12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Biology subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?
5 Marks
2.
பழப்பூச்சியை (டிரோசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?
3.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?
4.
பல்வேறு மாதவிடாய்க் குறைபாடுகளைப் பட்டியலிடுக.
5.
கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

6.
GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.
7.
“ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.
8.
ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மெரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன?
9.
போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக.
10.
'சாதாரண சளிக்கு' எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
11.
இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள் எவை?
12.
எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவாய்?
13.
இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?
14.
நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.
15.
உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் எப்பொழுது உருவாகிறது?
16.
நியாண்டர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை?
17.
மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை? வகைகளை விளக்குக.
18.
நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை குறிப்பிடுக.
19.
மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன் (recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளை விளக்குக
20.
பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
21.
இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக.
22.
வடகிழக்கு இந்தியாவில் இடம் மாறும் வேளாண்மை பல்வகைத்தன்மையின் முக்கியமான அச்சுறுத்தலாகும்-நிரூபி.
1.
| ஒருங்கிணைப்பு | கருவுறுதல் | ||
|---|---|---|---|
| 1. | ஆண் மற்றும் பெண் முந்தைய மூல அணு உட்கரு, கருவுறுதலுக்குப் பின் இணைதல் | 1. | ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவதை கருவுறுதல் |
| 2. | கருவின் ஈரிணை நிலையை உறுதி செய்கிறது. | 2. | இது கருவுறுதலை உறுதிப்படுத்துகிறது. |
5 Marks
2.
(i) C.B. பிரிட்ஜஸ் என்பவர் முதன் முதலில் பழப்பூச்சிகளில் மரபணு சமநிலை மூலம் பால் நிர்ணயிக்கப்படுவதைக் கண்டறிந்தார்.
(ii) பெண் தன்மைக்கான மரபணுக்களும் உடல் குரோமோசோம்களுக்கும் இடையேயான மரபுச் சமநிலையை இப்பூச்சிகளில் பாலினத்தை நிர்ணயிக்கிறது.
(iii) ஒவ்வொரு X குரோமோசோமிலும் பெண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5.
(iii) ஆண் தன்மைக்கான மரபணுக்கள் உடல் குரோமோசோம்களில் உள்ளன.அவற்றின் மதிப்பு 0.
(iv) இயல்பான ஆண் A A xy ஆகும். எனவே ஆண் பெண் நிர்ணய விகிதம் 2:3 (AA xx =2.3) என்ற விகிதத்தில் உள்ளது. இங்கே மரபணு சமநிலை பெண் உயிரிக்கு சாதகமாக அமைகிறது.
3.
குரோமோசோம் சாரா மரபு கடத்தல்:
குரோமோசோம் சாராத மரபுக் கடத்தல் என்பது சைட்டோபிளாசத்தில் உள்ள மரபு சாரா மரபணுக்களினால் ஏற்படும் மரபுக் கடத்தல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) லிம்னேயே நத்தை ஓட்டின் சுருள் தன்மை
பாரமீசியத்தின் கப்பா துகள்கள்
4.
மாதவிடாய் குறைபாடுகள்:
மாதவிலக்கின்மை என்பது மாதவிடாய் ஏற்படாத நிலை ஆகும்.
முதல்நிலை மாதவிலக்கின்மை :
முதல்நிலை மாதவிலக்கின்மை என்பது 18 வயது வரை பூப்படையாமல் இருக்கும் நிலை ஆகும்.
இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை:
இரண்டாம் நிலை மாதவிலக்கின்மை என்பது தொடர்ச்சியாக அடுத்தடுத்த மூன்று மாதங்களுக்கு மாதவிலக்கின்மை ஏற்படுதல் ஆகும்.
பல மாதவிடாய் நிலை:
பல மாதவிடாய் நிலை என்பது மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 21 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலை ஆகும்.
5.
அ) விட்டலின் சவ்வு
ஆ) உட்கரு
இ) சோனா பெலூசிடா
ஈ) கொரோனா ரேடியேட்டா
6.
கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் :
(i) குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்களுக்கு உகந்தது.
(ii) கணவர், உடல் நலமிக்க கொடையாளிடம் இருந்து விந்து சேகரித்தல்.
(iii) சேகரிக்கப்பட்ட விந்து செல்கள், கலவிக் கால்வாய் வழி கருப்பையினுள் செலுத்தல்.
(iv) விந்து செல்கள் அண்டநாளம் நோக்கி நீந்திச் சென்று, இயல்பான கர்ப்பம் ஏற்படும்.
7.
ஆரோக்கியமான மக்கள், உடல்நலம் மிக்க குழந்தைகளைப் பெற்று சமுதாயத்திற்கு பங்களிக்கின்றனர்.
i) பாலியல் கல்வி:
விடலைப் பருவம் சார்ந்த மாற்றங்கள் பற்றிய தகவல்களை பாலியல் கல்வி மூலம் பள்ளிகளில் கொண்டு வருதல்.
ii) கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வு:
மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த கருத்தடை முறைகள் பயன்படும். எனவே எளிதில் கிடைக்கும், பயனர் நட்பு கருவிகள், பக்க விளைவு இன்றி, பாலுணர்வைத் தடை செய்யாமல் பயன்படுத்தலாம்.இதில் தற்காலிக,நிரந்தர முறைகள் உள்ளன.
(எ.கா).1) இயற்கைக் கருத்தடை முறை - பாலூட்டும் கால மாதவிடாயின்மை
2) தடுப்பு முறைகள் - வேதிப்பொருட்கள், இயக்கத் தடுப்பு முறை
3) ஹார்மோன் வழித்தடுப்பு
4) உள்கருப்பைச் சாதனங்கள் (Ex,CuT)
8.
1. நோயாளியின் இரத்த மாதிரியை எடுத்து சோதித்தால், அதில் மெரோசோயீட்டுகள் காணப்படும் பட்சத்தில் அது மலேரியா என உறுதிப்படுத்தப்படுகிறது.
2. மலேரியா நோய்க்கான அறிகுறிகள் - மலேரியா வலிப்பு, அதிகப்படியான காய்ச்சல்.
3. சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட குயினைன் மருந்து மலேரியாவை கட்டுப்படுத்த உதவுகிறது.
4. மற்றும் கொசுக்களின் இளம்வுயிரிகளை உண்ணும் கம்பூசியா போன்ற மீன்களை வளர்க்கலாம். கதவு மற்றும் ஜன்னல்களில் கொசு வலை அடிக்கலாம்.
9.
போதை மருந்துகள் மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகள்
1. லேசான நடுக்கம் முதல் வலிப்பு வரை.
2. கடுமையான கிளர்ச்சி
3. மன அழுத்த உணர்வு
4. கவலை, பதட்டம், படபடப்பு.
5. எரிச்சல், தூக்கமின்மை.
6. தொண்டை வறட்சி.
10.
1. சாதாரண சளிக்கு எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாது.
2. ஏனென்றால் ஏறத்தாழ 200 வகையான வைரஸ்கள் சாதாரண சளிக்கு காரணமாக இருக்கின்றன.
3. அதனால் எல்லா வகையான வைரஸ்க்கும் நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சிரமம்.
11.
இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள்
1. லியூக்கோசைட்டுகள் - நியூட்ரோபிலிகள், மோனோசைட்டுகள்.
2. மேக்ரோஃபேஜ்கள்.
3. சேதமடைந்த திசுக்கள்.
4. இயற்கைக் கொல்லி செல்கள்.
12.
எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய எளிய இரத்த பரிசோதனை முறைகள் உள்ளன.
1. எலிசா சோதனை - இது முதல் நிலை சோதனையாகும்.
2. வெஸ்டர்ன் பிளாட் சோதனை - உறுதிப்படுத்தும் சோதனையாகும்.
3. எச்.ஐ.வி 1 - நியூக்ளிக் அமிலம் சோதனையாகும்.
4. ஆர்.என்.ஏ சோதனை - இது விலை உயர்ந்தது.
5. PCR சோதனை - எச்.ஐ.வியின் ஆர்.என்.ஏ சோதனையாகும்.
13.
I - படியெடுத்தல்:
டி.என்.ஏவில் காணப்படும் செய்திகள் நகலெடுக்கப்படும் செயல்முறை:
DNA வின் ஒரு இழையில் காணப்படும் புரதத்திற்கான தகவல்களை குறியீடாக செல்லுக்கு கொண்டுசெல்வது தூது RNA (அ) mRNA
II - மொழிபெயர்த்தல்:
1. தூதுவிலுள்ள தகவல் குறியீடுகள் செல்லின் உட்கருவிலிருந்து சைட்டோபிளாசத்தை அடைகிறது.
2. இங்கு ரிபோசோம் RNA, கடத்தி RNA மற்றும் தூது RNA இவற்றுடன் பல்வேறு நொதிகளும் ஒரு அமைப்பாக சேர்ந்து மொழி பெயர்த்தல் படி நிலை நடைபெறும்.
3. இவ்வாறு ஒரு படிநிலைகளும் செல்லில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் நடைபெறுகிறது.
4. எனவே புரதச் சேர்க்கை இரண்டு படிநிலைகளில் நடைபெறுவதன் அனுகூலமாகும்.
14.
1. குரோமோசோம் - குரோமேட்டினால் ஆனவை
2. குரோமேட்டின் ⟶ தொடர்ச்சியான மீள் தோன்று அலகுகளான நியூக்ளியோசோம்களால் உருவானது. கோர்ன்பெர்க் - நியூக்ளியோசோம் மாதிரி
3. இதில் H2A, H2B, H3 & H4 எனும் நான்கு ஹிஸ்டோன் புரதங்களின் இரண்டு மூலக்கூறுகள் வரிசையாக அமைந்து எட்டு மூலக்கூறுகளை உடைய அலகை உருவாக்குகின்றன. இதற்கு ஹிஸ்டோன் எண்மம் என்று பெயர்.
4. நேர்மின்தன்மை கொண்ட ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி, எதிர்மறை தன்மை கொண்ட DNA உறையாக அமைந்து நியூக்ளியோசோமை உருவாக்குகிறது.
5. மாதிரி நியூக்ளியோசோம் ஒன்றில் - 200 கார இணைகள் உள்ளன
6. அடுத்தடுத்துள்ள நியூக்ளியோசோம்களை, நொதிகளின் உதவியுடன் இணைப்பு DNA க்கள் இணைக்கின்றன.
7. ஹிஸ்டோன் எண்மத்தை சுற்றி DNA இரு முழுமையான திருகுகளை உருவாக்கியுள்ளன.
8. இந்த திருகுகளை மூலக்கூறு H1 (இணைப்பு மூலக்கூறு) மூடுகிறது.
9. H1 இல்லாத நிலையில் குரோமேட்டின் மணிகோர்த்த மாலை போல் தெரிகிறது.
10. இவ்வமைப்பின் எந்த இடத்திலும் DNA உட்செல்லவும் நியூக்ளியோசோமை விட்டு வெளியேறவும் முடியும்.
11. நியூக்ளியோசோமின் மடிப்பிலிருந்து தோன்றும் நீளமுள்ள இழை - ஒரு சுற்றுக்கு ஆறு நியூக்ளியோசோமை கொண்ட வரிச்சுருளமைப்பை (Solenoid) உருவாக்குகிறது.
12. இது மேலும் மடிப்புற்று - குரோமேடின் இழைகளையும், குரோமேடின் இழை மேலும் மடிப்புற்று குரோமேடிடுகளையும், குரோமேடிடுகள் ⟶ குரோமோசோம்களாகின்றன.
13. உயர்நிலை குரோமேடின் பொதிவுக்கு ஹிஸ்டோனல்லாத குரோமோசோம் புரதங்கள் தேவைப்படுகின்றன.
| யூகுரோமேட்டின் | ஹெட்ரோகுரோமேட்டின் | |
| 1. | தளர்வாக பொதியப்பட்டுள்ளது | நெருக்கமாக பொதியப்பட்டுள்ளது |
| 2. | சாயமேற்காது | சாயமேற்கும் |
| 3. | படியெடுத்தலில் தீவிரமாக பங்கேற்கும் | படியெடுத்தலில் பங்கேற்காது |
15.
1. பாக்டீரியாவை கொல்வதற்கோ (அ) அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கோ உருவாக்கப்பட்ட உயிர் எதிர்பொருளை வலிமை இழக்கச் செய்யும் திறனை பாக்டீரியா பெரும் போது "உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறம்" உருவாகிறது.
2. இது பொது சுகாதாரத்திற்கு தீவிர அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
3. உயிர் எதிர்பொருட்களின் பயன்பாடு மற்றும் அளவுக்கு அதிகமான பயன்பாடு ஆகியவை உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத் திறனை முடக்கிவிடுகிறது.
4. மேலும் இது மோசமான தொற்று தடுப்பு கட்டுப்பாடு மூலமும் நிகழ்கிறது.
5. அங்கீகரிக்கப்பட்ட உடல் நல வல்லுனரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உயிர் எதிர்பொருளை பயன்படுத்த வேண்டும்.
6. பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்களை விட குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்பொருட்களுக்காக அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
7. இவை திறம்பட மற்றும் துல்லியமாக குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை குறிவைத்து தாக்குவதோடு அந்த நுண்ணுயிரிகளில் எதிர்ப்பு திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது.
8. எதிர்பொருட்களுக்கு எதிர்ப்பு திறன் பெற்ற பாக்டீரியத் திரிபுகள் "சூப்பர் பக்" என்று கூறப்படுகிறது.
16.
நியாண்டர்தால் மனிதன் நவீன மனிதரிடமிருந்து பின்வரும் பண்புகளால் மாறுபட்டுள்ளான்
1. பாதி நிமிர்ந்த நிலை
2. தட்டையான மண்டை ஓடு
3. சாய்வான நெற்றி
4. மெலிதான பெரிய கண் குழிகள்
5. கனமான கண்புருவ மேடுகள்
6. துருத்திய தாடைகள் கன்னங்கள் அற்றதன்மை
17.
மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
வழக்கமான நடைமுறைகளில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, மறுசேர்க்கைத் தடுப்பூசிகள் சீரான தரத்துடன் குறைவான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. மறுசேர்க்கைத் தடுப்பூசிகளின் பல்வேறு வகைகளாவன.
(i) துணை அலகு தடுப்பூசிகள்
(ii) வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்
துணை அலகு தடுப்பூசிகள்:
(i) நோயுண்டாக்கும் உயிரியை, முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அவ்வுயிரியின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு 'துணை அலகு தடுப்பூசிகள்' என்று பெயர்.
(ii) புதிய வகை துணை அலகு தடுப்பூசிகள் தயாரிக்க டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஏற்றதாகும்.
(iii) இம்முறையில் நோயுண்டாக்கும் உயிரியிலுள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏக்கள் ஆகிய கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
(iv) தயாரிப்பில் தூய்மை, நிலைப்புத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவை இவ்வகைத் தடுப்பூசிகளின் நன்மைகளாகும்.
வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்:
(i) மரபியல்பு மாற்றப்பட்ட நோயுண்டாக்கி உயிரிகளில் அவற்றின் நோயுண்டாகும் தன்மை நீக்கப்பட்டு தடுப்பூசிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாக்டீரியா அல்லது வைரஸ்களை மரபுப் பொறியியல் மாற்றம் மூலம் உயிருள்ள தடுப்பூசிகளாகப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பூசிகள் 'வலு குறைக்கப்பட்ட மறுசேர்க்கைத் தடுப்பூசிகள்' எனப்படும்.
18.
நன்மைகள்:
(i) மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நன்மை பயக்கின்றது. மருத்துவத் துறையில் புரதங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்திக்கு உதவுகின்றது.
(ii) தண்டு செல் ஆராய்ச்சிக்கு வழிகோலுகிறது.
பாதகங்கள்:
(i) விலங்கு மற்றும் மனித செயல் முனைவோர் நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமைக்கான சவாலானது எனக் கருதுகின்றனர். இச்செயல் பரிணாமத்தை மாற்றி இனத்தொகை மற்றும் சூழ்நிலை மண்டலத்தில் தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதுகின்றனர்.
(ii) நகலாக்க செயல்முறை கடினமானது மற்றும் விலையுயர்ந்தது.
(iii) இச்செயலால் விலங்குகள் பாதிப்படையும்
(iv) வாடகைத்தாய் உயிரிகள், எதிர்மறையாகி கேடுகளுக்கு ஆட்படுவதுடன் நகலாக்க விலங்குகள் நோய் பாதிப்புக்கு உட்பட்டு உயர் இறப்பு வீதம் ஏற்படுகின்றது.
(v) நகலாக்க விலங்குகளின் இறைச்சியை உண்பதால் உடல் நலனில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது.
(vi) இயல்பான விலங்குகளை விட நகலாக்க விலங்குகள் விரைவாக மூப்படைவதால் பெற்றோர் உயிரியை விட குறைந்த நலமுடையனவாக உள்ளன.
(vii) 90% மேற்பட்ட நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.
19.
(i) ஆய்வுக் குழுவானது 'சொமட்டோஸ்டேட்டின்' மற்றும் 'சொமட்டோடிரோபின்' என்னும் இருவகை மனித வளர்ச்சி ஹார்மோன்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டது பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படும் இந்த பெப்டைடு ஹார்மோன்கள், அமினோ அமில உள்ளெடுப்பு மற்றும் புரத உற்பத்தியை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு மனித வளர்ச்சியைத் தூண்டவும் நெறிப்படுத்தவும் செய்கின்றன.
(ii) வளர்ச்சி ஹார்மோன் பற்றாக்குறையால் 'குள்ளத்தன்மை' ஏற்படுகிறது. மனித பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனை ஊசி வழியாகச் செலுத்துவதன் மூலம் இக்குள்ளத்தன்மையைச் சரி செய்யலாம்.
(iii) பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து hGH உற்பத்திக்கு காரணமான மரபணு பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு இந்த மரபணுவுடன் ஒரு கடத்தி பிளாஸ்மிட்டை இணைத்து எ.கோலை, பாக்டீரியத்தினுள் செலுத்தப்படுகிறது.
(iv) இவ்விதம் மறுசேர்க்கையுற்ற எ.கோலை மனித வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இந்த எ.கோலை பாக்டீரியங்கள் வளர்ப்பு ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு நொதித்தல் தொழில்நுட்பத்தின் மூலம் பெருமளவில் மனித வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
(v) மறு சேர்க்கை வகையான 'சொமட்டோடிரோபின்' என்று அழைக்கப்படும் மனித வளர்ச்சி ஹார்மோனானது குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தாக விளங்குகிறது.
20.
| பனிச் சமவெளி உயிரினத் தொகை | பசுமை மாறா ஊசியிலைக் காடுகளின் உயிரினத்தொகை | ||
|---|---|---|---|
| 1 | குறுகிய பகல் பொழுதைக் கொண்ட குளிர்காலம் நீண்டதாகவும், நீண்ட பகல் பொழுதைக் கொண்ட கோடைக்காலம் குறுகியதாகவும் உள்ளது. | 1 | இப்பகுதி அதிகக் குளிர்மிக்க, நீடித்த குளிர்காலம் கொண்டது. |
| 2 | மழையளவு ஆண்டுக்கு 250 மி.மீக்கும் குறைவாக உள்ளது. | 2 | இங்கு ஆண்டு மழையளவு 380-1000 மி.மீ ஆகும். |
| 3 | குட்டையான வில்லோ மரங்கள், பூச்ச மரங்கள், பாசிகள், புற்கள், கோரைகள் ஆகியவை இங்கு காணப்படக் கூடிய தாவர இனங்கள் ஆகும். | 3 | ஸ்ப்ரூஸ், ஃபிர் மற்றும் பைன் போன்ற ஊசியிலை மரங்கள் இங்கு பொதுவாகக் காணப்படுகிற தாவர இனங்களாகும். |
| 4 | கலைமான்கள், ஆர்டிக் முயல்கள், கஸ்தூரி எருது மற்றும் லெம்மிங்குகள் ஆகியவை இங்கு காணப்படக் கூடிய தாவர உண்ணிகளாகும். | 4 | அணில்கள் மற்றும் வெண்பனி முயல்கள் இங்கு காணப்படக் கூடிய தாவர உண்ணிகளாகும். |
| 5 | ஆர்டிக் நரி, ஆர்டிக் ஓநாய், சிவிங்கி பூனை மற்றும் பனி ஆந்தை இங்கு வாழும் விலங்குண்ணிகளாகும். | 5 | பைன் மார்டென்கள், மர ஓநாய்கள், பழுப்பு நிறக் கரடிகள், சிவிங்கி பூனை மற்றும் ஓநாய்கள் இங்கு வாழும் விலங்குண்ணிகளாகும். |
21.
(i) இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதம் (இனப்பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது) அதன் வயதுப் பரவலைக் குறிக்கிறது.
(ii) இது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையை நிர்ணயிக்கிறது. இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும்.
(iii) பொதுவாக வேகமாக வளரும் இனக்கூட்டத்தில் இளம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
(iv) ஒரு நிலைத்த இனக்கூட்டத்தில் வெவ்வேறு வயதுடைய குழுக்களின் பரவல் சீராக இருக்கும்.
(v) இனக்கூட்டத்தின் அளவு குறையும் நிலையில் முதிர்ந்த உயிரினங்கள் அதிகமாகக் காணப்படும்.
22.
இடம் மாறும் வேளாண்மை:
(i) இயற்கையான மரங்களை கொண்ட வனங்களை எரித்து சுத்தம் செய்து 2 - 3 பருவத்திற்கு பயிர் சாகுபடி செய்தபின் மண் வளம் குறைகிறது.
(ii) இனி பயிர் உற்பத்தியில் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை வரவும், வேறு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி எரித்து நிலத்தை தயார்படுத்துவர். இதுவே இடம் மாறும் வேளாண்மை எனப்படும்.
(iii) இது வடகிழக்கு இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
(iv) இவ்வாறு பெரிய வனப்பரப்பு எரிக்கப்படுவதால் வனத்தின் பரப்பளவு குறைந்து மாசு ஏற்படுவதுடன் வெளியேற்றப்படும் கார்பன் - டை - ஆக்ஸைடு அளவும் அதிகரித்தது.
(v) வாழிட அழிப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கின்றது.
(vi) இது விலங்கினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards