11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
'யானை டாக்டர்' குறும் புதினக் கதையைப் பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.
2.
'யானை டாக்டர்' கதைவாயிலாய் இயற்கை, உயிரினப்பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
3.
பனைமரத்தின் பயன்கள் யாவை?
4.
பேராசிரியர் சுந்தரனார் - குறிப்பு வரைக.
5.
வாய்க்காலின் சிறப்புகளாய்க் குறிப்பிடப்படுவன யாவை?
6.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) பூவணி
7.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) உழுதுழுது
8.
'காட்டின் மூலவர்' என்று போற்றப்படுவது ___________.
சிங்கம்
புலி
யானை
பாம்பு
9.
பொருத்திக் காட்டுக.
| i) குறிஞ்சி | 1. அம்மூவனார் |
| ii) முல்லை | 2. ஓரம்போகினார் |
| iii) மருதம் | 3. பேயனர் |
| iv) நெய்தல் | 4. கபிலர் |
| i | ii | iii | iv |
| 4 | 2 | 3 | 1 |
| i | ii | iii | iv |
| 4 | 3 | 2 | 1 |
| i | ii | iii | iv |
| 3 | 2 | 4 | 1 |
| i | ii | iii | iv |
| 1 | 4 | 3 | 2 |
10.
நன்செய் நிலத்திற்கு இட வேண்டிய உரம் ___________.
மாட்டுச்சாணம், கோமியம்
இலைச்சருகு
வேதிஉரம்
சாம்பல்
11.
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று முழங்கியவர் __________.
பாரதிதாசன்
வாணிதாசன்
பாரதியார்
ஒளவையார்
12.
இயற்கை வேளாண்மை செய்ய மங்கை பின்பற்றியது __________ வழி.
சொக்கலிங்கம்
மல்லிகா
நம்மாழ்வார்
முன்னோர்
13.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனப் போற்றியவர் __________
புரட்சிக்கவிஞர்
பாரதியார்
ஒளவையார்
நாமக்கல்லார்
14.
சீவகனின் அமைச்சன்_____
பலதேவன்
புருடோத்தமன்
குடிலன்
நடராசன்
15.
யானை ஒன்றுக்குக் கால் வீங்கி அலைந்து கொண்டிருந்த பகுதி _________
கொல்லிமலை
யானைமலை
முதுமலை
மருதமலை
16.
ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மாம் எது?
பனைமரம்
வாழை மரம்
முருங்கை மரம்
தென்னை மரம்
17.
தமிழின் முதல் பாவடிவ நாடகநூல்____
இரகசிய வழி
மனோன்மணியம்
நூல்தொகை விளக்கம்
திருவிதாங்கூர் அரசர் வரலாறு
18.
கூவும் குயிலும் கரையும் காகமும் - தொடரில் இடம் பெற்ற மரபு .......
பெயர்மரபு
வினைமரபு
ஒலிமரபு
இவை மூன்றும்
19.
லிட்டன் பிரபுவின் "இரகசிய வழி" என்ற நூலைத் தமிழில் எழுதியவர் யார்? எந்த ஆண்டு? எந்த பெயரில்?
20.
நஞ்சை (நன்செய்) நிலத் தொழுஉரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
21.
நாங்கூழ்ப்புழு நிலத்தை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது?
22.
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்.
23.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) உருட்டி, கடந்து, சிக்கி, கலந்து
24.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) வீழருவி, எழுசுனை, செய்தொழில், செய்எறும்பு, அலைகடல்
1.
யானை டாக்டர்:
முதுமலையில் யானை ஒன்று கால் வீங்கி அலைவதாக அறிந்து, அதைத்தேடி யானை டாக்டரும் வனத்துறை அதிகாரி ஜெயமோகனும் வனக்காவலருடன் ஜீப்பில் சென்றனர். காட்டுக் குறும்பர் இனமக்கள் அந்த யானையின் இருப்பிடத்தை அறிந்து வைத்திருந்ததால், அவர்களையும் துணைக்கு ஏற்றிக்கொண்டு பயணம் செய்தனர். நெடுந்தூரம் சென்றதும் ஜீப்பை நிறுத்திவிட்டு மூங்கில் காட்டில் தரையின் வேர் முடிச்சுகளை மிதித்தேறி நடந்தனர். ஒரிடத்தில் யானைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டனர்.
யானை நோயுறுதல்:
நோய் பாதிப்பு உள்ள யானையைக் கண்டறிந்து, அதற்கு மருத்துவம் செய்ய, மயக்கம் தரும் மருந்தை உள்ளடக்கிய தோட்டாவைத் துப்பாக்கிக் கருவியில் பொருத்திக்கொண்டு, டாக்டர்மட்டும் தனித்துச் செல்கிறார். காட்டிற்கு வந்த எவனோ ஒருவன், குடித்துவிட்டு வீசி எறிந்த மதுக்குப்பி, காலில் தைத்ததால் பாதம் வீங்கி நடக்கமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த யானையை மருத்துவர் கண்டுபிடிக்கிறார்.
யானைக் கூட்டத்தின் செயல்:
நோயுற்ற யானையை நெருங்கியபோது மற்ற யானைகள் பிளிறி அச்சுறுத்தின; எச்சரிக்கை செய்தன. இது இயற்கை என்பதை அறிந்திருந்தாலும், டாக்டர் கே, நோயுற்ற யானையை நெருங்கிய போது, வழி நடத்திய யானை பின்வாங்க, மற்றவை, மூங்கில் காட்டுக்குள் மறைந்தன. குடும்பமாக நீண்ட காலம் வாழும் வலிமையான விலங்கான யானை, அதிக ஞாபகசக்தி உடையது.
யானை டாக்டர் சேவை:
மற்ற கால்களைவிடப் பெரிதாக வீங்கிய பின்னங்காலை இழுத்து இழுத்து நடந்த யானையின் அருகில் சென்றதும், டாக்டர் மயக்க மருந்து தோட்டாவால் சுட்டார். சிறிதுசிறிதாகக் கால் மடித்து, மயக்க நிலையில் யானை பக்கவாட்டில் அசைவின்றி வீழ்ந்தது. மருத்துவர் தம் சேவையைத் தொடங்கி, அதன் காலில் தைத்திருந்த கண்ணாடிக் குப்பியைப் பிடுங்கி எறிந்தார். சீழ் கட்டிய பகுதியைச் சிறுகோடரிக் கருவியால் வெட்டி, ஆழப்பதிந்த குப்பியை நீக்கினார். தலையணை அளவுப் பஞ்சில் மருந்தை நனைத்துக் காலில் திணித்தார்.
கால் தோலில் எவர்சில்வர் கிளிப்பை மாட்டி, துணியைச் சுற்றிக்கட்டி, சேற்றை வாரி அதன்மேல் பூசினார். வேலை முடிந்ததும் எல்லாரும் அங்கிருந்து நீங்கினார். மறைந்திருந்த யானைகள் வெளிவந்து அதைச் சூழ்ந்து நின்று பிளிறின, நன்றி சொல்வதுபோல் துதிக்கைகளை ஆட்டின. ஒரு குட்டிமட்டும் மஞ்சணத்தி மரத்தடியில் நின்று, மருத்துவரைப் பார்த்துக் கொண்டே இருந்தது.
வியப்பான வரவேற்பு:
யானைகளைச் சோதித்து அறிக்கை தயாரிக்க மருத்துவர் கே. மறுமுறை வந்தபோது, முகாமிலிருந்த 48 யானைகள் துதிக்கை உயர்த்தி அவரை வரவேற்றன. அவர் அவற்றுடன் கொஞ்சிக் குலவியபடி வேலைகளில் மூழ்கினார். வனத்துறை அதிகாரி, இரவு அவருடனேயே தங்கினார். அரைமணி நேரத்தில் சமைத்து முடித்து, அதிகாரியை விருந்தினராக உபசரித்தாராம் மருத்துவர், அசதியில் இரவு பத்துமணிக்கு அதிகாரி படுத்து உறங்கிவிட்டார்.
குட்டி யானைக்கு மருத்துவம்:
அறையில் வெளிச்சம் இருந்ததால் கண் விழித்த வனத்துறை அதிகாரி, டாக்டர் கம்பளிச் சட்டை அணிந்து புறப்படுவதைக் கண்டார். “வெளியில் யானை வாசம் அடிக்குது” எனக் கூறி, இருளில் டார்ச்சுடன் டாக்டர் புறப்பட, அதிகாரியும் உடன் சென்றார். இரண்டுவயதான குட்டியானை தனியே வந்திருப்பதை அறிந்த மருத்துவர், வெளிச்சம் அடிக்காமல் இருளிலேயே நடந்தார், யானைக்குட்டி துதிக்கை தூக்கி மோப்பம் பிடித்தபோது, மருத்துவர் குரல் கேட்டு அருகில் நெருங்கி வந்து, ஜெஸி பசு கத்தும் ஒலியில் பிளிறியது. குட்டியானையின் செயல்கள் மருத்துவரை வரவேற்பதுபோல் இருந்ததாம்.
தேடி வந்தது குட்டியானை:
டாக்டர் சொன்னபடி வனத்துறை அதிகாரி மருத்துவப் பெட்டியை எடுத்து வந்தார், குட்டியின் வாயில் ஊசிபோடவும் அது தளர்ந்து சாய்ந்தது, அதன் கால் நுனியில் மதுக்குப்பி குத்தி, வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. அதைப் பிடுங்கியதும் டாக்டரின் கை ரத்தத்தால் நனைந்தது, கையால் தடவிக் கண்ணாடிப் பிசிர் எதுவும் மீதம் ஒட்டிக்கொண்டு இல்லாததை மருத்துவர் உணர்ந்தபின், பஞ்சில் மருந்தை நனைத்து உள்ளே செலுத்திக் கட்டினார்.
“ஒருமணி நேரத்தில் எழுந்து காலையில் முதுமலைக்குப் போய்விடும்” என்று, மருத்துவர் கூறியதைக் கேட்டு, வனத்துறை அதிகாரி வியந்தார், அந்தக் குட்டி யானை தனக்கும் மருத்துவம் செய்துகொள்ள, முந்நூறு கிலோ மீட்டர் தூரம் தேடி வந்துள்ளது என்ற தகவலைக் கூறித் திகைக்க வைத்தார் டாக்டர், சிறு தகவலைக்கூட யானை மறப்பதில்லை என்பது வியப்பல்லவா? இதைப் படிக்கும்போது வன உயிரினங்களின் பண்பு நமக்கு வியப்பைத் தருகிறது,
யானைகளின் நன்றி உணர்வு:
பேசிக்கொண்டே வீட்டை அடைந்தபோது, இருளில் ஏதோ அசைவது தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது, யானைக்கூட்டம், அவை காதுகளை அசைத்துக்கொண்டு நின்றன. அங்கே கால் ஊனமான யானையை, அதன் மெல்லிய கோணல் நடையால் அடையாளம் காணமுடிந்தது. “வந்து கூட்டிக்கொண்டு போய்விடும் வா” என்றார் டாக்டர், இருபதுக்கு மேற்பட்ட யானைகள் பிளிறின. துதிக்கைகளை வீசி மீண்டும் மீண்டும் பிளிறின. இக்காட்சியைக் கண்ட வனத்துறை அதிகாரி, உடல் சிலிர்க்க, கண் பொங்கிப் பெருக நின்றார்.
2.
இயற்கைப் பாதுகாப்பு
ஒரு நாட்டின் வளம் காட்டுவளத்தினைப் பொறுத்தே அமையும் என்பர். காடு செழித்தால் நாடு செழிக்கும்.
அடர்ந்த காடுகளில் யானை, சிங்கம், புலி, மான் முதலான விலங்குகள் வாழ்கின்றன; பல்வேறு வகையான பறவைகளும் வாழ்கின்றன.
நோய் தீர்க்கும் மூலிகைகள், தேன் போன்றவற்றை நாம் காட்டிலிருந்தே பெறுகின்றோம். சந்தன மரம், தேக்கு மரம், மூங்கில் போன்றவை விளைவதும் காட்டில்தான். காட்டு மரங்கள் காற்றிலுள்ள தூசை அகற்றித் தூய்மைப்படுத்துகின்றன; தட்பவெப்ப நிலையைச் சமப்படுத்துகின்றன. காட்டிலுள்ள மரங்கள்தாம் மேகங்களைக் குளிர்வித்து மழையாகப் பெய்யச் செய்கின்றன.
இப்படிப் பல வகைகளில் நன்மை அளிக்கும் காட்டை மனிதன் தன் சுயநலத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறான்.
மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றுடன் ஆறுகளின் வளம் காத்து, இயற்கை வளங்கள் குறையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு, நெகிழிப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடுதல் போன்ற செயல்களால் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
உயிரினப் பாதுகாப்பு
சுற்றுலா செல்வதாய்க் கூறிக்கொண்டு பலர் காட்டில் நுழைந்து, மதுவைக் குடித்துவிட்டு அலட்சியமாய் அதன் குப்பியைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர். உடைந்த அக்குப்பியின் பகுதிகள் யானையின் காலில் பதிந்து, நாளடைவில் அதன் உடற்பகுதியிலே தங்கிப் புண் ஏற்படச்செய்து அதற்குப் பெருந்துன்பம் இழைத்துவிடுகின்றன.
பாதுகாக்கப்பட்ட காடுகளில் வாழும் உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்க அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
விலங்குகளைத் தந்தம், தோல், இறைச்சி போன்றவைகளுக்காக வேட்டையாடுவது தொடர்ந்தால் விலங்கு மற்றும் பறவை இனங்கள் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.
எனவே, அரசு உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விலங்கு மற்றும் பறவை இனங்களை காத்திட வேண்டும்.
நாழும் இயற்கை வளங்களை அழித்திடாமல் காத்திடுவோம். மழைவளம் பெருகிட, பொறுப்பினை உணர்ந்து செயல்படுவோம்.
3.
(i) பனைமரம் சிறந்த காற்றுத் தடுப்பான்.
(ii) நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மை உடையது. மதிப்புக் கூட்டுப் பொருள்கள்:
(iii) பனைமரத்திலிருந்து நேரடியாகக் கிடைக்கும் பதநீரை மக்கள் பருகி, நுங்கைத் தின்று மகிழ்கின்றனர்.
(iv) மிகுந்த வருவாய் ஈட்டும் நோக்கில் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்புக் கூட்டுப் பொருள்களை உருவாக்கி விற்கின்றனர்.
4.
1. பேராசிரியர் சுந்தரனார் திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1855இல் பிற்தார்.
2. திருவனந்தபுரம் அரசுக் கல்லுரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்.
3. சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
4. இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு, இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.
5. மனோன்மணீயம் என்ற நூலை எழுதியவர் இவரே ஆவார்.
5.
வாய்க்காலின் சிறப்புகளாய்க் குறிப்பிடப்படுவன :
தங்களுக்கு உணவைக் கொடுக்கும் வயல்களுக்குப் பயன்படுவது எனப் பலராலும் எண்ணப்படுவது, இந்தச் சிறிய வாய்க்கால்.
இது கடலினை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றியமைக்கின்றது.
பருக்கைக் கற்களை நெறுநெறு என்று ஓசை உண்டாகுமாறு தேய்த்துச் சிறு பொடியாகச் செய்து கொழிக்கிறது.
தன் வல்லமைக்கு உட்பட்ட மண், கல், புல், புழு ஆகியவற்றுள் இன்ன பொருளைத்தான் இழுத்துச் செல்வது என்றில்லாமல், எல்லாவற்றையும் ஈர்த்துத் தனக்குள்ளே அகப்படுத்திக்கொள்கிறது.
பின், காலமாகிய தச்சன், கடலாகிய பெரிய நீர்ப்பள்ளத்தில் கட்டுகின்ற மலைக்கு இவை மிகவும் பொருத்தமானவை என்று ஆராய்ந்து, அவற்றையெல்லாம் உருட்டிக்கொண்டு சென்று கடலிலே இடுகிறது.
6.
(அ) பூவணி - பூ + அணி
“ஏனை உயிர்வரின் வவ்வும்” (பூ + வ் + அணி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பூவணி)
7.
(அ) உழுதுழுது - உழுது + உழுது
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி உழுத் - உழுது என்றானது.
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' - உழுதுழுது என்று புணர்ந்தது.
8.
(c)
யானை
9.
(b)
| i | ii | iii | iv |
| 4 | 3 | 2 | 1 |
10.
(a)
மாட்டுச்சாணம், கோமியம்
11.
(c)
பாரதியார்
12.
(c)
நம்மாழ்வார்
13.
(b)
பாரதியார்
14.
(c)
குடிலன்
15.
(c)
முதுமலை
16.
(a)
பனைமரம்
17.
(b)
மனோன்மணியம்
18.
(c)
ஒலிமரபு
19.
பேராசிரியர் சுந்தரனார் 1881 இல் மனோன்மணீயம் என்ற பெயரில் தமிழில் எழுதினார்.
20.
தொழுஉரம் எனப்படும் மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை வைக்கோலுடன் கலந்து மக்கச் செய்து பெறுவது, நஞ்சை நிலத் தொழுஉரமாகும்.
21.
நாங்கூழ்ப்புழு நிலத்து மண்ணை நன்றாய்க் கிளறி, பின் அதனையே உண்கிறது.
மெழுகைக்காட்டிலும் இளகிய சிறந்த சேறாய் மாற்றி, உருண்டையாய் உருட்டி, நிலத்தினுள்ளிருந்து வெளியே கொண்டுவந்து சேர்க்கிறது.
இப்படி நாங்கூழ்ப்புழு எத்தகைய சத்தற்ற மண்ணையும் நல்ல சத்துள்ள மண்ணாகப் பக்குவப்படுத்துகிறது.
22.
இடம் : மனோன்மணியத்தில், நடராசன், வாய்க்காலைப் பார்த்து, "யாரோ உனைப்போல் அனுதினம் உழைப்போர்?” என்று வியந்து கேட்கிறான்.
பொருள் : இரவுபகல் பாராமல் உன்னைப் போல் உழைப்பவர் எவர்?
விளக்கம் : வாய்க்கால் நீர், மலைகளிலும் குன்றுகளிலும் அருவியாய் வீழ்கிறது; குகைகளில் நுழைந்து வருகின்றது; சுனையாய்க் குதித்தெழுந்து ஓடுகின்றது; சிறிய ஊற்றாய் ஊறுகிறது; ஆறாய் நடக்கிறது; மடுவாய்க் கிடக்கிறது; வாய்க்காலாய் ஓடிக் கடலில் கலக்கிறது; மீண்டும் மேகமாகி மலையை அடைகிறது. இப்படி வாய்க்கால் எப்போதும் இராப்பகல் பாராமல் உழைக்கிறது. அதனால் நடராசன் வாய்க்காலைப் பார்த்து, “யாரே உனைப் போல் அனுதினம் உழைப்போர்" எனக் கூறுகின்றான்.
23.
(அ) உருட்டி, கடந்து, சிக்கி, கலந்து - வினையெச்சங்கள்
24.
(அ) வீழருவி, எழுசுனை, செய்தொழில், செய்எறும்பு, அலைகடல் - வினைத்தொகைகள்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards