7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 23/10/2025
7ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
வட்ட வடிவ மட்டைப் பந்துத் (cricket) திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் (drainage) அமைக்க வேண்டியிருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ.180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான மொத்தத் தொகையைக் காண்க.
2.
ஒரு விவசாயி, 420 மீ ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப் பண்ணையைச் சுற்றி, முள்வேலி அமைக்க விரும்புகிறார். அதற்கு ஒரு மீட்டருக்கு ரூ.12 வீதம் செலவாகும். அவரிடம் ரூ.30,000 உள்ளது எனில், அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்?(இங்கு, π = \(\frac { 22 }{ 7 } \))
3.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க. (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
4.
ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ. அது 150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவைக் காண்க?
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆர ஆளவுகள் உடைய வட்டத்தின் சுற்றளவைக் காண்க.
49 செ.மீ
6.
வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக் காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
d = 28 மி.மீ
7.
வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்
( L − l ) அலகுகள்
( B − b ) அலகுகள்
( R − r ) அலகுகள்
( r − R ) அலகுகள்
8.
செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்
\(\pi\)(R2 − r2 ) ச. அலகுகள்
(L x B) − (l x b) ச.அலகுகள்
LB ச.அலகுகள்
lb ச.அலகுகள்
9.
வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்.
\(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
\(\pi \)r2 ச.அலகுகள்
2\(\pi \)r2 ச.அலகுகள்
\(\pi \)r2 + 2r ச. அலகுகள்
10.
ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு
41 செ. மீ
82 செ. மீ
21 செ. மீ
20 செ. மீ
11.
ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்
2\(\pi \)r அலகுகள்
\(\pi \)r2 + 2r அலகுகள்
\(\pi \)r2 சதுர அலகுகள்
\(\pi \)r3 கன அலகுகள்
12.
ஒரு செவ்வகத்தின் இருபுறமும் அரைவட்டம் இணைந்த வடிவில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. அந்தச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 16 மீ மற்றும் 8 மீ எனில், பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு

13.
ஒரு செவ்வகத்தின் இருபுறமும் அரைவட்டம் இணைந்த வடிவில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. அந்தச் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 16 மீ மற்றும் 8 மீ எனில், பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
தோட்டத்தின் சுற்றளவு

14.
கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. (\(\pi =\frac { 22 }{ 7 } \))
1.
(திடலின்) உள்வட்ட ஆரம் r = 76 மீ
விளையாட்டுத் திடலைச் சுற்றி மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
எனவே, வெளிவட்ட ஆரம் R = 76 + 2 = 78 மீ
வட்டப்பாதையின் பரப்பளவு = \(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
\(=\frac { 22 }{ 7 } \) x (782 - 762)
= \(\frac { 22 }{ 7 } \) x (6084 - 5776)
= \(\frac { 22 }{ 7 } \) x 308
= 22 x 44 = 968 மீ2
வடிகால் அமைக்க, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.180.
ஆகவே, மொத்தச் செலவு = 968 x 180 = ரூ.1,74,240
2.
கோழிப்பண்ணையின் ஆரம் = 420 மீ
தேவையான முள்வேலியின் நீளம் என்பது வட்டத்தின் சுற்றளவு ஆகும்.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
= 2 x \(\frac { 22 }{ 7 } \) x 420
= 2 x 22 x 60
ஆகவே, தேவையான முள்வேலியின் நீளம் = 2640 மீ
மீட்டருக்கு ரூ.12 வீதம் பண்ணைக்கு முள்வேலி அமைக்க ஆகும் செலவு = 2640 x 12
= ரூ.31,680
அவனிடம் உள்ள தொகை ரூ.30,000 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே , தேவையான தொகை = ரூ.31,680 − ரூ.30,000 = ரூ.1,680.
3.
வட்டத்தின் சுற்றளவு C = 2πr அலகுகள்
\(\frac { C }{ 2\pi } \) = r
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சுற்றளவு = 132 மீ
r = \(\frac { 132 }{ 2\times \frac { 22 }{ 7 } } \)
=\(\frac { 132 }{ 2 } \times \frac { 7 }{ 22 } \)
எனவே , ஆரம் r = 21 மீ
விட்டம் d = 2r
= 2 x 21
= 42 மீ
4.
d = 1.4 மீ
ஒரு முறை சுழலும்போது சுற்றளவு
= சக்கரத்தின் சுற்றளவு
= \(\pi\)d
\(=\frac{22}{7} \times 1.4\)
ஒரு முறை சுழலும்போது கடக்கும் தொலைவு = 4.4 மீ
150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவு = 4.4 x 150 = 660 மீ
5.
ஆரம் r = 49செ.மீ
சுற்றளவு \(C=2\pi r\)
சுற்றளவு = 308 செ.மீ
6.
d = 28 மி.மீ
சுற்றளவு \(C=\pi d\)
சுற்றளவு = 88 மி.மீ
7.
(c)
( R − r ) அலகுகள்
8.
(b)
(L x B) − (l x b) ச.அலகுகள்
9.
(a)
\(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்
10.
(a)
41 செ. மீ
11.
(a)
2\(\pi \)r அலகுகள்
12.
தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு
= செவ்வகத்தின் பரப்பளவு + இரு அரை வட்டங்களின் பரப்பளவு
= செவ்வகத்தின் பரப்பளவு + வட்டத்தின் பரப்பளவு
இங்குச் செவ்வகத்தின் பரப்பளவு = l x b ச. அலகுகள்
= 16 x 8
= 128 மீ2 ...(1)
வட்டத்தின் பரப்பளவு = \(\pi \)r2 ச. அலகுகள்
= 3.14 x 4 x 4
= 3.14 x 16
= 50.24 மீ2 ...(2)
(1), (2) லிருந்து தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு = 128 + 50.24
= 178.24 மீ2
13.
தோட்டத்தின் சுற்றளவு என்பது, செவ்வகத்தின் இரு நீளங்கள் 16 மீ மற்றும் இரு 8மீ விட்டமுள்ள அரைவட்டங்களின் சுற்றளவு இணைந்தது.
அரைவட்டத்தின் சுற்றளவு = \(\frac { \pi d }{ 2 } \) அலகுகள்
= \(\frac { \pi \times 8 }{ 2 } \) = \(4\pi \)
= 4 x 3.14
= 12.56 மீ
ஆகவே, இரு அரைவட்டங்களின் சுற்றளவு = 2 x 12.56
= 25.12 மீ
தோட்டத்தின் சுற்றளவு = நீளம் + நீளம் + இரு அரை வட்டங்களின் சுற்றளவு
= 16 + 16 + 25.12
= 32 + 25.12
= 57.12 மீ
14.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் பரப்பளவு = 9856 ச.மீ
\(\pi \)r2 = 9856
\(\frac { 22 }{ 7 } \) x r2 = 9856
r2 = 9856 x \(\frac { 7 }{ 22 } \)
r2 = 448 x 7 = 3136
r2 = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 7 x 7
r2 = 8 x 8 x 7 x 7 = 82 x 72 = (8 x 7)2
r = 8 x 7 = 56 மீ
ஆகவே , தேவையான கயிற்றின் நீளம் 56 மீ.

7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards