11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
'கோடு' என்னும் தமிழ்ச்சொல்லிளன் பொருள் யாது?
2.
நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
3.
காவடிச்சிந்து என்பது யாது?
4.
'கோட்டை என்னும் சொல் திராவிட' மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
5.
சங்க் காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக.
6.
'தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து' என்பதை விளக்குக.
7.
மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.
8.
வாடிவாசல் கதை வாயிலாய் நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக.
9.
"குறுந்தொகை" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'அம்ம வாழி தோழி' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
'கோடு' என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பொருள் மலையுச்சி, சிகரம், மலை, வல்லரண், கோட்டை ஆகியன ஆகும்.
2.
(i) குறுந்தொகை நான்கடிமுதல் எட்டடிகள்வரை அமைந்த குறுகிய பாக்களால் ஆனது.
(ii) பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் இருநூற்று ஐவர் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்.
(iii) பண்டைய தமிழரின் அகஒழுக்கமாகிய இன்பியல் வாழ்க்கையினைச் சுவைபடச் சித்திரிக்கும் நூல்.
3.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
4.
(i) 'கோட்டை' என்னும் சொல் தமிழில் கோடு எனப்படுகிறது; மலையாளத்தில் கோட்ட, கோடு எனப்படுகிறது.
(ii) கன்னடத்தில் கோட்டே, கோண்டே எனவும், தெலுங்கில் கோட்ட எனவும் வழங்கப்படுகிறது.
(iii) துளுவில் கோட்டே என்றும், தோடா மொழியில் குவாட் என்றும் வழங்கப்படுகிறது.
5.
சங்ககாலச் சமூக நிகழ்வு
(i) வெள்ளிவீதியார் பாடலில் வரும் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்பினர்; காதல் கொண்டனர்; களவு மணம் புரிந்தனர்.
(ii) அவர்கள் உறவை அறிந்த தலைவி வீட்டார் அவளை வெளியே செல்லவிடாமல் வீட்டில் சிறை வைத்தனர்.
(iii) அதனை அறிந்த தலைவன், மணம் பேசி வருமாறு மூத்தோர் சிலரை அனுப்பி வைத்தான். அவர்களும் சென்று தலைவி வீட்டாருடன் நயம்படப் பேசித் தலைவியை தலைவனுக்கு மணம் புரிந்து தரத் தலைவி வீட்டார் இசையும்படி செய்தனர்.
இக்காலச் சமூக நிகழ்வு
(i) இதே போல ஒரு காட்சி, இன்றைய இலக்கியமான பாரதிதாசனின் குடும்ப விளக்கு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
(ii) வேடப்பனும் நகைமுத்துவும் ஒருவர்மீது மற்றவர் அளவற்ற காதல் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பெற்றோரோ ஒருவர்மீது மற்றவர் பகை கொண்டிருந்தனர்.
(iii) இந்நிலையில், தாத்தா ஒருவர், வேடப்பன் நகைமுத்துவின்மீது கொண்டுள்ள காதலைக் காட்சி ஒன்றன்மூலம் கண்ணாரக் கண்டறிந்தார்; அவ்விருவரையும் இணைத்து வைக்கத் திட்டமிட்டார்.
(iv) வேடப்பன் பெற்றோரிடம் சென்று, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்குமாறு கூறினார். அவர்கள், அத்தாத்தாவையே மணம் பேசி வருமாறு அனுப்பினர்.
(v) அவரும் மணம் குறித்துப் பேசச் சென்று இசைவு பெற்று வருகிறார்.
(vi) சங்க இலக்கிய காலத்தில் மணம் பேசச் சென்ற முதிய சான்றோர் போலவே, இக்கால இலக்கியமான குடும்பவிளக்கில் இடம்பெறும் தாத்தாவும் காட்சிப்படுத்தப்படுகிறார்.
6.
பண்பட்ட தமிழர் : தமிழர்கள் பண்பட்டவர்கள். கல்வியறிவும் அனுபவ அறிவும் கொண்டவரைத்தாம் பண்பட்டவர் என்பர்.
கல்வியறிவு : ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்களும் தமிழர்களின் கல்வியறிவைக் கண்கூடாய்க் காட்டுபவை.
அனுபவம் தந்த அரிய முத்துகள் : வாழ்க்கை அனுபவத்தில் தெறித்து விழுந்த முத்துகளே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', “தீதும் நன்றும் பிறர் தர வாரா", “நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்” முதலியனவாகும்.
தமிழரின் இருவிழிகள் : இத்தகைய உயரிய பண்பாட்டினைக் கொண்ட தமிழர்கள் இசையையும் இறை உணர்வையும் தம் இருவிழி எனப் போற்றினர். இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்ற நூல்களே திருவெம்பாவை, திருப்பாவை, திருப்புகழ், காவடிச்சிந்து முதலான நூல்கள்.
காவடியின் கருப்பொருள் : காவடித்தண்டின் இருபக்கமுள்ள பலகைகள் கந்தனின் திருவடிகள். அந்தத் திருவடிகளைத் தோளில் சுமப்பது பெரும்பேறு எனக் கருதி முருகனடியார் கோவில் நோக்கிச் செல்கின்றனர்.
நடையும் பத்தியும் சற்றும் நழுவா : வழிநடைக்களைப்பைக் களையவும், இதயத்தில் இறையுணர்வு இம்மியளவும் குன்றாதிருக்கவும் முருகனடியார்கள் பாடிய வழிநடைப் பாடல்களே காவடிச்சிந்து ஆகும்.
7.
(i) மனித சமூகத்தின் ஆதிநிலமாய் விளங்குவது மலையே ஆகும். தமிழ் இலக்கியங்கள் மலை நிலத்தைக் குறிஞ்சி என்று குறிப்பிடுகின்றன.
(ii) “சேயோன் மேய மைவரை உலகம்” என்று தொல்காப்பியமும், “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” என்று திருமுருகாற்றுப்படையும் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்திக் கூறுகின்றன.
(iii) பழங்குடி மக்கள், ஓடும் நீரையே குடிநீராய்ப் பயன்படுத்தும் இயல்புடையவர்கள். எனவே, அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்தில் ஒடும் சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து நீரெடுத்துப் பருகினர்.
8.
மங்கையரின் வீரவுணர்வு! : வீரத்தின் விளைநிலம் தமிழகம். போர்முரசம் கேட்டவுடன், கலங்காது கையில் வேல் எடுத்துக் கொடுத்து, "நெற்றியில் திலகமிட்டு, போரிடச் சென்று வெற்றியுடன் வருக!” என வழியனுப்பி வைக்கும் மங்கையரைக் கொண்ட நாடு.
காளைகளை அடக்கும் காளைகள்! : இத்தகைய வீரமக்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தின்று கொழுத்துத் தினவெடுத்து வளர்ந்திருக்கும் காளைகளை எதிர்த்து நின்றால், அக்காளைகளின் கூரிய கொம்புகளால் குத்துப்பட்டுச் சாக நேரிடும் அல்லது பெருங்காயம் உற்று வீழ நேரிடும் என்பதை எல்லோரும் அறிவர். எனினும், அதனைப் புறந்தள்ளி, போராடி, காளைகளை அடக்கி வெற்றி பெறப் பல நூறு வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நிகழும் போது முன் வருவதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.
காளையன்று, கருப்புப் பிசாசு! : மேற்குறித்த வீரமரபில் வந்தவன்தான், “வாடிவாசல்” கதையில் இடம் பெறும், பிச்சி, அவன் ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்துகொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிட்டனர். அவை துள்ளியும் குதித்தும் கொம்புகளை அசைத்துக்கொண்டும், “எவரேனும் நெருங்கினால் அவ்வளவுதான்” என்று கூறுவது போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டும் வந்தன. அப்படி வந்த காளைகளுள் ஒன்றுதான் வாடிபுரத்துக்காளை. அது காளையன்று, கருப்புப்பிசாசு ! ஆம்; உடல் வளத்தாலும் நிறத்தாலும் அஃது அப்படித் தோன்றியது. அதனைக் கண்டு பலரும் பின்வாங்கினார். ஆனால், பிச்சி உரத்தோடு அதன் முன்பு நின்றான்.
தந்தையைக் கொன்ற காளை ! : அதனைக் கண்டு அங்கிருந்தோர் அனைவரும் அச்சத்தில் உறைந்து நின்றனர். “பிச்சிக்கு இன்று சாவு நிச்சயந்தான் !” என்றே முடிவு கட்டினர். ஆனால், பிச்சி அதன் கொம்புக்கு நேர் எதிர்நின்றான். 'அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உயிருக்கே உலைவைத்த காரி. அதன் கொம்பில் இன்னும் அப்பன் இரத்தம் வழிந்துகொண்டிருப்பது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட்டது,” என்கிறார், கதையாசிரியர்.
காளையை அடக்கினான் : களங்கம் துடைத்தான்! ஆம், கடந்த ஜல்லிக்கட்டின் போது அக்காரியை அடக்கப் பிச்சிக்கு அப்பன் முயற்சி செய்தான்; ஆனால், அக்காளையால் குத்தப்பட்டு இறந்தான். அதற்குப் பழி வாங்கவே பிச்சி அக்காளையை இப்போது எதிர்த்து நின்றான். தன் தந்தையைக் கொன்ற காளையைக் கொல்வதற்காக அன்று; தன் தந்தையைக் கொன்ற காளையினை அடக்கித் தன் வீரப்பரம்பரைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க.
அவ்வாறே அக்காளையோடு மும்முறை மோதி, அதனை வீழ்த்தித் தரையில் சாயச்செய்தான். களங்கம் கரைந்தது, வீரம் நிலைத்தது !
9.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards