் என்பது மட்டுமே பின்தங்கிய நாடுகள், நாட்டு வருமானம், தலா வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையையும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
13.
பொருளாதாரம் சாராத காரணிகள்:
1. மனித வளம்
2. தொழில்நுட்ப அறிவு
3. அரசியல் சுதந்திரம்
4. சமூக அமைப்பு
5. ஊழலற்ற நிர்வாகம்
6. முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம்
7. நீதி போதனை, அறநெறியும் சமூக விழுமியங்களும்
சூதாட்ட முதலாளித்துவம்
8. பரம்பரைச் சொத்துரிமை முதலாளித்துவம்
14.
வறுமையின் நச்சுச் சுழற்சி: நச்சுச் சுழலானது ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று ஏழைநாடுகளை தொடர்ந்து வறுமை நிலையிலேயே வைத்திருக்கும் விதத்தில் செயல்படுவதைக் குறிப்பாக ராக்னார் நர்க்ஸ் கூறுகிறார்.
வறுமையின் நச்சுச் சுழற்சி தேவைப் பக்கத்திலிருந்தும் அளிப்பின் பக்கத்திலிருந்தும் செயல்படுகிறது.
அளிப்பின் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக சேமிப்பு அளவு குறைகிறது. இது முதலீட்டு அளவைக் குறையச் செய்து மூலதனப் பற்றாக்குறையை உருவாக்குகிறது. இதனால் உற்பத்தித் திறன் குறைந்து வருமானமும் குறைகிறது. இவ்வாறு அளிப்புப் பக்கத்தில் வறுமை நச்சுச் சுழற்சி செயல்படுகிறது.
தேவைப் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக தேவையும் குறைவாக இருக்கும்.
இது முதலீட்டைக் குறைக்கச் செய்யும், இதனால் மூலதன பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி குறைந்து வருமானத்தை குறைக்கும்.

15.
| வ.எண் | தேவை X | விற்பனை Y | dx (A = 31 X - A X - 31 |
dy (B = 26) Y - B (Y - 26) |
dx2 | dy2 | dxdy |
| 1 | 23 | 18 | -8 | -8 | 64 | 64 | 64 |
| 2 | 27 | 22 | -4 | -4 | 16 | 16 | 16 |
| 3 | 28 | 23 | -3 | -3 | 9 | 9 | 9 |
| 4 | 29 | 24 | -2 | -2 | 4 | 4 | 4 |
| 5 | 30 | 25 | -1 | -1 | 1 | 1 | 1 |
| 6 | 31 | 26 | 0 | 0 | 0 | 0 | 0 |
| 7 | 33 | 28 | 2 | 2 | 4 | 4 | 4 |
| 8 | 35 | 29 | 4 | 3 | 16 | 9 | 12 |
| 9 | 36 | 30 | 5 | 4 | 25 | 16 | 20 |
| 10 | 39 | 32 | 8 | 6 | 64 | 36 | 48 |
| \(\sum\)X = 311 | \(\sum\)Y = 257 | \(\sum\)(X - A) = 1 | \(\sum\)(Y-B) = -3 | \(\sum\)dx2 = 203 | \(\sum\)dy2 = 159 | \(\sum\) dxdy = 178 |
\(\begin{aligned} \bar{X}=\frac{\sum X}{N}=\frac{311}{10}=31 \frac{1}{10} \quad, \quad \mathrm{~A}=31 \quad \mathrm{X}-\mathrm{A} \Rightarrow 31 \end{aligned}\)
\(\begin{aligned} \overline{\mathrm{Y}}=\frac{\sum \mathrm{Y}}{\mathrm{N}}=\frac{257}{10}=25 \frac{7}{10} \cdot \mathrm{B}=26 \quad \mathrm{Y}-\mathrm{B} \Rightarrow 26 \end{aligned}\)
\(\begin{aligned} \mathrm{~N}=10, \quad \Sigma \mathrm{X}=311, \quad \Sigma \mathrm{Y}=257 \end{aligned}\)
\(\begin{aligned} \Sigma \mathrm{d} x=(\Sigma \mathrm{X}-\mathrm{A})=1, \quad \Sigma \mathrm{d} y=(\Sigma \mathrm{Y}-\mathrm{B})=-3, \quad \Sigma \mathrm{d} x^2=203 \end{aligned}\)
\(\begin{aligned} \Sigma \mathrm{d} y^2=159, \quad \Sigma \mathrm{d} x \mathrm{~d} y=178 \end{aligned}\)
\(\begin{aligned} r=\sqrt{\frac{N \sum d x d y-\left(\sum d x\right)\left(\sum d y\right)}{\sqrt{N \sum d x^2-\left(\sum d x\right)^2} \sqrt{N \sum d y^2-\left(\sum d y\right)^2}}} \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{10 \times 178-(1)(-3)}{\sqrt{10 \times 203-(1)^2} \sqrt{10 \times 159-(-3)^2}} \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{1780+3}{\sqrt{2030-1} \sqrt{1590-9}} \end{aligned}\)
\(=\frac{1783}{\sqrt{2029}\sqrt{1581}}\)
\(=\frac{1783}{(45.044)(39.761)}=\frac{1783}{1790.94}\)
\(\therefore\) r = 0.9955
16.
புள்ளியியலின் இயல்புகள்:
1. புள்ளியியலில் அறிவியல், கலையியல் ஆகிய இரண்டின் தன்மைகளும் கலந்திருக்கின்றன.
2. முறைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுப்பினை அறிவியலாக காண்கின்றோம்.
3. புள்ளியியல் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும்.
4. இது விவரங்களைப் பகுத்தாய்ந்து, அதன் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை சோதனை செய்து துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.
5. புள்ளி விவரங்களை திரட்டுவது, அட்டவணையிடுவது. முடிவுகளை எடுப்பது. தீர்மானங்களைச் செய்வது என பல புள்ளிவிவர நடவடிக்கைகளில் கலையியலின் உட்கூறுகள் கலந்துள்ளன.
புள்ளியியலின் பரப்பு:
1. புள்ளியியல் பரப்பு மிகவும் விரிந்ததாகும்.
2. புள்ளியியல் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை காண்போம்.
பொருளியலில் புள்ளியியல் :
1. பொருளியியலில் பல சிக்கல்கள் உள்ளன.
2. எடுத்துக்காட்டாக, உற்பத்தி, வருமானம், செலவு, பகிர்வு, சேமிப்பு போன்றவையாகும்.
3. விவரங்களைத் திரட்டுவது, வகைப்படுத்துவது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது என புள்ளியியல் பொருளியலில் இரண்டறக் கலந்துள்ளது.
தொழிலில் புள்ளியியல் : தொழிற்சாலைகளில் புள்ளியலின் பயன்கள் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளன. மிக முக்கியமாக தரக்கட்டுப்பாட்டு நுட்பம் (Quality Control) இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
புள்ளியிலும் வாணிகமும் :
1. வாணிகத்திற்கு புள்ளியியல் முக்கியமானதாகும்.
2. நடப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலப் போக்கினை உணர்ந்து கொள்ளவும் சந்தை ஆய்வுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
புள்ளியியலும், கல்வியியலும் :
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய கல்விக்கான தேவையைக் கண்டறிவதில் புள்ளியியல் மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது.
புள்ளியியலும் திட்டமிடலும் :
1. அனைத்து அரசுத் துறைகளும் சிறப்பாக இயங்கும் பொருட்டு திட்டமிடலின் அடிப்படையிலே செயல்படுகின்றன.
2. திட்டமிடுதலில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் புள்ளிவிவரங்கள் துணை செய்கின்றன.
புள்ளியியலும், மருத்துவமும் :
1. மருத்துவத்தில் புள்ளியியல் பெருமளவுக்குப் பயன்படுகின்றது.
உடல் சோதனைகள் அனைத்தும் புள்ளி விவரங்களாகத் தொகுக்கப்படுகின்றன.
2. மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்திலும் புள்ளியியலின் பல்வேறு பகுதிகள் பயன்படுகிறது.
புள்ளியியலும் நவீன பயன்பாடுகளும்:
புள்ளியியல், நிறுவனங்களின் முடிவெடுத்தலில் புதிய மாதிரிகளை உருவாக்கி துல்லியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இப்பணியினைச் செய்வதற்குப் பல புதிய மென் பொருட்களை உருவாக்கியுள்ளனர்.
17.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள் :
அங்காடி இயங்காமல் தோல்வியடைந்ததால் அரசு திட்டமிடல் மூலம் தலையிடும் அவசியம் உருவானது.
திட்டமிடலுக்கு எதிராக வாதங்களையும் குறைகளையும் புரிந்து கொள்வோம்.
தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை :
தன் விருப்பம் போல் செயல்பட இயலாததால் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.
திட்டமிடல் கட்டுப்பாடுகளையும் வழி முறை களையும் விதித்து நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது.
தலையிடாப் பொருளாதாரத்தில் நுகர்வு, பணியைத் தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல், விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் தன் விருப்பம்போல் முடிவெடுக்க அனுமதி உள்ளது.
தன் முனைப்புக் குறைதல் :
மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்துதல், புதுமைகளைப் புகுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமிருக்காது.
தனியார் உரிமை இல்லாதது, இலாப நோக்கைக் குறைத்து தொழில் முனைவோர் திறம்பட முடிவு எடுப்பதையும், இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது.
திட்டமிடல் பொருளாதாரத்தில் அனைவருக்கும் அவர்களது முயற்சி, திறமை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் போக்குத் திட்டமிடலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.
அதிகமான நிர்வாகச் செலவு:
திட்டமிடலின் நோக்கமெனனவோ தொழில் மயமாக்கல், சமூகநீதி, நாட்டு நிலைமையைச் சமப்படுத்துதல் ஆகியன உயர்வானவை. ஆனால் அதற்கு நாடு செலவிடும் தொகை அடையவுள்ள பலனைவிட அதிகமாக இருக்கும்.
சரியான புள்ளிவிவரம் இல்லாமை, தவறாக கணிப்பது, திட்டமிடுதலை சரிவர செயல்படுத்துவது ஆகியவை வளங்களை வீணடித்து உபரி அல்லது பற்றாக்குறை நிலைக்குக் கொண்டு செல்லும்.
முன்கணிப்பதில் உள்ள சிரமங்கள் :
அரசு தடையில்லாத நாட்டில், விலை இயக்க முறையில், விலை, தேவை மற்றும் அளிப்பு ஆகியவை தானாக இயங்கி ஒன்றையொன்று சரி செய்து கொள்கின்றன.
திட்டமிடல் நாடுகளில் இப்படி ஒரு வசதி இல்லை. நுகர்வும் உற்பத்தி அளவுகளைத் துல்லியமாக முன்கூட்டியே நிர்ணயிப்பது கடினம்.
நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக, சமத்துவத்தையும் திட்டமிடுதல் மூலம் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
18.
19.
பொருளாதாரம் சார்ந்த காரணிகள் :
இயற்கை வளங்கள் : ஒரு நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களின் அளவு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். முன்னேற்றத்திற்கு தேவைப்படும் அளவுக்கு ஒரு நாடு இயற்கை வளங்களை பெற்றிருக்க வேண்டும்.
மூலதன உருவாக்கம் : மூலதனம் பொருளாதாரத்தின் அனைத்துச் செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனமே, மூலதன உருவாக்கம் என்பர்.
சந்தையின் அளவு : சந்தை அளவானது பெரிய அளவில் இருந்தால் கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு, தலா வருமானம் உயர்வு ஆகியவற்றைத் தூண்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
கட்டமைப்பு மாற்றம் : கட்டமைப்பு மாற்றம் என்பது பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும்.
விற்பனைக்குரிய உபரி : வேளாண் துறையில் குடும்பத்திற்கான நுகர்வுத் தேவையை விட கூடுதலாக செய்யப்படும் உற்பத்தியை விற்பனைக்குரிய உபரி என்கிறோம்.
பன்னாட்டு வாணிகம் : பன்னாட்டு வாணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருந்தால் ஒரு நாடு போதுமான அளவு அயல் நாட்டுச் செலவாணியைக் கையிருப்பில் வைக்க முடியும்.
பொருளாதார அமைப்பு முறை : ஒரு நாடு தடையில்லா பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தால் கட்டளைப் பொருளாதாரத்தைவிட வேகமான வளர்ச்சி பெறும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards