11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
குறுந்தொகைமூலம் அறியும் செய்திகள் யாவை?
2.
காவடிச்சிந்து என்பது யாது?
3.
'கோட்டை என்னும் சொல் திராவிட' மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
4.
காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் ___________.
சென்னிகுளம் அண்ணாமலையார்
பாரதியார்
பாரதிதாசன்
கார்மேகம்
5.
"விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் ________.
தொல்காப்பியம்
புறநானூறு
திருமுருகாற்றுப்படை
பரிபாடல்
6.
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை, _________ என்னும் கலைச்சொல் குறிக்கும்.
Biology
Geology
Zoology
Orology
7.
திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு
பகுதி
விகுதி
சந்தி
சாரியை
8.
குறுந்தொகை நூலுக்குக் கடவள் வாழ்த்து பாடியவர் __________
வெள்ளிவீதியார்
இளம்பெருவழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பூரிக்கோ
9.
கோட்டை என முடியும் 248 இடப்பெயர்களும் _______ தான் உள்ளன.
தமிழ்நாட்டில்
கேரளாவில்
ஆந்திராவில்
கருநாடகத்தில்
10.
மலையும் மலைசார்ந்த இடமும் ________ திணையாகும்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
11.
கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு,
கூற்று சரி, விளக்கம் தவறு.
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
கூற்று தவறு, விளக்கம் சரி.
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு.
12.
கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் - குறிப்பு எழுதுக.
13.
சங்க் காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக.
14.
'தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து' என்பதை விளக்குக.
15.
வாடிவாசல் கதை வாயிலாய் நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக.
16.
A people without the knowledge of their past history and culture is like a tree without roots.
17.
கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப்பதாகை ஒன்றை உருவாக்குக.
தமிழ்ப்பண்பாட்டுக் கருத்தரங்கு
ஜனவரி 90, மதுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், பண்பாடு குறித்தான தேடலின் தேவை குறித்தும் சிறகுகள் சமூக அமைப்பின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மதுரையை மையமாய்க்கொண்டு இயங்கி வரும் சமூகநல அமைப்பான சிறகுகள் சார்பில், ஒருநாள் கருத்தரங்கம் தெப்பக்குளம் அருகில், பாரதி கலைக்கூட அரங்கில் ஜனவரி 13ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தும் “பண்பாடுகளால் வாழும் தமிழர்” என்னும் தலைப்பில் சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி பேசவிருக்கிறார். இதன் இறுதிப்பகுதியாய்க் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. விருப்பம் உள்ள் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என்று சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இனியன் தெரிவித்துள்ளார்.
18.
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள், ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்.
19.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) பிரிந்தோர்
20.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) தண்டுடை
21.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) காண்பிப்பார்
1.
குறுந்தொகை மூலம் பண்டைத்தமிழரி ஒழுக்கம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகச் சிறப்பு முதலிய செய்திகளை நன்கு உணரலாம்.
2.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
3.
(i) 'கோட்டை' என்னும் சொல் தமிழில் கோடு எனப்படுகிறது; மலையாளத்தில் கோட்ட, கோடு எனப்படுகிறது.
(ii) கன்னடத்தில் கோட்டே, கோண்டே எனவும், தெலுங்கில் கோட்ட எனவும் வழங்கப்படுகிறது.
(iii) துளுவில் கோட்டே என்றும், தோடா மொழியில் குவாட் என்றும் வழங்கப்படுகிறது.
4.
(a)
சென்னிகுளம் அண்ணாமலையார்
5.
(c)
திருமுருகாற்றுப்படை
6.
(d)
Orology
7.
(b)
விகுதி
8.
(c)
பாரதம் பாடிய பெருந்தேவனார்
9.
(a)
தமிழ்நாட்டில்
10.
(a)
குறிஞ்சி
11.
(b)
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
12.
(i) கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் சளர்ப் பெயர்கள், பழந்தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாடு களின் விளைவால் உருவானவை, சங்ககாலப் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கையும், வஞ்சியும், தொண்டியும் ஆணிவேர் அடையாளங்கள், இப்பெயர்களில் எதையும் வடமொழி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை, ஆனால், சங்ககால மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன.
(ii) கொற்கை, வஞ்சி, தொண்டி காட்டும் பொதுத்தன்மைகள் மிக முக்கியமானவை. இவை கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள் என ஆசிரியர் கூறுகிறார்.
13.
சங்ககாலச் சமூக நிகழ்வு
(i) வெள்ளிவீதியார் பாடலில் வரும் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்பினர்; காதல் கொண்டனர்; களவு மணம் புரிந்தனர்.
(ii) அவர்கள் உறவை அறிந்த தலைவி வீட்டார் அவளை வெளியே செல்லவிடாமல் வீட்டில் சிறை வைத்தனர்.
(iii) அதனை அறிந்த தலைவன், மணம் பேசி வருமாறு மூத்தோர் சிலரை அனுப்பி வைத்தான். அவர்களும் சென்று தலைவி வீட்டாருடன் நயம்படப் பேசித் தலைவியை தலைவனுக்கு மணம் புரிந்து தரத் தலைவி வீட்டார் இசையும்படி செய்தனர்.
இக்காலச் சமூக நிகழ்வு
(i) இதே போல ஒரு காட்சி, இன்றைய இலக்கியமான பாரதிதாசனின் குடும்ப விளக்கு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
(ii) வேடப்பனும் நகைமுத்துவும் ஒருவர்மீது மற்றவர் அளவற்ற காதல் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பெற்றோரோ ஒருவர்மீது மற்றவர் பகை கொண்டிருந்தனர்.
(iii) இந்நிலையில், தாத்தா ஒருவர், வேடப்பன் நகைமுத்துவின்மீது கொண்டுள்ள காதலைக் காட்சி ஒன்றன்மூலம் கண்ணாரக் கண்டறிந்தார்; அவ்விருவரையும் இணைத்து வைக்கத் திட்டமிட்டார்.
(iv) வேடப்பன் பெற்றோரிடம் சென்று, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்குமாறு கூறினார். அவர்கள், அத்தாத்தாவையே மணம் பேசி வருமாறு அனுப்பினர்.
(v) அவரும் மணம் குறித்துப் பேசச் சென்று இசைவு பெற்று வருகிறார்.
(vi) சங்க இலக்கிய காலத்தில் மணம் பேசச் சென்ற முதிய சான்றோர் போலவே, இக்கால இலக்கியமான குடும்பவிளக்கில் இடம்பெறும் தாத்தாவும் காட்சிப்படுத்தப்படுகிறார்.
14.
பண்பட்ட தமிழர் : தமிழர்கள் பண்பட்டவர்கள். கல்வியறிவும் அனுபவ அறிவும் கொண்டவரைத்தாம் பண்பட்டவர் என்பர்.
கல்வியறிவு : ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்களும் தமிழர்களின் கல்வியறிவைக் கண்கூடாய்க் காட்டுபவை.
அனுபவம் தந்த அரிய முத்துகள் : வாழ்க்கை அனுபவத்தில் தெறித்து விழுந்த முத்துகளே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', “தீதும் நன்றும் பிறர் தர வாரா", “நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்” முதலியனவாகும்.
தமிழரின் இருவிழிகள் : இத்தகைய உயரிய பண்பாட்டினைக் கொண்ட தமிழர்கள் இசையையும் இறை உணர்வையும் தம் இருவிழி எனப் போற்றினர். இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்ற நூல்களே திருவெம்பாவை, திருப்பாவை, திருப்புகழ், காவடிச்சிந்து முதலான நூல்கள்.
காவடியின் கருப்பொருள் : காவடித்தண்டின் இருபக்கமுள்ள பலகைகள் கந்தனின் திருவடிகள். அந்தத் திருவடிகளைத் தோளில் சுமப்பது பெரும்பேறு எனக் கருதி முருகனடியார் கோவில் நோக்கிச் செல்கின்றனர்.
நடையும் பத்தியும் சற்றும் நழுவா : வழிநடைக்களைப்பைக் களையவும், இதயத்தில் இறையுணர்வு இம்மியளவும் குன்றாதிருக்கவும் முருகனடியார்கள் பாடிய வழிநடைப் பாடல்களே காவடிச்சிந்து ஆகும்.
15.
மங்கையரின் வீரவுணர்வு! : வீரத்தின் விளைநிலம் தமிழகம். போர்முரசம் கேட்டவுடன், கலங்காது கையில் வேல் எடுத்துக் கொடுத்து, "நெற்றியில் திலகமிட்டு, போரிடச் சென்று வெற்றியுடன் வருக!” என வழியனுப்பி வைக்கும் மங்கையரைக் கொண்ட நாடு.
காளைகளை அடக்கும் காளைகள்! : இத்தகைய வீரமக்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தின்று கொழுத்துத் தினவெடுத்து வளர்ந்திருக்கும் காளைகளை எதிர்த்து நின்றால், அக்காளைகளின் கூரிய கொம்புகளால் குத்துப்பட்டுச் சாக நேரிடும் அல்லது பெருங்காயம் உற்று வீழ நேரிடும் என்பதை எல்லோரும் அறிவர். எனினும், அதனைப் புறந்தள்ளி, போராடி, காளைகளை அடக்கி வெற்றி பெறப் பல நூறு வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நிகழும் போது முன் வருவதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.
காளையன்று, கருப்புப் பிசாசு! : மேற்குறித்த வீரமரபில் வந்தவன்தான், “வாடிவாசல்” கதையில் இடம் பெறும், பிச்சி, அவன் ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்துகொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிட்டனர். அவை துள்ளியும் குதித்தும் கொம்புகளை அசைத்துக்கொண்டும், “எவரேனும் நெருங்கினால் அவ்வளவுதான்” என்று கூறுவது போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டும் வந்தன. அப்படி வந்த காளைகளுள் ஒன்றுதான் வாடிபுரத்துக்காளை. அது காளையன்று, கருப்புப்பிசாசு ! ஆம்; உடல் வளத்தாலும் நிறத்தாலும் அஃது அப்படித் தோன்றியது. அதனைக் கண்டு பலரும் பின்வாங்கினார். ஆனால், பிச்சி உரத்தோடு அதன் முன்பு நின்றான்.
தந்தையைக் கொன்ற காளை ! : அதனைக் கண்டு அங்கிருந்தோர் அனைவரும் அச்சத்தில் உறைந்து நின்றனர். “பிச்சிக்கு இன்று சாவு நிச்சயந்தான் !” என்றே முடிவு கட்டினர். ஆனால், பிச்சி அதன் கொம்புக்கு நேர் எதிர்நின்றான். 'அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உயிருக்கே உலைவைத்த காரி. அதன் கொம்பில் இன்னும் அப்பன் இரத்தம் வழிந்துகொண்டிருப்பது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட்டது,” என்கிறார், கதையாசிரியர்.
காளையை அடக்கினான் : களங்கம் துடைத்தான்! ஆம், கடந்த ஜல்லிக்கட்டின் போது அக்காரியை அடக்கப் பிச்சிக்கு அப்பன் முயற்சி செய்தான்; ஆனால், அக்காளையால் குத்தப்பட்டு இறந்தான். அதற்குப் பழி வாங்கவே பிச்சி அக்காளையை இப்போது எதிர்த்து நின்றான். தன் தந்தையைக் கொன்ற காளையைக் கொல்வதற்காக அன்று; தன் தந்தையைக் கொன்ற காளையினை அடக்கித் தன் வீரப்பரம்பரைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க.
அவ்வாறே அக்காளையோடு மும்முறை மோதி, அதனை வீழ்த்தித் தரையில் சாயச்செய்தான். களங்கம் கரைந்தது, வீரம் நிலைத்தது !
16.
தம் முன்னோரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறியாத மக்கள், வேரற்ற மரம் போல்வர்.
17.
அறிவுக்கு விருந்து அருந்திட வாரீர்!
பெரியோர்களே ! தாய்மார்களே ! வணக்கம்.
மதுரையை மையமாய்க்கொண்டு 'சிறகுகள்' என்னும் சமூகநல அமைப்பு இயங்கிக் கொண்டிருப்பதைப் பலரும் அறிவர். அவ்வமைப்பினார் வரும் ஜனவரி 13ஆம் நாளன்று, தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள பாரதி கலைக்கூட அரங்கில் உங்களுக்கு எழுச்சியூட்டும் தலைப்பில் கருத்து விருந்து படைக்கவிருக்கிறார்கள்.
சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி அவர்கள், “பண்பாடுகளால் வாழும் தமிழர்” என்னும் தலைப்பில், தமிழர்களின் பண்பாட்டுச்சிறப்புக் குறித்தும், தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தும் பேசுவார்.
சொற்பொழிவு முடிந்த பின்பு கலந்துரையாடலும் நடைபெறும். கேள்விச்செல்வத்தைப் பெற்ற நீங்கள், கலந்துரையாடலின் போது உங்களின் விழுமிய கருத்துகளை முன்வைக்கலாம். .
மேலும், ஜனவரி 10ஆம் நாளன்று ஒரு கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. சிறகுகள் அமைப்பினர் நடத்தவிருக்கும் அந்த ஒரு நாள் கருத்தரங்கில் தமிழர்களின் பண்பாட்டுச்சிறப்புக் குறித்தும், பண்பாட்டுத் தேடலின் தேவை குறித்தும் செறிவான கருத்துகள் செவிக்குப் படைக்கப்படும்.
எனவே, சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தவறாது பங்கு கொண்டு நம் பண்பாட்டுக்கொடியை உயர்த்திப் பிடிக்க வருக வருக என வேண்டுகிறேன்.
இவ்வண்ணம்,
ஒருங்கிணைப்பாளர்,
'சிறகுகள்'
18.
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்கு எப்பெயர்கள் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்?
19.
(அ) வினையாலணையும் பெயர்கள்
20.
(அ) தண்டுடை - தண்டு + உடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (தண்ட் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தண்டுடை)
21.
(அ) காண்பிப்பார் - காண்பி + ப் + ப் + ஆர்.
காண்பி - பகுதி; ப் - சந்தி; ப் - எதிர்கால இடைநிலை; ஆர் - படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதி.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards