11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பகுபதத்தின் உறுப்புகள் யாவை?
2.
குறுந்தொகையைத் தொகுத்தவர் யார், தொகுப்பித்தோர் யார்? இந்நூல் எத்தொகை நூல்களுள் ஒன்று?
3.
காவடிச்சிந்து என்பது யாது?
4.
'கோட்டை என்னும் சொல் திராவிட' மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
5.
இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க.
6.
சங்க் காலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை ஒப்பிட்டு விளக்குக.
7.
காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் ___________.
சென்னிகுளம் அண்ணாமலையார்
பாரதியார்
பாரதிதாசன்
கார்மேகம்
8.
“சேயோன் மேய மைவரை உலகம்” என்று குறிப்பிடும் நூல் __________.
திருமுருகாற்றுபபடை
திருமலை முருகன் பள்ளு
தொல்காப்பியம்
அகத்தியம்
9.
மனித சமூகத்தின் ஆதி நிலம் __________.
காடு
மலை
வயல்
பாலைவனம்
10.
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை, _________ என்னும் கலைச்சொல் குறிக்கும்.
Biology
Geology
Zoology
Orology
11.
திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு
பகுதி
விகுதி
சந்தி
சாரியை
12.
'வாடிவாசல்' குறும்புதினத்தின் ஆசிரியர் ______.
முத்துலிங்கம்
ஜெயமோகன்
பிரபஞ்சன்
சி.சு. செல்லப்பா
13.
குறுந்தொகை நூலுக்குக் கடவள் வாழ்த்து பாடியவர் __________
வெள்ளிவீதியார்
இளம்பெருவழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பூரிக்கோ
14.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
15.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
| 1. வெள்ளிவீதியார் | - | அ) புறநானூறு |
| 2. அண்ணாமலையார் | - | ஆ) சி.சு. செல்லப்பா |
| 3. வாடிவாசல் | - | இ) குறுந்தொகை |
| 4, இளம்பெருவழுதி | - | ஈ) காஷடிச்சிந்து |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| ஆ | ஈ | அ | இ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | ஆ | அ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
16.
Culture does not make people. People make culture.
17.
Education is the most powerful weapon, which you can use to change the world.
18.
கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப்பதாகை ஒன்றை உருவாக்குக.
தமிழ்ப்பண்பாட்டுக் கருத்தரங்கு
ஜனவரி 90, மதுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், பண்பாடு குறித்தான தேடலின் தேவை குறித்தும் சிறகுகள் சமூக அமைப்பின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மதுரையை மையமாய்க்கொண்டு இயங்கி வரும் சமூகநல அமைப்பான சிறகுகள் சார்பில், ஒருநாள் கருத்தரங்கம் தெப்பக்குளம் அருகில், பாரதி கலைக்கூட அரங்கில் ஜனவரி 13ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தும் “பண்பாடுகளால் வாழும் தமிழர்” என்னும் தலைப்பில் சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி பேசவிருக்கிறார். இதன் இறுதிப்பகுதியாய்க் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது. விருப்பம் உள்ள் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என்று சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இனியன் தெரிவித்துள்ளார்.
19.
தமிழ்மொழியில் 'கோட்டை' என்ற சொல், காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில்சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது.
20.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) திருப்புகழ்
21.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) பிரிந்தோர்
22.
"குறுந்தொகை" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'அம்ம வாழி தோழி' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
23.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) வாழ்வான்
24.
25.
1.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறும் பகுபதத்தின் உறுப்புகளாகும்.
2.
(i) குறுந்தொகையை தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
(ii) தொகுப்பித்தோர் யார் என அறிய இயலவில்லை.
(iii) குறுந்தொகை சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களும் ஒன்று.
3.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
4.
(i) 'கோட்டை' என்னும் சொல் தமிழில் கோடு எனப்படுகிறது; மலையாளத்தில் கோட்ட, கோடு எனப்படுகிறது.
(ii) கன்னடத்தில் கோட்டே, கோண்டே எனவும், தெலுங்கில் கோட்ட எனவும் வழங்கப்படுகிறது.
(iii) துளுவில் கோட்டே என்றும், தோடா மொழியில் குவாட் என்றும் வழங்கப்படுகிறது.
5.
ஆதியில் வாழ்ந்த நிலம் : தமிழன் தொடக்கத்தில் வாழ்ந்த நிலம், குறிஞ்சியாகும். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். எங்கும் இயற்கை அழகு குடிகொண்டிருக்கும் மலைப்பகுதியில் வாழ்ந்த தமிழன் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் சென்று பரவி வாழத் தொடங்கினான். அப்படி வாழ்வதற்கு முயன்ற தமிழன், தான் இருக்குமிடத்திற்குத் தன்னைச் சூழ அமைந்திருக்கும் இயற்கைச் சூழலைக் கருத்தில் கொண்டே பெயரிடத் தொடங்கினான்.
மலையால் பெயர் பெற்ற ஊர்கள் : பாண்டி நாட்டிலே மதுரைக்கு அருகே ஒரு மலையும், சோழநாட்டிலே ஒரு மலையும், தொண்டை நாட்டிலே ஒரு மலையும் அமைந்துள்ளன. அம்மலைகளைச் சார்ந்து ஊர்கள் அமைந்துள்ளன. எனவே, அவ்வூர் மக்கள் அம்மலைகளை மறவாமல், தம்மூர்களுக்கு முறையே யானை மலை, சுவாமி மலை, தணிகை மலை திருத்தணி எனப் பெயரிட்டுள்ளனர்.
கோடு என்பது மலையைக் குறிக்கும். அத்தகைய கோடு ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ளது. அக்கோட்டினை ஒட்டி வாழ்கின்ற மக்கள், தம்மூருக்குத் “திருச்செங்கோடு” என்று பெயரிட்டுள்ளனர். அக்கோடு செந்நிறம் வாய்ந்ததால் அது செங்கோடாயிற்று.
சோலையால் பெயர் பெற்ற ஊர்! : திருக்குற்றால மலை அடிவாரத்தில் கண்கவரும் தண்ணறுஞ்சோலைகள் உள்ளன. அச்சோலைகளுக்கு நடுவே ஒர் களர் உள்ளது. அவ்வூர் மக்கள், தம்மூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்றுத் தம்மூருக்குப் 'பைம்பொழில்' என்று பெயரிட்டனர். அஃது இக்காலத்தில் 'பம்புளி' எனத் திரிந்து வழங்குகிறது.
மரங்களால் பெயர் பெற்ற ஊர்! : கெடில நதிக்குத் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் உள்ளது. அவ்விடத்தில் அம்மரங்கள் சூழ வாழ்ந்த மக்கள் தம்மூருக்குத் “திருப்பாதிரிப்புலியூர்” எனப் பெயரிட்டனர்.
பசுக்களால் பெயர் பெற்ற ஊர்! : முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்னும் பெயர் பெறும், திருத்தொண்டராகிய சண்டேசுவரர் பசுக்களை மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் உள்ளது. அங்குத் தங்கி வாழத் தொடங்கிய மக்கள், தம்மூருக்குத் *திருஆப்பாடி” எனப் பெயரிட்டனர்.
இவ்வாறு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைய மக்கள், அவ்வவ்விடத்துச் சிறப்பிற்கேற்பப் பெயரிட்டு வழங்கிய திறனை எண்ணி நெஞ்சம் விம்மிதம் கொள்கிறது.
6.
சங்ககாலச் சமூக நிகழ்வு
(i) வெள்ளிவீதியார் பாடலில் வரும் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்பினர்; காதல் கொண்டனர்; களவு மணம் புரிந்தனர்.
(ii) அவர்கள் உறவை அறிந்த தலைவி வீட்டார் அவளை வெளியே செல்லவிடாமல் வீட்டில் சிறை வைத்தனர்.
(iii) அதனை அறிந்த தலைவன், மணம் பேசி வருமாறு மூத்தோர் சிலரை அனுப்பி வைத்தான். அவர்களும் சென்று தலைவி வீட்டாருடன் நயம்படப் பேசித் தலைவியை தலைவனுக்கு மணம் புரிந்து தரத் தலைவி வீட்டார் இசையும்படி செய்தனர்.
இக்காலச் சமூக நிகழ்வு
(i) இதே போல ஒரு காட்சி, இன்றைய இலக்கியமான பாரதிதாசனின் குடும்ப விளக்கு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
(ii) வேடப்பனும் நகைமுத்துவும் ஒருவர்மீது மற்றவர் அளவற்ற காதல் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் பெற்றோரோ ஒருவர்மீது மற்றவர் பகை கொண்டிருந்தனர்.
(iii) இந்நிலையில், தாத்தா ஒருவர், வேடப்பன் நகைமுத்துவின்மீது கொண்டுள்ள காதலைக் காட்சி ஒன்றன்மூலம் கண்ணாரக் கண்டறிந்தார்; அவ்விருவரையும் இணைத்து வைக்கத் திட்டமிட்டார்.
(iv) வேடப்பன் பெற்றோரிடம் சென்று, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்குமாறு கூறினார். அவர்கள், அத்தாத்தாவையே மணம் பேசி வருமாறு அனுப்பினர்.
(v) அவரும் மணம் குறித்துப் பேசச் சென்று இசைவு பெற்று வருகிறார்.
(vi) சங்க இலக்கிய காலத்தில் மணம் பேசச் சென்ற முதிய சான்றோர் போலவே, இக்கால இலக்கியமான குடும்பவிளக்கில் இடம்பெறும் தாத்தாவும் காட்சிப்படுத்தப்படுகிறார்.
7.
(a)
சென்னிகுளம் அண்ணாமலையார்
8.
(c)
தொல்காப்பியம்
9.
(b)
மலை
10.
(d)
Orology
11.
(b)
விகுதி
12.
(d)
சி.சு. செல்லப்பா
13.
(c)
பாரதம் பாடிய பெருந்தேவனார்
14.
(d)
பகுதி, விகுதி.
15.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
16.
பண்பாடு மக்களை உருவாக்காது; மக்கள் பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.
17.
கல்வி, வலிமையான ஆயுதம். அதனைப் பயன்படுத்தி இவ்வுலகையே மாற்றலாம்.
18.
அறிவுக்கு விருந்து அருந்திட வாரீர்!
பெரியோர்களே ! தாய்மார்களே ! வணக்கம்.
மதுரையை மையமாய்க்கொண்டு 'சிறகுகள்' என்னும் சமூகநல அமைப்பு இயங்கிக் கொண்டிருப்பதைப் பலரும் அறிவர். அவ்வமைப்பினார் வரும் ஜனவரி 13ஆம் நாளன்று, தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள பாரதி கலைக்கூட அரங்கில் உங்களுக்கு எழுச்சியூட்டும் தலைப்பில் கருத்து விருந்து படைக்கவிருக்கிறார்கள்.
சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி அவர்கள், “பண்பாடுகளால் வாழும் தமிழர்” என்னும் தலைப்பில், தமிழர்களின் பண்பாட்டுச்சிறப்புக் குறித்தும், தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தும் பேசுவார்.
சொற்பொழிவு முடிந்த பின்பு கலந்துரையாடலும் நடைபெறும். கேள்விச்செல்வத்தைப் பெற்ற நீங்கள், கலந்துரையாடலின் போது உங்களின் விழுமிய கருத்துகளை முன்வைக்கலாம். .
மேலும், ஜனவரி 10ஆம் நாளன்று ஒரு கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. சிறகுகள் அமைப்பினர் நடத்தவிருக்கும் அந்த ஒரு நாள் கருத்தரங்கில் தமிழர்களின் பண்பாட்டுச்சிறப்புக் குறித்தும், பண்பாட்டுத் தேடலின் தேவை குறித்தும் செறிவான கருத்துகள் செவிக்குப் படைக்கப்படும்.
எனவே, சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தவறாது பங்கு கொண்டு நம் பண்பாட்டுக்கொடியை உயர்த்திப் பிடிக்க வருக வருக என வேண்டுகிறேன்.
இவ்வண்ணம்,
ஒருங்கிணைப்பாளர்,
'சிறகுகள்'
19.
தமிழ்மொழியில் 'கோட்டை' என்ற சொல், எக்கட்டமைப்பைக் குறிக்கிறது?
20.
(அ) திருப்புகழ் - திரு + புகழ்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (திருப்புகழ்)
21.
(அ) வினையாலணையும் பெயர்கள்
22.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.
23.
(அ) வாழ்வான் - வாழ் + வ் + ஆன்.
வாழ் - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
24.
25.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards