12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test

1.
2.
பிளாங்க் மாறிலியின் மதிப்பு___
6.62 x 10-34 Js
6.62 x 1034 Js
6.62 x 1045 Js
6.62 x 1023 Js
3.
எலக்ட்ரான் ஒன்றின் டி ப்ராய் அலைநீளம் _____
\(\lambda =\cfrac { 12.27 }{ { V }^{ 3 } } \mathring { A } \)
\(\lambda =\cfrac { 12.27 }{ { V }^{ 2 } } \mathring { A } \)
\(\lambda =\cfrac { 12.27 }{ V } \mathring { A } \)
\(\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
4.
நிகோல் பட்டகம் வழியாகச் செல்லும் ஒளி________ .
பகுதி தளவிளைவு அடையும்
தளவிளைவு அடையாது
முழுவதும் தளவிளைவு அடையும்
நீள்வட்டமாகத் தளவிளைவு அடையும்
5.
I மற்றும் 4I ஒளிச்செறிவுகள் கொண்ட இரண்டு ஒற்றை நிற ஓரியல் ஒளிக்கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. தொகுபயன் பிம்பத்தின் சாத்தியமான பெரும மற்றும் சிறும ஒளிச்செறிவுகள் முறையே______.
5I and I
5I and 3I
9I and I
9I and 3I
6.
பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட எழுத்துகளின் மீது (ஊதா, பச்சை, மஞ்சள், மற்றும் சிவப்பு) சமதளக் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எந்த வண்ணத்தில் எழுதப்பட்ட எழுத்து அதிக உயரத்தில் தெரியும்?
சிவப்பு
மஞ்சள்
பச்சை
ஊதா
7.
வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது _____ உமிழ்வு எனப்படும்
ஒளி மின்
புல
வெப்ப அயனி
இரண்டாம் நிலை
8.
ஒளிமின் வெளியேற்று ஆற்றல் 3.313 eV கொண்ட ஒரு உலோகப்பரப்பின் பயன் தொடக்க அலைநீளம் _____.
4125 Å
3750 Å
6000 Å
2062.5 Å
9.
10.
λe அலைநீளம் கொண்ட எலக்ட்ரான் மற்றும் λp கொண்ட ∴போட்டான் ஆகியவை ஒரே ஆற்றலைப் பெற்று இருப்பின், அலைநீளங்கள் λe மற்றும் λp இடையிலான தொடர்பு_______.
\(\lambda_p ∝ \lambda_e\)
\(\lambda_{\mathrm{p}} ∝ {\sqrt{\lambda_e}}\)
\(\lambda_p ∝ \frac{1}{\sqrt{\lambda_e}}\)
\(\lambda_p \space ∝ \space \lambda_e^2\)
11.
20,000 V முடுக்கு மின்னழுத்தம் உள்ள x-கதிர் குழாயில் இருந்து வெளிவரும் x-கதிர்களின் வெட்டு அலைநீளம் மற்றும் வெட்டு அதிர்வெண் ஆகியவற்றைக் கணக்கிடுக.
12.
ஒளியியல் வினைபுரியும் படிகங்களின் வகைகளை உதாரணத்துடன் கூறுக
13.
14.
ஓரியல் மூலங்கள் என்றால் என்ன?
15.
ஒளியின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?
16.
ஒரு உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத் தருக.
17.
பிரெனல் தொலைவு என்றால் என்ன? அதற்கான சமன்பாட்டைப் பெறுக.
18.
போலராய்டின் பயன்களைக் கூறுக.
19.
5 அலகு மற்றும் 3 அலகு வீச்சுகள் கொண்ட இரண்டு ஒளிமூலங்கள் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்துகின்றன. அவற்றின் பெருமம் மற்றும் சிறும ஒளிச்செறிவுகளுக்கு இடையேயான விகிதத்தைக் காண்க.
20.
ப்ரெனல் மற்றும் ப்ரானோஃபர் விளிம்பு விளைவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
21.
ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி மின்கலத்தின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.
22.
பின்வருவனவற்றின் தளவிளைவுக் கோணங்களைக் காண்க.
ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடி மற்றும் 1.33 ஒளிவிலகல் எண்கொண்ட தண்ணீர்
23.
500 nm அலைநீளமுடைய ஒற்றை நிற ஒளியானது விளிம்பு விளைவுக் கீற்றணியின் மீது, விழுகிறது. 30° கோணத்தில் நான்காம் வரிசை பெருமம் கிடைக்கிறது எனில், கீற்றணியில் ஒரு சென்டிமீட்டர் அகலத்திற்கு அமைந்துள்ள பிளவுகளின் எண்ணிக்கையைக் காண்க
24.
25.
யங் இரட்டைப் பிளவு ஆய்வு அமைப்பை விளக்கி, பாதை வேறுபாட்டிற்கான கோவையைப் பெறுக.
26.
எலக்ட்ரான் நுண்ணோக்கியின் தத்துவம் மற்றும் வேலை செய்யும் விதத்தை சுருக்கமாக விளக்குக.
27.
எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப் பெறுக.
28.
29.
ஒளிமின் விளைவு விதிகளை வரிசைப்படுத்துக
1.
(d)
2.
(a)
6.62 x 10-34 Js
3.
(d)
\(\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
4.
(c)
முழுவதும் தளவிளைவு அடையும்
5.
\(I =I_1 + I_2+ 2\sqrt {i_1i_2}cos\theta\\ cos \theta = cos 0 = 1,I\\ = I+4I+{\sqrt4I^2}cos 0\\ = 5I+4I=9I\\ cos \pi = -1,I\\ = I+4I+{2\sqrt4I^2} cos \pi\\ = 5I+4I(_1)\\ =5I-4I = I\)
6.
ஊதா வண்ணத்திற்கான ஒளிவிலகல் எண் அதிகம். எனவே மற்ற வண்ணங்களை விட ஊதா வண்ணத்திற்கான தோற்ற ஆழம் குறைவு. எனவே அதிகமாக உயர்த்தப்பட்டிருக்கும்
7.
(c)
வெப்ப அயனி
8.
\(\frac{hc}{\pi}\\ = \frac{6.6\times10^{-34}\times 3\times 10^8}{6.6 \times10^{-34}\times 3 \times 10^8} = 1 \times 10^{45} \\ =3742 \\=3750\)
9.
(b)
10.
\(E_p = \frac{hc}{\lambda_p}\\ E = \frac{h^2}{2m\lambda_e^{2}}\\ \frac{hc}{\lambda_p}=\frac{h^2}{2m\lambda_e^{2}}\\ \lambda_p = \lambda_p^{2}\)
11.
தொடர் நிறமாலையில், x-கதிர்களின் வெட்டு அலைநீளம்,
\({ \lambda }_{ ° }\frac { 12400 }{ V } \mathring { A } =\frac { 12400 }{ 20000 } \mathring { A }\)
= 0.62 \(\mathring { A } \)
இதற்குத் தொடர்புடைய வெட்டு அதிர்வெண்,
\({ \upsilon }_{ 0 }=\frac { c }{ { \lambda }_{ 0 } } =\frac { 3\times 10^{ 8 } }{ 0.62\times 10^{ -10 } }\) = 4.84 x 1018 Hz
12.
(i) ஒரே ஒரு ஒளியியல் அச்சைப் பெற்றுள்ள படிகங்கள் ஒரச்சுப்படிகங்கள் எனப்படும்.
(எ.கா) கால்சைட், குவார்ட்ஸ், டர்மலைன் மற்றும் பனிக்கட்டி.
(ii) இரண்டு ஒளியியல் அச்சைப் பெற்றுள்ள படிகங்கள் ஈரச்சுப் படிகங்கள் எனப்படும்.
(எ.கா) மைக்கா, புஷ்பராகம், செலினைட் மற்றும் அரோகனைட்.
13.
14.
இரண்டு அலைமூலங்கள் ஒரே அதிர்வெண் அல்லது அலைநீளம் கொண்டிருந்து ஒரே கட்ட வேறுபாட்டைக் கொண்ட அல்லது கட்ட வேறுபாடு அற்ற அலைகளை உருவாக்கினால், அவ்விரண்டு மூலங்களும் ஓரியல் மூலங்களாகும். அவ்வலைகள் ஒரே வீச்சுக் கொண்ட அலைவடிவம் கொண்டதாக இருப்பது விரும்பத்தக்கது.
15.
இரண்டு ஒளி அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று மேற்பொருந்துவதால், சில புள்ளிகளில் ஒளிச்செறிவு அதிகரிக்கும். வேறு சில புள்ளிகளில் ஒளிச்செறிவு குறையும். இந்நிகழ்வு ஒளியின் குறுக்கீட்டு விளைவு எனப்படும்.
16.
உலோகத்தின் பரப்பிலிருந்து எலக்ட்ரானை வெளியேற்றத் தேவைப்படும் சிறும ஆற்றல் உலோகத்தின் வெளியேற்று ஆற்றல் எனப்படும். இதன் அலகு எலக்ட்ரான் வோல்ட் (eV ஆகும்)
17.
எந்தத் தொலைவு வரை ஒளியானது, கதிர் ஒளியியலுக்கு உட்படுகிறதோ, அல்லது எந்தத் தொலைவுக்கு அப்பால் கதிர் ஒளியியலுக்கு உட்படாமல் அலை ஒளியியலுக்கு உட்படுகிறதோ அந்தத் தொலைவு பிரெனல் தொலைவு எனப்படும்.
பிரெனல் தொலைவு
முதல் சிறுமத்திற்கான விளிம்பு விளைவுச் சமன்பாடு \(\sin \theta=\frac{\lambda}{a} ; \theta=\frac{\lambda}{a}\) [ \(\therefore \theta \) சிறியது]
பிரெனல் தொலைவின் வரையறையிலிருந்து
2θ = a/2 (அல்லது) θ = a/2z
இரண்டு சமன்பாடுகளையும் ஒப்பிடும்போது,
\(\frac{\lambda}{a}=\frac{a}{2 z}\)
எனவே, பிரெனல் தொலைவு z
\(z=\frac{a^{2}}{2 \lambda}\)
18.
போலராய்டுகளின் பயன்கள்
1. போலராய்டுகள், கண் கூசுவதைத் தடுக்கும் கண்ணாடிகளாகவும், புகைப்படக்கருவிகளில் ஒளிவடிப்பானாகவும் மேலும் வெயில் காப்புக் கண்ணாடிகளிலும் பரவலாக பயன்படுகின்றன.
2. முப்பரிமாண திரைப்படக்காட்சிகளை அதாவது ஹோலோகிராபி (holograph) உருவாக்க போலராய்டுகள் பயன்படுகின்றன.
3. பழைய எண்ணெய் ஓவியங்களில் நிறங்களை வேறுபடுத்தி அறிய போலராய்டுகள் பயன்படுகின்றன.
4. போலராய்டுகள் ஒளித்தகைவு பகுப்பாய்வில் (Optical Stress analysis) பயன்படுகின்றன.
5. ஜன்னல் கண்ணாடிகளில் போலராய்டுகளைப் பயன்படுத்தி, அறையின் உள்ளே வரும் ஒளியின் செறிவைக் கட்டுப்படுத்தலாம்.
6. தளவிளைவடைந்த லேசர் கற்றை , ஊசிமுனை போன்று செயல்பட்டு, குறுந்தகடுகளைப் (CDs) படிக்க அல்லது அவற்றில் செய்திகளைப் பதிவு செய்ய பயன்படுகின்றன.
7. திரவ படிகத்திரையில் (LCD), தளவிளைவு அடைந்த ஒளி பயன்படுத்தப்படுகிறது.
19.
வீச்சுகள் a1 = 5, a2 = 3
தொகுபயன் வீச்சு,
\(A=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+{ 2a }_{ 1 }{ a }_{ 2 }\cos\phi } \)
பின்வரும் நிபந்தனையில் தொகுபயன் வீச்சு பெருமமாகும்.
\(\phi =0,\cos0=1,{ A }_{ max }=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }+2{ a }_{ 1 }{ a }_{ 2 } } \)
\({ A }_{ max }=\sqrt { \left( { a }_{ 1 }+{ a }_{ 2 } \right) ^{ 2 } } =\sqrt { \left( 5+3 \right) ^{ 2 } } =\sqrt { \left( 8 \right) ^{ 2 } } \)
= 8 அலகுகள்
பின்வரும் நிபந்தனையில் தொகுபயன் வீச்சு சிறுமமாகும்.
\(\phi =\pi ,\cos\pi =-1,{ A }_{ min }=\sqrt { { a }_{ 1 }^{ 2 }+{ a }_{ 2 }^{ 2 }-{ 2a }_{ 1 }{ a }_{ 2 } } \)
\({ A }_{ min }=\sqrt { \left( { a }_{ 1 }-{ a }_{ 2 } \right) ^{ 2 } } =\sqrt { \left( 5-3 \right) ^{ 2 } } =\sqrt { \left( 2 \right) ^{ 2 } } \)
= 2 அலகுகள்
\(I\propto { A }^{ 2 }\)
\(\cfrac { { I }_{ max } }{ { I }_{ min } } =\cfrac { \left( { A }_{ max } \right) ^{ 2 } }{ \left( { A }_{ min } \right) ^{ 2 } } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது
\(\cfrac { { I }_{ max } }{ { I }_{ min } } =\cfrac { \left( 8 \right) ^{ 2 } }{ \left( 2 \right) ^{ 2 } } =\cfrac { 64 }{ 4 } =16\) (அல்லது)
\({ I }_{ max }:{ I }_{ min }=16:1\)
20.
| ப்ரெனல் விளிம்பு விளைவு | ப்ரானோஃபர் விளிம்பு விளைவு | |
| 1. | கோளக அல்லது உருளை வடிவ அலை முகப்பு விளிம்பு விளைவிற்கு உட்படுகின்றது . | சமதள அலை முகப்பு விளிம்பு விளைவிற்கு உட்படுகின்றது. |
| 2. | ஒளி அலைகளைக் கொடுக்கும் ஒளிமூலம், வரம்புக்குட்பட்ட தொலைவில் இருக்கும். | ஒளி அலைகளைக் கொடுக்கும் ஒளிமூலம், ஈறில்லாத் தொலைவில் இருக்கும். |
| 3. | ஆய்வக நிபந்தனைகளில் அடிப்படையில் குவிலென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. | ஆய்வக நிபந்தனைகளில் அடிப்படையில் குவிலென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. |
| 4. | உற்று நோக்கல் மற்றும் ஆய்வு செய்வது கடினம். | உற்று நோக்கல் மற்றும் ஆய்வு செய்வது எளிது. |
| 5. |
21.
ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம் ஒளிமின்கலம் ஆகும். இது ஒளி மின் விளைவு தத்துவத்தின்படி செயல்படுகிறது
வகைகள்:
1. ஒளி உமிழ்வு மின்கலம்
2. ஒளி போல்டா மின்கலம்
3. ஒளி கடத்தும் மின்கலம்
22.
புருஸ்டர் விதியிலிருந்து, tan ip = n
கண்ணாடிக்கு, tan ip= 1.5; ip= tan-1; ip= 56.3o
தண்ணீருக்கு tan ip=1.33; ip= tan-11.33; ip= 53.1o
23.
ஒளியின் அலைநீளம் λ = 500 nm = 500×10-9 m;
விளிம்பு விளைவு வரிசை; m = 4;
விளிம்பு விளைவுக் கோணம் θ = 30°;
ஒரு சென்டிமீட்டர் அகலத்தில் அமைந்துள்ள பிளவுகளின் எண்ணிக்கை = ?
விளிம்பு விளைவுப் பெருமத்திற்கான சமன்பாடு sin θ = Nm λ
மாற்றியமைக்கும்போது,\(N=\frac { \sin\theta }{ m\lambda } \)
மதிப்புகளைப் பிரதியிடும்போது,
\(N=\frac { 0.5 }{ 4\times 500\times { 10 }^{ -9 } } =\frac { 1 }{ 2\times 4\times 500\times { 10 }^{ -9 } } =2.5\times { 10 }^{ 5 }{ m }^{ -1 }\)
ஒரு சென்டிமீட்டரில் அமைந்துள்ள கோடுகளின் எண்ணிக்கை = 2.5 × 103 cm–1
24.
25.

ஒளிபுகாத் திரையில் S1 மற்றும் S2 என்ற இரண்டு துளைகள் 0.3 மி.மீ இடைவெளியில் அமைக்கப்பட்டு S என்ற ஒளிமூலத்திலிருந்து சமதொலைவில் இருக்கும்படி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு துளையின் அகலமும் 0.03 மி.மீ. S1 மற்றும் S2 ஓரியல் மூலங்களாகும்.
பிளவுகள் S1, மற்றும் S2 விலிருந்து வரும் அலைமுகப்புகள் இரட்டைப் பிளவின் வலப்பக்கமாக 1மீ தொலைவில் XY என்ற திரை வைக்கப்பட்டபோது, அத்திரையில் சம அகலமுடைய பொலிவு மற்றும் கரும்பட்டைகள் அடுத்தடுத்து தோன்றுகின்றன.
S1, S2 விலிருந்து திரையின் மையப்புள்ளி O வை அடையும் ஒளி அலைகள், சமதொலைவைக் கடந்து வந்துள்ளதால் அவை படத்தில் காட்டியுள்ளவாறு ஒத்தகட்டத்தில் இருக்கும். இவ்விரண்டு அலைகளும் ஆக்கக்குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தி, மையப்புள்ளியில் பொலிவுப்பட்டையை உருவாக்கும். இதற்கு மையப் பொலிவுப்பட்டை என்று பெயர். ஏதேனும் ஒரு பிளவை மூடிவிட்டால் குறுக்கீட்டுப்பட்டைகள் மறைந்து திரை சீராக ஒளியூட்டப்பட்டிருக்கும். இதிலிருந்து, திரையில் தோன்றும் பொலிவு மற்றும் கரும் பட்டைகள் ஒளியின் குறுக்கீட்டு விளைவினால் ஏற்பட்டவை என்பதை அறியலாம்.
பாதை வேறுபாட்டிற்கான சமன்பாடு:

ஓரியல் மூலங்களாகச் செயல்படும் S1 மற்றும் S2. பிளவுகளுக்கிடையே உள்ள தொலைவு d என்க. இவை \(\lambda \) அலைநீளமுடைய ஒளியால் ஒளியூட்டப்படுகிறது. இரட்டைப் பிளவுகளுக்கு இணையாக D தொலைவில் திரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திரையின் மையப்புள்ளி. இது S1, மற்றும் S2 விலிருந்து சமதொலைவில் உள்ளது. எனவே ஒளிப்பாதையின் வேறுபாடு சுழி.
0 விலிருந்து y தொலைவில் உள்ள புள்ளி P ஐக் கருதுக. புள்ளி P யில் பாதை வேறுபாடு \(\delta =\frac { yd }{ D } \) ஆகும்.
.P யில் பொலிவுப்பட்டை தோன்ற நிபந்தனை பாதை வேறுபாடு \(\delta =n\lambda \) என இருக்க வேண்டும்.
n = 0, 1, 2, 3, ....
எனவே \(\cfrac { dy }{ D } =n\lambda \)
\({ y }_{ n }=n\cfrac { \lambda D }{ d } \)
இதே போன்று முதல் கருமைப்பட்டை தோன்ற நிபந்தனை, பாதைவேறுபாடு\(\delta =\left( 2n-1 \right) \lambda /2\) என இருக்க வேண்டும். n = 1, 2, 3,...
எனவே \(\cfrac { dy }{ D } =\left( 2n-1 \right) \lambda /2\)
\({ y }_{ n }=\cfrac { \left( 2n-1 \right) \lambda D }{ 2d } \)
இரண்டு அடுத்தடுத்த பொலிவுபட்டை அல்லது கரும்பட்டைகளுக்கு இடையே உள்ள தொலைவு பட்டை அகலம் எனப்படும். எனவே, மையப்புள்ளி O விலிருந்து n -வது பொலிவுப்பட்டையின் தொலைவு \({ y }_{ n }=n\cfrac { \lambda D }{ d } \)
(n+1) வது பொலிவுப்பட்டையின் தொலைவு = \({ y }_{ (n+1) }=\cfrac { \left( n+1 \right) \lambda D }{ d } \)
பட்டை அகலம் \(\beta ={ y }_{ (n+1) }-{ y }_{ n }=\left( \left( n+1 \right) \cfrac { \lambda D }{ d } \right) -\left( n\cfrac { \lambda D }{ d } \right) \)
\(\beta =\cfrac { \lambda D }{ d } \) ..(4)
இவ்வாறே மையப்புள்ளி O விலிருந்து (n+1) வது கருமைப்பட்டைக்கும் n-வது கருமைப்பட்டைக்கும் இடையே உள்ள தொலைவு பட்டை அகலத்தை கொடுக்கும்.
\(\beta ={ y }_{ \left( n+1 \right) }{ y }_{ n }=\left( \cfrac { \left( 2(n+1)-1 \right) }{ 2 } \cfrac { \lambda D }{ d } \right) -\left( \cfrac { \left( 2n-1 \right) }{ 2 } \cfrac { \lambda D }{ d } \right) \)
\(\beta =\cfrac { \lambda D }{ d } \)...(5)
26.
தத்துவம்:
துகள்களது அலை இயல்பின் நேரடி பயன்பாடாக இது அமைகிறது. எலக்ட்ரானின் அலை இயல்பினைப் பயன்படுத்தி, நுண்ணோக்கி ஒன்று வடிவமைக்கப்படுகிறது. இந்த நுண்ணோக்கி எலக்ட்ரான் நுண்ணோக்கி எனப்படும். ஒரு நுண்ணோக்கியின் பகுதிறன் ஆனது உருப்பெருக்க வேண்டிய பொருளின் மீது படும் ஒளியின் அலைநீளத்திற்கு எதிர்தகவில் அமையும். எனவே குறைந்த அலைநீளம் கொண்ட அலைகளைப் பயன்படுத்தும்போது அதிக பகுதிறனும் அதிக உருப்பெருக்கமும் கிடைக்கின்றன. எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம் ஆனது ஒளியியல் நுண்ணோக்கியில் பயன்படும் கண்ணுறு ஒளியின் அலைநீளத்தை விட மிகக் குறைவு (சில ஆயிரங்கள் குறைவு) ஆகும். இதன் விளைவாக, எலக்ட்ரான்களின் டி ப்ராய் அலைகளைப் பயன்படுத்தும் நுண்ணோக்கிகளின் பகுதிறன் ஆனது ஒளியியல் நுண்ணோக்கிகளை விட மிக அதிகமாகும். 2,00,000 மடங்கு உருப்பெருக்கத்தை அளிக்கும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள், ஆராய்ச்சிக்கூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வேலை செய்யும் விதம்:
ஒளியியல் நுண்ணோக்கி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவற்றின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஒரே மாதிரியாக அமையும். ஆனால் சிறு வேறுபாடு: எலக்ட்ரான் கற்றையைக் குவிப்பதற்கு நிலைமின்புல அல்லது காந்தப்புல லென்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. தகுந்த வகையில் அமைக்கப்பட்ட மின்புலம் அல்லது காந்தப்புலம் வழியாகச் செல்லும் எலக்ட்ரான் கற்றையை விரிதலுக்கோ குறுகுதலுக்கோ உட்படுத்த முடியும். இதன் மூலம், எலக்ட்ரான் கற்றையைக் குவிப்பது செய்யப்படுகிறது. எலக்ட்ரான் மூலத்திலிருந்து உமிழப்படும் எலக்ட்ரான்கள் உயர் மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. காந்தப்புல குவிக்கும் லென்சு (magnetic condenser lens) மூலம் எலக்ட்ரான் கற்றை இணைக் கற்றையாக மாற்றப்படுகிறது. இந்தக் கற்றை உருப்பெருக்கம் செய்ய வேண்டிய பொருள் வழியாகச் செல்லும்போது, அதன் பிம்பத்தைத் தாங்கிச் செல்கிறது.
காந்தப்புல பொருளருகு லென்சு (magnetic objective lens) மற்றும் காந்தப்புல வீழ்த்தும் லென்சு (magnetic projector lens) அமைப்புகளின் உதவியுடன் உருப்பெருக்கப்பட்ட பிம்பம் திரையில் தோற்றுவிக்கப்படுகிறது. எலக்ட்ரான் நுண்ணோக்கியானது பெரும்பாலும் அனைத்து அறிவியல் துறைகளிலும் பயன்படுகிறது.
27.
தத்துவம்:
m நிறை கொண்ட எலக்ட்ரான் ஆனது V வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகிறது. எலக்ட்ரான் பெறுகின்ற இயக்க ஆற்றல்,
\(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }=ev\)
இதில் என்பது எலக்ட்ரானின் திசைவேகம், \(v=\sqrt { \frac { 2eV }{ m } } \)
எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம், \(\lambda =\frac { h }{ mV } =\frac { h }{ \sqrt { 2meV } } \)
தெரிந்த மதிப்புகளைப் பிரதியிட,
\(\lambda =\cfrac { 6.626\times { 10 }^{ -34 } }{ \sqrt { 2V\times 1.6\times { 10 }^{ -19 }\times 9.11\times { 10 }^{ -31 } } } =\cfrac { 12.27\times { 10 }^{ -10 } }{ \sqrt { V } } ,\lambda =\cfrac { 12.27 }{ \sqrt { V } } \mathring { A } \)
eV = K, என்பது எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் என்பதால் எலக்ட்ரானின் அலைநீளம் \(\lambda =\frac { h }{ \sqrt { 2mK } }\) எனவும் எழுதலாம்.
28.
29.
(i) கொடுக்கப்படும் படுகதிர் அதிர்வெண்ணுக்கு உமிழப்படும் ஒளி எலக்ட்ரான்களின் எண்ணிக்கையானது படுகதிரின் செறிவிற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் தெவிட்டு மின்னோட்டமும், ஒளிச்செறிவிற்கு நேர்த்தகவில் அமையும்.
(ii) ஒளிஎலக்ட்ரான்களின் பெரும் இயக்க ஆற்றலானது படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து அமையாது.
(iii) கொடுக்கப்படும் உலோகத்திற்கு, ஒளிஎலக்ட்ரான்களின் பெரும் இயக்க ஆற்றலானது படுகதிரின் அதிர்வெண்ணிற்கு நேர்த்தகவில் அமையும்.
(iv) கொடுக்கப்படும் உலோகப்பரப்பிற்கு படுகதிரின் அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட சிறும அதிர்வெண்ணை விட அதிகமாக இருந்தால் மட்டுமே ஒளிஎலக்ட்ரான் உமிழ்வு ஏற்படும் இந்தச் சிறும அதிர்வெண் பயன் தொடக்க அதிர்வெண் எனப்படும்.
(v) உலோகத்தின் மீது ஒளி படுவதற்கும் ஒளி எலக்ட்ரான்கள் உமிழப்படுவதற்கும் இடையே காலதாமதம் இருக்காது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards