12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
ஒளிசேர்க்கைசார் செயலூக்க கதிர்வீச்சின் அலைநீளம் இவற்றிற்கிடைப்பட்டதாகும்
200 - 700 nm
300 - 700 nm
500 - 700 nm
400 - 700 nm
2.
எந்தத் தாவரத்தின் கனிகள் விலங்குகளின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளக் கடினமான, கூர்மையான முட்களைக் கொண்டிருக்கின்றன
ஆர்ஜிமோன்
எக்பெல்லியம்
எரிட்ஜீரான்
கிராசான்டிரா
3.
பெடாஜெனிஸிஸ் (pedogenesis) என்பது எதனுடன் தொடர்புடையது?
தொல்லுயிரி படிவம்
நீர்
உயிரித்தொகை
மண்
4.
ஒபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்துக் காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும்.
மிர்மிகோஃபில்லி
சூழ்நிலையியல் சமானங்கள்
பாவனை செயல்கள்
எதுவுமில்லை
5.
6.
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல.
நைட்ரஜன் சுழற்சி
பாஸ்பரஸ் சுழற்சி
சல்பர் சுழற்சி
கால்சியம் சுழற்சி
7.
8.
கீழ்க்கண்டவற்றில் எது/எவை இயற்கை சூழல்மண்டலம் அல்ல?
வனச் சூழல்மண்டலம்
நெல்வயல்
புல்வெளி சூழல்மண்டலம்
பாலைவன சூழல்மண்டலம்
9.
ஆற்றல் ஒட்டம் எனப்படுவது யாது?
10.
ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என்றால் என்ன?
11.
12.
சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.
13.
சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்?
14.
ஆற்றல் பிரமிட் எப்பொழுது நேரானவை காரணம் கூறு.
15.
16.
வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுபடுத்துக.
17.
வெப்ப அடுக்கமைவு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
18.
ஒரு குறிப்பிட்ட சூழல்மண்டலத்தின் பிரமிட் வடிவமானது எப்பொழுதும் மாறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. அதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19.
அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
20.
விதைபரவுதலின் நன்மைகள் யாவை?
21.
நீர்த் தாவரங்களின் வகைகளை அதன் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கவும்.
22.
வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.
23.
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக.
உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.
1.
(d)
400 - 700 nm
2.
(a)
ஆர்ஜிமோன்
3.
(d)
மண்
4.
(c)
பாவனை செயல்கள்
5.
(c)
6.
(a)
நைட்ரஜன் சுழற்சி
7.
(b)
8.
(b)
நெல்வயல்
9.
1. சூழல் மண்டலத்தில் ஆற்றல் ஊட்ட மட்டங்களுக்கிடையே பரிமாற்றம் அடைவது ஆற்றல் ஓட்டம்.
2. இதுவே சூழல் மண்டலத்தின் முக்கிய செயல்பாடு ஆகும்.
10.
தண்டு, இலை ஆகியவை பல தூவிகளால் சூழப்பட்டுள்ள வறண்ட நிலத்தாவரங்கள் ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன. (எ.கா) பூசணி வகைகள் (மிலோத்ரியா மற்றும் முகியா)
11.
12.
(i) சூழலோடு உயிரினங்கள் செயல்படுவதால் ஏற்படும் உயிரினத் தொகுதிகள் சூழ்நிலையியல் படிகள்.
13.
1. சூழல் மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கும் போது மொத்த உணவு வலையும் (Food Web) பாதிக்கப்படுகிறது.
2. முதல் நிலை நுகர்வோர் (அ) தாவர உண்ணிகள் தங்களின் உணவாக உற்பத்தியாளர்கள் இல்லாமையால் இறந்து போக நேரிடும்.
3. அதனால் உணவு வலையில் உள்ள மற்ற விலங்குகளும் தங்களுக்கு உணவு இல்லாமல் இறக்க நேரிடும்.
4. சூழ்நிலை மண்டலத்தின் அழிந்து போன நுகர்வோர் எண்ணிக்கை அழிந்துபோன உற்பத்தியாளர்களுக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
5. வளிமண்டலத்தின் CO2 மற்றும் O2 சுழற்சி இருக்க உற்பத்தியாளர்களே காரணம்.
6. இந்த உற்பத்தியாளர்களை நீக்கிவிட்டால் CO2 மற்றும் O2 சுழற்சி சமநிலை அற்றதாக மாறிவிடும்.
7. இதனால் மூச்சுக் காற்றான ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
14.
1. ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது ஏனென்றால் ஆற்றல் பிரமிடின் அடிப்பகுதியில் உற்பத்தியாளர்கள் உள்ளதே இதற்கு காரணம்.
2. ஆற்றல் பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள் முதல் இறுதி மட்டம் வரையுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாக குறைகிறது.
[1000 J ➝ ஜுல்கள் ➝ 10 ஜூல்கள் ➝ 1 ஜூல்கள் ➝ 0.1 ஜூல்கள்]
3. எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.
15.
16.
17.
(i) பொதுவாக வெப்ப அடுக்கமைவு நீர் சார்ந்த வாழ்விடத்தில் காணப்படுகிறது.
(ii) நீரின் ஆழம் அதிகரிக்க அதன் வெப்பநிலை அடுக்குகளில் ஏற்படும் மாற்றமே வெப்பநிலை அடுக்கமைவு என அழைக்கப்படுகிறது.
(iii) மூன்று வகையான வெப்ப அடுக்கமைவுகள் காணப்படுகின்றன.
1. எபிலிம்னியான் - நீரின் வெப்பமான மேல் அடுக்கு
2. மெட்டாலிம்னியான் - நீரின் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் ஒரு மண்டலம்
3. ஹைப்போலிம்னியான் - குளிர்ந்த நீருள்ள கீழ் அடுக்கு
18.
1. வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் சற்று வேறுபட்ட வடிவத்தை கொண்டிருக்கிறது. ஏனென்றால்.
2. பிரமிடின் அடிப்பகுதி (T1 உற்பத்தியாளர்) குறைவான எண்ணிக்கையிலான பெரிய மரங்களை கொண்டுள்ளது.
3. (தாவர உண்ணிகள் T2) பழம் உண்ணும் பறவைகள், யானை, மான் உற்பத்தியாளர்களை விட அதிக எண்ணிக்கையில் இரண்டாம் ஊட்ட மட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
4. இறுதிஊட்ட மட்டத்தில் (T4) காணப்படும் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் விட (சிங்கம்) மூன்றாம் ஊட்ட மட்டத்தில் (T3) உள்ள இரண்டாம்நிலை நுகர்வோர்களை விட (நரி மற்றும் பாம்பு) குறைவான எண்ணிக்கையை கொண்டுள்ளது.
5. எனவே வனச் சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் கதிரிழை வடிவத்தில் தோன்றுகிறது.

19.
மட்குப்பொருள் (சிதைவுக்கூளம்) உணவுச்சங்கிலி அனைத்து சூழல் மண்டலத்திற்கும் பொதுவானது.
மட்குப்பொருள் உணவுச்சங்கிலி:
1. இந்த உணவுச்சங்கிலி இறந்த கரிமபொருட்களிலிருந்து தொடங்குகிறது. இது முக்கிய ஆற்றல் மூலமாக உள்ளது.
2. அதிகப்படியான கரிமப்பொருள்கள் இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அவற்றின் கழிவு பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.
3. இறந்த உயிரிகளின் கரிமப்பொருட்கள் மறுசுழற்சி மற்றும் அதன் சமநிலையை தக்கவைக்கவும் சூழ்நிலை மண்டலத்தில் இது முக்கியமான உணவு சங்கிலியாகும்.
20.
(i) தாய் தாவரத்தின் அருகில் விதைகள் முளைப்பதைத் தவிர்ப்பதால் விலங்குகளினால் உண்ணப்படுவது அல்லது நோயுறுவது அல்லது சக போட்டிகளைத் தவிர்ப்பது போன்ற செயல்களிலிருந்து தாவரங்கள் தப்பிக்கின்றன.
(ii) விதை பரவுதல் விதை முளைத்தலுக்கு உகந்த இடத்தினைப் பெரும் வாய்ப்பை அளிக்க விதை பரவுதல் உதவுகிறது.
(iii) தன் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் தாவரங்களில் அவற்றின் மரபணுக்களின் இடம் பெயர்வதற்கு உதவும் முக்கிய செயலாக இது உள்ளது.
(iv) அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தாவரங்களில் மரபணு பரிமாற்றத்திற்கு விதை பரவுதல் உதவி செய்கிறது.
(v) மனிதர்களால் மாற்றியமைக்கப்பட்ட சூழல் மண்டலத்திலும் கூட சிற்றினங்களின் பாதுகாப்பிற்கு விதை பரவும் செயல் உதவுகிறது.
(vi) பாலைவனம் முதல் பசுமை மாறக் காடுகள் வரையிலான பல்வேறு சூழல் மண்டலங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் உயிரி பன்மத்தை தக்க வைத்துப் பாதுகாக்கவும் கனிகள் மற்றும் விதைகள் பரவுதலடைதல் அதிகம் உதவுகிறது.
21.
நீர் அல்லது ஈரமான சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் நீர்வாழ் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீர் மற்றும் காற்றின் தொடர்பினைப் பொறுத்து அவை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
i. மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Free floating hydrophytes):
இவ்வகை தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் சுதந்திரமாக மிதக்கின்றன. மண்ணுடன் தொடர்பு கொள்ளாமல் நீர் மற்றும் காற்றுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளன. (எ.கா) ஆகயாத்தாமரை
ii. வேரூன்றி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள் (Rooted floating hydrophytes):
இத்தாவரங்களின் வேர்கள் மண்ணில் பதிந்துள்ளன. ஆனால் அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள் நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன. இத்தாவரங்களின் மண், நீர், காற்று ஆகிய மூன்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. (எ.கா ) நிலம்போ (தாமரை), நிம்ப்ஃபெயா.
iii. நீருள் மூழ்கி மிதக்கும் நீர்வாழ் தாவரங்கள்(Submerged floating hydrophytes):
இத்தாவரங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இவைகள் மண் மற்றும் காற்றோடு தொடர்பு பெற்றிருப்பதில்லை. (எ.கா) செரட்டோஃபில்லம்
iv. நீருள் மூழ்கி வேரூன்றிய நீர்வாழ் தாவரங்கள் (Rooted - submerged hydrophytes):
இத்தாவரங்கள் நீருள் மூழ்கி மண்ணில் வேரூன்றி காற்றுடன் தொடர்பு கொள்ளாதவை. (எ.கா) ஹைட்ரில்லா, வாலிஸ்நேரியா
v. நீர் நில வாழ்பவை அல்லது வேர் ஊன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்கள் (Amphibious hydrophytes (Rooted emergent hydrophytes)):
இத்தாவரங்கள் நீர் மற்றும் நிலப்பரப்பு தகவமைவு முறைகளுக்கு ஏற்றவாறு வாழ்கின்றன. இலைகள், ஆழமற்ற நீரில் வளர்கின்றன.(எ.கா) ரெனன்குலஸ், டைஃபா மற்றும் சாஜிடேரியா
ஹைக்ரோபைட்கள் (Hydrophytes):
ஈரத்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் ஹைக்ரோஃபைட்கள் என்று அழைக்கப்படுகின்றன. (எ.கா) ஹேபினேரியா (ஆர்கிட்கள்) மாஸ்கள் (பிரையோஃபைட்கள்) முதலியன.
22.
1. தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton state) -நீலப்பசும்பாலிகள், பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள், பசும்பாசிகள், டயட்டம் போன்ற முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை இதுவாகும்.
2. இந்த உயிரினங்களின் குடிபெயர்பு, வாழ்க்கை செயல்முறைகள், இறப்பின் மூலமாக குளத்தின் கரிம பொருளின் அளவு மற்றும் ஊட்டச்சத்து செறிவடைகிறது. இது வளர்ச்சியின் அடுத்த படிநிலை வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. நீருள் மூழ்கிய தாவர நிலை (Submerged plant stage)- மிதவை உயிரிகளின் இறப்பு மற்றும் மட்குதலின் விளைவாலும், மழைநீர் மூலம் நிலத்திலிருந்து மண் துகள்கள் அடித்து வரப்படுவதாலும், குளத்தின் அடிப்பகுதியில் ஒரு தளர்வான மண் உருவாக்க வழி வகுக்கிறது. எனவே வேரூன்றி நீருள் மூழ்கி வாழும் நிர்வாழ்த்தாவரங்கள் புதிய வாழ்தளத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. எ.காட்டுகள்: கேரா, யூட்ரிகுலேரியா,
4. தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைவு குளத்தின் அடித்தளத்தை உயர்த்துவதால் குளம் ஆழற்றதாக மாறுகிறது. எனவே இந்த வாழிடம் நீருள் மூழ்கி மிதக்கும் நிலையிலுள்ள வேறுவகையான தாவரங்கள் குடியேறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
5. நீருள் மூழ்கி மிதக்கும் நிலை (Submerged free floating stage)- இந்த நிலையில் குளத்தின் ஆழம் கிட்டத்தட்ட 2-5 அடியாக இருக்கும். எனவே, வேரூன்றிய நிர்வாழ்த் தாவரங்கள் மாற்றும் பெரிய இலைகளுடன் கூடிய மிதக்கும் தாவரங்கள் குளத்தில் குடியேற ஆரம்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, வேரூன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை, அல்லி மற்றும் ட்ராபா.
6. இந்த தாவரங்களின் இறப்பு மற்றும் சிதைத்தல் மூலம் குளத்தின் ஆழம் மேலும் குறைகிறது. இதன் காரணமாக மிதக்கும் தாவரங்கள் படிப்படியாக பிற இனங்களால் மாற்றி அமைக்கப்படுவதால் புதிய நிலை ஒன்று உருவாகிறது.
7. நாணற் சதுப்பு நிலை (Reed -swamp stage) - இது நீர்-நில வாழ்நிலை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில் வேரூன்றிய மிதக்கும் தாவரங்கள் பிற தாவரங்களால் மாற்றியமைக்கப்படுகிறது. இது நீர் சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும், நில சூழ்நிலையிலும் வெற்றிகரமாக வாழக்கூடியது. எடுத்துக்காட்டு: பைஃபா.
8. சதுப்பு புல்வெளி நிலை (Marsh meadow stage)-நீரின் அளவு குறைவதால், குளத்தின் ஆழம் குறையும்பொழுது சைப்பரேசி மற்றும் போயேசி இவற்றின் அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு ஒன்று உருவாகிறது.
9. இது அதிக அளவு நீர் உறிஞ்சுவதற்கும், நீர் இழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த நிலையின் முடிவில் மண் வறண்டு சதுப்புநிலத் தாவரங்கள் படிப்படியாக மறைந்து புதர்ச்செடிகள் குடிபுக வழிவகுக்கிறது.
10. புதர்ச்செடி நிலை (shrub stage)-சதுப்பு நிலத் தாவரங்கள் தொடர்ந்து மறைவதாக, மண் வறண்டு போகிறது. எனவே இந்த பகுதிகளில் நிலவாழ்த் தாவரங்களான புதர்ச்செடிகள் (சாலிக்ஸ் மற்றும் கர்னஸ்) ஆகியவை படையெடுக்கின்றன. இந்த தாவரங்கள் அதிக அளவிலான நீரை உறிஞ்சி வறண்ட வாழிடத்தை உருவாக்குகின்றன. அத்துடன் செழுமையான நுண்ணுயிரிகளுடன் கூடிய கரிம மட்கு சேகரமடைவதால் மண்ணில் கனிமவளம் அதிகரிக்கிறது. இறுதியில் அப்பகுதி புதிய மர இனங்களின் வருகைக்கு சாதகமாகிறது.
11. காடுநிலை (Forest stage)-நீர் வழிமுறை வளர்ச்சியின் உச்சநிலை குழுமம் இதுவாகும். இந்த நிலையின்போது பல்வேறு வகையான மரங்கள் படையெடுப்பதோடு ஏதாவது ஒருவகையான தாவரத்தொகுப்பு உருவாகிறது.
23.

1. ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிமப்பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்ட வரைபடம் உயிரித்திரள் பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.
2. புல்வெளி மற்றும் வனச்சூழல் மண்டலத்தில் உயிரித்திரளின் அளவு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் உற்பத்தியாளர்களில் தொடங்கி இறுதி உண்ணிகள் (மூன்றாம் நிலை நுகர்வோர்) வரை படிப்படியாகக் குறைகிறது.
3. எனவே இந்த இரண்டு சூழல்மண்டலங்களிலும் உயிரித்திரள் பிரமிட் நேரான பிரமிட்டாக உள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards