12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil செல்வத்துள் எல்லாம் தலை - வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - இலக்கணம் -தொன்மம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil எல்லா உயிரும் தொழும் - செய்யுள்-புறநானுறு Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாடு சமூகம் திருவாகம் மனிதம் - உரைநடை உலகம் -இலக்கியத்தில் மேலாண்மை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் -இலக்கணம் -படைப்பாக்க உத்திகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - துணைப்பாடம் -நடிகர் திலகம் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test

1.
பல்வேறு வகைப்பட்ட தகவல் தொடர்புகளில் ஒளி இழை தகவல் தொடர்பு சிறந்ததாக விளங்குகிறது. நிரூபி.
2.
கம்பிவழி மற்றும் கம்பியில்லா தகவல்தொடர்பை வேறுபடுத்துக. அவற்றில் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளின் நெடுக்கத்தைக் குறிப்பிடுக.
3.
ஒரு பரப்பும் விண்ணலைக்கம்பியின் உயரம் 40m மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பி 30m உயரம் உள்ளது. அவற்றிற்கிடையே நேர்க்கோட்டு பார்வை தகவல்தொடர்பிற்கான பெருந்தொலைவு யாது? புவியின் ஆரம் 6.4 × 106 m.
4.
FM ஒலிபரப்புகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிர்வெண் விலகல் _____
75 kHz
68 kHz
80 kHz
70 kHz
5.
ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____
பரப்பியல்
பண்பேற்றியல்
வழித்தடத்தில்
ஏற்பியல்
6.
தகவல் தொடர்பு அமைப்பின், வெளியீடு திறன் மாற்றியானது ரேடியோ சைகையை ________ ஆக மாற்றுகிறது.
ஒலி
இயந்திர ஆற்றல்
இயக்க ஆற்றல்
இவற்றில் எதுவுமில்லை
7.
இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்துதல் (Internet of Things, IoT) என்றால் என்ன?
8.
RADAR என்பது எதனைக் குறிக்கிறது?
9.
அதிர்வெண் பண்பேற்றத்தில் மைய அதிர்வெண் அல்லது ஓய்வு நிலை அதிர்வெண் - விளக்குக.
10.
பரப்புகை இழப்புகளுக்குப் பொறுப்பான காரணிகளைக் கூறுக.
11.
கம்பியில்லா தகவல்தொடர்பில் பண்பேற்றமானது விண்ணலைக் கம்பியின் அளவைக் குறைக்க உதவுகிறது - விளக்குக.
12.
சுரங்கம் மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடுகளைத் தருக.
13.
GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS இன் சில பயன்பாடுகளை எழுதுக.
14.
வெளியின் வழியாக மின்காந்த அலை பரவுதலில் தரை அலை பரவல் மற்றும் வெளி அலை பரவல் ஆகியவற்றை விவரி.
15.
தகவல் தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகளைத் தேவையான கட்டப்படத்துடன் விவரி.
16.
பண்பேற்றம் என்றால் என்ன? பண்பேற்றத்தின் வகைகளைத் தேவையான படங்களுடன் விளக்குக.
1.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒளி இழையின் வழியாக, ஒளித்துடிப்புகளின் மூலம் தகவல்களைப் பரப்பும் முறை ஒளி இழைத் தகவல் தொடர்பு எனப்படும்.
பல காரணங்களுக்காக ஒளி இழை தகவல் தொடர்பு தேர்வு செய்யப்படுகிறது. இதில், ஒளியின் முழு அக எதிரொளிப்பு தத்துவம் பயன்படுத்தப்படுகிறது.
சிறப்புகள்:
ஒளி இழை அமைப்பு பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அவை, சர்வதேச தகவல் தொடர்பு, நகரங்கள் இடையே தகவல் தொடர்பு, தரவு இணைப்புகள், ஆலை மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் இராணுவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
நன்மைகள்:
ஒளி இழைகள் மிகவும் மெலிதானது. தாமிர வடங்களை விட குறைவான எடை கொண்டவை.
இந்த அமைப்பு மிக அதிக பட்டை அகலத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள்: தகவல் சுமந்து செல்லும் திறன் அதிகம் என்பதாகும்.
ஒளி இழை அமைப்பு மின் இடையூறுகளால் பாதிக்கப்படுவதில்லை.
தாமிர வடங்களைவிட ஒளி இழை மலிவானது.
2.
|
கம்பிவழி தகவல் தொடர்பு |
கம்பியில்லா தகவல் தொடர்பு |
| 1) தொலை தூர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியாது. | 1) தொலை தூர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியும். |
| 2) இரைச்சல் - குறைவு வெளிப்புற இடையூறுகளை தவிர்க்க முடியும். | 2) வெளிப்புற இடையூறுகளை தவிர்க்க முடியாது. |
| 3) சைகை எளிதாக வலுவிழக்கும் |
3) மிகக்குறைவான வலுவிழப்புடன் அதிக தூரம் பரப்ப முடியும். |
| 4) விண்ணலைக் கம்பி தேவையில்லை. | 4) விண்ணலைக் கம்பி அவசியம். |
| 5) ஒளி இழை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும். அதிர்வெண் நெடுக்கம் 400THz-790THz . | 5) செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் மேலிணைப்பு 6GHz கீழிணைப்பு 4GHZ. |
3.
பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பிகளுக்கு இடையே உள்ள மொத்த தொலைவு d ஆனது தனித்தனி பரப்புகை நிகழும் தொலைவுகளின் கூடுதலுக்கு சமமாகும்.
d = d1 + d2
\(=\sqrt { 2{ Rh }_{ 1 } } +\sqrt { 2R{ h }_{ 2 } } \)
\(=\sqrt { 2R } (\sqrt { { h }_{ 1 } } +\sqrt { { h }_{ 2 } } )\)
\(=\sqrt { 2\times 6.4\times { 10 }^{ 6 } } \times (\sqrt { 40 } +\sqrt { 30 } )\)
\(=16\times { 10 }^{ 2 }\sqrt { 5 } \times (6.32+5.48)\)
= 42217 m = 42.217 km
4.
(a)
75 kHz
5.
(c)
வழித்தடத்தில்
6.
(a)
ஒலி
7.
ஒரு சாதனத்தின் மூலம் பல்வேறு சாதனங்களை இணையத்தின் வழியே கட்டுப்படுத்துவது Internet of Things (IoT) எனப்படும். எ.கா, செல்பேசியைப் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருட்கள் மோட்டார், TV, குளிர்சாதனப் பெட்டி போன்ற அனைத்தையும் இயக்க முடியும்.
8.
ரேடார் (RADAR) என்பது RAdio Detection And Ranging என்ற சொற்றொடரின் சுருக்கமாகும்.
9.
அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் சுழியாக உள்ளபோது (உள்ளீடு சைகை இல்லாதபோது) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமில்லை. ஊர்தி அலை அதன் இயல்பான அதிர்வெண்ணில் உள்ளது. அது மைய அதிர்வெண் அல்லது ஓய்வுநிலை அதிர்வெண் என அழைக்கப்படுகிறது.
10.
1. தொலைவைப் பொருத்து, சைகையில் வலுவிழப்பு ஏற்படுதல்.
2. புவியினால் ஆற்றல் உறிஞ்சப்படுதல்.
3. புவியின் வளைபரப்பின் காரணமாக அலை சாயத் தொடங்கி மின்புல வலிமை குறைகிறது.
11.
விண்ணலைக் கம்பியானது பரப்பும் முனை மற்றும் ஏற்பு முனை இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது. பரப்புகை நிகழும் நெடுக்கம் (d) விண்ணலைக் கம்பியின் உயரத்தை (h) சார்ந்துள்ளது.
\(d=\sqrt { 2Rh } \) இதில் R என்பது புவியின் வளைவு ஆரம்,
இருப்பினும் விண்ணலைக் கம்பியின் உயரம் பரப்பப்படும் சைகையில் அலைநீளத்தின்\(\frac { \lambda }{ 4 } \) இன் மடங்குகளாக இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் உள்ளது. அலைநீளம் \(\lambda=\frac{c}{v}\) என அறிவோம். C என்பது ஒளியின் திசைவேகம் c என்பது பரப்பப்படும் சைகையின் அதிர்வெண்.
எடுத்துக்காட்டு:
இரு அடிக்கற்றை சைகைகளைக் கருதுவோம். ஒரு சைகை பண்பேற்றப்பட்டும், மற்றொன்று பண்பேற்றப்படாமலும் உள்ளது. அடிக்கற்றை சைகையின் அதிர்வெண் c = 10 kHz எனவும், பண்பேற்றப்பட்ட, சைகையின் அதிர்வெண் c = 1 MHz எனவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. c = 10 kHz அதிர்வெண் கொண்ட சைகையைப் பரப்பத் தேவையான விண்ணலைக்கம்பியின் உயரம் வருமாறு
\({ h }_{ 1 }=\cfrac { \lambda }{ 4 } =\cfrac { c }{ 4v } =\cfrac { 3\times { 10 }^{ 8 } }{ 4\times 10\times { 10 }^{ 3 } } =7.5km\) ...(1)
c = 10 MHz அதிர்வெண் கொண்ட சைகையை பரப்பத் தேவையான விண்ணலைக்கம்பியின் உயரமானது
\({ h }_{ 2 }=\cfrac { \lambda }{ 4 } =\cfrac { c }{ 4v } =\cfrac { 3\times { 10 }^{ 8 } }{ 4\times 1\times { 10 }^{ 8 } } =75m\) ...( 2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2), ஐ ஒப்பிடும் போது, நடைமுறையில் 75 m உயரமுள்ள விண்ணலைக்கம்பியை நிறுவுவது சாத்தியமாகும். ஆனால் 7.5 km உயரமுள்ள விண்ணலைக்கம்பி சாத்தியமற்றது. இது பண்பேற்றப்பட்ட சைகைகள் விண்ணலைக்கம்பியின் உயரத்தைக் குறைப்பதையும், நெடுந்தொலைவு பரப்புகைக்கு தேவை என்பதையும் வெளிப்படுத்துகிறது.
12.
விவசாயத் துறை:
தகவல் தொடர்பு தொழில் நுட்பம் - information and communication technology என்பதன் சுருக்கம் ICT ஆகும். விவசாயத்துறையில் பயன்படுத்தும்போது உற்பத்தி அதிகரிக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயருகிறது. விவசாயிகளுக்கு உள்ள சவால்கள் மற்றும் இடையூறுகள் தீர்க்கப்படுகின்றன. மேலும்,
1. உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பண்ணை நிர்வாகம் ஆகியவற்றில் மற்றும் அதிகளவில் பயன்படுகிறது.
2. தண்ணீர், விதைகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் மேம்பட்ட பயன்பாட்டிற்கு உதவுகிறது.
3. ரோபோக்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உணர்விகள், வான்வழி படங்கள் மற்றும் GPS தொழில்நுட்பம் ஆகியவை உள்ளடக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களையும் இங்கு பயன்படுத்தலாம்.)
4. புவிசார் தகவல் அமைப்புகள் (GIS - Geographic Information Systems) ஆனது ஒரு குறிப்பிட்ட தாவரத்தை பயிரிடுவதற்கு தகுதியான இடத்தை முடிவு செய்வது என வேளாண்மைத்துறையில் விரிவாகப் பயன்படுகிறது.
சுரங்கத்துறை:
1. சுரங்கத்துறையில் செயல்படு திறன் அதிகரிப்பு, தொலைதூர கண்காணிப்பு மற்றும் பேரிடர் நடைபெற்ற இடத்தை அறிதல் ஆகியவற்றில் ICT பயன்படுகிறது.
2. சுரங்கத்தில் சிக்கிக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஒலி ஒளி எச்சரிக்கையை அளிக்கிறது.
3. தொலைதூரத்தில் உள்ள சுரங்கப்பணியிடங்களை இணைக்க உதவுகிறது.
13.
GPS என்பது Global Positioning System உலகளாவிய நிலையறியும் அமைப்பும் - என்பதன் சுருக்கமாகும். இது வழி நடத்தும் செயற்கைக் கோள்களின் உலகளாவிய அமைப்பு ஆகும். இதன் மூலம் பூமிக்கு அருகிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இருக்கும் GPS ஏற்பிக்கு, புவிசார் அமைவிடம் மற்றும் காலம் தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
பல்வேறு செயற்கைக்கோள்களின் வலையமைப்பு உதவியுடன் GPS செயல்படுகிறது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் ரேடியோ அலைகள் போன்ற ஒரு துல்லிய சைகையை ஒலிபரப்புகிறது. இருப்பிடம் குறித்த தரவை அளிக்கும் இந்த சைகைகள் விண்ணலைக் கம்பியினால் பெறப்பட்டு, பிறகு GPS மென்பொருளால் தகவல்களாக மாற்றம் செய்யப்படுகிறது. மென்பொருளானது குறிப்பிட்ட செயற்கைக்கோளை கண்டுணர்ந்து, அதன் இருப்பிடம் மற்றும் ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் சைகைகள் பயணம் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிகிறது. பிறகு, மென்பொருள் ஆனது ஒவ்வொரு செயற்கைக்கோளில் இருந்தும் பெறும் தரவுகளை செயல்முறைப்படுத்தி, ஏற்பியின் இருப்பிடத்தைக் கணிக்கிறது.
பயன்பாடுகள்: -
உலகளாவிய நிலையறியும் அமைப்பு பல துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அவையாவன: இயங்கும் வாகன நிர்வாகம் (கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றின் தடம் பின்பற்றல்) வனவிலங்கு நிர்வாகம் (ஆபத்தான வன விலங்குகளைக் கணக்கிடல் மற்றும் பொறியியல் துறை (சுரங்கப்பாதைகள், பாலங்கள் ஆகியவற்றை உருவாக்குதல்) ஆகியவை ஆகும்.
14.
தரை அலைப் பரவல்:
பரப்பியினால் பரப்பப்பட்ட மின்காந்த அலைகள் ஏற்பியைச் சென்றடைய புவியின் தரையை தழுவிக்கொண்டு சென்றால், இந்த பரவல் தரை அலைப் பரவல் எனப்படும். தொடர்புடைய அலைகளானது தரை அலைகள் அல்லது மேற்பரப்பு அலைகள் எனப்படுகின்றன.
பரப்பும் மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பிகள் இரண்டும் புவிக்கு அருகில் இருக்கவேண்டும். விண்ணலைக்கம்பியின் அளவு சைகைகளின் பரப்புதலின் பயனுறுதிறனை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பரப்புகையின்போது மின் சைகைகள் நீண்ட தொலைவிற்கு செல்லும்போது வலுவிழக்கின்றன.

வெளி அலைப்பரவல்:
தகவல் சைகையை வெளியின் வழியே அனுப்பும் மற்றும் பெறும் செயல்முறை வெளி அலைப் பரவல் எனப்படும்.
இதில் பயன்படுத்தப்படும் அலையின் அதிர்வெண் நெடுக்கம் 30 MHz முதல் 400 MHz வரை இருக்கும்.
இந்த அலைகள் பரப்பியிலிருந்து ஏற்பிக்கு நேர்க்கோட்டில் பயணம் செய்கிறது. எனவே, இது நேர்க்கோட்டு பார்வை (LOS) தகவல் தொடர்புக்கு பயன்படுகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு, செயற்கைக்கோள் தகவல்தொடர்பு, மற்றும் ரேடார் போன்ற தகவல்தொடர்பு அமைப்புகள் வெளி அலை பரவலை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
நெடுக்கம்:
பரப்புகை நிகழும் தொலைவு அல்லது நெடுக்கம் (d) ஆனது விண்ணலைக் கம்பியின் உயரத்தை (h) சார்ந்துள்ளது. இதன் சமன்பாடு, d = \(\sqrt{2Rh}\). இதில், R என்பது புவியின் வளைவு = 6400 km.
15.
(1) தகவல் (அடிக்கற்றை அல்லது உள்ளீடு சைகை)
தகவலானது பேச்சு, இசை, படங்கள் அல்லது கணினித்தரவு போன்ற வடிவில் இருக்கலாம். இந்தத் தகவலானது உள்ளீடு ஆற்றல் மாற்றிக்கு உள்ளீடாக அளிக்கப்படுகிறது.
(2) உள்ளீடு ஆற்றல் மாற்றி
பேச்சு, இசை, ஒலி போன்ற தகவல்களை அதற்குச் சமமான மின் சைகையாக மாற்றும் சாதனமே உள்ளீடு ஆற்றல் மாற்றியாகும். அசல் தகவலின் சமமான மின் சைகையானது அடிக்கற்றை சைகை எனப்படும். ஒலி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒலிவாங்கி உள்ளீடு ஆற்றல் மாற்றிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
(3) பரப்பி
இது பெருக்கி, அலையியற்றி, பண்பேற்றி மற்றும் திறன் பெருக்கி போன்ற சுற்றுகளைக் கொண்டுள்ளது. ஆற்றல் மாற்றியிலிருந்து பெறப்பட்ட மின்சைகை, பெருக்கியால் பெருக்கப்படுகிறது. இந்த அடிக்கற்றை சைகையை அலையியற்றியால் உருவாக்கப்பட்ட உயர் அதிர்வெண் கொண்ட ஊர்தி அலையோடு பண்பேற்றியால் மேற்பொருந்தச் செய்யப்படுகிறது. இந்த பண்பேற்றப்பட்ட சைகை நீண்ட தொலைவுக்கு செல்லும் வகையில் திறன் பெருக்கியால் திறன் அதிகரிக்கப்பட்டு விண்ணலைக் கம்பிக்கு அனுப்பப்படுகிறது.
(4) பரப்பும் விண்ணலைக் கம்பி
இது ரேடியோ சைகையை வெளியில் அனைத்து திசைகளிலும் பரப்புகிறது. சைகை, மின்காந்த அலை வடிவில், ஒலியின் திசைவேகத்தில் (3 x 108 மீ/வி) செல்கிறது.
(5) தகவல் தொடர்பு வழித்தடம்
பரப்பியில் இருந்து ஏற்பிக்கு குறைந்த இரைச்சல் அல்லது குலைவுடன் மின்சைகைகளாக பரப்புவதற்கு அல்லது கொண்டுச் செல்வதற்கு பயன்படுவது தகவல் தொடர்பு வழித்தட ஊடகமாகும். இது இரு வகைப்படும்.
(i) கம்பிவழி தகவல் தொடர்பு
கம்பிகள், கம்பிவடங்கள் மற்றும் ஒளி இழைகள் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல் பரப்புதல் கம்பிவழி தகவல் தொடர்பு ஆகும். இது நீண்ட தொலைவு பரப்புகைக்கு உகந்தல்ல. தொலைபேசி, உள் இணைப்பு மற்றும் கேபிள் தொலைக்காட்சி ஆகியவை உதாரணங்களாகும்.
(ii) கம்பியில்லா தகவல் தொடர்பு
வெளியை தகவல் தொடர்பு ஊடகமாக பயன்படுத்துகிறது. பரப்பு விண்ணலைக் கம்பியின் உதவியால், சைகைகள் மின்காந்த அலைகள் வடிவில் பரப்பப்படுகின்றன. நீண்ட தொலைவு பரப்புகைக்கு பயன்படுகிறது. செல்லிடப்பேசி, வானொலி அல்லது தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஆகியவை உதாரணங்களாகும்.

(6) ஏற்பி
தகவல் தொடர்பு ஊடகத்தின் வழியாக பரப்பப்பட்ட சைகைகள் ஒரு ஏற்கும் விண்ணலைக்கம்பியால் ஏற்கப்பட்டு, மின்காந்த அலைகளை ரேடியோ அதிர்வெண் சைகைகளாக மாற்றி, ஏற்பிக்கு அளிக்கப்படுகிறது. ஏற்பியானது பண்பிறக்கி, பெருக்கி, பகுப்பான் ஆகிய எலக்ட்ரானியக் சுற்றுகளைக் கொண்டுள்ளது. பண்பிறக்கியானது பண்பேற்றப்பட்ட அலையிலிருந்து அடிக்கற்றை சைகையைப் பிரித்தெடுக்கிறது. பின்னர் அடிக்கற்றை சைகை, பெருக்கிகளால் பெருக்கப்படுகிறது. இறுதியாக இவை வெளியீடு ஆற்றல் மாற்றிக்கு அளிக்கப்படுகிறது.
(7) மறுபரப்பிகள்
மறுபரப்பிகள், சைகைகள் அனுப்பப்படும் நெடுக்கம் அல்லது தொலைவை அதிகரிக்கப் பயன்படுகின்றன. இது பரப்பி மற்றும் ஏற்பியின் தொகுப்பாகும். சைகைகள் ஏற்கப்பட்டு, பெருக்கப்பட்டு மற்றும் மாறுபட்ட அதிர்வெண் கொண்ட ஊர்தி சைகை மூலம் மறுபடியும் சேருமிடத்திற்கு அனுப்பப்படுகிறது. விண்வெளியில் உள்ள தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(8) வெளியீடு ஆற்றல் மாற்றி
இது மின் சைகையை மீண்டும் அதன் தொடக்க வடிவமான ஒலி, இசை, படங்கள் அல்லது தரவு ஆகியனவாக மாற்றுகிறது. ஒலிப்பான்கள், படக்குழாய்கள், கணினித் திரை ஆகியன வெளியீடு ஆற்றல் மாற்றிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
16.
குறைந்த அதிர்வெண் கொண்ட அடிக்கற்றை சைகையானது (உள்ளீடு சைகை) அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ சைகையின் மீது மேற்பொருத்தப்படும் நிகழ்வு பண்பேற்றம் எனப்படும்.
வீச்சுப் பண்பேற்றம்:
அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி சைகையின் வீச்சு மாற்றப்பட்டால் அது வீச்சுப் பண்பேற்றம் எனப்படும். இங்கு ஊர்தி சைகையின் அதிர்வெண் மற்றும் கட்டம் மாறாமல் இருக்கும்.
அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்திற்கு ஏற்ப, ஊர்தி அலையின் வீச்சு மாற்றப்படுகிறது.
அதிர்வெண் பண்பேற்றம்:
அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்றாற்போல் ஊர்தி சைகையின் அதிர்வெண் மாற்றப்படுகிறது. இங்கு ஊர்தி சைகையின் வீச்சு மற்றும் கட்டம் மாறுவதில்லை.
விளைவுகள்:
1. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தத்தில் ஏற்படும் உயர்வு, ஊர்தி சைகையின் அதிர்வெண்களை அதிகரிக்கிறது மற்றும் அதன் மறுதலையும் சாத்தியமாகும். இதனால் பண்பேற்றப்பட்ட அலையின் நிறமாலை அமுக்கங்களையும் தளர்வுகளையும் கொண்டுள்ளன.
2. அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் சுழியாக உள்ளபோது உள்ளீடு சைகை இயலாத போதும் ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமில்லை, ஊர்தி அலை அதன் இயல்பான அதிர்வெண்ணில் உள்ளது. அது மைய அதிர்வெண் அல்லது ஓய்வு நிலை அதிர்வெண் என அழைக்கப்படுகிறது.
கட்டப் பண்பேற்றம்
* கட்டப்பண்பேற்றுதல், அடிக்கற்றை சைகையின் கணநேர வீச்சானது ஊர்தி சைகையின் கட்டத்தை மாற்றுகிறது மற்றும் ஊர்தி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் மாறுவதில்லை,
* இது அதிர்வெண் பண்பேற்றத்தைப் போன்றதே ஆகும். ஆனால் ஊர்தி அலையின் அதிர்வெண்ணை மாற்றுவதற்கு பதிலாக இங்கு ஊர்தி அலையின் கட்டம் மாற்றப்படுகிறது.
* அடிக்கற்றை சைகையின் மின்னழுத்தம் நேர்க்குறி திசையில் அதிகரிக்கும் போது பண்பேற்றப்பட்ட அலையின் கட்ட முன்னணி மதிப்பு அதிகரிக்கிறது. அடிக்கற்றை சைகையின் எதிர் அலைச்சுற்றில் ஊர்தி அலையின் கட்டம் பின்தங்குகிறது.
*சைகை மின்னழுத்தம் குறியாக உள்ள போது ஊர்தி அதிர்வெண் மாறாமல் உள்ளது.
* கட்டப் பண்பேற்றத்திலும் ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்படுகிறது. அதிர்வெண் மாற்றமானது பண்பேற்றும் சைகையின் மின்னழுத்தம் மற்றும் சைகையின் அதிர்வெண் ஆகியவற்றைச் சார்ந்தது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தேவாரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-பெருமாள் திருமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil அருமை உடைய செயல் - செய்யுள்-தெய்வமணிமாலை * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Tamil நாகரிகம், தொழில், வணிகம், ஆளுமை - உரைநடை உலகம் -திரைமொழி Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards