11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பகுபதத்தின் உறுப்புகள் யாவை?
2.
நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
3.
காவடிச்சிந்து என்பது யாது?
4.
'கோட்டை என்னும் சொல் திராவிட' மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
5.
'தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து' என்பதை விளக்குக.
6.
மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.
7.
வாடிவாசல் கதை வாயிலாய் நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக.
8.
பாதசாரிகளின் வழிநடைப் பாடலாகக் காவடிச்சிந்து உள்ளது - இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க.
9.
இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க.
10.
சி.சு செல்லப்பா தொடங்கிய இதழ் ___________.
தென்றல்
குயில்
எழுத்து
கணையாழி
11.
குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை __________.
401
201
251
101
12.
பகுபத உறுப்புகள் மொத்தம் _________.
இரண்டு
மூன்று
ஆறு
எட்டு
13.
திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என அழைத்தவர் ____________.
ஆர். பாலகிருஷ்ணன்
அண்ணாமலையார்
கமில் சுவலபில்
தி. சு. செல்லப்பா
14.
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை, _________ என்னும் கலைச்சொல் குறிக்கும்.
Biology
Geology
Zoology
Orology
15.
திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு
பகுதி
விகுதி
சந்தி
சாரியை
16.
'வாடிவாசல்' குறும்புதினத்தின் ஆசிரியர் ______.
முத்துலிங்கம்
ஜெயமோகன்
பிரபஞ்சன்
சி.சு. செல்லப்பா
17.
நுமக்குப் பாடமாய் அமைந்த குறுந்தொகை __________ திணையைச் சார்ந்தது.
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
18.
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர் __________
அண்ணாமலையார்
காளமேகப்புலவர்
ஒளவையார்
அருணகிரியார்
19.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
20.
காவடிச்சிந்துவிற்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
அண்ணாமலையார்
முருகன்
பாரதியார்
21.
கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு,
கூற்று சரி, விளக்கம் தவறு.
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
கூற்று தவறு, விளக்கம் சரி.
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு.
22.
"குறுந்தொகை" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'அம்ம வாழி தோழி' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறும் பகுபதத்தின் உறுப்புகளாகும்.
2.
(i) குறுந்தொகை நான்கடிமுதல் எட்டடிகள்வரை அமைந்த குறுகிய பாக்களால் ஆனது.
(ii) பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் இருநூற்று ஐவர் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்.
(iii) பண்டைய தமிழரின் அகஒழுக்கமாகிய இன்பியல் வாழ்க்கையினைச் சுவைபடச் சித்திரிக்கும் நூல்.
3.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
4.
(i) 'கோட்டை' என்னும் சொல் தமிழில் கோடு எனப்படுகிறது; மலையாளத்தில் கோட்ட, கோடு எனப்படுகிறது.
(ii) கன்னடத்தில் கோட்டே, கோண்டே எனவும், தெலுங்கில் கோட்ட எனவும் வழங்கப்படுகிறது.
(iii) துளுவில் கோட்டே என்றும், தோடா மொழியில் குவாட் என்றும் வழங்கப்படுகிறது.
5.
பண்பட்ட தமிழர் : தமிழர்கள் பண்பட்டவர்கள். கல்வியறிவும் அனுபவ அறிவும் கொண்டவரைத்தாம் பண்பட்டவர் என்பர்.
கல்வியறிவு : ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்களும் தமிழர்களின் கல்வியறிவைக் கண்கூடாய்க் காட்டுபவை.
அனுபவம் தந்த அரிய முத்துகள் : வாழ்க்கை அனுபவத்தில் தெறித்து விழுந்த முத்துகளே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', “தீதும் நன்றும் பிறர் தர வாரா", “நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்” முதலியனவாகும்.
தமிழரின் இருவிழிகள் : இத்தகைய உயரிய பண்பாட்டினைக் கொண்ட தமிழர்கள் இசையையும் இறை உணர்வையும் தம் இருவிழி எனப் போற்றினர். இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்ற நூல்களே திருவெம்பாவை, திருப்பாவை, திருப்புகழ், காவடிச்சிந்து முதலான நூல்கள்.
காவடியின் கருப்பொருள் : காவடித்தண்டின் இருபக்கமுள்ள பலகைகள் கந்தனின் திருவடிகள். அந்தத் திருவடிகளைத் தோளில் சுமப்பது பெரும்பேறு எனக் கருதி முருகனடியார் கோவில் நோக்கிச் செல்கின்றனர்.
நடையும் பத்தியும் சற்றும் நழுவா : வழிநடைக்களைப்பைக் களையவும், இதயத்தில் இறையுணர்வு இம்மியளவும் குன்றாதிருக்கவும் முருகனடியார்கள் பாடிய வழிநடைப் பாடல்களே காவடிச்சிந்து ஆகும்.
6.
(i) மனித சமூகத்தின் ஆதிநிலமாய் விளங்குவது மலையே ஆகும். தமிழ் இலக்கியங்கள் மலை நிலத்தைக் குறிஞ்சி என்று குறிப்பிடுகின்றன.
(ii) “சேயோன் மேய மைவரை உலகம்” என்று தொல்காப்பியமும், “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” என்று திருமுருகாற்றுப்படையும் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்திக் கூறுகின்றன.
(iii) பழங்குடி மக்கள், ஓடும் நீரையே குடிநீராய்ப் பயன்படுத்தும் இயல்புடையவர்கள். எனவே, அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்தில் ஒடும் சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து நீரெடுத்துப் பருகினர்.
7.
மங்கையரின் வீரவுணர்வு! : வீரத்தின் விளைநிலம் தமிழகம். போர்முரசம் கேட்டவுடன், கலங்காது கையில் வேல் எடுத்துக் கொடுத்து, "நெற்றியில் திலகமிட்டு, போரிடச் சென்று வெற்றியுடன் வருக!” என வழியனுப்பி வைக்கும் மங்கையரைக் கொண்ட நாடு.
காளைகளை அடக்கும் காளைகள்! : இத்தகைய வீரமக்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தின்று கொழுத்துத் தினவெடுத்து வளர்ந்திருக்கும் காளைகளை எதிர்த்து நின்றால், அக்காளைகளின் கூரிய கொம்புகளால் குத்துப்பட்டுச் சாக நேரிடும் அல்லது பெருங்காயம் உற்று வீழ நேரிடும் என்பதை எல்லோரும் அறிவர். எனினும், அதனைப் புறந்தள்ளி, போராடி, காளைகளை அடக்கி வெற்றி பெறப் பல நூறு வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நிகழும் போது முன் வருவதைக் காணும் போது வியப்பு மேலிடுகிறது.
காளையன்று, கருப்புப் பிசாசு! : மேற்குறித்த வீரமரபில் வந்தவன்தான், “வாடிவாசல்” கதையில் இடம் பெறும், பிச்சி, அவன் ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்துகொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு காளையையும் அவிழ்த்துவிட்டனர். அவை துள்ளியும் குதித்தும் கொம்புகளை அசைத்துக்கொண்டும், “எவரேனும் நெருங்கினால் அவ்வளவுதான்” என்று கூறுவது போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டும் வந்தன. அப்படி வந்த காளைகளுள் ஒன்றுதான் வாடிபுரத்துக்காளை. அது காளையன்று, கருப்புப்பிசாசு ! ஆம்; உடல் வளத்தாலும் நிறத்தாலும் அஃது அப்படித் தோன்றியது. அதனைக் கண்டு பலரும் பின்வாங்கினார். ஆனால், பிச்சி உரத்தோடு அதன் முன்பு நின்றான்.
தந்தையைக் கொன்ற காளை ! : அதனைக் கண்டு அங்கிருந்தோர் அனைவரும் அச்சத்தில் உறைந்து நின்றனர். “பிச்சிக்கு இன்று சாவு நிச்சயந்தான் !” என்றே முடிவு கட்டினர். ஆனால், பிச்சி அதன் கொம்புக்கு நேர் எதிர்நின்றான். 'அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உயிருக்கே உலைவைத்த காரி. அதன் கொம்பில் இன்னும் அப்பன் இரத்தம் வழிந்துகொண்டிருப்பது போன்ற பிரமை அவனுக்கு ஏற்பட்டது,” என்கிறார், கதையாசிரியர்.
காளையை அடக்கினான் : களங்கம் துடைத்தான்! ஆம், கடந்த ஜல்லிக்கட்டின் போது அக்காரியை அடக்கப் பிச்சிக்கு அப்பன் முயற்சி செய்தான்; ஆனால், அக்காளையால் குத்தப்பட்டு இறந்தான். அதற்குப் பழி வாங்கவே பிச்சி அக்காளையை இப்போது எதிர்த்து நின்றான். தன் தந்தையைக் கொன்ற காளையைக் கொல்வதற்காக அன்று; தன் தந்தையைக் கொன்ற காளையினை அடக்கித் தன் வீரப்பரம்பரைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க.
அவ்வாறே அக்காளையோடு மும்முறை மோதி, அதனை வீழ்த்தித் தரையில் சாயச்செய்தான். களங்கம் கரைந்தது, வீரம் நிலைத்தது !
8.
குன்றுதோறும் கோவில் கொண்டவன் : குன்றுதோறும் கோவில் கொண்டிருப்பவன், குமரன். அவன் அடியார்கள் ஆண்டுதோறும் காவடியெடுத்துச் சென்று, கனிந்துருகி அவன் திருவடிகளைப் பணிந்து, காணிக்கை செலுத்திவிட்டு, மனநிறைவோடு தம் மனை நோக்கிச் செல்வர்.
பவ நோய் போக்கும் பாலன்! : பல காத தூரத்தில், தம் பவ நோயைப் போக்கும் சிவபாலன் எழுந்தருளியிருப்பினும், அவன் அடியார்கள் பலநாள் கால்நடையாகவே நடந்து சென்று, அவனைத் தரிசித்து, அவன் இரு பதமலரைத் தம் தலையில் சூடுவர்.
சோர்வைப் போக்கும், சுறுசுறுப்பை உண்டாக்கும்! : இப்படிப் பலநாள் நடந்து செல்வதால் கால் வலி ஏற்படும்; களைப்பு உண்டாகும்; சோர்வு ஏற்படும்; உள்ளத் தளர்ச்சி தலைதூக்கும். இத்தகைய உடற்றுன்பங்களை மறந்து, உற்சாகம் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையே, காவடிச்சிந்துப் பாடல்கள்.
எளிதில் வசப்படும் பாடல்கள்! : அப்பாடல்கள் பண்டைய செய்யுள் நடையில் இருந்ததால் அவற்றை மனத்தில் பதிப்பதற்கும் வாய்விட்டு எளிதில் பாடுவதற்கும் இயலாது. காவடிப்பாடல்கள் எளிய சொற்களில், ஒரு தரம் கேட்டால் மறுமுறை எளிதில் பாடுவதற்கேற்ற சந்த நடையில் அமைந்திருக்கிறது. அப்பாடல்களை ஒரு முறை ஒருவர் பாடுவதைக் கேட்டால் மற்றவரும் நாமும் பாட வேண்டும் என உந்தும் வகையில் அவை எதுகை மோனை அமைப்பைக் கொண்டு திகழ்கின்றன.
கந்தனைக் காண நல்ல தோழன்! : இவ்வாறு காவடிப் பாடல்கள் எல்லாரும் அறிந்த எளிய சொற்களால் ஆக்கப்பட்டுள்ளன; எளிதில் கைவசப்படும் சந்தத்தில் நடைபயில்கின்றன; எதுகை மோனை அமைப்பு எவரையும் ஈர்க்கின்றன. அதனால், வழி நடந்து செல்லும் எளிய மக்களும் ஓரிரு முறை கேட்டவுடனே பாட இயல்கிறது. மேலும் அவை, களைப்பை நீக்கி, களிப்பை உண்டாக்கி விரைந்து நடந்து கந்தனைக் காண நல்ல தோழனாய் அமைகின்றன.
9.
ஆதியில் வாழ்ந்த நிலம் : தமிழன் தொடக்கத்தில் வாழ்ந்த நிலம், குறிஞ்சியாகும். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். எங்கும் இயற்கை அழகு குடிகொண்டிருக்கும் மலைப்பகுதியில் வாழ்ந்த தமிழன் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் சென்று பரவி வாழத் தொடங்கினான். அப்படி வாழ்வதற்கு முயன்ற தமிழன், தான் இருக்குமிடத்திற்குத் தன்னைச் சூழ அமைந்திருக்கும் இயற்கைச் சூழலைக் கருத்தில் கொண்டே பெயரிடத் தொடங்கினான்.
மலையால் பெயர் பெற்ற ஊர்கள் : பாண்டி நாட்டிலே மதுரைக்கு அருகே ஒரு மலையும், சோழநாட்டிலே ஒரு மலையும், தொண்டை நாட்டிலே ஒரு மலையும் அமைந்துள்ளன. அம்மலைகளைச் சார்ந்து ஊர்கள் அமைந்துள்ளன. எனவே, அவ்வூர் மக்கள் அம்மலைகளை மறவாமல், தம்மூர்களுக்கு முறையே யானை மலை, சுவாமி மலை, தணிகை மலை திருத்தணி எனப் பெயரிட்டுள்ளனர்.
கோடு என்பது மலையைக் குறிக்கும். அத்தகைய கோடு ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ளது. அக்கோட்டினை ஒட்டி வாழ்கின்ற மக்கள், தம்மூருக்குத் “திருச்செங்கோடு” என்று பெயரிட்டுள்ளனர். அக்கோடு செந்நிறம் வாய்ந்ததால் அது செங்கோடாயிற்று.
சோலையால் பெயர் பெற்ற ஊர்! : திருக்குற்றால மலை அடிவாரத்தில் கண்கவரும் தண்ணறுஞ்சோலைகள் உள்ளன. அச்சோலைகளுக்கு நடுவே ஒர் களர் உள்ளது. அவ்வூர் மக்கள், தம்மூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்றுத் தம்மூருக்குப் 'பைம்பொழில்' என்று பெயரிட்டனர். அஃது இக்காலத்தில் 'பம்புளி' எனத் திரிந்து வழங்குகிறது.
மரங்களால் பெயர் பெற்ற ஊர்! : கெடில நதிக்குத் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் உள்ளது. அவ்விடத்தில் அம்மரங்கள் சூழ வாழ்ந்த மக்கள் தம்மூருக்குத் “திருப்பாதிரிப்புலியூர்” எனப் பெயரிட்டனர்.
பசுக்களால் பெயர் பெற்ற ஊர்! : முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்னும் பெயர் பெறும், திருத்தொண்டராகிய சண்டேசுவரர் பசுக்களை மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் உள்ளது. அங்குத் தங்கி வாழத் தொடங்கிய மக்கள், தம்மூருக்குத் *திருஆப்பாடி” எனப் பெயரிட்டனர்.
இவ்வாறு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைய மக்கள், அவ்வவ்விடத்துச் சிறப்பிற்கேற்பப் பெயரிட்டு வழங்கிய திறனை எண்ணி நெஞ்சம் விம்மிதம் கொள்கிறது.
10.
(c)
எழுத்து
11.
(a)
401
12.
(c)
ஆறு
13.
(c)
கமில் சுவலபில்
14.
(d)
Orology
15.
(b)
விகுதி
16.
(d)
சி.சு. செல்லப்பா
17.
(a)
குறிஞ்சி
18.
(a)
அண்ணாமலையார்
19.
(d)
பகுதி, விகுதி.
20.
(b)
அண்ணாமலையார்
21.
(b)
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
22.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards