12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test

1.
2.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
டோனிடெல்லா
ரபேல்
லியானர்டோ டாவின்சி
மைக்கேல் ஆஞ்சிலோ
3.
மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
சாண்டா மரியா
பிண்ட்டா
நினா
விட்டோரியா
4.
கூற்று : கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர் கொண்டது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி.
5.
ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
ஏழாம் ஹென்றி
எட்டாம் ஹென்றி
இரண்டாம் ஹென்றி
நான்காம் ஹென்றி
6.
7.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
8.
வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.
9.
ரொட்டியும் திராட்சசை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.
10.
டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
11.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
12.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
13.
ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் பற்றிய பங்கை ஆராய்க.
14.
1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
15.
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
16.
17.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
18.
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
19.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
1.
(d)
2.
(d)
மைக்கேல் ஆஞ்சிலோ
3.
(d)
விட்டோரியா
4.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
5.
(d)
நான்காம் ஹென்றி
6.
7.
1.1493 ஆம் ஆண்டு போப் ஆணை வெளியிட்டார்.
2.வெர்முடினை தீர்வுகளுக்கு மேற்கே 320 மைல்கள் தொலைவில் வடக்கு தெற்காக ஒரு கோட்டினை வரைய இவ்வாணைவழி வகை செய்தது.
3.கோட்டிற்கு மேற்கே ஸ்பெயினும் கிழக்கே போர்ச்சுகலும் கண்டுபிடிக்கும் நாடுகளுக்கு சொந்தம் கொண்டாட அனுமதி அளித்தது.
8.
1.வோர்ம்ஸ் சபையில் கலந்து கொள்ளுமாறு லூதருக்கு போப் அழைப்பு விடுத்தார்.
2.அமைதிப்பேச்சு தோல்வி கண்டது.
3.வோர்ம் சபையில் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
9.
1.இயேசு நாதரின் புனித இறுதி விருந்தை ஒத்த புனிதச் சமயச் சடங்கை கத்தோலிக்கர்கள் தங்கள் தேவாலயங்களில் பின்பற்றினார்கள்.
2.இயேசு கிறித்துவ மேற்கொண்ட தியாகங்களை நினைவு கூறும் வகையில் இந்தச் சடங்கில் கத்தோலிக்க கிறித்துவர்கள் பங்கேற்றனர்.
3.எனவே ரொட்டியும் திராட்சை ரசமும் இயேசுவின் சதையும் இரத்தமும் என்று நம்பினர்.
10.
1.தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திரு அருட்சாதனங்களை பின்பற்றுவது குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது.
2.போப்பாண்டவர்களின் வானளாவிய அதிகாரத்தை உறுதி செய்தது.
3.பாதிரிமாரிகளின் பிரம்மச்சர்யம் நிலை நிறுத்தப்பட்டது.
4.தேவாலயத்தில் நடந்த ஊழல்களை களைந்தது.
11.
1.இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்கு பின்னர் பரவியது.
2.இத்தாலியர்கள் தங்கள் ரோமானிய மூதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையைப் பாதுகாத்து வந்தனர்.
3.தங்களுக்கு பிடித்தமானவற்றைத் தேடும் முயற்சியில் அவர்கள் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைக் கண்டுபிடித்தனர்.
4.சட்டம் மற்றும் தத்துவவியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
12.
1.ஆங்கில மறுமலர்ச்சியில் முதலாம் எலிசபெத் பல அறிஞர்களை ஆதரித்ததை குறிப்பிடலாம்.
2.வில்லியம் ஷேக்ஸ்பியர்,கிறிஸ்டோபர் மார்லோவ்,பிரான்சிஸ் பேகன் குறிப்பிடத்தக்கவர்கள்.
3.ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
13.
1.பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஜான் கால்வின் ஒருவர்.
2.கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
3.குறிப்பிட்ட காலத்துக்கு அவர் ஜெனீவா நகரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனார்.
4.கால்வீனியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.
14.
1.1492 ல் கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்கள் (தி சான்டா மரியா,தி நிஸா) மூலமாகப் பயணித்தார்.
2.2 மாதங்கள் கழித்து இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை வந்தடைந்தார்.
3.ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு புதிய கண்டமாகும்.
15.
1.1500 ல் பெட்ரோ காப்ரல் மேற்கு நோக்கி பயணித்து பிரேசிலை கண்டுபிடித்தார்.
2.இத்தீவிற்கு ஐலாண்ட் ஆப் தி ட்ரூ கிராஸ் என பெயரிட்டார்.
3.வாஸ்கோடகாமாவை தொடர்ந்து காப்ரல் கோழிக்கோட்டை சென்றடைந்தார்.
4.தெற்கில் உள்ள கொச்சினுக்கு புறப்பட்டுச் சென்றார்.
5.1501 ஜனவரி 16ல் நறுமணப் பொருட்கள் நிரப்பப்பட்ட ஆறு கப்பல்களுடன் போர்ச்சுகலுக்கு பயணம் மேற்கொண்டார்.
16.
17.
ஸ்பெயின் தேசிய அரசு:
1.அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
2.அராகன்,காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன.
3.ஸ்பெயின் நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட் காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை மணமுடித்தார்.
4.1479 இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர்.
5.மன்னர் சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.ஸ்பெயின் ஒரு தனி நாடக உருவெடுத்தது.
இங்கிலாந்து அரசு:
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லன்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது.அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிகப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர்.அதனால் இப்பெயர் பெற்றது.
3.இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி,இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
4.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசராக உருவெடுத்தது.
5.பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும்.பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர்.
6.பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்குக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் பேரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orlenas) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
7.ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது.
8.கிளர்ச்சி மிகுந்த இந்தப்பகுதி இறுதியாக 1483 ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
9.பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக பதினோறாம் லூயி உருவெடுத்தது.
18.
1.துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிகளின் வீழ்ச்சியும் ஐரோப்பிய கடல்சார் கண்டுபிடிப்பு நாடுகளை கிழக்கத்திய நாடுகளுக்கு புதிய கடல்வலிகளைக் கண்டுபிடிக்க உத்வேகத்தையளித்தது.
2.சிலுவைப்போர்களின் போது போர்வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்து வந்தனர்.
3.மேற்கத்திய நாடுகளில் உணவைப் பதப்படுத்த உதவும் நறுமணப் பொருட்களை கிழக்கத்திய நாடுகளில் இருந்து எடுத்துச் செல்ல ஐரோப்பியர்கள் விரும்பினார்கள்.
4.குறிப்பாக போர்த்துகல்,ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின.
5.அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித்தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன.இந்த முடிவான பொருளாதாரக் காரணம் தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது.
6.கிழக்கிந்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக இலாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின.
7.எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விருப்பம் காட்டினர்.
19.
சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள்:
1.பாவ மன்னிப்பு வழங்கும் முறுக்கு பணம் பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புக்கு மன்னித்து பெற்றது).வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன தாக்குதலுக்கு உள்ளானது.
2.ஆறாம் அலெக்ஸாண்டர்,இரண்டாம் ஜூலியஸ்,பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம் சண்டையிட்டனர்.
3.போப் பத்தாம் லியோவுக்கு பணம் கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதிவியேற்ற சம்பவமும் நடந்தது.
4.மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச் சொத்தைப் வழங்குவும் போப்பாண்டவர்களாக மாறினார்கள்.
மார்ட்டின் லூதர்:
1.கிறித்துவப் பாதிரியரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு எதிராக ஜெர்மனியில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.ரோமுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அவர் தேவாலயத்தின் ரோமானிய,தேவாலயத்திற்கு எதிராக அவர் 95 புகார்களை எழுதினர்.
2.தேவாலய சீர்திருத்தத்துக்காக அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
3.பைபிள் மட்டுமே உன்னதமானது'போப்பாண்டவரே அல்லது பிஷப்புகளோ இல்லை என்று அவர் வாதிட்டார்.
4.லூதர் பைபிளை ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்தார்.
5.லூதரன் பிரட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.அவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தை ஏற்கவில்லை.
6.அவர்கள் தங்களுக்கு என்று தேவாலயங்களை நிறுவினார்கள்.நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்கள்.பைபிளின் உன்னதம் பற்றி மட்டுமே நம்பினார்கள்.
7.பாதிரியர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards