12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
பொருத்துக.
| (1) ஒங்குத்தன்மை மறைத்தல் பாரம்பரியம் | (i) 9:3:4 |
| (2) ஒடுங்கு மறைத்தல் | (ii) 13:3 |
| (3) நிரப்பு மரபணுக்கள் | (iii) 12:3:1 |
| (4) தடை செய்யும் மரபணுக்கள் | (iv) 19:7 |
| 1 | 2 | 3 | 4 |
| i | iv | ii | iii |
| 1 | 2 | 3 | 4 |
| ii | iii | i | iv |
| 1 | 2 | 3 | 4 |
| iv | ii | iii | i |
| 1 | 2 | 3 | 4 |
| iii | i | iv | ii |
2.
தனி செல்புரத்தைப் பொறுத்தவரை தொடர்பற்றத்தைத் தெரிவு செய்க.
குளோரெல்லா
ஸ்பைருலினா
கிளாமைடோமோனஸ்
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
3.
முதலில் ஒரு சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான முதல் வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியவர்.
லூயிஸ் பாஸ்டர்
எட்வர்டு ஜென்னர்
சாங்கர் மற்றும் கில்பெர்டு
ஆர்பெர் நாத்தன்ஸ்
4.
பயோ டெக்னாலஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர்
வெய்ஸ்னர்
கார்ல் பிரான்டில்
சாங்கர்
கார்ல் எரிக்கி
5.
குதிரை லாடம் போல வளைந்திருக்கும் சூழ்துளை _________ வகை சூலில் உள்ளது.
சிர்சினோட்ரோபஸ்
ஆம்பிடரோபஸ்
தலைகீழ்
கிடைமட்ட சூல்
6.
கேமீட்கள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை ” எனும் கூற்று ______.
ஓங்கு விதி
சார்பின்றி ஒதுங்குதல் விதி
தனித்துப் பிரிதல் விதி
இயைபிலாக் கருவுறுதல் விதி
7.
பிளாஸ்மிட் என்பது _____.
வட்டவடிவ புரத மூலக்கூறுகள்
பாக்டீரியாவினால் தேவைப்படுவது
நுண்ணிய பாக்டீரியங்கள்
உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க
8.
தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)-க்கு ஓங்கியும், மஞ்சள் விதையிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2 வில் எதிர்பார்க்கப்படும் RRYY x rryy புறத்தோற்றம் யாது?
உருண்டை விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும்
சுருங்கிய விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும்
உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்
9.
10.
மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர் _____.
J.G. கோல்ரூட்டர்
G.B. அமிசி
E. ஸ்டிராஸ்பர்கர்
E. ஹேன்னிங்
11.
அல்புமினற்ற விதைகள் எனப்படுவது எவை?
12.
மகரந்தவியல் பற்றி நீவிர் அறிவன யாவை?
13.
முதுமரபு மீட்சி என்றால் என்ன?
14.
நியுக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போ டை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன்படுத்துவாய்?
15.
ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய்?
16.
உண்மை பெருக்கம் அல்லது தூய்கால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?
17.
மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.
18.
‘அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறையாகும்’. விவாதி.
19.
சுரப்பு மற்றும் ஊடுருவும் வகை டபீட்டத்தை வேறுபடுத்துக.
20.
சைசர் அரினேட்டத்தின் அமைப்பை படம் வரைந்து, பாகங்கள் குறிக்கவும்.
21.
அலியூரோன் திசு (Aleurone Tissue) குறிப்பு வரைக?
22.
தடைகட்டு (ரெஸ்ட்ரிக்க்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?
23.
pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்து கொள்வது என்ன?
24.
சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?
25.
மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?
26.
‘மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது’. ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்கள் விடையை நியாயப்படுத்தவும்.
27.
28.
காற்று மகரந்தச்சேர்க்கை மலர்களில் காணப்படும் பண்புகளை பட்டியலிடுக.
29.
உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
30.
31.
ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.
32.
கருவூண்திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
1.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| iii | i | iv | ii |
2.
(d)
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
3.
(b)
எட்வர்டு ஜென்னர்
4.
(d)
கார்ல் எரிக்கி
5.
(b)
ஆம்பிடரோபஸ்
6.
(c)
தனித்துப் பிரிதல் விதி
7.
(d)
உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க
8.
(d)
உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்
9.
(b)
10.
(b)
G.B. அமிசி
11.
(i) கருவூண் திசு இல்லாத விதைகள் அல்புமினற்ற விதைகள் எனப்படும்.
(ii) எ.கா: பட்டாணி, நிலக்கடலை, பீன்ஸ் விதைகள்.
12.
1. மகரந்தத் துகள் பற்றிய படிப்பு.
2. நிலக்கரி, எண்ணெய் புலங்களின் பரவலைக் கண்டறிய உதவும்.
3. ஒரு பகுதியின் தாவரக் கூட்டத்தைப் பிரதிபலிக்கும்.
13.
ஒரு உயிரியில் பரிணாம மாற்றங்களுக்குப் பின்னர், இழக்கப்பட்ட பண்பு ஒன்று மீண்டும் அவ்வுயிரியில் தோன்றுவது, முது மரபு மீட்சி என்று பெயர்.
14.
இவை DNA மூலக்கூறுக்குள், குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐத் துண்டிக்கின்றன. இதற்கு தடைகட்டு களம் (Restriction sites)
அ) எக்சோநியுக்ளியேஸ்
Options நொதி
இவை DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ்
ஆ) எண்டோநியுக்ளியேஸ் நொதி
இவை DNA மூலக்கூறுகளின் உட்புறம் உள்ள பாஸ்ஃபோ-டை-எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoRI, Pvul, Bam H1, Taq 1 போன்றவை
15.
1. உருளைக்கிழங்கு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச் கொண்ட கழிவுநீர்.
2. வைக்கோல்
3. வெல்லச்சக்கைப்பாகு
4. விலங்கு உரம்
5. கழிவு நீர்
16.
(i) தொடர்ந்து தற்கலப்பு செய்யும் போது (அல்லது) தன் மகரந்தச் சேர்க்கைக்கு போது, தொடர்ந்து ஒரே புறத்தோற்ற பண்புள்ள தாவரங்களை உருவாக்குவதற்கு உண்மைப் பெருக்கம் (அல்லது) தூய கால் வழிப் பெருக்கம் என்று பெயர்.
(ii) இவை பெற்றோர் பண்பைக் கொண்டிருப்பதால் (ஹோமோசைகஸ்) எனப்படும்.
(iii) இதனால் ஒத்த புற, ஜீனாக்கம் கொண்ட தாவரங்களை உருவாக்குவதால், இதற்கு தூய கால் வழிப் பெருக்கம் என்று பெயர்.
17.
| மண்முட்டு பதியம்(Mound Layering) | காற்றுப் பதியம் (Air Layering) | |
| 1 | அடிக்கிளை வளைத்து தரையில் புதைக்கப்படும் | தண்டின் கணுப்பகுதி செதுக்கப்படும். |
| 2 | வேர் தோன்றிய பின் பெற்றோர் தாவரத்தினின்று வெட்டப்பட்டு தனித்தாவரமாக வளர்கிறது. | சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் வேரை உருவாக்கும். |
| ஈரமான மண், பாலிதீன் பையால் மூடப்படும். | ||
| 2-4 மாதத்திற்கு பின் வேர் தோன்றிய கிளைகள் தனியாக வளர்க்கப்படும். | ||
18.
நுண் பெருக்கம்
திசு வளர்ப்பின் மூலம் முழுத்தாவரமானது ஒரு தனி செல், சிறு துண்டுகளிலிருந்து திசு வளர்ப்பு மூலம் பெறப்படுகிறது.
நிறைகள்
1. விரும்பிய பண்புள்ள தாவரங்கள், குறைந்த காலத்தில் விரைவாகப் பெருகும்.
2. உருவாகும் தாவரங்கள், ஒத்த மரபணு சார் பண்புகளைக் கொண்டிருக்கும்.
3. எந்தப்பருவத்திலும் திசு வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
4. உயிர்ப்பு திறனற்ற, முளைக்கும் திறனற்ற விதைகளை உருவாக்கும் தாவரங்களை, திசு வளர்ப்பின் மூலம் பெருக்கமடையச் செய்யலாம்.
5. அரிதான, அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்களைப் பெருக்கமடையச் செய்யலாம்.
6. ஆக்குத்திசு வளர்ப்பு மூலம் நோய்களற்ற தாவரங்களை உருவாக்கலாம். (Meristem culture)
7. திசு வளர்ப்பினால், செல்களை மரபணு சார் ரீதியாக மாற்றமடையச் செய்யலாம்.
19.
| சுரப்பு டபீட்டம் | ஊடுருவும் டபீட்டம் |
| சுரப்பு டபீட்டம் தோற்றநிலை, செல்லமைப்பை தக்கவைத்து செல் ஒருங்கமைவுடன் இருந்து நுண்வித்துக்களுக்கு ஊட்டமளிக்கின்றன. | ஊடுருவும் டபீட்டத்தின் செல்கள் உட்புற, கிடைமட்ட சுவர்களையும், ஆரச்சுவர்களையும் இழந்து, அனைத்து புரோட்டோபிளாஸ்ட்களும் ஒன்றிணைந்து பெரிபிளாஸ்மோடியத்தை உருவாக்குகின்றன. |
20.
21.
1. சிறப்படைந்த செல்களால் ஆனது.
2. ஒன்று அல்லது சில அடுக்குகளால் ஆனது.
3. தானியங்களில், கருவூண் திசுவைச் சூழ்ந்துள்ளது.
4. இதன் செல்களில் அலியூரோன் துகள்கள் உள்ளன. இவற்றில் ஸ்பீரோசோம்கள் உள்ளன.
5. விதை முளைக்கும் போது, இச்செல்கள் அமைலேஸ்கள், புரோட்டியேஸ் போன்ற நீராற்பகுப்பு நொதிகளைச் சுரக்கும். இந்நொதி கருவூண் திசு சேமிப்பு உணவைச் செரிக்கும்.
22.
1. இது மூலக்கூறு கத்தரிக்கோல் எனப்படுகிறது.
2. 1963 ஆம் ஆண்டு எ.கோலை பாக்டீரியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.
3. இது DNA மூலக்கூறுக்குள் குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNA ஐ துண்டிக்கின்றன. இது தடைகட்டு களம் எனப்படும்.
4. செயல்படும் விதம் அடிப்படையில் பிரிப்பது
அ. எக்சோ நியூக்ளியேஸ்
DNA மூலக்கூறின் உட்புறம் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது.
(எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ் III
ஆ. எண்டோ நியூக்ளியேஸ்
இது நொதி மூலக்கூறின் உட்புறம் உள்ள ஃபாஸ்ஃபோடை - எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
(எ.கா) Hind II, EcoR 1, Pvul, Bam H1, Taq போன்றவை
எண்டோ நியூக்ளியேஸ் 3 வகுப்புகளைக் கொண்டது.
வகை I, II மற்றும் இவை செயல்படும் விதத்தில் சிறிய வேறுபாடுகளைக் கொண்டது.
வகை - II : இது மறுகூட்டிணைவு தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுகிறது. இது 4-8bp கொண்டுள்ள வரிசைக்குள்ளே DNA வை அடையாளம் கண்டறிந்து Hind II
குறிப்பிட்ட வரிசையிலுள்ள 6 கார இணைகளை அடையாளம் கண்டறிந்து அங்கு DNA மூலக்கூறுகளைத் துண்டிக்கிறது (Recognition sequences). இது வரை வேறுபட்ட அடையாள தொடர்வரிசை உடைய ஏறத்தாழ 900 தடைகட்டு நொதிகள் பாக்டீரியங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
23.
1. pBR 322 என்பது மறுகட்டமைக்கப்பட்ட பிளாஸ்மிட் ஆகும்.
2. இதில் 4361 bp கொண்டுள்ளது.
3. p = பிளாஸ்மிட்
4. BR - பிளாஸ்மிட் உருவாக்கி, அறிஞர்களான பொலிவர் மற்றும் ரொட்ரிக்ஸ் ஆகிய இருவரையும் குறிக்கின்றன.
5. 322 = அவர்களுடைய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பிளாஸ்மிட்டின் எண்ணிக்கையாகும்.
இதில் காணப்படுவன
1. இரு வேறுபட்ட உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு மரபணுக்கள் (ampR, tetR)
2. பல தடைக்கட்டு நொதிகளுக்கான அடையாளக் களங்கள் (Hind III, EcoRI, Bam H1, SalI, PvuII, Pst1, ClaI)
3. Ori -மரபணு
4. Rop - பிளாஸ்மிட் பெருக்கமடைவதில் ஈடுபடும் புரதங்களையும் Rop குறியீடு செய்கிறது.
24.
(i) DNA தவிர்த்த சைட்டோபிளாச உறுப்புகளான பசுங்கணிகங்கள், மைட்டோகாண்டிரியங்கள் பாரம்பரியத்தின் தாங்கிக் கடத்திகளாக செயல்படுவது சைட்டோபிளாசம் மூலம் கடத்தப்படுகின்றன.
(ii) பசுங்கணிக, மைட்டோகாண்டிரியங்களில் உள்ள DNA பல மரபணுக்களைக் கொண்டுள்ளன.
(iii) இவ்வகை மரபணுக்கள் பிளாஸ்மா மரபணுக்கள் எனப்படும்.
(iv) உட்கரு சம்பந்தப்படாததால் இது உட்கரு சாரா பாரம்பரியம் எனவும் கருதப்படுகிறது.
(v) எ.கா 4 மணி தாவரத்தின் இலைகளில் காணப்படும் இரு வகை வேறுபட்ட நிறங்கள் அடர்பச்சை, & வெளிர் பச்சை.
25.
(i) கணித மற்றும் புள்ளியியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
(ii) கையாண்ட முறைகளின் துல்லியமான புள்ளியியல் நிகழ்வுகள்
(iii) பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் - தனிப்பட்ட குரோமோசோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது.
(iv) தூயகால்வழி பெற்றோர்கள் - தேர்ந்தெடுப்பது பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டது.
(v) அனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது - அதன் சாதகமான பண்புகள்
(vi) ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
(vii) ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை.
(viii) இயல்பான தற்கருவுருதல்
(x) பெரிய மலர்களாதலால், ஆண் மடலாக்கம், மகரந்தச் சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.
26.
| மூடுவிதைத் தாவரங்களின் கருவூண் திசு | மூடாவிதைத் தாவரங்களின் கருவூண் திசு | |
| 1 | மும்மடிய குரோமோசோம்கள் கொண்டது. | ஹாப்ளாய்டு (Haploid) கருவூண் திசு உள்ளது |
| 2 | மூவிணைதல் மூலம் உருவாகும் | கருவுறுதலுக்கு முன்னரே கருவூண் திசு உருவாகும். |
| 3 | கருவைச் சூழ்ந்து கருவூண்திசு காணப்படும். இது ஸ்டார்ச்சை உணவாகத் தரும். | பல விதையிலைகளைக் கொண்ட கரு (எ.டு பைன்) உருவாகும். முதல் நிலை கருவூண் திசு அதற்கு உணவாகிறது. |
27.
28.
மஞ்சரி :
(i) தொங்குகதிர் அல்லது கதிர்வகை மஞ்சரிகளில் மலர்கள் காணப்படுகின்றன.
மலர்கள்:
(i) சிறியவை, தெளிவற்றவை, நிறமற்றவை, மணமற்றவை மற்றும் பூத்தேன் சுரக்காதவை பூவிதழ்கள் இன்றியோ அல்லது குன்றியோ காணப்படும்.
மகரந்தத்தாள்கள்:
(i) எண்ணற்றவை, மகரந்தக்கம்பிகள் நீண்டவை. வெளிநோக்கி வளைந்தவை, மகரந்தப்பை சுழலக்கூடியவை.
மகரந்தத்துகள்கள்:
(i) மிகச்சிறியவை, உலர்ந்தவை எடைகுறைவானவை, அதிக அளவு உண்டாக்கப்படுபவை.
(ii) மகரந்தப்பைகள் வெடித்து, மகரந்தத்தாள்கள் காற்றில் வெளியேற்றப்படுகின்றன.
(iii) எ.கா: அர்டிகா
(iv) சூல்முடி அளவில் பெரியது, துருத்திக் கொண்டும் கிளைத்தும், இறகு போன்ற அமைந்தும், மகரந்தத்துகள்களைப் பிடிப்பதற்கேற்ப தகவமைப்பை பெற்றுள்ளன.
(v) சில தாவரங்களில், புதிய இலைகள் தோன்றுவதற்கு முன்னரே மலர்கள் உருவாகுவதால், மகரந்தத்துகள்கள் இலைகளின் இடையூறின்றி எளிதாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
29.
நுண்ணுயிரிகள் (அ) தாவரங்களைக் கொண்டு சூழல் மாசுறுதலை சுத்திகரிக்கும் அணுகுமுறைக்கு உயிரிவழித் திருத்தம் என்று பெயர்.
அணுகுமுறை:
1. கழிவுநீர் சுத்திகரிப்பு
2. தொழிற்சாலை கழிவு
3. திடக்கழிவுகள் போன்றவை
சுத்திகரிப்பது:
1. மண் மற்றும் நிலத்தடி நீர், கடலில் எண்ணெய் கசிவு ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு
2. பெட்ரோலிய வேதிய எச்சங்கள்
3. வன் உலோகங்கள்
4. பூச்சிக்கொல்லிகள் போன்றவை
சாதகமான பண்புகள்:
1. மலிவானது -அதிக நன்மையுடையது.
2. சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறை (eco friendly)
3. தொடர் பயன்தருவது (sustainable)
4. குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளை அதிக திறனுடன் இது நீக்கிவிடும்.
5. (எ.கா) சூடோமோனாஸ் பியுடிடா எனும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவை கொண்டு கடலிலுள்ள (அ) நீரிலுள்ள கச்சா எண்ணெய் கசிவுகளை நீக்குதல்.
30.
31.
வரையறை:
ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல்களுடன் இடைச்செல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். மறைக்கும் மரபணு ஓங்கு தன்மையுடையதாய் இருப்பதால் இது ஓங்கு தன்மை மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர். ஒடுங்கிய மரபணு ஒடுக்கும் மரபணு எனவும் மற்றது மறைக்கப்பட்ட மரபணு எனவும் வழங்கப்படுகிறது.
எ.கா: பூசணிகளின் நிறம்
W - அல்லீல் - வெள்ளை நிறம் W - அல்லீல் - பச்சை நிறம்
G - அல்லீல் - மஞ்சள் நிறம் g - அல்லீல் - பச்சை நிறம்
F2 - புறத்தோற்ற விகிதம்
32.
கருவுறுதலுக்கு பின், கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு பகுப்படைந்து உருவாக்கும் திசு கருவூண் திசு.
1. உட்கருசார் கருவூண் திசு
முதல் நிலை கருவூண் உட்கரு (PEN) குன்றலில்லா பகுப்படையும். சுவர் உருவாகாமல் தனித்த உட்கருக்களைக் கொண்டுள்ளன. (எ.க) அராக்கிஸ்
2. செல்சார் கருவூண் திசு
முதல்நிலை கருவூண் உட்கரு பகுப்படையும். இரண்டு உட்கருக்கள் உருவாகும். சுவர் உருவாக்கம் நடைபெறும். (எ.டு) ஹீலியான்தஸ்
3. ஹெலோபிய கருவூண் உட்கரு பகுப்படையும், இரண்டு உட்கருக்கள் உருவாகும். உட்கருக்களுக்கிடையே சுவர் உருவாகும். பெரிய சூல்துளை அறை, சிறிய சலாசா அறை உருவாகும். (எ.டு) ஹைட்ரில்லா.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards