7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
30 மீ x 19 மீ பரிமாணங்களுடைய ஒரு கோ - கோ விளையாட்டுத் திடல், அதன் அனைத்துப் பக்கங்களிலும் லாபியியுடன் (lobby) அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான பரிமாணங்கள் 27 மீ x 16 மீ எனில், லாபியின் பரப்பளவைக் காண்க.
2.
9 மீ நீளமும், 7 மீ அகலமும் உள்ள ஓர் அறைக்கு வெளியே, 3 மீ சீரான அகலமுள்ள ஒரு தாழ்வாரம் (verandah) உள்ளது. (அ) தாழ்வாரத்தின் பரப்பளவு காண்க. (ஆ) அந்தத் தாழ்வாரப் பகுதிக்கு ச.மீ-க்கு ரூ.15 வீதம் சிமெண்ட் பூச ஆகும் செலவைக் காண்க.
3.
23 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலமும் உள்ள ஓர் அட்டையில், அனைத்துப் பக்கங்களிலும் 3 செ.மீ விளிம்பு (margin) இருக்கும் வகையில் ஓர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த விளிம்புப் பகுதியின் பரப்பளவைக் காண்க.
4.
ஒரு தளம் 10 மீ நீளமும், 8 மீ அகலமும் உள்ளது. அதன் மீது 7 மீ நீளமும், 5 மீ அகலமும் உள்ள விரிப்பு விரிக்கப்பட்டுள்ள து. அந்த விரிப்பால் மூடப்படாத பகுதியின் பரப்பளவைக் காண்க.
5.
வட்ட வடிவ மட்டைப் பந்துத் (cricket) திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் (drainage) அமைக்க வேண்டியிருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ.180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான மொத்தத் தொகையைக் காண்க.
6.
ஒரு வட்ட வடிவப் பூந்தோட்டத்தின் ஆரம் 21 மீ. அந்தத் தோட்டத்தைச் சுற்றி, 14 மீ அகலம் உள்ள வட்ட நடைபாதை உள்ளது எனில், அந்த வட்டப்பாதையின் பரப்பளவு காண்க.
7.
ஒரு பூங்கா வட்ட வடிவில் உள்ளது. அதன் மையப்பகுதியில், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியும், அதனைச் சுற்றி வட்ட வடிவ நடைப் பயிற்சிப் பாதையும் அமைந்துள்ளது. அந்தப் பூங்காவின் வெளிவட்ட ஆரம் 10 மீ மற்றும் உள்வட்ட ஆரம் 3 மீ எனில், நடைப்பயிற்சிப் பாதையின் பரப்பளவு காண்க.
8.
கண்ணன் என்பவர் 14 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத் தகட்டை நான்கு சமபாகங்களாகப் பிரிக்கிறார். அதன் ஒரு கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண்க.(இங்கு, π = \(\frac { 22 }{ 7 } \))
9.
படத்தில் உள்ள உருவத்தின் சுற்றளவு காண்க .(இங்கு, π = \(\frac { 22 }{ 7 } \))
10.
ஒரு விவசாயி, 420 மீ ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப் பண்ணையைச் சுற்றி, முள்வேலி அமைக்க விரும்புகிறார். அதற்கு ஒரு மீட்டருக்கு ரூ.12 வீதம் செலவாகும். அவரிடம் ரூ.30,000 உள்ளது எனில், அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்?(இங்கு, π = \(\frac { 22 }{ 7 } \))
11.
ஒரு டிராக்ட ர் வண்டிச் சக்கரத்தின் ஆரம் 77 செ.மீ எனில், அது 35 முறை சுற்றும்போது, கடக்கும் தொலைவைக் காண்க. (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
12.
கடிகாரத்தில், 56 மி.மீ நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவைக் கணக்கிடுக.(இங்கு π = \(\frac { 22 }{ 7 } \))
13.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
14.
ஆரம் 14 செ.மீ உடைய வட்டத் தகட்டின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
15.
படத்தில் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)
1.
கொடுக்கப்பட்ட பரிமாணங்களில் இருந்து
L = 30 மீ; B = 19 மீ; l = 27 மீ; b = 16 மீ
கோ - கோ திடலின் பரப்பளவு = L x B
= 30 x 19
=570மீ2
விளையாடுவதற்கான பகுதியின் பரப்பளவு = l x b
= 27 x 16
= 432 மீ2
லாபியின் பரப்பளவு = கோ - கோ திடலின் பரப்பளவு − விளையாடுவதற்கான பரப்பளவு
= 570 − 432
= 148 மீ2

2.
இங்கு, l = 9 செ.மீ, b = 7 செ.மீ
அறையின் பரப்பளவு = l x b
= 9 x 7
= 63 மீ2
L = l + 2w = 8 + 2(3) = 8 + 6 = 14 செ.மீ
B = b + 2w = 5 + 2(3) = 5 + 6 = 118 செ.மீ
தாழ்வாரம் உட்பட அறையின் பரப்பளவு = L x B
= 14 x 11
= 154 மீ2
(அ) தாழ்வாரத்தின் பரப்பளவு = தாழ்வாரம் உட்பட அறையின் பரப்பளவு − அறையின் பரப்பளவு
= 154 − 63
= 91 மீ2
(ஆ) 1 ச.மீ-க்கு சிமெண்ட் பூச ஆகும் செலவு = ரூ.15
தாழ்வாரத்துக்கு சிமெண்ட் பூச ஆகும் செலவு = 91 x 15 = ரூ.1365.
3.
இங்கு L = 23 செ.மீ B = 11 செ.மீ
அட்டையின் பரப்பளவு = L x B
= 23 x 11
= 253 செ.மீ2
l = L − 2w = 23 − 2(3) = 23 − 6 = 17 செ.மீ
b = B − 2w = 11− 2(3) = 11− 6 = 5 செ.மீ
ஓவியத்தின் பரப்பளவு 17 x 5 = 85 செ.மீ2
விளிம்புப் பகுதியின் பரப்பளவு= 253 − 85
= 168 செ.மீ2
4.
இங்கு L = 10 மீ B = 8 மீ
தளத்தின் பரப்பளவு = L x B ச.அலகுகள்
= 10 x 8
= 80 மீ2
விரிப்பின் பரப்பளவு = l x b ச.அலகுகள்
= 7 x 5
= 35 மீ2
ஆகவே, விரிப்பால் மூடப்படாத பகுதியின் பரப்பளவு = 80 − 35
= 45 மீ2
5.
(திடலின்) உள்வட்ட ஆரம் r = 76 மீ
விளையாட்டுத் திடலைச் சுற்றி மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
எனவே, வெளிவட்ட ஆரம் R = 76 + 2 = 78 மீ
வட்டப்பாதையின் பரப்பளவு = \(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
\(=\frac { 22 }{ 7 } \) x (782 - 762)
= \(\frac { 22 }{ 7 } \) x (6084 - 5776)
= \(\frac { 22 }{ 7 } \) x 308
= 22 x 44 = 968 மீ2
வடிகால் அமைக்க, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.180.
ஆகவே, மொத்தச் செலவு = 968 x 180 = ரூ.1,74,240
6.
உள்வட்டத்தின் ஆரம் r = 21 மீ
உள்வட்டத்தைச் சுற்றி நடைபாதை உள்ளது.
எனவே, வெளிவட்டத்தின் ஆரம் R = r + w
R = 21 + 14 = 35 மீ
வட்ட நடைபாதையின் பரப்பளவு = \(\pi \) (R2 - r2) ச.அலகுகள்
= \(\frac { 22 }{ 7 } \) x (352 - 212)
= \(\frac { 22 }{ 7 } \) x ((35 x 35) - (21 x 21))
= \(\frac { 22 }{ 7 } \) x (1225 - 441)
= \(\frac { 22 }{ 7 } \) x 784
= 22 x 112 = 2644 மீ2
7.
வெளிவட்டத்தின் ஆரம் R = 10 மீ
உள் வட்டத்தின் ஆரம் r = 3 மீ
வட்ட நடைபாதையின் பரப்பளவு = வெளிவட்டப் பரப்பளவு − உள்வட்டப் பரப்பளவு
= \(\pi \)R2 − \(\pi \)r2
= p(R2 − r2 ) ச. அலகுகள்
= \(\frac { 22 }{ 7 } \) x (102 - 32)
= \(\frac { 22 }{ 7 } \) x (10 x 10 − 3 x 3)
= \(\frac { 22 }{ 7 } \) x (100 - 9)
= \(\frac { 22 }{ 7 } \) x 91
= 286 மீ2
8.
கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண, முதலில் அந்தக் கால்வட்டத்தின் வில்லின் சுற்றளவு காண வேண்டும்.
வட்டத்தின் ஆரம் (r) = 14 செ.மீ
வட்டத்தின் சுற்றளவு = 2πr அலகுகள்
எனவே, கால்வட்டத்தின் வில்லின் சுற்றளவு = \(\frac { 1 }{ 4 } \)x 2πr
= \(\frac { πr }{ 2 } \)
= \(\frac { 22 }{ 7 } \)x \(\frac { 14 }{ 2 } \)
= 22 செ.மீ
கொடுக்கப்பட்ட வட்டத்தின் ஆரம் = 14 செ.மீ
ஆகவே , தேவையான உருவத்தின் சுற்றளவு, C = 14 +14 + 22
= 50 செ.மீ
9.
வட்டத்தின் சுற்றளவு C = πd அலகுகள் என்று அறிவோம்.
எனவே , அரைவட்டத்தின் சுற்றளவு = \(\frac { 1 }{ 2 } \)πd அலகுகள்
7 செ.மீ விட்டமுள்ள அரைவட்டத்தின் சுற்றளவு = \(\frac { 1 }{ 2 } \) x \(\frac { 22 }{ 7 } \) x 7 = 11 செ.மீ
ஒரு சோடி (II மற்றும் IV) அரை வட்டங்களின் சுற்றளவு = 2 x 11 = 22 செ.மீ
இதேபோல், 14 செ.மீ விட்டமுள்ள அரை வட்டத்தின் சுற்றளவு = \(\frac { 1 }{ 2 } \) x \(\frac { 22 }{ 7 } \) x 14 = 22 செ.மீ
ஒரு சோடி (I மற்றும் III ) அரை வட்டங்களின் சுற்றளவு = 2 x 22 = 44 செ.மீ
எனவே, கொடுக்கப்பட்ட உருவத்தின் சுற்றளவு = 22 + 44 = 66 செ.மீ
10.
கோழிப்பண்ணையின் ஆரம் = 420 மீ
தேவையான முள்வேலியின் நீளம் என்பது வட்டத்தின் சுற்றளவு ஆகும்.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \) x 420
= 2 x 22 x 60
ஆகவே, தேவையான முள்வேலியின் நீளம் = 2640 மீ
மீட்டருக்கு ரூ.12 வீதம் பண்ணைக்கு முள்வேலி அமைக்க ஆகும் செலவு = 2640 x 12
= ரூ.31,680
அவனிடம் உள்ள தொகை ரூ.30,000 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே , தேவையான தொகை = ரூ.31,680 − ரூ.30,000 = ரூ.1,680.
11.
ஒரு சுழற்சியில் கடக்கும் தொலைவு = வட்டத்தின் சுற்றளவு
= 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \) x 77
= 2 x 22 x 11
= 484 செ.மீ
எனவே , ஒரு சுற்றில் கடக்கும் தொலைவு = 484 செ.மீ
35 சுற்றில் கடக்கும் தொலைவு = 484 x 35 = 16940 செ.மீ
12.
இங்கு, வினா டி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவு என்பது வட்டத்தின் சுற்றளவையும், வினாடி முள்ளின் நீளம் என்பது அவ்வட்டத்தின் ஆரத்தையும் குறிக்கிறது. மேலும் ஆரம் r = 56 மி.மீ.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \) x 56
= 2 x 22 x 8
= 352 மி.மீ
ஆகவே வினாடி முள்ளின் முனை , 1 நிமிடத்தில் கடக்கும் தொலைவு 352 மி.மீ.
13.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
\(\frac { C }{ 2\pi } \) = r
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சுற்றளவு = 132 மீ
r = \(\frac { 132 }{ 2\times \frac { 22 }{ 7 } } \)
=\(\frac { 132 }{ 2 } \times \frac { 7 }{ 22 } \)
எனவே , ஆரம் r = 21 மீ
விட்டம் d = 2r
= 2 x 21
= 42 மீ
14.
வட்டத்தகட்டின் ஆரம் (r) = 14 செ.மீ
அதன் சுற்றளவு = 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \)x 14
= 88 செ.மீ
15.
கொடுக்கப்பட்டது, d = 6 செ.மீ, ஆனா ல், d = 2r = 6 செ.மீ, r = 3 செ.மீ
வட்டத்தின் சுற்றளவு = 2πr அலகுகள்
= 2π x 3
= 18.8496 ≃ 18.84
எனவே , சுற்றளவு 18.84 செ.மீ ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards