12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.
2.
3.
உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.
4.
மூலச் செல்கள் என்பன யாவை? மருத்துவத்துறையில் அதன் பங்கை விளக்குக.
5.
டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?
6.
ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார். எலைசா பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
7.
நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கிய தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக
8.
லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக்கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்?
9.
இயற்கைத் தேர்வு செயல்படுதலை,கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்?
10.
உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.
11.
மரபு மாற்றப்பட்ட பயிர்களில் கிரை ஜீன்களின் (cry genes) பங்கினை விவரி.
12.
ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
13.
வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?
14.
தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.
15.
16.
அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி
17.
கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?
18.
விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.
19.
வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.
20.
21.
டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?
22.
காரணங்கள் கூறுக.
அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.
23.
பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?
24.
உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு.
25.
முக்கிய பால்வினை நோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக.
1.
1. அனைத்து விலங்கினக் கூட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும். ஆனால் எண்ணிக்கை எல்லையில்லாமல் அதிகரிப்பதில்லை.
2. சுற்றுச்சூழல் தாங்குதிறன் எல்லையை எட்டியவுடன், இனக்கூட்டத்தின் எண்ணிக்கை நிலையாகவோ, சுற்றுச்சூழல் நிலைகளுக்கேற்ப ஏற்ற இறக்கமாகவோ காணப்படும்.
3. இனக்கூட்டத் தொகையை பல காரணிகள் நெறிப்படுத்திக்கின்றன. அவை:
i) அடர்த்தி சாராதது - புறக் காரணிகள்
ii) அடர்த்தி சார்ந்தது - அகக் காரணிகள்
(i) உயிரினத்திற்கு கிடைக்கும் இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு ஆகியன புறக் காரணிகள் ஆகும்.
(ii) போட்டி, கொன்றுண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள் ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.
2.
3.
உயிர்த்தொகையின் பண்புகள்:
1. இருப்பிடம் / புவியியல் நிலை
2. காலநிலை மற்றும் இயற்பியல் - வேதியியல் சூழல்
3. முதன்மையாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள்
4. உயிர் தொகைகளுக்கிடையே உள்ள எல்லையைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாது. புல்வெளி மற்றும் வன உயிர்த்தொகையில், சந்திக்கும் இடைநிலைப் பகுதிகள் உள்ளன.
4.
தண்டு செல்கள்:
(i) பெரும்பாலான பல செல் உயிரிகளில் காணப்படும் வேறுபாடு அடையாத செல்கள் ‘மூலச் செல்கள்/குருத்தணுக்கள்/ஆதார செல்கள்/'தண்டு செல்கள்' ஆகும். இவை பல மறைமுகப் பிரிவுகளுக்கு உட்பட்டாலும் தங்களது வேறுபாடு அடையாத் தன்மையைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.
மருத்துவத் துறையில் அதன் பங்கு:
(i) சேதமுற்ற மற்றும் நோயுள்ள உறுப்புகளை மீண்டும் உருவாக்கி எதிர்கால மருத்துவத்துறையில் புரட்சி படைக்க தேவையான திறனுடன் மூலச் செல் ஆராய்ச்சிகள் விளங்குகின்றன.
(ii) தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இயல்புடைய மூலச் செல்கள் 'செல் திறனை' வெளிப்படுத்துகின்றன.
(iii) மூன்று வகை வளர்ச்சி அடுக்குகளான புற அடுக்கு, அக அடுக்கு மற்றும் நடு அடுக்கு ஆகிய அடுக்குகளிலிருந்து உருவாகும் அனைத்து வகை செல்களாகவும் மாறும் திறன் படைத்தவை மூலச் செல்களாகும்.
(iv) பாலூட்டிகளில் இரு முக்கிய மூலச் செல் வகைகள் காணப்படுகின்றன. அவை 'கருநிலை மூலச் செல்கள்' மற்றும் 'முதிர் மூலச் செல்கள்'. கருநிலை மூலச் செல்கள் பகுதித் திறன் கொண்டவை. அவற்றிற்கு புற அடுக்கு, நடு அடுக்கு மற்றும் அக அடுக்கு என்னும் மூன்று அடிப்படை வளர்ச்சி அடுக்குகளையும் உருவாக்கும் திறன் உள்ளது.
(v) கருநிலை செல்கள் பல்திறன் கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை, பல்வகையான செல்களாக மாற்றமுறும் திறன் படைத்தவை. கருக்கோளத்தினுள் காணப்படும் செல்திரளின் மேற்பகுதி திசுக்களில் இருந்து கருநிலை மூலச் செல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
(vi) கருநிலை மூலச் செல்கள் தூண்டப்படும்போது 200க்கும் மேற்பட்ட முதிர்ந்த உடலின் செல் வகைகளாக மாற்றமடையக்கூடும்.
(vii) கருநிலை மூலச் செல்கள் அழிவற்றவை. அதாவது கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊடகத்தில் அவை நன்கு வளர்ந்து தங்களது வேறுபடா நிலையைத் தொடர்ந்து பராமரிக்கவும் செய்கின்றன.
(viii) குழந்தைகள் மற்றும் முதிர்ந்த மனிதர்களின் பல்வேறு திசுக்களில் முதிர் மூலச் செல்கள் காணப்படுகின்றன. முதிர் மூலச் செல் அல்லது உடல் மூலச் செல் பிரிதலடைந்து தன்னைப் போன்றே மற்றொரு செல்லை உருவாக்க இயலும். பெரும்பாலான முதிர் மூலச் செல்கள் பல்திறன் கொண்டவை. இவை உடலின் சேதமுற்ற பாகங்களைச் சரி செய்யும் அமைப்பாகவும் முதிர் உயிரி திசுக்களைப் புதுப்பிக்கும் அமைப்பாகவும் திகழ்கின்றன. முதிர் மூலச் செல்களின் அதிகப்படியான உற்பத்திக்கு மூலாதாரமாக சிவப்பு மஜ்ஜை விளங்குகிறது.
(ix) மனித மூலச் செல்களின் மிக முக்கியமான திறன் வாய்ந்த பயன்பாடு என்னவெனில் செல் அடிப்படையிலான சிகிச்சைகளுக்குப் பயன்படும் செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்தல் ஆகும். மனித தண்டு செல்கள் புதிய மருந்துகளைச் சோதனை செய்து பார்க்க உதவுகின்றன.
5.
டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகு முறை 1990 ல் நடைமுறைக்கு வந்தது.
டி.என்.ஏ மூலக்கூறுகள் மூலம் உடலில் தடைகாப்பு வினைகள் தூண்டப்படுகின்றன.
எதிர்ப்பொருள் தூண்டி புரதத்திற்கு குறியீடு செய்யும் ஒரு மரபணுவை டி.என்.ஏ தடுப்பூசி கொண்டுள்ளது.
இந்த மரபணுவை ஒரு பிளாஸ்மிட்டுக்குள் செலுத்தி பின்னர் ஒரு இலக்கு விலங்கின் உடல் செல்களுக்குள் ஒன்றிணையச் செய்யப்படுகிறது.
உள்ளே சென்ற அந்த டி.என்.ஏ எதிர்ப்பொருள் தூண்டி மூலக்கூறுகளை உருவாக்க செல்களுக்கு உத்தரவிடுகிறது. அவ்விதம் உருவாக்கப்பட்ட மூலக்கூறுகள் செல்களுக்கு வெளியே காணப்படுகின்றன.
செல்களால் உருவாக்கப்பட்டு சுதந்திரமான மிதந்து கொண்டிருக்கும் இம்மூலக்கூறைக் காணும் நமது தடைக்காப்பு, தனது வலுவான எதிர்ப்பை, எதிர்ப்பொருள் உருவாக்கத்தின் மூலம் தெரிவிக்கிறது.
டி.என்.ஏ தடுப்பூசியால் நோயை உருவாக்க இயலாது. ஏனெனில், இது நோயுண்டாக்கும் மரபணுவின் ஒரு பகுதி நகல்களைக் கொண்டுள்ளது.
வடிவமைக்கவும், மலிவாக உற்பத்தி செய்யவும் டி.என்.ஏ தடுப்பூசிகள் எளிதானவை.
இவ்வாறு புதிய தொழில்நுட்ப முறைகளின் மூலம் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் உறுதியான பல நன்மைகளைக் கொண்டுள்ளன. அவையாவன: இலக்கு புரத உற்பத்தி, நீண்டு நிலைக்கும் நோய்த் தடைகாப்பு மற்றும் குறிப்பிட்ட நோயுண்டாக்கிகளுக்கு எதிரான தடைகாப்பு வினைகளை குறைந்த நச்சு விளைவுகளுடன் விரைவாகத் தூண்டுதல் ஆகியன.
6.
(i) ஆம், ஏனெனில் ELISA என்பது HIV நோய் வைரஸினைக் கண்டறிய உதவும் முதல் படிநிலை முறையாகும்.
(ii) நோயூக்கிக்கான HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தியாகும் எதிர்ப்பொருளின் அளவை வைத்து கண்டறியப்படுகிறது.
7.
நிலைப்படுத்துதல் தேர்வு:
1. நிலையான சுற்றுச்சூழல் இருக்கும் போது செயல்படுகிறது.
2. சராசரி புறத்தோற்றப் பண்புகள் உடைய உயிரிகள் தப்பிப் பிழைக்கும்.
3. இரு பக்கங்களிலும் உள்ள மிகை பண்புகள் உயிரினங்கள் உயிரினத் தொகையிலிருந்து நீக்கப்படும்.
4. புதிய சிறப்பினைமாக்கல் நிகழாது.
5. புறத்தோற்ற பண்புகளின் நிலைத்தன்மை தலைமுறைகளிலும் மாறாமல் பேணப்படும்.
6. உதாரணம் புயலின் போது தப்பி வாழ்ந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சராசரி அளவை ஒட்டி இருக்கும்.
7. புயலுக்குத் தாக்குப்பிடிக்க இயலாத சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மாறுபாடுகளின் விளிம்புகளில் சேகரமாகி விடுகிறது. இப்போக்கு நிலைப்படுத்துதல் தேர்வினைக் குறிக்கும்.
இலக்கு நோக்கி முறை:
1. படிப்படியாக மாற்றம் பெறும் சுற்றுச்சூழல் இலக்கு நோக்கிய தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுகிறது.
2. புறத்தோற்றப் பண்புகள் பரவலின் ஒரு முனையிலிருந்து மறுமுனையை நோக்கி படிப்படியாக உயிரினங்கள் நீக்கப்படுகின்றன.
3. எடுத்துக்காட்டாக ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் உடல் அளவில் உள்ள வேறுபாடுகளைக் கூறலாம்.
4 ஆண் மற்றும் பெண் சிட்டுக்குருவிகளின் புறத்தோற்றத்தில் ஒன்று போல தோன்றினாலும் அவற்றின் உடல் எடை வேறுபாடுகள் காணப்படும்.
5. பெண் குருவிகள் அதன் உடல் எடையோடு தொடர்புடைய இலக்கு நோக்கிய தேர்வு முறையை வெளிப்படுத்துகிறது.
உடைத்தல் முறைத் தேர்வு:
1. ஒரே விதமான சுற்றுசூழல் நிலை மாற்றம் பெற்று பல்வகை சுற்றுசூழல் நிலைகளைக் கொண்டதாக மாறும் போது இவ்வகைத் தேர்வு முறை செயல்படுகிறது.
2. இரு முனைகளிலும் காணப்படும் புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
3. சராசரி புறத்தோற்ற பண்புகளை உடைய உயிரினங்கள் இனக்கூட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன.
4. இனக்கூட்டம் துணை இனக்கூட்டங்களாகப் பிரிகின்றன.
5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட சிற்றினங்கள் தோன்றுகின்றன.
6. எடுத்துக்காட்டு: காலபாகஸ் தீவுகளில் வாழும் டார்வீனின் குருவிகளில் உணவாகப் பயன்படும் விதையின் அளவுக்கேற்ப அவற்றின் அலகுகளின் நீளம் மாறுபடுகிறது.
8.
1. ஆகஸ்ட் வீஸ்மான் லாமார்க்கின் பெற்ற பண்புகள் கடத்தப்படுதல் கோட்பாட்டினைத் தவறென்று நிரூபித்தார்.
2. தனது சோதனையில் தொடர்ந்து 20 தலைமுறைகளாக சுண்டெலிகள் வாலினை துண்டித்து பின்னர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தினார்.
3. அனைத்து சுண்டெலிகளும் முழுமையான வாலுடனே பிறந்தன.
4. உடல் செல்களில் ஏற்படும் மாற்றம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது.
5. இனப்பெருக்க செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே மரபுக் கடத்தலுக்கு உரியன என்றும் வீஸ்மான் நிரூபித்தார்.
9.
தொழிற்சாலை மெலானியாக்கம்:
1. எடுத்துக்காட்டு: இயற்கை தேர்வு கரும்புள்ளி அந்திப்பூச்சி (பிஸ்டன் பெட்டுலேரியா) மூலம் விளக்கலாம்.
2. தொழில்மயமாக்கத்திற்கு முன் வெள்ளை மற்றும் கருப்பு நிற அந்திப்பூச்சிகள் பரவலாக காணப்பட்டன.
3. தொழில்மயமாக்கத்திற்கு முன்பு கட்டிடங்களின் வெள்ளை நிற சுவரின் பின்புலத்தில் வெள்ளை நிற அந்திப்பூச்சுகளின் கொன்றுண்ணிகளிடமிருந்து எளிதில் தப்பித்தன.
4. தொழில்மயமாக்கத்திற்கு பின் மரங்களின் தண்டுப் பகுதிகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகைக் கரியினால் கரியநிறமாக மாறின.
5. கருப்பு நிற அந்திப்பூச்சிகள் இந்த கரிய மரத் தண்டுகளில் உருவ மறைப்பு பெற்றன.
6. வெள்ளை நிற பூச்சிகள் கொன்றுண்ணிகளால் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
7. கரிய நிறமுடைய அந்திப்பூச்சிகள் இயற்கையால் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது.
8. இயற்கை கருப்பு நிற அந்திப்பூச்சிக்கு நேர்மறை தேர்வு அழுத்தத்தை வழங்கியது.
8. தகுந்த தகவமைப்புப் பெற்ற உயிரினங்கள் இயற்கைத் தேர்வு காரணமாக அதிகமான வாரிசுகளை உருவாக்கின.
10.
1. உயிரிய உரங்கள் என்பது மண்ணின் ஊட்டச்சத்து தரத்தை வளப்படுத்தக் கூடிய உயிருள்ள நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டதாகும்.
2. இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் போதுமான அளவு கரிமப் பொருட்களை வழங்கி மண்ணின் அமைப்பு முறை, கட்டமைப்பு, நீர் சேமிப்புத் திறன், நேர்மின் அயனி பரிமாற்றத் திறன் மற்றும் கார அமிலத் தன்மை (pH) போன்ற இயற்பிய வேதிய பண்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
3. உயிர் உரங்களின் முக்கிய மூலாதாரங்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் சயனோபாக்டீரியா ஆகும்.
பாக்டீரியா:
1. ரைசோபியம் இணைந்து வாழக்கூடிய நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியா ஆகும்.
2. இந்த பாக்டீரியா பயறு வகை தாவரங்களின் வேர், முடிச்சுகளில் தொற்றி வளிமண்டல நைட்ரஜனை கரிம வடிவில் நிலைப்படுத்துகின்றன.
3. அசோஸ்பைரில்லம் மற்றும் அசோட்டோபாக்டர் போன்றவை தனித்து வாழும் பாக்டீரியாக்கள்.
4. இவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் நைட்ரஜன் அளவை அதிகப்படுத்துகின்றன.
மைக்கோரைசா:
பூஞ்சைகளும் தாவரங்களின் வேர்களும் இணைந்து வாழும் அமைப்பு ஆகும்.
1. இணை வாழ் உயிரியான பூஞ்சை மண்ணிலிருந்து பாஸ்பரஸை உறிஞ்சி தாவரங்களுக்கு அளிக்கின்றது
2. மேலும் இந்த தாவரங்கள் வேரிலுள்ள நோயூக்கிகளுக்கு எதிரான எதிர்ப்பு திறன், உப்புத் தன்மை மற்றும் வறட்சி தாங்கு திறன், தாவர வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளையும் பெறுகின்றன.
3. எடுத்துக்காட்டாக, குளோமஸ் என்ற பேரினத்தின் பல உறுப்பு இனங்கள் இத்தகைய மைக்கோரைசாவை ஏற்படுத்துகின்றன.
சயனோ பாக்டீரியா (அ) நீலப் பசும்பாசிகள்:
1. இவை தனித்து வாழ்ந்து நைட்ரஜனை நிலைப்படுத்தும் புரோகேரியாட்டிக் உயிரிகள் ஆகும். எ.கா. ஆசிலாக்டோரியா, நாஸ்டாக், அனபீனா, டோலிபோத்ரிக்ஸ்.
2. இங்கு அவை பெருக்கமடைந்து மூலக்கூறு நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
3. இவை இன்டோல் - 3 - அசிட்டிக் அமிலம், இண்டோல் - 3 - பியூட்டைரிக் அமிலம், நாப்தலீன் அசிட்டிக் அமிலம், அமினோ அமிலங்கள், புரதங்கள், வைட்டமின்கள் போன்ற தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியை தூண்டும் பொருட்களை சுரக்கின்றன.
இவ்வாறு உயிரிய உரங்கள் பொதுவாக இயற்கை வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையான வழிகளில் தாவரங்களை பயிர் செய்தல் மற்றும் விலங்குகளை வளர்த்தல் இயற்கை வேளாண்மை ஆகும்.
11.
1. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்பது மண்ணில் வாழும் பாக்டீரியா ஆகும்.
2. இது கிரை டாக்சின் என்ற நச்சினை பெற்றிருப்பதால் உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இந்த நச்சினை தோற்றுவிக்கும் குறிப்பிட்ட ஜீனை பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுத்து மரபு பொறியியலில் துணையோடு தாவரத்திற்குள் செலுத்தி பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட தாவரத்தினை எ.கா. Bt - பருத்தியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
4. ஸ்போர்கள் உற்பத்தியின் போது டெல்டா என்டோடாக்சின் என்ற படிக புரதத்தினை, பாக்டீரியா உருவாக்குகிறது. இது கிரை ஜீன் மூலம் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
5. குறிப்பிட்ட வரிசைப் பூக்களான லெபிடாப்டீரா, டிப்டீரா, கோலியாப்டீரா மற்றும் ஹைமனாப்டீரா பூச்சியினங்களுக்கு எதிராக டெல்டா எண்டோடாக்சின் வினைபுரிய வல்லது
6. இவ்வகை பூச்சிகள் இந்த நச்சுகளை உட்கொள்ளும் போது காரத் தன்மையுள்ள செரிமான மண்டலம் கரையாத படிகப் புரதத்தினை கரையும் புரதமாக மாற்றுகிறது.
7. இந்த நச்சு குடல் செல்லுக்குள் புகுந்து குடலியக்கத்தை செயலிழக்கச் செய்கிறது.
8. இதனால் பூச்சிகள் உண்ணுவதை நிறுத்தி பட்டினியால் இறக்கின்றன.
12.
| பண்பு | RNA | DNA | |
| 1 | இழைகள் | ஓரிழையானது | இரண்டு இழைகளால் ஆனது விதிவிலக்கு - சில DNA வைரஸ்கள் |
| 2 | சர்க்கரை | ரிபோஸ் சர்க்கரை | டி - ஆக்சிரைபோஸ் சர்க்கரை |
| 3 | நைட்ரஜன் காரங்கள் | அடினைன், குவானைன் யூராசில் மற்றும் சைட்டோசின் | அடினைன், குவானைன் தயமின் மற்றும் யூராசில் |
13.
1. DNA அமைப்பு மாதிரியைக் கொண்டு - DNA பாதி பழைமை பேணும் தன்மை - தெரியவந்தது.
2. இரட்டை இழை பிரிந்து - ஒரு முனையில் ஹைட்ரஜன் பிணைப்பு நீங்கி பிரிதலடைய ஒரு இழை வார்ப்பாக செயல்பட்டது.
3. மேலும் சார்காஃபின் 4 கார இணை விதியை இவர்கள் பயன்படுத்தி மேலும் இரட்டிப்பாதல் மற்றும் 4 காரங்கள் 20 அமினோ அமிலங்களுக்கும் குறியீடாவது குறித்த புரிதல் சாத்தியமானது.
4. DNA இந்த கார இணையில் ஏற்படும் மாற்றம் அமினோ அமிலக் குறியீடு மாறுவதால் திடீர் மாற்றம் (அ) சடுதி மாற்றம் ஏற்படக்காரணமானது போன்றவைகளை தெளிவாக இருவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தது.
14.
1. வெளி ஊடகத்திலிருக்கும் லாக்டோஸ் பாக்டீரியா செல்லினுள் நுழைய பெர்மியோஸ் நொதி தேவைப்படுகிறது
2. லாக்டோஸ் செல்லினுள் நுழைய இயலவில்லை எனில் அது தூண்டியாக செயல்பட இயலாது.
3. அது லாக் - ஓபரானை தடுக்கும் அடக்கிப் புரதத்துடன் இணைந்து அதனை செயலற்றதாக்குகிறது லாக் ஓபரான் - செயல்பட தொடங்குகிறது.
4. எனவே லாக் ஒபரானின் தாழ் நிலை வெளிப்பாடு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.. அதனால் பல்வேறு மரபினோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
15.
16.
(i) மனித அண்டசெல் நுண்ணிய, ஓடு அற்ற, கரு உணவு அற்ற செல்.
(ii) இதன் சைட்டோபிளாசம் 'பிளாசம்' எனப்படும்.
(iii) இதன் பெரிய உட்கரு 'வளர்ச்சிப்பை' (Germinal vesicle ) எனப்படும்.
(iv) அண்ட செல் 3 உறைகளைக் கொண்டது.
1) உட்புற மெல்லிய ஊடுருவும் விட்டலின் சவ்வு.
2) தடித்த நடு அடுக்கு 'சோனா பெலூசிடா'
3) வெளிப்புற தடித்த 'கொரோனா ரேடியேட்டா' நுண்பை செல்களால் சூழப்பட்டது.
(iv) விட்டலின் சவ்வுக்கும், சோனா பெலூசிடாவுக்கும் இடையே விட்டலின் புற இடைவெளி (Perivitelline Space) உள்ளது.
17.
(i) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின்
(ii) hCS - மனித கோரியானிக் சோமட்டோமாம்மோட்ரோபின்
(iii) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்
(iv) ஈஸ்ட்ரோஜன்
(v) புரோஜெஸ்டிரான்
(vi) ரிலாக்ஸின்
18.
(i) இயல்பான மனித உடல் வெப்பத்தில், வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.
(ii) வயிற்றின் வெளிப்புறமாக அமைந்துள்ள தோலால் ஆன பை போன்ற அமைப்பு விதைப்பை ஆகும்.
(iii) இதனால் இயல்பான உடல் வெப்பநிலையை விட 2 முதல் 3o C குறைவான வெப்பநிலை அடைகிறது.
(iv) இவ்வாறாக, விதைப்பையானது ஒரு வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு, விந்தணுக்களை உருவாக்கிறது.
19.

இவ்வகையான பால் நிர்ணயித்தலில் ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்புகளை (ஹெடிரோகேமிட்டிக்) உடையவர்.
XX -XO வகை
(i) எ.கா.பூச்சிகள்,கரப்பான்பூச்சி,வெட்டுக்கிளி.
(ii) ஆண்கள் ஹெட்டிரோகேமிட்டிக் வகையினர் ஒரு X குரோமோசோம் உடையவர்.
(iii) இரண்டு வகையான விந்துகளை உற்பத்தி செய்கின்றன.
(iv)ஒன்று X குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இல்லை.
(v) சேய்களின் பால் அவைகளின் விந்துகள் எந்த அண்டத்துடன் இணைகிறதோ அதைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. X விந்து அல்லது Y விந்து.
XX-XY வகை(லைகஸ் வகை )
(i) உ.ம். மனிதன் மற்றும் பழப்பூச்சி
(ii) ஆண்கள் வேறுபட்ட இனச்செல் பண்பினை உடையவர்.
(iii) அவர்கள் இரண்டு விதமான விந்துக்களை சில 'X' குரோமோசோம் கொண்டும் உள்ளன.
(iv) கருவின் பாலானது அது எவ்வகை விந்துவால் கருவுறுதல் அடைகிறது என்பதை பொறுத்தது.
(v) 'X' குரோமோசோம் உடைய விந்துக்கள் பெண் உயிரியையும் 'Y' குரோமோசோம் உடைய விந்துக்கள் ஆண் உயிரியையும் உருவாக்கும்.
20.
21.
(i) தீவிர மூளை வளர்ச்சி குறைபாடு
(ii) மைய நரம்பு மண்டல வளர்ச்சி பாதிக்கப்படுதல்
(iii) தட்டையான மூக்கு
(iv) செவி குறைபாடு
(v) வாய் எப்போதும் திறந்திருத்தல்
(vi) நாக்கு வெளியே நீட்டியவாறு இருத்தல்
22.
காரணம்:
அ) இராணிதேனீ முட்டையிடும்போது சில முட்டைகள் கருவுறாமல் இடப்படுகின்றன அது ஆண் தேனீயாக உருவாகிறது.
ஆ) ஆண் தேனீக்கள் கருவுறாத முட்டையிலிருந்து உருவாகுவதால் விந்தின் 16 குரோமோசோம்களும். அண்டத்தின் 16 குரோமோசோம்களும் இணைந்து 32 குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
23.
(i) பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் பெற்றோர்களின் பண்புகளையே கொண்டிருக்கும்.
(ii) இதையே பிரதி எனவும் சொல்லலாம்.
(iii) பிரதி என்பது பெற்றோரின் சாயலை கொண்ட சேய்களாகும்.
24.
ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியில் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. சில உயிரினங்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும்.
விலங்குகளில் உள்ள துலங்கல்களின் வகைகள்:
i) ஒழுங்கமைவு:
சில விலங்கினங்கள் உடற்செயலியல் செயல்கள் மூலம் சீரான தன்நிலை காத்தலைப் பராமரிக்கின்றன அச்செயல்பாடுகள் வழியாக உடலின் வெப்பநிலை, அயனிகள், ஊடுகலப்பு சமன் ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
எ.கா: பறவைகள், பாலூட்டிகள் மற்றும் சில எளிய முதுகுநாணிகள், மற்றும் முதுகு நாணற்ற சிற்றினங்கள்.
ii) ஒத்தமைவு:
பெரும்பாலான விலங்குகளால் உள்சூழ்நிலைகளை நிலையாகப் பராமரிக்க முடிவதில்லை. அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுசூழல் வெப்பநிலைக்கேற்ப மாறுகிறது. மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரிகளில், உடல் திரவத்தின் ஊடுகலப்புச் செறிவு சுற்றுச்சூழலில் உள்ள நீரின் ஊடுகலப்புச் செறிவிற்கேற்ப மாற்றமடைகிறது.
இத்தகைய விலங்குகள் ஒத்தமைவான்கள் எனப்படும். அதீத சூழல்களில் விலங்கினங்கள் வலசை போவதன் மூலம் தங்களின் வாழிடங்களை இடம் மாற்றிக் கொள்கின்றன.
iii) வலசை போதல்:
ஒரு வாழிடத்தில் வாழும் விலங்குகள் அங்கு வாழும் அதிக சூழல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர்ந்து அதன் வாழிடத்தில் சூழல் அழுத்தம் நீங்கும்போது அவை மீண்டும் தனது பழைய இடத்திற்கு வருகின்றன.
சைபீரியாவில் வாழும் பறவைகள் கடுங்குளிர் பருவத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வலசை போதல் முறையில் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டின் வேடந்தாங்கல் பகுதிக்கு வருகின்றன.
iv) செயலற்ற நிலை:
சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில் சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத்தன்மையை மேற்கொள்கின்றன. சில கரடிகள் குளிர்காலங்களில் குளிர் உறக்கத்தையும், சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தையும். மேற்கொள்கின்றன. சில எளிய வகை உயிரினங்கள் அதன் வாழ்க்கை சுழற்சியின் சில நிலைகளை இடைநிறுத்தம் செய்து கொள்கின்றன. இது "வளர்ச்சித் தடை நிலை" எனப்படும்.
25.
| நோயின் பெயர் | நோய்க்காரணி | அறிகுறிகள் | நோய் வெளிப்படும் காலம் |
| பாக்டீரிய பால்வினைத் தொற்று (Bacterial STI) | |||
| கொனோரியா அல்லது வெட்டை நோய் (Gonorrhoea) |
நைசீரியா கொனோரியா (Neisseria gonorrhoeae) |
(i) சிறுநீர் வடிகுழாய், மலக்குடல், தொண்டை, பெண்களின் கருப்பைவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு (ii) பிறப்புப் பாதையில் வலி, சீழ் வடிதல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு |
2-5 நாட்கள் |
| கிரந்தி அல்லது மேகப்புண் (Syphilis) | டிரிபோனிமா பாலிடம் (Treponema pallidum) |
(i) முதல்-நிலை - பாலுறுப்புகளின் புறப்பகுதியில் வலியற்ற புண்கள். (ii) இரண்டாம் நிலை - தோல் புண்கள், சொறி, தோல் தடிப்பு, மூட்டுகளில் வீக்கம் காய்ச்சல் மற்றும் முடி உதிர்வு |
10-90 நாட்கள் |
| (iii)மூன்றாம் நிலை - பாலுறுப்புகளின் மூக்கு, கீழ்க்கால் பகுதி மற்றும் அண்ணப்பகுதியில் நாள்பட்ட புண்கள், இயக்கமின்மை மனநல பாதிப்பு, பார்வைகோளாறு இதயப்பிரச்சனை, மென்மையான பரவும் தன்மையற்ற கட்டிகள் போன்றன. | |||
| கிளாமிடியாசிஸ் (Chalmy diasis) |
கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் (Chlamydia trachomatis) |
கண் இமை அரிப்பு, சிறுநீரக இனப்பெருக்கப் பாதை, சுவாசப்பாதை மற்றும் கண்ணின் கன்ஜங்க்டிவா ஆகியவற்றில் தூண் எப்பிதீலிய செல்கள் பாதிப்பு | 2-3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் வரை |
| லிம்போகிரானுலோமா வெனரியம் (Lymphogranuloma venereum) | கிளாமிடியா ட்ராகோமேடிஸ் | பிறப்புறுப்பின் தோல் அல்லது கோழைப்படல பாதிப்பு, சிறுநீர் வடிகுழாய் அழற்சி, உள்கருப்பை வாய் அழற்சி, வாய் அழற்சி, ஆங்காங்கே கேடு தரும் புண்கள், இனப்பெருக்க உறுப்பு யானைக்கால் நோய். | |
| வைரஸ் பால்வினைத் தொற்று(Viral STI) | |||
| பிறப்புறுப்பு அக்கி (Genital herpes) |
ஹெர்பஸ் சிம்ப்லெக்ஸ்(Herpes simplex virus) | (i) பெண்களின் பெண் கிரிவெளியிதழ், கலவிக்கால்வாய், சிறுநீர் வடிகுழாய் ஆகியனவற்றைச் சுற்றி புண்கள் ஆண்களில் ஆண்குறியைச் சுற்றி புண்கள். (ii) சிறுநீர் கழிக்கும் போது வலி (iii)மாதவிடாய் சுழற்சிகளுக்கிடையே இரத்தப்போக்கு (iv) தொடை இடக்குகளின் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம். |
2-21 நாட்கள் (சராசரி 6 நாட்கள்) |
| பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts) |
மனித பாபிலோமோ வைரஸ் (HPV)(Human papilloma virus) | (i) இன உறுப்புகளின் வெளிப்பகுதி, கருப்பைவாய், மலவாயைச் சுற்றிய பகுதிகளில் கடினமான புடைப்புகள் (கட்டிகள்) | 1-8 மாதங்கள் |
| கல்லீரல் அழற்சி (Genital warts) | ஹிபாடிடிஸ் வைரஸ்(HBV) (Hepatitis-B virus) | (i) சோர்வு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் தோல் தடிப்பு,வயிற்றுவலி. (ii) கல்லீரல் இறுக்கம், இறுதி நிலையில் கல்லீரல் செயலிழப்பு |
30-80 மாதங்கள் |
| எய்ட்ஸ்(AIDS) | மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ்(HIV) | (i) நிணநீர், முடிச்சுகள் பெரிதாதல்,நீண்டநாள், காய்ச்சல்,நீண்டநாள் வயிற்றுப்போக்கு, உடல் எடை குறைதல், இரவில் வியர்த்தல். | 2-6 வாரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலும் |
| பூஞ்சை பால்வினைத் தொற்று(Fungal STI) | |||
| கேன்டிடியாசிஸ் (Candidiasis) |
கேன்டிடா அல்பிகன்ஸ்(Candida albicans) | (i) வாய், தொண்டை, குடற்பாதை மற்றும் கலவிக்கால்வாய் ஆகிய பகுதிகளில் தாக்கம் (ii) கலவிக்கால்வாயில் அரிப்பு (அ) புண்கள் (iii) கலவிக்கால்வாய் திரவம் மிகைப்போக்கு (iv) வலியுடன் சிறுநீர் கழித்தல் |
|
| புரோட்டோசோவா பால்வினைத் தொற்று (Protozoan STI): | |||
| டிரைக்கோமணியாசிஸ் (Trichomoniasis) |
டிரைகோமோனாஸ் வாஜினாலிஸ் (Trichomonas vaginalis) | (i) கலவிக்கால்வாய் அழற்சி, பச்சை மஞ்சள் கலந்த கலவிக் கால்வாய் திரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு, சிறுநீர் வடிகுழல் அழற்சி, விந்தக மேல் சுருள் நள அழற்சி, புரோஸ்டேட் சுரப்பி அழற்சி | 4-28 நாட்கள் |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards